வவுனியாவில் 14 வயது மாணவி துஸ்பிரயோகம்!!

மாணவி..

வவுனியாவில் 14 வயது மாணவி ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர். வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுமி,

கற்றல் செயற்பாட்டுக்காக வெளியில் வந்து வீடு நோக்கி சென்ற போது இளைஞர் ஒருவர் குறித்த 14 வயது சிறுமியை வழிமறித்து அவரை அழைத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

தனக்கு நடந்த விடயத்தை சிறுமி வீட்டாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து நெளுக்குளம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞரை தேடி வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் 24 வயது இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

நெளுக்குளம் பகுதியில்..

வவுனியா, நெளுக்குளம் பகுதியில் 24 வயது இளைஞன் ஒருவர் இன்று (22.03.2023) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள,

குறித்த இளைஞனின் வீட்டில் எவரும் இல்லாத போது குறித்த இளைஞன் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார். வீட்டார் வந்தபோது குறித்த இளைஞன் தூக்கில் தொங்குவதை அவதானித்து,

நெளுக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

வவுனியாவில் 24 வயது இளைஞன் சடலமாக மீட்பு!!

நெளுக்குளம் பகுதியில்..

வவுனியா, நெளுக்குளம் பகுதியில் 24 வயது இளைஞன் ஒருவர் இன்று (22.03.2023) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள,

குறித்த இளைஞனின் வீட்டில் எவரும் இல்லாத போது குறித்த இளைஞன் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார். வீட்டார் வந்தபோது குறித்த இளைஞன் தூக்கில் தொங்குவதை அவதானித்து,

நெளுக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மாயமான கர்ப்பிணிப்பெண் எரிந்த நிலையில் மீட்பு.. அம்பலமான அதிர்ச்சி உண்மை!!

கர்நாடகாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் கொப்பில் மாவட்டம் கப்பூருவைச் சேர்ந்தவர் நேத்ராவதி குதி(26).

இரண்டு மாத கர்ப்பிணியான இவர் நேற்று முன்தினம் இரவு மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது நேத்ராவதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

அவரது வீட்டிற்கு அருகிலே இறந்த நிலையில் கிடந்தது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.  விரைந்து வந்த பொலிஸார் நேத்ராவதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் நடத்திய விசாரணையில் பணத் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஆனால் கொலை செய்தது யார் என தெரியவில்லை. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. காதல் திருமணம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 28 வயது ஜெகன். இவர் மிகவும் ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர். டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார். இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

சரண்யாவின் வீட்டில் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாததால் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இன்று பிற்பகல் ஜெகன் கே.ஆர்.பி. அணை அருகே பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சராமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த விசாரணையில் ஜெகனை பெண் வீட்டார் சுற்றி வளைத்து வெட்டிக்கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெகனை அவரின் மனைவி சரண்யாவின் தந்தையின் உறவினர்கள் வழிமறித்து நடுரோட்டில் வெட்டி கொலை செய்தனர்.

சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு கத்தியுடன் அவர்கள் நடந்து செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் மக்கள் முன் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏ ற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில் ஜெகனின் மாமனார் இந்த கொலைக்கு பொறுப்பேற்று மருமகனை கொலை செய்த குற்றத்திற்காக காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கர்ப்பிணி மகளின் வயிற்றில் கட்டையால் அடித்த தந்தை : பதைபதைக்க வைத்த சம்பவம்!!

சேலத்தில்..

கர்ப்பிணியாக இருக்கும் தனது சொந்த மகளின் வயிற்றில் அடியாட்களை கூட்டி வந்து மகளின் வயிற்றில் விறகு கட்டையால் தந்தை அடித்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள போத்தனூரில் சேட்டு என்பவர் இன்சூரன்ஸ் ஏஜெண்ட்டாக உள்ளார். இவரது மகள் மேஷா. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி என்பவரை தங்களது பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.

