இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழைப்பழம் பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படாத உணவுப் பண்டமாகும். மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
எனினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழைப்பழ ஏற்றுமதி மூலம் பெருந்தொகை டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆறு மாத காலப்பகுதியில் கதலி எனும் புளிவாழை ஏற்றுமதி மூலம் 25 ஆயிரம் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இராஜாங்கனை வாழைச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக வங்கி உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையின் விவசாயத்துறையை புதுப்பிப்பதற்காக விவசாயப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது. இந்த பிரிவு இராஜாங்கனை பிரதேசத்தில் புளிவாழை செய்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாக திட்டத்தின் பணிப்பாளர் ரொஹான் விஜேகோன் தெரிவித்தார்.
இதன் மூலம் வருடாந்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிலோகிராமுக்கும் மேற்பட்ட தரமான வாழையை உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்க முடிகின்றது.
இதேபோல் சில வெளிநாடுகளுக்கு இந்த வாழை ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஒரு மெற்றிக் தொன் வாழை 600 முதல் 700 டொலர்கள் வரை விற்பனை செய்யப்படுவதாக புதிய புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்றையதினம் (13.09.2022) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா நகர் பகுதியிலிருந்து யாழ். நோக்கி புளியங்குளம் பாடசாலைக்கு முன்பாக சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பஞ்சநாதன் குகேந்திரன் (வயது 49) என்ற நபரே மரணமடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13.09) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இன்று காலை தாண்டிக்குளம் பகுதியில் தண்டவாளத்தில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பிரதேசவாசிகள் அது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்றைய தினம் இரவு பயணித்த புகையிரத்த்தில் மோதுண்டு இரு கால்களும் துண்டிக்கப்பட்டதனால், குறித்த நபர் மரணித்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயது மதிக்கத்தக்க நபராவார். இதேவேளை, சடலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதியோரத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் சந்தேகநபரொருவர் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று (12.09.2022) மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் வாகன விபத்தினால் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் அந்த நபர் விபத்தில் சிக்குவது பதிவாகியிருந்தது. பின்னர் விபத்தை ஏற்படுத்திய நபர்கள் தொடர்பில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்தனர். அதனையடுத்து, கொட்டகலை ரொசிட்டா பகுதியில் வைத்து இந்த சம்பவத்தின் தொடர்புடைய வான் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சாரதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, மேற்படி இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததை அறிந்த சாரதி வானுக்கு அடியில் இருந்து அவரை இழுத்து, வீதி ஓரத்தில் போட்டு விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸாருக்கு குறித்த சாரதி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மொரஹல, பலாங்கொடை, மெதகமமெத்த பகுதியைச் சேர்ந்த நதீர சம்பத் (வயது 27) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் தலவாக்கலை பிரதேசத்தில் உள்ள மீன் கடையொன்றில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞன், கல்லீரல் பாதிக்கப்பட்டு வயிற்றில் அதிக இரத்த ஓட்டம் ஏற்பட்டமை காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையை மேற்கொண்ட டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய நிபுணர் இனோகா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிரிழந்த இளைஞன் அதிகளவான மதுபோதையில் இருந்துள்ளமை பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட வான் சாரதியை நாளைய தினம் (14.09.2022) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேகாலை- ரங்வலயில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த நான்காவது இளைஞரும் உயிரிழந்துள்ளார்.கடந்த 9ஆம் திகதி, கேகாலை- ரங்வலயில் இடம்பெற்ற விபத்தில்,
27 வயதான 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் சம்பவத்தில் மேலும் 2 இளைஞர்கள் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த 27 வயதான எம்.எச்.எம். அல்பாப் என்ற இளைஞர் இன்று காலை உயிரிழந்துள்ளார். இந்த விபத்துடன் தொடர்புடைய 18 வயது சாரதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 625,020 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 176,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. என்ற போதும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு குறித்த அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
பொது நிர்வாக அமைச்சிற்கு இது குறித்து ஜனாதிபதி உத்தரவு வழங்கியிருந்தார். பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு காரணமாக இவ்வாறு துக்க தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
15 மனைவிகளை திருமணம் செய்த நபர் ஒருவர் வாழ்ந்து வருவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. கென்யாவின் மேற்கு பகுதி கிராமத்தில் வாழ்ந்துவருபவர் David Sakayo Kaluhana(61). இவருக்கு மொத்தம் 15 மனைவிகள் உள்ளனர்.
