இலங்கையில் காலணிகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், எளிமையாக தவணை முறையில் பணத்தை செலுத்தி காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க காலணி தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
ஒரு ஜோடி காலணியின் (சப்பாத்து) விலையானது 7 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் இருப்பதால், அதற்கான விலையை தவணை முறையில் செலுத்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
2500ஆயிரம் ரூபா பெறுமதியான காலணிக்கு மூன்று தவணைகளில் பணத்தை செலுத்த முடியும் என காலணி தயாரிப்பு நிறுவனங்கள் இணையத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளன.
ஆந்திராவில் திருமணம் ஆன புது மாப்பிள்ளை, முதலிரவு அறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரி பள்ளியை சேர்ந்த துளசி பிரசாத் மற்றும் மதனப்பள்ளியை சேர்ந்த இளம் பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 13ம் திகதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் திருமணமான அன்று முதலிரவு அறைக்குள் சென்ற துளசி பிரசாத் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளம் பெண் மருத்துவர் ஒருவர் காய்ச்சல் பாதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் ஓச்சிரா ஆரம்ப சுகாதார நிலைய இல்ல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். சுபி சந்திரசேகரன் (26) காய்ச்சலால் உயிரிழந்தார்.
கடுமையான காய்ச்சல் காரணமாக கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுபி உயிரிழந்தார்.
திடீர் காய்ச்சலால் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சக மருத்துவர்கள், பணியாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் உயிர்காக்க விசேட அதிரடிப்படையினரால் பொலிஸார் ஒருவரிடம் ஒரு தொகைப்பணம் கையளிக்கப்பட்டது. வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனுராத பஸ்நாயக எனும் பொலிஸாரின்,
ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தையின் மருத்துவச்செலவுக்கு ஒருகோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய் வரை பணம் தேவைப்பட்ட நிலையில்,
விசேட அதிரடிப்படையினரால் இலங்கை ரீதியாக அதிரடிப்படையினரிடம் திரட்டப்பட்ட ஒரு தொகைப் பணத்தை இன்றைய தினம் வவுனியா பொஸில் நிலையத்தில், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில் விசேட அதிரடிப்படை அதிகாரியினால் கையளிக்கப்பட்டது.
வெளிநாட்டில் உதவியாளர் பணி வாங்கி தருவதாக தெரிவித்து ஐதராபாத்தில் உள்ள நிறுவனத்திடம் பணத்தை செலுத்தி விட்டு, கடந்த 3ம் திகதி குவைத்-திற்கு தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்கா லஷ்மங்குடி கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார்(30) சென்றுள்ளார்.
ஆனால் துபாயில் முத்துக்குமாருக்கு அலுவலக உதவியாளர் பணிக்கு பதிலாக பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை வழங்கப்பட்டதாக தெரிகிறது. முத்துகுமாருக்கு வித்யா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கும் நிலையில், வேலைக்கு சேர்ந்த இரண்டு நாட்களிலேயே தனக்கு வேலை பிடிக்கவில்லை என்று குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை முத்துக்குமரன் தொடர் கொள்ள முயன்ற போது, ஆத்திரமடைந்த பண்ணை முதலாளி அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.
கடந்த 3ம் திகதி துபாய்க்கு சென்ற முத்துக்குமார் இறுதியாக 6ம் திகதி அவரது குடும்பத்துடன் தொடர்பில் இருந்துள்ளார், அதற்கு அடுத்த நாள் குமரனை தொடர்பு கொள்ள அவரது குடும்பம் முயற்சி செய்த போது, அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக இது தொடர்பாக 24 வயது குவைத் இளைஞர் கைது செய்யப்பட்டதாகவும் குவைத் நாளிதழான ‘இமான் மேட் நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குவைத்தில் பணிபுரியும் அவரது உறவினர் சுட்டுக் கொல்லப்பட்ட உடலை நேரில் கண்டு இறந்தவர் முத்துக்குமரன் என்பதை உறுதி செய்தார்.
இதையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், முத்துக்குமரனின் மனைவி தன்னிடம் அளித்த மனு தொடர்பான, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வசிப்போரை வெளிநாடு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்ததாக இன்று (16.09) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு, வத்தளைப் பகுதியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான தனியார் நிறுவனம் ஒன்றினை நடத்தி வரும் நபர் ஒருவர் கிளிநொச்சி, பூநகரி பகுதியைச் சேர்ந்த ஒரு நபரை வெளிநாடு அனுப்புவதாக கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம 10 ஆம் திகதி 12 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.
அதனை அண்மித்த காலப்பகுயில் கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமும் வெளிநாடு அனுப்புவதாக தெரிவித்து 30 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.
வெளிநாடு அனுப்புவதாக குறித்த இருவரிடமும் பணத்தைப் பெற்ற போதும் அவர்கள் இருவரையும் வெளிநாடு அனுப்பாது, பணத்தையும் வழங்காது குறித்த நபர் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபருக்கு எதிராக பாதிக்கப்பட்ட இருவரும் கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், வவுனியாவைச் சேர்ந்த ஒருவரிடம் வெளிநாடு அனுப்புவதாக கூறி குறித்த நபரால் 32 இலட்சம் ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளது.
அவர்களையும் வெளிநாடு அனுப்பாது ஏமாற்றி வந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து, பணத்தை பெற்றுக் கொண்ட நபர் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு, வத்தளைப் பகுதியில் வசித்து வரும் 49 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார். மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்வரை நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கத்தாரில் கேரளாவைச் சேர்ந்த 4 வயது குழந்தை பள்ளி வேனில் அடைக்கப்பட்டதால் மரணம். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்பிரிங்ஃபீல்ட் மழலையர் பள்ளியை மூட கத்தாரின் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கத்தாரில், இந்தியாவன் கேரளாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் படித்த மழலையர் பள்ளி கத்தார் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளாவைச் சேர்ந்த கேஜி 1 மாணவி மின்சா மரியம் ஜேக்கப் (Minsa Mariyam Jacob), கத்தாரில் உள்ள அல் வக்ராவில் பள்ளி பேருந்திற்குள் பல மணிநேரம் பூட்டப்பட்டதால் தனது பிறந்தநாளிலேயே உயிரிழந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை மூடப்பட்ட பள்ளி வேனில் விட்டுச் செல்லப்பட்ட அவர் மூச்சுத் திணறி இறந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அல் வக்ராவில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் மழலையர் பள்ளியை மூட கத்தாரின் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் (MoEHE) முடிவு செய்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட கலீஜ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. “விசாரணையில் தொழிலாளர்களின் அலட்சியம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, மாணவி ஒருவரின் மரணத்துடன் சமூகத்தை உலுக்கிய சோகமான விபத்தை கண்ட தனியார் மழலையர் பள்ளியை மூடுவதற்கு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் முடிவு செய்தது.
நமது பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை அமைச்சகம் புதுப்பிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தனியார் மழலையர் பள்ளியில் குறைந்த பணியாளர்களே உள்ளனர் என்பதால் இந்த மரணம் நிகழ்ந்தது என்று அது மேலும் கூறியது. மின்சா ஞாயிற்றுக்கிழமை காலை பேருந்தில் ஏறியதாகவும் ஆனால் பள்ளிக்குச் செல்லும் வழியில் மயங்கி விழுந்ததாகவும் குழந்தையின் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
குழந்தை பேருந்தின் உள்ளே இருப்பதை அறியாமல் வாகன ஊழியர்கள், பேருந்தை பூட்டிவிட்டு வாகன நிறுத்துமிடத்திற்கு நகர்த்திவிட்டு சென்றனர். பிற்பகலில் அவர்கள் வாகனத்திற்குத் திரும்பியபோது, 4 வயது சிறுமி சுயநினைவின்றி இருப்பதைக் கண்ட பணியாளர்கள் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
கடும் வெப்பத்தில் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, மின்சாவின் அஸ்தி விமானம் மூலம் கொச்சிக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சிங்கவனத்தில் உள்ள அவரது சொந்த இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவரை ஆட்களை வைத்து கொலை செய்த மனைவி உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சடலத்தை கைப்பற்றிய பெரும்பாலை காவல் நிலைய போலீசார் உடற்கூராய்வுக்காக தருமபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த இளைஞர் இண்டூர் அருகே சோம்பட்டியை சேர்ந்த மணி(வயது 30) என்பதும், டெம்போ ஓட்டுநராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. உயிரிழந்த மணிக்கு அம்சவள்ளி என்ற மனைவியும், இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
இளைஞரின் மரணத்திற்கான காரணம் குறித்து ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் இறந்து போன மணியின் மனைவி, மாமியார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது சந்தேகம் எழுந்தது.