அப்போது ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மேஷாவும், மூர்த்தியும் தஞ்சம் அடைந்தனர். இதை அடுத்து மகளிர் காவல் நிலையத்தில் மேஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அவர்கள் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளாததை அடுத்து நாங்கள் எந்த விதமான பிரச்சனைகளையும் செய்ய மாட்டோம் என்று எழுதிக் கொடுத்தார்கள். தற்போது மேஷா நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சேட்டு மாருதி வேனில் அடியாட்களுடன் மேஷாவின் வீட்டிற்கு வந்து கர்ப்பிணி மகளின் வயிற்றில் விறகு கட்டையால் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த மேஷா வீட்டிற்குள் ஓடி கதவை தாழிட்டுக் கொண்டார்.

கடப்பாரை கம்பியால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அப்போது, சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததால் அவர்கள் மாருதி வேனில் ஏறி தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவலை அடுத்து தாரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வலியால் துடித்த மேஷா உடனடியாக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேஷா ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து மேஷா கூறும் போது, “என் அப்பா சேட்டு அடியாட்களுடன் திடீரென்று வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த விறகு கட்டையால் எனது வயிற்றில் அடித்தார். அவர்கள் வந்தவர்களிடம் கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தது.

நான் உடனே வலியை தாங்கிக் கொண்டு வீட்டிற்குள் ஓடி கதவை தாழிட்டுக் கொண்டேன். அப்போதும் கதவை கடப்பாரையால் உடைத்துக் கொண்டு உள்ளே வந்து, வீட்டிற்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். வீட்டில் இருந்த எனது அத்தை, மாமா எனது கணவரின் அண்ணனின் மூன்று வயது குழந்தையையும் தாக்கினார்கள்.

சத்தம் கேட்டு அங்கே வந்த ஊர் மக்களின் கூட்டம் அதிகமானதால் அங்கிருந்து அவர்கள் தப்பித்து சென்று விட்டார்கள். எனது அப்பாவின் நோக்கம் என்னை கொலை செய்ய வேண்டும் என்பதுதான்.

திருமணத்திற்கு பிறகு நான் குழந்தைக்கு தாயான தகவல் அவருக்கு கிடைத்தவுடன் என் மீது அவருக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது. எனக்கும், எனது குடும்பத்திற்கும் காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

என் மீது தாக்குதல் நடத்திய எனது தந்தை மற்றும் அவரிடம் வந்த அடியாட்களின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மகள் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவரது வயிற்றின் மேல் பெற்ற தந்தையே தாக்குதல் நடத்தியதும், தந்தையின் மீது மகள் புகார் தெரிவித்ததும் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணுக்கு நடுவீதியில் நேர்ந்த சோகம்!!

மகாராஷ்டிராவில்..

நடைபயிற்சிக்கு சென்ற ஐடி பெண் ஊழியர் மீது 100 கி.மீ அதி வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானது மும்பையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள கிங் சர்க்கிள் பகுதியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி. அந்த பகுதியிலுள்ள ஐடி நிறுவனத்தில் CEO பதவியில் இருந்து வந்த இவருக்கு ஓட்டபந்தயத்தில் ஆர்வம் இருந்துள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினமும் இவர் நடைப்பயிற்சி செல்வது வழக்கம்.

அந்த வகையில் நேற்று காலை ராஜலட்சுமி, தனது கணவருடன் ஒர்லி கடற்கரைப்பகுதியில் நடைபயிற்சிக்காக சென்றுள்ளார். அப்போது ராஜலட்சுமியை விட்டுவிட்டு, அவரது கணவர் சிவாஜிபார்க் பகுதிக்கு வந்து நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

அந்த சமயத்தில் அந்த பகுதிக்கு சொகுசு கார் ஒன்று அதி வேகமாக வந்துள்ளது. இதனை கவனிக்காத ராஜலட்சுமி, கடற்கரையோரம் இருக்கும் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது சுமார் 100 கி.மீ வேகத்தில் வந்த அந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த டிவைடரில் மோதியதில், அதற்கு மறுபக்கம் இருந்த ராஜலட்சிமியை இடித்தது.

இதில் நிலை தடுமாறி, டிவைடரில் ராஜலட்சுமி சட்டென்று விழுந்தார். இந்த விபத்தில் அவரது தலையில் பலமாக அடிபட்டது. மேலும் இதனை கண்ட கார் ஓட்டுநர், உடனே சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயன்றார்.