இந்த 15 மனைவிகளுடனும் ஒன்றாக இணைந்து மிகவும் மகிழ்ச்சியாக தான் டேவிட் வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து, டேவிட் மற்றும் அவரது மனைவிகளுக்கு மொத்தம் 107 குழந்தைகளும் உள்ளது.
இதில் மட்டும் ஒரே மனைவியுடன் 15 குழந்தைகளை டேவிட் பெற்றெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அவர் கூறிய காரணம், முன்பு ஒரு காலத்தில் அரசராக இருந்த சாலமன் 700 மனைவிகளை கொண்டு வாழ்ந்து வந்ததாக டேவிட் கூறி உள்ளார்.
மேலும், சாலமனை விட தான் எந்த விதத்திலும் குறைந்த ஆளில்லை என கருதுவதாகவும், அதனால் தான் அதிக பெண்களை திருமணம் செய்து கொள்ள தான் விரும்புவதாகவும் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரலாற்று பேராசிரியரான டேவிட், நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்துள்ளதாகவும், அவருடைய பழங்குடியின மக்களில் இது போன்ற ஒரு மனிதர், பல தலைமுறைக்கு ஒருவர் தான் வருவதாகவும் கூறப்படுகிறது.
டேவிட் தனது மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
21 ஆண்டுகளுக்குப் பிறகு நபர் ஒருவர் தாடியை ஷேவ் செய்துள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராம்சங்கர் குப்தா என்ற சமூக ஆர்வலரான இவர் “மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர்” என்ற புதிய மாவட்டம் உருவாகும் வரை தனது தாடியை வெட்ட மாட்டேன் என சபதம் எடுத்துள்ளார்.
இதற்காக, அவர் 21 ஆண்டுகளாக தனது தாடியை ஷேவ் செய்யாமல் இருந்துள்ளார். மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மற்றும் சக்தி ஆகிய இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்தது.
இதனைத்தொடர்ந்து, குப்தா முதன்முறையாக கடந்த ஆண்டு தனது தாடியை ஷேவ் செய்துக்கொண்டார். இருந்தாலும், புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டம் நடைமுறைக்கு வர கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியுள்ளது.
இதனை அறிந்து, குப்தா மீண்டும் ஒரு வருடமாக தாடியை வெட்டவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் அமைக்க அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். தீர்மானம் நிறைவேறியதும், அவர் தனது தாடியை சவரம் செய்து கொண்டுள்ளார்.
ஒசூரில் திருமணமான நான்கு ஆண்டுகளில் இளம்பெண் கணவன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, சானசந்திரம் பகுதியை சேர்ந்தவர் தனராஜ். இவருக்கும் பெங்களூரூவைச் சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடால் ஷாலினி 2 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள அம்மா வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி மீண்டும் சானசந்திரம் கிராமத்தில் உள்ள கணவன் வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்தி வந்தார்.
இதற்கிடையில் என்ன தகராறு நடந்தது என்று தெரியவில்லை கணவன் வீட்டுக்கு வந்த 14வது நாளில் ஷாலினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
அந்த தகவலின் பேரில் ஓசூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து ஓசூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்டது குறித்து ஒசூர் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழியும் விசாரித்து வருகிறார்.
