15 பேரை ஏமாற்றி திருமணம் பெண் : மனைவியை இழந்தவர்கள் தான் குறி!!

தமிழகத்தில்..

முதல் மனைவியை இழந்த ஆண் ஒருவர் மறுமணம் செய்த நிலையில் அப்பெண்ணின் மிகப்பெரிய மோசடி அம்பலமாகியுள்ளது. தமிழகத்தின் சேலத்தின் எடப்பாடியை சேர்ந்தவர் செந்தில் (48). இவருடைய மனைவி ரம்யா ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இதனால் மறுமணம் செய்ய முடிவு செய்த செந்தில், ஓன்லைனில் திருமண செயலி ஒன்றில் பதிவு செய்து வரன் தேடினார். இந்நிலையில் ஓன்லைன் வழியாக அவரிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட கவிதா என்ற பெண் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த ஜூன் மாதம் 24-ந் திகதி சேலம் அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

முதலிரவன்றே 4 1/2 பவுன் நகை, வெள்ளிக்கொழுசு, ரொக்கப்பணம் என 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை சுருட்டிக்கொண்டு கவிதா தப்பிச்சென்றுள்ளார்.

இது குறித்த புகாரையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் சம்பந்தப்பட்ட பெண்ணின் வங்கி கணக்கு உள்ள கோவை மருதமலை பகுதிக்குச் சென்ற பொலிசார் அங்கு அவரது வங்கி கணக்கில் இருந்த முகவரியை தேடி கோவை அருகே உள்ள களப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு சென்றனர்.

சம்பந்தப்பட்ட முகவரியில் குடியிருந்த கவிதா கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து சென்று விட்டதாக வீட்டின் உரிமையாளர் கூறினார் இருப்பினும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து கோவை பகுதியில் முகாமிட்டு பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இது போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி திருமண ஆசை காட்டி பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட செந்தில் கூறும்போது, தனது மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற நோக்கில் ‘ஜோடி ஆப்’ மூலம் 2வது திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததாகவும், இதில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணிடம் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கால்களை இழந்த இளைஞனுடன் காதல் திருமணம் : ஆத்திரத்தில் பெண்ணின் பெற்றோர் செய்த செயல்!!

திருநெல்வேலியில்..

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கால்களை இழந்த வாலிபருடன் காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணை, பெற்றோர் அடித்து, இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த கேசவனேரியைச் சேர்ந்தவர் பிரகாஷ், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கேசவனேரியை அடுத்த வள்ளியம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் திவ்யா. பிரகாசும், திவ்யாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிகாஷ் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் தனது இரு கால்களையும் இழந்தார். கால்களை இழந்தாலும் பிரகாசும், திவ்யாவும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் இதற்கு திவ்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் தனது மகள் திவ்யாவை, கணேசன் கடத்திச் சென்றுவிட்டதாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தனர். இந்த நிலையில், காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு மணமகனின் வீட்டில் இருப்பதாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற பெண்ணின் பெற்றோர் கால் இல்லாத நபரை எப்படி திருமணம் செய்துகொள்வாய் என்று பிரகாசை சரமாரியாக தாக்கிவிட்டு திவ்யாவை அழைத்துச் சென்றுவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து தனது காதல் மனைவியை அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக என்னிடம் இருந்து பிரித்துச் சென்றுள்ளனர், எங்கள் இருவரையும் சேர்த்துவைக்குமாறு பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளைஞருக்கு கிடைத்த அரசு வேலை.. ஊரே சேர்ந்து திருவிழா கொண்டாட்டம் : சுவாரஸ்ய சம்பவம்!!

பீகாரில்..

இளைஞர் ஒருவருக்கு அரசு வேலை கிடைத்த நிலையில், அதனை ஒட்டுமொத்த கிராமமே கொண்டாடிய சம்பவமும், அதற்கு பின்னால் உள்ள காரணமும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சோஹாக்பூர் எனும் குக்கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ராகேஷ் குமார். இவருக்கு தற்போது 25 வயதாகிறது.

முன்னதாக, ராகேஷின் 19-வது வயதில் அவரது தந்தை உயிரிழந்துள்ளார். இதன் பின்னர் தன்னுடைய கல்வியின் நிதி நெருக்கடியை சமாளிக்க, அப்பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்து வந்துள்ளார் ராகேஷ்.