பின்னர் கவனத்தை மணியின் மனைவி அம்சவள்ளி மீது திருப்பிய போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அம்சவள்ளி தனது கல்லூரி காதலன் சந்தோஷ்( வயது 27) மூலம், கணவனை பெட்ரோல் ஊற்றி, எரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
பின்னர் பெங்களூருவில் பேப்பர் கடை வைத்திருந்த சந்தோஷை கைது செய்து பெரும்பாலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த அதே ஊரை சேர்ந்த லோகேஷ் (வயது 23) மணியின் மனைவி அம்சவள்ளி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அம்சவள்ளிக்கு அதிக ஆண் நண்பர்கள் இருந்து வந்ததுள்ளனர். இதனை அவரது கணவர் கண்டித்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
அதனால் கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய அம்சவள்ளி சம்பவத்தன்று காலை கணவருக்கு பணம் கொடுத்து மதுகுடிக்க அனுப்பியுள்ளார். மணி தனது மனைவி கொடுத்த பணத்தில் தொடர்ந்து மாலை வரை குடித்துள்ளார். பிறகு மாலை உனது நண்பர் சந்தோஷ் அழைக்கிறார் சென்று வா என்று என மனைவி அனுப்பி வைத்துள்ளார்.
சந்தோஷ் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்று சென்றதால் மணியுடன் நண்பராகியுள்ளார். சந்தோஷை சந்திக்க சென்று அங்கும் அவருடன் சேர்ந்து மணி மது அருந்தியுள்ளார்.
போதை தலைக்கேறிய மணி அசைவற்று கிடந்தபோது சந்தோஷ் மற்றும் லோகேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் அமரவைத்து பெரும்பாலை அருகே உள்ள நரசிபுரம் சுடுகாட்டிற்கு சுமார் 25 கிலோமீட்டர் தூரம் கூட்டிச் சென்று கை, கால்களை கட்டுப்போது மார்பு பகுதியில் எட்டி உதைத்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க கொலை செய்த மணியின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு பெங்களூருவிற்கு தப்பி சென்றுள்ளனர். கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவரை இளம்பெண் திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் தருமபுரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு மறுத்த காதலியை பாலியல் வன்கொடுமை செய்து கல்லால் அடித்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன் அவரைக் கொன்று புதைத்திருக்கிறார். தெலுங்கானாவில் நடந்து இருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.
தெலுங்கானா மாநிலத்தில் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். கல்லூரி மாணவியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ சைலம் என்ற இளைஞரை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய வந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். பெற்போரின் பேச்சை கேட்ட அந்த இளம் பெண் காதலனிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டிருக்கிறார் .
கடந்த ஐந்தாம் தேதி காதலியை செல்போனில் அழைத்து இருக்கிறார் . ஐந்து வருடங்களாக காதலித்து விட்டு இப்படி திடீர் என்று பேசாமல் இருப்பது சரியா என்று கேட்டிருக்கிறார்.
பெற்றோர் பேச்சை என்னால் மீற முடியாது என்று அந்த இளம் பெண் உறுதியாக சொல்லவும், சரி, கடைசியாக ஒருமுறை மட்டும் வந்து சந்தித்து பேசிவிட்டு போய்விடலாம் என்று அழைத்திருக்கிறார். அதை நம்பி அந்த இளம்பெண் காதலன் ஸ்ரீசைலம் உடன் சென்றிருக்கிறார் .
ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதும் காதலித்து விட்டு ஏமாற்றி விட்டு செல்கிறாயே உன்னை சும்மா விடுவேனா என்று மிரட்டி இருக்கிறார். அந்த பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கி இருக்கிறார் அதன் பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.