பெற்றோர் திட்டியதால் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய யூடியூபர் சிறுமி மீட்கப்பட்ட காட்சி அவரது யூடியூப் பக்கத்திலே நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்தவர் காவியா யாதவ். 16 வயது சிறுமியான இவர், சொந்தமாக ‘Bindass Kavya’ என்ற Youtube சேனல் ஒன்று நடத்தி வருகிறார். சுமார் 44 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ள இந்த சேனலை காவ்யாவின் தாயார் நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோரிடம் சண்டையிட்டு காவ்யா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து மகளை காணவில்லை என்று பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, அவர்கள் வழக்குப்பதிவு செய்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் மனம் கேட்காத பெற்றோர்கள் ஒரு பக்கம் காவ்யாவை தேடி வந்தனர். மேலும் காவ்யாவின் Youtube சேனலில் தங்கள் மகள் காணவில்லை என்றும், யாராவது பார்த்தல் உடனே தகவல் தெரிவிக்குமாறும் பெற்றோர்கள் கண்ணீருடன் கேட்டுக்கொண்டனர்.
அதோடு அவர்கள் தேடும்போது தங்களது Youtube தளத்தில் அதனை நேரடி ஒளிபரப்பும் செய்தனர். ஒரு பக்கம் பெற்றோர்கள் தேட, மறுபக்கம் காவல்துறையினர் இரயில் நிலையம், பேருந்து நிலையம் என்று வலைவீசி தேடி வந்தனர்.
அப்போது மத்திய பிரதேச மாநிலம் இதர்சி பகுதியிலுள்ள இரயில் நிலையத்திற்கு வந்த ஒரு இரயிலில் காவ்யா இறங்கியுள்ளார். இதனை கண்ட இரயில்வே காவல்துறையினர் உடனே அவரை பிடித்து தங்களது காவலில் வைத்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலையறிந்த பெற்றோர்கள் உடனே தங்கள் மகளை மீட்பதற்காக அவுரங்காபாத்திலிருந்து மத்திய பிரதேசத்திற்கு சுமார் 500 கி.மீ., பயணித்து தங்கள் மகளை மீட்டனர். இந்த காட்சிகளை தங்கள் Youtube பக்கத்தில் பெற்றோர்கள் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.
பரபரப்பான இந்த காட்சிகள் Youtube பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததை சுமார் 44 லட்ச பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். பெற்றோர்கள் தங்கள் மகளை மீட்க சென்றுள்ளதை நேரலையில் பார்த்த இணையவாசிகள் மத்தியில் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி அழகாக இருந்ததால் அடிக்கடி சந்தேகம் அடைந்த கணவன், ஒரு கட்டத்தில் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இந்த துயரம் நடந்துள்ளது.
மனைவி அழகாக இருந்ததால் அடிக்கடி சந்தேகம் அடைந்த கணவன், ஒரு கட்டத்தில் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இந்த துயரம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு அத்தனை பொருத்தங்கள் இருந்தாலும், கணவன் மனைவிக்கு இடையே நம்பிக்கை இருக்கவேண்டும். அந்த பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் போனால் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் ஏற்பட்டு ஒட்டு மொத்த வாழ்க்கையுமே சீர்குலைந்து விடும் என்பது அனுபவ மொழி.
இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையே எது வேண்டுமானாலும் வரலாம் சந்தேகம் மட்டும் வரக்கூடாது, அது வந்துவிட்டால் ஒட்டு மொத்த வாழ்க்கையுமே சீரழிந்து விடும் என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.
நிஜாமாபாத் நகரை சேர்ந்த சையது கலீம்மீன்மகள் அனீஸ் பாத்திமா, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சையது சுல்தான் என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். திருமணம் ஆன சில வருடங்கள் இவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது.
