இலங்கையில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி!!

வரி..

எதிர்வரும் காலங்களில் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோரிடமும் வரி அறவிடும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது. இதனை ஊடக மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் இலங்கையில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு வரி கோப்பு திறக்கப்படும். அவர்களின் வருமானத்துக்கு ஏற்ப வரி விதிக்கப்படும் தனியார் சேனலிங் செய்யும் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு நடத்தும் டியூசன் ஆசிரியர்கள் ஆகியோர் பெரும் தொகை வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்ற போதிலும்,

அவர்கள் இதுவரை வரி செலுத்துவதில்லை. எனவே அவர்களையும் வரி செலுத்தும் வலையமைப்புக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கூடுதல் வருமானத்தைப் பெறுவோரிடம் நேரடி வரி அறவிடப்படாத போதில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மேற்கொள்ள மறைமுக வரிகளை விதிக்க வேண்டியேற்படும். அது ஏழை மக்களுக்கு சுமையாக அமைந்து விடும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

பேருந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் : காணொளியை வெளியிட்ட நபரின் பரிதாப நிலை!!

சிதம்பரத்தில்..

சிதம்பரத்தில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய வீடியோவை வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்லும் பேருந்து நிறுத்தம் உள்ளது.

அங்குள்ள நிழற்குடையில் பள்ளி மாணவி ஒருவருக்கு மாணவன் தாலி கட்டிய வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட மாணவி, பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கீரப்பாளையம் அருகே வட ஹரிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர். அங்குள்ள தனியார் பாலிடெக்னிக்கில் ஆட்டோ மொபைல் 2ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து சிதம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, முகநூலில் வீடியோ வெளியிட்ட நபரான பாலாஜி கணேஷ் என்பவரிடம் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு சென்று கேட்ட போது அவர்களை சாதி பெயரை சொல்லி திட்டியுள்ளார்.

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் நகர போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தனர். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுவனுக்கு ஆசை வார்த்தைக் கூறி திருமணம் செய்த கல்லூரி மாணவி!!

சேலத்தில்..

தமிழக மாவட்டம் சேலத்தில் மாயமான திருமண வயதை அடையாத கல்லூரி மாணவனை சக மாணவி திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அரங்கனூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், இரண்டு ஆண்டுகள் தாமதமாக பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

குறித்த மாணவிக்கு அவருடைய சக மாணவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த மாணவருக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குறித்த மாணவன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் காணாமல் போனதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின்னர் பொலிஸாரால் மாணவனை கண்டுபிடிக்க முடியாததால், மாணவனின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிஸார் தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், குறித்த மாணவன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அங்கு விரைந்த பொலிஸார் மாணவனையும், அவருடன் தங்கியிருந்த இளம்பெண்ணையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண் மாணவருடன் படித்து வந்ததும், ஆசை வார்த்தைக் கூறி திருமண வயதை எட்டாத மாணவரை திருமணம் செய்து கர்ப்பமானதும் தெரிய வந்துள்ளது.

விசாரணைக்கு பின்னர் குறித்த மாணவி போக்சோ, இளம் வயது திருமணம் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

குறுகிய காலத்தில் கோடீஸ்வரர் ஆக ஆசைப்பட்ட தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்!!

தமிழகத்தில்..

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகுமார் (47) மளிகை கடை வைத்திருந்தார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (44). தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

சிவகுமார் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் ரூ.2 கோடி அளவிலான தொகை ஏமாற்றப்பட்டதாகவும், இதனால் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தும், மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் தம்பதி மனஉளைச்சலுக்கு ஆளாகி சோகத்துடன் காணப்பட்டனர். இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் சிவகுமாரும், ஜெயலட்சுமியும் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து மளிகை கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்த பொலிசார் சடலங்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் கிடந்த அறையில் சோதனையிட்டபோது அங்கிருந்து சிவகுமார் எழுதியதாக ஒரு கடிதத்தைக் காவல்துறையினர் கைப்பற்றினர்.

அந்தக் கடிதத்தில், ”பிஸினஸ் செய்வதற்காக நான் கடனாக வாங்கிய 2 கோடி ரூபாயை மற்றவர்களுக்கு கொடுத்து ஏமாந்து விட்டேன். அதனால் என்னால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

கடன் கொடுத்தவர்களுக்கு என்னால் பதிலும் சொல்ல முடியவில்லை. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு, நான் தற்கொலை செய்து கொள்கிறேன்,” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

தொடர் விசாரணையில், சிவகுமாரிடம் சிலர் ரியல் எஸ்டேட் தொழில் செய்தால் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகி விடலாம் என ஆசை வலை விரித்துள்ளனர். இதை நம்பி கனவில் அவர் மிதந்தார்.

