காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர் மேடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது 6 வயது மகள் கடந்த வெள்ளிகிழமை காலை விளையாடி கொண்டிருந்த போது வீட்டில் தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தண்ணீர் என நினைத்து குடித்த சற்று நேரத்திலேயே வாந்தி எடுத்து மயங்கியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் தந்தை மயங்கிய நிலையிலிருந்த சிறுமியைை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சைகள் அளித்து வந்தனர். இந்நிலையில் நான்கு நாட்கள் சிகிச்சையில் இருந்த சிறுமி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் நேற்று (24.08.2022) இரவு 8.00 மணிளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 200 கிராம் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் எவ்வாறு கேரள கஞ்சா கிடைக்கப்பெற்றது போன்ற மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் நேற்றையதினம் (24.08.2022) கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே இளைஞரின் சடலம் மீட்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
26 வயதுடைய சந்திரபாலசிங்கம் பிரதாபன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர்.
அடிக்கடி இணையதளத்தில் பல விதமான நிஜக் கதைகள் உலா வருவதை நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம். அப்படி உலா வரும் கதைகளில், சிலவற்றை நாம் கேள்விப்படும் போது, நமக்கே ஒரு தெம்பு உருவாகி, நம்மை Motivate செய்யும் வகையிலும் அவை அமைந்திருக்கும்.
அந்த வகையில், புவி என்ற இளைஞர் தொடர்பான கதை ஒன்று, தற்போது இணையத்தில் வெளியாகி, பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது. பொதுவாக, சற்று குண்டாக இருக்கும் நபர் தொடர்பாக அவரை சுற்றி உள்ளவர்கள் சில நேரம் கேலி செய்யும் செய்திகள் அதிகம் நடைபெறுவது உண்டு.
தற்போதைய காலகட்டத்தில், குண்டாக இருப்பது சகஜமான ஒன்றாக இருந்தாலும், அப்படி இருக்கும் ஒரு சிலராவது நிச்சயம் ஏதாவது பிரச்சனைகளை சந்திப்பார்கள். அப்படி குண்டாக இருந்த ஒரு இளைஞர் தான் புவி (Puvi).
கடந்த ஆண்டில், சுமார் 139 கிலோ வரை இந்த புவி, தனக்கு செட் ஆகும் ஒரே ஒரு ஜாக்கெட்டை தான் அணிந்து வந்துள்ளார். ஒரே ஒரு உடையை அடிக்கடி அணிந்து வந்ததன் காரணமாக, நிறைய பேர் அவரை கேலிக்கு உள்ளாக்கினர்.
அது மட்டுமில்லாமல், அவரது எடையை காரணம் காட்டி, காதலியும் அவரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. தனது காதலியும், தன்னுடைய உடல் பருமன் காரணமாக தன்னை விட்டுச் சென்றதால், மனமுடைந்து போன புவி, அதிரடி முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார்.
தனது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என முடிவு செய்த புவி, தன்னை பலரும் கேலி செய்யவும், தனது காதலி விட்டு செல்லவும் காரணமாக இருந்த உடல் எடையை குறைக்கவும் முடிவு செய்துள்ளார்.
இதற்காக கடந்த ஓராண்டாக கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்ட புவி, பலரும் நம்ப முடியாத வகையிலான மாற்றத்தையும் உண்டு பண்ணி, பலரையும் வியக்க வைத்துள்ளார். mஅதன் படி, கடந்த ஒரு ஆண்டில், சுமார் 70 கிலோ எடையை குறைத்த புவி, கடந்த ஆண்டு இருந்ததை விட சரி பாதி எடையில் தற்போது வலம் வருகிறார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடர்ந்து பல வொர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு வரும் புவி, ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி விட்டதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
உடல் எடையை காரணம் காட்டி, காதலி விட்டு சென்றதால் அப்படியே ஒதுங்கிக் கொள்ளாமல், மன உறுதியுடன் செயல்பட்டு புவி கொடுத்த Transformation, நெட்டிசன்கள் பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.
