என்ன ராணி மாதிரி வச்சு பாத்துக்கிட்டாரே.. என் வாழ்க்கையை நாசம் செஞ்சவங்கள தூக்குல போடுங்க.. கதறி அழும் மனைவி!!

கிருஷ்ணகிரியில்..

எனக்கு திருமணமாகி இன்னும் 2 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் இப்படி ஆவிட்டது என ஆணவக்கொலை செய்யப்பட்ட ஜெகன் மனைவி கதறிய படி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (28). இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் ஒரே சமுகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர்களது எதிர்ப்பையும் மீறி ஜெகன், சரண்யா இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டதால் பெண் வீட்டார் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜெகனை பெண்ணின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இது தொடர்பான வீடியோ வைரலாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும், முரளி, நாகராஜ் ஆகிய 2 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இந்நிலையில், ஆணவக்கொலை செய்யப்பட்ட ஜெகனின் மனைவி சரண்யா கதறிய படி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- எனக்கு திருமணமாகி இன்னும் 2 மாதங்கள் கூட நிறைவடையவில்லை.

அதற்குள் இப்படி ஆவிட்டது. எப்போதெல்லாம் எனக்கு வீடு ஞாபகம் வருகிறதோ அப்போதெல்லாம் தனிமையில் நான் அழும் போது என்னை சமாதானப்படுத்தி என் கணவரும் கூடவே அழுவார்.

அவர் என்னை ராணி மாதிரி வைத்து பார்த்து கொண்டார். அப்படிப்பட்டவரை அநியாயமாக ஈவு இரக்கமில்லாமல் கொன்று விட்டார்களே. அதற்கு என்னை கொலை செய்திருக்கலாமே.

எனது வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள். இந்த கொலையில் தொடர்புடைய எனது தந்தை உள்பட அனைவரையும் தூக்கில் போட வேண்டும் என சரண்யா ஆவேசமாக கூறினார்.

தாத்தாவின் இறுதி சடங்கு நிகழ்வை Vlog செய்த YouTuber!!

இந்தியாவில்..

இந்தியாவை சேர்ந்த YouTuber ஒருவர் தனது தாத்தாவின் இறுதிச் சடங்கு நிகழ்வை vlog செய்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தற்போதைய காலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாக பலரும் பிரபலமடைவதோடு பணமும் சம்பாதித்து வருகின்றனர்.

அதிக லைக்ஸ்களுக்காக கருத்துகளுக்காக வித்தியாசமாக எதையாவது பதிவிட்டுக் கொண்டும், பல கோமாளித்தனங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். அது போலொரு சம்பவத்தை தான் யூடூப்பரான லக்ஷய் சவுத்ரி(Lakshay Chaudhary) என்ற நபர் செய்திருக்கிறார்.

தனது தாத்தாவின் இறப்பிற்கு பின்பான இறுதிச் சடங்கு நிகழ்வு முழுவதையும் நண்பர்களோடு சேர்ந்து vlog செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது தான் துன்பகரமான விஷயமாகும்.

தனது YouTube பக்கத்தில் சுமார் நான்கு லட்சம் சந்தாதாரர்களை கொண்ட லக்ஷய் சவுத்ரி என்ற நபர் தனது YouTube பக்கத்தில் நிறைய வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமானவராவர்.

இந்த நிலையில் தனது யூடூப் பக்கத்தில் அவரது தாத்தாவின் இறுதி சடங்கு நிகழ்வு முழுவதையும் vlog செய்து அதனை தனது YouTube பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த மார்ச் 8 ஆம் திகதி தனது தாத்தாவின் இறுதிச் சடங்கு நிகழ்வு நடந்தது முழுவதையும் அங்கு அவர்கள் என்ன மாதிரியான சடங்குகளை கடைப்பிடிக்கிறார்கள் என்பது பற்றியும் vlog செய்துள்ளார்.

இந்த வீடியோ ஆரம்பிக்கும் போது லக்ஷய் சவுத்ரி “எனது தாத்தா எந்த வருத்தமும் இல்லாமல் நீண்ட நாள் வாழ்ந்தார்” என கூறியுள்ளார். மேலும் தனது நண்பர்களோடு மொட்டை மாடியில் அரட்டை அடித்துக் கொண்டு இந்த வீடியோவை எடுத்துள்ளார்.

முதல் பெண் பேருந்து ஓட்டுநர்.. தடைகளை கடந்து லட்சியத்தை எட்டிய பட்டதாரி இளம்பெண்!!

கோவையில்..

