மகாராஷ்டிராவில் நவராத்திரி கொண்டாட்டத்தில் நடனமாடிய மகன் உயிரிழந்ததைப் பார்த்து அவரது தந்தையும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், விரார் என்ற பகுதியில் நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கர்பா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணீஷ் நராப் சோனிக்ரா என்ற இளைஞர் நடனமாடினார்.
அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தந்தை நராப்ஜி மகனைத் தூக்கிக் கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட நராப்ஜியும் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் உயிரிழந்ததை கேட்டு தந்தையும் மரணமடைந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் டெல்லியில் கடவுள் சிறுவனை பலி கொடுக்க கூறியதாக இளைஞர்கள் இருவர் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் லோதி காலனி பகுதியில் ஆறு வயது சிறுவன் பிணமாக கிடந்துள்ளான்.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குறித்த சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிஸார், கட்டிட வேலை பார்க்கும் இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த இளைஞர்கள் கூறிய விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணக்காரனாக வாழ வேண்டும் என்றால் சிறுவனை நரபலி கொடுக்க வேண்டும் என கடவுள் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதனாலேயே ஆறு வயது சிறுவனை கொலை செய்ததாக குறித்த இளைஞர்கள் ஒப்புக் கொண்டனர். கைது செய்யப்பட்ட இருரும் பீகாரைச் சேர்ந்த அமீர்குமார், விஜயகுமார் என தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாய் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.
நடிகர் ராஜ்கிரணின் மகள் திருமணத்தை மீண்டும் பிரபல தொலைக்காட்சி நடத்தி வைத்துள்ளது. நடிகர் ராஜ்கிரணின் மகள் சீரியல் நடிகர் முனீஷ் ராஜா என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீரியல் நடிகர் முனீஷ் ராஜா ராஜ்கிரணின் வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பரபரப்பாக வெளியானது. இந்த திருமணத்தை அடுத்து ராஜ்கிரண், ‘அவர் தனது மகள் அல்ல என்றும் தனது வளர்ப்பு மகள் என்றும் தன்னுடைய எதிர்ப்பையும் மீறி சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்டார் என்றும் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மேலும் அவர் திருமணம் செய்து கொண்ட நடிகர் பணத்திற்காக எதையும் செய்யும் ஈனத்தனம் கொண்டவர் என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதனை அடுத்து முனிஷ்ராஜா வெளியிட்ட வீடியோவில் தனது மனைவிக்காக தான் எதையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தனது மனைவிக்காக 50 லட்ச ரூபாய் செலவில் வீடு கட்டிக் கொண்டு இருப்பதாகவும் விரைவில் அதன் திறப்பு விழா நடைபெறும் என்றும் குறிப்பிட்டு ராஜ்கிரண் கூறியது பொய் என நிறுபித்திருந்தார்.
இந்த நிலையில் ஜீ தமிழ் சேனலில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி புரமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அர்ச்சனா உள்பட நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் முனிஷ் ராஜா மற்றும் ராஜ்கிரண் வளர்ப்பு மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இதுகுறித்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் உலகமே அறிய இந்த திருமணம் நடந்தபோது ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஆனந்த கண்ணீர் வடித்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சிறுவர் தினம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, சிறுவர் தினம் தொடர்பில் ஆசிரியர் சகாப்தீன், சிறுவர்களும் தற்போதைய போக்குகளும் தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெசீம் அவர்களும் கருத்துரைகளை வழங்கினர்.
அத்துடன், மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் பொருட்டு பாடல், கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல், முட்டி உடைத்தல், பந்து பரிமாற்றம், குறி பார்த்து எறிதல், இசையும் அசைவும் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்,
ஒவ்வொரு நிகழ்விலும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் குளிர்பானம் குடித்த சிறுவனுக்கு இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மகன் அஸ்வின்(11) அதங்கோடு தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 24ஆம் திகதி தேர்வு எழுதிவிட்டு வந்த அஸ்வின், மறுநாள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுவனின் தாயார் ஷோபியா மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் அதற்குள் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பதறிய ஷோபியா, கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அஸ்வினை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்தபோது அவர் குடித்த குளிர்பானத்தில் ஆசிட் திரவம் கலந்திருந்தது தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அதன் தாக்கத்தினால் சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து சிறுவன் அஸ்வினின் தாயாரிடம் விசாரித்தபோது, தேர்வு எழுதிவிட்டு கழிவறையில் இருந்து திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத மாணவன் ஒருவன் குளிர்பானம் கொடுத்துள்ளார்.
