தந்தைக்கு எச்சரிக்கை பலகை வைத்த விட்டு தாயும், மகனும் எடுத்த விபரீத முடிவு!!

தருமபுரியில்..

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒட்டப்பட்டி பகுதியில் பழனிவேல், அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் விஜய் ஆனந்த் ஆகியோர் வசித்து வந்தனர். இதில் பழனிவேல் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார்.

பொறியியல் பட்டதாரியான விஜய் ஆனந்த், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து நூல் தொழில் செய்து வந்துள்ளார். ஆனால் தொழிலில் போதிய வருவாய் இல்லாததால், நண்பர்களிடம் முதலீடு செய்த பணத்தை விஜய் ஆனந்த் திருப்பி கேட்டுள்ளார்.

இதனையடுத்து கொடுத்த பணத்திற்கு மாதந்தோறும் வட்டி தருவதாக நண்பர்களான கார்த்திக், அருண் இருவரும் கூறினர். அதன்படி சில மாதங்கள் வட்டியை கொடுத்தனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக அவர்களால் முறையாக வட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் நண்பர்கள் மூவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. முதலீடு செய்த 25 லட்சம் பணம் வரவில்லை, குடும்ப வறுமை, நண்பர்கள் ஏமாற்றம் என விஜய் ஆனந்த் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், விஜய் ஆனந்தின் தந்தை பழனிவேல் அவருடைய சொந்த ஊரான புலிக்கரைக்கு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் வீட்டிலிருந்த விஜய் ஆனந்த் மற்றும் தாய் சாந்தி இருவரும் விபரீத முடிவு எடுத்தனர்.

வீட்டில் ஒரு அறையில் தங்களது முகத்தில் பாலித்தின் கவரை வைத்து மூடி, நைட்ரஜன் கேஸ் சிலிண்டரில் பைப் லைன் கனக்சன் மூலம் முகத்தை மூடிய பாலித்தின் கவருக்கும் நைட்ரஜனை பாய்ச்சி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் கதவை அப்படியே திறந்தால், திறப்பவருக்கும் நைட்ரஜன் வாயுவால் பாதிப்பு ஏற்படும் என்பதால் “POISON GAS, NITROJAN INSIDE, PLEASE CALL POLICE, BREAK WINDOWS BEFORE” என ஒரு சார்ட்டில் எழுதி ஒட்டிவைத்தனர்.

இதனை தொடர்ந்து மாலை வீடு திரும்பிய தந்தை பழனிவேல், இருவரின் நிலை மற்றும் சார்டில் எழுதி வைத்திருந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அங்கு விரைந்த போலீசார், தாய், மகன் ஆகிய இருவரின் உடலையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்துகொண்ட அறையில் இரண்டு சிலிண்டர்கள், நைட்ரஜன் வாங்கியதற்கான பெட்டிகள், அவற்றை சிலிண்டரோடு இணைப்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் புதிதாக வாங்கி வைத்துள்ளனர்.

மேலும் ஒரு பெட்டி திறக்காமல் இருந்துள்ளது. அந்த பெட்டியின் மீது METAL CUTTER, FOR SUCIED என எழுதப்பட்டிருந்தது. அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் சோதனையில் தற்கொலை கடிதமும் சிக்கியது.

அதில், தனது தற்கொலைக்கு காரணம் கார்த்திக், அருண் ஆகிய இருவர் தான். தன்னிடம் பெற்ற 25 லட்ச ரூபாய் பணத்தினை திருப்பிக் கொடுக்காமல், ஏமாற்றி மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.

அவர்களின் செல்போன் நம்பர் உட்பட அனைத்தையும் கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனிடையே, நைட்ரஜன் மற்றும் சிலிண்டர்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது? ஆன்லைன் மூலம் வாங்கினார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரிதாபமாக உயிரிழந்த சகோதரிகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

தஞ்சையில்..

தஞ்சையில் தந்தையுடன் குளத்திற்குக் குளிக்கச் சென்ற சகோதரிகள் இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் தேனி வல்லம் புதூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக வல்லம் காவல் நிலைய போலீசார் அளித்த தகவலின்படி, தஞ்சை மாவட்டம் வல்லம் புதூர் கிராமம் மகாகாளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர்கள் புண்ணியமூர்த்தி கோமதி தம்பதியினர்.

