சென்னையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தாய் மற்றும் 6 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா நகர், என். எஸ். கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூங்குழலி.
இவர் தனது 6 மாத குழந்தையுடன் , தங்களுக்குச் சொந்தமான ஸ்டிக்கர் கடைக்குப் பூஜை போடுவதற்காகச் சாலையில் நடந்து சென்றுள்ளார். இதையடுத்து அவர் அண்ணா நினைவு வளையம் மேம்பாலம் அருகே இன்று அதிகாலை சாலை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று தாய் மீது மோதியது.
இதில் தாய் மற்றும் 6 மாத குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரும், பெண்ணும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் உயிரிழந் தாய் மற்றும் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் போலிஸாரி முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியது என்பது தெரியவந்துள்ளது. அந்த இளைஞர் யார், அவருடன் வந்த பெண் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 5 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைதான நிலையில் அவர் எப்படியெல்லாம் தனது பெயர்களை மாற்றி மோசடி செய்தார் என்பது குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் தீபன் (32). இவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்துள்ளனர். நீண்டகாலமாக பெண் கிடைக்காததால் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன பெண்ணாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள தீபன் முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து தன்னை விட வயதி மூத்தவரான அருள்ஜோதி (36) என்பவரை ஒரு மாதத்துக்கு முன்பு தீபன் திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது அருள்ஜோதிக்கு, தீபன் 15 பவுன் நகை போட்டுள்ளார்.
திருமணமான ஒரு மாதத்தில் அருள்ஜோதி மாயமான நிலையில் அவர் எங்கே என்பது குறித்து பல இடங்களில் விசாரித்த போது அருள்ஜோதி, தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியும், கணவரை விவாகரத்து செய்து விட்டதாக கூறியும் 5-க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்தது தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த தீபன் பொலிஸ் புகார் அளித்தார். இதையடுத்து பொலிசார் அருள்ஜோதியை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்தி விசாரணையில், அருள்ஜோதி தனது பெயரை கவுசல்யா, சரண்யா என மாற்றிக்கொண்டு 5-க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் தான் அழகாக இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, திருமணத்துக்காக ஏங்கும் ஆண்களை மோசடி வலையில் வீழ்த்தி ஏமாற்றி வந்துள்ளார்.
திருமணம் செய்வதற்கு தன்னிடம் நகைகள் இல்லை என்று கூறி, மணமகனிடம் நகையை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். 4 ஆண்டுகளாகவே அவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அருள்ஜோதிக்கு உடந்தையாக இருந்த அவரது காதலன் ரகுவரன் (32) என்பவரும் கைதாகியுள்ளார்.
கேளடி கண்மணி சிரீயல் நடிகை திவ்யா ஸ்ரீதர் சமீபத்தில் தன் கணவர் அடித்து உதைத்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியது சின்னத்திரையில் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததால் சீரியல் நடிகர் அர்னவ் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டு இருவர் 5 வருடங்களாக லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வந்து வந்தனர்.
பின் அர்னவ் விருப்பத்தின் பேரில் முஸ்லின் முறைப்படியும் இந்து முறைப்படியும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
திருமண புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த திவ்யாவை மிரட்டியுள்ளார் அர்னவ். இதனிடையில் அர்னவ் சக நடிகையுடன் நெருக்கமாக இருப்பதை கண்டு ஷாக்காகி என்ன இது என்று கேட்டுள்ளார் திவ்யா.
தற்போது தன் கணவருடன் அப்பார்ட்மெண்ட்டில் சண்டபோட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் பைத்தியம் பிடித்தது போல் திவ்யா அர்னவிடம் சண்டையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது இளைய சகோதரியை பெண் ஒருவர் கொலை செய்த நிலையில், இதற்கான காரணம் தான் தற்போது பலரது மத்தியில் பகீர் கிளப்பி உள்ளது. புளோரிடாவின் ஒர்லாண்டோ என்னும் பகுதியில் வசித்து வருபவர் பாத்திஹா மர்சான் (வயது 21).