அதனை குடித்த பின்னர் தான் சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், பயத்தினால் இந்த விடயத்தை முதலில் அஸ்வின் மறைத்ததாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக சிறுவனுக்கு ஆசிட் கலந்த குளிர்பானம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தங்கோவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் பெண் சென்று வந்த இடம் தொடர்பில் சகோதரன் சாட்சியமளித்தார். அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாடு செய்த பின்னர்,
ஞானக்காவின் தேவாலயத்திற்கு சென்ற பூஜை நடத்திவிட்டு வீடு திரும்பும் போது தனது சகோதரி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக உயிரிழந்த இரேஷா ஷியாமலியின் மூத்த சகோதரர் பிரசாத் குமார தெரிவித்துள்ளார். வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் நேற்றைய தினம் சாட்சியமளிக்கும் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவ பொலிஸாரினால் கொள்ளைக் கும்பலை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போது, கலேபிந்துவெவ பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் குண்டு பட்டமையால் அதில் பயணித்த இரேஷா என்ற 29 வயதான இளம் பெண் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் பிரேதப் பரிசோதனையை வத்துபிட்டியல வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி ரமேஷ் அழகியவன்ன மேற்கொண்டார். நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வரி காரணமாக இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மாவின் விலையை அதிகரித்துள்ளன.
இதன்படி, 13 ரூபாவினால் கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்திருந்தார். அத்துடன், கோதுமை மா இறக்குமதியாளர்களிடம் டொலர்கள் இல்லாமை காரணமாகவே கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கோதுமையுடன் துறைமுகத்தில் தேங்கியிருப்பதாகவும், அவற்றை விடுவித்தால் கோதுமை மாவின் விலை குறைவடையும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் இலங்கை தமிழ்ப்பெண் ஒருவரிடம் த.வறாக நடக்க முயன்ற அரசு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தின் இரும்பூதிப்பட்டி கிராமத்தில் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒன்றியத்தில் அன்புராஜ் (36) என்பவர் வி.ஏ.ஓ வாக பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த செப்டம்பர் 29 – ஆம் திகதி மதியம் முகாமில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த திருமணமான 35 வயது பெண்ணிடம், வீட்டினுள் அத்துமீறி நுழைந்து பா.லி.ய.ல் ரீ.தியாக வ.ன்.கொ.டு.மை செ.ய்ய முயற்சி செ.ய்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால், அ.திர்ச்சியான அந்த பெண், அவரை த.டுத்திருக்கிறார். பின்னர் அப்பெண் கூ.ச்சலிட்ட நிலையில் அன்புராஜ் அங்கிருந்து த.ப்பியுள்ளார். இந்நிலையில் மறுநாள் இரும்பூதிப்பட்டி சென்ற அன்புராஜ், அங்கு கடைக்கு வந்த அதே பெண்ணிடம் இதுதொடா்பாக பொலிசில் புகாா் செய்யக்கூடாது எனக் கொ.லை மி.ர.ட்டல் வி.டுத்தாராம்.
இதனால் அ.திர்ச்சியடைந்த அந்தப் பெண் மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பொலிசார் அன்புராஜை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின் சி.றையில் அ.டைக்கப்பட்டுள்ளார்.
சென்னையில், பிறந்த நாளுக்கு மனைவி வாழ்த்து சொல்லாததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்து பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன்.
இவரது மனைவி இந்துமதி. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மனைவி இந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து கணவன் ஜெய்கிருஷ்ணனுக்கு பிறந்த நாள் வந்துள்ளது.
நண்பர்கள் உறவினர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது மனைவி மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெய்கிருஷ்ணன், மனைவியைத் தொடர்ந்து கொண்டு ஏன் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வில்லை என கேட்டுள்ளார். மேலும் வீட்டிற்கு வரும்படியும் கூறியுள்ளார்.