இதையடுத்து நெருக்கமான சிலர் சிவகுமாரிடம் இருந்து நிலம் வாங்குவதற்காக சிறிது சிறிதாக பணம் வாங்கிச் சென்றுள்ளனர். இதற்காக சிவகுமாரும் பலரிடம் 2 கோடி ரூபாய் வரை கடன் வாங்கிக் கொடுத்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் மின்னல் தாக்கி 11 மாடுகள் பரிதாபமாக பலி!!

ஓமந்தைப் பகுதியில்..

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன. இன்று (12.10) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம்
மாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுக்கொண்டிருந்த போது மழை பெய்த்துள்ளது.

இதன்போது, மாடுகள் மோய்சலில் ஈடுபட்ட பகுதியில் உள்ள மரத்தின் மீது இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு மாடுகளை தாக்கியமையால் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளன.

இதேவேளை, வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 7 ஆம் திகதி இடி, மின்னல் தாக்கத்தினால் மாமடு பகுதியில் குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

5 வருடமா காதலித்த ஜோடி : கடைசியாக காதலன் சொன்னதை கேட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில்..

சென்னை மாதவரம் பகுதியை அடுத்த சின்ன மாத்தூர் பாரதி நகர் தெருவை சேர்ந்தவர் ஏஞ்சல். அதே பகுதியை சேர்ந்தவர் தனுஷ். ஏஞ்சல் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் எதிரெதிரே வீட்டில் வசித்து வந்ததால் இருவரும் நட்பாக பழகி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, நாளடைவில் தனுஷ் மற்றும் ஏஞ்சல் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் காதலித்தும் வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏஞ்சலின் வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், ஏஞ்சலின் காதலரான தனுஷ் வேறொரு பெண்ணோடு பழகி வருவதாகவும், அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

தான் ஐந்து வருடங்களாக காதலித்து வரும் காதலன் பற்றி இப்படி ஒரு தகவல் கிடைத்ததும் குழம்பி போயுள்ளார் ஏஞ்சல். தொடர்ந்து, உடனடியாக இது பற்றி தனுஷிடமே நேரடியாக கேட்டுள்ளார்.

அப்போது, தன்னை பற்றி கிடைத்த செய்தியை மறுக்காத தனுஷ், அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும், என்னை மறந்து விடு என்றும் ஏஞ்சலிடம் குறிப்பிட்டுள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து இரண்டு நாட்களாக மன உளைச்சலிலும் ஏஞ்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து தனுஷ் வீட்டிற்கு சென்ற ஏஞ்சல், அவருடைய பெற்றோரிடம் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதற்கான நியாயம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது மகனின் விருப்பம் என்றும் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்றும் தனுஷின் பெற்றோர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தனது வீட்டிற்கு சென்ற ஏஞ்சல், அங்கே யாரும் இல்லாத நேரம் பார்த்து விபரீத முடிவை எடுத்து உயிரிழந்தார்.

வெளியே சென்றிருந்த ஏஞ்சலின் பெற்றோர், வீட்டிற்கு வந்து பார்த்த போது மகளின் நிலையைக் கண்டு கதறித் துடித்தனர். இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஏஞ்சல் செல் போனை ஆய்வு செய்த போது, உயிரிழப்பதற்கு முன் ஏஞ்சல் பேசிய வீடியோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதில் பேசும் ஏஞ்சல், தன்னுடைய முடிவுக்கு நானே தான் காரணம் என்றும், காதல் தோல்வியால் காதலனை மறக்க முடியவில்லை என்பதால் இந்த முடிவை எடுக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்காக தனது காதலனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் ஏஞ்சல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஐந்து வருடங்களாக காதலித்து வந்த காதலன் தன்னை விட்டு சென்றதால் இளம்பெண் எடுத்த முடிவு, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதிதாக திருமணமான இளம் குடும்பஸ்தர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!!

புத்தளத்தில்..

