திருவாரூர் மாவட்டம், திருவாசல் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள். 5 மாத கர்ப்பிணியான இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியைத் தனது இல்லத்திலேயே கணவர் விக்னேஷ் நடத்தியுள்ளார்.
இந்த வளைகாப்பு நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தக்காளி, தயிர், புளி, கருவேப்பிலை, லெமன் சாதத்துடன் பிரியாணியும் பரிமாறப்பட்டுள்ளது.
இந்த உணவைச் சாப்பிட்ட மாரியம்மாள் உட்பட 8 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் அருகே இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த வேலங்குடி பகுதியைச் சேர்ந்த செல்வமுருகன் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளைகாப்பு நிகழ்வில் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு மட்டும் உரித்தான தாசியா ஹாலியானஸ் எனும் உயிரியல் பெயருள்ள தனித்துவம் மிக்க பெரும்பாலும் மரங்களிலேயே வாழும் இந்த உயிரினம் வவுனியா ஓமந்தை பகுதியிலுள்ள தொழிற்சாலை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற உயிரினங்களை வகைப்பிரித்து ஆய்வு செய்த முடிவில் இது இலங்கைக்கு மட்டும் உரித்தானது என உறுதிப்படுத்தப்பட்டது. சுமார் 8 செ.மீ நீளமுடைய இந்த தனித்துவம் மிக்க உயிரினம் மற்றைய அனைத்து சகோதர இனங்களிடமிருந்தும் வேறுபட்டது.
உடலின் நடுப்பகுதியில் (22-24) குறைந்த எண்ணிக்கையிலான வரிசைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட முதுகெலும்பு வரிசை செதில்களும் உள்ளன. இந்த உயிரினம் அரிதாக காணப்பட்ட நிலையில் 1970 ஆம் ஆண்டு இலங்கை மத்திய நாணயத்தாளில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தொழிற்சாலை நிர்வாகம் மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு வழங்கிய தகவலையடுத்து அங்கு சென்ற மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அதனை எடுத்து பத்திரமாக அதே வனப்பகுதியில் விட்டுச் சென்றதாக தொழிற்சாலை முகாமையாளர் தெரிவித்தார்.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற 13வயதுடைய எம்.ரி.ஜீ. தசினி டினரா என்ற பெருன்பான்மையினத்தினை சேர்ந்த சிறுமி தான் உயிர்வாழ உதவி செய்யுமாறு தமிழ் மக்களிடம் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
மாதாந்தம் குறித்த சிறுமிக்கு மருந்துவ செலவுக்கு மாத்திரம் ஒரு லட்சம் வரையில் செலவாகுவதுடன் ஏனைய செலவுகள் என அவர்களினால் ஈடு செய்ய முடியாதளவில் குடும்பத்தினர் தவிர்த்து வருகின்றனர். சிறுமி முழுமையாக புற்றுநோயிலிருந்து மீண்டு வருவதற்கு 60லட்சத்திற்கு மேல் தேவைப்படுவதாக வைத்தியர்கள் தெரித்துள்ளனர்.
எனவே தங்களது குடும்ப நிலமையினை கருத்தில் கொண்டு தாம் சகோதர இனமான தமிழ் மக்களிடம் எமது பிள்ளையின் உயிரை காப்பாற்ற உதவிக்கரம் நீண்டியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புகளுக்கு தந்தையின் தொலைபேசி இலக்கமான 0764524000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வங்கி விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் இளைஞன் ஒருவர் கத்திக் குத்துக்கு இலாக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று (07.10) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுககு சென்ற இளம் குடும்ப பெண் ஒருவருக்கு,
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் பள்ளிவாசலுக்கு அண்மையாக அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் கிண்டலடித்ததுடன், குறித்த பெண்ணுடன் பேச முனைந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சம்பவத்தை அவ் இளம் குடும்பப் பெண் தனது கணவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு வந்த கணவர் தனது மனைவியையும் அழைத்துச் சென்று கிண்டலடித்த இளைஞர் வேலை செய்யும் புடவைக் கடைக்குள் சென்று வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதையடுத்து, குறித்த இளம் குடும்பப் பெண்ணின் கணவன் குறித்த இளைஞன் மீது கத்தியால் குத்தியுள்ளார்.
அதன்பின் அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்ற போது அவ்விடத்தில் நின்றவர்கள் அவரை விரட்டிப் பிடித்து, வவுனியா பொலிசாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவத்தில் வவுனியா, முருகனூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்திக் குத்தை மேற்கொண்டதாக வவுனியா, கல்வீரங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இளம் பெண் ஒருவர் தனது 19 வயதிலேயே சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொந்த வீடை வாங்கியுள்ள விஷயமும், அதன் பின்னால் உள்ள காரணமும் தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
லண்டன் பகுதியை சேர்ந்தவர் Valentina Hadome. இவருக்கு தற்போது 19 வயதாகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது £400,000 மதிப்பில், (இந்திய மதிப்பில் சுமார் 3.7 கோடி ரூபாய்) சொந்த வீடு ஒன்றை வேலன்டினா வாங்கி உள்ளார்.