இவரது சகோதரியின் பெயர் சய்மா (வயது 20). இவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த ஐந்து ஆண்டுகளாக இளைஞர் ஒருவரை பாத்திஹா காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்படி இருக்கையில், தனது காதலர் மற்றும் சகோதரி சய்மா ஆகியோருக்கு இடையே ஒரு பழக்கம் இருந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆன்லைன் மூலம் கேம் விளையாடும் போது, பாத்திஹாவின் காதலர் மற்றும் சய்மா ஆகியோர் அதிக நேரம் செலவழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
சய்மாவை தான் நேசிப்பதாகவும் பாத்திஹாவிடம் அவரது காதலர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, தனது சகோதரி மீது கடும் கோபத்திலும் பாத்திஹா இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல், ஒரு படி மேலே சென்று சகோதரியை கொலை செய்யவும் அவர் முடிவு எடுத்துள்ளார்.
இதற்காக திட்டம் போட்டு வந்த பாத்திஹா, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து ஆயுதம் ஒன்றையும் வாங்கி தனது வீட்டில் மறைத்து வைத்துள்ளார். மேலும், பாத்திஹா மற்றும் சய்மா ஆகியோர் ஒரே அறையில் தூங்குவார்கள் என்பதால், அதிகாலை வேளையில் பயங்கர முடிவு எடுத்துள்ளார் பாத்திஹா.
வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், சகோதரி சய்மாவை ஆயுதம் கொண்டு தாக்கி உள்ளார் பாத்திஹா. அப்போது கண் விழித்து கொண்ட சய்மா, வேதனையில் கத்தியதாகவும் உதவிக்கு அழைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில், சம்பவ இடத்திலேயே சய்மா உயிரிழந்தார்.
தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சய்மாவின் உடலை மீட்டனர். இதன் பின்னர், பாத்திஹாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சகோதரியை கொலை செய்த பின்னர், தானும் விபரீத முடிவு எடுக்க நினைத்திருந்ததாக பாத்திஹா குறிப்பிட்டுள்ளார்.
தனது காதலனுடன் அதிகம் நெருங்கி பழகியதன் பெயரில், உடன் பிறந்த சகோதரியே இளம்பெண்ணை கொலை செய்த விஷயம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய தினம் 6.30 மணிக்கு மிகவும் பிரமாண்டமாக ஆரம்பமாகியுள்ளது.. இந்த நிகழ்ச்சிக்கு இலங்கையைச் சேர்ந்த ஜனனி என்பவரும் கலந்து கொண்டுள்ளார்.
இதனால் இலங்கை மக்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இவரது முழுப்பெயர் ஜனனி குணசீலன். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் மொடலிங் துறையில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்கின்றார்.
இதனால் சில விளம்பரங்களில் கூட நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல முதல் ஓர் வீடியோ ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.
அதில் அவர் கூறியதாவது, அனைவருக்கும் வணக்கம் நான் பிக்பாஸ் ஷோவுக்குள்ள போகப்போறன். நான் உலகத் தமிழர்கள் அனைவரும் எனக்கு சர்ப்போட் பண்ணுங்க. நான் உலகத்தில இருக்கிற அனைத்து தமிழர்களை நம்பித்தான் இந்த ஷோவுக்குள்ள போறன்.
நான் கொஞ்சம் சின்ன பிள்ளை ஏதாவது தப்பு பண்ணினால் மன்னிச்சுக் கொள்ளுங்க. முடிந்தவரை உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருப்பேன் என்றும் தெரிவித்து ஓர் வீடியோவை பதிவு செய்துள்ளார்.
