வவுனியா கோவில்குளம் சந்தியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான பிரீகபலின் ‘Pregabalin’ மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 300 போதை மாத்திரைகளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வவுனியாவை சேர்ந்த 41 வயதுடையவர் என்றும் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவாக மாடுகள் கடத்திச்செல்லப்படுகின்ற சம்பவம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று கலந்துரையாடப்பட்டதுடன் நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது,
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர், குறித்த பகுதியில் அதிகளவாக மாடுகள் கடத்திச்செல்லப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன.
அத்துடன் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே அவரை இடமாற்றி ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மாடுகள் களவாடப்பட்டுள்ளமை தொடர்பாக நேற்றயதினம் கைதுசெய்யப்பட்ட இருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளோம்.
அத்துடன் இச் சம்பவங்கள் தொடர்பாக தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுக்கு விரோதமாக செயற்பட்டிருந்தால். அது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பரிசீலிக்கலாம் என்றார்.
கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (13.06.2023) ஆபரண தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த சில கிழமைகளாக தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில், சில நாட்களாக 146000 ரூபா என்ற நிலை தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில் அண்மைய நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து அதிகரிப்பு பதிவாகி வருகிறது. அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 153,500 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 166,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்க நகை விலையை நிர்ணயிப்பது உலக சந்தையில் காணப்படும் தங்க விலையும், இலங்கையில் நிலவும் டொலரின் பெறுமதியுமே ஆகும் என அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.
மேலும் இங்கு உள்ள விலையை நிர்ணயிப்பது செட்டியார்தெரு தான் என்றும், உலக சந்தையிலிருந்து கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபா விலை வித்தியாசத்தில் தான் விலை மாற்றம் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த நிலையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வீழ்ச்சியை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டு வந்தனர்.
அத்துடன் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரையிலேயே தங்கத்தின் பெறுமதி குறைந்த அளவில் இருக்கும் எனவும், இறக்குமதி தடை நீக்கப்பட்டு டொலரின் பெறுமதி அதிகரிக்க ஆரம்பித்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இவ்வாறான சூழலில் இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்த சுமார் 286 வகையான பொருட்களின் இறக்குமதித் தடைகள் நீக்கப்பட்டுள்ளதையடுத்து, ரூபாவின் பெறுமதியில் சிறியளவு வீழ்ச்சி நிலை அடுத்தடுத்து பதிவாகி வரும் அதேநிலையில் தங்கத்தின் விலையிலும் அதிகரிப்பு பதிவாகி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் சிக்கி பலியாகியிருந்த நிலையில் விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் துல்ஹிரிய பகுதியில் நேற்று (12.06.2023) டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்த விபத்தில் ரம்புக்கன, கொத்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
தனுஷ்க கயான் பின்னவல, சின்ஹாசன வடு கம்லத்கே தினேஷா ஸ்ரீநானி கம்லத்கே, பின்னவல ஹேவயல கீத்மா தட்சர பின்னவல ஆகிய மூவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் மூவரும் காலி பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வரக்காபொல துல்ஹிரிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி திடீரென வீதியை கடந்து கொழும்பு நோக்கி சென்ற மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியில் எரிபொருள் கசிவு ஏற்பட்டு வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விபத்தை ஏற்படுத்திய 39 வயதான டிப்பர் வாகனத்தின் சாரதியை வரக்காபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லையெனவும், தனது நண்பனின் சாரதி அனுமதிப்பத்திரத்தினை வைத்து வாகனத்தை செலுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
மேலும், விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர் கடந்த மாதம் கட்டாரில் இருந்து நாட்டிற்கு வருதை தந்ததாகவும், எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் தொழில் நிமித்தம் கட்டார் செல்ல தயாராகியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
மட்டக்களப்பு – சித்தாண்டியில் தந்தையின் தாகம் தீர்க்க இளநீர் பறிக்க தென்னைமரத்தில் ஏறிய மகன் தவறி விழுந்து உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தந்தையும் மகனும் சித்தாண்டியிலுள்ள தனது உறவினர் ஒருவரது மரக்கறி விற்பனை நிலையத்தில் தொழில் நிமிர்த்தம் நின்ற வேளை கடந்த (09.06.2023) ம் திகதி மதிய நேரம் தனது தந்தைக்கு உடற்சோர்வு மற்றும் களைப்பாக இருந்ததால் தாகத்தை தணிக்க அருகிலுள்ள சுமார் 20 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் இளனி ஆய்ந்து கொடுப்பதற்காக ஏறிய போது தந்தை பார்த்துக்கொண்டிருக்கும் போதே மகன் தவறி விழுந்துளார்.
