தற்போது சந்தையில் கோதுமை மாவின் விலை குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் கோதுமை மா 300 ரூபா முதல் 400 ரூபா வரையில் விற்பனையானது. எனினும், தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 25 கிலோகிராம் நிறையுடைய கோதுமை மா மூடை ஒன்றின் விலை 7,250 ரூபாவாகும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, இவ்வாறு விலை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை அடுத்த குன்னம் அருகே கொல்லப்பள்ளியில் புதன்கிழமை கணவர் வீட்டில் பெண் தூக்கில் தொங்கிய நிலையில், இளம்பெண் மீட்கப்பட்டார். இயற்கைக்கு மாறான மரணம் என தொடுபுழா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தொண்டிக்குழா தம்பதிகளான டாக்டர் ஜோர்ஜ் மற்றும் ஐபி ஆகியோரின் மகளான அனுஷா என்பவரே உயிரிழந்துள்ளார். அனுஷாவுக்கும், சாபு என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் 18 அன்று திருமணம் நடந்தது.
இந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் இந்த சம்பவம் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. அப்போது, வீட்டில் கணவரின் தாயும் சகோதரியும் இருந்தனர். அனுஷாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் உயிரிழந்தார்.
சாபுவின் குடும்பத்தினர் கூறுகையில், அனுஷா மன உளைச்சலுக்கு சிகிச்சை எடுத்து வந்தார். சடலம் தற்போது கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழக மாவட்டம் ஈரோட்டில் சரிவர படிக்காததைக் கண்டித்ததால் தாயின் தலையில் 14 வயது மகன் கல்லைப் போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சுங்கக்காரன் பாளையத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வன்.
இவர் தனது மனைவி யுவராணி, மகன் சஞ்சய் மற்றும் மகள் தர்ஷினி ஸ்ரீ ஆகியோருடன் வசித்து வந்தார். யுவராணி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். தனது மகன் சஞ்சய் சரிவர படிக்காததால் அவரை யுவராணி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் பாடசாலை விடுதி ஒன்றில் சேர்த்துள்ளார். அதன் பின்னர் வீட்டிற்கு வந்த சஞ்சயை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அருள்செல்வன் வெளியே சென்றிருந்த சமயம், நள்ளிரவு வேளையில் தூங்கிக் கொண்டிருந்த தாய் யுவராணியின் தலையில் சஞ்சய் ஹாலோ பிளாக் கல்லைப்போட்டு விட்டு தப்பியோடியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த யுவராணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். பின்னர் யுவராணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், சிறுவன் சஞ்சயை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாணிக்கம் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மாணிக்கம் (வயது 47), ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவர்களது மகள் சத்தியப்பிரியா (20) தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் மதியம் பரங்கிமலை ரெயில்நிலையத்துக்கு வந்து அங்கிருந்து மின்சார ரெயில் மூலம் தியாகராயநகர் செல்வது வழக்கம்.
இவரது வீட்டிற்கு எ திரே ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டரது மகன் சதீஷ்(23), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே சத்யாவின் வீட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
காரணம் சதீஷ் படித்துவிட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர்சுற்றித்திரிந்துள்ளார், இதனால் சத்யா, சதீஷை விட்டு விலகத்தொடங்கியுள்ளார்.
இருப்பினும் சதீஷ் தொடர்ந்து சத்யாவை பின்தொடர்ந்து வந்துள்ளார், சம்பவ தினத்தன்றும் இருவருக்கும் ரயில்நிலையத்தில் வைத்து வாக்குவாதம் நடந்துள்ளது.
ஒருகட்டத்தில் கடும்கோபமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயிலின் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் ரயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சதீஷ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர். இதற்கிடையே மகள் உயிரிழந்த துக்கத்தில் அவரது தந்தை மாணிக்கம் மாரைடைப்பால் இன்று காலை உயிரிழந்தார்.
நடிகை சங்கீதா என் விடயத்தை பொறுத்தவரை என் அம்மா தப்பு என நடிகை சங்கீதா மன வருத்தத்துடன் பேசியுள்ளார். தமிழில் காதலே நிம்மதி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சங்கீதா.
பிதாமகன் படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த சங்கீதா, கடந்த 2009ஆம் ஆண்டு பாடகர் கிரிஷை காதலித்து திருமணம் செய்தார். இந்த நிலையில் நடிகை சங்கீதாவின் தாயார் தனது மகள் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார்.
