கொழும்பில் இளம் பெண் உயிரிழப்பு : வைத்தியருக்கு எதிராக தடை!!

புத்திகா ஹர்ஷனி தர்மவிக்ரம..

வத்தளை தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்தியரின் அலட்சியத்தால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பரிசோதனை முடிவுகள் வரும் வரை வைத்தியரின் சத்திர சிகிச்சைக்கு தடை விதிக்கப்படும் என சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சர்ச்சைக்குரிய வைத்தியரால் மேற்கொள்ளப்பட்ட முன்னைய சத்திரசிகிச்சைகளினால் பல நோயாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 13ஆம் திகதி ஜா-எல, தெலத்துர பகுதியைச் சேர்ந்த புத்திகா ஹர்ஷனி தர்மவிக்ரம என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். திருமணமாகி 17 நாட்களில் ஏற்பட்ட சிறு நோய்க்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

அவரது பித்தப்பையின் ஒரு பக்கத்தில் கல் இருப்பதாகக் கூறிய மருத்துவர், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி கடந்த மாதம் 31ஆம் திகதி வத்தளையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் சத்திரசிகிச்சையின் பின்னர் கவலைக்கிடமான நிலைக்குள்ளாகியுள்ளார். அதன் பின்னர் ராகம போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த 25ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த வைத்தியரின் அலட்சியத்தால் இந்த மரணம் நிகழ்ந்ததாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மரணத்திற்கு பின் அறுவை சிகிச்சை செய்த வைத்தியரின் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வருவதால் இந்த சம்பவம் குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இறந்த மகனை மீண்டும் வாழவைத்த பெற்றோர் : மூளைச் சாவடைந்த இளைஞரின் தந்தை உருக்கம்!!

தருமபுரியில்..

தருமபுரியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் கல்லீரல், சிறுநீரகம் தானமாக பெற்றோர்கள் வழங்கியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பள்ளத்தூர் அருகே உள்ள மோட்டுக் கொட்டாய் கிராமத்தைச் சார்ந்த கமலநாதன்-வெண்ணிலா தம்பதியரின் மூத்த மகன் திவாகர்.

இவர் பொறியியல் படித்துவிட்டு, தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜோலார்பேட்டையில் தனது நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காகத் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி அருகிலிருந்த தடுப்புச் சுவர் மீது மோதி கீழே விழுந்துள்ளார். இதில் திவாகரன் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் திவாகரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திவாகர் மூளைச்சாவு அடைந்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து திவாகரன் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின் பெற்றோர் முடிவு செய்தனர்.

பின்னவர் திவாகரின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது திவாகரின் பெற்றோர் கூறுகையில், “என் மகன் உயிருடன் இல்லை என்றாலும், அவனுடைய உடல் உறுப்புகள், உயிரோடு இருப்பவர்களுக்கு, உயிர் வாழ உதவட்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் விபத்துகளில் மூளைச் சாவு ஏற்படுகின்றவர்களின் உடல் உறுப்புகளை தானம் பெற அரசு முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பரிதாபமாக பலி!!

தாலிக்குளம் பகுதியில்..

வவுனியா தாலிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாப மரணமடைந்துள்ளார். இன்று (29.09) பிற்பகல் மன்னார் வீதியூடாக துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த குறித்த முதியவரை அதேதிசையில் பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் நோயாளர் காவுவண்டியின் மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

தாலிக்குளம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் வயது 68 என்ற முதியவரே இவ்வாறு மரணமடைந்தார். மோட்டார் சைக்கிளை செலுத்திய மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!!

கர்ப்பிணிப் பெண்களுக்கு..

வவுனியாவில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஹற்றன் நசனல் வங்கியின் நிதி பங்களில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள கேட்கோர் கூடத்தில் குறித்த நிகழ்வு நேற்று (28.09) இடம்பெற்றது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரிவுக்குட்பட்ட 20 கர்ப்பிணிப் பெண்களுக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன், வைத்தியர் ஜெயதரன், வைத்தியர் யூட் பீரிஸ், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பிரியதர்சினி, ஹற்றன் நசனல் வங்கி முகாமையாளர், உதவி முகாமையாளர், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

“ஒரு காலத்தில் டியூஷன் ஆசிரியர்”… ஒரே நாளில் 14 லட்சம் வருமானம்… வாழ்க்கையே திருப்பிப் போட்ட அந்த ஒரு நாள்!!

