10ஆயிரம் பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!!

கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்..

கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சை திகதியை பிற்போட்டால் 10ஆயிரம் பாடசாலைகளை ஒரு மாத காலத்துக்கு மூடவேண்டிய நிலைமை ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், க.பொ.த உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்படுத்தினால் 10ஆயிரம் பாடசாலைகள் ஒரு மாதகாலத்துக்கு மூடவேண்டி ஏற்படுகின்றது. மாணவர்களுக்கு ஏற்கனவே பாடசாலை நாட்கள் குறைவாகவே காணப்படுகின்றன.

ஒரு மாதத்துக்கு பாடசாலைகளை மூடிவிடுவதால் மாணவர்களின் பாடத்தவணைகளை உரிய காலத்துக்கு முடித்துக் கொள்ள முடியாமல் போகின்றது. அதேநேரம் பாடசாலை நேர அட்டவணைக்கும், பரீட்சை நேர அட்டவணைக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகின்றது.

அத்துடன் உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்போடுவதனால் அடுத்து இடம்பெற ஏற்பாடாகி இருக்கின்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையை நடத்த முடியாமல் போகின்றது. இவ்வாறு சென்றால் ஒரு நிலைமைக்கு கொண்டுவர முடியாமல் போகும்.

கோவிட் தொற்று காரணமாக அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டிருந்தன, அதனால் ஏற்பட்ட இந்த பிரச்சினையை தற்போதுதான் ஓரளவுக்கு சரி செய்து வருகின்றோம்.

அத்துடன் உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதால் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கே கஷ்டமான நிலை ஏற்படுகின்றது. முதல் தடவையாக பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இரண்டாம் முறை பரீட்சை எழுதுவதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவதற்கு 3 மாதம் வரை காலம் இருக்கின்றது.

அவர்கள் பரீட்சைக்கான பாடநெறியை பூரணப்படுத்தி இருக்கின்றனர். என்றாலும் பரீட்சை விடயதானங்களை மாற்றி பரீட்சைக்கு முகம்கொடுப்பவர்களுக்கு சற்று சிரமம் ஏற்படலாம்.

அத்துடன் பரீட்சைகளை பிற்படுத்தும்போது அடுத்த வருட புதிய பாடசாலை தவணையை மார்ச் மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்க முடியாமல் போகும்.

கடந்த வருடம் புதிய பாடசாலை தவணை ஏப்ரல் மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அதனால் இரண்டு தவணைகளையே எமக்கு பூரணப்படுத்த முடிந்தது. அடுத்த வருடமும் இந்த நிலையே ஏற்படும்.

என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, உயர்தர பரீட்சை திகதியில் மாற்றத்தை செய்ய முடியுமா என பரீட்சை திணைக்களத்திடம் முன்வைக்கின்றேன்.

திகதியில் மாற்றம் ஏற்படும் போது ஏனைய மாணவர்களுக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

தினம் அனுபவிக்கும் சித்ரவதைகள் : காப்பாற்றுங்கள் என கதறும் வீடியோவை வெளியிட்ட பெண்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் அழகு நிலைய பெண்ணை கடத்தி சென்று அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக அவர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரவீனா. கணவர் வெளியூரில் வேலை பார்த்துவருகிறார்.

பிரவீனா மங்கலம் சாலை பகுதியில் பியூட்டி பார்லர் அழகு நிலையம் நடத்தி வந்தார். இந்த நிலையில் பிரவினாவின் தாய் சிலோ மீனா என்பவர் பல்லடம் பொலிசில் தனது மகளை இரண்டு நாட்களாக காணவில்லை அவளை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பிரவீனாவை தேடி வந்தனர். பொலிசார் பிரவீனாவை தேடி வரும் நிலையில் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது, அதில் பிரவீனா பேசியிருப்பதாவது, தமிழ்செல்வி என்பவரது கணவர் சிவகுமார் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்யலாம் என்று என்னிடம் வீட்டை வங்கி கடன் வைத்து ரூ.75000 வரை பெற்று கொண்டார்.

