கறுப்பாக இருப்பதால் அடித்து கொடுமை செய்த கணவர்.. 3 பிள்ளைகளை விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

கேரளாவில்..

கருப்பாக இருப்பதாக கூறி கொடுமை செய்து வந்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே அமைந்துள்ளது அரூர் என்றார் பகுதி.

இங்கு K S உண்ணி என்ற 40 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நீதுமோல் என்ற 33 வயது பெண்ணுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணமானது.

இந்த தம்பதிக்கு தற்போது 3 பிள்ளைகள் இருக்கும் நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை கொடுமை செய்து வந்துள்ளார் உண்ணி. மேலும் அவரை அழகாக இல்லை என்றும், அவர் கருப்பாக இருப்பதாகவும் கூறி அவமானப்படுத்தி வந்துள்ளார் உண்ணி.

அதுமட்டுமின்றி அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். இதனால் மனமுடைந்து போகும் நீதுவும், தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வார். பின்னர் சமாதானமாகி மீண்டும் கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இதுபோன்றே தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. இருப்பினும் தனது பிள்ளைகளுக்காக பொறுத்துபோய் வாழ்ந்து வந்துள்ளார் நீது. ஆனால் அண்மைக்காலமாக உண்ணியின் கொடுமை தொடர்ந்து அதிகரித்தே காணப்பட்டுள்ளது.

அதோடு சண்டை காரணமாக நீதுவுக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் உண்ணி தனது பிள்ளைகளையும் சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார்.

இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த நீது, நேற்றைய முன்தினம் தனது படுக்கையறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து உறவினர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் நீதுவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

மேலும் நீதுவின் குடும்பத்தினர், அவரது சாவுக்கு உண்ணி தான் காரணம் என போலீசில் புகார் கொடுக்கவே, அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கருப்பாக இருப்பதாக கூறி கொடுமை செய்து வந்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கணவன் செய்த கொடூரம்!!

ராஜபாளையத்தில்..

ராஜபாளையம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மனைவி கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் கொலையாளியான கணவர் போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

குடும்பத் தகராறில் மாற்றுத்திறனாளி ஒருவர், தன் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் பேசுகையில், “ராஜபாளையம் அருகே மேல ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் மதிமன்னன்(வயது 34), வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி.

இவரின் இரண்டாவது மனைவி பாண்டிச்செல்வி(23). இந்த தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், கணவன் – மனைவிக்கிடையே நடத்தையில் சந்தேகம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

இந்தத் தகராறு காரணமாக பாண்டிச்செல்வி, ஒத்தப்பட்டியிலுள்ள அவரின் பாட்டி வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இதையறிந்து, அங்கு சென்ற மதிமன்னன், மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், கீழே கிடந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மனைவி பாண்டிச்செல்வியை, மதிமன்னன் சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் நிலைகுலைந்து ரத்தவெள்ளத்தில் பாண்டிச்செல்வி கீழே விழுந்திருக்கிறார். தொடர்ந்து இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜபாளையம் வடக்கு போலீஸார், பாண்டிச்செல்வியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாண்டிச்செல்வி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரின் உடல், கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், காவல் நிலையத்தில் சரணடைந்த மதிமன்னனைக் கைதுசெய்தனர்.

தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், மருத்துவ பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மதிமன்னனை இரவில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது சிறுநீர் கழித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற மதிமன்னன் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது.

இதற்கிடையில், மருத்துவமனையைச் சுற்றியிருக்கும் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி‌ கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து பார்த்ததில், மதிமன்னன் தப்பிச்செல்லும் வீடியோ காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. இதைக்கொண்டு அவரைப் பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.

வேலைக்கு போகாதே என்று கண்டித்த கணவர் : குழந்தையோடு மனைவி எடுத்த விபரீத முடிவு!!

காஞ்சிபுரத்தில்..

வேலைக்கு செல்லாமல் குழந்தையை கவனித்து கொள்ள கட்டாயப்படுத்திய கணவனால், தனது பிள்ளையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சரண்யா என்ற இளம்பெண்ணுடன் திருமணமாகியுள்ளது.