ஆனால் அந்த பகுதி மக்கள் அவரை வளைத்து பிடித்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கே அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது உயிரிழந்த பெண்ணின் பெயர் குறித்த விபரங்கள் தெரியவந்தது. மேலும் விபத்து ஏற்படுத்தியவர் பெயர் சுமர் மெர்ச்சண்ட் என்றும், அவர் முந்தைய நாள் பார்ட்டியில் இருந்து காரை வேகமாக ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவரது காரின் மீட்டரை சோதனை செய்தபோது 100 கி.மீ வேகத்தில் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கார் ஓட்டி வந்த சுமர் குடித்துவிட்டு வண்டியை ஓட்டி வந்தாரா என்று அவரது இரத்த மாதிரியை சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இவர் ஏற்கனவே வேகமாக கார் ஓட்டி வந்ததாக பலமுறை அபராதம் கட்டியுள்ளதும், இவர் மீது வழக்கு உள்ளதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடைபயிற்சிக்கு சென்ற ஐடி பெண் ஊழியர் மீது 100 கி.மீ அதி வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானது மும்பையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாவுக்கும் ஒரு துணை வேண்டும்… தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்!!

கள்ளக்குறிச்சியில்…

அவர்களுக்கே திருமணம் ஆக வேண்டிய வயதில் இருந்த என் மகன்கள் என்னிடம் வந்து எனக்கு மறுமணம் செய்து வைக்கவா என்று கேட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

அதேநேரத்தில், கணவரை இழந்த எத்தனையோ பெண்கள் தனி ஆளாக தன் பிள்ளைகளை வளர்த்து வரும் இந்தச் சமூகத்தில் யாருக்குமே தோன்றாத ஒரு சிந்தனை என் மகன்களுக்குத் தோன்றியதை நினைத்துப் பெருமையாகவும் இருந்தது,” என்கிறார் செல்வி.

கள்ளக்குறிச்சியில் உள்ள வளையாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் பாஸ்கர். அவருடைய அம்மாதான் செல்வி. பாஸ்கர், அவரது தம்பி விவேக் இருவரும் தங்களது தந்தையை இளம் வயதிலேயே இழந்தவர்கள்.

2009ஆம் ஆண்டில் அவர்களது தந்தை உயிரிழக்கும்போது பாஸ்கர், வேலூரில் பொறியியல் துறையில் முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். விவேக் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

“அப்போதெல்லாம் மறுமணம் குறித்து எங்களுக்குச் சிந்தனையே இருந்ததில்லை. எங்கள் ஊரில், சொந்த பந்தங்களில் கணவரை இழந்து, தனியாகக் குழந்தைகளை வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள். எல்லாரும் அவர்கள் அப்படி தனியாக இருப்பதைப் பெருமையாகப் பேசுவதைப் பார்த்து, நாங்களும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால், நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது நான் படித்த பள்ளியில் பணியாற்றிய ஓர் ஆசிரியரை வழக்கம்போல் ஊருக்குப் போனபோது சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது அவர்தான் அம்மாவின் மறுமணம் குறித்துப் பேச்சு எடுத்தார்.

உங்க அம்மா இத்தனை நாளா தனியா கஷ்டப்படுறாங்களே, அவங்களுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வெக்கலாமில்ல’ என்று அவர் கேட்டார்,” என்று கூறும் பாஸ்கர், அந்த ஆசிரியர் அதைப் பற்றிப் பேசிய காலகட்டத்தில் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே தான் இல்லை என்கிறார்.

அதனாலேயே இப்படி ஒரு பேச்சு வந்தது என்று தனது அம்மாவிடம் பேசாத பாஸ்கர், அந்த ஆசிரியரிடம் பேசுவதையே தவிர்த்துவிட்டார்.அதற்குப் பிறகு நீண்டகாலம் அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்த பாஸ்கர், கல்லூரி முடித்து, வேலை, வெளியுலகம் என வந்துவிட்டார்.

