300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தற்காலிக தடை : வெளியானது அறிவிப்பு!!

300 இறக்குமதிகளுக்கு தற்காலிக தடை..

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 300இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, சொக்கலேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகள், உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள், மின் கேத்தல்கள், உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பை கையாளும் வகையில் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆளே இல்லாத தீவு.. பிரமாண்டமான வசதிகள் : சுற்றுலாவாசிகளை சுண்டி இழுக்கும் குட்டித்தீவு!!

சுவீடனில்..

சுவீடனில் உள்ள சிறிய தீவு ஒன்று சுற்றுலாவாசிகளின் விருப்பத்திற்குரிய இடமாக திகழ்கிறது. இதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. சுற்றுலாவாசிகளின் விருப்பத்துக்குரிய இடமாக திகழ்கிறது ஐரோப்பா.

இதமான காலநிலை, பழங்கால கட்டிடங்கள், எழில்கொஞ்சும் கடற்கரைகள் என உலக சுற்றுலா பயணிகளை பெருமளவில் ஈர்த்து வருகின்றன ஐரோப்பிய நாடுகள். இங்கே வரும் பயணிகளை திகைப்பில் ஆழ்த்தக்கூடியவை இங்குள்ள தீவுகள்.

அளவில் மிகச் சிறியவையாக இருந்தாலும், தேர்ந்த நட்சத்திர ஹோட்டல்கள் போல அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கின்றன இந்த தீவுகள். அந்த வகையில் பிரசித்திபெற்றது சுவீடனில் அமைந்திருக்கும் தீவு ஒன்றுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றனர்.

இதற்கு இங்குள்ள பழமையான கலங்கரை விளக்கத்தின் பழைமை வாய்ந்த வரலாறும் ஒரு காரணம். பேட்டர் நோஸ்டர் கலங்கரை விளக்கம் என்று அழைக்கப்படும் இது கடந்த 1868 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சுவீடனில் தெற்கு கடற்பகுதியில் அமைந்திருக்கும் இந்த தீவு கடுமையான நீரோட்டங்களை கொண்டது.

பாறைகளும் அதிக அளவில் அமைந்திருக்கின்றன. இதில் சிக்கி 900க்கும் அதிகமாக கப்பல்கள் சேதமடைந்த நிலையில், கப்பல்களை காப்பாற்றும் நோக்கில் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது.

1977 ஆம் ஆண்டு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அமைப்பாக கலங்கரை விளக்கம் மாறியது. இதனிடையே இதை சுற்றிலும் வீடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

250 மீட்டர் நீளமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட இந்த தீவில் இருந்து சுவீடனுக்கு செல்ல வேண்டும் என்றால் 3 கிலோமீட்டர் கடலில் பயணிக்க வேண்டும். இந்த தீவில் கலங்கரை விளக்கத்தின் பராமரிப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் தங்கியுள்ளனர்.

இதில், சுற்றுலாவாசிகளுக்கும் பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஸ்பா, வீட்டில் தயாரிக்கப்பட்ட காலை சிற்றுண்டிகள், கடல் உணவுகள், வசதியான படுக்கையறை என உயர்தர ஹோட்டலில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் இங்கேயும் கிடைக்கின்றன. இதற்கு 1000 டாலர்கள் செலவாகலாம் எனச் சொல்லப்படுகிறது.

இயற்கைக்கு மத்தியில் கடலுக்கு நடுவே விடுமுறை தினங்களை செலவிட விரும்புவோருக்கு இது நிச்சயம் உகந்த இடமாக இருக்கும் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

நட்பு என்றால் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் – நட்பு என்றால் இதான்யா

 

இதற்காக தற்கொலையா? பாடசாலை மாணவியின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பம்!!

பெங்களூருவில்..

பெங்களூருவில் பெற்றோர் ஷாப்பிங் அழைத்து செல்லவில்லை என்று பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் பள்ளி மாணவ, மாணவிகள் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

மேலும், அவர்களது தற்கொலைக்கு பின்னால் கூறப்படும் காரணங்கள் பேரிடியை கொடுப்பதாகவே உள்ளது. அந்த வகையில் இந்த சம்பவமும் அதிர்ச்சிகரமாக உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை அடுத்த சாமராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள். இதில் மூத்த மகள் பெயர் வைஷாலி (11). இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று வைஷாலியின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடந்தது. வைஷாலியின் தந்தை குடும்பமாக பள்ளிக்கு சென்றுவிட்டு பின்னர் அனைவரும் வீட்டுக்கு வந்தனர்.