இந்த தம்பதிக்கு ஜிஷ்ணு என்ற 3 வயது ஆண் குழந்தை இருக்கும் நிலையில், குழந்தையை சரண்யா மட்டும் கவனித்து வந்துள்ளார். இந்த சூழலில் பி.இ படித்திருக்கும் சரண்யா தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று தனது கணவரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு மதன் குமாரோ மறுத்துள்ளார். இருப்பினும் சரண்யா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நினைவுத்திறன் வளர்க்கும் பயிற்சி மையத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால் குழந்தையை கவனிக்க ஆள் இல்லாமல் இருந்துள்ளது.

எனவே வேலைக்கு செல்லவே கூடாது என்று மதன் குமார், தனது மனைவி சரண்யாவிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் மதன் மிகவும் கண்டிப்பாக தனது மனைவியிடம் கூறியுள்ளார். இந்த விவகாரத்தால் சரண்யா மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். எனவே சம்பவத்தன்று தனது வீட்டில் யாரும் இல்லாத போது அறையில் தற்கொலை செய்ய எண்ணியுள்ளார்.

எனவே குழந்தையை தூக்கி தொங்க விட்டு கொலை செய்து, பின்னர் தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார் சரண்யா. வீடு திரும்பிய மதன், இதனை கண்டு பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சடலங்களை மீட்டு உடற்கூறைவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் மதன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி சில ஆண்டுகளே ஆன நிலையில், வேலைக்கு செல்ல கூடாது என கணவர் கண்டித்ததால், இளம்பெண் தனது குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகனுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை.. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு தம்பதிகள் தற்கொலை!!

கேரளாவில்…

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் மலரம்பா பகுதியில் ராம் மனோகர் (70) – ஷோபா (68) என்ற மூத்த தம்பதி வசித்து வந்தனர். மருத்துவர்களான இவர்கள் இருவரும் சேர்ந்து, திருச்சூர் பகுதியில் கிளினிக் நடத்தி வந்தனர்.

மக்களிடம் எளிமையாக பழகும் தன்மை கொண்டவர்கள் என்பதால், இவர்கள் மருத்துவமனைக்கு அப்பகுதி மக்கள், ஏழை எளியவர்கள் அதிகம் சென்றுள்ளனர். இந்நிலையில், அண்மையில் இந்த கிளினிக்கை மூடிவிட்டு தம்பதி கோழிக்கோட்டில் உள்ள வீட்டில் குடியேறினர்.

இவர்களை மகள் அவ்வப்போது சென்று பார்த்து வந்துள்ளார். இந்த சூழலில், இவர்களின் வீடு நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், முதிய தம்பதியின் மகளுக்கு போன் செய்து தகவலை கூறியுள்ளனர்.

அதன்பேரில் அப்பெண் அங்கு சென்று பார்த்தபோது வீட்டில் ஒரு அறையில் மருத்துவத் தம்பதி இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டனர்.

ஆனால், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், முதிய தம்பதிகள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் அவர்கள் அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருந்தனர்.

இதனால் தற்கொலையா? அல்லது கொலையா? என சந்தேகம் எழுந்தது. போலீசாரும் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் முதிய தம்பதிகளின் வீட்டில் இருந்து கடிதம் ஒன்றும் சிக்கியது.

அதில், தங்கள் இருவருக்கும் வயோதிகத்தால் நோய் இருக்கின்றது. மகள், மருமகன் நன்றாகவே கவனித்துக் கொண்டாலும் அவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை, என உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிருள்ள பாம்பை வாயால் கடித்து மென்ற சிறுவன்.. அதிர்ந்துபோன மருத்துவர்கள்!!

உத்தர பிரதேசத்தில்..

3 வயது சிறுவன் ஒருவன், பாம்பை தனது வாயாலே கடித்து சவைத்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் பகுதியை அடுத்துள்ளது மத்னாபூர் என்ற கிராமம்.

இங்கு தினேஷ் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையோடு வசித்து வருகிறார். 3 வயதுடைய இவரது மஃ ஆயுஷ், சிறுவர்களுடன் விளையாடி வருவார். அந்த வகையில் சம்பவத்தன்று தனது வீட்டின் வாசலில் விளையாடியுள்ளார்.

அப்போது சிறுவன் திடீரென கத்தி அழுதுள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் உடனடியாக ஓடி வந்து பார்த்தனர். அப்போது சிறுவன் வாயில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ந்து போன அவர்கள் சிறுவனின் வாயில் இருந்த பாம்பை எடுத்து வெளியே எடுத்து போட்டுவிட்டு, உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிறுவனுடன் சேர்ந்து சிறுவன் வாயில் இருந்த பாம்பையும் ஒரு பாலித்தீன் கவரில் போட்டு உடன் எடுத்து சென்றனர். பின்னர் மருத்துவமனையில் இதுகுறித்து பெற்றோர் விளக்கினர்.

