இலங்கை வலைபந்தாட்ட வீராங்கனை தர்ஜினி நாடு திரும்பாதது என்?

தர்ஜினி சிவலிங்கம்..

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்தது. கடந்த வாரம் துபாயில் இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது.

நாடு பொருளாதார நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த இரண்டு வெற்றிகளும் இலங்கை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தின. இதன்படி, இரண்டு அணிகளும் நாடு திரும்பியபோது மகத்தான வரவேற்பு கிடைத்து.

இருப்பினும், வலைப்பந்தாட்ட அணி இலங்கை திரும்பிய போது அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கை வகித்திருந்த தர்ஜினி சிவலிங்கம் (Tharjini Sivalingam) வீராங்கனைகள் மத்தியில் இல்லாமை பலரையும் கேள்விக்குள்ளாக்கியது.

இந்த நிலையில, தர்ஜினி சிவலிங்கம் நாடு திரும்பாமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. தர்ஜினி சிவலிங்கம் தற்போது அவுஸ்திரேலியாவில் பிராந்திய அணியொன்றில் விளையாடி வருகிறார்.

இதற்கிடையில், ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் தர்ஜினி சிவலிங்கம் பற்கேற்பதற்காக அவரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு வலைப்பந்தாட்ட பயிற்றுநர் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில், அவரின் உடல் அமைப்பை கருத்தில் கொண்டு விசேட வாகனத்தை ஏற்பாடு செய்வதற்காக 50 ஆயிரம் ரூபாவை அவர் கோரியிருந்தார். இருப்பினும், விளையாட்டுத்துறை அமைச்சு அதற்கு மறுப்பு தெரிவித்தது.

இதனையடுத்து, ஆசியக்கிண்ண போட்டிக்கு சிங்கப்பூர் சென்ற அணி இலங்கையில் பயிற்சிகளை பெற்ற போது தர்ஜினி அவுஸ்திரேலியாவில் பயிற்சிகளில் ஈடுபட்டார்.

அத்துடன், சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசியக்கிண்ணத்துக்காக அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து அங்கு சென்றிருந்தார். மேலும், போட்டிகள் முடிவடைந்த பின்னர் தர்ஜினி சிவலிங்கம் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கே திரும்பி சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மீனின் விலை குறைந்தபோதும் மீன் சாப்பிடுவதை தவிர்க்கும் மக்கள்!!

மீன்..

பொதுமக்கள் தற்போது பெரிதளவில் மீன்களை கொள்வனவு செய்வதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சந்தையில் மீன்களின் விலை குறைந்துள்ள போதிலும், நுகர்வோர் கொள்வனவு செய்யாத நிலை காணப்படுவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பேலியகொடை மீன் வர்த்தக நிலையத்தில் லின்னா, பலாயா, சாலயா, அரிசி ஈக்கள் போன்ற சில வகை மீன்களின் விலை குறைவடைந்துள்ளது. எனினும், மீன்களை கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர். தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,600 ரூபாவாக உள்ளது.

திருமணமாகி 8 வருடங்களுக்கு பிறகு கணவன் ஒரு பெண் என கண்டுபிடித்த மனைவி!!

குஜராத்தில்..

குஜராத்தில் திருமணமான 8 ஆண்டுகளுக்கு பிறகு தனது கணவன் ஒரே ஆணே அல்ல; அவர் ஒரு பெண் என்பதை மனைவி கண்டுபிடித்துள்ளார். ஆயிரம் பொய்களை கூறி திருமணம் செய்யலாம் என பெரியவர்கள் கூற கேட்டிருப்போம்.

மாப்பிள்ளைக்கு விரைவில் அரசுப் பணி கிடைத்துவிடும்; கல்யாணம் ஆனதும் பெண் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு சென்றுவிடுவார் என்பன போன்ற சிறு சிறு பொய்களை கூறி திருமணம் நடத்தியதையும் பார்த்திருப்போம்.

ஆனால், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, ஒரு பெண் தன்னை ஒரு ஆண் எனக் கூறி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. அதுவும் ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு அல்ல. மொத்தமாக 8 ஆண்டுகளாக அவர் தன்னை ஆண் எனக் கூறி ஏமாற்றியுள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் கோத்ரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவனை 2011-இல் நிகழ்ந்த ஒரு விபத்தில் இழந்துவிட்டார். கணவர் இறந்த பிறகு, தனது ஒரே மகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள தனியார் நிறுவனத்தில் அவர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், தங்கள் மகள் தனியாக இருப்பதை பார்த்த அவரது பெற்றோர், அவருக்கு திருணமம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, மேட்ரிமோனியில் அவருக்கு வரன் தேடியுள்ளனர். இதில் விராஜ் வர்தன் என்பவர் அவருக்கு அறிமுகமானார்.