இதனையடுத்து, தம்பதி இருவரும் வைஷாலியை மட்டும் வீட்டில் இருக்க சொல்லிவிட்டு மற்ற இரண்டு குழந்தைகளுடன் ஷாப்பிங் செல்ல தயாராகினர். அப்போது, வைஷாலி நானும் வருகிறேன் என்று தந்தையிடம் கூறினார்.

ஆனால், அவர்கள் சிறுமியை வீட்டிலேயே விட்டுவிட்டு கிளம்பி சென்றுவிட்டனர். இதனால் ஏற்பட்ட விரக்தியில் வைஷாலி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தம்பதி இருவரும் ஷாப்பிங் சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வைஷாலி மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதனர்.

பின்னர் சம்பவம் அறிந்து வந்த சாமராஜ்பேட்டை காவல்துறையினர் வைஷாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனது மரணத்திற்கு ஆசிரியர்கள் தான் காரணம் : 9ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை!!

தமிழகத்தில்..

பள்ளி மாணவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டதால் அதிர்ச்சி பள்ளி நிர்வாகம் தங்களிடம் தற்கொலை குறித்து எதுவும் கேட்கவில்லை என மாணவரின் தந்தை புகார்

தமிழகத்தில் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர், தனது மரணத்திற்கு பள்ளி ஆசிரியர்கள் மட்டும் தான் காரணம் என வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை பாடியைச் சேர்ந்த சேகர் என்பவரது 14 வயது மகன் பாரதி செல்வா. இவர் தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், தனது பெற்றோர் வேலைக்கு சென்ற சமயம் பார்த்து பாரதி செல்வா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனைப் பார்த்த அவரது சகோதரர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு முன்னர் வீடியோ ஒன்றை பதிவு செய்த பாரதி செல்வா, தனது மரணத்திற்கு காரணம் பள்ளி ஆசிரியர்கள் மட்டும் தான் எனவும், பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் அதில் பேசியிருக்கிறார்.

மாணவரின் தந்தை சேகர் கூறுகையில், ‘என் மகனுக்கு பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளனர். வீட்டுப்பாடம் செய்யாததால் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் திட்டி, அடித்துள்ளார்கள்.

என் மகனின் தற்கொலை குறித்து பள்ளி நிர்வாகத்தில் தகவல் தெரிவித்தும், இதுவரை ஒருவர் கூட எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை கொலை செய்த தாய் எடுத்த விபரீத முடிவு!!

பெங்களூருவில்..

பெங்களூருவில் நான்கு வயது குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரூவைச் சேர்ந்தவர்கள் நரேந்திரன் – காயத்ரி தம்பதி. இவர்களுக்கு நான்கு வயதில் சமியுக்தா என்ற பெண் குழந்தையும் இருந்தார்.

இந்நிலையில், நரேந்திரனின் பெற்றோர் தமிழ்நாட்டில் வசித்து வரும் நிலையில் நரேந்திரனின் தாய் சில நாட்களுக்கு முன்பு திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் நரேந்திரனின் குடும்பம் கடும் சோகத்தில் மூழ்கிய நிலையில், நரேந்திரன் தமிழ்நாட்டில் இருக்கும் தனது தந்தையை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.

அதன்படி, தமிழகம் சென்ற நரேந்திரன் மீண்டும் கடந்த திங்கட்கிழமை அன்று அதிகாலை பெங்களூருவுக்கு வந்தார். 4.30 அளவில் வீட்டுக்கு வந்து கதவை தட்டியபோது கதவு திறக்கப்படவில்லை. காயத்ரியிடம் இருந்தும் எந்த பதிலும் இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த நரேந்திரன் கதவுடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மனைவியும், மகளும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் பரிசோதித்ததில் குழந்தை சமியுக்தா ஏற்கனவே இறந்துவிட்டததாக தெரிவித்துள்னர். மனைவி காயத்ரியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நரேந்திரனின் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தபோது, காயத்ரி எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது.

அதில், எனக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகமாகி விட்டதாகவும், சிறிய பிரச்சினைகளைக்கூட சமாளிக்க தெரியவில்லை என குறிப்பிட்டிருந்த காயத்ரி, நான் இறந்த பிறகு குழந்தை அனாதையாகிவிடும் என்பதால் குழந்தையை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வரும் போலீசார், காயத்ரி குணமாகி அவருக்கு முறையான கவுன்சிலிங் கொடுக்கப்பட்ட பிறகே சம்பவம் குறித்து முழு விவரம் தெரிய வரும் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நட்பு என்றால் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் – நட்பு என்றால் இதான்யா

 

ஆண் நண்பர்களுடன் கொண்டாட்டம்… மது போதையில் தள்ளாடிய தோழிகள்!!

