சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்த நடுத்தர வயது நபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன் ஜம்முவில் மேடை ஒன்றில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய மாநிலம் குஜராத்தில் 21 வயது இளைஞர் ஒருவர், நடனமாடும் போது திடீரென மயங்கி விழுந்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலம் தாராப்பூரில் நவராத்திரியை முன்னிட்டு கார்பா எனும் பாரம்பரிய நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் விரேந்திர சிங் (21) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பலரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரேந்திர சிங்கை கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதேபோல் மராட்டிய மாநிலத்திலும் நடனமாடிக் கொண்டிருந்த 35 வயது நபர் ஒருவர் மரணமடைந்தார்.
அவரது மரணச் செய்தியை கேட்ட அவரது தந்தையும் ஓரிரு மணிநேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அண்மை காலமாக இதுபோன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக நடனமாடும் நபர்கள் திடீரென சுருண்டு விழுந்து இறக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
பேஸ்புக் ஊடாக பழகிய 60 வயதான காதலியை க.த்.தி.யா.ல் கு.த்.தி.வி.ட்.டு த.ங்கச் ச.ங்கிலியை கொ.ள்.ளையிட்ட 49 வயது காதலனை மீகொட பொலிஸார் கை.து செ.ய்துள்ளனர்.
காதலி மீகொட, கல்கந்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காதலன் சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது. இருவரும் பேஸ்புக் மூலம் பழகி , காதல் தொ.டர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ள நிலையில் இருவருக்கும் திருமணமாகி பிள்ளைகளும் உள்ளனர்.
60 வயதான காதலியின் மகள்மார் தந்தையுடன் வாழ்ந்து வருவதாகவும், காதலி தனியாக வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பேஸ்புக் காதலன் காதலியை சந்திக்க மீகொடவுக்கு வருகை தருவதாகவும் ஓரிரு இரவுகள் தங்கிச் செல்வதாகவும் வி.சாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது .
இவ்வாறு ஒரு நாள் வந்து காதலியின் வீட்டில் தங்கியிருந்தபோது இருவருக்கும் ஏற்பட்ட பி.ர.ச்.சி.னை.யை அ.டுத்து கட்டிலில் வைத்து கா.தலியை க.த்.தி.யா.ல் கு.த்.தி.வி.ட்.டு , கா.தலன் த.ங்கச் ச.ங்கிலியை அ.று.த்.து.ச் செ.ன்றுள்ளதாக பொலிஸ் வி.சாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் கா.ய.மு.ற்.ற காதலி ஹோமாகம வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா ஹோரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் திடீரென மோட்டார் சைக்கில் தீப்பற்றி எரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் வரிசையின் பிரகாரம் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த சமயத்தில் குறித்த மோட்டார் சைக்கிலுக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த வேலையில் திடீரென மோட்டார் சைக்கிலின் எரிபொருள் தாங்கியில் தீப்பிடித்துள்ளது.
இதனை அவதானித்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் உடனடியாக செயற்பட்டு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையுடன் பாரிய அனர்த்தத்தினை தவிர்த்துள்ளனர்.
குறித்த அனர்த்தம் வாகனத்தின் மின் ஒழுக்கு அல்லது வாகனம் இயங்கு நிலையில் வைத்திருந்தமையினால் இடம்பெற்று இருக்கலாம் சந்தேகிக்கப்படுகின்றது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் ஞானவினாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் பரசுராமன். இவர் புதுக்கோட்டையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார்.இவருக்கும் சீர்காழி பகுதியை சேர்ந்த பிரவீனாவுக்கும் (26) திருமணமாகி 18 மாதங்கள் ஆகின்றன.
இந்த நிலையில் இவர்களுக்கு 11 மாதத்தில் ஹரிமித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவர் பரசுராம் வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதால் பிரவீனா அவரது மாமனார் முருகேசன் மாமியார் விஜயாவுடன் ஒரே வீட்டில் தங்கி வந்தார்.