கேரளாவில் இறுதிச் சடங்கில் சிரித்துக்கொண்டிருக்கும் உறவினர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு வழிவகுத்தது, இதில் கேரள அமைச்சர் வி சிவன்குட்டியும் இணைந்தார்.
கேரளாவில் நடந்த இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காரணம்? அதில் குடும்ப உறுப்பினர்கள் சடலத்தைச் சுற்றி மகிழ்ச்சியுடன் காட்சியளிக்கிறார்கள்.
தகவல்களின்படி, கேரளாவின் பத்தனாதிட்டா மாவட்டத்தில் உள்ள மலப்பள்ளி கிராமத்தில், கடந்த வாரம் நடைபெற்ற 95 வயதான மரியம்மாவின் இறுதிச் சடங்க்கின்போது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அவர் ஆகஸ்ட் 17 அன்று இறந்தார். அவரது இறுதிச் சடங்கில், எடுக்கப்பட்ட ‘குடும்பப் புகைப்படத்தில்’ ஐஸ்பெட்டியில் சடலத்தை நடுவில் வைத்தபடி சுற்றிலும் குறைந்தது 40 பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் கூடிச் சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு வழிவகுத்தது, இதில் கேரள அமைச்சர் வி சிவன்குட்டியும் இணைந்தார். வயது மற்றும் உடல்நிலை காரணமாக மரியம்மா ஒரு வருடமாக படுத்த படுக்கையாக இருந்ததாகவும், கடந்த சில வாரங்களாக மோசமான உடல்நிலை மோசமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அவருக்கு ஒன்பது குழந்தைகள் மற்றும் 19 பேரக்குழந்தைகள் உள்ளனர், அவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் பரவியுள்ளன, ஆனால் அவர் இறந்தபோது அவர்களில் பெரும்பாலோர் இறுதிச்சடங்கிற்கு வந்திருந்தனர்.
இது வைரலாகவேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை அவரது உறவினர் ஒருவர் கூறினார். உறவினர் பாபு உம்மன் கூறுகையில், மரியம்மா 95 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகவும், குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் அனைவரையும் நேசிப்பதாகவும் தெரிவித்தார்.
குடும்பம் அவருடன் கழித்த மகிழ்ச்சியான தருணங்களை நினைவுகூரும் வகையில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்த புகைப்படம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு எடுக்கப்பட்டதாக் கூறப்படுகிறது.
அந்த தருணத்தை புகைப்படமாக எடுத்து சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குடும்பத்தின் விருப்பமாக இருந்தது. இந்த படத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் இறந்த பிறகு கண்ணீரை மட்டுமே பார்த்தவர்கள்.
புலம்புவதற்குப் பதிலாக, இறந்தவர்களை மகிழ்ச்சியுடன் விடைபெற வேண்டும். நாங்களும் அதையே செய்துள்ளோம் என்றும் யார் மீதும் எந்த புகாரும் இல்லை என்றும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டியம் குடும்பத்துக்கு ஆதரவாக பேசினார். மரணம் என்பது வேதனையானது. ஆனால் அதுவும் விடைபெறுகிறது. மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்களுக்கு சிரித்துப் பிரியாவிடை கொடுப்பதை விட வேறு என்ன வேண்டும்? இந்த புகைப்படத்திற்கு எதிர்மறையான கருத்துக்கள் தேவையில்லை அவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் சில பயனர்கள் குடும்பம் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்ததற்காக விமர்சித்தனர், மற்றவர்கள் புகைப்படத்தில் எந்த தவறும் இல்லை என்று கூறி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கேரளாவில் பரோட்டா தொண்டையில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் இடுக்கில் மாநிலத்தில் உள்ள கட்டப்பனா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தொண்டையில் ‘பரோட்டா’ சிக்கிய வாலிபர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் பன்னியர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
லொறி கிளீனராக வேலை பார்த்துவரும் 34 வயதான பாலாஜி, வேலை முடிந்து உரம் ஏற்றிச் சென்ற லாரியில் தங்குவதற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இவர் இடுக்கியில் இருந்து வாங்கி வந்த பரோட்டா, லாரியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தொண்டையில் சிக்கியது.