அந்த நேரத்தில் அவருடைய புத்தக வாசிப்பு பழக்கமும் அதன்மூலம் கிடைக்கும் பழக்கங்களும் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கொண்டே சென்றுள்ளது. அப்போது வாசிப்பு மூலம் அறிமுகமான பல நண்பர்கள் இதே விஷயத்தைப் பற்றிப் பேசுவதைப் பார்த்துள்ளார்.

பெரியாரின் மறுமணம் குறித்த எழுத்துகள், கலைஞருடைய எழுத்துகளை வாசிப்பது, அதுகுறித்து விவாதிப்பது எனத் தொடர்ந்து கொண்டிருந்த பாஸ்கர் ஒரு கட்டத்தில், “நம் வீட்டிலும் அம்மா கணவரை இழந்து தனியாக இருக்கிறாரே, அவருக்கு ஏன் மறுமணம் செய்து வைக்கக்கூடாது?” எனச் சிந்தித்துள்ளார்.

அண்ணனின் வழியையே பின்பற்றி நடந்துகொண்டிருந்ததால் அதற்கு எந்தவித ஆட்சேபனையும் இன்றிச் சம்மதித்ததாக அவரது தம்பி விவேக் கூறினார். இருவரும் அவர்களது அம்மாவிடம் இதுபற்றிப் பேசியுள்ளார்கள்.

எங்களைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்த அம்மாவுக்கு தனிப்பட்ட வாழ்க்கை ஒன்றும் உள்ளது, அவருக்கும் தேவைகள் உள்ளன என்பதை நாங்கள் உணர்ந்தோம். ஆனால், அம்மாவிடம் இதை எப்படிப் பேசுவது என்ற தயக்கம் இருந்தது.

ஆகையால் விளையாட்டாகப் பேசுவதைப் போலவே இந்தப் பேச்சைத் தொடங்கினோம். எனக்கு திருமணம் வயது ஆகிவிட்டது எனக் கூறி என்னிடம் அம்மா திருமணப் பேச்சை ஒருநாள் எடுத்தார். அப்போது, ‘நீ கல்யாணம் பண்ணாதான் நான் பண்ணுவேன்’ என்றேன்.

‘பிறகு நீண்டகாலமாக தனியாகச் சிரமப்படுகிறாயே, நீ முதலில் திருமணம் செய்துகொள், பிறகு நான் செய்துகொள்கிறேன்’ என்று அம்மாவிடம் அடிக்கடி அதுகுறித்துப் பிறகு பேசத் தொடங்கினேன்,” என்கிறார் பாஸ்கர்.

தனது இரு மகன்களும் இந்தப் பேச்சை எடுத்து சில ஆண்டுகள் கழித்தே செல்வி மறுமணம் செய்ய ஒப்புக்கொண்டார். ஆனால், அவர்களது உறவுகளில் ஏற்கெனவே இதுபோல் கணவரை இழந்தவர்கள் தனி ஆளாகவே கடைசி வரை இருப்பதும் இத்தகைய நடைமுறையை உறவுகள் ஏற்றுக்கொள்ளாததும் அவர்களுக்கு மறுமணம் செய்வதைச் சவாலாக்கின.

“மூத்த மகன் என்னிடம் இதுகுறித்துப் பேசியபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. திருமணம் ஆகவேண்டிய வயதில் மகன் இருக்கும்போது நான் திருமணம் செய்துகொண்டால் ஊர் என்ன பேசும் என்று அவனைக் கடிந்துகொண்டேன்.

ஆனால், ‘நீங்களும் எத்தனை காலம்தான் தனியாகச் சிரமப்படுவீர்கள், உங்களுக்கு என ஒரு துணை இருந்தால், வெளியூர்களில் வேலை செய்யும் நானும் தம்பியும் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்ற நிம்மதியோடு இருப்போம்.

அதுமட்டுமின்றி உங்களுக்கு என வாழ்க்கை இருக்கிறது. அதை நீங்கள் வாழ்ந்துதான் ஆகணும். இதன்மூலம் உங்களைப் போல் கணவரை இழந்தவர்களுக்கு முன்மாதிரியாக இருங்கள்’ என்று கூறினான்,” என்று கூறும் செல்வி, அதற்குப் பிறகுதான் அதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்.