புத்தளத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் புத்தளம், முந்தல் – கீரியங்களி பகுதியில் கடந்த மாதம் செப்டம்பர் 20 திகதி இடம்பெற்றுள்ளது. மதுரங்குளி நல்லாந்தளுவ பகுதியைச் சேர்ந்த பரீத் முஹம்மது பஸ்ரின் (வயது 25) எனும் இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதிதாக திருமணமான குறித்த இளைஞரும், அவரது மனைவியும் கடந்த 20 ஆம் திகதி முச்சக்கர வண்டியில் கொழும்பில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று மீண்டும் தமது வீட்டுக்கு வருகை தந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்ததுடன், முச்சக்கர வண்டியில் பின்பக்கம் இருந்த அவரது மனைவியும், மனைவியின் சகோதரரும் சிறிய காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பஸ்தரை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு தொடர்ந்தும் மூன்று வாரங்கள் சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த இளம் குடும்பஸ்தர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னிலங்கை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய மாணவியின் மரணம்!!

தெவ்மி ரன்சரா..

மாத்தறையில் மாற்றுத்திறனாளியான மாணவி ஒருவரின் உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது. மாத்தறை, திக்வெல்ல, ரத்மலே பிரதேசத்தைச் சேர்ந்த தெவ்மி ரன்சரா என்ற மாணவி காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவிக்கு இரண்டு கால்களும் ஊனமுற்ற நிலையில் இரண்டு கைகளும் சரிவர செயற்படாத நிலையிலும் கல்வி திறமைப்பட சித்தி பெற்றுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் தோற்ற ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்று உயர்தர கல்வியை தொடர்ந்து வந்தார்.

கணிதப் பிரிவில் உயர்தரம் கற்கும் ஆசையைக் கொண்டிருந்த போதும் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு தகவல் தொழில்நுட்பத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

நடக்க முடியாத அவரை காலையில் பாடசாலைக்கும் மாலையில் வீட்டுக்கும் சுமந்து செல்வது அவரின் பெற்றோருக்கு சுகமான சுமையாகவே இருந்தது.

எழுதும் போது பேனையின் மூடியைக் கழற்றி இன்னொருவர் அவரது கையில் பேனையைக் கொடுக்க வேண்டும். கொப்பியில் ஒரு பக்கத்தை எழுதி முடித்தால் மறுபக்கத்தில் தொடர இன்னொருவர் தான் அந்தத் தாளைப் புரட்டிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறான சிரமங்களுக்கு மத்தியிலும் உயர்தரக் கல்வியை மன உறுதியுடன் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் ஹெரோயினுடன் இளைஞன் அதிரடியாக கைது!!

இளைஞன் கைது..

வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் ஹெரோயினை தனது உடமையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (11.10.2022) காலை மகாறம்பைக்குளம் கண்ணன்கோட்டம் பகுதியில் மடுகந்த விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, இவரை கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து 3 கிராம் 770மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவும், 32 வயதுடைய மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்தவரை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பெண்கள் நரபலி : துண்டு துண்டாக வெட்டி புதைத்த தம்பதி… அதிர்ச்சி சம்பவம்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் திருவில்லா பகுதியில் உள்ள லைலா மற்றும் பகவந்த் சிங் தம்பதிகள் செல்வம் பெருகி பணக்காரராக வாழ ஆசைப்பட்ட நிலையில் இதற்காக ஒரு முகவரிடம் தொடர்பு கொண்டு பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த முகவர் கடந்த 27-ம் திகதி கொச்சி கடவந்திரா பகுதியில் இருந்து ஒரு பெண்ணை கடத்தி வந்து பலி கொடுத்துள்ளனர். கொச்சியில் லொட்டரி டிக்கெட் விற்று வந்த தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மாவை காணவில்லை என அந்த பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கடந்த சிலதினங்களுக்கு பின்னர் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட அந்த பத்மாவின் உடலை பொலிசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இறந்த பத்மாவின் செல்போன் சிக்னலை பின்தொடர்ந்த போது அந்த செல்போன் முகவரிடம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த முகவரை கைது பொலிஅசர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மருத்துவ தம்பதிகளுக்காக பெண்களை நரபலி கொடுத்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் காலடியை சேர்ந்த பெண்ணும் காணவில்லை என புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் காலடியை சேர்ந்த ரோஸாலி மாயமான பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும், நரபலி கொடுக்கப்பட்டு துண்டு துண்டாக வெட்டி திருவாழா நகரின் வெவ்வேறு இடங்களில் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டும் பணியை பொலிசார் தொடங்கியுள்ளனர். இதோடு கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நீங்களும் சட்டத்தரணியாகுவதற்குரிய அரிய சந்தர்ப்பம் IDM Nation Campus வவுனியா வளாகம்

நீங்களும் சட்ட வல்லுநர் ஆவதா?