கோடீஸ்வரி..

ஒரு காலத்தில் ட்யூஷன் டீச்சராக இருந்த பெண் ஒருவர், தற்போது கோடீஸ்வரியாக மாறியுள்ள நிலையில், இதற்கான காரணம் பலரையும் மிரள வைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் என்னும் பகுதியை சேர்ந்தவர் கவிதா.

சிறு வயது முதலே படிப்பில் நம்பர் ஒன்னாக திகழ்ந்த கவிதா, கல்லூரி படிப்பின் போதே ட்யூஷன் நடத்தி வருமானம் பெற தொடங்கி உள்ளார். வீட்டின் வறுமை நிலையை தாண்டி, கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு கிடைக்கும் பணத்தை சேமிப்பதையும் கவிதா வழக்கமாக கொண்டு வந்துள்ளார்.

தனது கல்லூரி படிப்பை முடித்த பின்னர், ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார் கவிதா. அங்கே தனது பயிற்சி காலத்தில் கவிதா இருந்த போது, உடன் இருந்தவர்கள் பங்குச்சந்தைகளில் மூழ்கி கிடப்பதை அவர் உணர்ந்துள்ளார்.

மேலும், பங்குச்சந்தை பற்றி முதல் முறையாக கவிதா அப்போது தான் கேள்விப்பட்டுள்ளார். தனக்கென கூடுதல் வருமானம் பெறுவதை ஒரு பழக்கமாக கவிதா கொண்டிருந்ததால், பங்கு வர்த்தகம் பற்றி அறியவும் முனைப்பு காட்டினார்.

தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர் மூலம் ஸ்டாக் பரிவர்த்தனை பற்றி கவிதா அறிந்து கொண்டுள்ளார். மேலும், வர்த்தக செய்தித் தாள்கள் மற்றும் இதழ்களை படித்தும் தனக்கான புரிதலை அவர் ஏற்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இன்ட்ராடே வர்த்தகம் செய்ய தொடங்கி, நாள் ஒன்றுக்கு 200 முதல் 400 ரூபாய் வரை அவர் லாபம் பார்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தனது போர்ட்போலியோவை உருவாக்க, வங்கியில் இருந்து தனிநபர் கடன் வாங்கி, பெரிய முன்னேற்றம் காணவும் கவிதா ஆரம்பித்துள்ளார்.

பங்கு சந்தை குறித்து நன்கு தெரிந்து கொண்ட கவிதா பற்றி, அவரது பெற்றோர்கள் தெரிந்து கொண்டதும் ஒரு நொடி பயந்து போயினர். பங்கு சந்தையில் பல லட்சம் கடன் ஆனால் என்னவாகும் என கருதினர். ஆனால், தனது போர்ட்போலியோவை பெற்றோர்களிடம் காண்பித்து அதில் இருக்கும் பணத்தை பற்றி அவருக்கு புரிய வைத்தார் கவிதா.

அதே வேளையில், பல முறை பங்குச் சந்தை வர்த்தகத்தில் இழப்பையும் கவிதா சந்தித்துள்ளார். அதிகபட்சமாக 8 லட்சம் ரூபாய் வரை அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதே போல, ஆப்ஷன் டிரேடிங்கில் கவிதாவின் மிகப்பெரிய லாபம் என்பது இன்று வரை ஒரே நாளில் 14 லட்சம் ரூபாய் சம்பாதித்ததாகும். ஆஸ்திரேலியாவில் தற்போது ஐடி ஊழியராக பணிபுரிந்து வரும் கவிதா, 11 ஆண்டுகளுக்கு முன் இந்திய பங்குச்சந்தை குறித்து தெரிந்து கொண்டார்.

அந்த சமயத்தில், சுமார் 30,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த கவிதாவின் பங்குச்சந்தை போர்ட்போலியோ, இன்று 2 கோடி ரூபாய்க்கு மேல் அதிக மதிப்புமிக்கதாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், புதிதாக முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு சரியான அறிவுரையை வழங்கி வருகிறார் கவிதா.

எங்களுக்கு பயமா இருந்துச்சு, நாங்க போக வேண்டாம் என்றுதான் கூறினோம் : மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற பெண்ணின் பெற்றோர்!!

செங்கல்பட்டில்..

