“ஹைய்யா ஜாலி ஜாலி‌..” தாலி கட்டும்போது மகிழ்ச்சியில் கைத்தட்டி குதித்த மணப்பெண்!!

தமிழகத்தில்..

இன்றைய காலகட்டத்தில், திருமண நிகழ்வு என்பது மிகப் பெரிய ஒரு கொண்டாட்டமாக தான் பார்க்கப்படுகிறது. மணமக்கள் இருவரும், தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்கும் நாளாக திருமணம் இருந்து வருகிறது.

அப்படி ஒரு நாளை, வாழ்நாள் முழுவதும் ஒரு உணர்வுள்ள தருணமாக நினைவு கூரும் வகையில் மாற்ற தான் அனைவரும் நினைப்பார்கள். இதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் புது ஜோடிகளாக மாற போகிறவர்கள் பார்த்து பார்த்து செய்வார்கள்.

தங்களின் வாழ்நாள் முழுவதும் திருமண நாள் மிக முக்கியமான தருணமாக நினைவிருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் மனதில் இருக்கும். அந்த வகையில், தற்போது மணப்பெண் ஒருவர் தனது திருமண நாளை இன்னும் அழகாக்க, தாலி கட்டும் நேரத்தில் செய்த விஷயம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் ஒரு பகுதியில் இந்த திருமணம் நடந்துள்ள நிலையில், மாப்பிள்ளை தாலியை எடுத்துக் கொண்டு மணமகளின் கழுத்திற்கு அருகே சென்றதும் குழந்தை போலவே உற்சாகம் அடைந்து விடுகிறார் அந்த பெண்.

அது மட்டுமில்லாமல், அங்கிருந்த நண்பர்கள் அனைவரும் கத்தி கூச்சல் போட்டு திருமணத்தை கொண்டாட, மறுபக்கம் கல்யாண பொண்ணும் தனக்கு திருமணம் ஆனதால் கத்திய படியே, கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து நண்பர்கள் கத்திக் கொண்டே திருமணத்தை கொண்டாடிய படி இருக்க, மாப்பிள்ளை தாலி கட்டி முடிப்பது வரை மணப்பெண்ணின் முகத்தில் ஆனந்தம் மட்டும் தான் நிரம்பி இருந்ததை காண முடிந்தது. இறுதியில், தாலி கட்டி முடித்த பின், தனது கணவரை கட்டியணைத்த படி முத்தமும் கொடுக்கிறார் மணப்பெண்.

தனக்கு திருமணமான சமயத்தில், குழந்தை போல மாறி, கைதட்டி கொண்டாடிய மணப்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

அதிகாரிகள் அசமந்தத்தால் தந்தையின் மடியில் உயிரிழந்த பிஞ்சுக் குழந்தை!!

குழந்தை..

அதிகாரிகள் அசமந்தத்தால் தந்தையின் மடியில் நான்கு வயது பிஞ்சுக்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரகாண்டின் பித்தோராகார் மாவட்டத்தில் உள்ள பி.டி. பாண்டே மருத்துவமனைக்கு, உடல் நலக்குறைவால் தனது 4 வயது குழந்தையை அழைத்து கொண்டு பெற்றோர் சென்றுள்ளனர்.

எனினும் , குழந்தையை அவசர சிகிச்சை வார்டில் சேர்க்க மருத்துவர்கள் மறுத்து விட்டனர். அத்துடன் குழந்தையை வெளிப்புற நோயாளிகள் பிரிவில் காண்பிக்குமாறு கூறியுள்ளனர்.

அந்த வார்டில் வரிசை நீண்டு இருந்தது. குழந்தையுடன் பெற்றோர் வரிசையில் நின்றனர். அவர்கள் நீண்டநேரம் வரிசையிலேயே காத்திருந்தபோது குழந்தை தந்தையின் மடியிலேயே உயிரிழந்து விட்டது.