மேலும் சுமார் 3 கோடி ரூபாய் பணம் வரை பெற்றுக்கொண்டார். தனது வீட்டு சொத்து பத்திரம் ஏலத்துக்கு வந்த நிலையில் பணத்தை திருப்பி கேட்க முயன்ற போது தொழில் விஷயமாக வெளியூர் அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று திருச்சி பகுதியில் தன்னை அடைத்து வைத்து சில பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டதாகவும், மேலும் தன் தாய் தந்தையிடம் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டார்.

என்னை எப்படியாவது சிவக்குமாரிடம் இருந்து காப்பாற்றி விடுங்கள். நான் உங்களை சொந்த அண்ணனாக நினைத்து கேட்கிறேன். அவன் என்னை ரொம்ப சித்ரவதை செய்கிறான்.

தினம் தினம் என்னை கெஞ்ச வைக்கிறான் என கண்ணீர்மல்க பேசியிருந்தார். இதையடுத்து பிரவீனாவை காப்பாற்றும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

ஆத்திரத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

புதுச்சேரியில்..

புதுச்சேரி வினோபா நகர் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் 2-வது மனைவி லட்சுமி என்ற வள்ளியம்மை (32). இவர் கொக்கு பார்க் பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முதல் மனைவி மேட்டுப்பாளையம் பகுதியில் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் மதிவாணனுக்கு 2-வது மனைவி லட்சுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையே மதிவாணன், லட்சுமிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த மதிவாணன் வீட்டில் இருந்த மரக்கட்டையால் லட்சுமியை தலையில் பலமாக அடித்தார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனால் பயந்துபோன மதிவாணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய மதிவாணனை கைது செய்தனர்.

4 ஆண்களை திருமணம் செய்து சுழற்சி முறையில் தனித்தனியாக குடும்பம் நடத்தி வந்த பெண்!!

தமிழகத்தில்..

தமிழகத்தின் ஒரே பெண் நான்கு ஆண்களை மணந்து கொண்டு பண மோசடி செய்த சம்பவத்தின் அதிரவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது. இதோடு அப்பெண் சுழற்சி முறையில் நான்கு பேருடன் குடும்பம் நடத்தியதும் தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் (35). இவருக்கு திருமணம் செய்வதற்காக தரகர் மூலம் பெண் பார்த்துள்ளனர். அப்போது தஞ்சாவூர், அய்யம்பேட்டையை சேர்ந்த சரிதா என்ற பெண் இருப்பதாக தகவல் வந்துள்ளது.

மேலும் சரிதா ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அவரது பெற்றோர் இறந்து விட்டதாகவும் தரகர் மூலம் தெரியவந்தது. இந்த திருமணத்திற்கு தரகர் ரூ 1 லட்சத்து 20 ஆயிரம் கமிஷன் கேட்டுள்ளார். பின்னர் கடந்த 20-ம் திகதி இருவருக்கும் ஒரு கோயிலில் வைத்து திருமணம் நடந்தது.

ஒருநாள் மனைவி சரிதாவின் மொபைலுக்கு வாட்சப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜை சரவணன் பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், இங்கு இருந்து வெளியே வரமுடியவில்லை என்றும், சரவணனிடம் பெரிய தொகை எதுவும் இல்லை என்றும் சரிதா கூறியுள்ளார்.

தனக்கு அடுத்ததாக வயதான ஒருவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யுமாறும், அந்த திருமணம் முடிந்தபின் அவரிடமிருந்து பிரிந்து வந்து மீண்டும் சரவணணிடமே இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து சரவணன் தனது நண்பர்களிடம் கூற, அவர்கள் கொடுத்த ஐடியா படி தனது நண்பர் ஒருவருக்கு பெண் பார்ப்பதாகவும், எதாவது பெண் இருந்தால் கூறுமாறும், தனது மனைவியிடம் கூறியுள்ளார்.