இருவரும் தொலைபேசியில் பேசிய பிறகு, திருமணம் செய்துகொள்ள சம்மதித்தனர். இதையடுத்து, அவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. அப்போது அப்பெண்ணுக்கு வயது 32. இருவரும் திருமணம் முடித்த கையோடு காஷ்மீருக்கு தேனிலவுக்கும் சென்றனர்.

கணவர் இறந்ததோடு தனது வாழ்க்கை முடிந்துவிட்டதாக எண்ணிய அப்பெண், புது வாழ்க்கையை தொடங்கப் போகிறோம் என மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால், அவரது மகிழ்ச்சி நீண்டநாட்களுக்கு நிலைக்கவில்லை. காஷ்மீருக்கு 10 நாள் தேனிலவு சென்ற அவர்கள் ஒருமுறை கூட உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை.

இதுகுறித்து கேட்ட போது, உடல்நிலை சரியில்லை என ஏதேதோ சாக்குபோக்குகளை விராஜ் வர்தன் கூறியுள்ளார். அப்பெண்ணும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் தேனிலவு சென்று வந்து 6 மாதங்களாகியும் தனது மனைவியிடம் விராஜ் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், ஏன் தாம்பத்திய உறவில் ஈடுபட மறுக்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு விரா்ஜ வர்தன், ரஷ்யாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றும் போது ஒரு விபத்தில் சிக்கியதாகவும், அதனால் உடலுறவு வைத்துக் கொள்ளும் திறனை தான் இழந்துவிட்டதாகவும் கூறினார். மேலும், ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டால் இது சரியாகிவிடும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதனால் இருவரும் பல வருடங்களாக உடலுறவு இல்லாமலேயே வாழ்க்கை நடத்தி இருக்கின்றனர். தனது வீட்டில் இது தெரிந்தால் கணவருக்கு அவமானமாகிவிடுமே என அப்பெண்ணும் யாரிடமும் இதை தெரிவிக்கவில்லை. வெளிச்சத்துக்கு வந்த உண்மை இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, கொல்கத்தாவுக்கு சென்று குறிப்பிட்ட அறுவை சிகிச்சையை செய்துவிட்டு வருவதாக தனது மனைவியிடம் கூறி விராஜ் வர்தன் சென்றுள்ளார்.

பின்னர் ஒரு வாரம் கழித்து வீடு திரும்பிய அவர், மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டார். அப்போது அப்பெண்ணுக்கு நெருடலாக இருக்கவே சட்டென விளக்கை போட்டுள்ளார். இதில் தனது கணவர் விராஜ் வர்தன் ஆண் இல்லை; ஒரு பெண் என்பதும், செயற்கை ஆணுறுப்பு வைப்பதற்காக அவர் கொல்கத்தா சென்றதும் அவருக்கு தெரியவந்தது.

தான் 8 ஆண்டுளாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், உடனடியாக கோத்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், இயற்கைக்கு மாறாக தன்னுடன் உறவு வைக்க விராஜ் முயற்சிப்பதாகவும், வெளியே கூறினால் கொலை செய்வேன் என மிரட்டியாகவும் அவர் போலீஸில் கூறினார்.

இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், விராஜ் வர்தனை கைது செய்தனர். விசாரணையில், தான் ஒரு பெண்ணாக இருந்த போதிலும் ஆண்கள் மீது ஈர்ப்பு வரவில்லை என்றும், பெண்கள் மீதே ஈர்ப்பு இருப்பதால் தான் ஆண் எனக் கூறி திருமணம் செய்ததாக போலீஸாரிடம் விராஜ் வாக்குமூலம் அளித்தார்.

திருடனுக்கு உயிர்பயத்தைக் காட்டிய பயணிகள் : செல்போன் பறிக்க முயன்றவனுக்கு நேர்ந்த கதி!!

ரயிலில்..

ரயில் பயணியிடமிருந்து ஜன்னல் வழியாக மொபைல் போனைப் பறிக்க முயன்ற ஒரு நபர், கனவிலும் நினைத்துப்பார்க்காத ஒரு பயனைத்தை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. வெளியில் தொங்கிக்கொண்டு, மன்னிப்புக் கேட்டுகொண்டு, யாரிடம் செல்போனை பறிக்க முயன்றாரோ அவரிடமே உயிர்ப்பிச்சை கேட்டுக்கொண்டு அவர் பயணித்துள்ளார்.