தனியார் பேருந்தை இயக்கு பெண்களால் ஆண்களுக்கு நிகராக அனைத்தும் செய்யமுடியும் என்பதை கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நிரூபித்துள்ளார். ஆண்களும் பெண்களும் சேர்ந்து வசித்துவரும் இந்த உலகத்தில் பெண்களால் ஆண்களுக்கு நிகராக அனைத்தும் செய்யமுடியும் என்பதை பல்வேறு பெண்களும் நிரூபித்து வருகின்றனர்.

அவர்களின் வரிசையில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கனரக ஓட்டுநர் பிரிவில் முத்திரையைப் பதித்து வருகிறார் கோவையை சேர்ந்த ஷர்மிளா. 24 வயது இளம்பெண்ணான ஷர்மிளா பார்மசி டிப்ளமோ படித்துள்ளார்.

ஆனால் தந்தையின் தொழிலான ஓட்டுநர் தொழிலில் ஈக்கப்பட்டு தற்போது ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சிறுவயதில் அப்பாவின் ஆட்டோவை எடுத்து ஓட்டத்தொடங்கியவருக்கு அது பிடித்துவிட்டதால் அதில் அதீத ஈடுபாடு காட்டத்தொடங்கியுள்ளார்.

ஆட்டோ, கார் என ஓட்டுநர் தொழிலில் அடுத்தடுத்து கற்றுக்கொண்ட ஷர்மிளா கோவையின் முதல் பேருந்து ஓட்டுனராவதே தனது லட்சியம் என நினைத்து பேருந்து பயிற்சிக்கு சென்றுள்ளார்.

அங்கு முதலில் அவரை வினோதமாக பார்த்தவர்கள் பின்னர் அவரின் திறமையை பாராட்டத் தொடங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் உரிமமும் பெற்று அசத்தியுள்ளார்.

கொரோனா காலத்தில் தந்தையின் ஆட்டோவை எடுத்து வேலைக்கு சென்றவர் தற்போதுவரை ஆட்டோ ஓட்டுநராக தனது முத்திரையை பதித்துள்ளார். ஆரம்பத்தில் நீ எல்லாம் இதுக்கு வருகிறாய், பேருந்து டயர் அளவு கூட இல்லை நீ பேருந்து ஓட்டப்போறியா என பல்வேறு வசவுச்சொற்களையும் பொருட்படுத்தாமல் இந்த சாதனையை படைத்துள்ளார்.

“வெளியூர், தொலைதூர பேருந்துகளை ஓட்டுவதற்கு ஆசை இல்லை. நான் தினமும் வந்து செல்கிற காந்திபுரம் – மருதமலை வழித்தடத்தில் உள்ள பேருந்தை தான் ஓட்ட வேண்டும். அது தான் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.

கோவையின் முதல் பேருந்து ஓட்டுநர் என என் தந்தையை என்னை பற்றி பெருமையாக சொல்லவேண்டும்” என்பதே எனது ஆசை என்று கடந்த 2019-ம் ஆண்டு கூறியிருந்தார் ஷர்மிளா.

இவர் குறித்த தகவல் இணையத்தில் பரவிய நிலையில், இவருக்கு தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் தனது பேருந்தை ஊட்ட வாய்பளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை கூறிவருகின்றனர்.

புகையிரதம் முன் பாய்ந்த ஆசிரியை : கதறித் துடிக்கும் கணவர்!!

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருபவர் சதாசிவம். இவருக்கு வயது 43. திமுக ஒன்றிய துணை செயலாளரான சதாசிவம் அதே பகுதியில் மொபைல் கடை நடத்தி வருகிறார்.

இவரது மனைவி 38 வயது அனிதா.இவர் குனிச்சி மோட்டூர் பகுதி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2 மகன்கள். சதாசிவத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சில நேரங்களில் வாக்குவாதம் முற்றிவிடும். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியை அனிதா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்துார் அருகே ரயில் தண்டவாளத்தில் பெண் உடல் இருப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்சனை காரணமாக அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் வீசிய மினி சூறாவளி : பாடசாலை கட்டிடம் சேதம்!!

வவுனியாவில்..

வவுனியாவில் வீசிய மினி சூறாவளியுடன் பெய்த மழையால் மரம் ஒன்று பாறி விழுந்தமையால் வகுப்பறை கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது.

வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் மினி சூறாவளியுடன் கூடிய மழை நேற்றைய தினம் (24-03-2023) மாலை பெய்திருந்தது.