அவர் தனது பெரியம்மாவிடம் கூறி அவர் வேறொரு பெண்ணை அறிமுகம் செய்துள்ளார். பின்னர் அவரை இங்கே அழைத்து வர சரவணன் கூறியதையடுத்து பெண் தரகர் உள்ளிட்ட அனைவரும் வந்துள்ளனர். அப்போது மனைவி உள்ளிட்ட அனைவரையும் கையும் களவுமாக பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் சரிதா என்பவர் இதுவரை நான்கு பேரை திருமணம் செய்து அவர்களுடமிருந்து விலகி வந்து, தற்போது சரவணனை திருமணம் செய்தது அம்பலமாகியது.

அவர்களுடன் சுழற்சி முறையில் குடும்பம் நடத்தியிருக்கிறார் எனவும் தெரியவந்தது. மோசடி கும்பலை கைது செய்த பொலிசார் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில் மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் திருமணமான 17 நாட்களில் உயிரிழந்த இளம் பெண் : குடும்பத்தார் எடுத்துள்ள நடவடிக்கை!!

ஹர்ஷனி தர்மவிக்ரம..

கொழும்பு – வத்தளை தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்தியரின் அலட்சியத்தால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தனியார் வைத்தியசாலை ஒன்றின் கவனயீனம் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படும் ஹர்ஷனி தர்மவிக்ரமவின் உறவினர்கள் நேற்று (01.10) பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்போது சட்டத்தரணிகளுடன் வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு வந்த அவரது குடும்பத்தினர் இது தொடர்பான முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

வத்தளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது கவனக்குறைவால் உயிரிழந்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த மாதம் 13ஆம் திகதி ஜா-எல, தெலத்துர பகுதியைச் சேர்ந்த புத்திகா ஹர்ஷனி தர்மவிக்ரம என்ற பெண் திருமணமாகி 17 நாட்களில் ஏற்பட்ட சிறு நோய்க்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

இதன்போது வத்தளையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் பல நாட்கள் உயிருக்கு போராடி வந்துள்ளார்.

அதன் பின்னர் ராகம போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த வைத்தியரின் அலட்சியத்தால் இந்த மரணம் நிகழ்ந்ததாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பெண்ணின் மரணத்திற்கு பின்னர் அறுவை சிகிச்சை செய்த வைத்தியர் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வரும் நிலையில்,உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கம்பஹாவில் பொலிஸாரின் குறி தவறி உயிரிழந்த யுவதி தொடர்பில் வெளியான தகவல்!!

கம்பஹாவில்..

கம்பஹா – மீரிகம,தங்ஹோவிட பிரதேசத்தில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பெந்தோட்ட – ஹபுருகல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இரேஷா ஷியாமலி என்ற பட்டதாரியான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த யுவதி தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் கம்பஹா பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வீடு திரும்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்த யுவதியின் தாயார் தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதி பேருந்தின் பின் பக்க ஆசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த யுவதியின் சடலம் வட்டுப்பிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா – தங்கொவிட்டவில் உள்ள மதுபானசாலையொன்றில் கொள்ளையிடும் நோக்கில் காரில் சிலர் வந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தங்கொவிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று குறித்த இடத்திற்கு வந்துள்ளது.

இதன்போது தப்ப முயன்ற கொள்ளையர்களை பிடிக்க பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில்,அருகில் சென்ற பேருந்தில் பயணித்த யுவதி அங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இரண்டு கொள்ளையர்களும் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மறைந்த இலங்கையின் பிரபல நடிகரின் இறுதிக் கிரியை தொடர்பில் விசேட அறிவிப்பு!!

தர்ஷன் தர்மராஜ்..

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் (Darshan Dharmaraj) மாரடைப்பு காரணமாக திடீர் சுகவீனமுற்ற நிலையில் தமது 41 ஆவது வயதில் காலமானார்.

இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர், திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிட்னி சந்திரசேகர என்பவரினால் 2008 ஆம் ஆண்டு இயக்கப்பட்ட சிங்கள சின்னத்திரை நாடகமான ஏ9 மூலம் தர்ஷன் தர்மராஜ் அறிமுகமானார். அவர் தமது சினிமா பயணத்தை அதே ஆண்டில் ‘பிரபாகரன்’ என்ற சிங்கள மொழித் திரைப்படத்தில் ஆரம்பித்தார்.