இருப்பினும் இதனை மருத்துவர்கள் முதலில் நம்பவில்லை. எனவே தான் பாலித்தீன் கவரில் இருந்த இறந்து போன பாம்பை காண்பித்தனர். இதனை கண்டு அதிர்ந்த மருத்துவர்கள் உடனடியாக சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

மேலும் அவரது உடலில் விஷம் எதுவும் உள்ளதா என்று சுமார் 24 மணி நேரம் மருத்துவமனையில் சிறுவன் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தொடர்ந்து பரிசோதனை செய்த பிறகு சிறுவன் உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விஷமில்லை என்பதால் சிறுவனின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாமல் இருந்துள்ளது. இருப்பினும் இதுபோன்ற விஷயங்களில் சிறுவர்களை மிகவும் கவனமாக பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். பாம்பை வாயாலே கடித்து கொன்ற 3 வயது சிறுவனின் செயல் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

காதலிக்கு பிறந்தநாள் சப்ரைஸ் கொடுக்க சென்ற காதலன்… கொலை செய்த தந்தை!!

கோவையில்..

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற காதலனை பெண்ணின் தந்தை குத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த லோடு மேன் பிரசாந்த். இவருக்கு 21 வயதாகிறது.

இவர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த 18 வயதான இளம்பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பிரசாந்துக்கு குடி பழக்கம் இருப்பதால் பெண் வீட்டார் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.

இதனால் இருவர் வீட்டிலும் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி ஒரு வழியாக அடுத்த ஆண்டு திருமணம் செய்து வைக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், இளம்பெண்ணுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு காதலியின் வீட்டுக்கு சென்று வாழ்த்து சொல்ல பிரசாந்த் திட்டமிட்டுள்ளார்.

இதனால் பிரசாந்த் நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவு மது குடித்துள்ளார். அதனை அடுத்து நள்ளிரவு 12 மணி அளவில் பிரசாந்த் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஒரே வண்டியில் காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அங்கு வீடு சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற பிரசாந்த் காதலியின் வீட்டு கதவை தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்து வந்த இளம்பெண்ணின் தந்தை என்ன ஏது என்று கேட்டுள்ளார்.

அதற்கு பிரசாந்த், காதலியை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு செல்கிறேன் என கூறியுள்ளார். ஆனால், பிரசாந்த் குடிபோதையில் இருந்ததால் அவர்கள் உள்ளே விடவில்லை. மகளையும் வெளியே வர அனுமதிக்கவில்லை.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் தந்தை உறவினருடன் சேர்ந்து பிரசாந்தை கத்தியால் மார்பில் குத்தியுள்ளார்.

இதனால், வலி தாங்காமல் துடித்து மயங்கிய பிரசாந்தை நண்பர்கள் தாங்கள் வந்த பைக்கில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே பெட்ரோல் தீர்ந்துபோனதால் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிரசாந்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள செட்டிபாளையம் போலீசார் வாலிபரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இளம்பெண்ணின் தந்தை மற்றும் உறவினரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கர்ப்பிணி சிறுமியை உயிருடன் எரித்த சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

பிரான்ஸில்..

பிரான்சில் கர்ப்பிணி சிறுமியை கொடூரமாகக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கான விசாரணை இன்று தொடங்குகிறது. பிரான்ஸில் 15 வயது கர்ப்பிணி சிறுமியை கத்தியால் குத்தி உயிருடன் எரித்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் நபர் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 15 வயது பள்ளி மாணவி 2019-ஆம் ஆண்டு, ஷைனா (Shaina) எனும் 15 வயது மேல்நிலைப் பள்ளி மாணவியை, அப்போது 17 வயது சிறுவனாக இருந்த நபரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பிரான்ஸில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிரான்சில் அதிகரித்து வரும் இளம் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் ஆன்லைன் துன்புறுத்தல்களால் அவர்கள் பாதிக்கப்படுவது குறித்து கவலைகளை தூண்டியது.

