விஷாலின் துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா என்பவர் காதல் தோல்வியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்தவர் தீபா என்கிற ஜெஸி பவுலின். 29 வயதான அவர் வாய்தா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் தீபா இப்படி ஒரு விபரீத முடிவு எடுத்தது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் தோல்வியால் ஒரு நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவின் மரணம் குறித்து அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். காதல் தோல்விக்கு இது தீர்வில்லையே தீபா, அவசரப்பட்டுவிட்டீர்களே என்று சிலர் கூறியுள்ளனர்.
எதிர்பார்த்த அன்பு கிடைக்காததால் தான் நடிகர் பார்த்திபனை பிரிந்ததாக நடிகை சீதா தெரிவித்துள்ளார். ஆண்பாவம் படம் மூலம் அறிமுகமான சீதா, புதிய பாதை படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்தார்.
அதன் பிறகு பார்த்திபனும், சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த நட்சத்திர ஜோடி 11 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டது.
இந்த நிலையில் நடிகை சீதா அளித்த நேர்காணல் ஒன்றில் பார்த்திபனை பிரிந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘பார்த்திபன் தினமும் தொலைபேசியில் அழைத்து அந்த மூணு வார்த்தையை மட்டும் சொல்லிவிடுங்கள் என கேட்பார்.
ஒருநாள் பேசும்போது ஐ லவ் யூ என்று நான் சொன்னேன். திருமணம் முடித்த பின்னர் எதிர்பார்ப்புகள் இருந்தது. என்னுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது என்றால், கணவனிடம் இருந்து முழுதாக அன்பு கிடைக்க வேண்டும் என்பது தான்.
இது கூட இல்லை என்றால் பின் வாழ்க்கையில் என்ன தான் இருக்கிறது’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஒரு பெண்ணுக்கு சுயமரியாதை இருக்க வேண்டும். கணவர் எந்த வேலை செய்தாலும் மனைவியை மதிக்க வேண்டும். அவருடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இருவருக்குள்ளும் மரியாதை என்பது இருக்க வேண்டும். மரியாதை கொடுத்து நடந்தால் எந்த துறையில் கணவன், மனைவி வேலை பார்த்தாலும் விவாகரத்து என்பது இருக்காது எனவும் தெரிவித்தார்
இந்திய மாநிலம் ஒடிசாவில் தனது ம.னைவியின் சி.றுநீரகத்தை தி.ரு.டி, அதில் வந்த பணத்தில் இரண்டாம் திருமணம் செய்த நபர் கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டம் கட்டமீத்தா கிராமத்தில் வசித்து வந்தவர் பிரசாந்த் (34). வங்கதேசத்தைச் சேர்ந்த இவர் ச.ட்.ட.வி.ரோதமாக அங்கு குடியேறியுள்ளார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணை பிரசாந்த் காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு கு.ழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வ.யிற்று வ.லி கா.ரணமாக ரஞ்சிதா ம.ருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவரது உ.டலை ப.ரிசோதித்தபோது ஒ.ரு சி.றுநீரகம் இ.ல்லை என்பது தெரிய வந்தது.
இதனால் அ.தி.ர்.ச்சியடைந்த ரஞ்சிதாவுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் நியாபகம் வந்துள்ளது. வ.யிற்று வ.லி ஏ.ற்பட்டபோது சி.றுநீரகத்தில் கல் இருக்கலாம் எனக் கூறி அ.று.வை சி.கி.ச்சை செய்துகொள்ள ரஞ்சிதாவை அவரது கணவர் பிரசாந்த் க.ட்.டாயப்படுத்தியுள்ளார்.
ஆனால் மனைவிக்கு தெரியாமல் சி.றுநீரகத்தை எடுத்து அவர் விற்றுள்ளார். அதில் வந்த பணத்தை எடுத்துக் கொண்டு பெங்களூருக்கு சென்று, அங்கே ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறார்.
இதனை க.ண்டுபிடித்த ரஞ்சிதா ஆ.தாரத்துடன் பிரசாந்த் மீ.து பொ.லிசில் பு.கா.ர் அ.ளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பிரசாந்தை கை.து செ.ய்த பொலிசார் அவரிடம் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருக்கும் மதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமகனின் நண்பர்கள் திருமண பரிசு கொடுத்து அதனை திறந்து பார்க்குமாறு கூறியுள்ளனர்.
மணமகன் அறிவழகன் பரிசை திறந்தபோது இன்ப அதிர்ச்சியில் மேடையிலேயே கதறி அழுதார். அதற்கு காரணம் உயிரிழந்த அறிவழகனின் தந்தையின் உருவ படத்தை தான் சிறிய கட்-அவுட்டாக செய்து பரிசளித்துள்ளனர்.