மூச்சு விட முடியாமல் தவித்த பாலாஜியின் நண்பரான டிரைவர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. இறந்தவருக்கு சாந்தி என்ற மனைவியும், அர்ஜுன், அஸ்வின் என்ற குழந்தைகளும் உள்ளனர்.
மாடலும் அதிக செல்வாக்கும் உடைய ஆர்தர் உர்சோ என்ற வாலிபர், கடந்த 2021 ஆம் ஆண்டில், ஒரே நேரத்தில் 9 பெண்களைத் திருமணம் செய்திருந்த விஷயம், ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் பெற்றிருந்தது.
ஆர்தர் எடுத்த முடிவு இணையத்தில் அதிகம் வைரலாகி, இது பற்றி பலரும் பல விதமான கருத்துகளையும் தெரிவித்திருந்தனர். அவ்வப்போது, ஆர்தர் மற்றும் அவரது மனைவிகள் குறித்து ஏதாவது செய்தி, இணையத்தில் அதிகம் வலம் வந்த படி தான் இருக்கும்.
அப்படி இருக்கையில், ஒன்பது மனைவிகளில் ஒருவர், ஆர்தரை விவாகரத்து செய்து விட்டு சென்று விட்டார். தனது கணவரை வேறு பெண்களுடன் பகிர்ந்து கொள்வதில் தனக்கு விருப்பமில்லை என்பது தான் விவாகரத்து செய்ய முடிவு செய்ததற்கான காரணம் என்றும் அந்த மனைவி தெரிவித்திருந்தார்.
இது ஒருபுறம் இருக்க, ஆர்தர் உர்சோவின் திருமணம் அதிகாரபூர்வமாக செல்லுபடியாகாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கு காரணம், தனது மனைவிகளுடன் உர்சோ வாழ்ந்து வரும் பிரேசில் நாட்டில், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வது என்பது சட்டத்திற்கு எதிரானது என தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆனாலும், தனது 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் மிகவும் உற்சாகமாக வாழ்ந்து வருகிறார் உர்சோ. அதே போல, உர்சோவின் வாழ்க்கை முறை காரணமாக, பலரும் அவர் மீது அதிருப்தியிலும், கோபத்திலும் உள்ளனர்.
அவர் வீடு சுவர்களில் கூட தேவை இல்லாத வார்த்தைகள் மற்றும் வாசகங்களை எழுதி வைத்து விட்டு செல்கின்றனர். இது பற்றி பேசும் ஆர்தர், சுவரில் எழுதப்பட்ட விஷயம் ஏமாற்றமாக இருந்ததாகவும், எங்களுக்கு அமைதி தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது 8 மனைவிகளுடன் வசிப்பதற்காக, சுமார் 7500 சதுர அடியில், ஒரு ஆடம்பர அரண்மனை ஒன்றையும் ஆர்தர் உர்சோ கட்டி வரும் தகவல், பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு ‘Mansion of Free Love’ என பெயரும் இடப்பட்டுள்ள நிலையில், இதற்கான பணிகளும் தற்போது மும்முரமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஒரு பக்கம் புதிய வீட்டின் வேலை, மறுபக்கம் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு என இருந்தாலும், தனது மனைவிகளுடன் அட்டவணை போட்டு நேரத்தை செலவிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இத்தனை மனைவிகளுடன் வாழ்வது கடினமான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் ஆர்தர் உர்சோ, அடிக்கடி தனது 8 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.அப்படி தனது வீடு தொடர்பாக சமீபத்தில் அவர் பகிர்ந்திருந்த பதிவு தான் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
நண்பரின் ஆசனவாயில் டம்ப்ளரை திணித்த மது போதையில் இருந்த சக நண்பர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா சந்திரா ராவத் (வயது 45). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து மது விருந்து கொண்டாடியுள்ளார்.