கொல்லம் சடையமங்கலத்தில் வீட்டில் பிரசவித்த பெண் மற்றும் அவரது குழந்தை உயிரிழந்துள்ளது. கேரளாவின் கொல்லம் அருகே கல்லிக்காட்டைச் சேர்ந்த அஸ்வதி என்பவர் உயிரிழந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும், ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
நள்ளிரவு 1 மணியளவில் வலி ஏற்பட்டதையடுத்து அஸ்வதி வீட்டில் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த நேரத்தில் குடிக்க தண்ணீர் கேட்டதாகவும், தண்ணீரை குடித்துவிட்டு மயக்கமடைந்து அவல் விழுந்ததாகவும் கணவர் அனில் கூறியுள்ளார். தொடர்ந்து சிறிது நேரத்தில் குழந்தை இறந்துள்ளது. அனில் அதிகாலையில் அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அஸ்வதி ஐந்து மாதங்களுக்கு முன்பு வரை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அதன் பிறகு வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். முன்னதாக அஸ்வதி வீட்டில் பிரசவம் பார்த்ததாகவும், குழந்தை இறந்ததாகவும் அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அஸ்வதி மற்றும் குழந்தையின் உடல்கள் பாரிப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுராதபுரம் – கட்டுகெலியாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூரிய ஆயுதத்தால் கழுத்துப் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். 35 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான உதித்த எரன்ன ஜயதிலக்க என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் லோலுகஸ்வெவ பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் நேற்று இரவு மனைவியின் வீட்டில் தங்கியிருந்ததுடன், தனக்கு வந்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் வீட்டை விட்டு வௌியேறிய சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற தகராறே குறித்த கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சில சந்தேகநபர்கள் குறித்த பகுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அன்னா ரேஷ்மா ராஜன். இவர் தனது அம்மாவின் செல்போனிலுள்ள சிம்கார்ட்டில் பிரச்சனை ஏற்பட்டதால் வேறு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்க ஆலுவா பகுதியில் உள்ள நிறுவனத்தின் ஷோரூமுக்கு சென்றுள்ளார்.
பிரபலமானவர் என்பதை பிறருக்கு ஆதாயம் தெரியக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்து, ஷால் கொண்டு தலையில் மூடிக்கொண்டு அங்கு சென்றுள்ளார். ஆனால் அங்குள்ள 25 வயதுடைய பெண் மேலாளர் இவரிடம் முறையாக பதில் கூறாமல் இருந்துள்ளார். இதனால் அவர் குறித்து புகார் அளிக்க அவரை புகைப்படம் எடுத்துள்ளார்.
தன்னை குறித்து புகார் கொடுக்க புகைப்படம் எடுத்ததை உணர்ந்த அந்த மேலாளர் உடனடியாக அங்கிருந்த ஊழியர்களை அழைத்து நிறுவனரின் ஷட்டர்களை மூடுமாறு கூறியுள்ளார். அதன்படி ஊழியர்கள் ஷோரூமின் ஷட்டரை மூடி ரேஷ்மா ராஜனின் கையை பிடித்து இழுத்து அங்கிருந்த சேரில் அமரவைத்துள்ளனர். இதில் ரேஷ்மா ராஜனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து போலிஸாரை தொடர்புகொள்ள முயன்ற ரேஷ்மா ராஜன் அது முடியாததால் தனது தந்தைக்கு நெருக்கமானவர்களிடம் இது தொடர்பாக போனில் அழைத்து கூறியுள்ளார். அதன்படி போலிஸுக்கு தகவல் தெரிவித்த அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.
அதன்பின்னர் போலிஸ் வந்த பின்னர் ஷோரூமின் ஷட்டர் திறக்கப்பட்டு ரேஷ்மா ராஜன் வெளியே அழைத்துவரப்பட்டுள்ளார். இது குறித்து ஆலுவா காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பேசிய ரேஷ்மா ராஜன், “போலீஸ் வரும்வரை இங்கிருந்து வெளியே போக மாட்டேன்’ எனக் கூறி வருத்தத்தில் அழுதுவிட்டேன். அதற்கு என்னிடம் போட்டோவை டெலிட் செய்யும்படி சொன்னார்கள். நானும் போட்டோவை டெலிட் செய்துவிட்டேன்.
காவல் நிலையத்துக்கு வந்த ஷோரூம் ஊழியர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்டனர். ஒருவரை வேலையைவிட்டு நீக்கவைப்பது எளிது. ஆனால் அவருக்கு வேலை வாங்கிக் கொடுப்பது கடினம் என்பதால், நான் அந்தப் பெண் மேலாளரை மன்னித்து விட்டுவிட்டேன்.” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 2 பிள்ளைகளுக்கு தாயான 50 வயது பெண் ஒருவர் தன்னைவிட 23 வயது குறைந்த இளைஞர் மீது காதல் வயப்பட்டார். டேட்டிங் ஆப் ஒன்றில் வயது வரம்பை சரியாக கொடுக்க தவறியதால் அமைந்த புதிய வாழ்க்கை.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், 2 பிள்ளைகளுக்கு தாயான ரேச்சல் கௌடில் (48) 2020 செப்டம்பரில் தனது கணவருடன் விவாகரத்து பெற்ற பிறகு, தனக்கென புதிய வாழக்கையை அமைத்துக்கொள்ள மற்றோரு ஆணை தேடியுள்ளார்.
