இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த 3 வயது சிறுமி… பின்னர் நடந்த சோகம்!!

மெக்ஸிகோவில்..

இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட 3 வயது சிறுமி இறுதிச் சடங்கில் உயிருடன் எழுந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபொது அவர் மீண்டும் உயிரிழந்தார்.

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மூன்று வயது சிறுமி, இறுதிச் சடங்கில் உயிருடன் எழுந்த நிலையில் சில மணிநேரங்களுக்குப் பிறகு மீண்டும் இறந்தார். ஆகஸ்ட் 17 அன்று மெக்சிகோவில் இந்த சம்பவம் நடந்தது.

Camila Roxana Martinez Mendoza எனும் அந்த சிறுமியின் தாயார், உள்ளூர் மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறியதாக குற்றம் சாட்டினார்.

மெக்ஸிகோவின், வில்லா டி ராமோஸ் நகரத்தில் வயிற்று வலி, வாந்தி மற்றும் காய்ச்சலை அனுபவித்த சிறுமி காமிலாவை அவரது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்குள்ள குழந்தைகள் நல மருத்துவர் சிறுமியின் தாயார் மேரி ஜேன் மென்டோசாவிடம் குழந்தையை பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். ஆனால் அதே நேரத்தில், குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும் போது மருத்துவர் அவருக்கு பாராசிட்டமால் மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

கமிலாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததால் மற்றொரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அங்கு, அந்த மருத்துவர் ஒரு வித்தியாசமான மருந்தை பரிந்துரைத்ததாகவும் குழந்தைக்கு பழங்கள் மற்றும் தண்ணீரைக் கொடுக்க பரிந்துரைத்துள்ளனர்.

இருப்பினும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, அதன் பிறகு குடும்பத்தினர் சிறுமியை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு ஆக்ஸிஜனை செலுத்த நீண்ட நேரம் எடுத்ததாக குழந்தையின் தாயார் குற்றம் சாட்டினார்.

பின்னர் குழந்தைக்கு நரம்பு வழியாக மருந்துகளை செலுத்திய மருத்துவர்கள் 10 நிமிடங்களுக்குப் பிறகு, அதை அகற்றிவிட்டு, இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சிறுமியின் மரணத்திற்கு நீர்ச்சத்து குறைபாடுதான் அதிகாரப்பூர்வ காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த நாள், இறுதிச் சடங்கு நடைபெற்றபோது, ​​தனது மகளின் சவப்பெட்டியில் கண்ணாடிப் பலகை மர்மமான முறையில் மேகமூட்டமாக இருப்பதை தாய் மென்டோசா கவனித்தார். துக்கத்தில் இருந்தவர்கள் ஆரம்பத்தில் அவரது வார்த்தைகளை நிராகரித்தனர், அவரால் தனது குழந்தையின் இழப்பைத் தாங்க முடியவில்லை என்றும் அது வருக்கு ஏற்பட்ட மாயத்தோற்றம் என்றும் கூறினர்.

ஆனால் சிறுமியின் பாட்டி, கமிலாவின் கண்கள் அசைவதைக் கண்டு அதிர்ச்சியூட்டும் வகையில் அவருக்கு நாடித்துடிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தார். சிறுமி மீண்டும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவளை உயிர்ப்பிக்க முயன்று தோல்வியடைந்து மீண்டும் இறந்துவிட்டதாக அறிவித்தனர் – இந்த முறை பெருமூளை வீக்கத்தால் (மூளை வீக்கம்) இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவர் இறந்துவிட்டதாக முதலில் அறிவித்த மருத்துவர்கள் மீது Mendoza இப்போது வழக்குப் பதிவு செய்துள்ளார். மருத்துவர்கள் மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை, ஆனால் “இது மீண்டும் நடக்காமல் இருக்க” அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று கூறினார். இந்த வழக்கில் சான் லூயிஸ் போடோசி மாநில அட்டர்னி ஜெனரல் விசாரணையைத் தொடங்கினார்.

நீதிமன்றம் சேர்த்துவைத்த தன்பாலின இளம் பெண்கள் : கண்கலங்கும் காதல் கதை!!