ஆனால் மனைவி இந்துமதி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலிலிருந்த ஜெய்கிருஷ்ணா நேற்று இரவு வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் ஜெய்கிருஷ்ணா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாளுக்கு மனைவி வாழ்த்து சொல்லாததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிட்ரோ எரிவாயுவின் விலை 300 ரூபாவினால் குறைவடையும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, நாளை நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை இவ்வாறு 200 முதல் 300 வரையில் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அரச ஊழியர்களுக்கான சம்பள குறைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை குறைக்க அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வேதன குறைப்பு தொடர்பில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. அரச ஊழியர்களுக்கான வேதனம் மற்றும் ஓய்வூதியம் என்பவற்றுக்காக அரசாங்கம் மாதாந்தம் 119 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.
இதில் ஊழியர்களின் வேதனத்துக்காக 93 பில்லியன் ரூபாவும், ஓய்வூதியத்துக்கு 26 பில்லியன் ரூபாவும் செலவிடப்படுகிறது. வருடாந்தம் 1428 பில்லியன் ரூபா அரச ஊழியர்களின் சம்பளம் மற்று ஓய்வூதியத்துக்காக ஒதுக்கப்படுகிறது.
அதிகரித்துவரும், பணவீக்கத்துக்கு மத்தியில் ஏனையோரை போலவே அரச ஊழியர்களும் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் சம்பளங்களை குறைத்து, அவர்களை மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்க அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது.
எனவே, அரச ஊழியர்களின் பணியை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் மீண்டெழும் செலவுகளில் அரச ஊழியர்களுக்கான வேதனம் மற்றும் ஓய்வூதியம் என்பன அத்தியாவசியமானது எனக் கருத்திற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டை அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலின் பேரில், பொய் வழக்குப் பதிவு செய்து, தனது கணவரையும், குடும்பத்தினரையும் போலீசார் மிரட்டுவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகிலா என்ற பெண்மணி பாதை பிரச்சனை தொடர்பாக கடந்த 20ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிபதியிடம் ஜாமீனில் விடுதலை பெற்று வந்த கோகிலா தினமும் கீரமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த அடிப்படையில் கீரமங்கலம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வந்த நிலையில், மீண்டும் அவரை கொலை வழக்குப்பதிவு செய்து திருச்சி சிறையில் அடைப்பேன் என்று திமுகவைச் சேர்ந்த பாலு என்பவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இவரது மனைவி புவனேஸ்வரி கீரமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருவதால், மற்ற அதிகாரிகளும் புவனேஸ்வரிக்கு சாதகமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் கோகிலா மீது புகார் கொடுத்திருப்பதாக போலீசார் கூறிய தகவல் கோகிலாவின் மனதை பெரிதும் பாதித்தது. தொடர்ச்சியாக குறிப்பிட்ட குடும்பத்தினர் தனது குடும்பத்தினரையும், தன்னையும் மிரட்டி வருவதாகவும், இதனால் தனது நிம்மதி இழந்து விட்டதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு, கோகிலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தால் கோகிலாவின் உறவினர்கள் மற்றும் ஊர் ஊர்காரர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து, அறந்தாங்கி வட்டாட்சியர் ஆலங்குடி டிஎஸ்பி உள்ளிட்டோரின் தலைமையில் அந்த பாதையை சீர் செய்தனர்.
பொதுமக்களுக்கு பிரச்சனை என்ற போது பாதையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும், தனக்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், உடனடியாக பாதையை சீரமைப்பதை கண்டு பொதுமக்கள் பெரும் அதிர்ச்சடைந்துள்ளனர்.