இலங்கை தமிழர்கள் மத்தியில் பிரபலமடைந்த சிங்கள திரைப்படங்களான இனியவன், சுனாமி போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். அத்துடன், இலங்கையில் உருவான கோமாளி கிங்ஸ் என்ற பிரபல தமிழ் மொழி திரைப்படத்திலும் தர்ஷன் தர்மராஜ் நடித்துள்ளார்.

இந்தநிலையில் அவரது பூதவுடல் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று மாலை 6 மணி முதல் அவரது பூதவுடல் சுதர்ஷி கலைஞர் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் நாளை மாலை 6 மணியளவில் அவரது பிறப்பிடமான இறக்குவானைக்கு எடுத்து செல்லப்படும். அத்துடன் இறுதி கிரியை தொடர்பான அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

யாழில் தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

வல்வெட்டித்துறையில்..

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்றுகாலை தம்பதிகள் உயிரிழந்த நிலையில், அதன் அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது. அறையில் வைக்கப்பட்டிருந்த பெற்றோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும் மனைவியும்,

தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறு சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின் அறிக்கையிடப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக இன்று அதிகாலை கண்டறியப்பட்டனர்.

இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டனர்.

தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணையில் அறையில் மின் ஒழுக்கு ஏற்பட்டமை மற்றும் பெற்றொல் பரவியமை தொடர்பில் கண்டறியப்பட்டன. அத்துடன் உயிரிழந்த மனைவியின் கையில் அலைபேசி சார்ஜர் வயர் இருந்துள்ளமை மீட்கப்பட்டது.

இதையடுத்து இன்று மாலை மந்திகை ஆதார மருத்துவமனையில் இடம்பெற்ற உடற்கூற்று விசாரணையில் தீக் காயங்களுக்கு உள்ளாகியமையினால் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

கணவனின் அலைபேசி கொழும்பில் தவறவிடப்பட்டுள்ளது. அதனால் அவர் சீனாவின் தயாரிப்பிலான அலைபேசி ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். அந்த அலைபேசி வெப்பமாகி அல்லது சார்ஜர் வெப்பமாகி தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படுக்கை அறையில் பெரிய கேனிலும் மற்றும் போத்தலிலும் பெற்றோல் சேமித்து வைக்கப்பட்டிருந்துள்ளன என்று தடயவியல் விசாரணையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் தந்தையால் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி காணாமல் போன சோகம் : கதறும் தாய்!!

முல்லைத்தீவில்..

தந்தையால் அழைத்துச் செல்லப்பட்ட 9 வயது சிறுமி 2 மாதங்களாக காணாமல் போயுள்ளதாகவும், சிறுமியை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை வழங்குமாறும் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு – ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த துஸ்யந்தன் பூமிகா என்ற 9 வயது சிறுமியே தந்தையால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 29.08.2022 அன்று யாழ்.பருத்தித்துறை பகுதியில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்றார்கள்.

இதன்போது, ​​குறித்த சிறுமி மற்றும் அவரது தந்தை சண்முகநாதன் துஸ்யந்தன் வயது 31 என்பவரும் கைது செய்யப்பட்டு, பொலிஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக தெரியவந்துள்ளதுடன், தனது மகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பருத்தித்துறை, ஐயன்குளம், அக்கராயன் ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலிஸார் சிறுமியை மீட்டெடுப்பதில் அக்கறை செலுத்தவில்லை என குறித்த தாய் கவலை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயத்தில் 4ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவியின் எதிர்காலம் கருதி 074 2747603 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொது மக்களின் உதவியை அம்மா நாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

திருமணமான 8 மாதத்தில் அரங்கேறிய கொடூரம் : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

உத்திர பிரதேசத்தில்..

