ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. உனியாரா உட்பிரிவில் உள்ள மோர்ஜாலா கிராமத்தை சேர்ந்த ஹரி ஓம் என்ற இளைஞர் சகோதரிகள் இருவரை திருமணம் செய்து கொண்டார்.
அந்த இளைஞர் முதலில் காந்தா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இதனைத் தொடர்ந்து காந்தாவின் சகோதரி சுமனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காந்தா தங்கை சுமனையும் திருமணம் செய்து கொள்ள கேட்டார்.
சமீபத்தில் ஹரி ஓம் சகோதரி இருவரையும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
கள்ளக்காதலிலோ, திருமணம் ஆகாமல் முறை தவறியே பெண்கள் குழந்தைப் பெற்றுக் கொள்வது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பள்ளி கழிவறையில் மாணவி குழந்தைப் பெற்றெடுத்து பின்னர் யாருக்கும் தெரியாமல் சாக்கடையில் வீசிச் சென்றது அதிர்வலையை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில், பிறந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் உள்ள பச்சிளங்குழந்தையை யாரோ தொப்பிள் கொடி கூட சரியாக அறுக்காத நிலையில் வீசிச் சென்றுள்ளனர். இந்த குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளி சூரப்பட்டு கிராமத்தில் பாதி உடலைக் காணாத நிலையில், பச்சிளங்குழந்தை ஒன்றின் உடலை அந்த பகுதியில் உள்ள நாய்கள் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து, நாய்களை விரட்டியடித்தனர். பின்னர், இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சோழவரம் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். குழந்தையின் இடுப்பு பகுதியில் இருந்து கால் வரை அழுகிய நிலையிலும், முகம் அழுகி சிதைந்த நிலையிலும் காணப்பட்டது. நாய்கள் கடித்துக் குதறியதில் குழந்தையின் பாதி உடல் மட்டுமே இருந்தது.
குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தகாத முறையில் குழந்தை பிறந்ததால் தாய், அதனை வீசிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
முக்கிய சந்திப்புகளில் உள்ள சிசிடிவி கேமிராக்கள், சுற்றி உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போன்ற இடங்களில் கடந்த 10 நாட்களில் முன்பாக குழந்தை பெற்றவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். குழந்தையின் தாயைக் கண்டுப்பிடிக்கும் பணி குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.
பெங்காலி டி.வி நடிகை சுசந்திரா தாஸ்குப்தா (29). நேற்று இரவு கொல்கத்தா புறநகர்ப் பகுதியில் சோப் விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காகச் சென்றிருந்தார். அவர் படப்பிடிப்பு முடிந்தவுடன் வீட்டுக்குத் திரும்புவதற்கு கார் இல்லாத காரணத்தால், ஆன்லைனில் பைக் டாக்ஸி புக் செய்தார்.
அவர் சொதேபூரிலிருக்கும் தனது வீட்டுக்கு பைக் டாக்ஸியில் வந்துகொண்டிருந்தபோது, பாராநகர் என்ற இடத்தில் திடீரென பைக் முன்பு ஒரு சைக்கிள் வந்துவிட்டது. உடனே சைக்கிள்மீது மோதாமலிருக்க, பைக் டிரைவர் சட்டென பிரேக் பிடித்தார்.
இதில் பின்னால் அமர்ந்திருந்த தாஸ்குப்தா நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அதேநேரத்தில் எதிர்த் திசையிலிருந்து வந்த லாரி தாஸ்குப்தா மீது மோதியது. தாஸ்குப்தா ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆனால் லாரியின் எடை தாங்காமல் ஹெல்மெட் உடைந்துவிட்டது. தாஸ்குப்தா உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பைக்கை ஓட்டிய நபரும், பிரேக் பிடித்த வேகத்தில் கீழே விழுந்து லேசான காயமடைந்தார்.
விபத்தைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் போலீஸார் வரும்வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர். தாஸ்குப்தாவின் மரணம் பெங்கால் டி.வி உலகை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.