தனிமையில் எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்ட போதும் யாருமே உறுதுணையாக வந்து நிற்காதபோது, மறுமணம் விஷயத்தில் மட்டும் ஏன் அத்தகையோர் என்ன பேசுவார்கள் எனப் பார்க்க வேண்டும் என்று கூறியதோடு தமது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தைரியத்தையும் மன உறுதியையும் தனது மகன்கள் வழங்கியதாகக் கூறுகிறார் செல்வி.

அதைத் தொடர்ந்து ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, மகன்கள் பக்கபலமாக நிற்கும் நம்பிக்கையில் மறுமணம் செய்துகொள்ள செல்வி முடிவெடுத்துள்ளார். அம்மாவின் சம்மதம் கிடைத்துவிட்டது.

அடுத்ததாக அவருக்கு ஏற்ற மாப்பிள்ளையைத் தேட வேண்டும். “வெறுமனே யாராவது மனைவியை இழந்தவரைத் தேடிப்பிடித்து அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்து கடமையை முடிக்க நாங்கள் நினைக்கவில்லை.

அவருக்காகத் தேடும் நபருடன் அவரை சில நாட்களுக்குப் பேசிப் பழகுமாறு கூறினோம். அம்மாவுக்கு சரி எனப்பட்டால் மேற்கொண்டு பேசலாம் என நினைத்தோம். அந்த முயற்சியில் இப்போது மணந்துள்ள அப்பாவை அம்மாவுக்குப் பிடித்ததால் அவர்கள் மறுமணம் செய்துகொண்டார்கள்,” என்கிறார் பாஸ்கர்.

“உன் பிள்ளைகளே கூறினாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு வாழ்க்கைக்கு நீ எப்படி சம்மதிக்கலாம் என்று என்னிடம் பலரும் கேட்டார்கள். கணவரை இழந்தவர்கள் மறுமணம் செய்துகொள்ள சட்டமே இருக்கும்போது நான் ஏன் பயப்பட வேண்டும்?

பிள்ளைகளுக்குச் சுமையாக இருக்காமல், இறுதிக்காலத்தில் எனக்கென ஒரு துணையைத் தேடிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லையே! திருமண உறவு என்றால் பாலியல் மட்டுமே இல்லை. நட்புறவோடு உறுதுணையாக ஒருவர் உங்களுக்கென இருக்கிறார் என்பதே தனி தைரியத்தை வழங்கும்,” என்கிறார் செல்வி.

சிங்கப்பூர் முதலாளி தந்த இன்ப அதிர்ச்சி.. தொழிலாளிக்கு அடித்த அதிஷ்டம்!!

இந்தியாவில்..

ஏழ்மையான குடும்பம் என்பதால் சிங்கப்பூரில் கடுமையாக உழைத்த திரு.மாரிமுத்து, 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகத் தன் நாட்டுக்குத் திரும்பினார்.

20 வயதில் இங்கு நிலத்தைஅடைமானம் வைத்து நான்கு பேர் கொண்ட குடும்பத்தை நடத்த வந்தவர், தனது இரண்டு மூத்த சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்து தனது கடனை அடைத்து தனது வாழ்க்கையை தொடங்க உள்ளார்.

2006 ஆம் ஆண்டு லக்கி ஜாயின்ட் என்ற கட்டுமான நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து, மாரிமுத்து ஒரு நாள் கூட வருடாந்திர விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு எடுக்காமல் தனது தரவரிசையில் முன்னேறியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரு.மாரிமஸ் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் தில்கத்தரையில் திருமணம் செய்தபோது, ​​அவரை வாழ்த்துவதற்காக அவரது முதலாளியான லக்கி ஜாயின்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கெல்வின் இயோ கலந்து கொண்டார்.

திரு.மாரிமுத்து பாரம்பரிய உடை மற்றும் சட்டை அணிந்து மணந்தார். அவரது முதலாளிக்காக அவர் செய்த விரிவான ஏற்பாடுகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

திரு. ஐயாவ் முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்தார், மேலும் குதிரை வண்டியில் மணமகனின் அழைப்பிதழ், வாழை இலையில் பரிமாறப்படும் தமிழ் பாரம்பரிய உணவு மற்றும் ஒரு கோவிலில் எளிமையான திருமண விழா ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.