செங்கல்பட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ரக்சயா மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சந்தித்துள்ளார். தமிழக மாவட்டம் செங்கல்பட்டைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியின் மகள் ரக்சயா. கல்லூரி மாணவியான இவர் ஜெய்ப்பூரில் நடந்த மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் கலந்துகொண்டார்.

20 வயதான ரக்சயா ஆயிரம் மொடல்களுக்கு இடையேயான போட்டியில் அழகிப் பட்டத்தை தட்டிச் சென்றார். சிறுவயது முதலே வறுமையில் வளர்ந்த ரக்சயா, தனது படிப்பு செலவுக்கு பகுதி நேர வேலை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது அடுத்ததாக மிஸ் இந்தியா பட்டத்தையும் வெல்வேன் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிலையில் ரக்சயா பெற்றோர் கூறுகையில், ‘அவளுக்கு விளையாட்டில் மிகவும் ஆர்வம், படிப்பில் சிறந்து விளங்குவார். அழகிப் போட்டிக்கு போறேன்னு அவள் கூறும்போது எங்களுக்கு பயமாக இருந்தது. போக வேண்டாம் என்றுதான் கூறினோம்.

ஆனால், எனக்கு நீங்கள் தடையாக இருக்கிறீங்க.. எனக்கு பிடிச்சத தானே நான் செய்ய முடியும். எனக்கு பிடிக்காததை செய்யுன்னு சொல்றீங்க.. அப்படீன்னு எங்ககிட்ட சொல்லுவா.. சில சமயம் எங்களிடம் சொல்லாமலே போட்டிகளுக்கு சென்றுவிடுவாள். இன்றைக்கு இங்கே போட்டி இருக்குன்னு கூட சொல்லமாட்டா.

ஏன்னா நாங்க தடையா இருப்போம் என்று நினைப்பா.. அப்புறம் போயிட்டு போன் பண்ணுவா.. பிறகு தான் எங்களுக்கு புரிந்தது. அவள் விருப்பப்படி எதுவேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டோம்’ என தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் ஆர்ப்பாட்டம் : வீதிக்கு வந்த மாணவர்கள்!!

புளியங்குளம்..

பேருந்துகள் நிறுத்தாமல் செல்வதால் பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவித்து வவுனியா கொல்லர் புளியங்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணியளவில் ஏ9 பிரதான வீதியில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த பொதுமக்கள்,

“பாடசாலைக்கு செல்வதற்காக காலை 6 மணிக்கே எமது பிள்ளைகள் வீட்டிலிருந்து சென்று பல மணிநேரம் காத்திருந்தும் பேருந்துகள் நிறுத்தப்படாமையினால் வீட்டிற்கே திரும்பி வருகின்ற நிலைமை காணப்படுகின்றது.

இதேவேளை பாடசாலை முடிவடைந்த பின்னரும் மாலை 4 மணிளவிலேயே பிள்ளைகள் வீட்டிற்கு வருகின்றனர். இதனால் எமது பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்படுவதுடன், பல்வேறு அசௌகரியங்களையும் சந்திக்கின்றனர்.

எனவே எமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பேருந்துகளை நிறுத்துவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.”என்று தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கொல்லர் புளியங்குளம், மன்னகுளம், குஞ்சுக்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, மாணவர்களை வீதியில் காத்திருக்க விடாதீர்கள், மாணவர்களின் பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்,எமது உரிமையை காப்பாற்றுங்கள் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டகார்களுடன் கலந்துரையாடலை முன்னெடுத்த கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாணவர்கள் போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு பொலிஸார் ஒத்துழைப்புகளை வழங்குவதுடன், பேருந்து சாரதி நடத்துனர்களிற்கு அறிவுறுத்தல்களையும் வழங்குவதாக வாக்குறுதி வழங்கியதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் முடிவடைந்துள்ளது.

200 கோடி மோசடி வழக்கு : குற்றவாளியை மணக்க நினைத்த இலங்கை நடிகை.. நீதிமன்றத்தின் உத்தரவு!!

பெங்களூரில்..

இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகையான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்டு வந்தார். சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது 2 தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது கணவருக்கு ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது.

மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள், பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதோடு சுகேஷை திருமணம் செய்யவும் ஜாக்குலின் திட்டமிட்டு இருந்தது அமலாக்கப்பிரிவு விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னாண்டஸை குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

இவ்வழக்கில் ஜாக்குலின் ஜாமீன் கோரியிருந்தார். அவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ரூ.50 ஆயிரம் ரொக்க ஜாமீன் வழங்கியது.