இந்தியாவில்..

இந்தியாவின் கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின், இவரது தோழி பாத்திமா நூரா. இவர்கள் இருவரது பெற்றோரும் வளைகுடா நாட்டில் வேலை செய்த நிலையில் தோழிகள் இருவருக்குள்ளும் தன்பாலின சேர்க்கை ஏற்பட்டது.

இதை அறிந்து பாத்திமா நூராவை பெற்றோர் கேரளாவுக்கு அனுப்பியிருந்தனர். இதனையடுத்து அவரைத் தேடி, கேரளாவுக்கே வந்து விட்டார் ஆதிலா நஸ்ரின்.ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறி நிலையில் உறவினர்கள் தேடி பாத்திமா நூராவை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர்.

அத்துடன் ஆதிலா நஸ்ரின், தங்கள் மகள் பாத்திமா நூராவைக் கடத்தி வந்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த ஆதிலா நஸ்ரின், கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரும் சேர்ந்து வாழ கடந்த மே மாதம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து கடந்த 3 மாதங்களாக ஆதிலா நஸ்ரினும், பாத்திமா நூராவும் சென்னையில் வீட்டை வாடகைக்கு எடுத்து சேர்ந்து வசித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரும் கூறுகையில், ‘‘எங்கள் உணர்வைப் புரியாமல் பெற்றோர் உடலால் காயப்படுத்தினர். நானும், என் தோழியும் எங்கள் கருத்தில் உறுதியாக இருந்து, நீதிமன்ற உத்தரவுப்பெற்று சேர்ந்துள்ளோம்.

இப்போது யாருடைய தலையீடும் இல்லாமல், ஒரு பறவையைப் போல் சுதந்திரமாக வாழ்கிறோம். நமக்காக வாழாத வரை வாழ்க்கை முழுமையடையாது. நாங்கள் சென்னையில் வாடகைக்கு பிளாட் தேடிய போதும் கூட எங்கள் அடையாளத்தை மறைக்கவில்லை.

பெரும்பாலான பெற்றோருக்கு இதுகுறித்துப் புரிதல் இருப்பதில்லை. நாங்கள் இருவருமே வேலை செய்வதால் எங்களிடம் பொருளாதாரச் சுதந்திரம் இருந்தது. அதனால் உயர் நீதிமன்ற படியேறி சட்ட உரிமையை நிலைநாட்டி சேர்ந்து வாழ்கிறோம்.

அனைத்து விஷயங்களிலும் தன்பாலின தம்பதியினர் சமம்தான். ஒரே பாலின உறவு குறித்த புரிதலில் மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் தேவையிருக்கிறதாக கூறியுள்ளனர்.

பள்ளி சீருடையில் சிறுமி கடத்தல்.. அதிர்ச்சியில் ஆழ்த்தும் 14 வயது சிறுவனின் துணிகரம்!!

உத்தரபிரதேசத்தில்..

லக்னோவிலிருந்து தொழில் அதிபரின் 12 வயது மகளை கடத்தியது போலீஸ்காரரின் மகன் என்பது தெரிய வந்துள்ளது. உத்தரபிரதேசம் லக்னோ மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் அமான் சிங். இவருடைய 12 வயது மகள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கடத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து அவரது தந்தை முதல் தகவல் அறிக்கை நகலையும் பெண்ணின் புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டு தமிழ்நாடு காவல்துறை மற்றும் ரயில்வே துறைக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

இதற்கு தமிழக காவல்துறை ட்விட்டரில், சிறுமியை மீட்பது குறித்து கோயம்புத்தூர் காவல் ஆணையருக்கும், அனைத்து ரயில் நிலைய காவலர்களுக்கும் அலெர்ட் செய்திருப்பதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடத்தப்பட்ட மகள் கோவையில் உள்ளதாகவும் இருவரும் ரயில் நிலையம் வருவார்கள் என்று தகவல் தெரிவித்த நிலையில் டிஜிபி உத்தரவின் பேரில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் கோவை ரயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் சிறுமியையும், கடத்தல்காரரையும் தேடி வருகின்றனர்.