தனக்கு உதவி செய்ய ஆசை யாரும் இல்லாததால் சொந்த காலிலேயே மிகவும் கடினமாக உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறவும் அவர் முடிவு எடுத்துள்ளார்.

மேலும், அரசு வேலைக்கு சேர வேண்டும் என்பது தான் ராகேஷின் லட்சியமாகவும் இருந்துள்ளது. இதற்காக தீவிரமாக தயாராகி வந்த ராகேஷுக்கு, முசாபர்பூரில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக அரசு வேலை கிடைத்துள்ளது.

ராகேஷுக்கு அரசு வேலை கிடைத்ததை ஒட்டுமொத்த சோஹாக்பூர் கிராமமும் மிக விமரிசையாக கொண்டாடி உள்ளது. இதற்கு காரணம், அந்த கிராமத்தில் உள்ள ஒருவருக்கு கூட கடந்த 75 ஆண்டுகளாக அரசு வேலை கிடைக்கவில்லை என்பது தான்.

அப்படி இருக்கையில், தற்போது அந்த கிராமத்திலிருந்து இளைஞர் ஒருவர் முதல் முறையாக அரசு வேலை பெற்றுள்ளது ஒட்டுமொத்த கிராமத்தையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது பற்றி பேசும் இளைஞர் ராகேஷ், “கடந்த 75 ஆண்டுகளாக எனது கிராமத்தில் இருந்து ஒருவர் கூட அரசு வேலையில் சேரவில்லை. அப்படி இருக்கையில் அதனை உடைத்து எனது கிராமத்தின் இமேஜை மாற்ற வேண்டும் என்றும் நான் முடிவெடுத்தேன்.

கடைசியில் அதனை நான் தற்போது நிறைவேற்றி உள்ளேன்” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ராகேஷுக்கு அரசு வேலை கிடைத்ததை கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாட தொடங்கி உள்ளனர்.

2000 பேர் வரும் வசித்து வருகின்ற கிராமத்தில் அரசு வேலைகள் கிடைப்பது என்பது வரம்பு மீறியது என இருந்து வந்த விஷயத்தை இளைஞர் உடைத்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக கிராம மக்கள் இனிப்புகளை வழங்கினர்.

இளைஞருக்கு அரசு வேலை கிடைத்தது தொடர்பாக அந்த கிராமத்து மக்கள் பேசுகையில், சுதந்திரத்திற்கு பிறகு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது மிகவும் பெருமையாக உள்ளது என்றும், இனி வரும் புதிய தலைமுறை அரசு வேலைக்கு செல்லவும்,

கிராமத்தின் மீதான விதியை மாற்றவும் நிச்சயம் ஒரு தூண்டுகோலாக இது இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 75 ஆண்டில் முதல் முறையாக ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது, தற்போது நாட்டில் உள்ள பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

தகவல் அறியும் உரிமை தொடர்பில் வடக்கு மாகாண ஊடகவியலாளருடன் கலந்துரையாடிய தகவல் அறியும் ஆணைக்குழு!!

செயலமர்வு..

தகவல் அறியும் உரிமை தொடர்பில் வடமாகாண ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான செயலமர்வு ஒன்று இடம்பெற்றது. ஊடக அமைச்சு மற்றும் தகவல் அறியும் ஆணைக்குழு என்பவற்றின் ஏற்பாட்டில் அப்ரியல் நிறுவனத்தின் அணுசரணையுடன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் குறித்த செயலமர்வு இன்று (29.09) காலை முதல் மதியம் வரை இடம்பெற்றது.

இதன்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள், அதனை மக்களுக்கு கொண்டு செல்லும் வழிமுறைகள் தொடர்பாக தகவல் அறியும் ஆணைக்குழு உறுப்பினர்கள் விளக்கமளித்திருந்ததுடன்,

வட மாகாண ஊடகவியலாளர்கள் தகவல் அன்றியும் உரிமைச் சட்டம மூலம் தகவல்களை கோரும் போது ஏற்படும் நடைமுறை பிரச்சனைகள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தினர்.