இலங்கையில் நாளுக்கு நாள் தொடர் வீழ்ச்சியில் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 590,627 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் பாரிய வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 152,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

விடைத்தாளில் எழுத்துப்பிழை : குச்சியால் அடித்தும், குத்தியும் மாணவரை கொன்ற ஆசிரியர்!!

உத்திரப்பிரதேசத்தில்..

விடைத்தாளில் இருந்த எழுத்துப் பிழைக்காக தலித் மாணவரை அடித்துக் கொன்றிருக்கிறார் ஆசிரியர். குச்சியால் அடித்தும், குத்தியும் சித்திரவதை செய்து கொலை செய்திருக்கிறார் அறிவியல் ஆசிரியர். உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூரம்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அவுரியா மாவட்டத்தில் வைஷோலி கிராமம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் நிகித்குமார், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

கடந்த 13ஆம் தேதி அன்று அறிவியல் ஆசிரியர் அஸ்வினி சிங் மாணவர்களுக்கு டெஸ்ட் வைத்துள்ளார். இந்த தேர்வில் நிகித்குமார் விடைத்தாளில் எழுத்து பிழை செய்துள்ளார்.

இதை பார்த்த அஸ்வினி சிங்கிற்கு ஆத்திரம் வந்திருக்கிறது. உடனே அந்த மாணவரின் தலை முடியை பிடித்துக் கொண்டு குச்சியால் அடித்து உச்சியால் குத்தியும் சரமாரியாக தாக்கியிருக்கிறார்.

இதில் அந்த மாணவர் மயக்கமடைந்து கீழே விழுந்திருக்கிறார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியாததால் பதறிப்போன ஆசிரியர் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கெத்தாவா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவ செலவு 40,000 ரூபாயை ஆசிரியர் அஸ்வினி குமார் ஏற்றிருக்கிறார். சிகிச்சையில் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிகித் குமார் நேற்று 26ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி இழந்திருக்கிறார்.

மாணவன் உயிரிழந்ததும் அச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதை எடுத்து அவுரியா மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி குமார் மீது பல்வேறு பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர் அஸ்வினிக்குமாரை விடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளனர்.

கிரிக்கெட் போட்டியை பார்த்தபடியே உறங்கிய 22 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம்!

ஹைதராபத்தில்..

ஹைதராபத்தை சேர்ந்தவர் சந்திரசேகர ரெட்டி. இவரின் மகன் அபிஜித் (22). இவருக்கு 70000 டொலர்கள் சம்பளத்தில் சவுதி அரேபியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் ஒன்றில் சமீபத்தில் வேலை கிடைத்துள்ளது.

அடுத்த மாதம் அந்த பணியில் அபிஜித் சேரவிருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு இந்தியா – அவுஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டியை இரவில் பார்த்த அபிஜித் அப்படியே தூங்கியிருக்கிறார்.

பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு திடீரென நெஞ்சு வலியால் துடித்த அவர் இது குறித்து பெற்றோரிடம் கூறினார். பின்னர் குடும்பத்தார் அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அபிஜித் மாரடைப்பால் இறந்தது தெரியவந்துள்ளது. அவருக்கு பெரிதாக எந்தவொரு உடல்நலப்பிரச்சனைகளும் இல்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிற்கு நாமல் ராஜபக்ஸ திடீர் விஜயம் : இராஜாங்க அமைச்சர் மஸ்தான் தலைமையில் இரகசிய சந்திப்புக்கள்!!

நாமல் ராஜபக்ஸ..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ வவுனியாவிற்கு நேற்று (27.09) வருகை தந்து கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஏற்பாடு செய்த சந்திப்புக்களில் கலந்து கொண்டார்.

நேற்று (27.09) வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த சந்திப்புக்கள் இடம்பெற்றதுடன் குறித்த சந்திப்புக்களுக்கு ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் ஏற்பாட்டில் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டவர்களுடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல்களில் அடுத்துவரும் உள்ளுராட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மீளவும் பொதுஜன பெரமுனவின் ஆட்சியை புதிய கூட்டணியாக மலரச் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டப்பட்டதாகவும், மக்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதாகவும் அதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

யாரும் இந்த தப்பை செய்யாதீங்க : ரூ. 5000 லோன் கொடுத்த அதிர்ச்சி : கதறி அழுத பிரபல நடிகை!!