ஆனால் மனைவி பாத்திமா மிகவும் அழகானவர் என்பதால் மனைவி மீது கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது, அதன் பேரில் அடிக்கடி மனைவியை அவர் துன்புறுத்தி வந்தார், அதே நேரத்தில் மாமியாருடடுனும் சலீம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
ஒருகட்டத்தில் கணவனின் சந்தேகத்தால் சோர்வடைந்த மனைவி அனீஸ் பாத்திமா, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளுடன் நிஜாமாபாத் மூன்றாவது டவுனுக்கு உட்பட்ட பேங்க் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். மனைவி தனியாக வீடு எடுத்தது கணவனுக்கு சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் சையது சுல்தான் தனது மாமனாருக்கு போன் செய்து குழந்தைகளை பார்க்கச் செல்வதாக கூறினார், அதன் பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் போன் செய்து, உங்கள் மகளை கொன்று விட்டேன் என்று கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாத்திமாவின் தந்தை மற்றும் தாய் பாத்திமா தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர், அப்போது அங்கு பாத்திமா கழுத்து அறுக்கட்டப்பட்ட நிலையில் அலங்கோலமாக கிடந்தார், பின்னர் அது குறித்து நகரின் மூன்றாவது டவுன் போலீசுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், தனது மருமகனால் மகள் சந்தேகத்தின் பெயரால் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும், மருமகன் தன் மகளை கழுத்து அறுத்து கொன்றதாகவும் போலீசில் புகார் செய்தார், அதன் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சையது சுல்தானை தேடிவருகின்றனர்.
ஸ்மார்ட் போன் வெடித்து பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்துயரச் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. ஸ்மார்ட் போன் வெடித்து பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்துயரச் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் வைத்திருப்பவர்களை கண்டால் ஆச்சரியமாக பார்ப்பது உண்டு, ஆனால் தற்போது செல்போன் இல்லாதவர்களை பார்ப்பது தான் ஆச்சரியம். மின்சார வசதியே இல்லாத கிராமங்களில் இருப்பவர்கள் கூட இப்போது செல்போன் வைத்திருக்கின்றனர்.
அதிலும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதில் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருப்பவர்களையும் விரல் விட்டு எண்ணி விடலாம், கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் செல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை விண்ணைத் தொடும் அளவிற்கு உள்ளது.
வாரத்திற்கு ஒரு தொழில்நுட்பத்தில் செல்போன்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேநேரத்தில் செல்போன்கள் வெடித்து அதனால் ஏற்படும் விபத்துகளும் தொடர்கதையாகி வருகின்றன, பைக் ஓட்டும்போது செல்போன் வெடித்தது.
சார்ஜ் போட்டு பேசிக் கொண்டிருந்தபோது செல்போன் வெடித்தது, போன்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன, போன் வெடிப்பதால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனால் செல்போன் மீது ஒருவித அச்சம் ஏற்படுகிறது. இதுவரை இந்தியாவில் 20க்கும் அதிகமான செல்போன் வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் redmi 6A செல்போனை பயன்படுத்தி வந்தார், இந்நிலையில் ராணுவத்தில் பணிபுரியும் தனது மகனிடம் பேசிவிட்டு போனை தலைமாட்டில் வைத்து தூங்கிக் கொண்டு இருந்தார், அடுத்த நாள் அவரது மகன் தாயை சந்திக்க வந்தபோது, அவர் கருகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இது குறித்து அவரது மருமகன் மஞ்சித், தனது அத்தை உயிரிழந்தது குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று இரவு என் அத்தை இறந்துவிட்டார், அவர் redmi 6A பயன்படுத்தியிருந்தார்.
இரவில் உறங்கச் செல்லும் போது தலைமாட்டில் வைத்துக்கொண்டு உறங்கினார், அப்போது நள்ளிரவில் செல்போன் வெடித்து சிதறியது, அதில் பலத்த காயம் ஏற்பட்டு என் அத்தை உயிரிழந்துள்ளார்.
இது எங்களுக்கு மிகவும் சோகமான நேரம், எங்கள் குடும்பத்திற்கு ஸ்மார்ட்போன் நிறுவனம் உதவ முன்வர வேண்டும் என பதிவிட்டுள்ளதுடன், மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்த தனது அத்தையின் புகைப்படங்கள் மற்றும் வெடித்துச் சிதறிய செல்போன் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, உண்மையிலேயே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ரெட்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண்ணொருவர் தனது பிள்ளைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எஜமான் நகரை சேர்ந்தவர் குமார்.