அப்போது போதையில் கலாட்டா செய்வதாக கூறி கிருஷ்ணாவை இழுத்து பிடித்த நண்பர்கள், அவரது ஆசன வாயில் ஒரு டம்ளரை திணித்துள்ளனர். அப்போது போதையில் இருந்ததால் அவருக்கு எதுவும் சரியாக தெரியவில்லை.
பின்னர் மறுநாள் காலை எழுந்ததும் அவருக்கு அந்த பகுதியில் வலி ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் இதை வெளியே சொன்னால் அவமானமாகிவிடும் என்று எண்ணிய அவர், இதை அப்படியே விட்டுவிட்டார். மேலும் இதைப்பற்றி வீட்டாரிடமும் தெரிவிக்கவில்லை, மருத்துவரையும் அணுகவில்லை.
இப்படி நாளாக நாளாக அவருக்கு அந்த பகுதி மட்டுமின்றி, வயிற்றிலும் வலி அதிகமாக காணப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தாரிடம் தனக்கு வலி இருப்பதாக அவர் தெரிவிக்க அவர்கள் இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே ஸ்கேன் எடுத்து பரிசோதித்த மருத்துவர்கள் சுமார் 15 செ.மீ., நீளமுள்ள ஒரு டம்பளர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து அவரிடம் கேட்டபோது நடந்தவற்றை கூறினார். பின்னர் அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது 8 செ.மீ., விட்டமும், 15 செ.மீ., நீளமும் கொண்ட டம்ளர் அகற்றப்பட்டது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “விளையாட்டாக எண்ணி அவரது ஆசன வாயில் போதையில் இருந்த அவரது நண்பர்கள் டம்ளரை வலுக்கட்டாயமாக திணித்துள்ளனர்.
இதனால் அவருக்கு சரிவர வயிற்றுப்போக்கு நேரவில்லை. இதனால் அவருக்கு கடுமையான வயிறு வலி ஏற்பட்டு பின்னர் இங்கு வந்தார். நாங்கள் அவரது ஆசனவாயில் இருந்த டம்ளர் அகற்றினோம்.
தற்போது அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. விரைவில் அவர் வீடு திரும்புவார்” என்றனர். போதையில் நண்பர்களே சக நண்பனின் அந்தரங்க பகுதிக்குள் 8 செ.மீ., அளவிலான டம்ளரை வலுக்கட்டயமாக திணித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் மொத்த குடும்பமும் ஹொட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்ட சோகம். இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஹொட்டல் அறையில் சடலமாக கிடந்த சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலங்கானாவின் நிசாமாபாத்தில் உள்ள ஹொட்டலுக்கு சில தினங்களுக்கு முன்னர் சூர்யபிரகாஷ் (37), அவர் மனைவி அக்ஷயா (35) மற்றும் தம்பதியின் பிள்ளைகளான பிரத்யுஷா (13), ஆத்வித் (7) வந்து தங்கினார்கள்.
அறையில் இருந்து அவர்கள் இரண்டு நாட்களாக வெளியே வராமல் இருந்த நிலையில் சந்தேகமடைந்த ஹொட்டல் ஊழியர்கள் பொலிசார் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது சூர்யபிரகாஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், மற்றவர் மூவரும் படுக்கையிலும் இறந்து கிடந்தனர்.
அங்கிருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினர். அதில், நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். என்னுடன் சேர்ந்து தொழிலில் ஈடுபட்ட கிரண் குமார், வெங்கட், கனயம் சக்கரவர்த்தி, ஜனம் ஆகிய நால்வரும் லாபம் பிரிப்பதில் என்னுடன் சண்டை போட்டனர்.
என் வீட்டிற்கு வந்து எங்களை துன்புறுத்தி மோசமாக நடந்து கொண்டனர். அவர்கள் தான் எங்கள் மரணத்திற்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து பொலிசார் கூறுகையில்,
கேக்கில் குடும்பத்தாருக்கு விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு, சூர்யபிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த உத்தியோகத்தகர்கள் பலர் பளை தொடருந்து நிலையத்தில் இடை நடுவில் இறங்கி தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை (24.08.2022) நடைபெற்றுள்ளது.