கீழேவிழுந்து உணர்விழந்த நிலையில், மகனை உடனடியாக மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் (11/06/2023) நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
21 வயதுடைய விஜயகுமார் தனுஷன் என்ற இளைஞன் ஆவார். சந்திவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி MSM நஸீர் சடலத்தை பார்வையிட்ட துடன், உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
பிரேத பரிசோதனை முடிவில் தலையும் கழுத்தும் பலமாக அடிபட்டு மூளை வீக்கமடைந்துள்ளதாகவும் இரத்தக்கசிவும் ஏற்பட்டதால் உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் தந்தையின் களைப்போக்கமுயன்ற மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதலியை வெட்டி விட்டு, ஓடும் இரயிலின் முன் பாய்ந்து காதலனும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்துள்ளது கல்லுத்தொட்டி என்ற கிராமம்.
இங்கு பெர்ஜின் ஜோஸ் என்ற 24 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர், அந்த பகுதியில் அமைந்திருக்கும் கல்லூரியில் பி.ஏ படித்து கொண்டிருந்தபோது, மடிச்சல் காட்டுவிளையைச் சேர்ந்த டேன் நிஷா (23) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரே கல்லூரி என்பதால் முதலில் நண்பர்களாக பழகிய இவர்கள், நாளடைவில் காதலிக்க தொடங்கியுள்ளனர். அப்படி இருவரும் தொடர்ந்து 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது நிஷா, பி.எட் படித்து வருகிறார்.
இந்த சூழலில் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காதலன் ஜோஸுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மேலும் இருவருக்குள்ளும் சண்டை வர, ஜோஸ் கோபத்துடன் நிஷாவிடம் பேசியுள்ளார். இதனால் நிஷா அவருடன் இருந்த காதலை முறித்துக்கொள்ள எண்ணியுள்ளார்.
இதில் எரிச்சலடைந்த ஜோஸ், அவர்கள் இருவரும் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இப்படியே தொடர்ந்து மிரட்டல் விடுத்த நிலையில், அதனை டெலிட் செய்யுமாறு நிஷாவும் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடைசியாக உன்னை பார்த்துவிட்டு உனது கண் முன்னே அனைத்தையும் டெலிட் செய்கிறேன் என்று ஜோஸ் கூறவே, அதனை நம்பிய நிஷாவும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கேயும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது பெரிதாக முற்றியதால் ஆத்திரமடைந்த ஜோஸ், தான் கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து நிஷாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் அலறி துடித்த அவரது சத்தத்தை கேட்டு அந்த வழியே சென்றவர்கள் வந்து பார்க்கையில் அந்த பெண் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். மேலும் ஆட்களை கண்டதும் அங்கிருந்து ஜோஸும் தப்பியோடியுள்ளார்.
தொடர்ந்து நிஷாவை மீட்டவர்கள், அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தப்பிச்சென்ற ஜோஸ், ஓடும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து இரயில்வே போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலியை வெட்டி விட்டு, ஓடும் இரயிலின் முன் பாய்ந்து காதலனும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் கன்னியாக்குமரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா சமயபுரம் கிராமத்தில் மாடுகளை திருட முயன்ற இருவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் குறித்த இருவரையும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைப்படைத்தனர்.
குறித்த பகுதியில் இன்று (12.06.2023) காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமயபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் திருடப்படுகின்றமை அதிகரித்த வண்ணமே காணப்பட்டதுடன்,
கால்நடைகளை களவாடுபவர்கள் பொதுமக்களினால் கையும் களவுமாக பிடித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திலும் கையளித்துள்ளனர். எனினும் அப்பகுதியில் கால்நடைகள் களவாடப்படுகின்றமை தொடர்ந்த வண்ணமேயிருந்தது.
இந்நிலையில் இன்று (12.06.2023) காலை 6.00 மணியளவில் சமயபுரம் விநாயகர் வித்தியாலய வீதியில் மாட்டினை களவாட முயன்ற இருவரை பொதுமக்கள் நையப்புடைத்து வாகனம் ஒன்றில் கட்டி வைத்ததுடன்,
அவர்களை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் வழங்குவதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்திருந்தமையுடன் மாட்டினை களவாட முயன்ற இருவரையும் வாகனத்தில் ஏற்றி வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைத்தனர்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள் , எமது கிராமத்தில் கால்நடைகள் களவாடப்படுகின்றமை தொடர்ந்த வண்ணமேயுள்ளது. இதனால் எமது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளமையுடன் இரவில் நிம்மதியாக உறங்குவதற்கு கூட முடியவில்லை.