புண்ணியமூர்த்தி புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 8 வயதான பெரியநாயகி மற்றும் 6 வயதான பிரிதிஷா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்களில் பெரியநாயகி வல்லம் புதூரில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பும் பிரதிஷா முதல் வகுப்பும் படித்து வந்தனர்.கடந்த ஒரு வருடமாக புண்ணியமூர்த்தி தனது குடும்பத்துடன் தன் மனைவியின் சொந்த ஊரான தஞ்சை அருகே உள்ள வல்லம் புதூரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்து கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்த புண்ணியமூர்த்தி தனது குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு குளிப்பதற்காக வல்லம் புதூரில் இருந்து நாட்டாணி செல்லும் சாலையில் உள்ள புதுக்குளத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது குழந்தைகளைக் குளத்தின் கரையில் உட்கார வைத்துவிட்டு இயற்கை உபாதையைக் கழிக்க அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தைகள் இருவரையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தவர் அருகில் எங்கேனும் விளையாடிக் கொண்டு இருக்கிறார்களா எனத் தேடிப் பார்த்துள்ளார்.

நீண்ட நேரமாகத் தேடியும் குழந்தைகள் கிடைக்காததால் மீண்டும் குளக் கரைக்கு வந்து தேடியுள்ளார். பின்னர் அக்கம் பக்கம் உள்ளவர்களும் சேர்ந்து குழந்தைகளைத் தேடியுள்ளனர்.குழந்தைகள் அணிந்து இருந்த காலணிகள் மற்றும் ஆடைகள் கரையிலிருந்தது கண்டு சந்தேகம் அடைந்த அவர் குளத்தில் தேடியுள்ளார்.

 

இவரின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் வந்து குளத்தில் இறங்கித் தேடியுள்ளனர். அப்போது குளத்தின் சேற்றில் சிக்கி குழந்தைகள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். துள்ளி விளையாடிய தங்கள் குழந்தைகள் இருவரின் உயிரற்ற உடலைப் பார்த்த புண்ணியமூர்த்தி துக்கம் தாங்காமல் கதறி அழுதார்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த வல்லம் காவல் நிலைய காவல்துறை குழந்தைகள் இருவரின் உடலையும் மீட்டு உடல் கூறு ஆய்விற்காகத் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்கட்டிலிருந்த பள்ளத்தைக் கவனிக்காமல் குழந்தைகள் குளத்தில் இறங்கியதால் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிர் இழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. குழந்தைகளின் உடலைப் பார்த்த தாயும் உறவினர்களும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளான குழந்தைகள் இரண்டு பேரும் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடைய்யே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் மனைவியை நடுஇரவில் கதறவிட்ட கணவர் : நடந்த விபரீதம்!!

நாகப்பட்டினத்தில்..

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பெத்தாச்சிக்காட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் முரளி (எ) சுரேஷ் (32). சென்னையில் தங்கி கார் ஓட்டி வருகிறார்.

இவரது மனைவி மீனா (27). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் காதல் மனைவியை கம்பியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பெத்தாச்சிக்காட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் முரளி (எ) சுரேஷ் (32). சென்னையில் தங்கி கார் ஓட்டி வருகிறார்.

இவரது மனைவி மீனா (27). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மனைவி மீனாவின் நடத்தையில் சுரேசுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சுரேஷ், நேற்று முன்தினம் காலை சென்னையிலிருந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை பெத்தாச்சிக்காட்டில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டுக்கு வந்ததும் வராதுமாக மீனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் சுரேஷ் தகராறில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆத்திரமடைந்த சுரேஷ், வீட்டில் இருந்த தேங்காய் உரிக்க பயன்படுத்தும் இரும்புக்கம்பியை எடுத்து அவரை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுவிட்டார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் மீனா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீனாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தைக்கு மீன் வியாபாரம் செய்ய சொகுசுக் கார் வாங்கிக் கொடுத்த மகன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

ராமநாதபுரத்தில்..