இதன்போது வவுனியா, மன்னார் வீதியில் உள்ள தமிழ், சிங்கள மாணவர்கள் கல்வி கற்கும் காமினி மகாவித்தியாலய வளாகத்தில் நின்ற பாலை மரம் ஒன்று பாறி விழுந்தமையால் வகுப்பறை கட்டிடம் ஒன்றின் கூரைப் பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது.

இதேவேளை, குறித்த மினி சூறாவளி காரணமாக வவுனியாவின் பல பகுதிகளிலும் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காதலில் தோல்வியடைந்த காதலர்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்த பிரபல நாடு!!

நியூசிலாந்தில்..

நியூசிலாந்தில் காதலில் தோல்வியடைந்த காதலர்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காதலில் தோல்வியடைந்த காதலர்களுக்கு ஆலோசனை கொடுப்பதற்காக 6.4 மில்லியன் டொலர் நியூசிலாந்து அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது.

உலகளவில் பல்வேறு பரிமாணங்களில் ஆண் – பெண் காதலித்து வருகின்றனர். இதில் அவர்களுடைய காதல் திருமணத்தில் சேராமல் போனால் காதலர்கள் பிரிந்து விடுகின்றனர்.

மேலும், தங்களுடைய கருத்து வேறுபடுகளாலும் பிரிந்து விடுகின்றனர். இதனால் சிலர் காதல் தோல்வியில் மனமடைந்து தற்கொலை செய்யும் அளவிற்கு முடிவு எடுத்து விடுகின்றனர்.

இந்நிலையில், காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்காக லவ் பெட்டர் என்ற பிரச்சார குழுவை நியூசிலாந்து அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

மேலும், இதற்காக நியூசிலாந்து அரசாங்கம் 33 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆலோசனை வழங்குவது,

மனம் திறந்து பேச வைப்பது போன்றவை தான் இந்த பிரச்சார குழுவின் வேலை. நியூசிலாந்தில் இந்த புது முயற்சிக்கு அந்நாட்டு மக்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தனியாக நடந்து வந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவில்..

மனித வாழ்வில் எந்தளவிற்கு தெய்வ சக்தியின் ஆதிக்கம் இருக்கிறதோ அந்தளவு அமானுஷ்யங்களும் நடக்கின்றன என்பது பலரது நம்பிக்கை. இவற்றில் பலர் திகிலூட்டும் அனுபவங்களை பெற்றுள்ளதாக பகிர்ந்துள்ளனர்.

அந்த அனுபவங்களை நேரடியாக நாமே பெறாவிட்டாலும் கூட கதையாக கேட்கும் போதே பீதியில் ஆழ்த்தும் சம்பவங்கள் பல.

ஒரு சில சம்பவங்கள் உலகளவில் பலரையும் நடுங்க வைத்து ஆட்டங்காண வைத்துள்ளன. அப்படியொரு கதிகலங்க வைக்கும் விடை தெரியாத மர்மம் அடங்கிய உண்மைச் சம்பவமொன்று தொகுப்பாக,

மின்னல் தாக்கி பள்ளி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவி வரும் கிழக்கு திசை காற்று மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் 5 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு, திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், தர்மபுரி, விழுப்புரம், மதுரை, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் மாவட்டங்களில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, கே.ஜி.கண்டிகை பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

கனமழை காரணமாக தென்னை மரம் வேரோடு சாய்ந்தது.இதில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே உள்ள அண்டம்பள்ளம் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் முருகன்.

இவரது மகள் 16 வயது வினோஷா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவரது விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கும்போது பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.

அப்போது திடீரென விவசாய நிலத்தில் இருந்த வினோஷா மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெறையூர் போலீசார், வினோஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்.. பொதுத்தேர்வு நேரத்தில் சோகம்!!

கடலூரில்..

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே கம்பளி மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சத்குரு. இவர், கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால், மதிய நேரத்தில் தனது நண்பர்கள் 5 பேருடன் அப்பகுதியில் உள்ள, திருச்சோபுரம் உப்பனாற்றில் சத்குரு குளிக்கச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர்கள் அனைவரும் தண்ணீரில் குதித்து உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சத்குரு தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தினர் காப்பற்ற ஓடிவந்தனர். அதன்படி சத்குருவை காப்பாற்ற நண்பர்கள், அப்பகுதியினர் போராடியும் பலன் கிடைக்கவில்லை.

நீரில் மூழ்கி இறந்த நிலையில் அவருடன் சென்றவர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டுள்ளனர். இது குறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உடல் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான கல்லூரி மாணவி தம்பியுடன் பரிதாபமாக பலியான சோகம்!!