லேத் பட்டறை நடத்தி வரும் இவர், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
குமார் வீட்டின் கூடத்திலும், அவரது மனைவி ஷகிராபானு பிள்ளைகளுடன் தனி அறையிலும் தூங்கியுள்ளனர். இந்த நிலையில் வெகு நேரமாகியும் அறையின் கதவு திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த குமார் அறையின்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மனைவி மற்றும் பிள்ளைகள் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர்.
இதனைக் கண்டு குமார் அதிர்ச்சியில் உறைந்து போனார். அதன் பின்னர் அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து பொலிசார் அங்கு விரைந்தனர். மூவரின் உடல்களையும் மீட்ட பொலிசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூன்று மாதங்களாக கணவன், மனைவி இடையே பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மனமுடைந்த ஷகீரா பானு, தனது மகன் மற்றும் மகளின் மூக்கில் பஞ்சு வைத்து அடைத்து, மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டுள்ளார்.
அதன் பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் தனது சகோதரனின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்த அவரது தங்கை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் களுத்துறையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 42 வயதுடைய அசேல சுரங்க சில்வா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்று முன் தினம் நெஞ்சுவலியால் திடீரென மரணமடைந்தார்.
இந்நிலையில் மறுநாள் அவரது இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளத் தயாராகும் வேளையில் அவரது இளைய சகோதரி அகம்பொடி ரங்கி துலாஞ்சனி 31 வயதான சில்வாவும் சடலத்திற்கு அருகில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவர்களின் மரணத்தின் பின்னர், அசேல சுரங்கவின் மகள், மகன், மைத்துனர் மற்றும் அத்தை ஆகியோர் அதிர்ச்சி காரணமாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலியந்தலை பேருந்து நிலையத்தில் இந்தச் சம்பவம் நேற்று (11.09.2022) இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றை கடத்திச் சென்று தனது காதலியைப் பார்க்கச் சென்ற 15 வயதான சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மத்தேகொட சித்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்துகளின் சாரதிகள் ஆசிய கிண்ண இறுதி கிரிக்கட் போட்டியை காண பேருந்து நிலையத்தின் ஓரத்தில் பேருந்துகளை நிறுத்திவிட்டு வேறு இடத்திற்குச் சென்று கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது, பேருந்து ஒன்று அங்கு இல்லாததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து பேருந்து சாரதிகள் உடனடியாக இது தொடர்பில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிஸார் உடனடியாக விசாரணையை ஆரம்பித்த போதும், பல கடைகள் மூடப்பட்டிருந்ததால் சிசிடிவி காட்சிகளையும் பொலிஸாரால் பெறமுடியவில்லை. இதனையடுத்து . பிலியந்தலை பொலிஸ் நிலையத்தின் அறிவித்தலின் பிரகாரம், பல வீதித் தடைகள் போடப்பட்டன.
நள்ளிரவு 12.30 மணியளவில் கெஸ்பேவ – பிலியந்தலை வீதியின் வீதித்தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அப்பகுதியினூடாக பயணித்த பேருந்தின் மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை நிறுத்திள்ளனர்.
அப்போதுதான் அது கடத்தப்பட்ட பேருந்துதான் என்பதை பொலிஸார் உறுதி செய்த நிலையில், தப்பி ஓட முயன்ற சிறுவனை துரத்திச் சென்று கைது செய்தனர். பேருந்தை எடுத்துச்சென்று தனது காதலியை பார்க்க சென்றுவிட்டு திரும்பி வந்தபோதே பொலிஸாரிடம் சிக்கியது தெரியவந்தது.
மொரகஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் தனது காதலி தன்னை சந்திக்க வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்ததாகவும் அதன்படி, காதலியை சந்திக்க பேருந்தில் பயணிக்க பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது பேருந்துகள் இல்லாததால் செய்வதறியாது தான் தவித்ததாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பேருந்து ஒன்றில் சாவி இருந்ததால் அதனை இயக்கி மொரகஹேன பகுதியில் உள்ள தனது காதலியை சந்திக்க சென்றதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான்.
அதேவேளை கைதான சிறுவன் இதற்கு முன்னரும் தனது காதலியை சந்திப்பதற்காக பேருந்து ஒன்றை கடத்திச் சென்றுள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.