“பேன்டியில் அமர்ந்து கிராம மக்களுடன் பாரம்பரிய உணவுகளை ருசிப்பதும், திரு. மாரிமுத்து உட்பட ‘லக்கி ஜாயின்ட்’ ஊழியர்களின் குடும்பத்தினரை சந்திப்பதும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

“வெளிநாட்டுத் தொழிலாளர்களின் அறியப்படாத வாழ்க்கையைப் பார்ப்பதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன்,” என்று அவர் கூறினார். மாரிமுத்து படித்த கிராமத்துப் பள்ளியையும், இப்போது அங்கு படிக்கும் மாணவர்களையும் பார்த்தது ஐயாவுக்கு ஒரு நெகிழ்ச்சியைக் கொடுத்தது.

சிங்கப்பூரில் உள்ள நவீன பள்ளிகளைப் போலல்லாமல், மாணவர்கள் கரும்பலகையைப் பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

இவரது திருமணம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. மாரிமுத்து தனது மனைவி நித்யாவுடன் சிங்கப்பூரில் குடியேற திட்டமிட்டுள்ளார், அவர் ஒரு பல்துறை பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

இன்ஸ்டாகிராம் நண்பனை நேரில் பார்க்க சென்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!

பீகாரில்..

பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தின் தோரியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிதீஷ் குமார். இவருக்கும் அண்டை மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் 6 மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவரும் ஆன்லைன் மூலம் பேசத் தொடங்கி நட்பாக பழகியுள்ளனர்.

பின்னர் செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டு நிதீஷ் குமாரிடம் சிறுமி அடிக்கடி பேசத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் காதலிக்கும் மனநிலைக்கு இருவரும் சென்றுவிட்டனர். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி இருவரும் தனியாக நேரில் சந்திக்கலாம் என முடிவு செய்தனர்.

இதற்காக சிறுமியும் தனது பெற்றோரிடம், தோழியை பார்க்க செல்வதாகக் கூறிவிட்டு நிதீஷ் குமாரை பார்க்க அவரது ஊருக்கு பயணம் மேற்கொண்டார். இருவரும் பேசி முடிவு செய்த இடத்துக்கு முன்னதாகவே, நிதீஷ் குமார் தனது உறவினர் சதாசிவ் மற்றும் நண்பர் விகாஸ் குமார் ஆகியோரும் சென்றுவிட்டார்.

அங்கு வந்த சிறுமியிடம் நயமாக பேசி தனியாக ஒரு இடத்திற்கு மூவரும் அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சிறுமியை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு சென்று நடந்த உண்மையை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, தோரியா காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் இந்த கொடூரத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லாவல நீர்வீழ்ச்சியில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களும் சடலங்களாக மீட்பு!!

மொனராகலையில்..

மொனராகலை – வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (21.03.2023) மாலை ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய மூவரினதும் சடலங்கள் இன்றைய தினம் (22.03.2023) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று, நேற்று முற்பகல் அங்கு நீராடச் சென்ற போது, அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

கல்முனை, காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, 20 முதல் 22 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களே இவ்வாறு காணாமல்போயிருந்தார்கள்.

அவர்களைத் தேடும் பணிகளில் பொலிஸார், மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு IMF விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள்!!

இலங்கையில்..

வங்குரோத்து அடைந்த இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முதற்கட்ட கடன் தொகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் சில தினங்களில் கடன் தொகை கிடைக்கவுள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளை சர்வதேச நிதியம் விதித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியின் முதல் தவணையாக 333 மில்லியன் டொலர்கள் சில தினங்களில் கிடைக்கவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் அடிப்படையில் இந்த மூன்று பில்லியன் டாலர்கள் நான்கு ஆண்டுகளில் தவணைகளில் வழங்கப்படும்.

இலங்கை அமுல்படுத்த வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகள் வெளியாகி உள்ளன.