முதற்கட்ட தகவலின் பேரில் லக்னோ போலீஸ்காரரின் 14வயது மகன் அந்த 12 வயது சிறுமியை கடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த.சிறுவனின் தந்தையான போலீசாரிடமும் லக்னோ போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே லக்னோவில் சம்பவத்தன்று பதிவான சிறுமி மற்றும் அந்த சிறுவனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்காக தாயையே துடிக்க துடிக்க கொலை செய்த கொடூர மகள்.. நெஞ்சை உலுக்கும் சோகம்!!

கேரளாவில்..

சொத்துக்கு ஆசைப்பட்டு மகளே தாய்க்கு விஷம் கொடுத்த கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை அடுத்துள்ள கீழூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ருக்மணி – சந்திரன் தம்பதியினர்.

இவர்களுக்கு இந்துலேகா என்ற ஒரு மகள் இருக்கும் நிலையில், மகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், இவர் தனது பெற்றோர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இந்துலேகா, அதற்காக பல்வேறு விஷயங்களை செய்து வந்துள்ளார். அந்த வகையில், தனது நகைகளை 8 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்து மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து இவரது கணவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது இந்துலேகாவிடம் நகைகள் பற்றி விசாரித்துள்ளார். அப்போது அவர் ஏதோதோ சொல்லி சமாளித்துள்ளார்.

பின்னர் அடமானம் வைத்திருந்த நகைகளை எப்படி மீட்கலாம் என்பது குறித்து யோசித்த இவர், தனது தந்தை வைத்திருந்த 14 ஏக்கர் நிலத்தை விற்க முடிவு செய்துள்ளார்.

ஆனால் அது தனது பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் வரையில் நடக்காது என்பதை உணர்ந்த இந்துலேகா, அவர்களை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன் படி கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி தனது பெற்றோர்களுக்கு கொடுக்கும் டீ-யில் எலி மருந்து கலந்து கொடுத்துள்ளார்.

அதனை வாங்கிய தந்தை எதோ நாற்றம் அடிப்பதாக கூறி குடிக்காமல் விட, தாயோ அதனை பருகியுள்ளார். இதில் தாய் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழ, இதனை பார்த்த தந்தையும் இந்துலேகாவும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவருக்கு மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது தாய்க்கு நடத்திய உடற்கூராய்வில், அவருக்கு எலி மருந்து கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த அவர்கள், விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மகளின் நடைபெற்ற விசாரணையில் அவர் தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று கூறிவந்துள்ளார். இதையடுத்து அவரது மொபைல் போனை பரிசோதித்த போது, கூகுளில் விஷம் பற்றி தகவல்களை தேடியுள்ளது தெரியவந்தது. பின்னர் அவரிடம் காவல்துறை நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சிறையில் அடைத்தனர். சொத்துக்காக சொந்த தாயையே மகள் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலையில் நடந்த கோர விபத்து.. 2 குழந்தை உட்பட 9 பேர் உடல் நசுங்கி பலி : 14 பேர் கவலைக்கிடம்!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம், பாழேன ஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் லாரி ஒன்று ஜீப் மீது மோதியுள்ளது.

இதில் ஜீப் வாகனத்தில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 பேர் பெங்களூருவிற்கு ஜீப்பில் பயணம் செய்துள்ளனர்.

இவர்களது வாகனம் பாழேன ஹள்ளி அருகே வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்த 9 பேரில் 3 பெண்கள், 2 குழந்தைகள் அடங்குவர். மேலும், காயமடைந்த 14 பேரும் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதேபோல் குரூசர் வாகனத்திலிருந்தவர்கள் அனைவரும் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

“யாரும் அந்த கடற்கரைக்கு போகாதீங்க”… மணலுக்கு அடியில் காத்துக் கிடக்கும் ஆபத்து? அச்சத்தில் மக்கள்!!

இங்கிலாந்தில்..