நீங்களும் சட்டத்தரணியாகுவதற்குரிய அரிய சந்தர்ப்பத்தை IDM Nation Campus வவுனியா வளாகம் உங்களுக்கு வழங்குகிறது . A/L பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கான LLB (Hons.) சிறப்பு சட்டமாணி கற்கை நெறியானது ஆரம்பமாகவுள்ளது.

இக் கற்கை நெறியினை சகல துறை சார்ந்தவர்களும் சட்டமாணி பட்டப்படிப்பை தொடர முடியும். IDM நிறுவனம் 10 வருடங்களுக்கு மேலாக இக்கற்கை நெறியினை சிறப்பாக நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

UGC அங்கீகாரம் பெற்ற சட்ட கற்கைக்கு தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான Buckinghamshire New University, UK ன் மாணவராக இணைந்து 3 வருட கற்கையை பூர்த்தி செய்து LLB (Hons) பட்டத்தை பெற்றுக் கொள்ளுங்கள். இலங்கை சட்டக் கல்லூரியின் முதல் ஆண்டு பரீட்டைக்கான வகுப்புகளை சட்ட விரிவுரையாளர்களை கொண்டு இலவசமாக வழங்கவும் எமது வவுனியா வளாகம் தயாராக இருக்கிறது.

சட்டமாணி கற்கை நெறியினை பூர்த்தி செய்வதன் மூலம் சட்ட ஆலோசகர் , முறைப்பாட்டு அலுவலர் , இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரி , சட்ட அமுலாக்க அதிகாரி , வழக்கறிஞர் . நீதிமன்றத்தில் வழக்காடுதல் , அரச அல்லது வங்கி போன்ற தனியார் நிறுவனங்களில் சட்ட உத்தியோகத்தர் , உறுதி எழுதுதல் , கம்பெனி செயலாளராக செயற்படல் , நீதிசேவைக்குள் உள்வாங்கப்படல் (நீதிபதி ) , கல்வி நிறுவனங்களில் விரிவுரைகள் நடாத்துதல் போன்ற தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம்.

வகுப்புகள் முழுநேரமாகவும் , பகுதி நேரமாகவும் , Online ஊடாகவும் நடைபெறும். இம் மாதம் OCTOBER 16ம் திகதிக்கு முன்னர் உங்கள் பதிவுகளை நேரடியாகவும் Online ஊடாகவும் மேற்கொள்ளலாம்.

நுழைவுத் தகைமை Start with your A/L AND Start with your Any Degree Qualifications. தொடர்புகளுக்கு Legal Studies Department, IDM Nations Campus, North Regional Campus, Vavuniya. விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள 076 0970955 / 024 2222313 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்கவும்

இது ஓர் கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரமாகும்

பஸ் ஸ்டாப்பில் பள்ளி சீருடையில் 12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!!

கடலூரில்..

சீருடையில் இருக்கும் பள்ளி மாணவிக்கு சிறுவன் மஞ்சள் தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பள்ளி மாணவிக்கு சிறுவன் தாலி கட்டும் வீடியோவுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக மாவட்டம் கடலூரில் சீருடையில் இருக்கும் பள்ளி மாணவிக்கு சிறுவன் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது.

சிறு சிறு கிராமங்களுக்கு செல்வதவற்கான சிற்றுண்டி பேருந்து நிறுத்தமாக இது செயல்பட்டு வருகிறது. இதன் நிழற்குடையில் வடகரிராஜபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவன் ஒருவன்,

வெங்காயத்தலமேடு எனும் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். காலேஜ் மாணவிகள் பரவாயில்லை ஆனால் பள்ளி மாணவிகள் நிலை மோசம் ஆகிரது பெற்றோர்கள் மாணவிகளின் ஸ்கூல் பேக் & மொபைலை பெற்றோர்கள் கண்காணிக்கவும்.

மஞ்சள் கயிறு தாலியை அவர் கட்டும்போது அவரது நண்பர்கள் அவரை உற்சாகமூட்டி வீடியோ எடுக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

href=”https://t.co/BUdtkbCGVq”>pic.twitter.com/BUdtkbCGVq

— SP Chhandak (@CHHANDAK175) October 10, 2022

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

125 உணவுகளுடன் வருங்கால மருமகனை மிரள வைத்த விருந்து!!

இணையத்தில்..