பல தடவைகள் கால்நடைகளை களவாடுகளை பிடித்துக்கொடுத்தும் நெளுக்குளம் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. எனவே நாங்கள் இந்த தடவை திருடர்களை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைப்படைத்துள்ளோம் என தெரிவித்தனர்.
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
துல்ஹிரிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் 40, 39 மற்றும் 13 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கும் தான் கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மருத்துவராகி சாதனை படைத்துள்ளார் ஹர்ஷி எனும் மாணவி. கடந்த யுத்த காலத்தின் பின்னர் மிகவும் விரும்பத்தகாத நினைவுகளைக் கொண்ட பாடசாலையாகக் கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரியானதுகாணப்பட்டது.
எனினும் , 2009 ஆண்டுக்குப் பின்னர் அந்தக் கல்லூரிக்கு நல்ல காலம் உதயமானது. பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மிக மகிழ்ச்சியுடன் கல்வி கற்பதுடன் உயர் நிலை பதவிகளை அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரியில் கல்வி கற்று மாணவி ஒருவர் அந்தப் பாடசாலையின் முதல் பெண் மருத்துவராக பதவி நிலையை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை (10) ஹர்ஷி என்ற மாணவி, மருத்துவராகி தனது வைத்திய தொழிலை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
போர்கால சூழ்நிலையால் பல இன்னல்களை எமது மக்கள் தாயகத்தில் அனுபவித்திருப்பினும், எமது சந்ததிகள் இன்று அந்த கஸ்ரங்களையும் தாண்டி சாதனைகள் படைத்து எம்மினத்துக்கும் எமது மண்ணுக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரி மாணவி மருத்துவராகி சேவையினை ஆரம்பித்துள்ளமை பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
அமெரிக்காவின் லூசியானாவை சேர்ந்த ‘ஷோயி’ என்ற லாப்ரடோர் – ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்,தன் நாக்கால் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 12.7 சென்றி மீற்றர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நீளமான நாக்கை இந்த ஷோயி கொண்டுள்ளது.
இதனை கால்நடை மருத்துவர் அளந்து பார்த்ததன் பின்னரே கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைத்தார். சாதனை தொடர்பில் ஷோயின் உரிமையாளர்களான சாடியும் ட்ரூவும் கூறுகையில்,
“ஷோயி’ 6 வாரமாக இருக்கும் போது அதனை வாங்கினோம். அது குட்டியாக இருக்கும் போதே ஷோயின் நாக்கு வாயில் இருந்து அடிக்கடி வெளியேறும். அது நீளமாக வளரும் என நாம் நினைத்த நிலையில் இப்போது சாதனை படைத்துள்ளது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்தியாவின் தெலங்கானாவில் இளம் பெண் ஒருவரை கோவில் பூசாரி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்ட்ராவில் 36 வயது மதிக்கத்த இளம்பெண்ணை லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்த 56 வயது நபர் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வீசிய கொடூர சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு பகீர் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோவில் பூசாரி சாய் கிருஷ்ணா. சம்ஷாபாத் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருக்கும் சாய்-க்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கோவிலுக்கு அப்சரா என்ற பெண் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அபோது அப்சராவுக்கும் – சாய் கிருஷ்ணாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில்தான் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு பூசாரி கிருஷ்ணாவை அக்சரா வற்புறுத்தியுள்ளார். ஆரம்பத்தில் சமாளித்து வந்த கிருஷ்ணா, அப்சரா இருந்தால் தன் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும் என்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு பெண்ணை அழைத்துக்கொண்டு சோரையூர் பகுதிக்கு அழைத்து சென்று ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நற்குடா என்ற பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அப்சராவின் தலையை சுவற்றில் மோதி அடித்துள்ளார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவரின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்துள்ளார். உடலை அப்படியே விட்டுசென்றால் போலீசில் மாட்டிக்கொள்வோம் என எண்ணியவர் தாங்கள் வந்த காரிலே அப்சராவின் உடலை ஏற்றிக்கொண்டு சென்று கடையில் இருந்து பிளாஸ்டிக் பை ஒன்றை வாங்கி அதில் அந்தப்பெண் பெண்ணின் உடலை மூட்டைக்கட்டியுள்ளார்.