அவ்வப்போது உலகிலுள்ள ஏதாவது மக்களுக்கு பொதுவான இடங்கள், பல காரணங்களுக்காக தடை செய்யப்படுவதை நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில், இங்கிலாந்திலுள்ள Chichester என்னும் பகுதியில் அமைந்துள்ள Medmerry என்னும் கடற்கரைக்கு செல்ல மக்கள் தடை செய்யப்பட்டுள்ள சம்பவமும், அதன் பின்னால் உள்ள காரணமும் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Medmerry கடற்கரையை மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம், அந்த கடற்கரையில் நிலவும் ஆபத்துக்கள் தான்.

அந்த கடற்கரையின் உள்ள மணலின் அடியில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, பீரங்கிகளுடன் வெடி பொருட்கள் உள்ளே ஆழமாக புதைக்கப்பட்டிருந்த நிலையில் அவை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அது மட்டுமில்லாமல், வெடிகுண்டுகள் போல இன்னும் நிறைய மறைக்கப்பட்ட ஆபத்துக்கள், அந்த கடற்கரையில் நிரம்பி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இது போக, அலை சீற்றம், சீரற்ற நிலம் என பல ஆபத்துக்கள் அந்த கடற்கரையில் இருப்பதால், மக்கள் அங்கே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகை ஒன்றும் அந்த கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் அந்த கடற்கரையின் அருகே உள்ள மக்கள், இதன் ஆபத்தை உணர்ந்து அங்கே செல்லாமல் தான் இருக்கின்றனர். ஆனாலும், தற்போது ஐரோப்ப நாடுகளில், வெப்ப நிலை வரலாறு காணாத அளவுக்கு வாடி எடுப்பதால், மக்கள் பலரும் Medmerry கடற்கரைக்கு செல்வதை தான் பழக்கமாக கொண்டுள்ளனர்.

இது பற்றி அறிந்த கடற்படை மீட்புக் குழு, அங்குள்ள ஆபத்து குறித்து மீண்டும் மக்களை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள் வெடிக்கும் வகையில் அமைந்திருந்தது என்றும், இதனால் அப்பகுதியில் செல்பவர்கள் மர்மமான பொருட்களை பார்த்தால், அதனை தொடாமல் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இது போக, கடந்த இரண்டு ஆண்டுகளில் வெடிக்கும் தன்மையுள்ள பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருவது, அப்பகுதி மக்களை கடும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது. அதே வேளையில், இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதும் தொடர்ந்து ஒரு புதிராகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது திட்டமிட்ட கொலை : நடிகை சொனாலியின் உடற்கூராய்வு அறிக்கையில் அதிர்ச்சி!!

சொனாலி..

பாஜகவைச் சேர்ந்த சொனாலி போகட் மர்மமான முறையில் திடீரென உயிரிழந்ததால், சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து பல மர்ம முடிச்சுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஹரியானா பாஜக தலைவரான சொனாலி போகட், தற்போது இறந்துள்ளார். முதலில் அவர் மாரடைப்பால் இறந்தார் எனக் கூறப்பட்டதை அடுத்தும், அவரது இறப்பு சிறிது சதேகத்திற்குறியதாகக் கருதப்பட்ட நிலையில், இறந்த சொனாலியின் உடலை ஆய்சுக்கு அனுப்பியுள்ளனர் போலீசார்.

அதில், அவரது உடலில், பல காயங்கள் இருப்பதைக் கண்டு, இது இயற்கையான் அமரணம் அல்ல என்பதை உறுதி செய்துள்ளதால், பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

வடக்கு கோவாவில் உள்ள செயிண்ட் அந்தோனி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இவரது மரணம் குறித்து விசாரணை நடத்த கோவா போலீசார் இன்று, கொலை வழக்கை பதிவு செய்தனர்.

பிரேத பரிசோதனை மேலும், இது குறித்த அறிக்கை வெளியிட்டனர். அதில் அவரது உடலில் பல அப்பட்டமான காயங்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது என்றும், “42 வயதான தலைவரின் மரணம் தொடர்பான வழக்கில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) சேர்க்கப்பட்டுள்ளது” என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

சோனாலி போகட்டின் தனிப்பட்ட உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் வாசி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கொலையில் ஈடுபட்டதாகக் கூறி விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

அஞ்சுனா காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு இருவரின் ஹோட்டல் அறைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.ஆகஸ்ட் 22 அன்று போகட் கோவா வந்தபோது, அவருடன் வந்த சக்வான் மற்றும் வாசி ஆகியோர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர்.