இதன்போது ஆணைக்குழுவினர் அடுத்தகட்ட நடவடிக்கைகள், ஆணைக்குழுக்கான மேன்முறையீடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுருந்தனர். அத்துடன் கிராம மட்டத்தில் தகவல் உரிமைச் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதியரசர் உபாலி அபயரட்ண, ஆணையாளர் பின்டு ஜெயரட்ண, ஆணையாளர் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெகத் லியனராட்சி,

ஆணையாளர் முகமட் நகியா, பொது பணிப்பாளர் ருவன் சற்குமார, அப்ரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் ரவீந்திரடீ சில்வா மற்றும் அரச அதிகாரிகள், வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள், வடக்கு ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வயிறு கிழிக்கப்பட்டுக் கிடந்த ஏழு மாத கர்ப்பிணிப் பெண்ணின் உடல் : பதறவைக்கும் ஒரு திகில் சம்பவம்!!

பிரேசில்லில்..

பிரேசில் நாட்டில் அரை நிர்வாணமாக கிடந்த ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் வயிறு கிழிக்கப்பட்டு, அவரது வயிற்றிலிருந்த குழந்தை திருடப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது ஏதோ ஒரு கூட்டத்தார் நரபலியிடும் நோக்கில் செய்யப்பட்ட செயல் என கருதப்படுகிறது.

பிரேசில் நாட்டிலுள்ள Sao Paulo என்ற மாகாணத்தில், Ohana Karolin (24) என்ற இளம்பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

வயிற்றுக்குக் கீழே உடையில்லாமல், அவரது பிறப்புறுப்பு மோசமாக சிதைக்கப்பட்டு, அவரது வயிறு கிழிக்கப்பட்டு, அவரது வயிற்றிலிருந்த ஏழு மாதக் குழந்தை அகற்றப்பட்டிருந்த நிலையில் சடலமாக Karolin கண்டெடுக்கப்பட்ட விடயம், அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

குழந்தையின் நிலை என்ன என்று தெரியவில்லை.Karolin சமீபத்தில்தான் தனது கணவரைப் பிரிந்து புதிய காதலர் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்த நிலையில், இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

பயங்கரமான ஒரு கூட்டத்துடன் Karolin சுற்றிக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள அவரது தோழி ஒருவர், அதனாலேயே அவரது நண்பர்கள் பலர் அவரைவிட்டு தூர விலகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பொலிசார் இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மகள்கள் பசியோடு இருக்கக் கூடாது என்று தாயாக மாறிய தந்தை : நெகிழ வைக்கும் வீடியோ!!

ரயிலில்..

ரயிலில் பசியுடன் இருக்கும் தன்னுடைய மகள்களுக்கு தந்தை ஒருவர் உணவை ஊட்டிவிடும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

தந்தையின் அன்பு பெரும்பாலும் விரிவாக பேசப்படுவதில்லை. அன்னையின் அன்பை உலகம் கொண்டாடும் அளவுக்கு தந்தையின் பாசம் பற்றி பலரும் பேசுவதில்லை. எழுதாத கவிதை போல தேங்கும் தந்தையின் அன்பு எப்போதும் செயல் வடிவமாகவே இருந்து வந்திருக்கிறது.

தாய்க்கும், குழந்தைகளுக்கும் அரணாக திகழும் தந்தைகள் தங்களுடைய சிறிய சிறிய செயல்களின் அடிப்படையிலேயே தங்கள் குடும்பத்தின் மீதும் குழந்தைகள் மீதும் உள்ள பாசத்தினை வெளிப்படுத்திவிடுகிறார்கள். அப்படியான நபர் ஒருவரின் வீடியோ தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் இரு சிறுமிகள் ஓடும் ரயிலில் அமர்ந்திருக்கிறார்கள். பொதுவாக நகரங்களில் பள்ளி செல்லும் குழந்தைகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு சென்றுவிட வேண்டும் என்ற காரணத்தினால் காலை உணவை தவிர்த்துவிடுவதை நாம் பார்த்திருப்போம்.

அப்படி இந்த இரண்டு சிறுமிகளும் தங்களது காலை உணவை தவிர்த்து விட்டது போல தெரிகிறது. அப்படியான சூழ்நிலையில் தனது மகள்களின் பசியினை பொறுக்காத தந்தை டிபன் பாக்சில் உணவுடன் தனது மகள்களுடன் பயணம் செய்கிறார்.