குறிப்பாக தன்னை வீட்டை விட்டு துரத்திவிட்டதாக சங்கீதா மீது புகார் அளித்தார். இதுகுறித்து பேசிய நடிகை சங்கீதா, ‘நான் கஷ்டப்பட்டு நடித்து சேமித்து வைத்த பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யும் போது அதற்கு சில கட்டுப்பாடுகள் கொண்டு வந்தேன்.
இப்போது கூட அவர்களுடைய செலவை நான் தான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அதனை குறைத்துக் கொண்டேன். ATM இயந்திரத்தில் பணம் வரவில்லை என்றால் கோபத்தில் அதனை தட்டி பார்ப்போம், கொட்டிப் பார்ப்போம் அல்லவா? அதுபோலத் தான் இப்போது என்னிடம் இருந்து பணம் அவர்களுக்கு போகவில்லை என்பதால் என் மீது குற்றம் கூறுகிறார்கள்.
என் அம்மா கூறுவது எல்லாம் பொய்யான குற்றச்சாட்டு. குடும்ப சூழ்நிலை காரணமாக 14 வயது இருக்கும்போதே என்னை நடிக்க அனுப்பி வைத்து விட்டார்கள். என்னுடைய சகோதரர்கள் குடிகாரர்கள்.
அம்மா ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள். மொத்த குடும்ப சுமையையும் என் மீது சுமத்தி நடிக்க வைத்தார்கள். யாராக இருந்தாலும் ஒரு அம்மாவை குற்றம் சுமத்த மாட்டார்கள். ஆனால், எங்கள் விடயத்தை பொறுத்தவரை என் அம்மா தப்பு’ ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தவர் லாஸ்லியா. நடிக்க வந்த இவர் பிக்பாஸ் 3 சீசனின் ஆடிஷனில் கலந்து கொண்டு வீட்டிற்கு சென்றார்.
க்யூட்டான தமிழ் பேச்சால் ரசிகர்களை ஈர்த்து வந்த லாஸ்லியா, கவினுடன் காதலில் விழுந்து சர்ச்சையில் சிக்கினார். காதல் குறித்து குடும்பத்தினரின் வெறுப்பை சம்பாதித்த பிறகு கவினிடம் இருந்து விலகி வந்தார். இருவரும் நிகழ்ச்சிக்கு பிறகு சந்திப்பதையும் பேசுவதையும் நிறுத்திக்கொண்டனர்.
தந்தை மறைவிற்கு பிறகு மீண்டும் படங்களில் நடித்து ஒருசில படங்களும் வெளியானது. ஆனால் அவரின் நடிப்பு எதிர்ப்பார்த்த படி இல்லாமல் இருந்ததால் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார்.
வாய்ப்பிற்காக உடல் எடையை குறைக்க கடின உடற்பயிற்சியும் செய்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வரும் லாஸ்லியா கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில் படவாய்ப்பில்லாமல் விளம்பரங்களில் நடித்து வருகிறார். அப்படி ஹெட்போன்ஸ், மளிகை கடை என விளம்பரப்படங்களில் நடித்து வருகிறார் லாஸ்லியா.
கேரளாவில் நால்வர் அடங்கிய குடும்பம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவில்வமலாவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (47). ஹொட்டலில் வேலை செய்து வந்தார். இவர் மனைவி சாந்தினி (43) தம்பதிக்கு கார்த்திக் (14), ராகுல் (7) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் அதிகளவில் கடன் வாங்கியிருந்ததால் அதன் காரணமாக பிரச்சனைகளை சந்தித்து வந்தார். இதையடுத்து நேற்று காலை 8.30 மணிக்கு மொத்த குடும்பமும் தங்கள் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீவைத்து கொண்டனர்.