மேலும், கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், டிஜிபி ஜஸ்பால் சிங், இந்த வழக்கைத் தனிப்பட்ட முறையில் விசாரித்து வருவதாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். இவரது மரணம் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உதவி இயக்குனரை தாக்கிய ஹீரோ : நடந்தது என்ன?

நடிகர் நவீன்..

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடித்து வரும் நடிகர், தனது சீரியலில் உதவி இயக்குனராக வேலை செய்பவரை தாக்கியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிரியல் நடிகர் நவீன் சமீபத்தில் பிரபல செய்தித் தொகுப்பாளர் கண்மணி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனியார் தொலைக்காட்சியில், கண்ட நாள் முதல் என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் நவீன், சோசியல் மீடியாக்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

மேலும், தனது சீரியலில் காவலராக நடித்தும், மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்திருக்கிறார் நவீன். சென்னை மதுரவாயிலில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் தனியார் ஷூட்டிங் ஹவுசில் இவரது, கண்ட நாள் முதல் சீரியலில் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்த ஷூட்டிங் மிகப் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், நேற்று, அதே சீரியலில் உதவி இயக்குனராக இருக்கும் குணசேகரன் என்பவரைத் தாக்கியுள்ளார் நவீன். இதனால், மூக்கு மற்றும், கன்னம் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உதவி இயக்குநர் குணசேகரன், மதுரவாயில் காவல் நிலையத்தில், நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், தான், ‘கண்ட நாள் முதல்’ சீரியலின் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாகவும் இதில் கதாநாயகனாக நடித்து வரும் நவீன் என்பவர் சூட்டிங் சீன் எடுக்க நேரமாகிவிட்டது வாருங்கள் என்று அழைத்ததற்கு எல்லாம் எனக்கு தெரியும் என்று கூறியும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பின், மதுரவாயில் போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இரு தரப்பினரையும் அழைத்து பேசிய போது, மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், தங்களது சங்கங்கள் மூலமே இதனை பேசிக்கொள்வதாக இரு தரப்பினரும் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக சோசியல் மீடியாக்களில் ரீல்ஸ் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்திழுத்த கண்மணி நவீன் குமார் ஜோடி, தற்போது இண்டஹ் சம்பவத்தால் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

செய்தி தொகுப்பாளர் வீட்டிலேயே குற்றச்சம்பவம் நடந்திருப்பதால், அந்த செய்தியை எப்படி கண்மணி தொகுத்து வழங்கப்போகிறார் என்றெல்லாம் ஒரு சில நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியல் மட்டுமின்றி, நவீன் குமார், பூலோகம், மிஸ்டர் லோக்கல், பட்டாசு போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞனின் உயிரை பறித்த கதிர்காமம் பேரூந்து!!

விபத்து..

கதிர்காமத்திலிருந்து வந்த அரை சொகுசு தனியார் பேருந்து ஒன்று நேற்று (24) இரவு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் 26 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகொன, முங்கென வீதியில் வசிக்கும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரை சொகுசு தனியார் பஸ், வடபயகல சந்திக்கு அருகில், கொழும்பில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டு களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சிறுவனின் உயிரை பறித்த PUBG : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

PUBG விளையாட்டு..

PUBG விளையாட்டில் மூழ்கிய மாணவன் தூக்கிட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இச் சம்பவம் மாவடிவேம்பில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேற்றுக்காக காத்திருந்த மாணவனே பலியானதாக தெரியவந்துள்ளது.

பரீட்சை எழுதி முடிந்ததும் பெறுபேறு வரும் வரைக்குமுள்ள காலப்பகுதிக்குள் SMART PHONE. பானையில் மூழ்கியிருந்த இம் மாணவனுக்கு, பெற்றோர் மற்றும் சகோதரர்கள் அறிவுரைகள் கூறியும் கேட்காது தொடர்ந்து அதிலேயே நேரகாலத்தை கழித்து வந்துள்ளார்.