இதற்காக அவர் பிரபல ஓன்லைன் டேட்டிங் ஆப்களை முயற்சிக்க முடிவு செய்து, தனது சுய விவரங்களை பதிவுசெய்தார். சில மோசமான முயற்சிகள் மற்றும் ஆபாசப் படங்களை அனுப்பிய ஆண்களால் கடுப்பானார்.
ரேச்சல் ஓன்லைனில் தனக்கான புதிய காதலைத் தொடர்ந்து தேடும் போது, Tinder-ல் தனது வயது விருப்ப அமைப்புகளை மாற்ற மறந்துவிட்டதால், ஏதேச்சையாக தன்னை விட 23 வயது இளைஞனான அலெக்ஸ் மைக்கேலை கண்டார்.
அவரது கண்களை பார்த்து உடனடியாக அவர் மீது காதலில் விழுந்த ரேச்சல், அவருடன் சேட் செய்தார். இருவரும் பேச ஆரம்பித்த நிலையில், வயது குறித்த கேள்வி வந்தது.
முதலில் அலெக்ஸ் தனது வயதை 23 என்று முதன்முதலில் வெளிப்படுத்தியபோது, ரேச்சல் அதிர்ச்சியடைந்து, “ஓ, அவர் மிகவும் இளமையாக இருக்கிறது, இது எதுவும் சரிப்பட்டு வரப்போவதில்லை” என்று நினைத்தார்.
ஆனால் இருவருக்கும் இடையில் பேச்சுக்கள் முன்னேறியபோது, அலெக்ஸின் குரல் மிகவும் கவர்ச்சியாக இருந்தது, அது ரேச்சலை கவர்ந்தது. அவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக ரேச்சல் நினைத்தார்.
மருந்து நிறுவனங்களுக்கான இணையதளத்தை உருவாக்கும் பொறியாளரான அலெக்ஸ், டேட்டிங் செயலியான டிண்டரில் தனது விருப்பத்தை மாற்றி அவளுடன் பொருந்தியபோது எதிர்பாராத விதமாக வயது இடைவெளி உறவு ஏற்பட்டது என்பதை வெளிப்படுத்தினார்.
ரேச்சல் தனது வயதுக்கு மீறி அழகாக இருந்ததால், அவருக்கு நாற்பது வயதெல்லாம் இருக்காது என்று நினைத்துள்ளார். ரேச்சல் மிகவும் எளிமையாகவும் உண்மையானவளாகவும் இருந்தார், அழகான முகம் என்பதை விடவும் அவர் அதிகமாக தெரிந்தார் என அலெக்ஸ் நினைத்தார்.
ரேச்சல் நம்பிக்கையாக ஒரு பாய்ச்சலை எடுக்க முடிவு செய்து, அலெக்ஸை சந்திக்க நியூயார்க்கிற்குச் சென்றார். பயணம் சிறப்பாகச் சென்ற பிறகு, அவர்கள் 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மியாமி மற்றும் ஆஸ்டினுக்குச் சென்றனர்.
அந்த நேரத்தை ஒன்றாகச் செலவழித்து, இடங்களுக்குப் பயணம் செய்த பிறகு, இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதை உணர்ந்து, டிசம்பர் 2020-ல் அதிகாரப்பூர்வமாக டேட்டிங் செய்யத் தொடங்கினர்.
அலெக்ஸ் பின்னர் ஜனவரி 2021-ல் ஆஸ்டினுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் கோவிட்-19 தொற்றின் போது வீட்டிலிருந்து பணிபுரியும் போது ரேச்சலுடன் ஒரு வருடம் வாழ்ந்தார். இப்போது ரேச்சலுக்கு 50 வயது, அலெக்ஸுக்கு 25 வயது.