இந்நிலையில் ஆயுதபூஜையை முன்னிட்டு படைப்பதற்கு கடைத்தெருவுக்கு சென்று பொருட்கள் வாங்கி வீட்டிற்கு வந்த பிரவீனா தனது கணவருக்கு போன் செய்து விட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடனடியாக பெண்ணின் உறவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த பெண்ணின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி ரூபன் குமார் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
அதனையடுத்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திருமணமாகி 18 மாதங்களே ஆகியுள்ளதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் . இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் ,இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் வசந்தி கணவரை பிரிந்து தாய் வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த சூழலில் வசந்திக்கும் , அண்ணாநகரை சேர்ந்த மோசஸ் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வசித்து வந்துள்ளனர்.
போதைக்கு அடிமையான மோசஸ் வசந்தி உடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மோசசை பிரிந்த வசந்தி மீண்டும் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். மோசஸ் வசந்தியின் வீட்டுக்கு வந்து அவரை சமாதானப்படுத்தி குரோம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு சில தினங்களுக்கு முன்பு குடியேறினார்.
பின்னர் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது . அத்துடன் வசந்தியின் மகளிடம் மோசஸ் அநாகரிகமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் , தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதை தொடர்ந்து வசந்தியை போனில் தொடர்பு கொண்ட மோசஸ் உன்னை பிரிந்து என்னால் வாழ முடியாது என்று கூற, அதற்கு வசந்தியோ உன்னுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மோசஸ் நீ என்னுடன் குடும்பம் நடத்த வரவில்லை என்றால், உன் அப்பாவையும் , அம்மாவையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். ஆனால் வசந்தி அதை கண்டுகொள்ளாத நிலையில் தன்னுடைய ஃபோனையும் சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.
இதையடுத்து வசந்தியின் பெற்றோரிடம் மோசஸ் தகராறு செய்ததாக தெரிகிறது. அத்துடன் தனது மகளை உன்னுடன் அனுப்ப முடியாது என்று ஆறுமுகமும், மஞ்சுளாவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மோசஸ் அவர்களை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
வசந்தியின் அம்மா மஞ்சுளா மற்றும் அப்பா ஆறுமுகத்திடம் சமாதானமாக பேசிய அவர் இருவரையும் தான் வசித்து வந்த வாடகை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து வசந்தி எங்கிருக்கிறாள் என்று கேட்டு இருவரையும் கொடுமைப்படுத்தியுள்ளார்.
வசந்தி குறித்து எந்த தகவலும் தங்களுக்கு தெரியாது என்று இருவரும் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மோசஸ் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வீட்டை வெளி பக்கமாக பூட்டி விட்டு தப்பி சென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து தனது தாய், தந்தையை ஃபோனில் வசந்தி போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது இருவரின் நம்பர்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தனது சகோதரியிடம் விவரத்தை கூறியுள்ளார்.
இதையடுத்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டு போட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டுக்குள் துர்நாற்றம் வீசுவதும் தெரிந்தது. உடனடியாக சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு வசந்தியின் சகோதரர் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டை உடைத்து உள்ளே பார்த்தபோது மஞ்சுளாவும், ஆறுமுகமும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து அவர்களின் சடலங்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் விசாரணையில் மோசஸ் தான் இருவரையும் கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இதனால் போலீசார் மோசஸை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் மாநிலத்தில் காதலியை பார்க்கச் சென்ற இளைஞரை இளம்பெண்ணின் குடும்பத்தினர் சுற்றி வளைத்திருக்கின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தில் கிராம மக்கள் எடுத்த முடிவு காதலர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காதல் பல வினோதமான காரியங்களில் மனிதர்களை ஈடுபட வைக்கும். தங்களது காதலுக்கு உரியவர்களை கவர, என்னவேண்டுமானாலும் செய்ய காதலர்கள் தயங்குவதில்லை.