குற்றம் சாட்டப்பட்ட 17 வயதான சிறுவன் ஷைனாவைக் கொன்று அவரது உடலை எரிக்கும் நோக்கத்துடன் பாரிஸின் வடக்கே அமைந்துள்ள க்ரீல் நகரத்தில் உள்ள ஒரு கொட்டகைக்கு இழுத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டைச் சுற்றி விசாரணை மையம் கொண்டுள்ளது.

ஆனால், தற்போது 20 வயதைக் கடந்துவிட்ட அவர் தனது குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்து, தான் குற்றமற்றவர் என்று கூறுகிறார். அவரது வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் சார்பாக விடுதலையை கோருவதாகக் கூறினார்.

ஷைனாவின் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர், நெகர் ஹேரி, நீதியைப் பெறுவதற்கும், உண்மை வெளிச்சத்திற்கு வருவதை உறுதிசெய்வதற்கும் வலியுறுத்தினார்.

ஷைனாவுக்கு நேர்ந்த கொடூரங்கள் மற்றும் சோகமான சூழ்நிலைகள்
2019 அக்டோபரில், அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்த நிலையில், ஷைனாவின் எச்சங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பிரேத பரிசோதனை தடயவியல் பரிசோதனையில் ஷைனா பல கத்திக் காயங்களுக்கு ஆளாகியிருந்ததும், தீப்பிடித்தபோதும் உயிருடன் இருந்ததும் தெரியவந்தது.

அவர் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள், குடும்ப விருந்துக்குப் பிறகு வெளியே சென்றிருந்தார், அவருடைய கைப்பையில் ஒரு நேர்மறையான கர்ப்ப பரிசோதனை உறவினர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு கருக்கலைப்பு செய்த ஷைனா, புதிதாக கர்ப்பம் தரிக்கத் தொடங்கியிருக்கலாம் என்று விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன.

அவர் முன்பே ஒருமுறை குற்றம் சட்டப்பட்டவரால் கற்பமானதாக கூறப்படுகிறது. இவ்வாறு பல சோகமாக சூழ்நிலைகளை ஷைனா எதிர்கொண்டுள்ளார் என்பது அவரது குடும்பத்தினருக்கும் மேலும் சோகத்தை கொடுக்கிறது.

அப்பிள் நிறுவனத்தின் புதிய முயற்சி : நவீன உலகின் அடுத்தகட்ட பரிணாமம்!!

அப்பிள் நிறுவனம்..

கடந்த சில ஆண்டுகளாக மக்களின் எதிர்பார்ப்பை போதியளவு பூர்த்தி செய்யாத ஆப்பிள் இந்த வருடம் தொழில்நுட்பத்தின் புதிய பரிமானத்தை காட்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

அந்தவகையில் ஆப்பிள் விஷன் ப்ரோ Apple Vision Pro எனும் நவீன ரக கருவி ஒன்றை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Apple Vision Pro குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்வதற்கு முதல் இரண்டு முக்கியமான விஷயத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

ஆகுமென்டெட் ரியாலிட்டி (Augmented reality) என்றால் நிஜ உலகில் நிஜ திரை எதும் இல்லாமல் உங்கள் கண்களுக்கு மட்டும் ஒரு டிஜிட்டல் திரை காட்டப்படும், அதில் உங்களுக்கு தேவையானவற்றை பயன்படுத்தலாம்.

மற்றொன்று Spatial computing, மேலே கூறப்பட்ட ஆகுமென்ட் ரியாலிட்டி திரையை தலை அசைவு, கை அசைவு, பேச்சு முலம்(voice comment) ஆகியவற்றின் மூலம் இயங்கும் தொழில்நுட்பம்.

ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) கருவி என்பது ஒரு ஹெட் செட்(headset) போன்றது, இதை வைத்துக்கொண்டு ஒரு கம்பியூட்டர் ஸ்கிரீனில் செய்யும் அனைத்தையும் ஹெட்செட் (headset) வாயிலாக செய்ய முடியும்.

இது மட்டுமல்லாமல் ஒரு படத்தை 250 இன்ச் திரையில் பார்க்க முடியும். அனைத்தையும் விட இந்த கருவியை கை அசைவு, கண்கள், வாய்ஸ் வாயிலாக கட்டுப்படுத்த முடியும். Apple Vision Pro -வில் 3d கேமரா உள்ளது,

இதை வைத்து நீங்கள் சேமிக்க வேண்டிய முக்கியமான தருணத்தை 3d முறையில் படம் பிடிக்க முடியும். இதனால் நிஜத்தில் நடப்பது போலவே இருக்கும். இந்த புரட்சிகரமான கருவி சுமார் 3499 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.