பின்னர் ஆனந்த கண்ணீர்விட்ட மணமகனை அவரது நண்பர்கள் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தினர். நண்பர்களின் இந்த செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் மணமகனின் நண்பர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் திருமணமாகி 4 மதமே ஆன நிலையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், தோட்டக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்து.
ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவருக்கு விஷ்ணு பாரதி என்பவருடன் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தம்பதிகள் சென்னையில் தங்கி வேலைபார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத பாட்டியைப் பார்ப்பதற்காக இந்து வந்துள்ளார். பின்னர், நேற்று வீட்டில் தனது அறைக்குச் சென்ற இந்து நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலிஸார் நடத்திய விசாரணையில், ஹீலியம் வாயுவை பிளாஸ்டிக் கவருக்குள் செலுத்தி அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அதேபோல் ஹீலியம் வாயு சிலிண்டரை ஆன்லைனில் வாங்கியதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி நான்கு மாதங்களே ஆவதால் இந்துவின் தற்கொலைக்கான காரணம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி நான்கு மாதத்திலேயே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டுபாயில் உள்ள தனது முஸ்லிம் காதலியிடம் செல்வதற்கு முயன்ற இளம் பிக்கு ஒருவை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சீதுவை நந்தாராம விஹாரையின் விஹாராதிபதி நெதகமுவ மஹாநாம படு கொலை சம்பவம் தொடர்பாக இளம் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்புக்காவல் உத்தரவில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான இளம் பிக்குவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் மிலான் ஜயசூரிய நேற்று (17) சனிக்கிழமை உத்தரவிட்டார்.
ஏக்கல சுகந்தசிறி (வயது 18) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்படுள்ளார். சீதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டாரவின் வழிகாட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை கட்டுநாயக்காவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
சந்தேகரபராக பிக்கு விஹாராதிபதியை கொலைச் செய்துவிட்டு, விஹாரையில் இருந்த பெறுமதியான இரண்டு வாகனங்களை விற்றுள்ளார். இதனையடுத்து டுபாயில் உள்ள தனது முஸ்லிம் காதலியிடம் செல்வதற்கு முயன்ற போதே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விஹாராதிபதியை படுகொலை செய்வதற்காக முஸ்லிம் காதலியின் உறவினர்கள் சிலர் ஒத்துழைத்தாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மாமடு பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் இன்று (18.09.2022) மாலை 5.00 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவல் பலமணிநேர போராட்டத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மாமடு சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும்,
பொலிஸாருக்கும் தகவல் வழங்கியமையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த குழுவினர் பல மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ளதா என பல்வேறு கோணங்களில் மாமடு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்ககோரிய ஊர்திவழி கையழுத்து போராட்டம் இன்றையதினம் (18.09) வவுனியாவை வந்தடைந்தது. இலங்கை தழிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மற்றும், சர்வஜன நீதி அமைப்பு இணைந்து முன்னெடுத்துவரும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் வவுனியாவிலும் முன்னெடுக்கப்பட்டது.
காலை 10 மணியளவில் வவுனியா தமிழரசுகட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டகுறித்தகையெழுத்து போராட்டம், நகரின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதி்ராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளையின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.
கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 29 பிள்ளை செல்வங்களுக்கு ஒரே நேரத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. உலகப் பரப்பில் இது ஓர் உன்னத நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
தமிழர் பண்பாட்டைப் பேணும் வகையில் பூப்புனித நன்நீராட்டுவிழா (மஞ்சள் நீராட்டு )மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
29 மங்கையருக்கு பருவ மஞ்சள் நீராட்டு விழா
இதன்போது சிறுவர் இல்லத்தில் விசேடமான பந்தல் அமைப்பில் சகல சம்பிரதாயங்கள் எதுவும் தவறவிடாது இருபத்தொன்பது(29) மங்கையருக்கு மங்கைப் பருவ மஞ்சள் நீராட்டு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிலையில் இந்த நிகழ்வினை முன்னின்று நடாத்தியவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் தோடம் பழம் ஒன்றின் விலையானது 600 ரூபாவுக்கும் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். பிரபல சிறப்பு அங்காடி நிறுவனம் ஒன்றின் கிளைகளில் இறக்குமதி செய்யப்பட்ட தோடம் பழம் ஒன்று அதன் எடைக்கு ஏற்ப 621 ரூபா விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் தோடம்பழம் 3 ஆயிரத்து 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ திராட்சை பழம் 5 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இறக்குமதிக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளமை, இறக்குமதிக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டமை மற்றும் அந்திய செலாவணி நெருக்கடி என்பன காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவிலுள்ள ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாத் மாவட்டம் பரியநாத் கிராமத்தை சேர்ந்த விவசாயி மிதிலேஷ் மேதா(Mithilesh Medha). மாற்று திறனாளியான மிதிலேஷ்(Mithilesh Medha) தனியார் நிதி நிறுவனத்தில் 3 லட்ச ரூபாய் கடன்பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார்.