கன்னியாகுமரியில்..

காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த அதிர்ச்சி. இரவில் மொட்டை மாடி ஏறி கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் பி.ஏ 3ம் ஆண்டு படித்து வரும் நிலையில் கடந்த 6 வருடங்களாக அஜின் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

அந்த பெண்ணிற்கு கஞ்சா, மது போதை பழக்கமும் இருந்துள்ளது. சில நாட்களாக கல்லூரி மாணவி அஜினுடன் இருந்த காதலை குறைத்துக்கொண்டுள்ளார். மேலும் அவர் வேறு சில ஆண் நண்பர்களையும் தோழிகளையும் அழைத்து மது, கஞ்சா அடித்துக்கொண்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இதுகுறித்து காதலன் கேட்டதால் அவரை விட்டு பிரிந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பர்ணட்டிவிளை பகுதியில் உள்ள பங்களா வீட்டில் இரவு அந்த பெண் தன் ஆண் நண்பர்களான ஆகாஷ், மணிகண்டனை வரவழைத்து இரவு பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளார்.

அந்த பார்ட்டிக்கு தன்னுடன் படிக்கும் 2 தோழிகளையும் வரவழைத்துள்ளார். அதில், 1 மாணவிக்கு ஆண்களும் வருவார்கள் என்று தெரியவில்லை. மது குடிக்கும் ஆசை ஏற்பட்டதால் அந்த பார்ட்டிக்கு அந்த மாணவி ஒப்புக்கொண்டு இரவு 7 மணிக்கு சென்றுள்ளார். அங்கு மது மட்டுமல்லாமல் கஞ்சாவையும் அந்த மாணவியை வற்புறுத்தி புகைக்க வைத்துள்ளனர்.

இதனை அறிந்து அங்கு சென்ற அஜின் காதலியும் அவரது தோழிகளும் ஆண் நண்பர்களுடன் மது போதையில் அரைகுறை ஆடையில் உல்லாசமாக இருப்பதை கண்டு ஆத்திரமடைந்து மரக்கட்டையை எடுத்து சென்று நண்பர்களை ஓடஓட விரட்டியதோடு காதலியை தலையில் கட்டையால் ஓங்கி அடித்து மண்டையை உடைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

காதலி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது குளச்சல் போலீசாரிடம் அஜின் மீது புகார் அளித்தார். அந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்த போது புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகள், ஆணுறைகளை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நட்பு என்றால் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் – நட்பு என்றால் இதான்யா

 

மகன் பிறக்க வெட்டவெளியில் நிர்வாணமாக குளிக்க வற்புறுத்தப்பட்ட பெண் : நடந்த விபரீதம்!!

மகாராஷ்டிராவில்..

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் பொதுவெளியில் நிர்வாணமாக குளிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒரு பெண், ஆண் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உள்ளூர் மந்திரவாதியின் ஆலோசனையின் ஒரு பகுதியாக மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக குளிக்குமாறு அவரது கணவர் மற்றும் மாமியார் கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, எஃப்.ஐ.ஆர் பதிவிட்டு செய்த புனே காவல்துறை அவரது கணவர், மாமியார் மற்றும் மௌலானா பாபா ஜமாதர் என்ற மந்திரவாதி உட்பட நான்கு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்துள்ளார்.

மகாராஷ்டிரா தடுப்பு மற்றும் மனித தியாகத்தை ஒழித்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற சட்டம், தீய மற்றும் அகோரி பழக்கவழக்கங்கள் சட்டம் மற்றும் Evil and Aghori Practices and Black Magic Act, 2013 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு முதல் வரதட்சணை கேட்டும், ஆண் குழந்தை பிறக்காததற்கும் மாமியார் தன்னை மனதளவிலும், உடலளவிலும் துன்புறுத்துவதாகவும், அதைத் தொடர்ந்து தானும் அனுபவித்து வருவதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார். பல சந்தர்ப்பங்களில் பல சூனிய சடங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ​​”சமீபத்தில் உள்ளூர் மந்திரவாதி ஒருவர் பெண்களை நீர்வீழ்ச்சியின் கீழ் வெட்டவெளியில் நிர்வாணமாக குளிக்கச் சொன்னார், மேலும் அப்பெண் சடங்குகளைப் பின்பற்றினால் ஆண் குழந்தை பிறக்கும் என்று அவர்களிடம் உறுதியளித்தார்” என்று கூறினார்.