ஈரோடில்..

விதி எப்படியெல்லாம் நிமிஷ நேரத்துல வாழ்க்கையைப் புரட்டி போட்டு விட்டுட்டு எதுவுமே தெரியாத மாதிரி கடந்து போயிடுதுன்னு தெரியலையே என்று புலம்பி, சோகத்தில் அரற்றி வருகிறார்கள் பெரியகொடிவேரி பகுதி மக்கள்.

சந்தோஷமா சிரிச்சி, பேசிக்கிட்டு திரிஞ்ச பொண்ணு. காலேஜூக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டி கிளம்பி போன பொண்ணைப் பிணமா தானே பார்த்தோம் என்று ஊர்மக்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அன்றைய விடியல் இத்தனை சோகத்தோடு விடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஈரோட்டு அருகே அக்காவும், தம்பியும் சென்று கொண்டிருந்த பைக் மீது அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த வேன் மோதிய விபத்தில் திருமணமான கல்லூரி மாணவி தம்பியுடன் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.‌

ஈரோடு மாவட்டம் பெரியகொடிவேரி பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவருக்கு ஞான சவுந்தர்யா (22) என்ற மகளும், கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் உள்ளனர். ஞானசவுந்தர்யாவுக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன் திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

ஞான சவுந்தர்யா தனது கணவர் அசோக்குடன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசித்து வந்தார். திருமணமாகிய நிலையில் ஞான சவுந்தர்யா அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டும் படித்து வந்தார்.

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது அக்கா ஞான சவுந்தர்யாவை பெரியகொடிவேரியில் உள்ள வீட்டுக்கு அழைத்து வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் குமாரபாளையம் சென்று உள்ளார்.

பின்னர் கிருஷ்ணமூர்த்தி ஞானசவுந்தர்யாவை அழைத்து கொண்டு குமாரபாளையத்தில் இருந்து பவானி – சத்தியமங்கலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

இருவரும் ஆப்பக்கூடல் காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் ஒன்று கிருஷ்ணமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். ஞான சவுந்தர்யா சாலையோரம் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆப்பக்கூடல் போலீசார் விபத்தில் பலியான கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். இதனையடுத்து பவானி அரசு மருத்துவமனையில் விபத்தில் உயிரிழந்த அக்கா, தம்பி உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

ஆப்பக்கூடல் பகுதியில் கடந்த 2 நாட்களில் சாலை விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். அதனால் ஆப்பக்கூடல் மற்றும் பவானி சாலையில் ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதி, காவல் நிலையம் பகுதியில் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வேகத்தடை அமைத்து கொடுத்து மேலும் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாயை மரணத்திலிருந்து மீட்டெடுத்து காப்பாற்றிய மகள்!!

கர்நாடகாவில்..

தென்னிந்திய திரைப்படங்களில் வரும் காட்சியை போன்று கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது தாயை பாம்பு கடியிலிருந்து மீட்டுள்ளார். பாம்பு கடிக்கு உள்ளானவர்கள் பாம்பின் விஷத்தன்மை விஷம் ஏறிய அளவு ஆகிய காரணிகளின் அடிப்படையில் அவர்களுக்கான நோய் குறிகளும் மாறுபடுகின்றது.

வலி, வீக்கம், செந்நிறமாகுதல், அரித்தல், தலைவலி, வாந்தி, வயிற்றோட்டம், தலைசுற்றல், மயக்கம், மூச்சு எடுப்பதில் சிரமம் போன்ற பல்வேறு அறிகுறிகளும் தென்படலாம்.

பாம்பு கடி கவனிக்கப்படாவிட்டால் உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை உருவாக்கி விடும். ரத்தப்போக்கு உடல் உறுப்புகள் செயலிழத்தல் மற்றும் சுவாசப்பை செயலிழத்தல் போன்ற காரணிகள் இதில் உள்ளடங்குகின்றன.

பாம்பு விஷம் பக்கவாதம், கோமாநிலை அல்லது மரணத்தைக் கூட சம்பவிக்கும். எனவே பாம்பு கடிக்கு உள்ளானவர்களை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்துவது மிகவும் அவசியமாகின்றது.

