எனது பிள்ளை எனக்கு வேண்டாம் : யாழில் 15 வயது மகனை பொலிஸில் ஒப்படைத்த தாய்!!

யாழில்..

“எனது பிள்ளை எனக்கு வேண்டாம்” என்று கடிதம் எழுதிக் கொடுத்து தனது 15 வயது மகனை யாழ்., சுன்னாகம் பொலிஸில் தாயார் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.

]

உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளுக்கு தனது மகன் அடிமையானவன் என்றும் தனக்கு அவன் தேவையில்லை என்றும் பொலிஸாரிடம் எழுத்துமூலம் கடிதம் எழுதி தாயார் ஒப்படைத்துள்ளார்.

இதன் பின்னர் மாணவன், சிறுவர் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டான். அச்சுவேலியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் சேர்க்குமாறு நீதிவான் பணித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் உயிர்கொல்லி ஹெரோயின் பாவனையில் அதிகளவான மாணவர்கள் சிக்குண்டுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் தாமாக சுயவிருப்பில் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘என் காதலனை ஒன்றும் செய்யாதீர்கள்’ என உருக்கமான வீடியோவை வெளியிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

ஏஞ்சல்..

சென்னை மாதவரம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஏஞ்சல். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், தனுஷ் என்பவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு இருவீட்டரும் சம்மத தெரிவித்ததுடன், திருமணம் செய்து வைக்கும் முடிவுக்கும் வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காதலர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து காதலன் தனுஷ் நேற்றைய தினம் வேறொரு பெண்ணின் புகைப்படத்தை ஏஞ்சலுக்கு அனுப்பியுள்ளார். மேலும் அந்த பெண்ணை காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஏஞ்சல் செல்போனில் தனுசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் விரக்தியடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் ஏஞ்சலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது ஏஞ்சல் பதிவு செய்து வைத்திருந்த வீடியோவில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும்,

காதலன் தனுஷை யாரும் தாக்க வேண்டாம் என்றும் கூறியிருப்பது தெரிய வந்தது. செல்போன் ஆதாரங்களைக் கொண்டு தனுஷை பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் படிப்படியாக குறையும் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

இலங்கையில் தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. எனினும் , உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 605,616 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் சிறு உயர்வு காணப்பட்டாலும், கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை வீழ்ச்சியில் செல்கின்றது.

மேலும், கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 156,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,600 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என கூறப்படுகின்றது. இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு!!

சமையல் எரிவாயு..

எரிவாயு கொள்கலனின் விலையை குறைக்க லாஃப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் புதிய விலை 5300 ரூபாவாகும். அத்துடன், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 2120 ரூபாவாகும்.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் லிட்ரோ நிறுவனமும் எரிவாயு கொள்கலனின் விலையை குறைத்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக குழந்தை பெற்றாரா நயன்தாரா? சர்ச்சையை ஏற்படுத்திய நடிகையின் பதிவு!!

சினிமாவில்..

திருமணமாகி நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்த விக்னேஷ் சிவன் – நயன்தாராவுக்கு டுவிட்டர் பக்கத்தில் சோக் கொடுத்துள்ளார் நடிகை கஸ்துாரி. இவரது பதிவு தற்போது பலரை யோசிக்க வைத்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் காதலித்து வந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிகள் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இதற்கு சினிமா வட்டாரங்கள் உள்ளிட்டு முழு உலகத்திலுள்ள நயன் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். சமீபக்காலமாக இவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள போவதாக பதிவுகளை பதிவிட்டு அதனை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.

இதன்படி தற்போது இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்து பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த குழந்தைகள் வாடகை தாயின் மூலம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு நடிகையும் சட்டதரணியுமான கஸ்துாரி, இது தொடர்பான பதிவொன்றை பகிர்ந்துள்ளார். பதிவில், “மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், நயனுக்கு ஏதும் நோய் இருக்கிறதா? மற்றும் நயன்தாரா தடையை மீறி குழந்தை பெற்றுக்கொண்டாரா? என்று கேள்வியெழுப்பி வருகின்றனர்.

இலங்கைப் பெண் ஜனனியின் யாரும் அறியாத மறுபக்கம் : பிக்பாஸிற்குள் வந்தது எப்படி?

பிக் பாஸில்..

விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸில் இலங்கையை சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கம். இதன்படி லொஸ்லியாவிற்கு பிறகு பிக்பாஸ் சீசன் 6 ல் மற்றுமொரு இலங்கை பெண்ணாக ஜனனி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கை பெண்ணான ஜனனி பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள நிலையில், இலங்கை மக்களின் ஆதரவும் குவிந்து வருகின்றது. பொதுவாக பிக் பாஸ் என்றாலே குழந்தை வரைக்கும் பிரபல்யமான ஒரு போட்டி. இந்த போட்டிக்கு போட்டியாளராவது என்பது மிக அரிதான ஒரு விடயம்.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் நுழைந்த யார் இவள்? இவ்வளவு அழகின் சிலை எங்கிருந்து வந்துள்ளது? என்று மக்களிடம் எழும் கேள்விக்கு பதிலளிக்கிறது இந்த படைப்பு.

ஜனனி குணசீலன் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்துள்ளார், இவருக்கு தற்போது 21 வயது தான் ஆகிறது. இந்நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் இலங்கை மக்களின் கதாநாயகியாகவும் திகழ்ந்து வருகிறார்.

இவர் ஆரம்பத்தில் டிக்டாக் மூலம் சமூக வலையத்தளங்களில் பிரபலமாகியதோடு, சில குறும்படங்களிலும் நடித்ததுடன், ஐபிசி தமிழ் சேனலில் தொகுப்பாளராக இருந்தார்.

இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 18.3k பின் தொடர்கின்றனர். மேலும் இவர் இலங்கையில் ஒரு மாடலாகவும் இருந்து வருகிறார். இலங்கையில் பூர்வீக வழியில் வேரூன்றிய வலுவான தமிழ் பின்னணியில் இருந்து வந்தவர்.

புகழ்பெற்ற தமிழ் சினிமா மற்றும் சிறிய திரை தொலைக்காட்சி துறையில் நன்கு அறியப்பட்ட கலைஞர்களுடன் ஜனனி போட்டியிட்டு நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என நம்பப்படுகிறது. லாஸ்லியாவை போல தற்போதே ஜனனிக்கு ஆர்மி தொடங்கிவிட்டார்கள். அவரது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சடலத்துடன் 4 மாதங்கள் தங்கி இருந்த பேரன் : பாட்டியை கொலை செய்ய உடந்தையாக இருந்த தாய்!!

பெங்களூரில்..

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கெங்கேரி சாட்டிலைட் டவுன் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் வாசுதேவ் (27). இவர் தனியார் நிறுவனத்தின் பணியாற்றி வந்துள்ளார். வாசுதேவுடன் அவரது அம்மா மற்றும் தந்தையின் அம்மா (பாட்டி) இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2017ம் இவர் வசித்து வந்த வீட்டில் இருந்து திடீரென்று வீட்டை விட்டு வெளியேறி, வெளிப்புறம் பூட்டிவிட்டு கிளம்பியுள்ளார். வீட்டின் உரிமையாளர் ஃபோன் செய்து வாசுதேவிடம் பேசியுள்ளார். அதற்கு அவசர வேலையாக சொந்த ஊருக்கு வந்திருகின்றோம்; அடுத்த மாதம் வந்துவிடுவதாக கூறியுள்ளார்.

ஆனால் ஒருமாதத்திற்கு மேல் ஆகியும் வாசுதேவ் வராததால், மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை. வீட்டின் வெளியே பூட்டி இருந்ததால், வீட்டின் உரிமையாளரும் உள்ள செல்லமுடியாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு வீட்டில் இருந்து துருநாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளேச் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டில் இருந்த அலமாரி ஒன்று திறக்கமுடியாத வகையில் சிமிண்ட் கொண்டு பூசப்பட்டிருந்தது. அதனை உடைத்து பார்த்தபோது, வாசுதேவின் பாட்டி அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து போலிஸார் உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து வாசுதேவ் மற்றும் அவரது அம்மாவைத் தேடி வந்தனர்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், மகாராஷ்டிராவில் பதுங்கி இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிராவுக்குச் சென்ற போலிஸார் அங்கு தேடியும் கிடைக்காத நிலையில் மீண்டும் கர்நாடகா திரும்பினர்.

இந்நிலையில், 5 வருடங்களுக்கு பிறகு வாசுதேவ் பற்றிய தகவல் கிடைக்கவும் மீண்டும் பெங்களூரில் இருந்து போலிஸார் மகாராஷ்டிரா சென்றுள்ளார். அங்கு வாசுதேவ் மற்றும் அவரது அம்மாவையும் கைது செய்து அழைத்து வந்து விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில் பகீர் தகவல் தெரியவந்துள்ளது. வாசுதேவின் பாட்டி பழைய சம்பிரதாயங்களை பின்பற்றுவதால் வீட்டில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. மேலும் கடையில் வாங்கிய உணவை கொண்டுவந்து சாப்பிடக்கூடாது என திட்டியுள்ளனர்.