மேலும் இந்த கருவி அடுத்த வருட தொடக்கத்தில் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் எனவும் அதனைத்தொடர்ந்து ஏனைய நாடுகளுக்கும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகள் கண்முன்னே உயிரிழந்த தம்பதி.. கதறித் துடித்த குழந்தைகள்!!

எடப்பாடியில்..

எடப்பாடி அருகே குழந்தைகள் கண்முன்னே காவிரி ஆற்றில் குளித்த கணவன்-மனைவி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை அடுத்த குழந்தைநகரைச் சோந்தவா் விசைத்தறி தொழிலாளி ஜனாா்த்தனன் (27), இவரது மனைவி பவித்ரா (23). இத்தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகனும் 3 வயதில் ஒரு மகளும் உள்ளனா்.

இந்நிலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஜனாா்த்தனன் தனது மனைவி குழந்தைகளுடன் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு சுற்றுலா வந்திருந்தாா். தொடா்ந்து காவிரி ஆற்றில் குடும்பத்துடன் விசைப்படகு சவாரி செய்தாா்.

பின்னா் ஆற்றில் குளிப்பதற்காக பூலாம்பட்டியை அடுத்த மோளப்பாறை பகுதிக்கு மனைவி குழந்தைகளுடன் சென்றாா். அங்கு கரையில் உள்ள ஒரு பாறை மீது தங்களது இரு குழந்தைகளையும் அமரவைத்துவிட்டு ஜனாா்த்தனனும் அவரது மனைவியும் ஆற்றில் இறங்கி குளித்தனா்.

கணவனும், மனைவியும் மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்த போது அவர்களை அறியாமலேயே ஆழமான பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். அவர்களது அபய குரல் கேட்டு குழந்தைகள் இருவரும் கரையில் இருந்து ஆற்றை பார்த்து அழுதனர்.

இருவரும் நீரில் மூழ்கி தத்தளிப்பதை கண்டு கரையிலிருந்த குழந்தைகள் அழுது கூச்சலிட்டுள்ளனா். சிறிது தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கணவன்- மனைவியை மீட்க ஆற்றுக்குள் இறங்கினர்.

அதற்குள் ஜனார்த்தனனும், அவருடைய மனைவியும் தண்ணீரில் மூழ்கினர். ஆற்றுக்குள் இறங்கிய மீனவர்கள் கணவன்-மனைவி இருவரையும் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்டனர். பெற்றோரின் உடல்களை பார்த்து குழந்தைகள் இருவரும் பரிதவித்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

தகவல் அறிந்ததும் பூலாம்பட்டி போலீசார் நிகழ்விடம் வந்து தம்பதியின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தங்கள் கண் முன்பே பெற்றோா் நீரில் மூழ்கி பலியானதைக் கண்டு அழுத குழந்தைகளின் பரிதாப நிலை அப்பகுதி மக்களை சோகத்தை ஆழ்த்தியது.

பாயாசத்தால நின்று போன திருமணம்.. நிச்சயதார்த்த விழாவில் அடிதடி.. இறுதியில் நடந்த சோகம்!!

சீர்காழியில்..

சீப்பை ஒளிச்சு வெச்சுட்டா கல்யாணம் நின்னுடுமான்னு விளையாட்டா கேட்போம். ஆனா பாயாசத்தைக் காரணம் காட்டி, நிச்சயதார்த்த விழாவோடு ஒரு திருமணம் நின்று போயிருக்கிறது.

எவனோ, பொண்ணைக் காதலிச்சுக்கிட்டு இருந்தவன் பார்த்த வேலையா இருக்கும் என்றும், மாப்பிள்ளைக்கு இப்படி கிளி மாதிரியான பொண்ணு பொண்டாட்டியா வர்றதான்னு சொந்தக்காரங்க வயித்தெரிச்சல்ல இப்படியெல்லாம் செஞ்சுட்டாங்கன்னும் நிச்சயதார்த்த விழாவுக்கு வந்தவங்க பாயாசத்தைக் குடிக்காமலேயே வீடு திரும்பினார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், கோலாகலமாக திருமண மண்டபம் ஒன்று திருமண நிச்சயதார்த்த விழாவுக்காக தயாராகி கொண்டிருந்தது. மணமகன் வீட்டாரை வரவேற்பதற்காக மணமகள் வீட்டாரும் தடபுடலாக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர்.