குறிப்பாக இணையை பார்க்க காதலர்கள் எடுக்கும் முயற்சிகள் வெகு சுவாரஸ்யமானவை. ஆனால், இவை எல்லாம் வீட்டில் இருப்பவர்களிடத்தில் மாட்டிக்கொள்ளும் வரையில் தான். அப்படியான ஒரு சம்பவம் தான் பீகாரில் நடைபெற்றிருக்கிறது.
பீகாரின் கைகாட் பஞ்சாயத்தின் பரஹர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் ராம். இவருடைய மகன் பவன் குமார். இவரும் ஓல்ஹா மேத்தா தோலா பஞ்சாயத்தின் ராம்பூர்வா மிசிரியா கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு நேரத்தில் காதலியை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார் பவன் குமார். அப்போது தனது காரை யாருக்கும் தெரியாமல் மறைவான இடத்தில் நிறுத்திவிட்டு காதலியின் வீட்டுக்குள் சென்றிருக்கிறார் அவர்.
ஆனால், நள்ளிரவில் கார் ஒன்று நிற்பதை பார்த்த கிராமத்தினர் இதுபற்றி அக்கம் பக்கத்தினரிடத்தில் விசாரிக்க கொஞ்ச நேரத்தில் கூட்டம் கூடிவிட்டது. இதனையடுத்து, காரை கொண்டுவந்து நிறுத்தியது யார் என கிராம மக்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அருகில் இருந்த ஒரு வீட்டினர் சத்தம் எழுப்பவே மக்கள் அங்கு ஓடிச் சென்றிருக்கின்றனர்.
அப்போது, அந்த வீட்டிற்குள் பவன் குமார் பிடிபட்டிருக்கிறார். இதனையடுத்து கிராம மக்கள் அவரிடம் விசாரிக்க தான் அந்த வீட்டில் இருக்கும் பெண்ணை விரும்புவதாகவும், அவரை பார்க்கவே இரவில் வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அந்த பெண்ணிடத்தில் கிராம தலைவர்கள் பேசும்போது, தானும் பவன் குமாரை விரும்புவதாக இளம்பெண் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அப்போதே இருவருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதை தொடர்ந்து குங்குமத்தை எடுத்து இளம்பெண்ணுக்கு வைக்கும்படி பெண்ணின் வீட்டார் சொல்ல, பவன் குமாரும் அப்படியே செய்திருக்கிறார். இந்நிலையில், அங்கிருந்த ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து வெளியிட, அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜான்சிராணி மற்றும் பழைய கருவாட்சி கிராமத்தை சேர்ந்த ஞானமுத்து என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததுள்ளனர்.
இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவர, ஜான்சி ராணிக்கு 17 வயது இருக்கும்போதே கிளிண்டன் என்பவருடன் கட்டாய கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் 18 வயது பூர்த்தியடைந்த ஜான்சிராணி கடந்த 18 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனான ஞானமுத்து வீட்டிற்கு சென்று காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக கிளின்டன் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காதல் திருமணம் செய்துகொண்ட ஜான்சிராணி தனக்கும், தனது காதல் கணவருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று கோரியுள்ளார். பின்னர், போலீசார் குழந்தை திருமணம் செய்து வைத்த பெற்றோரை கைது செய்தனர்.
நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான இன்று (05.10) விஜய தசமி தினத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் விஜயதசமி பூஜையும், ஏடு தொடக்குதலும் சிறப்பாக இடம்பெற்றது.
கல்வி, செல்வம், வீரம் வேண்டி சரஸ்வதி, லக்சுமி, துர்க்கை ஆகிய மூன்று தேவியருக்கும் நவராத்தி பூஜை இடம்பெற்று வந்தது. அந்த வகையில் நவராத்திரி பூஜையின் விஜயதசமி மற்றும் ஏடு தொடக்குதல் என்பன இடம்பெற்றன.