இதனால் பாட்டின் மீது வாசுதேவ் கோவமாக இருந்தநிலையில் பாட்டி மீண்டும் வாசுதேவிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாசுதேவ் இரும்புக் கம்பியால் பாட்டியை அடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

வெளியே தெரிந்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து பாட்டியை அலம்பாரியில் வைத்து சிமிண்ட் வைத்து பூசியுள்ளனர். பின்னர் 4 மாதங்கள் அதேவீட்டில் வசித்தும் வந்துள்ளனர். துருநாற்றம் வீசவில்லை என்பதால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர் எனத் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகள் இந்த காரியத்தை செய்திருப்பாளோ… பயத்தில் இருந்த மொத்த குடும்பமும் எடுத்த விபரீத முடிவு!!

பெங்களூரில்..

மகள் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்ய ஓடி போய்விட்டாள் என பயந்து மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீராமப்பா (69), இவர் மனைவி சரோஜா (55), மகன் மனோஜ் (25), மகள் அர்ச்சனா (28). அர்ச்சனாவை காணவில்லை என ஸ்ரீராமப்பா சமீபத்தில் பொலிசில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா வேறு சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொள்ள அவருடன் வீட்டை விட்டு ஓடி போயிருக்கலாம் என குடும்பத்தார் பயந்துள்ளனர்.

இந்த பயம் மற்றும் விரக்தியில் மூவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர்.இறப்பதற்கு முன்னர் எழுதியிருந்த தற்கொலை கடிதத்தில் அர்ச்சனா தான் தங்கள் மரணத்திற்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது.

பொலிசார் கூறுகையில், இளைஞர் ஒருவருடன் அர்ச்சனா மூன்றாண்டுகளாக காதலில் இருந்துள்ளார்.அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயன்று வருகிறோம், விசாரணைக்கு பின்னரே முழு தகவல்கள் வெளிவரும் என கூறியுள்ளார்.

‘I LOVE U’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் மாவட்டம் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஹரி பாபு இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சுஜிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதல் திருமணம் செய்து கொண்ட ஹரிபாபு , அவரது இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் வந்த ஹரிபாபு செங்கல்பட்டு- தாம்பரம் செல்லக்கூடிய ரயில் முன் பாய்ந்துள்ளார்.

இதனை கண்ட சக பயணிகள் செங்கல்பட்டு இரும்பு பாதை காவலர்களுக்கு தகவல் தெரிவிக்க, ரத்த வெள்ளத்தில் இருந்த ஹரிபாபு வை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

”சுஜி நான் எந்த தப்பும் பண்ணல உனக்கு இதுவரைக்கும் துரோகமும் பண்ணல( ஐ லவ் யூ). சாதனா/ தன்விகா சாரி டா செல்லம் உங்கள விட்டு அப்பா ரொம்ப தூரம் போர. என் சாவுக்கு காரணம் என் பொண்டாடியோட அம்மா தான் என் பொண்டாடி என் குழந்தைகளை அவங்க கூப்பிட்டு போய்ட்டாங்க. என்னுடைய கடைசி ஆசை என்னுடைய சொத்து என் மகள்களுக்கு செல்ல வேண்டும்.

போலீசார் எனக்கு உதவி பன்னுங்க, இந்த உலகில் வாழ எனக்கு கொடுத்து வைக்கவில்லை” என உருக்கமான கடிதத்தை எழுதிவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் . நான்கு பக்கங்கள் கொண்ட தற்கொலை கடிதத்தை காவல்துறையினர் கைது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்பொது உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காதல் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

வாகனங்களின் விலை..

சந்தையில் வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

கோவிட் வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக இலங்கை கடுமையான பாதிப்புகளை சந்தித்திருந்தது. இந்த நிலையில் பொருளாதார பாதிப்பிலிருந்து மீளும் முகமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி வாகன இறக்குமதிக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இலங்கையில் வாகனங்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்திருந்தன. இந்த நிலையிலேயே சந்தையில் தற்போது வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்ஜிகே கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அதிகரித்த வட்டி வீதம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாகவே வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

வாகனங்களின் விலை குறைவடைந்த போதிலும் உதிரிபாகங்கள், வாகன திருத்தம் மற்றும் பழுதுபார்த்தல் என்வற்றுக்கான கட்டணங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளிலும் வீழ்ச்சி
இவ்வாறானதொரு சூழலில் வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளும் குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கடந்த 2020ஆம் ஆண்டு வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் குறிப்பிடப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஒரே வீட்டில் அண்ணன் – தம்பி இருவரும் அடுத்தடுத்து தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சோகம்!!