லட்சுமி வாசுதேவன்..

பிரபல தமிழ் சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன், லோன் ஆப் மூலம் தான் ஏமாற்றப்பட்டதாக கதறி அழுது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், சரவணன் மீனாட்சி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, முத்தழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் லட்சுமி வாசுதேவன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

மேலும் தமிழில் வெளியான 555, தில்லாலங்கடி, திருட்டுக்கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்த இவர், சீரியல் வாயிலாக ரசிகர் மனதில் இடம்பிடித்ததோடு, விருதுகளும் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தான் லோன் ஆப் மூலம் ஏமாற்றப்பட்டதாகவும், எனது மொபைல் போனை ஹாக் செய்ட்டுள்ளதாகவும் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 லட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்தது. அதை நான் கிளிக் செய்தவுடன் அந்த ஆப் டவுன்லோட் ஆகிவிட்டது.

சுமார் 3-4 நாட்களுக்கு பிறகு நான் ரூ.5000 லோன் வாங்கியதாக ஒரு SMS வந்தது. அதை நான் கண்டுகொள்ளாமல் இருந்ததால், பல மெசேஜ்கள், போன் கால்கள் என வந்தது.

மேலும் என்னை ஆபாசமாக பேசி வாய்ஸ் மெசேஜும் வந்தது. அதோடு நான் இந்த 5000 ரூபாய் கட்டவில்லை என்றால், எனது புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டியதால், நான் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன்.

இதனிடையே என்னுடன் தொடர்பில் உள்ள உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர்கள் என அனைவர்க்கும் என்னை குறித்த ஆபாச புகைப்படங்கள் வேறு ஒரு எண்ணில் இருந்து அனுப்பட்டது எனக்கு தெரியவந்தது. அதன்பிறகே எனது மொபைல் ஹாக் செய்யப்பட்டது எனக்கு தெரியவந்தது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இது போன்ற தப்பான ஒரு லிங்கை கிளிக் பண்ணதால் எனக்கு இப்படி ஒரு நிலைமை. உங்க எண்ணிற்கு ஏதேனும் புது எண்ணில் இருந்து பரிசு விழுந்துள்ளது என்று வந்தால், அந்த லிங்கை தயவு செய்து கிளிக் செய்யாதீங்க. உங்க மொபைலும் இது போன்று ஹேக் ஆகும். ” என்று அழுதுகொண்டே கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ எடுத்து மிரட்டியதால் பலரை மணந்தேன் : 7வது திருமணத்திற்கு பட்டு சேலையில் வந்த பெண்ணின் பகீர் வாக்குமூலம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ஒன்றரை ஆண்டில் 6 திருமணம் செய்து கொண்டு ஏழாவது திருமணத்துக்கு தயாரான போது சிக்கிய பெண் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனபால் (35) என்பவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7ஆம் திகதி திருமணம் நடந்தது. இந்நிலையில், 9ம் திகதி காலை, தனபால் எழுந்து பார்த்த போது, சந்தியாவை காணவில்லை.

பீரோவில் வைத்திருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகள், தான் கொண்டு வந்த துணிகளை எடுத்துக் கொண்டு சந்தியா மாயமானது தெரிய வந்தது. இதற்கிடையே சந்தியாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கும் இடையே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இதை அறிந்த தனபால் அதிர்ச்சி அடைந்தார். சந்தியா திருமணத்திற்கு வந்தபோது அவரையும், அவரது தோழி தனலட்சுமி உள்ளிட்டோரை மடக்கி பிடித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில், சந்தியா கடந்த 1½ ஆண்டில் மட்டும் 6 பேரை திருமணம் செய்து, கைவரிசை காட்டி இருப்பதும், 7-வது திருமணத்திற்கு முயன்றபோது சிக்கி இருப்பதும் தெரியவந்தது.

கைதான சந்தியா நேற்று பொலிசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். அதில், திருமண புரோக்கர் பாலமுருகன் மற்றும் அவனது கூட்டாளிகளான ரோஷினி, மாரிமுத்து ஆகியோர் என்னை நிர்வாணப்படுத்தி போட்டோ, ஆபாச வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.