பெற்றோர் இருவரும் குழந்தையின் மறைவால் துக்கம் பொறுக்க முடியாமல் அழுதனர். அது காண்போரை கலங்க செய்தது. இந்நிலையில் வைத்திய அதிகாரிகளின் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் குறைவடையும் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 625,020 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் பாரிய வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 173,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

எதிர்வரும் 19ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை : சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

பாடசாலைகளுக்கு விடுமுறை..

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 19ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 19ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்திருந்தது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது என பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதன்படி பாடசாலைகளுக்கும் அதே விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் குறித்த நாளை விடுமுறை தினமாக கருதுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தாய் என நினைத்து போஸ்டர் பின்னால் ஓடிச் சென்ற குதிரைக் குட்டி : நெஞ்சை உருக்கும் புகைப்படம்!!

குதிரை..

இணைய உலகில் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகின்றன. அதிலும் செல்ல பிராணிகளின் குறும்புகள் அல்லது மனதை தொடும் வகையிலான செய்கைகள் சில சமயங்களில் நமது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.

சில சமயங்களில் நமது கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும். அந்த வகையில் குதிரை ஒன்றின் புகைப்படம் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. தாய் என நினைத்து புகைப்படத்தின் பின்னால் குதிரை குட்டி ஓடியுள்ளது.

பேருந்து கிளம்பிய போது குதிரை படத்தைப் பார்த்தபடியே பேருந்தை துரத்தி சென்று கத்தியது. குதிரை குட்டியின் இந்த செயலை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

கோபத்தில் இருந்த ஆசிரியை : முத்தம் கொடுத்து கூல் ஆக்கிய மாணவன் : வைரல் காட்சி!!

வகுப்பறையில்..

பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் கோபத்தில் இருக்கும் தருணத்தில் மாணவர் ஒருவர் முத்தமிட்டு ஆசிரியையை சமாதானப்படுத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக பள்ளி வகுப்பறையில் குழந்தைகள் சேட்டை என்பது அதிகமாகவே இருக்கும். வீடுகளில் 2 குழந்தைகள் இருக்கும்போதே அவர்கள் சேட்டையை சமாளிக்க முடியாமல் பெற்றோர்கள் தவிக்கும் நிலையில், பள்ளியில் ஆசிரியைகைள் 30 குழந்தைகளுக்கு மேல் சமாளிப்பது என்பது கடினமே.

இங்கு ஒரு குழந்தை வகுப்பில் குறும்புத்தனம் செய்யத் தொடங்குகிறது, அவரைப் பார்த்து ஆசிரியர் கோபமடைந்து தனது இருக்கையில் சென்று அமர்ந்தவரை முத்தம் கொடுத்து சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றது.

ஆசிரியரை சமாதானம் படுத்தும் போது, ​குறும்புத்தனம் செய்ய மாட்டேன் என்று திரும்பத் திரும்ப கூறுகிறார், ஆனால் ஆசிரியர் அவர் சொல்வதைக் கேட்கத் தயாராக இல்லை.

இதற்கிடையில் அந்த மாணவன் ஆசிரியரை மீண்டும் மீண்டும் அணைத்துக் கொள்கிறார். அத்துடன் அவரது ஆசிரியருக்கு முத்தமிட்டு சமாதானம் படுத்த முயற்சிக்கிறான். இறுதியில் அந்த ஆசிரியரும் குழந்தைக்கு முத்தமிட்டு இனி இப்படி குறும்புத்தனம் செய்ய கூடாது என்று கூறி கட்டி அணைத்துக்கொள்கிறார்.

காதலனின் திருமணத்தை நிறுத்திய பெண் : கம்பி நீட்டிய காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சிங்கப்பூரில்..