அவர் ஏராளமான டி.வி நிகழ்ச்சிகளில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். இது குறித்து தாஸ்குப்தாவின் கணவர் தெப்ஜோதி பேசுகையில், “என்னுடைய மனைவிக்கு நடிப்பின்மீது அதிக ஈடுபாடு உண்டு. அவருக்குச் சிறு வயதிலிருந்து, நடிகையாக வேண்டும் என்று கனவு இருந்தது. நடிப்புக்காக வேலையைக்கூட ராஜினாமா செய்திருந்தார்” என்று தெரிவித்தார்.
வவுனியா கோவில் குஞ்சுக்குள கிராமத்தில் மக்களை அதிசயிக்க வைக்கும் வகையில் மாடு, கன்று ஒன்றினை ஈன்றுள்ளது.
வவுனியா பாலமோட்டை பகுதியில் உள்ள கோவில்குஞ்சுக்குளம் கிராமத்தில் அண்மையில் மாடு ஒன்று எட்டு கால்களுடன் கன்று ஒன்றினை ஈன்று மக்களை அதிசயிக்க வைத்துள்ளது.
குறித்த கிராமத்தில் ஆறுமுகம் ஞனேஸ்வரன் என்பவர் வருமானத்தினை ஈட்டுவதற்கு மாடுகளை வளர்த்து வருகின்றார். குறித்தநபர் வளர்த்து வரும் மாடு எட்டு கால்களுடன் கன்று ஒன்றினை பிரசவித்த நிலையில்,
குறித்த கன்று தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதற்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் இன்றைய தினம் கன்றினை பார்வையிட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கிராம மக்கள் சென்று அதிசய கன்று குட்டியை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவதோடு குறித்த கன்று நன்றாக பால் அருந்தியும், ஓடி விளையாடியும் வருகின்றது.
ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார். போருக்குள் பிறந்து, வளர்ந்து தாய் நிலத்தில் இருந்து அகதியாக தத்தளித்துச் சென்ற இந்த மாணவனின் சாதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் மேனகா தம்பதிகளின் மகனான அர்ச்சிகன் அமெரிக்காவில் உள்ள விண்வெளி குறித்த நிறுவனமான National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடாத்திய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை உள்ளடக்கி, அவரது சிந்தனையில் உருவான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 19 நாடுகளில் இருந்து 26725 பங்கேற்ற நிலையில், ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் அர்ச்சிகன் அனுப்பிய செயற்றிட்டத்தை NSS அங்கீகரித்து அவரை வெற்றியாளராக அறிவித்துள்ளது.
அது மட்டும் அன்றி அமெரிக்காவில் உள்ள Texas மாநிலத்தில் NSS அமைப்பின் தலைமையில் இந்த மாதம் இடம்பெறும் அறிவியல் மாநாட்டிற்கும் அவர் அழைக்கப் பட்டிருப்பதுடன் அங்கு உரையாற்றும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் தாயகத்திலிருந்து தனது பெற்றோருடன் அனைத்தையும் இழந்து அகதியாக இந்தியாவிலே தஞ்சமடைந்திருந்தார். இந்நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து அர்ச்சிகனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
புத்தளம் பகுதியில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் குறித்த பாடசாலையில் உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியரை சரமாரியாக தாக்கி காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அத்தோடு சம்பத்துடன் தொடர்புடைய மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் – தில்லையடி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலை முடிவடைந்த உடன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை கிழித்து பாதையில் வீசியுள்ளனர்.
இதனையடுத்து புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியராக கல்வி கற்பிக்கும் எச்.எம் அஸ்கி என்ற ஆசிரியரை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களில் சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் தில்லையடி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டதன் பின்னர் ஆசிரியரின் வீட்டின் நுழைவாயிலுக்கு கற்களினால் வீசியுள்ளனர்.
இதனையடுத்து ஆசிரியர் வெளியில் வந்து குறித்த இடத்தை விட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார். இதன்போது மாணவர்கள் கற்களை கையில் பொத்தி வைத்த நிலையில் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். காயங்களுக்கு உள்ளான உடற்கல்வி ஆசிரியர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது ஆசிரியரைத் தாக்கிய சில மாணவர்களில் 4 பேர் நேற்று இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதனையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாகை காடம்பாடி புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் கோபால் – இந்திரா தம்பதி வசித்து வந்தனர். மீனவரான கோபால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்.