ரயிலில் இருக்கையில் மகள்கள் அமர்ந்திருக்க, கீழே அமர்ந்திருக்கும் அந்த தந்தை உணவை தனது மகள்களுக்கு ஊட்டுகிறார். தந்தையின் அருகாமையில் பாதுகாப்பு உணர்வுடன் அமர்ந்திருக்கும் இரு சிறுமிகளும் சூழலை வேடிக்கை பார்த்தபடி சாப்பிட்டுக்கொண்டே தங்களது பயணத்தை தொடர்கிறார்கள்.

இந்த வீடியோ பதிவிடப்பட்டது முதலாக பலரும் இதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து தங்களுடைய தந்தை பற்றிய நினைவுகளை பதிவாக எழுதி வருகின்றனர்.

தம்பதியினர் சேர்ந்து ஒன்றாக எடுத்த முடிவு.. வியக்க வைக்கும் பின்னணி!!

மத்திய பிரதேசத்தில்..

தம்பதியினர் ஒருவர் தங்களது வேலையை விட்டு விட்டு தற்போது செய்துள்ள செயல் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நிகில். இவரது மனைவியின் பெயர் பரிதி.

இவர்கள் இருவரும் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படும் நிலையில், தங்களது வேலையில் இருந்தும் அவர்கள் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி வேலையை இவர்கள் ராஜினாமா செய்ததற்கான காரணம் தான், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது. வேலையில் இருந்து விலகிய நிகில் மற்றும் பரிதி ஆகியோர், மணாலியில் இருந்து ஸ்ரீநகர் வரை சுமார் 3,200 கிலோமீட்டர் ட்ரக்கிங் செய்ய கிளம்பி உள்ளனர்.

இதற்கு காரணம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக தான். முன்னதாக லடாக் வரை இவர்கள் கடந்த ஆண்டு பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில், அங்கே அதிகம் குளிர் இருந்த காரணத்தினால் தங்களது பயணத்தை பாதியில் நிறுத்தினர்.

தொடர்ந்து இந்த ஆண்டு மீண்டும் கடந்த மார்ச் மாதம் முதல் தங்களின் பயணத்தை லடாக்கில் இருந்து ஆரம்பித்தனர். மணாலியில் இருந்து ஸ்ரீநகர் வரை லடாக் வழியாக கிட்டத்தட்ட 3200 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே செல்லவும் இந்த தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த ட்ரெக்கிங் பயணத்தை தங்கள் வாழ்க்கையின் மிக அழகான தருணம் என்றும் அவர்கள் குறிப்பிடும் நிலையில், 19 மலைப்பாதைகள் வழியாக Lal Chowk பகுதியை அடைய சுமார் 3200 கிலோ மீட்டர் மலையேற்றம் செய்து முடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக மணாலி வரை பேருந்தில் வந்த நிகில் மற்றும் பரிதி ஆகியோர், இதன் பின்னர் நடந்தே அனைத்து வழிகளையும் கடக்க முடிவு செய்துள்ளனர். இது தவிர, லடாக் பகுதியில் உள்ள நிறைய கிராமங்களுக்கும் இந்த தம்பதியினர் சென்று அங்குள்ள மக்களிடமும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த மலையேற்றத்தில், நிகில் மற்றும் பரிதி ஆகிய இருவரும் ஈடுபடுவதற்கு முன்பாகவே இதற்கான பயிற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டு தயாரானதாக கூறப்படுகிறது.

இந்த மலையேற்ற சமயத்தில் எந்தெந்த கிராமங்களை அவர்கள் கடக்கிறார்களோ அங்கே ஒரு மரத்தை நட்டு விட்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். இது தவிர கையில் குப்பை சேகரிக்கும் பையுடன் அவர்கள் செல்லும் வழியில் உள்ள குப்பைகளை அள்ளிக் கொண்டு சென்றதாக குறிப்பிட்டுள்ளனர்.

கறுப்பாக இருப்பதாக கிண்டல் செய்த கணவன் : கோபத்தில் மனைவி செய்த கொடூரம்!!

சத்தீஸ்கரில்..