இரவு வேளைகளில் தனது படுக்கையறைக்குள் சென்று கதவை தாழ்ப்பாளிடும் இவர் எத்தனை மணிக்கு உறங்குகிறார் என்று கூட தெரியாத நிலையில் காலையில் 10.00 மணிக்குப்பின்பே எழுந்திருப்பார். அவரது அறைக்குள் எவரையுமே உள்ளே வர அனுமதிக்கமாட்டார்.

இந்நிலையில் சம்பவ தினமான 21.08.2022 அன்று காலை 10.00 மணியாகியும் எழுந்திருக்காத இவரை, இவரது பெற்றோர் கதவில் தட்டி சத்தமிட்டு அழைத்த போதும் எதுவித பதிலும் வராததால் அவரது சகோதரன் வீட்டின் கூரை மேல் ஏறி ஓடுகளை அகற்றி படுக்கையறையினை அவதானித்த போது, “சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு வீட்டு வளையில் தொங்கி மரணித்திருப்பதை “கண்டுள்ளார்.

இவருக்கு அருகாமையில் அவரால் எழுதப்பட்ட காகிதம் ஒன்றும் இருந்துள்ளது. குறித்த இடத்துக்கு சந்திவெளி பொலிசாருடன் சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி MSM நஸீர் விசாரணைகளை முன்னெடுத்தார்.

இவரது கைத் தொலைபேசியினை பரீட்சித்த போது தொடர்ந்து PUBG விளையாட்டிலேயே தனது நேரகாலத்தை கழித்து அதற்கு அடிமையாகிருந்தது தெரிய வந்ததுள்ளது.

மேலும் அவரால் எழுதப்பட்ட காகிதத்தில் “எனது சாவுக்கு யாருமே காரணமில்லை, எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை ” என்று நீண்ட கடிதமொன்றே எழுதியிருந்தார். இதன்போது பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் (22.08)உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தென்னிலங்கையில் கடவுளாக வாழும் மனிதர்கள் : நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் மனிதநேயம்!!

தென்னிலங்கையில்..

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோர் ஒருவேளை உணவுக்காக போராடி வருகின்றனர்.

விண்ணைமுட்டும் விலைவாசியால் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக, உணவுப்பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளனர். இவ்வாறான நெருக்கடியான நிலையில் பலர் உணவின்றி பசியால் வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தென்னிலங்கையிலுள்ள வரல்ல, இழுக்கெட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் அங்கு வருபவர்களை நெகிழ வைத்துள்ளார்.

தனது உணவகத்திற்கு வரும் வறுமையானவர்கள் என்ன வேண்டுமானாலும் உட்கொள்ள முடியும். அதற்கு கட்டணம் அறவிடப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, தனது உணவகத்தில் பதாகை ஒன்றையும் அவர் மக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார். அதில், “இல்லாதவர்கள் பசியில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து உட்கொள்ளுங்கள். ஒரு ரூபாயேனும் எங்களுக்கு வேண்டாம்.

உண்மையாகவே அவசியம் உள்ளவர்கள் மாத்திரம் இந்த சந்தர்ப்பத்தில் இங்கு வந்து உணவுகளை பெற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் கர்ப்பிணி தாய்மாருக்கு உட்கொள்ளும் உணவிற்கும் பணம் அறவிடப்படாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகமான விலைவாசி உள்ள போதும் இவ்வாறான மனிதநேயத்துடன் சிலர் செயற்படுவது, பசியால் வாடுவோருக்கு தெய்வமாக தென்படுவதாக பயன்பெற்ற பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் திறப்பு!!

பண்டார வன்னியன்..

தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 ஞாபகார்த்த விழாவினை முன்னிட்டு வவுனியா நகரசபையினரினால் இன்று (25.08.2022) நகர மத்தியில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் என பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பண்டாரவன்னியன், முல்லைத்தீவில் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட கோட்டையைத் தகர்த்து வெற்றி கொண்ட நாளின் 219ஆவது ஆண்டு நினைவு தினத்தை, வவுனியா நகரசபையும் விழாக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது பண்டாரவன்னியன் சிலையுள்ள பகுதி தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் என பெயர்பலகை திறந்து வைக்கப்பட்டதுடன் பண்டாரவன்னியன் சிலைக்கு மாலையும் அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அமைப்புக்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மற்றும் பல சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இரு குழந்தைகள் இரும்புக் கம்பியால் அடித்து கொலை : தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்!!