இணையத்தில் அவ்வப்போது வைரலாகும் விஷயங்களை நாம் அறிய வரும் போது, அது மனதுக்கு மிகவும் நெருக்கமாக நம்மை ஒருவிதமாக நெகிழவும் வைக்கும். அந்த வகையில் ஒரு செய்தி தான், தற்போது இணையத்தில் அதிகம் ரவுண்டு அடித்து வருகிறது.

பொதுவாக, பண்டிகை சமயங்களில் தங்களின் மருமகனுக்கு மாமியார் சார்பில் விருந்து கொடுக்கப்படுவது என்பது பல தரப்பு மக்களால் இயல்பாக நடத்தப்பட்டு வரும் ஒரு விஷயம் தான்.

ஆனால், அப்படிப்பட்ட விருந்தினை வேற லெவலுக்கு எடுத்துக் கொண்டு சென்றுள்ளார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாமியார் ஒருவர். ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜய நகரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா – சுப்புலட்சுமி தம்பதியின் மகன் சைதன்யா.

இவருக்கும் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாச ராவ் – தனலட்சுமி ஆகியோரின் மகளான நிஹாரிகா என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சைதன்யா மற்றும் நிஹாரிகா ஆகியோருக்கு திருமணம் நடத்தவும் குடும்பத்தினர் நிச்சயம் செய்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து வருங்கால மருமகனான சைதன்யாவுக்கு தசரா பண்டிகையை முன்னிட்டு விருந்து கொடுத்துள்ளார் நிஹாரிகாவின் தாயான தனலட்சுமி. அது மட்டுமில்லாமல், இதனை வழக்கம் போல ஒரு விருந்தாக மாற்றாமல், பிரம்மாண்ட விருந்தாகவும் ஏற்பாடு செய்துள்ளார் தனலட்சுமி.

மொத்தம் 125 உணவு வகைகளை ஸ்பெஷல் விருந்தாகவும் அவர் ஏற்பாடு செய்திருந்துள்ளார். இதில் 95 வகையான உணவுகளை பிரத்யேகமாக ஆர்டர் செய்த மாமியார் தனலட்சுமி, மீதமுள்ள 30 உணவு வகைகளை வீட்டிலேயே தயார் செய்து விருந்தளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

உணவு, பலகாரம் என மொத்தம் 125 வெரைட்டிகளை பார்த்ததும் மருமகனான சைதன்யா ஒரு நிமிடம் மிரண்டே போனார். இதில், பல உணவு வகைகளை சைதன்யாவால் சாப்பிடவே முடியவில்லை என தகவல் தெரிவிக்கும் நிலையில், அதில் பலவற்றை தற்போது தான் கேள்விப்படுவதாகவும் சைதன்யா குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைத்தும் சுவையாக இருந்ததாகவும் சைதன்யா தெரிவித்துள்ளார்.

4வது திருமணம் ஆன 4 மாதத்தில் காணாமல் போன புதுப்பெண் : விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

சேலத்தில்..

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அமைந்துள்ள அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். டிப்ளமோ படித்துவிட்டு மளிகை கடை ஒன்றை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

சமூக வலைத்தளம் மூலம் சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சரண்யா என்பவரிடம் ஸ்டீபன் பேசி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் சரண்யா மற்றும் ஸ்டீபன் ஆகியோருக்கு இடையே இருந்த பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறி உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை திருமணம் செய்யுமாறு ஸ்டீபனிடம் சரண்யா வற்புறுத்த, இது பற்றி தனது குடும்பத்தினரிடமும் ஸ்டீபன் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட ஸ்டீபனின் பெற்றோர்கள் சரண்யாவை மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, கடந்த மே மாதம் 26 ஆம் தேதி, வாழப்பாடி அருகே உள்ள கோவில் ஒன்றில் வைத்து ஸ்டீபன் – சரண்யா திருமணம் நடந்துள்ளது.

கடந்த நான்கு மாத காலம் ஸ்டீபன் வீட்டில் வசித்து வந்த சரண்யா, அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று சில நாட்கள் கழித்து திரும்பி வருவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி ஸ்டீபனின் பெற்றோர்கள் சரண்யாவிடம் கேட்டபோது உறவினர்கள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறியுள்ளார் சரண்யா.

இதனிடையே திடீரென வீட்டில் இருந்து சரண்யா மாயமான நிலையில், செல்போனில் அவரை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என்றும் வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் 2 லட்ச ரூபாய் பணமும் திருடு போயுள்ளதும் தெரிய வந்தது.