ரேச்சலின் குடும்பத்தினர் முன்வந்து அவர்களது உறவை ஏற்றுக்கொண்டாலும், அலெக்ஸின் குடும்பம் வயது வித்தியாசத்தை ஏற்கவில்லை, அவர்களுக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டனர். ஒரு சர்வதேச பள்ளியின் சைகை மொழி இயக்குநரான ரேச்சலுக்கு, 23 மற்றும் 19 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் கல்லூரி மாணவர் ஒருவர் பாம்புகள் மீது காதல் கொண்டு அதை வளர்த்து பிறகு விற்பனை செய்து அதிகம் பணம் சம்பாதித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காலம் தொடங்கியதில் இருந்து கேரளாவில் செல்லப்பிராணிகள் வளர்ப்பில் நம்பமுடியாத மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி நாய், பூனை வளர்த்து வந்தவர்கள் பலர் வெளிநாட்டு பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.
முக்கியமாக ஆப்பிரிக்க மலைப்பாம்புகள் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில் கன்னூரை சேர்ந்த முகமது ஹிசம் என்ற கல்லூரி மாணவர் பாம்புகளை வாங்கி வளர்த்து அதை விற்பனை செய்து வருகிறார். பாம்பு என்றால் படையே நடுங்கும் என ஒரு வாக்கியம் உண்டு, ஆனால் அந்த பாம்புகள் மீது முகமது கொண்ட காதல் உண்மையில் வியப்பை ஏற்படுத்துகிறது.
இரண்டு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறிய பாம்புகள் பலவற்றை வைத்திருக்கும் முகமது அது போன்ற பாம்புகள் ரூ 25,000ல் இருந்து ரூ 4 லட்சம் வரையில் விற்பனை ஆவதாக கூறுகிறார்.
இந்த பாம்புகள் எல்லாம் விஷத்தன்மை இல்லாதவை என்பது முக்கிய விடயமாகும். தொடர்ந்து உயிர் வாழ இந்த சிறிய பாம்புகள் மாதத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து எலிகள் வரையாவது சாப்பிட வேண்டுமாம்.
முகமது கல்லூரி செல்லும் போது அவர் குடும்பத்தார் பாம்புகளை கவனித்து கொள்கின்றனர். பாம்புகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளையும் அவர் வளர்த்து விற்பனை செய்கிறார்.
வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ரோஷன் சந்திரசேகர எண்ணக்கருவில் வீதி ஒழுங்குகள், வீதி விபத்துக்கள் தொடர்பிலான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் போக்குவரத்து பொலிஸாரினால் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை நேரத்தில் வீதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது , எந்த வகையான சமிச்சைகளை பயன்படுத்துவது தொடர்பிலான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மாவட்டத்தில் பாடசாலை நேரத்தில் அதிகரிக்கும் விபத்துக்களை தடுக்கும் முகமாகவே மாணவர்களுக்கு இப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ரோஷன் சந்திரசேகர தெரிவித்தார்.
காதில் ஏற்பட்ட பிரச்சனைக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற இளம் பெண்ணுக்கு நர்ஸ் போட்ட ஊசியால் கை கருப்பு நிறமாகி கையை துண்டாக வெட்டி எடுக்கும்படி ஆகியிருக்கிறது.
காது சிகிச்சைக்காக போய் கையை இழந்துவிட்ட இளம் பெண்ணின் திருமணமும் நின்று போய் இருக்கிறது. பீகார் மாநிலத்தில் பாட்னாவில் நடந்திருக்கிறது இந்த கொடூரம்.
பீகார் மாநிலத்தில் பாட்னாவை சேர்ந்த இளம்பெண் ரேகா. இந்த பெண்ணுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருந்திருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு காதில் வலி அதிகமாக இருந்துள்ளதால் பிரபல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்திருக்கிறார். அங்கு ரேகாவின் காதினை பரிசோதனை செய்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
இதை அடுத்து கடந்த ஜூலை 11ஆம் தேதி காது அறுவை சிகிச்சைக்காக ரேகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு ரேகாவுக்கு நர்சு ஒருவர் ஊசி போட்டு இருக்கிறார் . ஊசி போட்ட சிறிது நேரத்தில் கையில் வலி அதிகமாக இருந்திருக்கிறது.