பயணிகள் ஒருவகையில் அந்தத் திருடனை தண்டிக்க நினைத்தாலும், அவருக்கு படம் புகட்டி, அவரது உயிரையும் கைப்பறியுள்ளனர். செப்டம்பர் 14 அன்று வெளியான வீடியோ இந்தியாவின் பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்டது, அங்கு ரயில் ஜன்னல்கள் வழியாக பணம் அல்லது செல்போன் போன்ற பொருட்கள் பறிக்கப்படுவது வாடிக்கையாக நடக்கும்.

பெகுசராயிலிருந்து ககாரியா வரை சென்றுகொண்டிருந்த ரயில், அதன் பயணம் முடிவடையும் தருவாயில் இருந்தபோது, ​​சாஹேப்பூர் கமால் ஸ்டேஷன் அருகே அந்த நபர் பயணி ஒருவரிடமிருந்து செல்போனை பறிக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் எச்சரித்துக்கொண்ட பயணி அதற்கு அவரது கையை பிடித்தார். ரயில் நகர்ந்தது, ​​​​திருடன் தன்னை விடுமாறு கெஞ்சினார், ஆனால் அதற்கு பதிலாக மற்றோரு பயணி அவரது இன்னொரு கையையும் உள்ளே இழுத்தபடி பிடித்துக்கொண்டார்.

தன்னை விட்டுவிடும்படி கேட்ட திருடன், இப்போது தனது கைகளை தயவுசெய்து விட்டுவிடவேண்டாம் என கெஞ்சி, தான செய்த குற்றத்திற்கு மன்னிப்பே கேட்டபடி, வேறு வழியில்லாமல் 15 கிலோமீற்றர்கள் வெளியே தொங்கியபடி பயணித்தார். அதுவரை பயணிகளும் அவரது கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டனர்.

இறுதியாக ரயில் ககாரியாவுக்கு அருகில் வந்தபோது அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அங்கிருந்து எப்படியோ தப்பித்து ஓடிவிட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பொலிஸ் இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுத்ததா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. திருடன் வெளியே தொங்கியபடி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்.. அடுத்தடுத்து குழந்தைகள் பலியான சோகம்!!

பாகிஸ்தானில்..

பாகிஸ்தானின் கராச்சியில் செயல்படும் ஜின்னா முதுகலை மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலாபுலில் வசிக்கும் ஹினா ஜாஹித் என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டார்.

அந்தப் பெண்ணுக்கு ஒரே நேரத்தில்4 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் என 6 குழந்தைகள் சுகப்பிரசவத்தின் மூலமாக பிறந்தது. அதில் ஒரு குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது.

இந்நிலையில் நேற்று மற்ற 5 குழந்தைகளும் உயிரிழந்தன. மூச்சு திணறல் மற்றும் எடை குறைவு காரணமாக குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஹினா நலமாக உள்ளனர்.

தவறான உடலில் தாங்கள் பிறந்து விட்டோம்.. ஃபேஷன் உலகில் கலக்கும் 10 வயதே ஆன உலகின் இளம் திருநங்கை!!

இளம் திருநங்கை..

உலக அளவில் பல மனிதர்கள் பலர், தாங்கள் எதிர் கொள்ளக்கூடிய முக்கிய ஹார்மோன் மாறுபாட்டினால், அவர்கள் மூன்றாம் பாலினத்தவர் என்கிற அடையாளத்தை பெறுகின்றனர்.

சமூகத்தில் இவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தாலும், தற்போது போராடி தங்களுடைய சுய அடையாளத்தை மீட்க பலரும் முயற்சித்தும் சாதித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தான் பிரபல 10 வயதேயான இளம் நியூயார்க் ஃபேஷன் மாடல் ஒருவர் தற்போது வைரலாகி வருகிறார்.

10 வயதில் இளம் திருநங்கை மாடலாக நியூயார்க் ஃபேஷன் வீக்கினை சிறப்பித்தவர் நோயெல்லா மெக்மேஹர் (Noella McMaher). இவர் பிரபல டிரான்ஸ் ஆடை நிறுவனத்திற்கான 7 நிகழ்ச்சிகளில் மாடலாக பங்கேற்றவர்.