கருப்பதாக இருப்பதாக கூறி கிண்டல் செய்ததால் கணவனின் ஆணுறுப்பை கோடாரி கொண்டு வெட்டிய மனைவியின் செயல் சத்தீஸ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியிலுள்ள அம்ளிஸ்வர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் சோன்வான் (வயது 40). இவர் தனது மனைவி சங்கீதாவுடன் (வயது 30) வாழ்ந்து வந்துள்ளார்.

திருமணம் ஆனதில் இருந்தே இருவருக்குள்ளும் தகராறு ஏற்படும்போதெல்லாம் மனைவியின் கறுமை நிறத்தை வைத்து வசைபாடி வந்துள்ளார் ஆனந்த். இப்படியாக ஒவ்வொரு முறையும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்படும்போதெல்லாம் கணவன், மனைவியின் நிறத்தை கிண்டல் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே போல் இருவருக்குள்ளும் ஏதோ சிறு வாக்குவாதம் ஏற்பட மீண்டும் தனது மனைவியின் நிறத்தை வைத்தே கிண்டல் செய்துள்ளார் ஆனந்த்.

இதனால் பொறுமை இழந்த மனைவி சங்கீதா அவரை திட்டியுள்ளார்; மேலும் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து தனது கணவர் ஆனந்தை வெட்டியுள்ளார். இருப்பினும் கோபம் தீராத சங்கீதா, மற்றொரு கூர்மையான ஆயுதத்தை எடுத்து வந்து கணவரின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார்.

இதையடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், நடந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ஆனந்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சங்கீதாவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிறத்தை வைத்து கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் காதல் : ஆளைமாற்றிய யுவதியால் அதிரடி திட்டம்போட்ட இளைஞர்!!

பேஸ்புக் காதல்..

தனது பேஸ்புக் காதலியின் புதிய காதலனை குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்யும் திட்டத்துடன் காத்திருந்த இளைஞர் ஒருவர் கைக்குண்டுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை – இறக்காமம் பகுதியில் பதிவாகியுள்ளது.

கல்கமுவ – மஹகல்கடவல பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான குறித்த இளைஞன் காலி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை பேஸ்புக் ஊடாக சந்தித்து காதலித்து வந்துள்ளார்.

எனினும் அவ்விருவரும் ஒரு போதும் நேரில் சந்தித்திருக்கவில்லை என பொலிஸார் கூறுகின்றனர். இவ்வாறான நிலையில், அண்மைக் காலமாக குறித்த யுவதி கல்கமுவ இளைஞனை கைவிட்டு, அம்பாறை சுகாதார பரிசோதகர் பணிமனையில் சேவையாற்றும் இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்.

அம்பாறை இளைஞர் தொடர்பில் பேஸ்புக் ஊடாக தகவல்களை சேகரித்துள்ள கல்கமுவ இளைஞன், பின்னர் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் நடத்தி, அம்பாறை இளைஞனை கொலை செய்யும் நோக்கத்துடன் கடந்த 26 ஆம் திகதி அம்பாறை நோக்கி சென்றுள்ளார்.

இந்நிலையில், அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் வைத்து, குறித்த இளைஞனை சந்தித்து குண்டை வெடிகக் செய்து தற்கொலை தாக்குதல் நடத்த, சந்தேக நபர் கடந்த 27 ஆம் திகதி அப்பகுதிக்கு சென்றுள்ளார்.

எனினும் அப்போது அவரால் அந் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது. இதனையடுத்து அவர் திரும்பிவரும் வரை கைக்குண்டுடன், அம்பாறை – இறக்காமம் பொலிஸ் பிரிவின் தீகவாபிக்கு திரும்பும் சந்தியில் சந்தேக நபர் காத்திருந்துள்ளார்.

இதன்போது இளைஞன் தொடர்பில் சந்தேகம் கொண்ட பிரதேசவாசி ஒருவர் அளித்த தகவல் பிரகாரம் அங்கு சென்றுள்ள பொலிசார், சந்தேக நபரைக் கைதுச் செய்துள்ளதுடன் குண்டையும் மீட்டுள்ளனர்.