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிவானந்தம்- காளியம்மாள். இத்தம்பதிக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும், இரு மகள்களும் இருக்கின்றனர். மீன் வியாபாரம் செய்து வந்த சிவானந்தம் சுரேஷ் கண்ணனை கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படித்து வைத்தார்.

தற்போது சுரேஷ் வளைகுடாவில் ஒரு கப்பல் நிறுவனத்தில் மாதம் 2 லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப பாரத்தை சுமந்த சுரேஷ் கண்ணன் தங்கைகள் இருவருக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தார்.

இதனையடுத்து சைக்கிளில் மீன் வியாபாரம் செய்து வந்த தன் தந்தைக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார். மகன் வாங்கி கொடுத்த எர்டிகா சொகுசு காரில் சிவானந்தன் மீன்களை ஏற்றிச் சென்று வியாபாரம் செய்து வருகிறார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இப்படிப்பட்ட மகனை பெறுவதற்கு இவன் தந்தை என்ன வரம் வாங்கி வாந்தானே என்று கமெண்ட் செய்து பாராட்டி வருகின்றனர்.

திருமணம் செய்வதாக கூறி காதலித்து ஏமாற்றிய இளைஞன்.. இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு!!

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டையில் காதலிப்பதாக கூறி கர்ப்பம் ஆக்கிய காதலரை தன்னோடு சேர்த்து வைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (ஜூன் 5) இளம்பெண் ஒருவர் கண்ணீருடன் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண். இவரும் அதேப் பகுதியைச் சேர்ந்த இம்ரான் பரீக் என்பவரும் கங்காவும் கடந்த 9 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இம்ரான் பரீக்கின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் காதலரின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இம்ரான் பரீக் மலேசியா சென்றுவிட்டார்.

அங்கிருந்து பெண்ணை தொடர்புகொண்ட அவர் மலேசியாவுக்கு அவரையும் வருமாறு கூறியுள்ளார். இவரும் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மலேசியாவில் ஒன்றாக இருந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட இம்ரான் பரீக் அவரை மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவரிடம், தற்போது ஊருக்கு செல் பின்னர் அங்கு வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவரை மலேசியாவில் இருந்து அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பெண் தனது தாய் வீட்டிற்கு வந்து நடந்ததை எல்லாம் கூறிய பிறகு பெற்றோர் அவரது காதலரின் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் எங்களுக்கு எதுவுமே தெரியாது என்று கூறிவிட்டனர்.

இதனைத் தெரிந்து கொண்ட இம்ரான் பரீக் கங்காவிடம் செல்போனில் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த கங்கா தாம் ஏமாற்றப்பட்டது அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், இதனைத்தொடர்ந்து கண்ணீர் மல்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், ஆட்சியரை சந்தித்து தனது காதலனோடு சேர்த்து வைக்க வேண்டும் அல்லது தன்னை ஆசை வார்த்தைக்கூறி குடும்பம் நடத்தி ஏமாற்றியவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.

மேலும் இது குறித்து கங்கா அளித்த மனுவுடன், இருவரும் இணைந்து எடுத்துகொண்ட புகைப்படங்கள், திருமண பத்திரிக்கை உள்ளிட்டவைகளையும் இணைத்துள்ளார். காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக்கி தன்னை ஏமாற்றிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கர்ப்பிணி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பட்டம் எடுக்கும் போது 30 அடி உயரத்திலிருந்து விழுந்த சிறுவன்.. சோகத்திலும் பெற்றோர்கள் செய்த உதவி!!

சென்னையில்..

சென்னை சூளைமேடு பாரதி தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது இரண்டாவது மகன் பிரசன்னா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை பிரசன்னா தனது நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பட்டம் ஒன்று அறுந்து காற்றில் பறந்து வந்து கொண்டிருந்தது.

இதைப் பார்த்த பிரசன்னா, பட்டத்தைப் பிடிப்பதற்காக அதன் பின்னே ஓடியுள்ளார். பிறகு அந்த பட்டம் பெரியார் பாதை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் சிக்கிக் கொண்டது.