இதனிடையே சரண்யாவை பல இடங்களில் ஸ்டீபன் தேடிய பிறகும் அவர் எங்கேயும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் ஸ்டீபனின் தந்தை இது தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பின்னர் சரண்யாவின் செல்போனை வைத்து அவர் சேலத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேரடியாக சென்று சரண்யாவை அழைத்து வந்த போலீசார், அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது சரண்யா சொன்ன தகவல், அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. அப்போது சரண்யாவுக்கு ஏற்கனவே பன்னீர்செல்வம் என்றவருடன் திருமணம் நடைபெற்றதாகவும், அதில் மூன்று மகன்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் மூத்த மகனுக்கு திருமணம் நடைபெற்று சரண்யாவுக்கு பேரப்பிள்ளைகளும் இருப்பது தெரிய வந்துள்ளது.

முதல் கணவரிடம் இருந்து பிரிந்த சரண்யா, சென்னை, கோவை உள்ளிட்ட சேர்ந்த பகுதியை சேர்ந்த நபர்களை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து தான், ஸ்டீபனிடம் பேசி அவரை திருமணம் செய்து தலைமறைவான போது போலீசில் சிக்கி உள்ளார்.

பலரை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணம் திருடி சென்ற சரண்யா மற்றும் அவரது தாய் மாமனாக நடித்த கோவை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திலும் போலீசார் ஆஜர்படுத்தி உள்ளனர். நான்கு பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் தொடர்பான செய்தி தற்போது பலரது மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

படுக்கையறையில் சடலமாக தொங்கிய கணவன், மனைவி : சிக்கிய உருக்கமான கடிதம்!!

ஓசூரில்..

ஒசூர் அருகே கடன் பிரச்சினையால் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியில் கொழும்பு ஸ்டோர் என்னும் மளிகை கடையை நடத்தி வந்தார் சிவக்குமார் (49).

இவருக்கு கிருஷ்ணவேணி என்கிற மனைவியும் ராஜதர்சினி (7),ஷிவானி (5) என்கிற இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.சிவக்குமார் கடன் பிரச்சனையில் சிக்கி மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை சிவக்குமார் படுக்கை அறையிலிருந்து வெளியே வரவில்லை. அவரது மனைவி கிருஷ்ணவேனியும் வராமல் கதவு உள் தாழிடப்பட்டிருந்ததால் அவர்களது பிள்ளைகள் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தனர்.

அதன் பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு போலீசார் வந்தனர். அவர்கள் படுக்கையறையை உடைத்து பார்த்தபோது இரண்டு மின்விசிறிகளில் தனித்தனியாக இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருப்பது தெரிய வந்தது.

பெற்றோர் சடலமாக தொங்குவதை பார்த்த பிள்ளைகள் இருவரும் கதறி துடித்து அழுதது அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.

இதனை அடுத்து கணவன் – மனைவி சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காலில் விழாத குறையாக கெஞ்சியும் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணுக்கு நடுவீதியில் நடந்த விபரீதம்!!

ஆந்திராவில்..

காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை நடுரோட்டில் வைத்து பொதுமக்கள் மத்தியில் கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள குர்ராடா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசூரிய நாராயணா(30). இவர் அதேபகுதியை சேர்ந்த தேவகி என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால், இவரது காதலை தேவகி ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும், வெங்கட சூரியநாராயணா இளம்பெண்ணிடம் தனது காதலை ஏற்க வேண்டும் என விடாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், தேவகி நேற்று முன்தினம் தனது ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வெங்கட சூரியநாராயணா சாலையில் குறுக்கிட்டு தேவகியை நிறுத்தி காதல் குறித்து மீண்டும் பேசினார். தனது காதலை ஏற்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

ஆனால், தேவகி இதற்கெல்லாம் பயப்படுபவள் நான் இல்லை. நீ என்னை கொலை செய்தாலும் உனது காதலை ஏற்கமாட்டேன் என உறுதியாக கூறினார். இதனால், இருவருக்கும் நடுரோட்டில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த வெங்கட சூரியநாராயணா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தேவகியின் கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த தேவகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் வெங்கட சூரிய நாராயணாவை பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ரத்த வெள்ளத்தில் தேவகி மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்த பொதுமக்கள் வெங்கட சூரிய நாராயணாவை பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்கினர். ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த தேவகியை ஆம்புலன்ஸ் மூலம் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத் துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெத்தபூடி போலீசார் அங்கு சென்று வெங்கட நாராயணாவை கைது செய்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.