பழைய வண்ணார்பேட்டையை அடுத்த காட்பாடா மெயின் தெருவை சேர்ந்தவர் ஷாஜஹான். இவருக்கு 47 வயதாகிறது. இவர் தனது முதல் மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், தோல் நிறுவனம் ஒன்றை ஷாஜஹான் நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது, அங்கே டெய்லராக பணிபுரிந்து வந்த ஹசீனா பேகம் என்ற பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு ஷாஜஹான் திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், ஹசீனாவை நைனியப்பன் கார்டன், ஆறாவது சந்து பகுதியில் வாடகை வீடு ஒன்றை எடுத்து தங்க வைத்துள்ளார் ஷாஜஹான். ஹசீனாவின் வீட்டிற்கு அவ்வப்போது சென்று தங்குவதையும் ஷாஜஹான் வழக்கமாக கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஹசீனாவின் வீட்டில் ஷாஜஹான் தங்கி இருந்த நிலையில், மறுநாள் காலையில் ஹசீனா பேகம் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலும், அவர் ஷாக் அடித்து இருந்ததாகவும் ஷாஜஹான் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து, தனது மகளின் கையில் காயங்கள் இருந்ததால், மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ஹசீனாவின் தாயார் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஹசீனாவின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து, ஹசீனாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இதில், மூச்சடைக்கப்படும், உடலில் மின்சாரம் செலுத்தப்பட்டும் ஹசீனா கொலை செய்யப்பட்டது உறுதியானதாக தகவல்கள் கூறுகின்றது.
இதன் பெயரில், கணவர் ஷாஜஹானிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் உண்மையை மறைத்த அவர், பின்பு மனைவி ஹசீனாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதற்கான காரணம் தொடர்பாக நடந்த விசாரணையிலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்லும் கணவர் ஷாஜஹான், தன்னுடன் நிறைய நாட்கள் தங்க வேண்டும் என ஹசீனா அவரை வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அதே போல, முதல் மனைவியுடனும் நிறைய நேரத்தை அவர் செலவிடுவதும் ஹசீனாவுக்கு பிடிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டையும் நிகழ்ந்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த ஷாஜஹான், தனது மனைவி ஹசீனா தூக்கத்தில் இருந்த போதே கொலை செய்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலமும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தான் மின்சாரம் செலுத்தி கொலை செய்ததை மறைத்து, மனைவி ஷாக் அடித்து இறந்தது போல காண்பிக்க அவரது உடலில் மிஷின் கொண்டு காயத்தை உருவாக்கியதையும் ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.
பெற்றோரால் கட்டாய திருமணம் செய்த இளம் பெண் கணவனை கைவிட்டு காதலனை திருமணம் செய்து கொண்டு அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தஞ்சை புகுந்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சிராணி (வயது 18) என்பவர் கண்டாச்சிபுரம் அருகே பழைய கருவாட்சி கிராமத்தைச் சேர்ந்த ஞானமுத்து(வயது 22) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
18 வயதே ஆன ஜான்சி ராணிக்கு கடந்த ஆண்டு அவரது பெற்றோர் உறவினரான கிளிண்டன் என்பவரை கட்டாய திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்த ஜான்சிராணி கடந்த 18ஆம் தேதி இரவு கணவன் வீட்டில் இருந்து சென்று உள்ளார்.
காதலனை திருமணம் செய்து கொண்டு அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் சித்ரா விசாரணை செய்தபோது ஜான்சி ராணி தனது காதலுடன் சேர்த்து வையுங்கள் என கேட்டு உள்ளார். விசாரணை பின் ஞானமுத்துவின் தாயருடன் ஜான்சி ராணியை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று அதிகாலை பெய்த கடும் மழையினால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 46 வயதுடைய ராமசாமி காளியம்மா மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டில் சமையலறையில் தனது மகளுடன் இருந்த வேளையில் திடீரென சுவர் இடிந்து விழுந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
எனினும் குறித்த பெண்ணின் மகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தற்போது கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,
பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை தற்போது மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளாக தெரிவித்த திம்புள்ள பத்தனை பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
A9 வீதி முறிகண்டி பகுதியில் இன்று (03.10.2022) காலை இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். உணவகம் ஒன்றிலிருந்து ஏ9 வீதியை கடந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த,
மோட்டார் சைக்கிளுடன், அதே திசையில் நேராக பயணித்த கார் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே காயங்களிற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகியன பலத்த சேதங்களிற்குள்ளாகியுள்ளன. மேலும் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.