இவர் 2 வயதிலேயே தான் ஒரு பெண் என்பதை உணர்ந்து தன்னுடைய பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இவருடைய பெற்றோரும் இவருடைய பயணத்துக்கு மிகவும் ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து தம்முடைய செயல்பாடுகள் மூலம் திருநங்கை குழந்தைகள், மற்ற குழந்தையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்பது குறித்த புரிதலை மக்களிடம் ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் நோயெல்லா மெக்மேஹர்.

மேலும் தவறான உடலில் தாங்கள் பிறந்து விட்டதாகவும், அதை கண்டுபிடித்து தன்னுடைய பாலினத்தை மாற்றுவதாகவும் கூறும் நோயெல்லா மெக்மேஹர் , திருநங்கைகளாக இருப்பது என்பது மோசமானது அல்ல என்று மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

அத்துடன் குழந்தைகளுக்கு, தான் செய்யும் செயல்கள் மூலமும் அவற்றை காட்டுகிறார். அப்போதுதான் வளரும் போது அந்த குழந்தைகள் அதை புரிந்து கொள்வார்கள் என்று நோயெல்லா மெக்மேஹர் விரும்புகிறார்.

இந்த நிலையில்தான் சுமார் 6 மாதங்களுக்கு முன்பாக நியூயார்க் பேஷன் வீக்கின் மிகவும் இளம் திருநங்கையாக வலம்வந்து மிகப்பெரிய வரலாற்றையே, தான் சாதித்தது குறித்து தன்னால் நம்ப முடியும் இல்லை என்றும்,

சர்வதேச அளவில் வரலாறு படைப்பதற்கு அடுத்த மாதமே பாரீசில் நடக்கும் ஃபேஷன் வீக்கில் வரவிருப்பதாகவும், நோயெல்லா மெக்மேஹர் தம்முடைய இன்ஸ்டா பதிவில் தெரிவித்து இருக்கிறார். இவருடைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

புகையிரதத்தில் தவித்த நிறைமாத கர்ப்பிணி.. தேவதை மாதிரி வந்த மருத்துவ மாணவி!!

புகையிரதத்தில்..

ரெயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் வலியால் துடித்த நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம், தற்போது இணையத்தில் பலரையும் நெகிழ வைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், செகந்திராபாத் ரெயில் விசாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலில் சுமார் 28 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் பயணித்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக அந்த பெண் இருந்ததாக கூறப்படும் நிலையில், அம்மாவின் வீட்டிற்கு அவர் ரயிலில் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இரவு நேரம் திடீரென அந்த பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வலியில் அவர் கத்த ஆரம்பித்த நிலையில், அந்த பெட்டி முழுக்க இருந்த நபர்கள் மத்தியில் கடும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதே கோச்சில் 23 வயது நிரம்பிய ஸ்வாதி ரெட்டி என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவி ஒருவரும் பயணம் செய்து கொண்டிருந்துள்ளார். அவர் அங்கே சென்று விஷயத்தை தெரிந்து கொண்டுள்ளார். தொடர்ந்து, அவருக்கு குழந்தை பிறக்க போகிறது என்பதையும் அந்த மாணவி உணர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆனால், சிகிச்சை அளிக்க ஸ்வாதி தயாராக இருந்த போதிலும், அவர் சிறிய பெண் போல இருந்ததால் முதலில் அந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. பின்னர் தான் மருத்துவ மாணவி என்பதையும் பிரசவம் பார்க்க தெரியும் என்றும் ஸ்வாதி கூறி உள்ளார்.

இதன் பின்னர், அந்த கர்ப்பிணியின் குடும்பத்தினர் ஓரளவுக்கு சம்மதம் சொன்ன நிலையில், அந்த இடமே பிரசவம் பார்க்கும் இடம் போல மாறி, துணி அனைத்தும் கட்டப்பட்டு பிரசவம் பார்க்க ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகாலை 3:30 மணியளவில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, சுமார் 5:30 மணியளவில் அந்த பெண்ணுக்கு குழந்தையும் பிறந்துள்ளது. அந்த பெண்ணும், பிறந்த குழந்தையும் நல்ல நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது பற்றி பேசும் மருத்துவ மாணவி ஸ்வாதி, “மருத்துவமனையில் எங்கள் மருத்துவர்களுடன் இணைந்து நான் பிரசவம் பார்க்க துணையாக இருந்துள்ளேன். ஆனால், தனியாக பிரசவம் பார்ப்பது இதுவே முதல் முறை. இதனால், எனக்கு சற்று பதற்றமாக இருந்தது. அதே வேளையில், இதில் எனக்கு நிறைய பயிற்சி இருந்ததால் தைரியத்துடன் இதனை செய்தேன்.