அந்த பெண், இத்தனை வருடம் காதலித்த நீ இப்படி செய்து விட்டாயே என்று அழுது புலம்பி இருக்கிறார் . உன்னை சும்மா விடமாட்டேன் . நீ நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதே போலீசுக்கு போன் செய்து உன்னை கைது செய்ய வைக்கிறேன் என்று போலீசுக்கு போன் செய்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீசைலம் காதலியை கல்லால் அடித்திருக்கிறார். துப்பட்டாவால் கழுத்தை நெரித்திருக்கிறார். அவர் இறந்திருக்கிறார். அதன் பின்னர் தனது உறவினர் சிவா என்பவரை அழைத்து அவரின் உதவியுடன் கால்வாயில் குழி தோண்டி அங்கேயே காதலியை புதைத்து விட்டு தலைமறைவாக இருக்கிறார்.
இதற்கிடையில் மகளை காணவில்லை என்று பெற்றோர் தேடத் தொடங்கி இருக்கிறார்கள் . காதலனுடன் செல்கிறேன் என்று மாணவி அனுப்பிய குறுந்தகவல் பெற்றோருக்கு கிடைத்திருக்கிறது.
இதில் சந்தேகம் அடைந்த அவர்கள் போலீசில் புகார் அளிக்க, போலீசார் ஸ்ரீசைலம் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தெரியவந்த போது தான் , காட்டுப்பகுதியில் நண்பருடன் பதுங்கி இருந்த வரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் காதலியை கொலை செய்து புதைத்ததை ஒப்பு கொண்டிருக்கிறார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதைக்கப்பட்ட அந்த பெண்ணின் சடலத்தை போலீசார் தோன்றி எடுத்துள்ளனர். ஸ்ரீசைலம், உதவியாக இருந்த சிவாவையும் போலீசார் கைது சிறையில் அடைத்து உள்ளனர்.
உளுந்தூர்பேட்டையில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல், உடல் பிரேத பரிசோதனை செய்யாமல் அலைக்கழிக்கப்படுவதாக கூறி பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பிரகாஷ் நகரை சேர்ந்த மணிகண்டன். இவர் தனது மனைவி ரேவதி (24), மகள்கள் ஜெயவர்ஷினி (4), யாழினி (2) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் தினந்தோறும் குடித்துவிட்டு ரேவதியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ரேவதி தனது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மிட்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தங்களுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமையால் தங்களது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என ரேவதியின் தந்தை வேல்முருகன் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனால் சந்தேக மரணம் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இளம்பெண் மரணம் குறித்து கோட்டாச்சியர் விசாரணை மேற்க்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. இதனால் ரேவதியில் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால் 2 நாள் வரை மருத்துவமனையில் காத்திருந்தும் காவல்துறை தரப்பிலோ, கோட்டாச்சியர் விசாரணையையோ நடத்தப்படாமல், உடல் பிரேத பரிசோதனை கூட செய்யாமல் தங்களை அலைக்கழிப்பதாக கூறி பெண்ணின் பெற்றோர்கள், உறவினர்கள் மருத்துவமனை முன்பு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் மறியலில் ஈடுப்பட்டவர்களை சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர். பெண்ணை பறிக்கொடுத்த பெற்றோர் சாலையில் உருண்டு பிரண்டு அழுத சம்பவம் சாலையில் சென்றவர்களை கண்கலங்க செய்தது.