சிங்கப்பூரில் டிக் டாக்கில் பழகிய பெண்ணை ஏமாற்றிவிட்டு, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு வந்த இளைஞர் மீது சிங்கப்பூர் பெண் ஆன்லைன் புகார் அளித்த நிலையில், அவரை திருமணம் செய்த இருந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்தவர் புத்தூரணி பிரபு இவர் சிங்கப்பூரில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே அங்கு டிக்டாக்கில் வீடியோக்கள் பதிவிட்டு வந்துள்ளார்.

டிக் டாக் மூலம் சிங்கப்பூர் வாழ் இந்திய பெண்ணான சியாமளா என்பவரும் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது இருவரும் இணைந்து பல டிக் டாக் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் பிரபு சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டார் இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள சியாமளா பிரபு தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடைய வீட்டிலேயே தங்கி இருந்ததாகவும் தேவகோட்டைக்கு தனது தாயாருக்கு ஒரு கடை அமைத்து தருவதாக கூறிவிட்டு சென்றவர் அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும் காவல்துறையினருக்கு ஒரு புகார் மனுவை சியாமளா ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார்.

இந்த புகார் மீது விசாரணை செய்த தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் சரவணன் கூறும் பொழுது சிங்கப்பூரிலிருந்து ஆன்லைனில் சியாமளா என்பவர் புகார் அளித்துள்ளார் பிரபுவும் சியாமளாவும் டிக் டாக்கில் பல வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர் இருவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.

ஆனால் பிரபு சிங்கப்பூர் பெண் சியாமளாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியதற்கான ஆதாரங்கள் எதுவும் சியாமளா தங்களுக்கு அனுப்பவில்லை என்றார். பிரபுவிடம் விசாரணை செய்ததில் சிங்கப்பூரில் சியாமளா ஏற்கனவே திருமணம் ஆகியதை மறைத்து தன்னிடம் பழகினார் என்றும் இது தெரிந்ததால் தான் அங்கிருந்து சொந்த ஊர் திரும்பி விட்டதாகவும் வீட்டில் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை மறுமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இரு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி மீண்டும் விசாரணைக்கு அழைத்து விசாரணை செய்ய உள்ளோம் என்று போலீசார் கூறியுள்ள நிலையில், நேற்று தேவகோட்டையில் பிரபுக்கும் கன்னங்குடியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் திருமணம் பிரபு குறித்த தகவல்கள் தெரிய வந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திவிட்டார்.

திருமணநாளில் மனைவியை கொலை செய்த கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமண நாளில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் அக்பர் காலனி தெருவைச் சேர்த்தவர் ராயப்பன். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராயப்பன் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒரு வருடத்திற்கு முன்பே ரேவதி தனது கணவரை பிரிந்து சென்று தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த தம்பதியின் திருமண நாள் என்பதால், மனைவியை காண ராயப்பன் சென்றுள்ளார். அங்கு தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அவர் ரேவதியை அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவிக்கவே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ராயப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி ரேவதியை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், தப்பி ஓடிய ராயப்பனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வு எழுத துணிச்சலோடு ஆற்றைக் கடந்த மாணவி : தோள் கொடுத்து உதவிய சகோதரர்கள் : நெகிழ்ச்சியான தருணம்!!

ஆந்திராவில்..

ஆந்திராவில் தேர்வு எழுத விடாமுயற்சியோடு இருந்த மாணவி ஆற்றைக் கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் ஆறு ஏரி மற்றும் வாய்க்கால்களில் நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

இதனால் மக்கள் தங்கள் இயழ்பு வாழ்கையை மேற்கொள்ளமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், மழை வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல், ஆற்றைக் கடந்து கல்லூரி மாணவி ஒருவர் தேர்வு எழுதச் சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில விசாகப்பட்டினம் அருகே கஜபதிநகரத்தைச் சேர்ந்தவர் தத்தி கலாவதி(21). இவர் விசாகப்பட்டினத்தில் தேர்வு எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. மழையால் கால்வாய்கள் நிரம்பியதால் ஆற்றைக் கடந்து தேர்வு எழுதச் செல்லமுடியாது என பெற்றோர் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால் மாணவி கலாவதியோ எப்படியாது தேர்வு எழுதியே தீரவேண்டும் என வீட்டில் அடம்பிடித்து தேர்வு எழுதச்செல்ல அனுமதி வாங்கியுள்ளார். அதன்படி வெள்ளிக்கிழமையன்று சகோதரர் மற்றும் உறவினர்கள் உதவியோடு தேர்வு எழுதச் செல்ல ஆற்றுப் பகுதிக்கு வந்துள்ளார்.