அதன் பின்னர் பாதாள சாக்கடையின் மூடியை திறந்து உடலை அதில் வீசிய பின்னர் என்ன நினைத்தாரோ நேராக காவல் நிலையம் சென்று அப்சரா என்ற பெண்ணை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் பெண்ணுக்கு சம்பந்தமில்லாத நபர் ஒருவர் புகார் அளித்த காரணத்தால் போலீசாருக்கு சாய் கிருஷ்ணா மீது சந்தேகம் ஏற்பட்டது.
எனவே சாய் கிருஷ்ணாவிடம் துருவி துருவி விசாரணை நடத்தியபோது அப்சராவை கொலை செய்து உடலை பாதாள சாக்கடையில் வீசிவிட்டு சென்றதை சாய் கிருஷ்ணா தெரிவித்தார். கோவில் பூசாரி ஒருவர் பெண்ணை கொலை செய்து உடலை சாக்கடையில் வீசிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கல்லுத்தொட்டியைச் சேர்ந்தவர் இளைஞர் பெர்ஜின் ஜோஸ் (23). இவர் கல்லூரியில் பிஏ படித்தபோது, தன்னுடன் படித்த டேன்நிஷா (23) என்ற பெண்ணை காதலித்தார்.
காதலர்களான இருவரும் நெருக்கி பழகி வந்தனர். தற்போது டேன்நிஷா பிஎட் படித்து வருகிறார். இளைஞர் பெர்ஜின் ஜோஸ் அரசு தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் காதலர்கள் இருவருக்கும் இடையே திடீரென சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், டேன்நிஷா காதலனை தவிர்க்க தொடங்கியுள்ளார். இது பெர்ஜினுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பலமுறை பேச முயன்றும் இளம்பெண் பிடிகொடுக்காமல் தவிர்த்து சென்றுள்ளார்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த பெர்ஜின், இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார். தொடர்ந்து அவர்களுக்குள் பிளவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் டேன்நிஷாவுக்கு போன் செய்து பேசிய பெர்ஜின் ஜோஸ், லேப்டாப்பில் உள்ள போட்டோக்கள் அனைத்தையும் உனது முன்னிலையில் டெலிட் செய்து விடுகிறேன், நேரில் வா என்று அழைத்துள்ளார்.
அதை ஏற்று வந்த டேன்நிஷாவை அழைத்துக் கொண்டு பைக்கில் விரிகோடு அருகே காக்கட்டான்குளம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது லேப்டேப்பில் உள்ள படங்களை டெலிட் செய்யுமாறு டேன்நிஷா கூறியுள்ளார்.
ஆனால் அங்கு வைத்து அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெர்ஜின் ஜோஸ் தனது பைக்கில் ஏற்கனவே தயாராக வைத்திருந்த அரிவாளை எடுத்து டேன்நிஷாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே வாகனத்தில் சென்றவர்கள் வரவே, பெர்ஜின் ஜோஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் வெட்டு காயத்துடன் போராடிய டேன்நிஷாவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் பெர்ஜின் ஜோஸ், விரிகோடு முண்டவிளை பகுதியில் சென்ற பயணிகள் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் பெர்ஜின் உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண்ணை கொலை செய்து பாதாள சாக்கடையில் வீசிய கோயில் பூசாரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சம்ஷாபாத் பகுதியில் கோயில் ஒன்றில் பூசாரி ஆக வேலை செய்து வந்தவர் சாய் கிருஷ்ணா.
சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த இவர், வேலையை விட்டுவிட்டு பூசாரி ஆகவும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். சாய் கிருஷ்ணாவிற்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த திருமணமாகாத அப்சரா என்ற பெண்ணுடன், பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்சரா, பூசாரி சாய் கிருஷ்ணாவை வற்புறுத்தி வந்துள்ளார். ஏற்கனவே மனைவி இருப்பதால் அப்சராவை விட்டு விலக, சாய் கிருஷ்ணா முடிவெடுத்துள்ளார்.
ஆனால் அப்சராவின் திருமணம் அழுத்தத்தால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா, அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 3ஆம் தேதி தனிமையில் பேச வேண்டும் எனக்கூறி அப்சராவை தன்னுடைய காரில் சோரையூர் பகுதிக்கு அழைத்து சென்றார்.