அதை எடுப்பதற்காகப் பிரசன்னா மாடியின் மீது ஏறி உள்ளார். அப்போது ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்குத் தாவ முயன்ற போது 30 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலைப் பெற்றோர் தானமாக வழங்கியுள்ளது.

மகன் இறந்த போதும் யாருக்காவது உதவியாக மகன் இருக்கட்டும் என பெற்றோர்கள் உடல் உறுப்புகனை தானமாக வழங்கியது அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் 55 வயதான காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த 28 வயது காதலன்!!

களனியில்..

களனி பிரதேசத்தில் 55 வயது காதலியிடம் தங்கத்தை திருடிய 28 வயது காதலனை களனி பொலிஸார் கைது செய்துள்ளனர். நிதி நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளராகப் பணிபுரியும் இந்தக் காதலன் பல வருடங்களாக தொடர்பு வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காதலரிடம் திருமண யோசனை ஒன்று இருந்தமையால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக காதலி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்துள்ளனர். ஆனால் தங்கப் பொருட்களை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருமணமான ஒரே மாதத்தில் தாலி கட்டிய கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!

மகாராஷ்ராவில்..

திருமணமாகி ஒரே மாதத்தில் கணவனை கொலை செய்துவிட்டு முகமூடி கொள்ளையர் கொலை செய்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்தவர் சுராஜ் ராஜேந்திரா. டேட்டா ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவருக்கும் அங்கிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

இதனையடுத்து, இருவரும் பல்வேறு கோவிலுக்கு சென்று வந்துள்ளனர். அந்த வகையில் புனே புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் பிரதி ஷீர்டி கோவிலுக்கு சென்றனர்.

அப்போது, தங்களுக்கு சொந்தமான தோட்டம் இருப்பதாகவும், அங்கு சென்றுவிட்டு வீடு திரும்பலாம் என மனைவி அங்கிதா கூறியுள்ளார். மனைவி ஆசைப்பட்டதால் யோசிக்காமல் கொள்ளாமல் சரி என்று கணவர் கூறியுள்ளார்.

அடுத்த சில மணிநேரத்தில் அங்கிதாவின் தந்தைக்கு மகளிடமிருந்து அழைப்பு ஒன்று வந்தது. அப்போது, தோட்டத்தில் இருந்த தங்களை முகமூடி கொள்ளையர்கள் தாக்கியதாகவும் அதில் சுராஜ் உயிரிழந்ததாகவும் அங்கிதா கதறியபடி கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அங்கிதாவின் தந்தை தோட்ட வீட்டுக்கு சென்றார். இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, சந்தேகத்தின் பேரில் அங்கிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முன்னுக்கு பின் முரணாக அங்கிதா பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, அங்கிதாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் பாணியில் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியபோது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

திருமணமான சில தினங்களிலேயே சுராஜை பிடிக்காமல் போனதாகவும், தன்னை சந்தேகப்பட்ட கணவனை கொன்று தீர்க்கும் வெறி வந்ததில், திட்டம்போட்டு சம்பவத்தை நிகழ்த்தியதாக கூறினார். இதனையடுத்து, அங்கிதாவை கைது செய்த போலீசார் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

வட்ஸ்அப்பில் வந்த விடை; கையும் களவுமாக சிக்கிய மாணவி!!

வட்ஸ்அப்பில்..

பிபில கல்வி வலயத்துக்கு உட்பட்ட தேசிய பாடசாலை ஒன்றில் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் தோற்றிய மாணவி ஒருவர், கணிதப் பாட வினாத்தாளைப் படம் பிடித்து வட்ஸ்அப் மூலம் ஆசிரியர் ஒருவருக்கு அனுப்பி அவரிடமிருந்து அதற்கான பதிலை பெற்று விடை எழுதிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அவதானித்த பரீட்சை மண்டப ஆசிரியர் ஒருவர் மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

அந்நிலையில் பிபில வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஜே. சுசில் விஜேதிலகவின் ஆலோசனையின்பேரில் மஹியங்கனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.எஸ்.டி. டயஸ், இந்த மாணவி பயன்படுத்திய கைத்தொலைபேசியைக் கைப்பற்றியதுடன் இதனுடன் தொடர்புடைய ஆசிரியரை பிபில கல்வி வலயத்துக்கு அழைத்து வாக்குமூலம் பெற்றுள்ளார்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குச் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பிபில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் வைத்தியர் முகைதீன் சுட்டுக் கொலை : புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை!!