மணமகன்- மனமகள் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் என நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். அப்போது அங்கு நிச்சயதார்த்த விழாவில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் தீவிரமாக இருந்தனர். விழாவுக்கு வந்திருந்த உறவினர்களுக்கு வடை, பாயசத்துடன் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மண்டபத்தின் உள்ளே நிச்சயதார்த்த விழா மங்களகரமாக நடைபெற்று வந்த நிலையில், வெளியே மண்டபத்தின் நுழைவுவாயிலில் மணமகன் வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இருவரும் கடும் மோதலில் ஈடுபட்டனர்.

அப்போது ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த சீர்காழி போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்தனர்.

மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை பிடித்தும் சென்றனர். இதனிடையே, மோதல் குறித்து போலீசார் விசாரணை செய்ததில், நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்களுக்கு நடந்த விருந்தில் பாயாசம் பரிமாறியுள்ளனர்.

அப்பொழுது பாயாசம் சுவையாக இல்லை என்றும் அதனைப் பெண் வீட்டார் தட்டி கேட்டு தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாம்பாரைப் பெண் வீட்டார் சிலர் மீது ஊற்றியதாக சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் இருதரப்பினரும் கைகலப்பாகி கடும் மோதல் ஏற்பட்டது தெரிய வந்தது. மண்டப வாசலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்து இருதரப்பையும் அனுப்பி வைத்தனர்.

காணாமல்போன சிறுமி பலி கொடுக்கப்பட்டாரா? மக்கள் குழம்பியதால் பதற்றம்!!

புத்தளத்தில்..

புத்தளம் – மதுரங்குளிய பிரதேசத்தில் சிறுமியொருவர் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மக்கள் குழம்பியதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (05.06.2023) பதிவாகியிருந்ததாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். புதையல் இருப்பதாக கூறப்படும் காணிப்பகுதியை பிரதேசவாசிகள் அவதானித்த போது, ​​காணியில் வெட்டப்பட்ட குழியில் சிறுமியொருவருடையது என கருதக்கூடிய சில ஆடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புத்தளம், மதுரங்குளி கின்னவத்தை பிரதேசத்தில் உள்ள தனியார் காணி ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மைய நாட்களில் இந்த காணிக்கு அருகில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவரும், சிறுமியொருவரும் காணாமல் போயுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையிலேயே குறித்த சிறுமி பலி கொடுக்கப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன், இதனிடையே, புதையல் தோண்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குழியில் நிரம்பியிருந்த நீரை அகற்றி அப்பகுதியில் தேடுதல் நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய் வெளிநாட்டில் : மகளுக்கு நேர்ந்த கொடூரம் : தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

பலப்பிட்டியவில்..

பலப்பிட்டிய பிரதேசத்தில் தனது 11 வயது மகளை கடுமையாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 6 இலட்சம் ரூபாய் நட்டஈடு மற்றும் 80 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரான தந்தை 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பல சந்தர்ப்பங்களில் தனது மகளை கடுமையாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார் என உரகஸ்மஹந்திய பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருந்தபோது, ​​தனது தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை பாலியல் வன்புணர்வு செய்வதாக அயலவர் ஒருவரிடம் சிறுமி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபரின் தந்தை கைது செய்யப்பட்டு பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அந்த குற்றச்சாட்டின் பேரில் தந்தையை சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், உரிய தண்டனைகளையும் விதித்துள்ளது.

மீண்டும் பாதாளத்திற்கு செல்லும் இலங்கை : 450 ரூபாவைத் தாண்டும் நிலையில் டொலர் : நிபுணர்கள் எச்சரிக்கை!!

இலங்கையில்..

நாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று வருகின்றது. கடந்த ஒரு மாத காலமாக ரூபாவின் பெறுமதியானது அதிவேக வளர்ச்சி நிலையை பதிவு செய்து வருகின்றது.