மருத்துவ கருவிகள் எதுவும் இல்லாததால், நேரம் அதிகம் எடுத்துக் கொண்டது. குழந்தை நல்லபடியாக வெளியே வந்த பிறகு தான் நிம்மதி அடைந்தேன்” என ஸ்வாதி கூறி உள்ளார். ரயிலில் கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் துடித்த நிலையில், தெய்வம் போல வந்து காப்பாற்றிய மருத்துவ மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மகளின் காதலன் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவி வெளுத்துவாங்கிய தாய், மகன் : இறுதியில் நடந்த விபரீதம்!!

புனே ..

மகளின் காதலனின் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவி கொடூரமாக தாக்குதல் நடத்திய தாய் அவரது இரண்டு மகன்களை புனே போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் சின்ச்வாட் பகுதியில் உள்ள போஷ் சொசைட்டி அருகே செப்டம்பர் 13 அன்று நடந்தது.

அந்த பெண்ணின் மகளுடன் கடந்த 6 ஆண்டுகளாக பழகிவந்த விஷால் கஸ்பே, செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் காதலியை சந்திக்க வந்துள்ளார். ஆனால் அவர் தனது காதலியை சந்திப்பதற்கு முன்பு, அவரது தாயும் இரண்டு மைனர் சகோதரர்களும் வீட்டை விட்டு வெளியே வந்து அவரை விசாரிக்கத் தொடங்கினர், இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.

அந்த பெண் அந்த இளைஞனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மகன்கள் இருவரும் அந்த இளைஞரை கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

அருகில் இருந்த சிலர் அந்த இளைஞரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காதலன் தற்போது தலையில் பல காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிதறிய அழகான குடும்பம் : 23 நாட்களுக்குள் ஒவ்வொருவராக உயிரிழந்த சோகம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் சோக பின்னணி வெளியாகியுள்ளது. தெலங்கானாவை சேர்ந்தவர் அகோஜு கிருஷ்ணமூர்த்தி (42).

இவர் நகைக்கடை நடத்தி வந்த நிலையில் தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து ரூ.30 லட்சம் கடன் வாங்கியிருந்தார், ஆனால் அவரால் கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை.

இதனால் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி கிருஷ்ணமூர்த்தி, அவர் மனைவி ஷைலஜா (35), மகள் காயத்ரி (13), மகன் அஸ்ரித் (15) ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தனர்.

இதையடுத்து சுயநினைவின்றி கிடந்த நால்வரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒவ்வொருவராக இறக்க தொடங்கினர். அதன்படி கிருஷ்ணமூர்த்தி ஆகஸ்ட் 24ஆம் திகதியும், காயத்ரி செப்டம்பர் 5ஆம் திகதியும், அஸ்ரித் செப்டம்பர் 13ஆம் திகதியும் உயிரிழந்தார்.

இந்நிலையில் ஷைலஜா நேற்று உயிரிழந்தார். கடன் தொல்லையால் மொத்த குடும்பமும் உயிரிழந்துள்ளது கிருஷ்ணமூர்த்தி வசித்த பகுதியில் வாழும் மக்களை பலத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருமணமான 6 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நடந்த பரிதாபம் : அதிர்ச்சியில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

விழுப்புரத்தில்..

விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டையை அடுத்த குந்தலம்பட்டு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கட்டிட மேஸ்திரியாக இவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியை அடுத்த செவரப்பூண்டி என்னும் கிராமத்தை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 09 ஆம் தேதி, இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் நடைபெற்றது.

திருமணம் செய்து கொண்ட முருகன் மற்றும் சந்தியா ஆகியோர், திருப்பதிக்கு சென்று சாமி தரிசனமும் செய்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர், ஊருக்கு திரும்பிய புதுமண ஜோடி, சந்தியாவின் அம்மாவின் வீட்டிற்கும் சமீபத்தில் விருந்துக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென யாரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது. உடை மாற்றிக் கொண்டிருந்த சந்தியா, திடீரென அறையில் மயங்கி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டதும் பதறிப் போன உறவினர்கள், உடனடியாக சந்தியாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். ஆனால், சந்தியா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்போது எலி பேஸ்ட் மூலம் விபரீத முடிவை சந்தியா எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சந்தியாவின் தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.