சந்தேக நபரைக் கைது செய்ய முயன்ற போது, அவர் வயல் வெளி ஊடாக தப்பியோட முயன்ற நிலையில் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் இருந்து, கைக்குண்டு ஒன்றும் கூரிய கத்தியொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கைக்குண்டானது, இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் மரணமடைந்த தனது உறவுக்காரர் ஒருவர் ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸ் விசாரணையில் சந்தேக நபர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மனைவி முன்னிலையில் காதலியை கரம்பிடித்த கணவன் : ஒரே வாரத்தில் நடந்த விபரீதம்!!

திருப்பதியில்..

மனைவி முன்னிலையில் காதலியை கரம்பிடித்த வாலிபரை காணவில்லை என தகவல்கள் வெளியாகி இருப்பது திருப்பதி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி மாவட்டம், டக்கிலி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கல்யாண். சமூக வலை தளத்தில் அதிகம் பிரபலமான இவர், அடிக்கடி வீடியோ எடுத்து பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் விமலா என்ற பெண்ணுடன் கல்யாணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த பழக்கம், காதலாக மாறி உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கணவன் மனைவியான கல்யாண் மற்றும் விமலா ஆகியோர் இணைந்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் இவர்களை ஏராளமானோர் பின் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

விமலாவுக்கு முன்பு சமூக வலை தளத்தில் பிரபலமாக இருக்கும் விசாகபட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்ற பெண்ணை கல்யாண் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு இடையே உருவான பிரச்சனை காரணமாக அவர்கள் பிரிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், நித்யஸ்ரீயை பிரிந்த கல்யாண், விமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் நித்யஸ்ரீ சமீபத்தில் விமலாவை சந்தித்து கல்யாண் மீதான தன்னுடைய காதல் குறித்து விவரித்ததுடன், கல்யாணை திருமணம் செய்துகொள்ள உதவும்படியும் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து, தனது கணவர் கல்யாணுக்கும் அவருடைய காதலி நித்யஸ்ரீக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார் விமலா. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், கல்யாண் காணாமல்போய்விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மனைவி முன்னிலையில் காதலியை கரம்பிடித்த வாலிபர் திருமணம் நடைபெற்ற நிலையில் மாயமாகியிருப்பது திருப்பதி வட்டாரம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் இளம் பெண் உயிரிழப்பு : வைத்தியருக்கு எதிராக தடை!!

புத்திகா ஹர்ஷனி தர்மவிக்ரம..

வத்தளை தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்தியரின் அலட்சியத்தால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பரிசோதனை முடிவுகள் வரும் வரை வைத்தியரின் சத்திர சிகிச்சைக்கு தடை விதிக்கப்படும் என சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சர்ச்சைக்குரிய வைத்தியரால் மேற்கொள்ளப்பட்ட முன்னைய சத்திரசிகிச்சைகளினால் பல நோயாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 13ஆம் திகதி ஜா-எல, தெலத்துர பகுதியைச் சேர்ந்த புத்திகா ஹர்ஷனி தர்மவிக்ரம என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். திருமணமாகி 17 நாட்களில் ஏற்பட்ட சிறு நோய்க்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

அவரது பித்தப்பையின் ஒரு பக்கத்தில் கல் இருப்பதாகக் கூறிய மருத்துவர், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி கடந்த மாதம் 31ஆம் திகதி வத்தளையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் சத்திரசிகிச்சையின் பின்னர் கவலைக்கிடமான நிலைக்குள்ளாகியுள்ளார். அதன் பின்னர் ராகம போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த 25ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த வைத்தியரின் அலட்சியத்தால் இந்த மரணம் நிகழ்ந்ததாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மரணத்திற்கு பின் அறுவை சிகிச்சை செய்த வைத்தியரின் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வருவதால் இந்த சம்பவம் குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இறந்த மகனை மீண்டும் வாழவைத்த பெற்றோர் : மூளைச் சாவடைந்த இளைஞரின் தந்தை உருக்கம்!!

தருமபுரியில்..

தருமபுரியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் கல்லீரல், சிறுநீரகம் தானமாக பெற்றோர்கள் வழங்கியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பள்ளத்தூர் அருகே உள்ள மோட்டுக் கொட்டாய் கிராமத்தைச் சார்ந்த கமலநாதன்-வெண்ணிலா தம்பதியரின் மூத்த மகன் திவாகர்.