ஆள்நடமாட்டம் இல்லாத நற்குடா என்ற பகுதியில் காரில் இருந்து கீழிறக்கி, அப்சராவின் தலையை அங்குள்ள சுவற்றில் மோதி நிலைக் குலைய வைத்துள்ளார். பின் கீழே கிடந்த கல்லை தூக்கி அப்சராவின் தலையில் போட்டு துடிதுடிக்க அவரை கொலை செய்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த ரகசிய காதலியின் உடலை, காரில் ஏற்றி சரோநகர் பகுதிக்கு எடுத்துச் சென்றார் சாய் கிருஷ்ணா. கடையிலிருந்து பிளாஸ்டிக் பை ஒன்றை வாங்கி காரில் வைத்தே அப்சராவில் உடலை காற்று புகாதபடி அடைத்துள்ளார்.
பின்னர், இரவில் அதே பகுதியில் உள்ள பாதாள சாக்கடையின் மூடியை திறந்து காதலியின் உடலை அதில் வீசி விட்டு சென்றார். அங்கிருந்து ராஜீவ் காந்தி சர்வதேச காவல் நிலையத்திற்கு சென்ற சாய் கிருஷ்ணா, அப்சராவை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
சம்பந்தமில்லாத நபர் ஒருவர் அப்சராவை காணவில்லை என்று புகார் அளித்தது போலீசாருக்கு சந்தேகத்தை வரவழைத்துள்ளது. துருவி துருவி விசாரணை நடத்தியதில் தான் அப்சராவை கொலை செய்து உடலை பாதாள சாக்கடையில் வீசிவிட்டு சென்றதை சாய் கிருஷ்ணா ஒப்புக்கொண்டார்.
சாய் கிருஷ்ணாவை கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சம்பவ இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்து, அப்சராவின் உடலை தேடி வருகின்றனர்.
கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணுடன் கோயில் பூசாரி ரகசிய உறவில் இருந்ததுடன் அவரை கொலை செய்து உடலை சாக்கடையில் வீசிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனியில் தாய், தந்தை வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் மனமுடைந்த 8 வகுப்பு சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தெற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், இவரது மனைவி கவிதா. இவர்களது மகள் தேவதர்ஷினி வயது 13. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கணவன் செந்தில்குமாரும், மனைவி கவிதாவும், அடிக்கடி சண்டை போட்டு வந்தனர்.
நேற்று இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், கவிதா கோபித்துக் கொண்டு, பொள்ளாச்சி அருகே உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
இதனால் சிறுமி தேவதர்ஷினி மனமுடைந்தார். வீட்டில் யாரும் இல்லாத பொழுது தனது தாயாரின் சேலையால், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பழனி நகர போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய்,தந்தை வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொண்டதை பார்த்து மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 வயது பெண் குழந்தையை அவரது தந்தையே கோடாரியால் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலம் ஆலப்புழாவிலுள்ள மாவேலிக்கரை என்ற பகுதியை அடுத்துள்ளது புன்ன மூடு என்ற கிராமம்.
இங்கு ஸ்ரீமகேஷ் – வித்யா தம்பதி வசித்து வந்தனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான இவர்களுக்கு 6 வயதில் நட்சத்திரா என்ற மகள் உள்ளார். இந்த சூழலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு குடும்ப தகராறு காரணமாக மனைவி வித்யா தற்கொலை செய்துகொண்டார்.
மனைவி தற்கொலைக்கு பிறகு தனது தாய், தந்தை, மகள் என வாழ்ந்து மகேஷ் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழலில் தந்தையும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இரயிலில் அடிபட்டு இறந்துள்ளார்.
இதனால் 62 வயது தாய் மற்றும் மகளுடன் மட்டுமே வாழ்ந்து வந்த இவர், மீண்டும் 2-வது முறையாக திருமணம் செய்ய எண்ணியுள்ளார். அதன்படி பெண் பார்க்க பலமுறை சென்றுள்ளார். ஆனால் இவருக்கு பெண் குழந்தை இருப்பது ஒரு தடையாகவே இருந்துள்ளது.
இருப்பினும் தொடர்ந்து இவர் பெண் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் இரவு சுமார் 7 மணி அளவில் தாய் பக்கத்துக்கு வீட்டில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென சிறுமி நட்சத்திராவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இதனை கேட்டு பதறி வந்த அவர் பார்க்கையில் மகேஷ், தனது கையில் கோடாரியை வைத்து நின்றுள்ளார்; சிறுமி இரத்த வெள்ளத்தில் கீழே கிடந்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டு அதிர்ந்த பாட்டி, உடனே தனது பேத்தியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கே சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் தந்தை மகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மகள் இருப்பதால் தனக்கு இரண்டாவது திருமணம் ஆகவில்லை என்ற ஆத்திரத்தில் தனது மகளை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து அவரிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6 வயது பெண் குழந்தையை அவரது தந்தையே கோடாரியால் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.