குறிப்பாக வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 24.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் உயராது என்றும், எதிர்வரும் நாட்களில் மீண்டும் டொலரது பெறுமதி உயரக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் தற்போதுள்ள இறக்குமதி தடை நீக்கப்பட்டு, கடன்களை செலுத்த ஆரம்பிக்கும் போது ரூபாவின் பெறுமதி குறைந்து டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை ரூபாவின் பெறுமதி எதிர்வரும் காலங்களில் பாரியளவு பின்னடைவை சந்திக்கும் எனவும், எதிர்வரும் நாட்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையான சரிவிற்கு உள்ளாகும் எனவும் ப்ளூம்பேர்க் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

உலகின் நாணய அலகுகளில் மிகவும் செயற் திறன் மிக்க நாணய அலகாக இலங்கை ரூபா காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இறக்குமதி குறித்த கட்டுப்பாடுகள் தளர்த்தல் மற்றும் கடன் செலுத்துகை என்பன ஆரம்பிக்கப்பட்டதும் ரூபாவின் பெறுமதி குறித்த எதிர்காலம் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் என அந்த இணையத்தளமும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேசமயம், இந்த ஆண்டு இறுதியளவில் ரூபாவின் பெறுமதி 350 ரூபாவாக உயர்வடையும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில், டொலரின் மதிப்பானது 350 ரூபாவை தாண்டும் என்றும் அது 405 ரூபா வரை சென்றால் கூட ஆச்சரியமில்லை எனவும் பொருளாதார நிபுணர்கள் தங்களது கணிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது ரூபாயின் பெறுமதி வலுவடைவதனை பார்த்து எவ்வித திருப்த்தியும் அடைய முடியாது. எதிர்வரும் நாட்களில் கடன் செலுத்தவுள்ளது. “இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. டொலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய தேவைகள் அதிகமாக உள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் காலங்களில் கடும் நெருக்கடியாக நிலைமை ஒன்றை சந்திக்க நேரிடும் அபாயங்கள் அதிகமாக உள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

ரூபாயை வலுப்படுத்த நாட்டிலிருந்து டொலர்கள் வெளியேறுவதனை தடுப்பது மாத்திரம் தீர்வாகாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்களை தடுத்து வைத்தே ரூபாயினை வலுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் இந்த நிலைமை மாற வேண்டும்.

டொலர் சம்பாதிப்பதற்காக வழியை கண்டுபிடித்து ரூபாயின் பெறமதியை வலுப்படுத்த வேண்டும். தற்போதைய நிலைமை காரணமாக எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.”

அதேசமயம், ”சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி காரணமாக டொலர் மதிப்பு குறைந்துள்ளதுடன் ரூபாயின் பெறுமதி உயர்ந்துள்ளதென பொருளாதார ஆய்வு நிறுவனமான அட்வகாட்டா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும் ரூபாய் மதிப்பு அதிகரிப்பு பொருளாதாரத்தின் செயல்பாட்டினால் நடந்த ஒரு விடயம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். ரூபாயின் திடீர் உயர்வு என்பது ஏற்றுமதியாளர்களுக்கு நல்லதல்ல. ரூபாய் மதிப்பு சரிவு இறக்குமதியாளர்களுக்கு நல்லதல்ல, எங்களுக்கு தேவை ஓரளவு நிலையான மாற்று விகிதமாகும்.

ரூபாய் மதிப்பை உயர்த்துவது அல்லது குறைப்பது சந்தைக்கு எந்த ஆச்சரியமும் இல்லை, அதிக வட்டி விகிதங்களால் உங்கள் தேவை சிறிது குறைகிறது. டொலர்களை பயன்படுத்தி மக்கள் இறக்குமதி செய்வதில்லை. இறக்குமதி செய்யும் போது டொலரின் மதிப்பு அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.”

அதேசமயம், மேலும் சில பொருளாதார நிபுணர்கள் டொலரின் பெறுமதி 450 ரூபா வரை செல்லும் என்றும், எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆக மொத்தத்தில் ரூபாவின் பெறுமதி மீண்டும் கடும் வீழ்ச்சியை சந்திக்கப் போகின்றது என்பது பொருளதார நிபுணர்கள் உள்ளிட்ட சர்வதேசத்தின் கணிப்பாக உள்ளது. அவ்வாறு ஏற்படும் சமயத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

டொலரின் தற்போதைய விற்பனை விலை வீழ்ச்சி கண்டிருப்பது தற்காலிகமானது எனவும், இன்னும் சில மாதங்களில் படு மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படப் போகின்றதென்றும் எதிர்க்கட்சியை சார்ந்த அரசியல்வாதிகளும், அரசியல் விமர்சகர்களும் எதிர்வுகூறல்களையும் எச்சரிக்கைகளையும் விடுத்து வரும் அதேநேரம், இந்த டொலரின் பெறுமதி வீழ்ச்சியானது சாதாக மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக தங்களது ஏற்றது போன்ற காரணங்களை கூறி மார் தட்டிக் கொள்ளும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளையும் பார்க்க முடிகின்றது.