முதலில் அக்கம்பக்கத்தினர் ராதாகிருஷ்ணன் வீட்டில் சிலிண்டர் வெடித்ததாக நினைத்தனர், பின்னர் தான் தீக்குளித்தது தெரியவந்தது. இதையடுத்து நால்வரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு சாந்தினி மற்றும் ராகுல் உயிரிழந்த நிலையில் ராதாகிருஷ்ணன் மற்றும் கார்த்திக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்களும் இன்று உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அளுத்கமை, மொரகொல்ல பிரதேசத்தில் 23 வயதான யுவதியை கார் ஒன்றில் கடத்திச் சென்று வீடொன்றில் தடுத்து வைத்திருந்த இரண்டு பேரை தாம் கைது செய்துள்ளதாக அளுத்கமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது. அளுத்கமை மற்றும் மொரகொல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதல் தோல்வியால் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக சந்தேக நபர்கள் யுவதியை கடத்திச் சென்றுள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட யுவதி தென்னஹேன யக்வத்த பிரதேசத்தில் வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதனையடுத்து அவரை சினவத்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். சம்பவம் தொடர்பாக அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாத்தா – பேத்தி என கிண்டல் செய்யப்படும் காதல் ஜோடி. இருவருக்கும் இடையே உள்ள பெரிய வயது வித்தியாசம் தான் காரணம். பெரியளவிலான வயது வித்தியாசம் கொண்டு காதலில் விழுந்த இருவர் பல்வேறு கிண்டலுக்கு ஆளாகியுள்ளனர்.
Cowboy மற்றும் Angel என அறியப்படும் ஜோடி காதலர்கள் ஆவார்கள். இதில் Cowboy வயதானவராகவும், Angel மிக அழகிய இளம்பெண்ணாகவும் இருக்கிறார். இருவரும் தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை டிக் டாக்கில் பதிவிட்டு வரும் நிலையில் அவர்களை தாத்தா, பேத்தி என பலரும் நினைத்து விடுகின்றனர்.
இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வைர மோதிரம் Angel விரலில் ஜொலிக்கிறது. அவர் கூறுகையில், வயது என்பது வெறும் எண் தான்..! நாங்கள் இறக்கும் வரை ஒருவர் மீது ஒருவர் உயிருக்கு உயிராக இருப்போம் என கூறினார்.
ஜோடியின் புகைப்படங்களுக்கு பல்வேறு விதமான கமெண்டுகள் வருகின்றது. என் தாத்தா என் கையை பிடித்து கொண்ட ஞாபகம் வருகிறது உங்கள் இருவரையும் சேர்ந்து பார்க்கும் போது என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலரோ Angel பணத்துக்காக தான் Cowboy உடன் இருக்கிறார் என குற்றஞ்சாட்டுகின்றனர்.
இன்னும் சிலரின் பதிவில், உங்களின் மகிழ்ச்சியை காண நன்றாக உள்ளது, வயது வித்தியாசத்தை விட்டு தள்ளுங்கள், உங்களை வெறுப்பவர்களின் பேச்சை கேட்காதீர்கள் எனவும் பதிவிடுகின்றனர்.
அம்பத்தூர் அருகே பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரி செல்வதற்காக காத்திருந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்பு மாணவர் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பள்ளி மாணவன் அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற போது அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த சர்மிளா என்ற ஆசிரியை நடத்தி வந்த டியூஷனில் கடந்த 3 ஆண்டுகளாக படித்து வந்துள்ளார்.
அப்போது ஆசிரியர் சர்மிளாவுக்கும் மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. இதனிடையே சர்மிளாவுக்கு வீட்டில் வேறொரு நபருடன் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்ததால், பள்ளி மாணவனுடனான தொடர்பை முழுவதுமாக துண்டித்துள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான் என்பது தெரியவந்துள்து. கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
சுகயீனம் காரணமாக தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் மருந்து பெற்றுக் கொண்ட 11 வயது சிறுவன் மருந்து விஷமானதில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் பேருவளை – அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த பேருவளை வளதற கனிஷ்ட பாடசாலையில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் விதுஷ ரந்துனு என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி காய்ச்சல் காரணமாக பேருவளை அபேபிட்டிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் சிறுவன் சிகிச்சைப் பெற்றுக் கொண்டுள்ளான்.