வியாபார நோக்கத்திற்காக தனது சொத்தில் ரூ.75 இலட்சம் கடனாகப் பெறுவதற்காக தனது கணவரால் போலியாக கையொப்பமிடப்பட்டுள்ளதாகவும் அப்பெண் குற்றம் சுமத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்… மனைவி எடுத்த விபரீத முடிவு!!

தென்காசியில்..

தென்காசி மாவட்டம் வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி-முத்துமாரி தம்பதி. இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்த போது கடந்த 3 வருடங்களாக காதலித்து, பின்பு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

வைரவசாமியை கொன்ற மர்ம கும்பல்: வழக்கம் போல கடந்த 19-ம் தேதி இரவு பணி முடித்து விட்டு வைரவசாமி-முத்துமாரி தம்பதி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது, சமத்துவபுரம் பகுதியில் இவர்களை காரில் வழிமறித்த கும்பல் ஒன்று, வைரவசாமியை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

இதில், பலத்த காயமடைந்த வைரவசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரிடம் மர்ம கும்பல் ஒன்று கணவரை தாக்கிவிட்டு தன்னிடம் இருந்த நகைகளை பறித்து சென்று விட்டதாக கூறியுள்ளார் முத்துமாரி.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வைரவசாமியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணையை துவக்கினர். முதலில் மனைவி முத்துமாரியிடம் இருந்து தொடங்கியது விசாரணை. அதில் முன்னுக்கு பின் முரணாக முத்துமாரி பதிலளிக்க, கிடுக்குப்பிடி விசாரணை தொடங்கப்பட்டது.

கிடுக்குப்பிடி விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டி விட்டு, நகைகளுக்காக கொலை நடந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. வைரவசாமிக்கு முன்பாக வீரசிகாமணி என்பவரை முத்துமாரி காதலித்து வந்துள்ளார். இவர்களது பழக்கம் திருமணத்திற்கு பின்பும் தொடர, இதனை தெரிந்து கொண்ட வைரவசாமி கண்டித்துள்ளார்.

வேலைக்கு செல்லும் போதே உடன் அழைத்து சென்று வந்ததால், வீரசிகாமணியுடனான காதலுக்கு இடையூறாக இருந்துள்ளார் வைரவசாமி. இதனால் ஆத்திரமடைந்த முத்துமாரி, வீரசிகாமணியோடு சேர்ந்து வைரவசாமியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி, அதனை அரங்கேற்றியும் உள்ளனர்.

இதனையடுத்து கொலைக்கு திட்டம் தீட்டிய முத்துமாரி, வீரசிகாமணி மற்றும் கொலைக்கு உடந்தயாக செயல்பட்ட மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொலை சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு 12 மணி நேரத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்த புளியங்குடி காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நட்பு என்றால் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் – நட்பு என்றால் இதான்யா

 

இலங்கையின் பரிதாப நிலை : பசியால் வாடும் குழந்தைகளுக்காக திருடும் தந்தையர்கள்!!

பரிதாப நிலை..

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்தியஸ்தர மற்றும் நாளாந்த வருவாயை ஈட்டும் குடுபங்கள் மிகவும் வறுமையில் வாடிவருகின்றன.

பல குடும்பங்களில் ஒருவேளை உணவை பெற்றுக்கொள்வதில் சவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சிறுவர்கள், குழந்தைகள் உள்ள குடும்ப தலைவர்கள் அவர்களுக்கு தேவையான உணவுகளை பெற்றுக்கொள்வதற்கு தேவையான வருமானத்தை தேட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குழந்தைகளின் பசிகளை போக்க கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதில் அநேகமானவை குழந்தைக்கான பால்மாவினை திருடிய சம்பவங்களே.

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு, பொரளை பிரதேசத்தில் பசியால் வாடும் பிள்ளைக்காக திருடிய தந்தை பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பதிவாகி உள்ளது.

2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் 3 கிலோ கிராம் அரிசி மற்றும் சமபோஷ பக்கட் ஒன்றிற்கு பணம் செலுத்தாமல் தப்பிச் செல்லும் போது, பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிபட்டுள்ளார்.

குறித்த 27 வயதான இளைஞன் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகும். அவர் கூலி வேலை செய்து அன்றாடம் குடும்பத்திற்கு உணவளித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19ஆம் திகதியன்று அவருக்கு எதுவித வேலையும் கிடைக்காத நிலையில் பிள்ளைகள் பசியில் வாடியுள்ளனர்.