வழமைப்போல் யாழ்.ராணி தொடருந்தில் கிளிநொச்சி நோக்கி பயணித்த உத்தியோகத்தர்களில் சிலர் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளாது பயணித்துள்ளனர். மிக குறைந்த கட்டணமாக உள்ள போதும் அதனை பெற்றுக்கொள்ளாது பயணித்துள்ளனர்.
இன்றைய தினம் பயணச்சீட்டு சோதனை செய்யும் தொடருந்து திணைக்கள அதிகாரிகள் பயணிகளிடம் சோதனைகளை மேற்கொண்ட போது ஒரு சிலர் பயணச்சீட்டு இன்றி பயணித்தமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் பயணக்கட்டணமும் தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.
அத்துடன் மூன்றாம் வகுப்புக்கு பயணச்சீட்டை பெற்றுவிட்டு இரண்டாம் வகுப்பில் பயணித்தவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கிளிநொச்சி நோக்கி பயணித்த மேலும் சிலர் தொடருந்து திணைக்கள அதிகாரிகளின் சோதனைக்கு முன்பாகவே இடைநடுவில் பளை தொடருந்து நிலையத்தில் இறங்கி சென்றமையினையும் அவதானிக்க முடிந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனடாவுக்கு வந்தால் வாழ்வே பிரகாசமாகிவிடும் என நினைத்து புலம்பெயர்ந்தவர்களில் ஒருவர் மிஸ்பா நூர். ஆனால், அவர் சந்தித்த ஏமாற்றங்களை எண்ணும்போது, இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் கனடாவுக்கு புலம்பெயர்ந்திருக்கவேமாட்டேன் என்கிறார்.
பணம் சேமிப்பதற்காக குறைவாக சாப்பிட்டு 10 கிலோ எடை குறைந்ததை மறக்கமுடியாது என்கிறார் கனடாவுக்கு புலம்பெயர்ந்த பெண் ஒருவர். 2015ஆம் ஆண்டு கனவுகளுடன் பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தது மிஸ்பா நூரின் குடும்பம்.
ஆனால், பாகிஸ்தானில் பிரபல வங்கி ஒன்றில் கிளை மேலாளராக பணியாற்றிய மிஸ்பாவின் கணவருக்கு கனடாவில் கிடைத்த வேலையோ, கட்டிடங்களில் கார்ப்பெட் போடுவது.
அதிர்ச்சியடைந்தாலும் இரண்டு பிள்ளைகளையுடைய அந்தக் குடும்பம் வாழ்க்கை நடத்தவேண்டுமே. வேறு வழியில்லாமல் அந்த வேலையை கஷ்டப்பட்டு செய்துகொண்டிருந்தார் மிஸ்பாவின் கணவர்.
சொந்த நாட்டில் அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்த்ததுபோய், முழங்கால் போட்டு கார்ப்பெட் விரித்து கால் முட்டியில் பேண்ட் கிழிந்து, கைகள் காய்த்துப்போய், படிகளில் ஏறி தளர்ந்து வீடு திரும்பிய கணவனைக் கண்ட மிஸ்பாவுக்கு, இதற்கா கனடாவுக்கு வந்தோம் என்று ஆகிவிட்டது.
ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பு, போதுமான மேசை நாற்காலி முதலான மரச்சாமான்கள் கூட இல்லாமல், சொந்த நாட்டை, உறவுகளைப் பிரிந்து தெரியாத ஒரு நாட்டுக்கு வந்து, நாளை என்ன செய்வது என்ற அச்சத்துடன் வாழ்வைத் தொடரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது மிஸ்பா குடும்பத்துக்கு.
சொந்த நாட்டில் பெரிதாக யாருடனும் பேசக்கூட செய்யாத மிஸ்பா, இப்போது தனக்கும் எப்படியாவது ஒரு வேலை கிடைத்தால் கணவரின் பாரம் கொஞ்சம் குறையும் என்று எண்ணி, அக்கம்பக்கத்தவர்களிடம் எல்லாம் தனக்கு வேலை ஏதாவது கிடைக்குமா என விசாரிக்கத் துவங்கியுள்ளார். ஆனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.