இதனால் இந்திரா, அவரது மகள் குணவதி( 15) ஆகியோர் வசித்து வந்தனர். இதில் சிறுமி குணவதி தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் சிறுமி குணவதி அறிவியல் பாடத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண் பெற்று தோல்வியடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சிறுமி பெரும் சோகத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பிய தாய் மகளின் நிலையை கண்டு கதறி அழுதார்.
இது குறித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தெலங்கானா ஆசிபாபாத் பகுதியை சேர்ந்தவர் குணவத் ராவ் மற்றும் லலிதா தம்பதியினர். இவர்களுக்கு 16 வயதில் சச்சின் என்ற மகன் ஒருவர் உள்ளார். நன்றாக படிக்கும் இந்த மாணவர் அதிகமான நண்பர்களையும் கொண்டுள்ளார்.
இந்த சூழலில் சிறுவனுக்கு கடந்த வியாழக்கிழமை பிறந்தநாள் வந்துள்ளது. எனவே சிறுவன் தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட எண்ணியுள்ளார். அதன்படி சிறுவனின் பெற்றோர், அவருக்கு பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி கேக், நண்பர்களுக்கு அழைப்பு என எல்லாம் தயார் நிலையில் இருந்துள்ளது. ஆனால் பிறந்தநாளுக்கு முந்தைய நாள் மாலை நேரத்தில், சிறுவனுக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், சிறுவனை பார்த்து கதறி அழுதனர்.
இதைத்தொடர்ந்து சிறுவனின் பிறந்தநாள் அன்று காலை, அவருக்கு வாங்கி வைத்திருந்த புது துணியை அவருக்கு அனுவித்து, வாங்கி வைத்திருந்த கேக்கை அவரது முன்வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அனைவரும் கைதட்ட, சிறுவனின் கைபிடித்து பெற்றோர் கேக்கை வெட்டி கொண்டாடினர்.
பின்னர் அன்று முழுவதும் சிறுவனின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, மறுநாள் சிறுவனின் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது. பிறந்தநாளுக்கு முந்தைய நாள் சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக இது போல் சிறுவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வரும் செய்திகள் வெளியாகி அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளான 11 வயதுச் சிறுமிமையைப் பாலியல் வன்புணர்வும், அவரது சகோதரியான 8 வயதுச் சிறுமியைப் பாலியல் துர்நடத்தைக்கும் உட்படுத்திய சந்தேகத்தில் தந்தையைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளான சிறுமிகளின் நடத்தைகளில் மாற்றம் தென்பட்டதையடுத்து பாடசாலை ஆசிரியர்களால் மருத்துவ பரிசோதனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விடுமுறையில் வீட்டிற்கு சென்ற சிறுமிகளுக்கு கொடுமை
இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்களது தந்தையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் பாடசாலையில் தங்கி கற்று வரும் நிலையில் விடுமுறையில் வீட்டுக்கு வந்த போதே இந்தச் சம்பவம் நடைபெற்றது என்று விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுமிகளின் தாய் கூலி வேலைக்குச் செல்பவர் என்றும், அவர் காலையில் சென்றால் இரவே வீடு திரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சந்தர்ப்பத்திலேயே சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் 55 கிராம் ஹெரோயினுடன் 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். முகாமில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (22) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிறுமி கைது செய்யப்பட்டார்.
பருத்தித்துறை, காந்தியூர் பகுதியில் உள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது. இதன்போது விசேட அதிரடிப்படையின் பெண் உத்தியோகத்தர்கள், வீட்டிலிருந்த 16 வயதுடைய சிறுமியை சோதனையிட்ட போது, அவர் உள்ளாடைக்குள் சூட்சுமமாக ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் சிறுமி பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலும் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். வலய ஆசிரிய ஆலோசராக கடமையாற்றும் ஆண் ஒருவர் பாடசாலை ஒன்றிற்கு கடமையின் நிமித்தம் சென்றுள்ளார். குறித்த ஆண் ஆசிரியர் பாடசாலைக்குள் திடீரென சென்று ஆசிரியர்களுடன் ஏதோ பேசி உள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரை இதுவரை காலமும் யாரென அறியாத அப்பாடசாலை ஆசிரியர்கள் யார் நீங்கள் என சில ஆசிரியர்கள் கேள்வி எழுப்பினர். இதன் போது பாதிலளித்த குறித்த ஆசிரிய ஆலோசகர் , நான் தீபக வலயத்தில் இருபது வருடங்கள் கடமையாற்றி விட்டு யாழ். வலையத்திற்கு வந்த ஆசிரியர் ஆலோசகர் நான் தான் என்றாராம்.