வெறும் 19 ஆவது வயதில் எப்படி இத்தனை மதிப்புள்ள வீட்டுக்கு சொந்தக்காரராக இளம் பெண் இருக்க முடியும் பலர் மத்தியில் கேள்விகளை எழுப்பி உள்ளது. இப்படி ஒரு இளம் வயதில், வீட்டை சொந்தமாக்க வேலன்டினா எடுத்துக் கொண்ட முயற்சி தான் பலரது புருவத்தையும் உயர்த்தி உள்ளது.
தனது 13 வயதில் இருந்தே ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் காமிக்ஸ் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்த வேலன்டினா, அதனை விற்பனை செய்து வருமானம் ஈட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் வேலன்டினாவுக்கு கிடைத்த ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து தனது தாயிடம் அவர் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் மூலம், 5,000 பவுண்டுகள் வரை வேலன்டினா சேமித்துள்ளார். பின்பு தனது 16 ஆவது வயதில், McDonalds நிறுவனத்திலும் பார்ட் டைமாக அவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இப்படி தனக்கு கிடைத்த பணத்தை எல்லாம் தொடர்ந்து சேமித்து வந்த வேலன்டினா, தனது சேமிப்பு தொகையில் இருந்து 22,000 பவுண்டுகளை வீடு வாங்குவதற்கான டெபாசிட் தொகையாகவும் அவர் கடந்த ஆண்டு செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, விடுமுறை செய்தும் பணம் ஈட்டி வந்த வேலண்டினா, சில நிறுவனங்களில் சிறிய அளவில் முதலீடு செய்தும் சேமிப்பை அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, லண்டனின் அபே வுட் பகுதியில் இரண்டு பெட்ரூம் கொண்ட வீட்டை சில அடமான விகிதங்கள் சலுகை முறையில், சொந்தமாக வாங்கியுள்ளார் வேலன்டினா. தனது சிறு வயதில் இருந்தே சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பெரும் கனவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது பணத்தை சேமிக்க தாயார் சிறந்த வழியில் ஆலோசனைகள் கூறியதாகவும், எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்ததாகவும் வேலன்டினா தெரிவித்துள்ளார்.
பலருக்கும் சொந்த வீடு என்பது கனவாக இருக்கும் நிலையில், சிறு வயதில் இருந்தே சிறுக சிறுக சேமித்தும், முதலீடு செய்தும் 19 வயதில் சொந்த வீடு வாங்கி பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார் வேலண்டினா என்ற இந்த இளம்பெண்.
தமிழகத்தில் தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை மணக்க நினைத்த இளைஞர் ஆத்திரத்தில் செய்த செயலால் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கத்தைச் சேர்ந்த மாரிமுத்து (19) என்பவர் தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை காதலித்து வந்தார். 10 நாட்களுக்கு முன், இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முயன்றபோது, மாரிமுத்துவின் பெற்றோர் வயதை காரணம் காட்டி அவர்களை பிரித்தனர்.
அதன்பின்னர் மாரிமுத்துவை கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 4ம் திகதி இரவு 8 மணிஅளவில் குடிபோதையில் பெற்றோர் வீட்டிற்கு வந்தார் மாரிமுத்து.
அப்போது மது பாட்டிலை உடைத்து தந்தை கந்தசாமி, தாயார் முத்துலட்சுமி (39) மற்றும் சகோதரர் சந்தோஷ் (16) ஆகியோரை தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த 3 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் மாரிமுத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்பின்னர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
நாவுல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் கொ.லை செ.ய்.யப்பட்டுள்லதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“நாவுல சுத்தா” என அழைக்கப்படும் 43 வயதானவரே இவ்வாறு உ.யி.ரிழந்துள்ளார். “நாவுல சுத்தா” என அழைக்கப்படும் இவர், போ.தை.க்.கு அ.டிமையானவர்களுக்கு எ.திராக க.டுமையாக செயற்பட்டு வருபவர் என உறவினர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, கொலை இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் மிளகாய் தூள் வைக்கப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட வி.சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இறந்தவரின் தாயார் அருகிலுள்ள மற்றொரு வீட்டிலும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வேறு இடத்திலும் வசித்து வருகின்றனர். சில நாட்களாக மகனை காணாத தாய் குறித்த நபர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று பார்த்த போது,
வெ.ட்.டு.க் கா.ய.ங்.க.ளு.ட.ன் குறித்த நபர் வி.ழுந்து கி.டந்ததை பார்த்துள்ளார். அங்கு அவர் கொ.டூ.ர.மா.ன மு.றையில் வெ.ட்.டி.க் கொ.ல்.ல.ப்.ப.ட்.டு.ள்.ள.தா.க மேலும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் தொடர்பில் பல தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பழங்குடி இனத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்காக, பெண் ஒருவர் செய்த விஷயமும், அதன் பின்னால் உள்ள காரணமும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் Deborah. இவருக்கு தற்போது 60 வயதாகிறது. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது மகளுடன் Tanzania நாட்டிற்கு சென்றிருந்தார்.