மன அழுத்தம் ஒரு பக்கம், பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக குறைவாக சாப்பிட்டது மறுபக்கம் என 10 கிலோ எடை குறைந்துவிட்டிருக்கிறார் மிஸ்பா.
இப்படியே இரண்டரையாண்டுகள் ஓடிவிட்ட நிலையில், ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மிஸ்பாவின் மகன், தங்கள் பள்ளியில் மதிய உணவு மேற்பார்வையாளர் வேலையை விட்டுச் செல்வதாகக் கூற,
உடனே பள்ளிக்குச் சென்று தனது பட்டப்படிப்பு, ஆசிரியை அனுபவம் ஆகியவை குறித்து விளக்க, நல்மனம் கொண்ட அந்தப் பள்ளியில் பிரின்சிபல், அந்த வேலை கிடைக்க உதவியிருக்கிறார். என்றாலும், அது பகுதி நேர வேலைதான்.
இதற்கிடையில் மிஸ்பாவின் கணவருக்கும் ஃபோர்க் லிப்ட் ஆபரேட்டராக ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது.
பல கஷ்டாங்களுக்குப் பிறகு, மிஸ்பாவுக்கும், அவரது கணவருக்கும் பதவி உயர்வு கிடைக்க, இப்போது வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார்களாம் அவர்கள்.
ஆனால், இவ்வளவு நாள் பட்ட கஷ்டம், அனுபவித்த மன அழுத்தம் எல்லாம் சேர்ந்து பல பாதிப்புகளை மிஸ்பாவுக்கு ஏற்படுத்தியுள்ளன. தனது ஞாபக சக்தியில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக உணர்கிறார் மிஸ்பா. அவரது கணவருக்கோ, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு ஆகிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
ஆக, இப்போது பொருளாதார ரீதியாக ஒரு நிலைத்தன்மை ஏற்பட்டுவிட்டது, ஒரு வீடும் வாங்கியாயிற்று. ஆனால், அதற்காக தாங்கள் இழந்தது அதிகம் என்று எண்ணுகிறார் மிஸ்பா.
ஒருவேளை காலத்தை பின்னோக்கி நகர்த்தக்கூடுமானால், புலம்பெயர்வதைக் குறித்து ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்திருப்பேன் என்று கூறும் மிஸ்பா, அது நாங்கள் நினைத்தது போல் எளிதல்ல, மிகவும் கடினம் என்கிறார்.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்று வருகின்ற நிலையில் ஆலய முன்றலில் ஒவ்வொரு நாளும் உருவாக்கப்பட்டு வரும் மணல் சிற்பங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுகுமார் என்பவரால் உருவாக்கப்பட்டு வருகின்ற இந்த மணல் சிற்பங்கள் பக்தர்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது.
உள்நாட்டு பக்தர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த மணல் சிற்பங்களை பார்வையிட்டு வருகின்றனர். அரச உத்தியோகத்தரான இவர்,
தனது சந்தோசத்திற்காகவும், பார்க்கின்ற ஏனையவர்களின் சந்தோசத்திற்காகவும் இந்த மணல் சிற்பங்களை வடிவமைத்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற நல்லூர் மஹோற்சவங்களின் போதும் இவர் மணல் சிற்பங்களை வடிவமைத்தமை குறிப்பிடத்தக்கது.
அதிவேக நெடுஞ்சாலையில் நேற்றிரவு (23) இடம்பெற்ற வாகன விபத்தில் 47 வயதான கொரிய மொழி பயிற்சி ஆசிரியையான பிரியந்தி பண்டார உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயான இவர் 16 ஆவது கிலோமீற்றர் மைல் கல் அருகிலான சபுகஸ்கந்த பகுதியில் ஓடுகளைச் ஏற்றிச் சென்ற லொறியின் பின்புறம் அவரது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கார் சாரதியின் வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆட்டை வெட்டுவதாக நினைத்து தனது ஆணுறுப்பையே நபர் ஒருவர் வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டில், மத்திய மாகாணமாக உள்ள மத்திய கூடிய அஸ்ஸின் ஃபோசு என்ற பகுதியைச் சேர்ந்தவர் கொஃபி அட்டா(47) என்ற விவசாயி தான் அவர்.