உத்திர பிரதேச மாநிலம், அலிகார் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி. இவருக்கும், டெல்லியை சேர்ந்த அனுபம் என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்காக பல லட்சம் ரூபாய் அனுபமிற்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து கணவருடன் டெல்லி பகுதியில் குடியேறி உள்ளார் ஆர்த்தி. இதனிடையே, சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த ஆர்த்தி, பத்து லட்ச ரூபாய் பணமும், கார் ஒன்றை வாங்கித் தருமாறும் கேட்டு தனது கணவர் அனுபம் தன்னை துன்புறுத்துவதாக வேதனையுடன் தனது சகோதரி மற்றும் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

கல்யாணத்துக்கான கடனையே தனது தந்தை இன்னும் முற்றிலுமாக அடைத்து முடிக்காத நிலையில் மீண்டும் கணவர் இப்படி கேட்பது ஆர்த்தியை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.

இதன் காரணமாக மீண்டும் கணவருடன் வாழ வேண்டாம் என்றும் குடும்பத்தினர் கூறி உள்ளனர். ஆனால், அதனை கேட்காமல் மீண்டும் டெல்லி சென்ற ஆர்த்தி, கணவரது கொடுமையை மீண்டும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில், கணவர் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் நிலையில், போலீஸ் நிலையத்தை நாடி உள்ளார் ஆர்த்தி. தனது மொபைல் எண்ணை கணவர் பிளாக் செய்து விட்டதாகவும், அவர் எங்கே என்பதை கண்டுபிடித்து தருமாறும் கோரி உள்ளார்.

அப்போது, அனுபமிற்கு போலீசார் அழைத்து விசாரித்த போது, மனைவியுடன் வாழ விருப்பமில்லை என அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக தன்னை வரதட்சணை கொடுமை செய்யும் கணவர் மீது புகார் அளிக்கவும் போலீசார் கூறியுள்ளனர்.

ஆனாலும் தனது கணவர் மீது எந்தவித புகாரை கொடுக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளார் ஆர்த்தி. தொடர்ந்து, மீண்டும் ஆர்த்தியை அவரது வீட்டிற்கு கொண்டு போலீசார் சேர்த்துள்ளனர்.

இதனிடையே, சம்பவம் முடிந்த அடுத்த நாள் மதியம், விபரீத முடிவை எடுத்து ஆர்த்தி உயிரிழந்து விட்டதாக போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ஆர்த்தி மொபைல் போனை போலீசார் எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் சுமார் 30 முதல் 40 வினாடிகள் ஓடக்கூடிய ஆடியோ ஒன்றில் தனது வாழ்க்கை முடிந்து விட்டது என்றும் கணவர் கொடுமைப்படுத்தியது தொடர்பாகவும் சில கருத்துக்களை ஆரத்தி குறிப்பிட்டுள்ளார்.

இதன் பெயரில் மனைவி விபரீத முடிவை எடுக்க தூண்டியதன் பெயரில், அவரது கணவர் அனுபமை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் ஆர்த்தியின் குடும்பத்தினர், அவரது மறைவில் மர்மம் இருப்பதாகவும் தீவிரமாக இதனை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேனீர் குடிக்கும்போது வந்த ஒரு மின்னஞ்சல் : திறந்த அடுத்த நிமிடம் மாறிய வாழ்க்கை!!

கனடாவில்..

சிலரது வாழ்க்கையில் எப்போது என்ன திருப்புமுனை நிகழும் என்பதையே கணிக்க முடியாது. யாரும் எதிர்பாராத ஒரு நேரத்தில், நமது வாழ்க்கையே தலை கீழாக திருப்பி போடும் சம்பவங்கள் அரங்கேறும்.

அப்படி நமது வாழ்வையே திருப்பும் சம்பவங்கள் எப்போது நடைபெறும் என்பதே தெரியாது. அந்த வகையில், கனடாவை சேர்ந்த நபர் காபி குடித்து கொண்டிருந்த போது நடந்த சம்பவம், அவருக்கு உச்சகட்ட இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கனடாவின் Oakville என்னும் பகுதியைச் சேர்ந்தவர் Richard Noronha. இவருக்கு தற்போது 51 வயதாகிறது. மேலும் சுகாதார துறையிலும் ரிச்சர்ட் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக, தனது வீட்டில் இருந்த ரிச்சர்ட், காபி குடித்துக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில், ரிச்சர்டிற்கு இ மெயில் ஒன்று வந்துள்ளது. காபி குடித்த படி, அதனை திறந்து பார்த்த ரிச்சர்ட், அப்படியே ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் உறைந்து போனார்.