அதன் பின்னர், ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக, சிறுவனின் பெற்றோர் சிறுவனை பேருவளை நகரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கும் சிறுவன் குணமடையாத காரணத்தால் மீண்டும் முதலில் மருந்து எடுத்துக் கொண்ட மருத்துவரிடம் சிறுவனை பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனுக்கு மேலும் சில மருந்துகள் கொடுக்கப்பட்டதுடன் சிறுவனின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதி
அதன்படி, சிறுவனை பேருவளை முதன்மை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில்,
சிறுவனை ஏற்க மறுத்த வைத்தியசாலை அதிகாரிகள், களுத்துறை போதனா பொது வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து களுத்துறை போதனா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று (12.10) மாலை திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலை திறந்த தீர்ப்பை அறிவித்துள்ளதுடன் சிறுவனின் உடல் உறுப்புகளை இரசாயன பரிசோதகருக்கு அனுப்பி வைக்க வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த மாணவனின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிலங்கையில் கணவனின் பிறந்தநாளுக்கு மனைவி கொடுத்த பிறந்தநாள் பரிசு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல சிரமங்களுக்கு மத்தியில் பள்ளிக்கு வரும் லட்சக்கணக்கான குழந்தைகள் நாடு முழுவதும் உள்ளனர்.
இந்நிலையில் ருசியான மற்றும் ஆரோக்கியமான உணவை பள்ளி மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார் நதிஷா மதுஷானி. தென்னிலங்கையை சேர்ந்த நதிஷா மதுஷானி எனும் யுவதி தனது கணவர் மதுசங்க குணவர்தனவின் பிறந்த நாளுக்கு பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியுள்ள சம்பவம் பலரையும் நெகிழவைத்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பல பலபெற்றோர் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்களின் பிள்ளைகளும் வயிறார உண்பது கிடையாது.
பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு இன்றியே பாடசாலைகளுக்கு செல்கின்றனர். இவ்வாறான நிலையில் மேற்படி தம்பதிகள் பாடசாலை மாணவர்களுக்கு உணவளித்துள்ள நிலையில் குறித்த தம்பதிகளுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.
வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றினை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்று (12.10) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக வாடகை ஓட்டத்திற்காக தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினை நேற்று முன்தினம் மாலை (11.10) நபரொருவர் எடுத்துச் செல்வதை அவதானித்த பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதி, முச்சக்கர வண்டி உரிமையாளருக்கு குறித்த முச்சக்கர வண்டியை ஒருவர் எடுத்துச் செல்வதை தெரியப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து, அதன் உரிமையாளரும், அருகில் நின்றோரும் குறித்த நபரை விரட்டிச் சென்று வவுனியா நீதிமன்றத்திற்கு அண்மித்ததாக மடக்கிப் பிடித்ததுடன், வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசாரிடம் மடக்கிப் பிடித்த குறித்த நபரை ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி வேலநகர் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (42). இவர் அந்தப் பகுதியில் அவரது மனைவி கார்த்திகை செல்வி (35) மற்றும் அவரது மகள் சக்தி (10) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
ராஜசேகரன் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இரவு வீட்டில் அனைவரும் உறங்கச் சென்றுள்ளனர்.
அப்போது நள்ளிரவில் ராஜசேகரன் அவரது மனைவி கார்த்திகை செல்வியை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அதிகாலை மகள் எழுந்து பார்த்தபோது தாய் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டுள்ளார்.
அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வந்து பார்த்தனர். அப்போது கார்த்திகை செல்வி சடலமாக கிடந்துள்ளார். உடனே இந்த சம்பவம் தொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார்த்திகை செல்வியின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ராஜசேகரன் எதற்காக கொலை செய்தார் என்பது மர்மமாகவே உள்ளது.
அவர் பிடிபட்ட பின்னர்தான் உண்மை தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அதனால் தற்போது ராஜசேகரனை போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர். மேலும் அருகில் உள்ள உறவினர்கள் மற்றும் அந்த தெரு பகுதியை சேர்ந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் அசந்து தூங்கிக்கொண்டிருக்கும் வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மணமகன் பண மாலையுடன் நிற்கிறார். அவரது அருகேயுள்ள இருக்கையில் பட்டுப்புடவை, தங்க நகை அலங்காரத்துடன், மணப்பெண் அமர்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தார்.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் செல்போனில் இதை வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார், இந்நிலையில் தற்போது இணைய தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதை பார்வையிட்ட பலரும், தூங்கும்போது மணப்பெண் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று, பதிவிட்டு வருகின்றனர்.