அங்கே உள்ள கடற்கரை ஒன்றில், அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்த போது இரண்டு பழங்குடியின வாலிபர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் தான் Saitoty. இவருக்கு தற்போது 30 வயதாகிறது. மேலும், அந்த பழங்குடி வாலிபர்களுடன் டெபோரா புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் பின்னர், சைடோட்டி என்ற வாலிபருடனும் அதிக நேரம் டெபோரா உரையாடி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே நிறைய ஒற்றுமையான விஷயங்கள் இருப்பதையும் இருவரும் உணர்ந்துள்ளனர்.
இதன் பின்னரும் அவர்கள் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, டெபோராவை திருமணம் செய்யவும் வாலிபரான Saitoty விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், 60 வயதான டெபோரா, தனியாக வாழ்ந்து வந்த போதிலும் தன்னை விட 30 வயது குறைவான வாலிபரை மனக்கவும் முதலில் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தனது மகன் மற்றும் மகளிடமும் இது பற்றி டெபோரா தெரிவித்துள்ளார். அவர்களும் இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சொல்லபடுகிறது. அப்படி இருக்கையில் இரண்டு மாதங்கள் கழித்து, மீண்டும் Saitoty-ஐ சந்திக்க தான்சானியா கிளம்பிய டெபோரா, அவரது காதலையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு Saitoty மற்றும் டெபோரா ஆகியோர், பழங்குடியின முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தனது இளம் கணவருக்காக சுமார் 14,400 கிலோ மீட்டர் பயணம் செய்து தான்சானியாவிலும் டெபோரா வசித்து வருவதாக கூறப்படுறது.
இது பற்றி பேசும் டெபோரா, “அமெரிக்காவில் வாழ வேண்டும் என்பதற்காக தான் Saitoty என்னை திருமணம் செய்து கொண்டதாக பலரும் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், அவர் அப்படியில்லை.
அதே போல, எனது பேரன் தான் Saitoty என்றும் சிலர் குறிப்பிடும் போது, அவரை அது வருத்தம் அடைய செய்கிறது. நாங்கள் எங்கள் வாழ்க்கையை மகிழ்சயாக வாழ்வதில் தான் கவனம் செலுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.
அதே போல, தங்களுக்கு இடையே உள்ள வயது வித்தியாசம் பற்றிய விமர்சனங்களை கண்டு கொள்ளாமல், அது வெறும் எண் தான் என்ற கணக்கில் Saitoty மற்றும் டெபோரா ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியாக வலம் வருகின்றனர்.
வவுனியாவில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக மாமடு பொலிசார் தெரிவித்தனர். இன்று (07.10) மாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிநவருவதாவது,
வவுனியா மாமடு பகுதியில் உள்ள குளத்தில் தாமரைப் பூ பறிக்க சென்ற பெண் மீது மின்னல் தாக்கியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
வவுனியா, மாமடு, அட்டமஸ்கட பகுதியை சேர்ந்த 50 வயதுடைய ஆ.ஏ.சந்திரலதா என்ற குடும்ப பெண்ணே இச் சம்பவத்தில் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையே, ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மலையாண்டிபட்டியை சேர்ந்தவர் ரவி. பஸ் ஸ்டாண்டில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வேலை செய்து வரும் இவரது மகன் சந்தோஷ் (22), மணப்பாறை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிய கல்லூரி மாணவன் செலவுக்கு பணமின்றி கடந்த 4 ம் தேதி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது தனது பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டிலிருந்த 2 கிராம் மோதிரம் மற்றும் பணத்தை எடுத்து கொண்டு வெளியேறிய கல்லூரி சந்தோஷ் , அனைத்தையும் ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த சந்தோஷ் தனது செல்போனில் தற்கொலை செய்துகொள்ளபோவதாக ஸ்டேட்டஸ் வைத்திருந்த நிலையில், மணப்பாறை கீரை தோட்டம் என்ற இடத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவயிடத்துக்கு சென்ற ரயில்வே போலீசார், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்ஜியனிரிங் படிக்கும் கல்லூரி மாணவன் ஆன்லைன் ரம்மியில் மூழ்கி, விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த குன்றத்தூர், பழந்தண்டலம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (40). இவருக்கு தினேஷ் குமார், நவீன் குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். நவீன் குமார் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான்.