குறிப்பாக ஆலங்களில் காலை தொடக்கம் மதியம் வரையிலான காலப்பகுதியில் பெருமளவான மக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கினர்.
வவுனியா, வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவசிறி ஜெ.மயூரக் குருக்கள் தலைமையில் விசேட அபிடேக ஆராதனைகள் இடம்பெற்று பக்தர்களின் அரோகரோ கோசத்திற்கு மத்தியில்,
மேளதாள வாத்தியங்கள் முழங்க ஆதி விநாயகர் திருக்கோவிலில் விசேட அபிசேகங்கள், பூஜை வழிபாடுகள் இடம்பெற்று ஆதி விநாயகப் பெருமான் உள்வீதி வலம் வந்து வெளி வீதிக்கு காட்சி கொடுத்தார்.
தொடர்ந்து தமிழருவி த.சிவகுமாரன் அவர்களினால் சிறுவர்களுக்கு ஏடு தொடக்கி வைக்கும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்திய மாநிலம் கேரளாவில் மகனின் மரணத்திற்கு பழி வாங்க, 30 ஆண்டுகளுக்கு பின் கணவன் – மனைவியை நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிளிமன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் நாயர்(70). கடந்த 1993ஆம் ஆண்டு இவரது மகன் ரமேஷ் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பியதால் சசிதரன் அதற்காக பல நிறுவனங்களையும், ஆட்களையும் தேடி அலைந்துள்ளார்.
ஒரு வழியாக அவரது வீட்டின் அருகில் வசிக்கும் பிரபாகரன் குரூப் (60) என்பவர் சசிதரனின் மகனுக்கு பஹ்ரைனில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதற்காக கணிசமான தொகையையும் அவரிடம் இருந்து பிரபாகரன் பெற்றுள்ளார்.
கிளார்க் வேலை தயாராக இருப்பதாக கூறி ரமேஷை பஹ்ரைனுக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். ஆனால், அங்கு அவருக்கு கொடுக்கப்பட்டது பணியாள் வேலை. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
உடனே பிரபாகரனை சந்தித்து இதுகுறித்து சசிதரன் கேட்டபோது அவர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதனை அறிந்த ரமேஷ் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
தங்கள் ஒரே மகனை இழந்ததால் சோகத்தில் இருந்த சசிதரன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, நீதி மன்றத்தில் 29 ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது. தனக்கு நீதி கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த சசிதரனுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளித்தது.
பிரபாகரன் மீது தவறு இல்லை எனக் கூறி அவர் விடுதலை செய்யப்பட்டார். இதனால் மனம் நொறுங்கிப்போன சசிதரன் விபரீத முடிவை எடுத்தார். பிரபாகரனை சரமாரியாக சுத்தியலால் தாக்கிய அவர், பெட்ரோலை எடுத்து பிரபாகரன் மற்றும் அவரது மனைவி விமலா குமாரி இருவர் மீதும் ஊற்றி தீ வைத்தார். இருவரும் தீப்பற்றியதில் அலறித் துடித்தனர்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து தம்பதியை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர். பிரபாகரன் அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் சசிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் காணாமல் போன 15 வயதான தமிழ் சிறுமி தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். இதன்படி, குறித்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடன் தொடர்புகொள்ளுமாறு யோர்க் பிராந்திய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 வயதான அஞ்சன்னா சக்திவடிவேல் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீண்ட சுருள் கறுப்பு முடி, பழுப்பு நிற கண்கள், கருப்பு நிற பேன்ட் மற்றும் கருப்பு நைக் ஷூவுடன் சாம்பல் நிற ஹூடி அணிந்து கடைசியாக காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் யோர்க் பிராந்திய காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூரில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் வசிக்கும் அசோகன் என்பவர் வீட்டில் ஆயுத பூஜையொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளார்.