இதற்கு காரணம், லாட்டரி நிறுவனம் ஒன்றில் இருந்து வந்த அந்த மெயிலில், 1,29,754 டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 79 லட்ச ரூபாய்க்கு மேல்) ரிச்சர்ட் வென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் பற்றி பேசும் ரிச்சர்ட், இத்தனை பெரிய தொகை தனக்கு லாட்டரியில் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், பரிசு பணத்தை கொண்டு தானும், தனது மனைவியும் சேர்ந்து தொண்டு நிறுவனத்திற்கு பெரிய அளவில் நன்கொடை கொடுக்க திட்டம் போட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு லாட்டரியில் பணம் கிடைத்ததை கொண்டாடும் விதமாக, தனது குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு நல்ல இரவு நேர விருந்து அளிக்க உள்ளதாகவும் ரிச்சர்ட் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காபி குடிக்கும் நேரத்தில் வந்த மெயிலால், ஒருவரின் வாழ்க்கையை அப்படியே திருப்பி போட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிப் பெண்ணை கொலை செய்த காதலன் : நெஞ்சை உலுக்கும் கொடூரம்!!

ஜார்க்கண்ட்டில்..

ஜார்க்கண்ட் மாநிலம் ஹல்டியா கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் அதே பகுதிய சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார். இதனிடையே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

இதனால், அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண் காதலனை வற்புறுத்தி வந்தார். ஆனால், அந்த இளைஞர் கர்ப்பிணி காதலியை திருமணம் செய்யாமல் காரணம் கூறி மழுப்பியுள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு அப்பெண் காதலனை சந்தித்து பேசியபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த காதலன் கர்ப்பிணி என்றும் பாராமல் அடித்து கொன்றுள்ளார்.

பின்னர் அந்த இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சொந்த செலவில் சூனியம் : புதையலுக்காக நண்பனை நரபலி கொடுத்த கொடூரன்!!

கிருஷ்ணகிரியில்..

கெலமங்கலம் அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கடந்த 28ம் தேதி அவரது விவசாய தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த விவகாரத்தில் லட்சுமணனின் நண்பரான பென்னாகரத்தை சேர்ந்த மணி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விவசாய தோட்டத்தில் புதையல் எடுப்பதற்காக நண்பனையே கொன்று நரபலி கொடுத்தது தெரியவந்தது.

லட்சுமணனின் விவசாய தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், அதனை எடுக்க நரபலி கொடுக்க வேண்டும் என தருமபுரியை சேர்ந்த மந்திரவாதி ஒருவர் கூறியுள்ளார்.

அதனை நம்பிய லட்சுமணனும் மணியும், அமாவாசை அன்று மேச்சேரியை சேர்ந்த ராணி என்பவரை நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளனர் ஆனால் ராணி வராததால், கோழியை பலியிட்டு பூஜை செய்துள்ளனர்.

மீண்டும் 28ம் தேதி பூஜை செய்ய சென்ற போது, லட்சுமணனுக்கு சாமி வந்து மணியை கடிக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன மணி, லட்சுமணனை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர், தோண்டப்பட்ட குழியின் மீது லட்சுமணனின் உடலை வைத்துவிட்டு புதையல் வரும் என நீண்ட நேரம் காத்திருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அவரை போலீசார் தேடிப் பிடித்து கைது செய்தனர்.

கல்லூரி மாணவிகள் முன்பு சாகசம் காட்ட நினைத்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

காரைக்குடியில்..