தங்களது பெண்ணின் மரணத்திற்கு கோட்டாச்சியர் தலைமையில் உரிய விசாரணை மேற்க்கொள்ள வேண்டும், ரேவதியின் உயிரிழப்பு காரணமான அவரது கணவர் மணிகண்டனை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்மாவை அப்பா கழுத்தில் துணியால் நெறித்தாக ரேவதியின் மூத்த மகள் ஜெயவர்ஷினி பேசிய வீடியோ வெளியாகியுள்ளதால் அதனை கொண்டும் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
கடந்த 20 மாத காலப்பகுதிக்குள் ஒரு மில்லியன் இலங்கையர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 10 லட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வேலைவாய்ப்ப பெற்று வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இத்தகவலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் இவ் வருடம் ஆகஸ்ட் 30ஆம் திகதி வரையான,
காலப் பகுதிக்குள் 1,013,992 இலங்கையர்கள் கடவுச்சீட்டு பெற்றுள்ளனர். அதேவேளை இக்காலப் பகுதிக்குள் 1,050,024 இலங்கையர்கள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
சீரியல் நடிகை மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக அவர்கள் இருவரும் குறித்து தான் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. அவர்களும் பல்வேறு பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை மகாலட்சுமி பணத்தின் காரணமாக தான் தயாரிப்பாளர் ரவீந்தரனை அவர் திருமணம் செய்து கொண்டார் என அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
அதன்படி மகாலட்சுமி தனது மாத வருமானம் மட்டும் ரூ. 3 லட்சம் எனவே நான் பணம் காரணமாக அவர் செய்து கொள்ள அவசியம் இல்லை என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ் மகன் வெங்கடேஷ் (21). இவர் ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த முனி கிருஷ்ணப்பா மகள் சுஜிதா (21) என்பவரை முகநூல் வழியாக பழகி காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சுஜிதாவின் வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் சுஜிதா தன்னுடைய காதலனை எப்படியாவது கரம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கடலூர் வந்துள்ளார்.
அவருக்கு தமிழ் தெரியாததால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டு எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்துள்ளார். இது குறித்து ரயில்வே ஊழியர்கள் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அப்போது சுஜிதா நடந்த சம்பவங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர், சுஜிதாவின் காதலன் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்து காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரிடம் விசாரணை நடத்தியுள்ளார் அப்போது சுஜிதா தன்னுடைய காதலனை கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தனது சொந்த செலவில் சுஜிதாவிற்கு பட்டுச்சேலை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வாங்கிக்கொடுத்து வெங்கடேசுடன் திருமணம் செய்து வைத்தார்.
தடுப்புக்காவலில் இருந்தபோது உயிரிழந்த இலங்கைப் பெண் விஷ்மா சந்தமாலியின் (Wishma Sandamali) இறுதி நாட்களைக் காட்டும் சிசிடிவி காணொளியின் ஒரு பகுதியை சமர்ப்பிக்குமாறு ஜப்பானின் நகோயா மாவட்ட நீதிமன்றம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
விசா காலாவதியான நிலையில் கடந்தவருடம் ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான விஷ்மா (Wishma Sandamali) கடந்த மார்ச் 06 ஆம் திகதி உயிரிழந்தார்.
அங்கு அவருக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து அவர் தொடர்ந்து முறைப்பாடு அளித்ததாகவும், அந்த உணவினால் அவர் பலவீனமடைந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஆறு சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள் அந்தப் பெண்ணை பரிசோதித்ததாகவும், குறைந்தபட்சம் அவர் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு அதிகாரி தெரிவித்ததாக தூதரக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் விஷ்மா இறப்பதற்கு முன்னர் அவரை தடுத்து வைத்திருந்த அறையில் உள்ள சிசிடிவியின் முழுமையான காணொளியை நீதிமன்றில் சமர்ப்பிக்க குடிவரவு அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என விஷ்மாவின் சகோதரி நீதிமன்றம் ஊடாக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இவ்வாறான நிலையில் நீதிமன்றத்தின் சமீபத்திய கோரிக்கைக்கு இணங்க வேண்டுமா என்பதை பரிசீலிப்பதாக ஜப்பான் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், சிதம்பரம் நகரில் வசித்து வருபவர் சிதம்பரம். இவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஆவார். இவரின் மனைவி சுபா. இந்த தம்பதிகளுக்கு முரளிராஜ் பாரதி என்ற மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர்.
மகள்கள் திருமணம் முடிந்து தங்களது குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார்கள்.முரளிராஜ் படித்துமுடித்துவிட்டு வேலையை தேடி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதத்தில் சிதம்பரம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சிதம்பரம் உயிரிழந்த துக்கத்தில் கடந்த ஒரு மாத காலமாக தாய் மற்றும் மகன் மிகவும் சோகத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரது மனைவி சுபா மற்றும் மகன் முரளி பாரதி கணவரின் 30வது நாள் நினைவு தினத்தை அனுசரித்துவிட்டு துக்கம் தாங்க முடியாமல் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
அக்கம்பக்கத்தினர் கதவு திறந்து நிலையில், இருவரும் வீழ்ந்து கிடந்ததை கண்டு சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தாய் மகன் இருவரும் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என தனித்தனியே கடிதம் எழுதியுள்ளதை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனைவியின் சிறுநீரகத்தை விற்று கணவன் 2வது திருமணம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் கொடூர கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மனைவியின் சிறுநீரகத்தை விற்று கணவன் 2வது திருமணம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் கொடூர கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தது குற்றங்கள் குறைந்தபாடில்லை, அலுவலகங்கள், பொது இடங்கள் என எல்லா இடங்களிலும் பெண்கள் சுரண்டப்படுகின்றனர்.
உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சுரண்டல்கள் நடக்கிறது. ஏமாற்று பேர்வழிகளால் பெண்கள் குறிவைக்கப் படுகின்றனர், சில நேரங்களில் படித்த, உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் பெண்கள் கூட ஆண்களால் மோசடிக்கு ஆளாகின்றனர்.
சில நேரங்களில் குடும்பத்தில் உள்ளவர்களாலேயே, ஏன், தொட்டு தாலி கட்டிய கணவன்களாலேயே மோசடி செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் தாலி கட்டிய கணவனே மனைவியிடம் அன்பாகப் பேசி மனைவியின் சிறுநீரகத்தை விற்றுள்ள கொடுமை நடந்துள்ளது.
ஒடிசாவில் உள்ள கோட மேட்டா கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் கந்து, ரஞ்சிதா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். பிரசாந்த் கந்து வங்கதேசத்தில் இருந்து வந்து அகதியாக இருப்பவர் ஆவார்.
ரஞ்சிதாவுக்கும் பிரசாத்துக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரசாந்த் குடிக்கு அடிமையானவர், அதனால் அவருக்கு குடும்பத்தின் மீதோ மனைவி மக்கள் மீதோ, ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில்தான் கடந்த 2018 ஆம் ஆண்டு மனைவியின் சிறுநீரகத்தை விற்று அதில் உல்லாச வாழ்க்கை வாழலாம் என பிரசாந்த் முடிவு செய்தார், எனவே கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுநீரகத்தில் உள்ள கற்களை அகற்றுவதாக கூறி, மனைவியை நம்ப வைத்து, புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரசாந்த் அழைத்துச் சென்றார்.
அப்போது மனைவி கணவர் தனது உடல்நிலை மீது இவ்வளவு அக்கறை காட்டுகிறாரே என பாசத்தில் மகிழ்ந்தார். ஆனால் பிரசாந்த் மருத்துவர்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு, மனைவியின் சிறுநீரகத்தை காசுக்காக விற்பனை செய்து விட்டார்.
ரஞ்சிதாவிற்கு தெரியாமலேயே அவரது சிறுநீரகம் அவரது உடலில் இருந்து அகற்றப்பட்டது, அதன் பின்னர் கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே சிறுநீரகத்துடன் ரஞ்சிதா தனிமையில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில்தான் திடீரென அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது, பின்னர் அவர் மருத்துவமனைக்கு சென்றார், அப்போதுதான் அவருக்கு உண்மையான விஷயம் தெரியவந்தது, தங்களுக்கு ஒரே ஒரு சிறுநீரகம் தான் உள்ளது என மருத்துவர்கள் கூறியதை கேட்டு ரஞ்சிதா அதிர்ச்சி அடைந்தார்.
தான் கணவனால் ஏமாற்றப் பட்டதை எண்ணி கதறி அழுதார், இந்நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி மல்கான் கிரி காவல் நிலையத்தில் தனது ஏமாற்றுக்கார கணவன் மீது மோசடி புகார் கொடுத்தார், சிறுநீரகத்தை விற்ற கையோடு கணவர் பிரசாத் ஆந்திராவுக்கு சென்று அங்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் பெங்களூர் சென்று அங்கு வசித்து வருவதாக ரஞ்சிதா புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
அவரின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தனிப்படை அமைத்து பெங்களூர் அனுப்பினர், இந்நிலையில் கடந்த வாரம் பெங்களூரில் இருந்த பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். தற்போது ரஞ்சிதா ஒற்றைச் சிறுநீரகத்துடன் பெற்றோருடன் வசித்து வருகிறார்.