இதனிடையே, தனது வீட்டிற்கு சென்று வருவதாக கிளம்பிய முருகன், வயல்வெளி பம்பு செட்டில் வைத்து விபரீத முடிவை எடுத்துள்ளார். திருமணமாகி ஒரு வாரத்திற்குள் மனைவியும் விபரீத முடிவை எடுத்ததால், விரக்தியில் இருந்த கணவரும் விபரீத முடிவை எடுத்தது இருவரின் குடும்பத்தினரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வந்தனர். இதன் முதற்கட்ட விசாரணையில், சோமஸ்படியை சேர்ந்த ஒருவருடன் ஏற்கனவே சந்தியாவுக்கு திருமணமான நிலையில், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே மாதத்தில் அவர் பிரிந்து வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னர் லாரி ஓட்டுநரான ஏழுமலை என்பவருடன் சந்தியா காதலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏழுமலையுடன் காதலில் இருந்த சந்தியாவுக்கு முருகனுடன் திருமண நிச்சயத்தை சில மாதங்களுக்கு முன்பு அவரின் பெற்றோர்கள் செய்துள்ளனர்.

இந்த திருமணத்தில் துளி கூட விருப்பமில்லாமல் இருந்த சந்தியா, பெற்றோர் வற்புறுத்தலின் பெயரில் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார் என கூறப்படுகிறது. சந்தியா மறைவை அறிந்த அவரது காதலன் ஏழுமலையும் சோகத்தில்,

விபரீத முடிவை எடுக்க முயன்று தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. திருமணமான ஒரு வாரத்தில், இப்படி அடுத்தடுத்து நேர்ந்த விபரீத சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எட்டு பேரை திருமணம் செய்த இளம்பெண் : 9வது திருமணத்திற்கு தயாரான போது தெரிந்தவந்த அதிர்ச்சி உண்மை!!

தமிழகத்தில்..

8 பேரை திருமணம் செய்தும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் 9வது திருமணத்துக்கான முயற்சியின் போது வசமாக சிக்கியுள்ளார்.

தமிழகத்தின் கரூரில் வசித்து வருபவர் சௌமியா என்ற சபரி (28). இவர், மின்சாரத் துறை அமைச்சர் தனது உறவினர் என்று பொய்சொல்லி கரூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பல லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே 8 பேரை செளமியா மணந்துள்ளார். தற்போது வசிக்கும் வீட்டருகில் இருப்பவர்களிடம் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், மறுமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறினார்.

இதனை நம்பிய பக்கத்து வீட்டு பெண் ஒருவர் தனது உறவினரான ஆட்டோ ஓட்டுனர் சிவக்குமாருக்கு சௌமியாவை மணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார். தாம் ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவதாக,

சிவக்குமாரிடம் கூறிய சௌமியா தமக்கு அமைச்சரை தெரியும் என்றும் அவர் மூலம் சிவக்குமாருக்கு வேலை வாங்கித் தருவதாகவும் முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.

பின்னர் திருமண வேலைகள் நடந்த நிலையில் சிவக்குமாருக்கு இது தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பலரிடம் விசாரித்த போது செளமியாவின் குட்டு வெளியானது.

இதையடுத்து, சிவக்குமார் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சௌமியா தங்கி இருக்கும் வீட்டினுள் சென்று அவரை குண்டுகட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் சௌமியாவை கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துடிதுடித்து பலியான இரு இளம் பெண்கள் : நெஞ்சை உலுக்கும் ஓர் அதிர்ச்சி சம்பவம்!!

சென்னையில்..

சென்னையில் ஓம்ஆரில் குடிபோதையில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டியதில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு இளம்பெண் மென்பொறியாளர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் பிரமுகரின் உறவினரும், பிரபல ஓட்டல் அதிபரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அக்காததாரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமியும் (23, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ரெட்டிகாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த லாவண்யா (23) என்பவரும் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள எச்.சி.எல் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த 14ம் தேதி இரவு பணி முடிந்து தாங்கள் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் கேளம்பாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஹோண்டா சிட்டி சொகுசு கார் மென்பொறியாளர்கள் மீது மோதியது.

இதில், இருவரும் சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளதத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீலட்சுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். இதைத்தொடர்ந்து லாவண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி லாவண்யாவும் நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய மோதிஷ் குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அரசியல் பிரமுகரின் உறவினரும், பிரபல ஓட்டல் அதிபரின் மகன் மோத்தீஸ்குமார் (20) என்பதும் தெரியவந்தது.

நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று மது போதையில் வந்து தாறுமாறாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளார். வெளிமாநிலத்திலிருந்து சென்னை வந்து தங்கி வேலைப்பார்த்த இளம்பெண்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டைக் கொலையில் தப்பிய இளைஞன் : திட்டமிட்டு சிக்கவைத்த போலிஸ்!!

மயிலாடுதுறையில்..

இரட்டைக் கொலை வழக்கில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்கு ஆஜராகாமல் ராஜஸ்தானில் தலைமறைவாக இருந்த வட மாநில வாலிபரை தமிழக தனிப்பட போலீசார் பிடித்து விமான மூலம் சென்னை அழைத்து வந்திருக்கிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வருபவர் தன்ராஜ் சவுத்ரி. ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட தன்ராஜ் சவுத்ரி கடந்த 15 வருடங்களாக சீர்காழியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகிறார். பூம்புகார் தர்ம குளம் பகுதியில் நகை அடகு கடை , தங்க நகைகள் மொத்த விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி அதிகாலையில் இவரது வீட்டிற்குள் புகுந்த மூன்று வட மாநிலத்தவர்கள் தன்ராஜ் சவுத்திரியின் மனைவி ஆசா, அவரது மகன் அகில் இருவரையும் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்து விட்டு தன்ராஜ் அவரது மருமகள் இருவரையும் கட்டி போட்டு விட்டு வீட்டிலிருந்த 12.5 கிலோ தங்க நகைகள் , 6 லட்சத்து 75 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். தன்ராஜ் சவுத்ரி வீட்டில் இருந்த காரையும் திருடி சென்றனர்.

இந்த கொலை , கொள்ளை சம்பவத்திற்கு பின்னர் சீர்காழி அடுத்த இருகூர் சவுக்கு தோப்பில் பதுங்கி இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மணிஸ், ரமேஷ் பட்டேல், மஹிபால் சிங் மூன்று பேரையும் மயிலாடுதுறை போலீசார் பிடிக்கச் சென்ற போது , அதிரடிப்படை வீரர் சாலீம் என்பவரை எதிர்த்து தாக்கினார்கள். அப்போது ராஜஸ்தான் மாநிலம் அகோரி கிராமத்தைச் சேர்ந்த மஹிபால் சிங்கை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

மறைந்திருந்த ராஜஸ்தான் தோப்பூரை சேர்ந்த மனிஷ், ராஜஸ்தான் மாநிலம் ரமேஷ் படேல் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மணிஸ், ரமேஷ் படேல் இருவருக்கும் தொடர்புடைய கும்பகோணம் கருணாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஜாமீனில் வந்த மனிஸ், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ராஜஸ்தானுக்கு சென்று தலை மறைவாகிவிட்டார். ராஜஸ்தானில் இருந்த அவரை பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை அடுத்து சீர்காழி போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் வரைந்து சென்று அங்கு சில தினங்கள் தங்கி இருந்து மனிஷ் குறித்த தகவல்களை அம் மாநில போலீசார் உதவியுடன் திரட்டி பின்னர் மணிஷை கைது செய்து விமான மூலம் இன்று சென்னைக்கு அழைத்து வந்து பின்னர் சீர்காழி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

சொந்த பணத்தை கொள்ளையடிக்க துப்பாக்கியுடன் வங்கிக்கு வந்த பெண் : மிரள வைக்கும் காரணம்!!

லெபனானில்..

பெண் ஒருவர் வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து தனது பணத்தையே திருட முயன்ற நிலையில், இதற்கான காரணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2019 ஆம் ஆண்டிற்கு பிறகு, லெபனான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இதனால், அந்நாட்டு அரசு மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இயல்பான வாழ்க்கை போல இல்லாமல், நிறைய நெருக்கடியையும் இதனால் அந்நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.

மேலும், அரசு விதித்த கடும் கட்டுப்பாடுகளில் ஒன்று, வங்கிகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு மாதத்திற்கு எடுக்க வேண்டும் என்பது. இதனால், அவசர காலத்திற்கு கூட பணம் எடுக்க முடியாமல், கடும் இன்னலுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். அப்படி ஒரு சூழ்நிலையில், அந்நாட்டை சேர்ந்த Sali Hafiz என்ற பெண் ஒருவர் செய்துள்ள காரியம், இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

சாலி ஹபீஸ் என்ற பெண், ஒரு சமூக ஆர்வலராக இருந்து வருகிறார். மேலும், அவர் தனது வங்கி கணக்கில் சுமார் 13,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 10 லட்ச ரூபாய்) வரை சேமித்து வைத்துள்ளார். அப்படி இருக்கையில், சாலியின் சகோதரிக்கு புற்றுநோய் உருவானதாக கூறப்படுகிறது.