ஆற்றில் இறங்கிய பின்னர் வெள்ளத்தின் வேகம் அதிகமானதை உணர்ந்த மாணவி கலாவதி தொடர்ந்து ஆற்றைக் கடக்க முயன்றார். ஆனால், நீச்சல் தெரியாத நிலையில் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்த கலாவதியிம் நிலையை உணர்ந்த மாணவியின் சகோதரரும், உறவினரும் உடனடியாக மாணவியை நீரில் ஆழத்தில் இருந்து மீட்டனர்.

பின்னர் மாணவியை தோளில் தூக்கி அமரவைத்து ஆற்றைக் கடக்க உதவி செய்தனர். இந்த சம்பவத்தை ஆற்றின் அக்கறையில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தேர்வு எழுத விடாமுயற்சியோடு இருந்த மாணவியையும், அவருக்கு உதவிய சகோதரர் மற்றும் உறவினருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கேக் என நினைத்து எலி பேஸ்டை சாப்பிட்ட சிறுமி மரணம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

காரைக்காலில்..

புதுச்சேரி காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி பகுதியில் வசிப்பவர் ராஜா. அவரது மனைவி ஸ்டெல்லா மேரி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் சலேத் நிதிக்சனா (வயது14).

அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். சலேத் நிதிக்சாவிற்கு தசை சுருக்க நோய் ஏற்பட்டதால் சரியாக நடக்க முடியாமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் சலேத் நிதிக்சனா வீட்டின் ஜன்னல் சுவற்றில் இருந்த எலி மருந்து பேஸ்டை ‘கேக்’ என நினைத்து எடுத்து சாப்பிட்டுள்ளார்.

இதனால் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு தான் புதுச்சேரி மாநிலத்தில் எலி பேஸ்ட்டை தடை செய்வது தொடர்பாக சுகாதாரத்துறை முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆலோசித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியின் அனுமதியுடன் திருநங்கையை திருமணம் செய்த கணவன்!!

ஒடிசாவில்..

ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பஹிர்( 32) என்பவர் திருமணமாகி 2 வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு சங்கீதா என்ற திருநங்கை இவருக்கு அறிமுகமானார்.

நாளடைவில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. பஹிர் தனது காதலை ரகசியமாகவே வைத்திருந்தார். ஆனால் அவரது காதலை அவரின மனைவி கண்டுபிடித்தார். இது குறித்து தனது கணவருடன் மனைவி பேசினார். அவர்களின் காதலை பஹரின் மனைவி அங்கீகரித்தார்.

அதோடு நிற்காமல் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார். பஹிர் மனைவி தான் இருவரையும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். உடனே இருவரும் ஒத்துக்கொண்டனர். இருவருக்கும் திருநங்கைகள் புடைசூழ கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

ராணிக்கு அஞ்சலி செலுத்த காத்திருக்கும் இலங்கைப் பெண் : அவர் கூறிய உருக்கமான பின்னணி!!

தமிழ் பெண்..

காலமான பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த முன் வரிசையில் காத்திருப்பதாக இலங்கையரான தமிழ் பெண்மணி ஒருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ராணியார் உடல் தற்போது எடின்பர்க் புனித கைல்ஸ் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் எடின்பர்க் விமான நிலையம் கொண்டுச் எல்லப்பட்டு, அங்கிருந்து லண்டன் நகருக்கு எடுத்துவரப்படுகிறது.