குறிப்பாக அவை விஷ பாம்புகளாக இருந்தால் துரித கதியில் முதலுதவி மற்றும் சிகிச்சை வழங்கப்பட வேண்டியுள்ளது. கர்நாடகாவை கல்லூரி மாணவி ஒருவர் தனது தாயின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

சார்மியா ராய் என்ற மாணவியே இவ்வாறு தனது தாயின் காலில் பாம்பு கடித்த போது சற்றும் அஞ்சாமல் பாம்பு விஷத்தை வாயில் உரிஞ்சி எடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் தக்ஷின கன்னட மாவட்டத்தின் புத்தூர் பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மாணவியின் தாய், விவசாய நிலத்தில் காணப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரத்தை இயக்கச் செய்ய சென்றபோது தவறுதலாக நாகப்பாம்பு ஒன்றை மிதித்து உள்ளார். இதன் போது அந்த பாம்பு அவரின் காலில் தீண்டியுள்ளது.

பாம்பு தீண்டியதும் உடனடியாக அருகாமையில் இருந்த புல் ஒன்றை எடுத்து பாம்பு தீண்டிய பகுதியை இறுக கட்டி விஷம் உடலின் ஏனைய பாகங்களுக்கு பரவுவதனை தடுத்து நிறுத்தியுள்ளார். வைத்தியசாலையில் தாயை அனுமதிப்பதற்கு முன்னதாக பாம்பின் விஷத்தை குறித்த மாணவி உறிஞ்சி எடுத்துள்ளார்.

சர்மாயாவின் இந்த செயல்பாடு காரணமாக அவரது தாயான மம்தாவின் உயிரை காப்பாற்ற முடிந்தது என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திரைப்படங்களில் போன்று உடன் செயல்பட்டு தனது தாயின் உயிரைக் காப்பாற்றிய சர்மாயாவிற்கு பல் திசைகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து உள்ளன.

இலங்கை தமிழ் பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த உயர் அங்கீகாரம்!!

அமெரிக்காவில்..

கடந்த வரும் அமெரிக்காவில் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது தனக்கு கிடைத்ததாக இலங்கை ஊடகத்துறையில் பல வருடகாலமாக மிளிர்ந்து வரும் மற்றும் இலங்கை திரைப்படத் துறையில் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் தமிழ் நடிகை நிரஞ்சனி சண்முகராஜா தெரிவித்துள்ளார்.

எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியல் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சுனாமி திரைப்படத்திற்காக குறித்த விருது தனக்கு கிடைத்ததாகவும், அந்த விருதினை இந்த வருடம் இலங்கையில் வைத்து அதன் ஒழுங்கமைப்பாளர்கள் எங்களிடம் ஒப்படைத்தார்கள்.

அது மறக்க முடியாத ஒரு விருது மற்றும் நிழ்வாக நான் பார்க்கின்றேன் என்றும் அவர் கூறினார். சர்வதேச ரீதியில் தமிழ் நடிகையாக என்னுடைய நாட்டின் பெயரை பதியவைப்பது என்பது மிகப் பெரிய விடயம். இலங்கையின் தமிழ் பெண்ணாக இந்த விருதினைப் பெற்றுக் கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வவுனியா விவசாய காணியை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்க வட மாகாண ஆளுநர் உத்தரவு!!

வவுனியாவில்..

வவுனியா – யாழ்.வீதியில் அமைந்துள்ள அரச விதை உற்பத்தி விவசாய பண்ணையை பிரதேச செயலாளரை பொறுப்பேற்குமாறு வட மாகாண ஆளுநரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர்பாக வட மாகாண ஆளுநரினால் (10.03.2023) ஆம் திகதி கடிதத்தின் பிரகாரம் பிரதேச செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதியின் வவுனியா விஜயத்தின் போது அபிவிருத்தி குழுவின் தலைவர் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் விவசாய நடவடிக்கைகளுக்கான விவசாய பண்ணைக்கு ஓமந்தை பகுதியில்,

100 ஏக்கர் காணி வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தற்போது விவசாய பண்ணை உள்ள 65 ஏக்கர் காணியை அபிவித்தி செயற்பாடுகளுக்காக பொறுப்பேற்குமாறும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆளுநரின் குறித்த செயற்பாடு காரணமாக விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் தமது விசனத்தினை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த காணியை வவுனியா பொருளாதார மத்திய நிலையம் மற்றும் சர்வதேச கிரிக்கட் மைதானத்திற்காக கோரியபோது அக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தாயை தேடி தவித்த பிள்ளைகள்.. இறுதியில் நேர்ந்த சோகம்.!!

பதுளையில்..