கடன் தொகையை செலுத்தி வந்த நிலையில் இன்னும் 1.30 லட்சம் பாக்கி இருந்துள்ளது. இதனிடையே, பாக்கி தொகையை உடனடியாக செலுத்தும்படி நிதி நிறுவன ஊழியர்கள் மிதிலேஷூக்கு(Mithilesh Medha) தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பாக்கி 1.30 லட்ச ரூபாயை உடனடியாக செலுத்தும்படியும், இல்லையென்றால் டிராக்டரை திருப்பி எடுத்துக்கொள்வோம் என்றும் மிதிலேஷூக்கு(Mithilesh Medha) நேற்று முன் தினம் பணம் வசூல் செய்யும் நிதி நிறுவனத்தில் இருந்து மெசேஜ் வந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மிதிலேஷ் தனது கிராமத்தில் பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி இருந்த தனது டிராக்டரை பார்க்க சென்றார். அவருக்கு உதவியாக மிதிலேஷின்(Mithilesh Medha) 27 வயது மகளும் உடன் சென்றார்.
மிதிலேஷின்(Mithilesh Medha)மகள் 3 மாதம் கர்ப்பிணி ஆகும். மிதிலேஷ்(Mithilesh Medha) பெட்ரோல் பங்க் அருகே செல்ல அங்கு ஏற்கனவே வந்திருந்த நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை எடுத்து செல்ல முற்பட்டனர்.
அவர்களை தடுக்க மிதிலேஷின்(Mithilesh Medha) மகள் முயற்சித்தார். ஆனால், நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை வேகமாக இயக்கி மிதிலேஷின் மகள் மீது மோதி அவர் மீது ஏற்றியுள்ளனர்.
டிராக்டர் மோதியதில் அதன் டயரில் சிக்கிய கர்ப்பிணியான மிதிலேஷின்(Mithilesh Medha) மகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். கர்ப்பிணியை டிராக்டர் ஏற்றி கொலை செய்த நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இந்த கொலை குறித்து தகவலறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதபரிசதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கர்ப்பிணி பெண்ணை டிராக்டர் ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியோடிய நிதி நிறுவன ஊழியர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் பெயரை பயன்படுத்தி பல லட்சம் மோசடி செய்த இளம் பெண்ணை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் வசித்து வருபவர் சௌமியா (28). இவர் மின்துறை அமைச்சர் தனது உறவினர் என்று பொய் சொல்லி கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி பல லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் எனக்கு தெரியும் என்றும் என்னால் அரசு வேலை வாங்கிக்கொடுக்க முடியும் என்றும் ஏமாற்றி பலரிடம் பல லட்ச ரூபாயை ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்களில் சிவகுமார் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மேலும், வீட்டில் இருந்த சௌமியா வை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
திருச்சியை சேர்ந்த சவுமியா கணவன் இறந்துவிட்டதாக கூறியும், மறுமணம் செய்துகொள்ள நினைக்கிறன் எனக்கூறியும் கரூரில் வீடெடுத்து தங்கி வந்தார். அப்போது, அக்கம்பக்கத்தை சேர்ந்த பெண் ஓருவர் தனது உறவினரான ஆட்டோ ஓட்டுநர் சிவகுமாரை சௌமியாக்கு கட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். சௌமியாவும் அதற்கு சம்மதித்துள்ளார்.
இந்நிலையில், நான் தனியார் வங்கியில் மேனேஜராக உள்ளேன் தனக்கு அமைச்சரை தெரியும் எனக்கூறி சிவகுமாருக்கு அரசு வேலை வாங்கி கொடுப்பதாக சௌமியா ஆசையை கிளப்பியுள்ளார்.
மேலும், அதற்கு முன்பணமாக 10 ஆயிரத்தையும் சௌமியா பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து சிவகுமாருக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் என பலரும் அரசு வேலைக்காக சௌமியாவிடம் 10 லட்சம் ரூபாய் வரைக்கும் முன்பணமாக கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று சௌமியாக்கும் சிவகுமாருக்கு திருமணம் நடத்தி முடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சிவகுமாரை கரூருக்கு அழைத்து சென்ற சவுமியா அங்குள்ள ஒரு பெரிய பங்களா வீட்டை காட்டி அதுதான் தனது தாய் வீடும் என்றும், நான் காதல் திருமணம் செய்துகொண்டதால் என்னை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.
அதன் பின்னர் சிவகுமார் கரூரில் உள்ள உறவினருக்கு சௌமியாவின் புகைப்படத்தை அனுப்பி அவரை குறித்து விசாரிக்க சொல்லியுள்ளார். அப்போது, சௌமியாவுக்கும் அந்த பங்களா வீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது தெரிய வந்தது.