ஒன்றும் செய்ய முடியாத நிலையில் பொரளை சதொச நிலையத்திற்கு சென்ற நபர் 3 கிலோ கிராம் அரிசி மற்றும் சமபோஷ பக்கட் ஒன்றை கையில் எடுத்துள்ள நிலையில் பணம் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற முயற்சித்துள்ளார்.

எனினும் பாதுகாப்பு பிரிவினரால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பணம் செலுத்தாமல் செல்வது திருட்டு செயல் என கூறிய பாதுகாப்பு பிரிவினர் பொருட்களுடன் அந்த நபரை பொரளை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த அதிகாரி ஸ்ரீயாரத்ன என்பவரிடம் சதொச பாதுகாப்பு அதிகாரி முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரி, குறித்த நபர் அப்பாவி என அடையாளம் கண்டுள்ளார்.

நிலைமையை அறிந்து உடனடியாக 1000 ரூபாய் பணம் கொடுத்த அதிகாரி இதனை சதொசவில் செலுத்திவிட்டு பொருட்களை கொண்டு செல்லுமாறு அதிகாரி கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்துள்ளது.

இதேவேளை, பணம் பலமுள்ளவர்கள் அயலுள்ள எளியவர்களுக்கும் உதவும் மனபான்மையை வளர்த்துக் கொண்டால் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் குறையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

டிக் டாக் முதல் பிக் பாஸ் வரை…. நடிகை மர்ம மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி!!

சோனாலி..

டிக் டாக் பிரபலமான சோனாலி போகத் ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக தனது பணியாளர்களுடன் கோவாவிற்குச் சென்றிருந்தார்.

அஞ்சுனாவில் உள்ள கிராண்ட் லியோனி ரிசார்ட்டில் தங்கியிருந்த அவருக்கு திங்கட்கிழமை இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. சோனாலியின் திடீர் மரணம் பாஜகவினர் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

43 வயதான சோனாலி ஹரியாணாவின் பதேஹாபாத்தில் உள்ள புதான் கிராமத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 2006ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் டிக் டாக் செயலி மூலம் பிரபலமானார்.

கடந்த 2020-ல் அவர் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் மூலம் இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்ஸ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அரியானா சட்டமன்ற தேர்தலில் அதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இருந்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. தேர்தலில் வென்று எம்எல்ஏவான குல்தீப் பிஷ்ணோய் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதோடு எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் ஆதம்பூர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் சோனாலியை நிறுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில் கோவா சென்றிருந்த சோனாலி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

உயிரிழப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் சோனாலி போகத் தனது படத்தையும் பகிர்ந்துள்ளார். சோனாலியின் அகால மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர் அணிந்திருந்த காலணிக்குள் பாம்பு!!

காலணிக்குள் பாம்பு,,

கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவர் ஒருவர் அணிந்திருந்த காலணிக்குள் சிறிய பாம்பு ஒன்று இன்று (23.08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர் பாடசாலைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது​​ அவருடைய ஒரு காலணிக்குள் ஏதோ நெளிவதை உணர்ந்துள்ளார். பின்னர் பாடசாலைக்கு வந்து தனது காலணியைக் கழற்றியுள்ளார்.

அதன்போது அதற்குள் சிறிய பாம்பு ஒன்று காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவரை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் பாடசாலை நிர்வாகம் அனுமதித்துள்ளது.

இது தொடர்பில், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது குறித்த பாம்பினால் மாணவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதியானதாக பணிப்பாளர் டக்டர் ஜே.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர், காலணிகளை அணிவதற்கு முன்னர் அதனை உட்பக்கமாக பரிசோதிக்க பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : சுகாதார பிரிவினர் எச்சரிக்கை!!

கொரோனா தொற்று..

வவுனியாவில் கோவிட் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதனால் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசியினை பெற்று கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதோடு கோவிட் மரணங்களும் பதிவாகி வருகின்றது. தற்போது பலர் கோவிட் தொற்றுக்குள்ளாகியும் உள்ளனர்.

இதன் காரணமாக கோவிட் தொற்று தீவிர நிலையை அடையாது தடுக்கும் நடவடிக்கையாக பைசர் கோவிட் தடுப்பூசிகள் மீள நாடளாவிய ரீதியில் ஏற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 3வது கோவிட் தடுப்பூசியினை 43 வீதமானவர்களும், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 வீதமானவர்களும், வவுனியா வடக்கில் 35 வீதமானவர்களுமே தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.