வவுனியாவில் மகப்பேற்று வைத்திய நிபுணர் முகமட் சுல்தான் மீரா முகைதீன் என்பவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய புளொட் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞசெழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆம் மாதம் 20 ஆம் திகதி வவுனியா, கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மகப்பேற்று வைத்திய நிபுணரான முகமட் சுல்தான் மீரா முகைதீன் என்ற வைத்தியர் கடமை முடித்து மாலை 6.45 முதல் 7 மணி வரையான நேரத்தில் வீடு செல்ல தயாரான போது தனியார் வைத்தியசாலை வாயிலில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அரச சட்டத்தரணிகளான தர்சிகா திருக்குமாரன் மற்றும் ஆறுமுகம் தனுஜன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

நெடுமாறன் என அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்பவர் முகமட் சுல்தான் மீரா முகைதீன் என்பவருக்கு மரணத்தை விளைவித்தன் காரணமாக 296 பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்படக் கூடிய கொலை குற்ற வழக்காகும்.

இவ் வழக்கு இரசாயன பகுப்பாய்வு அறிக்கை மூலம் வழக்கு தொடுனருக்கு தொடுக்கப்பட்ட வழக்காகும். இதற்கு அமைய எதிரி 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி குறித்த பத்திரத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மன்றில் தமிழ் மொழியில் எதிரிக்கு வாசித்து காட்டப்பட்டது.

இதனைக் கேட்ட எதிரி தான் சுற்றவாளி என மன்றில் கூறினார். இதற்கு அமைய யுரஸ்சபை இல்லாத விளக்கத்தை தெரிவு செய்து கோரினார். இதனை மன்று ஏற்று யுரஸ் சபை இல்லாத வழக்குக்கு உத்தரவிட்டது.

இதன்போது 20 சாட்சியங்கள் விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தனியார் வைத்தியசாலை வைத்தியர், தாதியர், மருந்தாளர், பணியாளர் மற்றும் 7வது சாட்சியமும், 19 வது சாட்சியமும் இந்த வழக்கின் திருப்பு முனையாக அமைந்தது.

7 ஆவது சாட்சியாக இரசாயன பகுப்பாய்வாளர் சட்டவைத்திய அதிகாரி மடவல என்பவரின் சாட்சியும், தடவியல் ஆய்வு கூட அறிக்கைபடியும் நெடுமாறன் என்பவரின் 1100 என்ற இலக்கமுடைய துப்பாக்கியில் இருந்து சுடப்பட்ட 4 தோட்டாக்கள் தான் தான் குறித்த வைத்தியரின் உடலை தாக்கியது என்பதை மன்றில் தெரிவித்தார்.

19 வது சாட்சியாக வவுனியா, மருகாரம்பளை பகுதியில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் வீதித்தடை சோதனையில் ஈடுபட்டிருந்த கொடக தெனிய கெதர என்ற இராணுவ வீரர் சாட்சியமளிக்கையில்,

குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவ் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் 10 மேற்பட்ட நபர்களால் விற்பனைகாக கொண்டு செல்லப்பட்ட இருப்பு, தகரங்கள் இறக்கி ஏற்றப்பட்டது.

இதற்கான அனுமதிப் பத்திரத்தை சோதனை செய்த போது அவர்களிடம் அனுமதிப் பத்திரம் இருக்கவில்லை. அவர்களிடம் கைத்துப்பாக்கி ஏதாவது இருகின்றதா என வினவினேன். இராணுவத்தினரின் சாதாரண சோதனை இடுப்பு பகுதியை சோதனையிடுவதாகும்.