மோசடி திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால், எனது நிர்வாண படத்தை வெளியிடுவேன் என்றும் குழந்தைகளை கொன்று விடுவேன் என்றும் மிரட்டியதால், நான் இந்த திருமணங்களுக்கு சம்மதித்தேன். என்னை போல, 4 பெண்கள் இவர்களிடம் சிக்கி உள்ளனர்.

திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம், பாசமாக நான் நெருங்கி பழக வேண்டும். மொபைல்போன், பட்டுப்புடவை, பணம், நகை வேண்டுமென ஆசையாக பேசி, அவர்களிடம் வாங்கி, இவர்களிடம் தந்து விடுவேன்.

திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டில் 2 நாட்கள் தங்கி இருந்து பின்னர் பணம், நகைகள், பொருட்களை எடுத்து ஓடி விடுவோம். கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புரோக்கர் பாலமுருகன் மீது நான் பொலிசில் புகார் கொடுத்துள்ளேன்.

ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியிருக்கிறார். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாக உள்ள நால்வரை பொலிசார் தேடி வருகின்றனர்.

ஒரு பெண்ணுக்கு இரு முறையற்ற காதல்… போட்டா போட்டியில் நடந்த கொலை!!

விருகம்பாக்கத்தில்..

சென்னை, விருகம்பாக்கம், வெங்கடேசன் நகர், சாராதம்பாள் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சவுந்தர்யா (32). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவரைவிட்டு பிரிந்துள்ள சவுந்தர்யா பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் துப்பரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஜி (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒரே வீட்டில், இருவரும் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த சூழலில் நேற்று இரவு, வீட்டில் இருந்த விஜி மர்மமான முறையில் கொல்லப்பட்டு இறந்து கிடந்தார். தகவல் கிடைத்து, விருகம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது சவுந்தர்யாவின் பிள்ளைகளிடம் விசாரித்தபோது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், விஜியை கொலை செய்ததாக தெரிவித்தனர்.

பின்னர், எங்களுக்கு எதுவும் தெரியாது, நாங்கள் கடைக்கு சென்று விட்டோம் என முன்னுக்கு பின் முரணாக பேசினர். போலீசார் சந்தகமடைந்து, சவுந்தர்யாவின் செல்போனை வாங்கி பார்த்ததில், பிரபு என்பவருடன் கடைசியாக பேசியது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளியாகின. கோடம்பாக்கம், காமராஜ் காலனியை சேர்ந்த பிரபுவுக்கும், சவுந்தர்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

அந்த விவகாரம் விஜிக்கு தெரிந்து, பிரபுவை மிரட்டி வந்துள்ளார். மேலும், சவுந்தர்யா, அவரின் பிள்ளைகள் இருவரை மிரட்டி, கொடுமை படுத்தி வந்துள்ளார். இதனால், சவுந்தர்யா, பிரபு ஆகியோர் ஒன்று சேர்ந்து, பிரபுவை கொன்றது தெரியவந்தது.

கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாயின் கள்ளகாதலால் நடந்த கொலை சம்பவத்தில் தற்போது பிள்ளைகள் இருவரும் அனாதையாக நிற்கும் நிலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உடல் கருகி பலி.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

திருவாரூரில்..

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது. குறிப்பாக மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ம் 10 செ.மீ அளவுக்கு பெய்துள்ளது.

இந்நிலையில் மன்னார்குடியை அடுத்த முக்குளம் சாத்தனூர் தளிக்கோட்டை காலனி தெருவைச் சேர்ந்த விவசாயி அன்பரசன். இவர் தனது வீட்டின் அருகே உள்ள வயலில் நேரடி நெல் விதைப்பு பணியினை மேற்கொண்டிருந்தார்.

இந்தச்சூழலில் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக, வயலில் தண்ணீர் தேங்கியிருக்கும் என அஞ்சிய அன்பரசன், தனது மகன் அருள்முருகனை (27) அழைத்துக்கொண்டு வயலுக்கு சென்றார்.

அப்போது தண்ணீர் தேங்கியிருந்த அடுத்து, நீரைவெளியேற்றுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்நேரம் திடீரென இடியுடன் மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை அறிந்த உறவினர்கள் அவர்களது உடலைப் பார்த்து கதறியழுதனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த போலிஸார் இரண்டு பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மின்னல் தாக்கி, தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.