அத்தோடு 4 வது தடுப்பூசி(பைசர்) வெளிநாடு செல்பவர்கள் மாத்திரமே குறைந்தளவில் செலுத்தியுள்ளனர். எனவே இதுவரை தடுப்பூசிகளை முறையாக பெறாதவர்கள் கோவிட் தடுப்பூசிகளை பெற்று கொள்வதோடு, சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

வழமைக்கு திரும்பும் அரச சேவை : 5 நாட்களும் அரச ஊழியர்கள் கடமைக்குச் செல்ல வேண்டும்!!

அரச ஊழியர்கள்..

அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை வரை மாத்திரம் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று நிருபம் கடந்த ஜுன் மாதம் 17ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டது.

அதற்கமைய, நாளை மறுநாள் முதல் அனைத்து ஊழியர்களும் வரவழைக்கப்பட்டு அரச நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு திரும்பும் எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இது தொடர்பில் அண்மையில் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் இன்று முதல் குறைப்பு : முழு விபரம் உள்ளே!!

விலை குறைப்பு..

12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

குறைக்கப்பட்டுள்ள 12 பொருட்களினதும் விலைகள் தொடர்பான முழு விபரம் வெளியாகியுள்ள நிலையில், அதில் கடந்த மாதம் இதே திகதியில் குறித்த பொருட்களின் விலை மற்றும் இன்று விலை குறைப்பு செய்யப்பட்ட பின்னர் அதே பொருட்களின் விலைகள் என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதன்படி சீனி, அரிசி, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளைப்பூடு உள்ளிட்ட பொருட்களின் விலைகளே இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு 180 ரூபா என்ற புதிய விலைக்கு விற்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் பொன்னி சம்பா அரிசியின் விலை 31 ரூபாவால் குறைக்கப்பட்டு 194 ரூபா என்ற புதிய விலைக்கு விற்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் (இறக்குமதி) விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு, 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 10 லட்சம் ரூபாவிற்கு ஏலமிடப்பட்டுள்ள 3 மாம்பழங்கள்!!

மாம்பழங்கள்..

வவுனியாவில் 10 லட்சம் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று நேற்று முன்தினம் (21.08.2022) இடம்பெற்றுள்ளது.

வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலே இந்த ஏல விற்பனை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய ஆலயத்தின் அலங்கார திருவிழாவில், ஆறாம்நாள் திருவிழாவின் போது இறைவனுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

இதன்போது கடும் போட்டிகளுக்கு மத்தியில் சபரிராஜன் என்ற மாணவன் அவற்றை ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிராமப்புற ஆலயம் ஒன்றில் இவ்வாறு பெரிய தொகைக்கு மாம்பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் குறித்த ஏலத்தொகை ஆலயத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

உறைந்து போன சினேகா… கதறிய தாய்… தந்தைக்கு நடந்த அவலம் : : அரங்கத்தை அதிரவிட்ட இளைஞன்!!

டான் ஜோடி டான்ஸ்..

டான் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தன் தந்தைக்கு நடந்ததை நடனமாக ஆடி அனைவரையும் கண்ணீர் விட்டு இளைஞர் ஒருவர் அழ வைத்துள்ளார். நடனமாடி முடிந்த பிறகு மேடைக்கு வந்து இளைஞரின் தந்தை பேசினார்.

திருமணமாகி 4 வருடத்தில் குழந்தைகள் சிறுவர்களாக இருக்கும் போது எனக்கு நடந்த உண்மை சம்பவம் தான் மகனின் இந்த மேடை நடனம். கடலில் மீன் பிடிக்கும் போது எங்களை போலீஸார் கைது செய்து விட்டனர்.

குழந்தைகள் சிறுவர்களாக இருக்கின்றார்களே எப்படி மனைவிக்கு தகவல் சொல்வது என்று தவித்தேன். பிறகு 2 மாதங்களுக்கு பின்னர் எங்களை விடுவித்தார்கள். மீனவர் ஒவ்வொருவரும் தொழிலுக்கு சென்று திரும்பும் வரை எதையும் கூற முடியாது என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

நடுவர்கள் அனைவரும் நடனமாடிய ஜோடிக்கு கோல்டன் பர்பாமன்ஸ் என்று பெருமைபடுத்தினார்கள். அதை கேட்டு தானே விருது வாங்கிய மகிழ்ச்சியை இளைஞரின் தந்தை வெளிப்படுத்தியது அனைவரையும் சிலிர்க்க வைத்திருந்தது.