மேலும், அந்த வீட்டு உரிமையாளரையும் சௌமியா ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சௌமியாவை தூக்கி வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அது மட்டுமின்றி, சௌமியா ஏற்கனவே போலீஸ்காரர் உட்பட 5 பேரை திருமணம் செய்து ஏமாற்றியதோடு அடுத்த வாரம் சிவகுமாரையும் அதுக்கு அடுத்தபடியாக கோவையை சேர்ந்த ஒருவரையும் திருமணம் செய்ய ஸ்கெட்ச் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சௌமியா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கரூர் குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமார், நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சௌமியாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளம் மூலம் பழகி இரண்டுபேரை திருமணம் செய்த பெண்ணால், ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான சக்திவேல் (32).
இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சுமன் (25) என்பவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுமனும் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தட்டான்சாவடி பகுதியை சேர்ந்தவர் பூமிகா.
இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. செல்போனில் அதிகநேரம் செலவிட்டு வந்த பூமிகா சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார். வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக் உள்ளிட்டவைகளில் தன்னுடைய போட்டோக்களை வெளியிடுவது இவரது வழக்கமாக இருந்துள்ளது.
இதனால் இவரது சமூக வலைத்தளங்களை பலரும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். எந்த நேரமும் மனைவி செல்போனில் நேரத்தை செலவிட்டு வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பூமிகா தன் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனிடையே, அவரது சமூக வலைத்தளத்தை பின்தொடர்ந்து நட்பாக பழகி வந்த சுமனுக்கும், பூமிகாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருவரும் நேரில் சந்தித்து பழகி வந்தனர்.
பின்னர் பூமிகா சுமனை திருமணம் செய்துகொண்டார். இதன்பின்னரும் சமூக வலைத்தளம் மூலம் பலரிடம் நட்பாக பேசி பழகி வந்துள்ளார். இரண்டாவது கணவர் சுமனுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் விசாரித்த போது, சுமனின் சொந்த ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சக்திவேலையும் பூமிகா திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால் சக்திவேல் மீது சுமனுக்கு கோபம் ஏற்பட்டது.
சக்திவேலை நேரில் சந்தித்து, உனக்கு முன்பாக நான்தான் பூமிகாவை திருமணம் செய்துகொண்டேன். எனவே அவரை விட்டு பிரிந்து செல்வதோடு பூமிகா விவகாரத்தில் இனி தலையிடக்கூடாது என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
பூமிகாவை விட்டு பிரிய முடியாது எனவும், முடிந்தால் அவரை அழைத்து செல் என சக்திவேல் சுமனிடம் தெரிவித்துள்ளார். இதில் தகராறு முற்றியதால், பேச்சு வார்த்தைக்கு வந்த சக்திவேலை, சுமன் தனது நண்பர்களோடு சேர்த்து வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் கொலையில் தொடர்புடைய பண்ருட்டியை சேர்ந்த படிஸ்டா குணா, வசந்தகுமார், மற்றொரு குணா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதிதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் மரமடைத்துள்ளார். நேற்று (17.09.2022) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் இரவு 10 மணியளவில் ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் பயணித்த போது புகையிரத பாதையில் இருந்த குடும்பஸ்தர் ஒருவரை மோதித் தள்ளியது.
குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் மரணமடைந்த நிலையில், சடலம் புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு, வவுனியா புகையிரத நிலையத்தில் வைத்து பொலிசாரிடம் கையளிக்கப்பட்டது.
பொலிசாரால் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவத்தில் ஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான எஸ்.நகுலன் என்பவரே மரணமடைந்தவராவார்.
ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அனைத்துப் பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டாய ஆடைக் குறியீட்டை ஈரான் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுவெளியில் பெண்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
அந்த வகையில், ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் கூட நடக்கிறது.
இவ்வாறு இருக்க, அண்மையில் ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த பொலிஸார் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குர்திஸ்தானை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) குடும்பத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்போது ஈரானில் பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் அணிவதை கண்காணிக்கும் வகையிலான நீதிநெறியை கடைப்பிடிக்க செய்யும் கலாச்சார பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தெஹ்ரான் செல்லும் வழியில் மாஷா அமினி மற்றும் குடும்பத்தினரை கலாச்சார பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மாஷா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கலாச்சார பொலிஸார் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் அவரை கைது செய்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றதுடன், அங்கு வைத்தும் பொலிஸார் அவரை தலையில் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் மயங்கியுள்ளார். இதனால் பொலிஸார் நோயாளர் காவு வண்டி மூலம் மாஷா அமினியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது அவர் கோமா நிலைக்கு சென்றது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் மாஷா அமினி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் ஈரானில் மட்டுமன்றி உலக நாடுகள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பிற மனித உரிமை அமைப்புகள் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.