குறிப்பாக, ரூபாவின் பெறுமதி உயர்ந்து டொலரின் பெறுமதி சரிந்து வரும் இந்த சந்தர்ப்பத்தில், பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோதிலும், ரூபாவின் பெறுமதி உயர்ந்து வருவதற்கான நன்மையை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என ஆளும் தரப்பு சுட்டிக்காட்டி வருகின்ற போதிலும், அது போன்ற நன்மைகளோ, விலைகுறைப்புக்களோ நடைமுறைக்கு வருவதில்லை என்று பொதுமக்களிடம் நாங்கள் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை ஆலயத்தில் பறவைக் காவடியில் வந்து மெய்சிலிர்க்க வைத்த பெண்கள்!!

வற்றாப்பளையில்..

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல் விழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பெரும் திரளான மக்கள் உப்புநீரில் விளக்கெரியும் எம்பிராட்டியின் அருளை பெறுவதற்காக குவிந்து வந்தனர்.

பாற்குடங்கள், ஆட்டக்காவடிகள் , பறவைக்காவடிகள் என நேர்த்திக்கடன்களை அடியவர்கள் நிறைவேற்றிய காட்சி பார்ப்போரை கண்குளிரவைத்தது.

இந்நிலையில் நேற்றையதினம் இரவு பெண்களால் எடுக்கப்பட்ட தூக்கு காவடி பலரையும் மெய்சிலிர்க்கவைத்துள்ளது.

உள்நாட்டு போரின் பின்னர் பெண் ஒருவர் தொடர்ச்சியாக வற்றாப்பளை அம்மனுக்கு தூக்கு காவடி எடுதுவரும் நிலையில், நேற்றையதினம் வேறு இரு பெண்களும் பறவைக்காவடி எடுத்துவந்து அன்னைக்கு தமது நேர்த்திக்கடனை செய்திருந்தமை வற்றாப்பளை கண்ணகை அம்மனின் பெருமையினை இன்னும் எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது.

பரிதாபமாக உயிரிழந்த சிறுமி : சோகத்தில் உறவினர்கள்!!

உடவலவவில்..

உடவலவ பிரதேசத்தில் 3 வயது சிறுமி மீது கட்டிலின் பலகை ஒன்று விழுந்து உயிரிழந்துள்ளார். காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற திடீர் மரண விசாரணையில் மரணத்தின் காரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடவலவ, தெற்கு கால்வாய் பகுதியைச் சேர்ந்த கயுமி எனிஞ்னா பத்திரன என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். சிறுமியின் வீட்டுக்கு அருகில் உறவினர் வீட்டில் அன்னதானம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அந்த வீட்டில் ஏனைய சிறுவர்களுடன் இந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, ​​சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த தேக்க மரத்தால் ஆன கட்டிலின் ஒரு பகுதி சிறுமியின் மீது விழுந்தது.

இதனால் படுகாயமடைந்த சிறுமி எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் சம்பவம் இடம்பெற்று 11 நாட்களின் பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

இளம் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்.. நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.!!

கொஸ்லாந்தையில்..

கொஸ்லாந்தை – உடதியலும பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபரான காதலன் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 11 ஆம் திகதி உடதியலும பகுதியில் கூடாரம் அமைத்து இளம் ஜோடி தங்கியிருந்த நிலையில் காட்டு யானை தாக்கி 23 வயதான தருஷி கவீஷா என்ற யுவதி உயிரிழந்திருந்தார்.

மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 23 வயதான தனுஷ்க என்ற இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததுடன், யுவதியின் மரணம் தொடர்பிலும் சாட்சியமளித்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் யுவதியின் காதலர் வழங்கிய முரண்பாடான வாக்குமூலங்கள் காரணமாக கொஸ்லாந்தை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த ஜோடி நாட்டின் பல இடங்களுக்கு சென்று அந்தக் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதனால் பிரபல்யம் அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.