சிறிது நேரத்தில் கை முழுவதும் நீல நிறமாக மாறி இருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேகாவும் உறவினர்களும் நர்சை அழைத்து சொல்லி பதறவும், கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாத அந்த நர்ஸ், மருத்துவமனையை விட்டு உடனே வெளியே சென்று விடு என்று சத்தம் போட்டு இருக்கிறார்.
பின்னர் சிறிது நேரத்தில் கையின் நிறம் கருப்பு நிறமாக மாறி இருக்கிறது. ரேகாவுக்கு வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு இருக்கிறார். இதை அடுத்து அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறி சென்று ஐஜிஐஎம்எஸ் என்ற மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து கையை உடனே நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
ஒரு கை போனதால் ரேகாவுக்கு நடக்கவிருந்த திருமணமும் நின்று போய் இருக்கிறது. அந்த சம்பவம் குறித்தும் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் ரேகா போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆனாலும் போலீசார் இது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் இருந்துள்ளார்கள் . இதன் பின்னர் அந்த மருத்துவமனைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளார் ரேகா.
இதனால் மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலிருந்து பாதிக்கப்பட்ட ரேகாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நிறைய எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. ரேகாவுக்கும் குடும்பத்தினருக்கும் மிரட்டல்களும் வந்துள்ளன.
இதனால் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை பத்திரிகையாளர்களை அழைத்து கண்ணீருடன் சொல்லி இருக்கிறார் . இந்த விவகாரம் பீகாரின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள சோலை அழகுபுரம் வ.உ.சி 3வது தெருவில் வசித்து வருபவர் காளிமுத்து – பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு 9 வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்தார்.
காளிமுத்து அதே பகுதியில் தையல் கடையில் டெயிலராக வேலை பார்த்து வருகிறார். காளிமுத்துவின் மனைவி பிரியதர்ஷினி கீழவாசல் பகுதியில் ஒரு பாத்திர கடையில் விற்பனை பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி இரவு இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர் ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டு பரணில் 9 வயது சிறுமி தன்ஷி கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒரு பக்கெட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதனை தொடர்ந்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கடந்த சில வருடமாக காளிமுத்துக்கும் அவரது மனைவி பிரியதர்ஷினிக்கும் இடையே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு நடந்ததாக தெரிய வந்தது. மேலும், காளிமுத்து மாயமானதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பழங்காநத்தம் பகுதியில் தலைமறைவாக இருந்த காளிமுத்தை போலீசார் அதிரடியாக கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில், மனைவி பிரியதர்ஷினியுடன் காளிமுத்துவிற்கு ஏற்பட்டு வந்த தகராறு காரணமாக, மகளிடம் புலம்பியுள்ளதாகவும், அதற்கு சிறுமியோ நாம் இருவரும் இறந்து விடுவோம் என்றும் கூறியதாகவும்,
இதனை அடுத்து வீட்டின் அடுப்பங்கரையில் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வாளியில் வைத்துவிட்டு பின்னர் வீட்டை விட்டு கிளம்பி ரயிலில் விழுந்து சாகலாம் என்று முடிவெடுத்து பயத்தின் காரணமாக மதுரையில் சுற்றி திறிந்தாக வாக்குமூலம் அளித்தார். அதனை தொடர்ந்து காளிமுத்தை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் தனது கணவர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரித்த குற்றச்சாட்டில் குடும்பப் பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீக்குளிக்கப்பட்ட குடும்பஸ்தர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், படுகாயமடைந்த குடும்பத்தலைவரின் மனைவியை கைது செய்து நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி தனது கணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், “சந்தேக நபரின் வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளது. அதனை ஓட்டுவதற்காக சந்தேக நபர் பெட்ரோலை வீசியுள்ளார். அங்கு ஏற்றப்பட்டிருந்த சாம்பிராணி குச்சியில் பட்டு தீ இருந்தது. சந்தேகநபர் தனது கணவர் மீது பெற்றோல் ஊற்றும் எண்ணம் கொண்டிருக்கவில்லை” என சந்தேகநபரின் சட்டத்தரணி சமர்ப்பித்தார்.