அந்த வகையில் பழனிமுத்து சிவராசா என்பவரின் இடுப்பு பகுதியில் இருந்து பிஸ்ரல் ஒன்று மீட்கப்பட்டது. அதன்போது நெடுமாறன் என்பவரும் தன்னிடம் ஒரு துப்பாக்கி இருப்பதாக 1100 என்ற இலக்கமுடைய பிஸ்ரலை இராணுவத்தினரிடம் காண்பித்தார் என மன்றில் தெரிவித்தார்.

அத்துடன், இதே நீதிமன்றில் பிறிதொரு வழக்கில் குறித்த எதிரியான நெடுமாறனின் உடமையில் இருந்து பெறப்பட்டது 1100 என்ற இலக்கமுடைய துப்பாக்கி தான் என இராணுவ வீரர் அடையாளம் காட்டியிருந்தார்.

இதனடிப்படையில் மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்றையதினம் (08.06) தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

இதன்போது, 7 ஆம் 19 ஆம் சாட்சிகளின் அடிப்படையிலும், பகுப்பாய்வு திணைக்கள அதிகாரியின் சாட்சியங்களின்படியும், சந்தர்ப்பம், சூழ்நிலைகளின் படி சங்கிலி கோர்வையாக ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகக் கூடிய சந்தர்ப்பங்களின் அடிப்படையில்,

வழக்கு தொடுனர்களான தர்சிகா திருக்குமாரன் மற்றும் ஆறுமுகம் தனுஜன் என்பவர்களால் சந்தேகத்திற்கு அப்பால் எதிரி தான் குற்றத்தை புரிந்துள்ளார் என நிரூபித்துள்ளார்கள். இதற்கு அமைய எதிரிக்கு மரணதண்டனை வழங்கி மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வவுனியாவை சேர்ந்த புளொட் அமைப்பின் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த நபர் தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் 14 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்திருந்தது. தீர்ப்பின் பின்னர் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்லூரி விடுதியில் மாணவி விபரீத முடிவு.. கதறும் பெற்றோர்!!

கேரளாவில்…

இந்திய மாநிலம் கேரளாவில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஷ்ரத்தா (20).

இவர் பொறியியல் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஷ்ரத்தா தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதனைக் கண்ட சக தோழிகள் பயத்தில் அலறியுள்ளனர் அதன் பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

தங்கள் மகளின் திடீர் மரணத்தால் ஷ்ரத்தாவின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனையடுத்து ஷ்ரத்தாவை மனதளவில் ஆசிரியர்கள் துன்புறுத்தியதாலேயே அவர் இந்த முடிவை எடுத்ததாக மாணவனின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தங்கள் மகளின் செல்போனை ஆசிரியர்கள் பறித்துக் கொண்டபோது, துறைத்தலைவர் மாலை அழைத்து பேசி, துன்புறுத்தியுள்ளதாக ஷ்ரத்தாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஷ்ரத்தா குறைவான மதிப்பெண்கள் பெற்றதாக கல்லூரி நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு அறையில் இருந்து மாணவி வெளியேறியுள்ளார்.

அதேபோல் கல்லூரி அதிகாரிகளும், அவரை தற்கொலை செய்ய நெருக்கடி கொடுத்தனர் என்று மாணவியின் தோழிகளும் கூறியுள்ளனர். மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டி மாணவர் அமைப்புகள் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது.

அத்துடன் விடுதி மாணவிகளும் வெளியேற்றப்பட்டுள்ளார். இதற்கிடையில், மருத்துவமனையில் ஷ்ரத்தா அனுமதிக்கப்பட்ட போது அவர் மயக்கமடைந்ததாக கல்லூரி நிர்வாகம் மருத்துவர்களிடம் கூறியுள்ளது.

ஆனால், மாணவி தற்கொலைக்கு முயன்றதை அவர்கள் தெரிவித்திருந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கும் என ஷ்ரத்தாவின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி பரிதாபமாக பலி!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் க.பொ.த உயர்தரம் கல்விகற்க்கும் மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்க்கும் பவான் பனுஷா என்ற (வயது -18) குறித்த மாணவியின் மரணம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாணவியின் இந்த முடிவானது கல்விகற்கும் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவியின் இரங்கல்களை கல்விகற்கும் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் மிகுந்த கவலையுடன் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்ததை காணக்கூடியதாக உள்ளது.