ஏழு வருடங்கள் இணையம் வாயிலாக பிரித்தானியர் ஒருவரை காதலித்த கனேடிய இளம்பெண் ஒருவர், தன் காதலனை நேரில் சந்திக்கச் சென்றபோது காதலனாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அந்த இளம்பெண்ணின் உடலில் 90 காயங்கள் இருந்ததாக நீதிபதி தெரிவித்துள்ளார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஆஷ்லீ (Ashley Wadsworth) என்ற இளம்பெண்ணுக்கு 12 வயதே இருக்கும்போது, இணையத்தில் ஜாக் (Jack Sepple) என்ற 15 வயது பிரித்தானிய சிறுவனை சந்தித்திருக்கிறார்.
காதல் என்றால் என்ன என்று கூட தெரியாத வயதிலேயே பிள்ளைகளுக்குள் காதல் பற்றிக்கொண்டது. இப்படியே இணையம் வாயிலாக காதல் வளர்ந்திருக்கிறது. ஆஷ்லீ ஏழு ஆண்டுகளாக உருகி உருகி ஜாக்கை காதலித்துக்கொண்டிருக்க, அவரோ வேறு பல பெண்களைக் காதலித்திருக்கிறார்.
தனக்கு 18 வயது ஆனதும், கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி, ஜாக்குடன் வாழ்வதற்காக இங்கிலாந்துக்கு வந்திருக்கிறார் ஆஷ்லீ. ஆனால், இங்கிலாந்துக்கு வந்தபின் ஜாக் தன்னை நடத்திய விதத்தைப் பார்க்கும்போது, இப்போது இருப்பது இத்தனை ஆண்டுகள் உருகி உருகி இணையம் வழியாக தான் காதலித்த ஜாக் இல்லை என்பது ஆஷ்லீக்கு புரிந்திருக்கிறது.
ஆகவே, கனடாவுக்குத் திரும்ப முடிவு செய்திருக்கிறார் ஆஷ்லீ. தன் தாயிடம், தான் கனடா திரும்ப விரும்புவதாக கூறிவிட்டு, பிப்ரவரி மாதம் 3ஆம் திகதிக்கு விமான டிக்கெட்டும் முன்பதிவு செய்திருக்கிறார் அவர்.
ஆனால், ஆஷ்லீ தன்னை விட்டுவிட்டுப் போய்விட்டால், அதன் பிறகு தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கமாட்டார் என்பதை உணர்ந்துகொண்ட ஜாக், ஆஷ்லீயுடன் சண்டையிட்டிருக்கிறார்.
அக்கம்பக்கத்தில் வாழ்பவர்கள் சண்டையிடும் சத்தத்தைக் கேட்டிருக்கிறார்கள். இதற்கிடையில், ஜனவரி 30 அன்று தன் தோழி ஒருவருக்கு, ‘அவசரம், உதவி தேவை’ என குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார் ஆஷ்லீ.
பின்னர் ஆஷ்லீயின் மொபைலிலிருந்து பிரச்சினை தீர்ந்துவிட்டது என ஒரு செய்தி வரவே, சந்தேகமடைந்த அந்த தோழி பொலிசாருக்கு தகவலளித்திருக்கிறார். பிப்ரவரி 1ஆம் திகதி, பொலிசார் ஆஷ்லீயும் ஜாக்கும் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து பார்க்கும்போது, இரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்திருக்கிறார் ஆஷ்லீ.
அப்போது வீட்டிலிருந்த ஜாக், தான் ஆஷ்லீயைக் கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் கொன்றதாக தெரிவித்துள்ளார். நேற்று, ஜாக்குக்கு 23 ஆண்டுகள், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மகளை இழந்த பெற்றோர் கதறுகிறார்கள்.
ஆஷ்லீ பிரித்தானியாவுக்குச் செல்வதாக கூறியபோதே நான் அவளைத் தடுத்தேன். ஆனால், நான் பெரிய பெண்ணாகிவிட்டேன் என்று சொல்லி என்னை மீறி அவள் சென்று விட்டாள்.
ஒரே நிம்மதி, கடைசியாக அவளிடம் பேசும்போது, நான் அவளை நேசிக்கிறேன் என்று கூறினேன் என்பதுதான் என கண்ணீருடன் கூறுகிறார் ஆஷ்லீயின் தந்தை. என்ன செய்வது ஒன்லைன் காதல் ஆஷ்லீயின் கண்ணை மறைத்துவிட்டதே!