இந்த நிலையில், யாழ் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. இரு தரப்பினரின் சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த ஆனந்தராஜா சந்தேகநபரான பெண்ணை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சம் மோசடி செய்த நபரை போலிஸார் கைது செய்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் போண்டாமனி. இவர் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளார்.
மேலும் நடிகர் போண்டாமணி உடல்நிலை குறித்து சக நடிகர் பெஞ்சமின் பேசிய வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து போண்டாமணிக்கு பலரும் பண உதவி செய்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடிகர் போண்டாமணிக்கு உதவுவதுபோல் நடித்து ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் ரூ. 1 லட்சம் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் போண்டாமணி மருத்துவமனையில் இருந்தபோது,ராஜேஷ் பிரித்தீவ் நட்பாகப் பழகி அவருக்கு உதவிகள் செய்து வந்துள்ளார். இதனால் போண்டா மணியின் மனைவி அவரிடம் ஏ.டி.எம் கார்டு கொடுத்து மருந்து வாங்கி வரச் சொல்லி இருக்கிறார்.
ஆனால் மருந்து வாங்கச் சென்றவர் திரும்பி வரவில்லை. பிறகு சில மணி நேரத்தில் ஏ.டி.எம் கார்டில் இருந்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக செல்போனில் குறுஞ்செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜேஷ் பிரித்தீவை கைது செய்தனர். மேலும் ஏ.டி.எம் கார்டில் இருந்து எடுத்த பணத்தில் புதிதாக நகை வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும்,திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் பிரித்தீவ் மீது கோவை மற்றும் சென்னையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தனது பெயரை மாற்றி பலரையும் ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது
பிலிப்பைன்ஸ் நாட்டில் 78 வயதான விவசாயி ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணமும் செய்திருக்கிறார். இருவரது வீட்டாரும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இவர்களது திருமண புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக காதலுக்கு வயது முக்கியமில்லை என பலர் சொல்லியும் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு தாத்தா இதனை உலகிற்கு மீண்டும் நிரூபித்திருக்கிறார். இவர் 18 வயதான தன்னுடைய காதலியை உறவினர்கள் முன்னிலையில் கரம்பிடித்திருக்கிறார். இது உள்ளூர் மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் காகேயன் மாகாணத்தை சேர்ந்தவர் ரஷீத் மங்காக்கோப் (Rashed Mangacop). இவருக்கு தற்போது 78 வயதாகிறது. இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் குடும்ப விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருக்கிறார்.
அப்போது, அவருக்கு அறிமுகமாகியுள்ளார் ஹலீமா அப்துல்லா. அப்போது இருவரும் நண்பர்களாகி உள்ளனர். நாளடைவில் இந்த நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து வீட்டினரிடம் இருவருமே தெரிவித்திருக்கிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயமும் இருக்கிறது ரஷீத்திற்கு இது முதல் திருமணம் தானாம். ஆம். தனக்கு விருப்பமான பெண்ணுக்காக அவர் 78 ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் தற்போது அந்த காத்திருப்பு முடிவிற்கு வந்திருக்கிறது.
இதுகுறித்து பேசிய அவரது உறவினர் பென் மங்காக்கோப் (Ben Mangacop),” ரஷீத் என்னுடைய தந்தையின் சகோதரர். அவர் இதுவரையில் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், ஹலீமாவை தற்போது திருமணம் செய்துகொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இரு அவர்களது காதலினால் சாத்தியமாகியுள்ளது” என்றார்.
மணப்பெண் ஹலீமாவின் தந்தை ரஷீத்தின் குடும்பத்தில் வேலைபார்த்து வந்திருக்கிறார். இதனால் இருவரது காதலை இருதரப்பும் மறுப்பு சொல்லாமல் ஏற்றுக்கொண்டதாக பென் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் புதுமண தம்பதியர் கார்மன் நகரில் உள்ள வீட்டில் வசித்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் சட்டப்படி, 21 வயதிற்கு குறைவான வயதுடையவர் திருமணம் செய்துகொள்ளவேண்டுமென்றால் பெற்றோர்களின் சம்மதம் அவசியம். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றிருப்பதால் சட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் பென் தெரிவித்திருக்கிறார்.