பவான் பனுஷா அவர்களின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை முல்லைத்தீவு நியூஸ் பேஸ்புக் குரூப் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

பல்கலைக்கழக இளம் ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!

நீர்கொழும்பில்..

வடமேற்கு பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் இளம் ஆசியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வடமேற்கு பல்கலைக்கழகத்தின் மாகந்துர வளாகத்தில் விவசாய பீடத்தில் கற்பிக்கும்,

மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் சசித் தாரக சமரகோன் என்ற 26 வயதான இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் மிகப்பெரும் பின்னணி.. விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்!!

கொழும்பில்..

செயற்கையான கட்டுப்பாட்டினாலேயே ரூபாவின் பெறுமதி தற்போது வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

எனினும் நீண்ட காலம் செல்லும் முன்னர் இந்த நிலைமை மாறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், அதிக வட்டிக்கு வெளிநாடுகளில் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதன் காரணமாக ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.

அந்த பணத்திற்கு 25 சதவீதம் என்ற அதிக வட்டி செலுத்தப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் ரூபாவின் பெறுமதி சுமார் 80 ரூபாவிற்கும் அதிகளவில் உயர்ந்துள்ளது.

எனினும் அதன் பலன் குறித்த டொலர்களை வழங்கியவர்களுக்கே கிடைத்துள்ளது தவிர வேறு எவருக்கும் சென்றடையவில்லை. இவ்வாறு அதிக நன்மை இருக்கும் போது, பணம் கொடுப்பவர்கள் உலக அளவில் அதிகளவானோர் இருக்கின்றனர்.

அதற்கான அனுகூலத்தை பெற்ற பின்னர், மீண்டும் அவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்வார்கள். ஆனால் இந்த நாட்டு மக்கள் விளைவுகளை அனுபவிக்கிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோர் எதிர்ப்பால் உயிரை மாய்த்த உயர்தர மாணவி : தமிழர் பகுதியில் சோகம்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி, பெரியகல்லாறு பிரதேசத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன் தினம் (05) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் சிவகுரு வீதி பெரியகல்லாறு பிரதேசத்தை சேர்ந்த சுதர்சன் யோஜிதா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார். உயிரிழந்த மாணவி உயர்தர வகுப்பில் கல்வி கற்று வரும் நிலையில் அப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

அவர்களின் காதலுக்கு பெற்றார் எதிரிப்பு தெரிவித்து வந்தனர். சம்ப தினத்தன்று உறவினர் ஒருவரின் திருமண வீட்டுக்கு செல்ல இருந்த நிலையில் மாணவி தனது வீட்டின் அறையினுள் சென்று தனக்குத்தானே தூக்கிட்டுள்ளார்.

மாணவி தூக்கில் தொங்குவதை கண்ட தந்தை பதறிப்போய் மாணவியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார்.

விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காதலால் மாணவி உயிரை மாய்த்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை.. யார் வரி செலுத்த வேண்டும்?

புதிய நடைமுறை..

வரி செலுத்துவதற்கு அடுத்த வருடம் முதல் டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வரி செலுத்துவதை முறையான முறையில் மேற்கொள்ளும் வகையில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் நேற்று (06.06.2023) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வரி செலுத்தும் வலையமைப்பை இனங்கண்டு அதனை விரிவுபடுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறுகையில், “அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல், புதிய விதிகளின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரிக்கு பதிவு செய்ய வேண்டும்.

தற்போது மக்கள் பிரதிநிதிகளாக பணியாற்றும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருமான வரிப் பதிவேடுகளை ஆரம்பிக்கவுள்ளோம். ஆகவே புதிய விதிகளின் படி, குறிப்பாக நாடாளுமன்றம், மாகாண சபைகள் அல்லது உள்ளூராட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்பவர்களும் வருமான வரிக்கு பதிவு செய்ய வேண்டும்.

இந்த விடயத்தில் எந்தவொரு தரப்பினருக்கும் விசேட சலுகை வழங்கப்படாது. நாட்டில் யார் வரி செலுத்த வேண்டும் என்பதை இது தீர்மானிக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.