நேற்றைய தினம் 7 வயது சிறுமி மற்றும் 10 வயது சிறுவன் ஆகியோர் வேலைக்கு சென்ற தனது தாயை தேடிச்சென்ற போது துரதிஷ்டவசமாக நீரில் இழுத்துச்செல்லப்பட்டு காணாமல்போன நிலையில் இன்றைய தினம் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இரு பிள்ளைகளும் தினசரி கூலி வேலைக்கு செல்லும் தனது தாய் நீண்ட நேரமாக வீட்டிற்கு வராமையினால் கொட்டும் மழையில் வீட்டிலிருந்து வெளியேறி தாயை தேடி சென்றுள்ளனர்.

இதன்போது நீரோடையொன்றை கடக்க முற்பட்ட போது நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்பட்டனர். எனினும் இதனை அறியாத தாய் மாலை 5 மணியளவில் வீடு திரும்பியபோது, தனது பிள்ளைகளை காணவில்லை என தேடியுள்ளதுடன், பிள்ளைகள் பயன்படுத்திய குடை, நீரோடைச் செல்லும் பாதைக்கு அருகாமையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பிள்ளைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தீவிர தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ஏழு வயது சிறுமியின் சடலத்தை நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வீட்டிலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள மற்றொரு நீர்வழிப்பாதையில் மீட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று முற்பகல் சிறுவனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் காசநோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி!!

விழிப்புணர்வு பேரணி..

வவுனியாவில் காச நோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றுள்ளது.

உலக காச நோய் தினமான இன்று (24.03) வவுனியா மாவட்ட வைத்தியசாலை காசநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றிருந்தது.

இதன்போது காச நோய் தொடர்பான கருத்தரங்கு ஒன்று காலை 9.30 மணிக்கு காச நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன் பின்னர் காச நோயை முடிவுக்குக் கொண்டு வர முதலிடுவோம், உயிர்களைக் காப்பாற்றுவோம் எனும் தொனிப்பொருளில் மக்களிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக இந்த பேரணி இடம்பெற்றிருந்தது.

இப்பேரணியானது காச நோய் கட்டுப்பாட்டுப் பிரிவிலிருந்து புதிய பேரூந்து நிலையம் ஊடாக சென்று பின்னர் ஏ9 வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியினையடைந்து பஐார் வீதியூடாக வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்தினை அடைந்து மீண்டும் வைத்தியசாலையினை அடைந்திருந்தது.

இப்பேரணியில் காச நோய் தொடர்பான பதாதைகளை ஏந்திய வண்ணம் குறித்த பிரிவிற்கான வைத்தியர்கள், தாதியர் கல்லூரி மாணவர்கள், சுகாதார பிரிவினர், பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் 2022ம் ஆண்டு 51 காசநோயாளர்கள் இணங்காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஆட்டுக்காக உயிரைவிட்ட தொழிலாளர்கள்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருவண்ணாமலையில்..

திருவண்ணாமலை அடுத்த கருத்துவாம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அருண், சிவதாஸ் மற்றும் சங்கர் ஆகிய 3 பேரும், ஏரி கரையில் வீடு கட்டிக்கொண்டு சட்டவிரோதமாக மீன்பிடி தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், நேற்று பிற்பகல் சட்ட விரோதமாக மீன்பிடிப்பதற்காக ஏரியில் மீன் வலையை விரித்துள்ளனர்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரின் ஆடு எதிர்பாராதவிதமாக மீன் வலையில் சிக்கிக் கொண்டுவிட்டது. இதனை அறிந்த திருவேங்கடம், தனது ஆட்டை காப்பாற்றுவதற்காக ஏரியில் இறங்கினார்.

மீன் வலைக்குள் சென்றபோது எதிர்பாராத விதமாக திருவேங்கடம் மீன் வலையில் சிக்கிக் கொண்டார். பின்னர் தன்னை காப்பாறுமாறு கூச்சலிட்டுள்ளார். ஏரிக்கு அருகாமையில் செங்கல் சூலையில் பணி செய்திருந்த ரமேஷ் என்பவர் கூச்சல் சத்தத்தை கேட்டு உடனடியாக ஏரி பகுதிக்கு விரைந்து வந்துள்ளார்.

அப்பொழுது திருவேங்கடம் மீன் வலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதை பார்த்து, அவரை மீட்கும் முயற்சியில் இறங்கினார். அப்போது காப்பாற்றச் சென்ற ரமேஷும் திருவேங்கடமும் ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊர் மக்கள் திருவேங்கடம், ரமேஷ் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசார் மீன் வலையை விரித்த அருண், சிவதாஸ் மற்றும் சங்கர் ஆகிய மூன்று பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.