அப்போது அவரது குழந்தைகளின் பள்ளி ஷூவினை (காலணி)சுத்தம் செய்யும் போது ஷூவில் குட்டி பாம்பு புகுந்து இந்ததை கண்டு அதிர்சசி அடைத்தார்.
பின்னர் கடலூரில் உள்ள பாம்புபிடி வீரர் செல்லா அவர்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் பாம்புபிடி வீரர் செல்லா சம்பவ வீட்டிற்ககு சென்று ஷூவில் இருந்த குட்டி நாக பாம்பை பத்திரமாக மீட்டு அருகாமையில் உள்ள காப்பு காட்டில் விட்டார்.
இனி மழை என்பதால் பாம்புகள் வீடுகளை நோக்கி படையெடுக்கும் குறிப்பாக இது போல் காலணிகளில் புகுந்து கொள்ளும் எனவே பெற்றோர்கள் அலட்சியாக இருக்காமால் நாள் தோறும் குழந்தைகளின் காலணிகளை கவனித்து போட்டு விடவேண்டும் என அறிவுறுத்தினார்.
குட்டி நாக பாம்பாக இருந்தாலும் அதை பாம்புபிடி வீரர் பிடிக்க முற்பட்டபோது படம் எடுத்து ஆடியதை பார்ப்பதற்கே நெஞ்சு படபடக்க செய்தது பள்ளிகள் விடுமுறை காலம் என்பதால் நல்வைப்பாக குழந்தை காலணியை பயன்படுத்தாமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்பதை குறிப்பிடத்தக்கது.
எனவே பெற்றோர்கள் தாங்கள் மட்டும் கவனமாக இருப்பது மட்டுமல்லாமல் பிள்ளைகளுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இன்று காலை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் அண்ணன் தங்கை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபல்லா பஜிநந்தா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நிஷாந்த். இவர் தனது தங்கையான 5ஆம் வகுப்பு மாணவி மோக்ஷாவை இன்று ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார்.
சூலியா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையில் எதிரே வந்த கார் மீது ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற நிஷாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நிஷாந்தின் தங்கை மோக்ஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மோக்ஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுமி மோக்ஷாவும் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். பள்ளிக்கு ஸ்கூட்டரில் அழைத்து சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அண்ணன் தங்கை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சிட்லபாக்கம் பகுதியில், கணவன்-மனைவி இருவரும் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, குரோம்பேட்டை, ஜமீன் ராயபேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம்(45). இவர் அந்த பகுதியில், பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா(40). இவர் கணவருக்கு உதவியாக இருந்தார்.
இவர்கள் இருவரும், ஜமீன் ராயப்பேட்டை பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் முதல் குறுக்கு தெருவில், சமீபத்தில் குடியேறினர். ஆறுமுகத்தின் பெரிய மகள், அதே பகுதியில் ,கணவருடன் வசித்து வருகிறார். மகள் வீட்டிற்கு, ஆறுமுகம் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆறுமுகம், பெரிய மகள் வீட்டிற்கு வரவில்லை. தினமும் வீட்டிற்கு வரும் தந்தை, ஏன் இரண்டு நாட்களாக வரவில்லை என, அவரின் மகள், ஆறுமுகம், மஞ்சுளா ஆகியோருக்கு போன் செய்துள்ளார். ஆனால், இருவரது செலோபோன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
அதனால் சந்தேகம் அடைந்த மகள், நேற்று நள்ளிரவு 11 மணியளவில் தனது தாய் தந்தை வீட்டிற்கு சென்றார். வீட்டினுள் தாய் மஞ்சுளா, தந்தை ஆறுமுகம் கழுத்தறுபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதை கண்டு மகள் கதறி அழுது கூச்சலிட்டுள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இது குறித்து சிட்லப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்தனர். இருவரின் உடல்களை கைப்பற்றி , பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பணத்துக்காக இந்த இரட்டை கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கணவன்-மனைவி இருவரும் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் சிட்லப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 625,544 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. எனினும் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 176,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.
எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.