திருப்பூரில்..

திருப்பூர் அருகே தலைவலியால் அவதிப்பட்டு வந்த தாய் தனது இரண்டு குழந்தைகளை கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு பூச்சி மருந்து குடித்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மவட்டம் வெள்ளகோவில், அத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் கனகசம்பத் (45). இவர் விவசாயி. இவருடைய மனைவி ரேவதி( 40). இவர்களது மகள் ஹர்சிதா (13), மகன் கலைவேந்தன் (7).

ஹர்சிதா 8ஆம் வகுப்பும் கலைவேந்தன் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்களுக்கு ஊரை ஒட்டியுள்ள தோட்டத்தில் ஒரு வீடும், ஊருக்குள் ஒரு வீடும் உள்ளது. ரேவதிக்கு தலைவலி இருந்து வந்ததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

பாஜகவுக்கு மொத்தம் “3 மகன்கள்”.. பணியாவிட்டால் அவர்கள் ஏவப்படுவார்கள்! தேஜஸ்வி சரமாரி அட்டாக் பாஜகவுக்கு மொத்தம் “3 மகன்கள்”.. பணியாவிட்டால் அவர்கள் ஏவப்படுவார்கள்! தேஜஸ்வி சரமாரி அட்டாக்

இதனிடையே தலைவலி அதிகமாகும்போது ரேவதி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை, கனகசம்பத், கடை வீதிக்கு சென்று விட்டார். அப்போது பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ரேவதி ஊரை ஒட்டியுள்ள தோட்டத்து வீட்டிற்கு சென்றார்.

தனது இரண்டு குழந்தைகளையும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு, தானும் பூச்சி மருத்து குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். வீடு திரும்பிய கனகசம்பத், மனைவி பிள்ளைகளை காணாததால் தோட்டத்து வீட்டிற்கு சென்றிருப்பார்கள் என நினைத்து அங்கு சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன், மனைவியை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அப்போது ரேவதி இரண்டு குழந்தைகளை கம்பியால் அடித்து கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து விட்டதாக கணவரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து ரேவதிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்தது வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று உயிரிழந்த இரண்டு குழந்தைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வெள்ளகோவில் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயே பெற்ற குழந்தைகளை கொடூரமாக அடித்து கொலை செய்து விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தலைவலிதான் காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

பேருந்தில் செல்லும் போது தாயின் மடியில் உயிரிழந்த சிறுவன் : உயிருக்கு உலைவைத்த குளிர்பானம்?

சென்னையில்..

பேருந்தில் பயணம் செய்த போது தாய் வாங்கிக் கொடுத்த குளிர்பானம் மற்றும் சிப்ஸ் சாப்பிட்ட சிறுவன் பேருந்திலேயே மயங்கி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் பிவிகே தெருவை சேர்ந்த ஜெபஸ்டின் ராஜ் மகன் அந்தோணி ஜான் லோஷன் (14). இவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், குடும்பத்தாருடன் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை மீண்டும் சென்னைக்கு அரசு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.


மதுரை பேருந்து நிலையம் அருகே பேருந்து நின்றபோது அங்கிருந்த ஒரு கடையில் சிப்ஸ் மற்றும் பாட்டில் குளிர்பானம் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை சாப்பிட்ட மாணவன் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.

உறவினர்கள் தண்ணீர் கொடுத்து சிறுவனை உறங்க வைத்துள்ளனர். பின்பு விக்கிரவாண்டி அருகே வந்த போது சிறுவனை எழுப்பியதில் எந்தவித சுயநினைவுமின்றி இருந்துள்ளார்.

திண்டிவனம் பேருந்து நிறுத்தத்தில் சிறுவனை எழுப்பிய போது இரண்டு முறை பெருமூச்சு விட்ட நிலையில், அதன்பின்பு எந்தவொரு அசைவும் இல்லாமல் இருந்ததால் உறவினர்கள் பேருந்தில் கதறியழுதுள்ளனர்.