  • கடன் மறுசீரமைப்பு திட்டம் ஏப்ரல் இறுதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
  • ஐக்கிய நாடுகள் சபையின் நியமங்களுக்கு அமைவாக ஊழலுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்
  • அரச வருவாயை மிக விரைவில் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்
  • அதிக வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து அதிக பங்களிப்புடன் செல்வ வரி விதித்தல்
  • 2025க்குள் சொத்து மற்றும் சொத்து பரிமாற்ற வரி அறிமுகம்
  • 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் பணவீக்கத்தை 12%-18% ஆகக் குறைக்க இலக்கு
  • ஜூன் மாத இறுதிக்குள் தற்போதைய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்
  • நாணய மாற்று விகித நெகிழ்வுத்தன்மையை பராமரித்தல் 
  • மத்திய வங்கியை மேலும் சுதந்திரமாக்குதல்
  • வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பை அறிமுகப்படுத்துதல்

ஆகிய கட்டுப்பாடுகள் அடங்கும்.

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

தங்கம் விலை..

நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது கடந்த வருடம் இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த கிழமைக்கு முன்னதாக 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 140,000 என்ற பெறுமதிக்கு திடீரென குறைந்திருந்தது.

இந்த நிலையில் குறித்த விலை வீழ்ச்சியானது ஒரு சில நாட்கள் மாத்திரமே காணப்பட்ட நிலையில் தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்து 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 170,000 ரூபா என்ற மட்டத்தை அடைந்திருந்தது.

இவ்வாறான சூழலில் கடந்த திங்கட்கிழமை முதல் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையில் சரிவு பதிவாகி வருகிறது. அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 165,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 151,800 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 140,000 என்ற பெறுமதிக்கு திடீரென குறைந்த போது தொடர்ந்தும் தங்கத்தின் விலை குறையும் என எண்ணி தங்க ஆபரணம் வாங்குவதற்காக காத்திருந்தவர்களுக்கு மீண்டும் பழைய விலைக்கே தங்கத்தின் விலையானது உயர்ந்தமை அதிர்ச்சியளித்திருந்தது.

எனினும் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை குறைந்து வருகின்றமை தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும்.

பொம்மையுடன் குடும்பம் நடாத்தும் நபர் : வலைத்தளங்களில் வைரலாகும் குடும்பம்!!

இணையத்தில்..

ஒவ்வொரு நாளும் உலகத்தின் ஏதாவதொரு மூளையில் வித்தியாசமான பல சம்பவங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கின்றன.

அவை மனித வாழ்க்கையில் இதுவரை பதிவாகாத வித்தியாசமான பட்டியலில் இடம்பிடிக்கின்றன. இப்படியொரு சூழலில் தற்போது திருமணங்கள் மற்றும் குடும்பங்களிலும் வித்தியாசமான சில விடயங்கள் பதிவாகி வருகின்றன.

இந்த பட்டியலில் விலங்குகள் முதல் உயிரற்ற பொருட்கள் வரை பலவற்றைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர் சில நபர்கள். பூனை, சுவர், ஈபிள் டவர், கற்பனை கதாபாத்திரம் என்பவற்றுடன் நடத்திக் கொள்ளப்பட்ட திருமணங்கள் தொடர்பான செய்திகள் பலவற்றை நாம் சமூக வலைத்தளங்களில் பார்வையிட்டுள்ளோம்.

அதை தொடர்ந்து தற்போது பொம்மையுடன் இளைஞரொருவர் குடும்பம் நடத்தி வரும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதேவேளை குழந்தை பொம்மையொன்றை தனது குழந்தையெனவும் அந்த நபர் தெரிவிக்கிறார்.

எனினும் இவ்வாறான விடயங்கள் தொடர்ந்தும் விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாகின்றமை அனைவரும் அறிந்த விடயமாக காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக அனைவரினதும் கவனங்களை ஈர்ப்பதற்காகவும், இதன் மூலம் தமது சமூக வலைத்தளத்தை பின்தொடர்பவர்களை அதிகரித்து அதன் மூலம் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காகவும் செய்யப்படும் போலியான விடயங்கள் என சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

”நீண்டகால விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி”.. பிரான்சில் தமிழினத்திற்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழ்ப் பெண்!!