காரைக்குடியில் கல்லூரி மாணவிகள் முன்பு இருசக்கர வாகனத்தில் சீன் போட நினைத்த வாலிபர் கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளது. இக்கல்லூரி அருகே இருக்கும் பேருந்து நிலையத்தில் மாணவிகள் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். இதில் வாகனத்தின் பின்னால் இருந்த இளைஞர், இருக்கையின் மேலே ஏறி நிற்க முயற்சி செய்தார். அப்போது நிலை தடுமாறி இந்த இளைஞர் கீழே விழுந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “இருச்சகர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த மஞ்சல் சட்டை அணிந்த இளைஞர், மாணவிகளை பார்த்தவுடன் இருக்கையின் மேலே ஏறி நிற்க முயற்சி செய்கிறார். அப்போது நிலை தடுமாறி அவர் சாலையில் கீழே விழும் காட்சி” பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் வந்தவர் எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலானை அடுத்து நெட்டிசன்கள் பலரும் இளைஞரை கிண்டல் அடித்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில் வாங்கிய 200 லொட்டரி.. அனைத்திலும் பரிசு பெற்று வாயடைக்க வைத்த நபர்!!

அமெரிக்காவில்..

ஒரே நேரத்தில் லொட்டரியை வாங்கி அனைத்திலும் பரிசு பெற்ற நபர் சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவில் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள அலெக்ஸ்சாண்ட்ரியா நகரை சேர்ந்தவர் அலி கெமி.

இவர், அவரின் அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க, கடந்த 6 ஆம் தேதி, விர்ஜீனியாவில் உள்ள கடை ஒன்றில் 200 ஒரு டாலர் லொட்டரி டிக்கெட்களை வாங்கியுள்ளார். அதில் வாங்கிய அனைத்து லொட்டரியிலும் ஒரே மாதிரியான நான்கு எண்களை உள்ளீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தன்னுடைய பிறந்த நாள் மற்றும் பிறந்த மாதம் ஆகியவை வரும் 0-2-6-5 என்ற எண்களை தான் வாங்கிய அனைத்து லாட்டரியிலும் உள்ளீடு செய்திருக்கிறார் அலி கெமி.

ஆனால், அதேப்போல் அதிர்ஷ்டவசமாக அவர் தேர்ந்தெடுத்த எண்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு டிக்கெட்டின் அதிகபட்ச பரிசு 5000 அமெரிக்க டாலர்கள்.

இதன் மூலம் கெமிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 8.1 கோடி ரூபாய்) கிடைத்திருக்கிறது. என்ன செய்வது என தெரியாமல் மகிழ்ச்சியில் திழைத்துள்ளார் அந்த நபர்.

விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம் : எச்சரிக்கை செய்தி!!

தேனியில்..

தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே பண்ணைப்புரம் உள்ளது. கிராமத்தின் பாவலர் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் இவருக்கு 7 வயதில் நிகிதாஸ்ரீ என்ற மகளும், அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு 6 வயதில் சுபஸ்ரீ என்ற மகளும் இருந்தனர்.

தோழிகளான இருவரும் அரசுப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்துவந்தனர். இந்நிலையில் சிறுமிகள் இருவரும் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள பெண்கள் பொது சுகாதார வளாகத்தின் கழிவு நீர் தொட்டியில் மேல் சேர்ந்து விளையாடியுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக தொட்டியின் சிமெண்ட் கல் மேல் மூடி உடைந்ததில் சிறுமியர் இருவரும் தவறி தொட்டிக்குள் விழுந்துள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் – பக்கத்தினர் தொட்டிக்குள் விழுந்த சிறுமிகள் இருவரையும் போராடி மீட்டனர்.

நிகிதாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுபஸ்ரீ செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

சிறுமிகள் இருவர் உயிரிழந்த ஆத்திரத்தில் அவர்களின் உறவினர்கள் உத்தமபாளையம் – தேவாரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பல ஆண்டுகள் பழமையான கழிவுநீர் தொட்டியை பராமரிக்க பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை முறையாக நடிவடிக்கை எடுக்காததே சிறுமிகள் உயிரிழப்பிற்கு காரணம் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சிறுமிகள் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சிறுமிகள் மரணம் குறித்து கோப்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.