இவர் தான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கனவில் ஆட்டை வெட்டுவதாக நினைத்து, தனது பிறப்புறுப்பை வெட்டியுள்ளார். இச்சம்பவம் ஆனது ஆகஸ்ட் 12ம் தேதி அன்று நடந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி அட்வோ கொனாடு பேசுகையில், “நான் வெளியே சென்ற நேரத்தில் தான் இது நிகழ்ந்துள்ளது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் என்னிடம் கூறினார்கள்.
உடனடியாக பதறிய வந்து பார்த்ததும் என கணவரின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வடித்து கொண்டிருக்கிறது. உடனே டையப்பரை அணிவித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்” என தெரிவித்துள்ளார்.
பிபிசியின் அறிக்கைப்படி, பாதிக்கப்பட்ட நபர் மேல் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும், இதுபற்றி பேசிய கொஃபி, “சேரில் உட்கார்ந்து உறங்கி கொண்டிருந்தேன், அப்போது சமைப்பதற்காக ஆட்டை வெட்டுவது போல் கனவு வந்தது.
உறங்கும் போது எப்படி என் கையில் வந்தது என தெரியவில்லை. அது தான் குழப்பமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் தெரிவிக்கையில், அவரின் பிறப்புறுப்பு மீண்டும் இணைக்கப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்து 6 வாரங்களுக்கு பிறகு அவர் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என தெரிவித்து உள்ளனர்.
மது போதையில் இருந்த முகாம் பாதுகாப்பு போலீஸார் கோடீஸ்வரனிடமிருந்து நாவல் பழங்களைப் பறித்து, அவமரியாதையாகவும், அவர் மனைவியை ஆபாசமாகவும் பேசியதாக கோடீஸ்வரன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
கடந்த மே மாதம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இலங்கை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் தன் கர்ப்பிணி மனைவியுடன் கள்ளப்படகு மூலம் ராமேஸ்வரம் வந்திறங்கினார்.
பின்னர் அவர்கள் மீட்கப்பட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று தன் ஏழு மாத கர்ப்பிணி மனைவி கேட்டதற்காக அங்குள்ள, நாவல் பல மரத்திலிருந்து கீழே உதிர்ந்து கிடந்த நாவல் பழங்களை எடுத்துக்கொண்டு வந்தபோது, அங்கு மது போதையில் இருந்த முகாம் பாதுகாப்பு போலீஸார் கோடீஸ்வரனிடமிருந்து நாவல் பழங்களைப் பறித்து, அவமரியாதையாகவும், அவர் மனைவியை ஆபாசமாகவும் பேசியதாக கோடீஸ்வரன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
மேலும், போலீஸாரின் இத்தகைய செயலை எதிர்த்து கேள்வி கேட்ட தன்னை அவர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறுகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை அகதிகள் மூலம் தகவல் வெளியே கசிவே, பிரச்னை பெரிதாவதை அறிந்து முகாம் அதிகாரிகள் மற்றும் போலீஸார் கோடீஸ்வரனிடமும், அவர் மனைவியிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து மண்டபம் அகதிகள் முகாமுக்குச் சென்ற நம்மிடம் பேசவந்த கோடீஸ்வரனை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீஸாரிடம் நாம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அவரை நம்மிடம் பேச அனுமதித்தனர்.
நம்மிடம் பேசிய கோடீஸ்வரன், “இலங்கையில் வாழ வழி இல்லை என்பதால் உயிர் பிழைப்பதற்காக தமிழ்நாட்டை நாடிவந்தோம். தமிழ்நாடு அரசு எங்களை முகாமில் நல்லபடியாக தங்கவைத்திருக்கிறது. ஆனால் இங்கிருக்கும் போலீஸார், அதிகாரிகள் எங்களை நாயைவிடவும் கேவலமாக நடத்துகிறார்கள். மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசுகிறார்கள்.