நெல்லையில்..

தம்பியை கண்டித்ததால் தூக்கிட்டு தம்பி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அண்ணனும் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம், மானூர் அருகே அய்யூப்கான் புரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மனைவி செல்லத்தாய், இவர்களுக்கு சுடலைமணி (25), நாராயண பெருமாள் (15) என்ற இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

அய்யாதுரை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில் செல்லத்தாய் கூலி வேலை பார்த்து வந்தார். அண்ணன் சுடலைமணி வேன் டிரைவராக பணியாற்றி வரும் நிலையில் அவரது சகோதரர் சிறுவன் நாராயண பெருமாள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் சிறுவன் நாராயண பெருமாள் தனது நண்பர்களுடன் சேர்ந்து சில தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனை அறிந்த அண்ணன் சுடலைமணி தம்பியை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நாராயண பெருமாள் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த சுடலைமணி தன்னால் தான் தனது தம்பி தற்கொலை செய்து கொண்டார் என்ற மன வேதனையில் வீட்டின் முற்றத்தில் உள்ள தகரக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த மானூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையை இழந்த நிலையில் அண்ணன், தம்பி இருவரையும் அவர்களது தாய் செல்லத்தாய் கவனித்து வந்துள்ளார்.

குடும்ப சூழ்நிலை அறிந்து மூத்த மகன் சுடலைமணி கூலி வேலை பார்த்து தனது தாய்க்கு உதவியாக இருந்துள்ளார். இந்த நிலையில் மகன்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் தாய் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்தது.

காற்சட்டைக்குள் கமரா : இலங்கையில் பேருந்து நடத்துனரின் இழிவான செயல்!!

காற்சட்டைக்குள் கமரா..

காற்சட்டைக்குள் கமெராவை ம.றைத்து வைத்து பெ.ண்களை படம் பிடித்த நபரை பிடபெத்தர பொலிஸார் கை.து செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அச் சந்தேக நபர் பேருந்து நடத்துனராக பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்ட கால்சட்டையின் கீழ் பகுதியில் சந்தேக நபர் இந்தக் கமெராவை பொருத்தி அதன் மூலம் அவர் பெண்களை தேவையில்லாமல் காணொளி எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிடபெத்தர பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. மேலும் சந்தேக நபரை மொரவக்க நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையில் செல்லப் பிராணிக்கு இறுதிச் சடங்கு : சோகத்தில் குடும்பத்தினர்!!

செல்லப் பிராணிக்கு இறுதிச் சடங்கு..

பெற்றோரைக் கூடக் கவனிக்காத பிள்ளைகள் இருக்கும் சமூகத்தில் வீட்டில் இருக்கும் நாய்களைத் தங்கள் பிள்ளைகளைப் போல நேசிக்கும் மனிதர்களும் இவ் உலகில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கையில் தமது இறந்த நாய்க்கு இறுதி சடங்குகளை அண்மையில் ஒரு குடும்பத்தினர் செய்துள்ளனர். இச் சம்பவம் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இது குறித்து நாயின் உரிமையாளரான விந்தியா சித்தாரிகா பெர்னாண்டோ தெரிவித்ததாவது, லீசா (இறந்த நாயின் பெயர்) ஒரு விலங்கு அல்ல,அது ஒரு குழந்தை .

வீட்டின் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த லீசா இறந்தவுடன் என் குடும்பத்தார் தொலைபேசியின் ஊடக அழைத்து இது குறித்து எனக்கு தெரியப்படுத்தினர்.

அதனை தொடர்ந்து ஒரு குழந்தை இறந்தால் செய்யப்படும் மத ரீதியான இறுதி சடங்குகள் லீஸாவிற்கும் செய்யப்பட வேண்டும் என கூறினேன்.

இன்று இவ்வுலகை விட்டு சென்ற லீசாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறோம் என குடும்பத்தினர் கண்ணீருடன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் .

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடிய கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

உளுந்தூர்பேட்டையில்..

உளுந்தூர்பேட்டை அருகே பா.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகாலெட்சுமி தம்பதியின் குடும்பம். வழக்கம் போல் குடும்பத்துடன் இரவு உறங்கி காலையில் எழுந்த போது மனைவி அம்சலேகா வீட்டில் இல்லை.

கணவன் ஏழுமலை பதற்றத்துடன் அங்குமிங்கும் தேடிய நிலையில் வீட்டுக்கு பின்னால் உள்ள புளிய மரத்தில் அணிந்திருந்த புடவையால் தூக்கில் சடலமாக மனைவி தொங்கி கொண்டிருந்தார்.