திடீரென ஒரு வகுப்புக்கு சென்று அங்கிருந்து ஆசிரியரிடம் வினாக்களை கொடுத்தபோது சில ஒவ்வாத வார்த்தை பிரயோகங்களை பிரியோகித்ததுடன் நீங்கள் கிறீம் பூசுவது இல்லையா? பூசினால் அழகாய் இருப்பீர்கள் என புது டிப்ஸ் கொடுத்துள்ளார்.
ஆத்திரமடைந்த ஆசிரியர் உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அண்மைக்காலமாக யாழ். வலயத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து பல முறைப்பாடுகள் வெளிவரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ். வலயக் கல்விப் பணிப்பாளரை ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பு கொண்டு கேட்டபோது,
குறித்த ஆசிரிய ஆலோசகர் பாடசாலை சென்ற போது தமக்கு அறிவிக்காமல் சென்றதாகவும் பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தமக்கு செவி வழி மூலமான முறைப்பாடு கிடைத்ததாகத் தெரிவித்தார்.
டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த மூன்று வாரங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை கிட்டத்தட்ட 12 ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இன்றைய தினம்(23.05.2023) தங்க அவுன்ஸின் விலை 601,435 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,220 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 169,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 155,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,460 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,570 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 148,550 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
பதவிய – முல்முதே பகுதியில் விவசாயி ஒருவர் தனது மகனின் திருமண நிகழ்வை நேற்றுமுன் தினம் (21.05.2023) நடுக்காட்டில் கோலாகலமாக நடத்தியுள்ளார். பதவிய – முல்முதே பகுதியினை சேர்ந்த நடுன் சதுரங்க மற்றும் தசாஞ்சலி ஆகியோருக்கு இவ்வாறு திருமணம் செய்யப்பட்டுள்ளது.
பதவிய – புல்முடே வீதி, உறுவ பிரதேசத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில், கொஹொம்பபிட்டிய ஏரியின் அடிவாரத்தில், தெப்பம் அமைக்கப்பட்டு, மணமகன், மணமகள் அமரும் நாற்காலி என்பன காட்டில் கிடைக்கப்பெற்ற பொருட்களைக் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திருமண நிகழ்வில் எவ்வித இசை கருவிகளும் பயன்படுத்தாது மெல்லிய இயற்கையின் சத்தத்துடன், பாரம்பரிய உணவு வகைகளை பின்பற்றி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மணமகனின் தந்தை சமந்தா பிரேமலால் கூறுகையில், இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளை உணர்ந்து உலகில் வாழும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு காடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த திருமண நிகழ்வில் இருதரப்பையும் சேர்ந்த சுமார் 300 உறவினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
வவுனியா ஓமந்தை புதியவேலர்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற சூட்டுச்சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த நபர் தனது தென்னந்தோப்பில் இருந்த போது, மற்றொரு நபர் ஒழிந்திருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 52 வயதான நபரே காயமடைந்துள்ளதுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாகவே குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வவுனியா நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தாக்குதலிற்கு பயன்படுத்திய துப்பாக்கியும் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தாலியின் பெர்கமோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது பேர்காமோவைச் சேர்ந்த வர்ணகுலசூரிய சஞ்சீவ பிரதீப் பெர்னாண்டோ என்ற 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சஞ்சீவ பிரதீப் தனிப்பட்ட நோக்கத்திற்காக துவிச்சக்கரவண்டியில் பயணித்த போது அதே திசையில் சென்ற லொறியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பேர்கம போக்குவரத்து பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த சஞ்சீவ பிரதீப் அவசர அம்பியுலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்திர் உயிரிழந்த சஞ்சீவ பிரதீப் இலங்கையின் மாரவில பிரதேசத்தை வசிப்பிடமாகவும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தாலியில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பணிபுரிந்து வருகிறார்.