இவர் பொறியியல் படித்துவிட்டு, தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜோலார்பேட்டையில் தனது நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காகத் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி அருகிலிருந்த தடுப்புச் சுவர் மீது மோதி கீழே விழுந்துள்ளார். இதில் திவாகரன் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் திவாகரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திவாகர் மூளைச்சாவு அடைந்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து திவாகரன் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின் பெற்றோர் முடிவு செய்தனர்.

பின்னவர் திவாகரின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது திவாகரின் பெற்றோர் கூறுகையில், “என் மகன் உயிருடன் இல்லை என்றாலும், அவனுடைய உடல் உறுப்புகள், உயிரோடு இருப்பவர்களுக்கு, உயிர் வாழ உதவட்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் விபத்துகளில் மூளைச் சாவு ஏற்படுகின்றவர்களின் உடல் உறுப்புகளை தானம் பெற அரசு முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பரிதாபமாக பலி!!

தாலிக்குளம் பகுதியில்..

வவுனியா தாலிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாப மரணமடைந்துள்ளார். இன்று (29.09) பிற்பகல் மன்னார் வீதியூடாக துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த குறித்த முதியவரை அதேதிசையில் பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் நோயாளர் காவுவண்டியின் மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

தாலிக்குளம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் வயது 68 என்ற முதியவரே இவ்வாறு மரணமடைந்தார். மோட்டார் சைக்கிளை செலுத்திய மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!!

கர்ப்பிணிப் பெண்களுக்கு..

வவுனியாவில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஹற்றன் நசனல் வங்கியின் நிதி பங்களில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள கேட்கோர் கூடத்தில் குறித்த நிகழ்வு நேற்று (28.09) இடம்பெற்றது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரிவுக்குட்பட்ட 20 கர்ப்பிணிப் பெண்களுக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன், வைத்தியர் ஜெயதரன், வைத்தியர் யூட் பீரிஸ், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பிரியதர்சினி, ஹற்றன் நசனல் வங்கி முகாமையாளர், உதவி முகாமையாளர், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

“ஒரு காலத்தில் டியூஷன் ஆசிரியர்”… ஒரே நாளில் 14 லட்சம் வருமானம்… வாழ்க்கையே திருப்பிப் போட்ட அந்த ஒரு நாள்!!

கோடீஸ்வரி..

ஒரு காலத்தில் ட்யூஷன் டீச்சராக இருந்த பெண் ஒருவர், தற்போது கோடீஸ்வரியாக மாறியுள்ள நிலையில், இதற்கான காரணம் பலரையும் மிரள வைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் என்னும் பகுதியை சேர்ந்தவர் கவிதா.

சிறு வயது முதலே படிப்பில் நம்பர் ஒன்னாக திகழ்ந்த கவிதா, கல்லூரி படிப்பின் போதே ட்யூஷன் நடத்தி வருமானம் பெற தொடங்கி உள்ளார். வீட்டின் வறுமை நிலையை தாண்டி, கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு கிடைக்கும் பணத்தை சேமிப்பதையும் கவிதா வழக்கமாக கொண்டு வந்துள்ளார்.

தனது கல்லூரி படிப்பை முடித்த பின்னர், ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார் கவிதா. அங்கே தனது பயிற்சி காலத்தில் கவிதா இருந்த போது, உடன் இருந்தவர்கள் பங்குச்சந்தைகளில் மூழ்கி கிடப்பதை அவர் உணர்ந்துள்ளார்.

மேலும், பங்குச்சந்தை பற்றி முதல் முறையாக கவிதா அப்போது தான் கேள்விப்பட்டுள்ளார். தனக்கென கூடுதல் வருமானம் பெறுவதை ஒரு பழக்கமாக கவிதா கொண்டிருந்ததால், பங்கு வர்த்தகம் பற்றி அறியவும் முனைப்பு காட்டினார்.

தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர் மூலம் ஸ்டாக் பரிவர்த்தனை பற்றி கவிதா அறிந்து கொண்டுள்ளார். மேலும், வர்த்தக செய்தித் தாள்கள் மற்றும் இதழ்களை படித்தும் தனக்கான புரிதலை அவர் ஏற்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இன்ட்ராடே வர்த்தகம் செய்ய தொடங்கி, நாள் ஒன்றுக்கு 200 முதல் 400 ரூபாய் வரை அவர் லாபம் பார்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தனது போர்ட்போலியோவை உருவாக்க, வங்கியில் இருந்து தனிநபர் கடன் வாங்கி, பெரிய முன்னேற்றம் காணவும் கவிதா ஆரம்பித்துள்ளார்.