மேலும் நவீன்குமார் செல்போனில் அதிகமாக கேம் விளையாடி வந்துள்ளார். இதை அவரது தந்தை கண்டித்துள்ளார். சம்பவத்தன்றும் கேம் விளையாடிய மகனைக் திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த நவீன் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை அறையில் சென்று பார்த்த போது நவீன்குமார் தற்கொலை செய்து கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அவரது உறவினர்கள் நவீன்குமார் உடலை மீட்டுள்ளனர். அப்போது, ‘தன்னால் தனது மகன் இறந்து விட்டான்’ என கத்திக் கொண்டே அறைக்கு ஓடிய சுந்தர் கத்தியால் தனது கையை அறுத்து கொண்டு அதே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்துக் குன்றத்தூர் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை, மகன் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
என் கணவர் என்னை அடித்து உதைக்கிறார் என மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகை திவ்யா சன் டிவியில் ஒளிபரப்பான ’கேளடி கண்மணி’ என்ற சீரியல் உள்பட பல சீரியல்களில் நடித்தவர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் சீரியல் நடிகர் அர்னவ் என்பவரை காதலித்தார்.
இதன் பின்னர் நடிகை திவ்யா இஸ்லாமிய மதத்திற்கு மாறி அர்னவ்வை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் அர்னவ்-க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக திவ்யாவுக்கு தெரிய வந்ததை அடுத்து அர்னவ்- திவ்யா ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.
இந்த நிலையில் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் திவ்யாவை அவரது கணவர் அர்னவ் அடித்து உதைத்து உள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து காயமடைந்த திவ்யா சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து கொண்டு அவர் கதறி அழுதவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ’என் கணவர் என்னை அடித்து உதைத்ததால் எனக்கு வயிற்றில் அடிபட்டு விட்டது என்றும் அவர் என்னை காலால் மிதித்தார் என்றும் அதன் பின்னர் நான் மயங்கி விழுந்து விட்டேன் என்றும் சிறிது நேரம் கழித்து நான் முழித்து பார்த்த போது எனக்கு வயிறு வலி அதிகமாக இருந்தது என்றும் அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
ஃலவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகை திவ்யா
இது குறித்து திவ்யா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திவ்யாவை நான் தாக்கியதாக வீடியோவில் கூறப்பட்டுள்ளது முற்றிலும் பொய் என்றும் அர்னவ் விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான மனைநிலை அதிகரித்து வருவது கவலை அளிக்கக்கூடியதாக விளங்கி வருகிறது. இனரீதியாக இந்தியர்கள் விமர்சிக்கப்படுவதும் அங்கு அதிகரித்து வந்தது.இந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடும்பத்தினர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் வசிக்கும் 8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கவ்வுர் (27) அவரது கணவர் ஜஸ்தீப் சிங் (36), இவர்களது உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில், காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலை ஒட்டிய ஒரு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கடத்தல் தொடர்பாக ஜீஸஸ் மேனுவல் சால்கடோ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூவிகமாக கொண்ட சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இன்றையதினம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,710 டொலர்களை எட்டியுள்ளது.
இலங்கையில், கடந்த மாதங்களில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தாலும் தற்போது மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 177,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ரீதியாக நேற்றைய தினம் (06.10) ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையிலும் ஆசிரியர் தினம் இடம்பெற்றது.
ஆசிரியர்கள் பாடசாலை அருகில் உள்ள குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டு மாணவர்களின் பான்ட் வாத்திய வரவேற்புடன் ஆசிரியர்கள் வரவேற்கப்பட்டு,
பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தமையுடன் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.
மேலும் பாடசாலை மாணவர்களால் கலை நிகழ்வுகளும் நடாத்தப்பட்டிருந்ததுடன் தமது ஆசிரியர்களை பரிசில்கள் வழங்கியும் மாணவர்கள் கெளரவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிலுள்ள பூனையொன்று உலகின் மிக உயரமான செல்லப் பூனையாகக் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இந்த விடயம் குறித்து தற்போது சமூக வலையத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த பூனை சவன்னா இனத்தைச் சேர்ந்த 18.83 அங்குல உயரமுள்ள பூனையாகவும் ஒரு ஆப்பிரிக்க பூனையும், வீட்டுப் பூனையும் இனச்சேர்க்கையால் பிறந்த கலப்பின பூனையாகவும் பார்க்கப்படுகிறது.
மேலும் பூனையின் உரிமையாளர் டாக்டர் வில்லியம் ஜான், இது போன்று பல பூனைகளை கின்னஸ் சாதனை படைக்க வைத்துள்ளார். இவர் வெவ்வேறு இன பூனைகளை விலைக்கு வாங்கி அதற்கு தேவையானவற்றை கொடுத்து பூனைகளை பராமரித்து வருகிறார். இந்த வீடியோ தற்போது நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.