இதனால், வங்கியில் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை திரும்ப எடுக்கவும் சாலி முயன்றுள்ளார். ஆனால், மாதத்துக்கு 200 டாலர்கள் வரை தான் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளதால், அதற்கு மேல் தர முடியாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், தனது சகோதரிக்கு சிகிச்சை மேற்கொள்ள சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த சாலி ஹபீஸ், மிகவும் வினோதமான ஒரு ஆலோசனையை கையில் எடுத்துள்ளார். அதன் படி, சில தன்னார்வலர்களுடன் இணைந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டு நேராக வங்கிக்கே சென்றுள்ளார் சாலி.

அங்கே சென்று துப்பாக்கியை காட்டி, தனது சேமிப்பு பணமான 13 ஆயிரம் டாலர்களை கொள்ளையடிக்கும் முயற்சிகளை அவர் செய்துள்ளார். இதன் பின்னர், அந்த பணத்துடன் அவர் அங்கிருந்து தப்பித்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.  மேலும், வீட்டில் இருந்து கிளம்புவது முதல் வங்கிக்கு செல்வது வரை பேஸ்புக் நேரலையில், சாலி ஹபீஸ் ஸ்ட்ரீமிங் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், யாருக்கும் ஆபத்து விளைவிக்கும் எண்ணமில்லை என்றும், பொம்மை துப்பாக்கியுடன் தான் நாங்கள் வங்கிக்குள் நுழைந்தோம் என்றும் சாலி குறிப்பிட்டுள்ளார். சொந்த பணத்தை கொள்ளையடிக்க வங்கிக்குள் நுழைந்த பெண் தொடர்பான செய்தி, தற்போது அதிகம் பரப்பரப்பை உண்டு பண்ணி உள்ளது.

நடிக்க மறுத்து அவமானப்படுத்திய நடிகை நதியா.. பழிவாங்க கேரள நடிகையை இறக்குமதி செய்த விஜயகாந்த்!!

சினிமாவில்..

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நதியா தற்போது வரை இன்னும் இளமையுடன் தான் இருந்து வருகிறார்.

அப்படி நடிகை நதியா இதுவரையில் எந்த படத்தில் கிளாமராக நடித்ததே கிடையாது. அதேபோல் கமல் ஹாசன் படத்தில் நடிக்க கூடாது என்ற உறுதியில் இருந்து வந்தார். இதற்கு காரணம் கமல் ஹாசன் படம் என்றால் முத்தக்காட்சி என முகம் சுளிக்கும் படியாக இருப்பதால் தானாம்.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்தை ஒதுக்கியும் வந்திருக்கிறார் நடிகை நதியா. அவரின் திரைப்பயணம் ஆரம்பத்தில் பூ மழை பொழியுது என்ற படத்தில் விஜயகாந்துடன் நடித்திருந்தார்.

அதன்பின் விஜயகாந்துடன் ஜோடிப்போடுவதை விட்டுவிட்டு மற்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார். அதற்கு காரணம் கருப்பாக இருக்கும் விஜயகாந்துடன் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்துள்ளார்.

அதேபோல் ரஜினிகாந்த் படத்தில் கட்டாயப்படுத்தி தான் ராஜாதி ராஜா படத்தில் நடித்திருந்தார். இதையறிந்த விஜயகாந்த் கேரள நடிகை ஷோபனாவை களமிறக்கினாராம். இந்த விசயத்தை சமீபத்தில் சர்ச்சை பத்திரிக்கையாளர் பயில்வான் கூறியுள்ளார்.

வவுனியா உட்பட 7 புதிய மாநகர சபைகள் : முதல் கட்ட வர்த்தமானி வெளியீடு!!

7 புதிய மாநகர சபைகள்..

அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பிரதான நகரங்களை கொண்ட மாநகர சபைகளாக அபிவிருத்தி செய்யும் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் 7 மாவட்டங்களில் தலைநகரங்களை 7 மாநகர சபைகளாக தரம் உயர்த்தும் முதல் கட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 7 நகர சபைகள் மாநகர சபைகளாக தரமுயர்த்தப்படும். வவுனியா, களுத்துறை, கேகாலை, புத்தளம், திருகோணமலை ஆகியவற்றை மாநகர சபைகளாக தரமுயர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மன்னார், அம்பாறை நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது.

அரச நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.