மனைவியின் மரண கோலத்தை கண்டு ஏழுமலை கதறினார். மண்ணில் புரண்டு அழுதார். மனைவியின் கால்களை பிடித்துக்கொண்டு ஓலமிட்டார். ஊர்மக்கள் ஓன்று திரண்டு கணவனை சமாதனம் செய்து மனைவியின் உடலை போலிசார் உதவியுடன் உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அம்சலேகாவின் தந்தை புகார் அளிக்கவே திருநாவலூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கை மாற்றிப் பதிவு செய்தனர்.

போலிசாரின் முதல் சந்தேகம் ஓவர் சீன் போட்ட கணவனின் பக்கம் தான் திரும்பியது. அவரிடம் நடத்திய கிடுக்கிப்படி விசாரணையில் மகாலெட்சுமியின் மர்ம மரண முடிச்சு அவிழ தொடங்கியது. ஏழுமலைக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது.

இதையறிந்த அம்சலேகா கணவணுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவ நாள், இரவில் நடைபெற்ற சண்டையின் போது, ஏழுமலை தாக்கியதில் அம்சலேகா மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து கள்ளகாதலி மகாலெட்சுமி மற்றும் அவரது கணவனையும் வீட்டிற்கு வரவழைத்த ஏழுமலை, மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்து புளிய மரத்தில் தொங்க விட்டார். பின்னர் ஏதுவும் நடைபெறாதது போல் வீட்டிற்குள் வந்து படுத்துக்கொண்டார்.

காலையில் மனைவி மரணத்தை தாங்க முடியாதது போல் நடித்து நாடகமாடியும் பலன் இல்லாமல் வசமாக சிக்கிக் கொண்டார். காவல்துறை விசாரணையில் கொலையை ஒப்புக் கொண்ட நிலையில் ஏழுமலை, கள்ளக்காதலி மகாலெட்சுமி, அவரது கணவர் ராஜிவ்காந்தி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இலங்கையை சேர்ந்த சிலர் கனடாவில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி : தமிழக பொலிசார் விசாரணை..!!

சென்னையில்..

இலங்கையை சேர்ந்த சிலர் கனடாவில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக தமிழக பொலிசார் தெரிவித்துள்ளனர். சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஆரோக்கியம்.

இவர், சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், கனடாவில் குடியுரிமையுடன் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளது.

பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து பொலிசார் இதில், இலங்கையை சேர்ந்த,

கயல் லதா, ரமணி, பரமேஸ்வரன், கிருஷ்ணாயாயினி பிரதீன், பிரதீபன், சாய்சகாரியா, தீர்கவி ஆகியோர் கனடாவில் வேலை மற்றும் குடியுரிமை பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் ரூ.52 லட்சத்துக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த நடேஷ்வரி (45) என்ற பெண் முக்கிய ஏஜெண்டாக செயல்பட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து போலி ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வவுனியா வைத்தியசாலையில் இறந்த சிசு : திடீர் முற்றுகைப் பிரிவினர் விசாரணை!!

வவுனியா வைத்தியசாலையில்..

வவுனியா வைத்தியசாலையில் பிறந்து இறந்த சிசு தொடர்பில் திடீர் முற்றுகை பிரிவினர் 3 தினங்கள் தங்கி நின்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் பிரசவித்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களின் பின் உயிரிழந்தது. குறித்த மரணத்திற்கு வைத்தியசாலையின் கவனயீனமே காரணம் என தெரிவித்து பாதிக்கப்பட்ட தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்த சுகாதாரஅமைச்சின் கீழான திடீர் முற்றுகை பிரிவினர் மூன்று தினங்கள் தங்கியிருந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைவாக கடந்த 5,6,7ஆம் திகதிகளில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் பதிவுகள், ஆவணங்களையும் சோதனை செய்துள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்ட தாயை வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சுமார் 6 மணிநேரம் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

குறித்த சோதனை நடவடிக்கையில் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த திடீர் முற்றுகை பிரிவினர் வைத்தியசாலையிலுள்ள தாதியர்கள், வைத்தியர்கள், பொதுமக்கள், பணியாளர்கள், தாதிய பரிபாலகரின் கையொப்பம் அடங்கிய முக்கிய ஆவணங்கள், சிசு மரணமடைந்த போது கடமையில் இருந்தோர் விபரங்கள் என்பவற்றை பரிசோதித்துள்ளனர்.

இதேவேளை தனது குழந்தையின் மரணத்திற்கு குறித்த விசாரணை முடிவில் தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாக பாதிக்கப்பட்ட தாயார் தெரிவித்துள்ளார்.