என்னுடைய கர்ப்பிணி மனைவி நாவல் பழம் கேட்டதற்காக அங்குள்ள மரத்தில் உதிர்ந்து கிழே கிடந்த நாவல் பழங்களை எடுத்துச் சென்றேன். அப்போது என்னையும், என் மனைவியையும் மது போதையில் முகாம் போலீஸார் அசிங்கமாகப் பேசி, அடித்து துன்புறுத்தினர்.
இங்கு இலங்கை அகதிகளுக்கு பாதுகாப்பு இல்லை. மிக கேவலமாக நடத்துகின்றனர். இதனை வெளியே சொன்னால் தங்களை துன்புறுத்துவார்களோ என பயத்தில் யாரும் வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். என் மூலமாவது இவர்களுக்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கட்டும்.
இங்கே இவர்கள் இப்படி கொடுமைப்படுத்துவார்கள் எனத் தெரிந்திருந்தால் இலங்கையிலேயே பட்டினியாக கிடந்து உயிர் விட்டிருப்போம். இனி தமிழ்நாட்டை நம்பி இலங்கைமக்கள் வர வேண்டாம் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்” என கோடீஸ்வரனும் அவர் மனைவியும் கண்ணீர் மல்க நம்மிடம் தெரிவித்தனர்.
அப்போது அங்கே இருந்த போலீஸார், “சார் நடந்த சம்பவத்துக்கு அகதியிடம் போலீஸார் மன்னிப்புக் கேட்டுவிட்டனர். இதனை பெரிது படுத்தவேண்டாம்” என நம்மிடம் கூறினர். `போலீஸார் அடித்தது தவறுதானே?’ என நாம் கேட்டதற்கு, `நாங்கள் மன்னிப்புக் கேட்டுவிட்டோம் எனச் சொல்லி விட்டோம், பின்னர் உங்கள் இஷ்டம்’ என மிரட்டும் தொணியில் கூறிச்சென்றனர்.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் விளக்கம் கேட்டபோது, “போலீஸார் மது போதையில் அகதிகள்மீது தாக்குதல் நடத்தியதாக எனக்கு புகார் வந்திருக்கிறது. அது தொடர்பாக ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி தலைமையில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன். காவலர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக்கூறினார்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தற்போது வாரிசு படம் உருவாகி வருகிறது. நடிகர் விஜய் மீதும், அவருடைய தந்தை எஸ்.ஏ.சி மீதும் இருந்த பெரும் சர்ச்சைகளில் ஒன்று, இயக்குனரிடம் கதையை கேட்டுவிட்டு தனக்கு பிடித்தது போல் கதையை மாற்ற சொல்வார்கள் என்பது தான்.
இதுகுறித்து இயக்குனர் மிஷ்கின் கூட ஒரு முறை பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் ‘ நான் ஒரு கதை கூறினால், நீங்களும் உங்க அப்பாவும் பல திருத்தங்களை சொல்லுவீங்க அதான் உங்க கூட படம் பண்ணல ‘ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள விஜய், ” கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை மாற்ற நான் சொல்ல மாட்டேன். அதை சொல்லவும் எனக்கு தெரியாது. அந்த அளவிற்கு எனக்கு Knowledge கிடையாது.
ஒரு சில படங்கள் பண்ணும்போது மட்டும் தான், என்னுடைய ரசிகர்களுக்காக ஒரு குத்து பாடல் வேண்டும் என்று கேட்பேன். ஒரு மாஸ் சண்டை காட்சி வேண்டும் என்று கேட்பேன், அவ்வளவுதான். எனக்கு கதையை இப்படி திருப்பி போடு. இந்த சீனை இப்படி மாற்று என்று சொல்ல தெரியாது ” என்று கூறியுள்ளார்.
நட்பு என்றால் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் – நட்பு என்றால் இதான்யா