பங்கு சந்தை குறித்து நன்கு தெரிந்து கொண்ட கவிதா பற்றி, அவரது பெற்றோர்கள் தெரிந்து கொண்டதும் ஒரு நொடி பயந்து போயினர். பங்கு சந்தையில் பல லட்சம் கடன் ஆனால் என்னவாகும் என கருதினர். ஆனால், தனது போர்ட்போலியோவை பெற்றோர்களிடம் காண்பித்து அதில் இருக்கும் பணத்தை பற்றி அவருக்கு புரிய வைத்தார் கவிதா.

அதே வேளையில், பல முறை பங்குச் சந்தை வர்த்தகத்தில் இழப்பையும் கவிதா சந்தித்துள்ளார். அதிகபட்சமாக 8 லட்சம் ரூபாய் வரை அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதே போல, ஆப்ஷன் டிரேடிங்கில் கவிதாவின் மிகப்பெரிய லாபம் என்பது இன்று வரை ஒரே நாளில் 14 லட்சம் ரூபாய் சம்பாதித்ததாகும். ஆஸ்திரேலியாவில் தற்போது ஐடி ஊழியராக பணிபுரிந்து வரும் கவிதா, 11 ஆண்டுகளுக்கு முன் இந்திய பங்குச்சந்தை குறித்து தெரிந்து கொண்டார்.

அந்த சமயத்தில், சுமார் 30,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த கவிதாவின் பங்குச்சந்தை போர்ட்போலியோ, இன்று 2 கோடி ரூபாய்க்கு மேல் அதிக மதிப்புமிக்கதாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், புதிதாக முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு சரியான அறிவுரையை வழங்கி வருகிறார் கவிதா.

எங்களுக்கு பயமா இருந்துச்சு, நாங்க போக வேண்டாம் என்றுதான் கூறினோம் : மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற பெண்ணின் பெற்றோர்!!

செங்கல்பட்டில்..

செங்கல்பட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ரக்சயா மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சந்தித்துள்ளார். தமிழக மாவட்டம் செங்கல்பட்டைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியின் மகள் ரக்சயா. கல்லூரி மாணவியான இவர் ஜெய்ப்பூரில் நடந்த மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் கலந்துகொண்டார்.

20 வயதான ரக்சயா ஆயிரம் மொடல்களுக்கு இடையேயான போட்டியில் அழகிப் பட்டத்தை தட்டிச் சென்றார். சிறுவயது முதலே வறுமையில் வளர்ந்த ரக்சயா, தனது படிப்பு செலவுக்கு பகுதி நேர வேலை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது அடுத்ததாக மிஸ் இந்தியா பட்டத்தையும் வெல்வேன் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிலையில் ரக்சயா பெற்றோர் கூறுகையில், ‘அவளுக்கு விளையாட்டில் மிகவும் ஆர்வம், படிப்பில் சிறந்து விளங்குவார். அழகிப் போட்டிக்கு போறேன்னு அவள் கூறும்போது எங்களுக்கு பயமாக இருந்தது. போக வேண்டாம் என்றுதான் கூறினோம்.

ஆனால், எனக்கு நீங்கள் தடையாக இருக்கிறீங்க.. எனக்கு பிடிச்சத தானே நான் செய்ய முடியும். எனக்கு பிடிக்காததை செய்யுன்னு சொல்றீங்க.. அப்படீன்னு எங்ககிட்ட சொல்லுவா.. சில சமயம் எங்களிடம் சொல்லாமலே போட்டிகளுக்கு சென்றுவிடுவாள். இன்றைக்கு இங்கே போட்டி இருக்குன்னு கூட சொல்லமாட்டா.

ஏன்னா நாங்க தடையா இருப்போம் என்று நினைப்பா.. அப்புறம் போயிட்டு போன் பண்ணுவா.. பிறகு தான் எங்களுக்கு புரிந்தது. அவள் விருப்பப்படி எதுவேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டோம்’ என தெரிவித்துள்ளனர்.