பிரான்சில்..

கடந்த 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை பிரான்சிலுள்ள பாரிசு நகரில் நடைபெற்ற சூழல் மாசடைதல், பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் தீமைகள், நாகரிகப் போர்வையில் அநியாயமாக கழிவுகளுக்குள் உள்ளாகும் உடைகள் மூன்றாம் உலகநாடுகளின் பாவனைக்கு வழங்குதல், உயிர்கள் மீதான பாதுகாப்பு என பல்வேறு மனிதகுலத்திற்கு அவசியமான விடயங்களை கருத்தில் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மரதன் ஓட்ட நிகழ்வில் 15 ஆயிரம் வரையிலான பிரெஞ்சு மற்றும் பல்லின மக்கள் பங்குபற்றியிருந்தனர்.

அதில் ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதியாக இரண்டு பிள்ளைகளின் தாயார் திருமதி. பிரவீனா நிமால் பங்கு பற்றியதுடன், 10 கிலோமீற்றர் தூரத்தை முழுமையாக ஓடித் தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவரின் மனத்திடம் கொண்ட ஓட்டத்தினால் சிறப்பாக பேற்றினைப் பெற்றுக்கொண்டதோடு, அதற்கான சிறப்புப் பரிசினையும் பதக்கத்தையும் ஏற்பாட்டாளர்களிடம் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் பாரிசின் மத்தியில் ஆரம்பித்த இந்த மரதன் ஓட்டம் பாரிசின் சர்வதேச உதைபந்தாட்ட மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்த விழிப்புணர்வு செயற்பாட்டில் முதற்தடவையாக திருமதி. பிரவீணா ஈடுபட்டதும் தனது திடமான உறுதியான செயற்பாட்டை இறுதிவரை செய்து முடித்தது உடல் ரீதியாக களைப்பைக் கண்டிருந்தாலும் மனதாலும், தனது நோக்கத்திலும், விருப்பத்திலும் உறுதியாக இருந்ததை அவரின் பேச்சில் காணக்கூடியதாக இருந்தது.

நிகழ்வின் முடிவில் இவருடன் பேசியபோது தனது நீண்டகால விருப்பம் நிறைவேறியதும், இதற்கு பெரும் உந்து சக்தியாக இருந்த பெற்றோர், மற்றும் துணைவருக்கும் நன்றியைத் தெரிவித்ததோடு, பெண்களால் எதனையும் சாதிக்க முடியும், பெண் என்பவள் வீட்டுக்குள் முடங்கி குடும்பம், சுற்றம் என்பதைக் கடந்து இவ்வாறான மனிதநேயப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

பெண்களால் எதையும் சாதிக்க முடியும் சாதிக்க வேண்டும் என்பதன் ஓர் உதாரணமாகத் தான் இன்று நின்று கொண்டிருப்பதாகவும் கூறினார். முதற்தடவையாகவே தான் இதில் துணிவுடனும், மனத்திடமாகவும் பங்கு பற்றியுள்ளேன்.

இனிவரும் காலங்களில் இங்கு வாழும் தமிழ்ப் பெண்கள், இளையவர்கள் பங்கெடுத்து ஈழத்தமிழ் பெண்களுக்கு பெருமை சேர்க்க முன்வரவேண்டும். வருவார்கள் என்ற நம்பிக்கை கொள்கின்றேன்’ என திருமதி. பிரவீனா நிமால் தெரிவித்துள்ளார்..

எரிபொருள் விலையை 100 ரூபாவால் குறைக்க தீர்மானம்.. இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் புதிய அறிவிப்பு!!

இலங்கையில்..

அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த எரிபொருளின் விலை திருத்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்படும் விலை சூத்திரத்திற்கமைய முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பெட்ரோல் விலை 100 ரூபாயில் குறைக்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான எரிபொருள் விலை சூத்திரத்தின் மூலம் மாத்திரமே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படும்.

மற்றும் மின்சாரச் சட்டமூலம் 06 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.