தொடர்ந்து, ராணியாரின் உடல் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் நான்கு நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் பகுதியில் ஆயிரக்கணக்கணக்கான மக்கள் ஏற்கனவே ராணியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரவு பகலாக காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

அதில் ஒருவர் இலங்கைத் தமிழரான லண்டனில் வசிக்கும் 56 வயதான வனேசா நந்தகுமாரன். ராணியாருக்கு அஞ்சலி செலுத்தவிருக்கும் பொதுமக்களில் தாம் முதல் வரிசையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகம் வழியாக கடந்து செல்கையில், பொதுமக்கள் அஞ்சலிக்கான வரிசை லம்பேத் பாலத்திற்கு தெற்கே தொடங்கும் என கேள்விப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்தப்பகுதிக்கு விரைந்த வனேசா, தற்போது முதல் வரிசையில் காத்திருப்போரில் ஒருவர் என தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை முதல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் பகுதியில் ராணியாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இதுவரை நாட்டுக்கு அவர் அளித்த சேவைகளுக்கு, அவருக்கு நன்றி கூற வேண்டும், அதற்காகவே காத்திருப்பதாக வனேசா உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த காத்திருப்பு உண்மையில் வீண்போகாது என்றார் வனேசா. பிரித்தானியாவுக்காகவும் சர்வதேச நாடுகளுக்காகவும் ராணியார் அளப்பரிய சேவைகளை முன்னெடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார் வனேசா.

அவரது பெரிய மாமா ஆறாம் ஜார்ஜ் மன்னரால் நைட் பட்டம் பெற்றவர் என்றும், இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டதாகவும் வனேசா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமது உரிமைகளை திரும்பப்பெற விரும்பியபோது, ராணியாரால் நாட்டுக்கு சுதந்திரத்தை அளித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னர் இளவரசி டயானாவின் இறுதிச்சடங்குகளின் போதும் பல மணி நேரம் இதுபோன்று தாம் காத்திருந்ததை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை வரையில் ராணியாரின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். 750,000 முதல் 1 மில்லியன் மக்கள் வரையில் வரிசையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

திங்கட்கிழமையில் இருந்தே பொலிசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் குழு வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதை தடுத்து நிறுத்த நினைக்காதே என கவனயீர்ப்புப் போராட்டம்!!

கவனயீர்ப்புப் போராட்டம்..

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலிற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (14.09.2022) முன்னெடுக்கப்பட்டது

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா குருமன்காடு காளி கோவில் ஆலய பின்புறமாக இடம் பெற்றது.

இதன் போது, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்பில் பதாதைகள் ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் ஏழுப்பியிருந்தனர்.

பேருந்தின் மிதி பலகையில் பயணம் செய்த மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்..

எல்பிட்டிய பிரதான வீதியில் எல்பிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் மிதி பலகையில் இருந்து பாடசாலை மாணவர் ஒருவர் தவறி விழுந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று (14.09.2022) காலை பாடசாலை ஆரம்பிக்கும் முன்னர் குறித்த பேருந்து எல்பிட்டிய டிப்போவுக்கு அருகில் வேகமாக பயணித்துள்ளது. இதன்போது பேருந்தின் மிதி பலகையில் பயணம் செய்த குறித்த மாணவர் திடீரென தவறி தரையில் விழுந்துள்ளார்.

விபத்தில் குறித்த மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் எல்பிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது . மேலும் இந்த சம்பவத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று (13.09.2022) இடம்பெற்றுள்ளது.
பெரியசாமி ராஜ்குமார் (வயது 32) என்ற குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த சாரதி அங்கிருந்த மக்களால் ஒட்டுசுட்டான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் 24 வயது இளம் ஆசிரியையின் விபரீத முடிவு!!

சிவகுமாரன் நிருத்திகா..

யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (1309.2022) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சிவகுமாரன் நிருத்திகா (வயது 24) என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.