பின்பு பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிறுவனைக் கொண்டு சென்றனர். அங்கு சிறவனை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

பேருந்தில் பயணம் செய்த மாணவன் இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிர்பானம், சிப்ஸ் சாப்பிட்டதால் புட்பாய்சன் ஏற்பட்டு மாணவன் இறந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

“என் சாவுக்கு மாமியாரும் மனைவியின் சகோதரியும்தான் காரணம்”.. கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை!!

சென்னையில்..

வடசென்னை கொளத்தூர் பகுதியில் தன் சாவுக்கு தன் மனைவியின் அக்காவும், மாமியாருமே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கொளத்தூர் ராஜமங்கலத்தை அடுத்த எம்ஜிஆர் நகர் நீலமேகம் தெரு பகுதியை சேர்ந்தவர் ஓசிலா ஜெனிபர். இவர் டான்போஸ்கோ பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இவருடைய மூத்த மகன் டேனியல் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. டேனியல் தனியாக தனது மனைவி மற்றும் மாமியாருடன் வசித்து வந்துள்ளார். திருமணம் முடிந்த நாள் முதல் கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.

டேனியலுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 22 ஆம் தேதி அன்று மதியம் தன் தாய் வேலை செய்யும் பள்ளிக்குச் சென்ற டேனியல், தனக்கு மனசு சரியில்லை என்றும் ஏதோ மனதிற்கு கஷ்டமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து தனது தாயிடம் பசிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் உடனே ஓசிலா ஜெனிபர் வீட்டுச் சாவியை டேனியலிடம் கொடுத்து வீட்டில் சாப்பாடு இருப்பதாகவும் போய் சாப்பிடுமாறும் கூறியுள்ளார். டேனியலும் சாவியை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் ஓசிலாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளியில் அரை நாள் விடுப்பு கூறிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்த அவர் , கதவை தட்டியுள்ளார். டேனியல் திறக்கவே இல்லை. போன் செய்துள்ளார். அந்த போனையும் டேனியல் எடுக்கவே இல்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது டேனியல் மின்விசிறியல் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது.

மகனின் இந்த நிலையை பார்த்து கதறிய ஓசிலா, உடனடியாக ராஜமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது தகவலின் பெயரில் ராஜமங்கலம் காவல்துறையினர் விரைந்து சென்று டேனியலின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் டானியல் எழுதிய கடிதம் ஒன்று சிக்கி உள்ளது. அதில் நான் டேனியல், 30 வயது ஆகிறது நானும் என் மனைவியும் ஒன்றாக இருந்தோம். அவர்களுடைய அக்கா அர்ச்சனா மற்றும் எனது மாமியார் ஈஸ்வரி ஆகிய இருவர் தான் எனது சாவிற்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக டேனியலின் மனைவியின் அக்கா அர்ச்சனா மற்றும் மாமியார் ஈஸ்வரியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவசரமாக அரங்கேறிய திருமண ஏற்பாடு… பாத்ரூமில் வழுக்கி விழுந்த மாப்பிள்ளை : இறுதியில் நடந்த திருப்பம்!!

தெலங்கானாவில்..

இன்றைய காலகட்டத்தில், திருமணம் நடைபெற இருக்கும் சமயத்தில், அதனை சுற்றி நடைபெற்று வரும் அதிர்ச்சி சம்பவங்கள், அதிகம் அரங்கேறி வருகிறது. தெலங்கானா மாநிலம், ஹனம்கொண்டா என்னும் பகுதியை சேர்ந்தவர் அன்வேஷ். இவர் அமெரிக்காவில் மென்பொருள் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார்.

இவருக்கும் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பின்பு திருமணத்தை ஒரு வாரத்திற்குள் நடத்த வேண்டும் என்று அன்வேஷ் அவசரம் காட்டியுள்ளார். மணமகன் கூறியபடி கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பெண் வீட்டார் நிச்சயதார்த்தின் போது வரதட்சணையாக 15 லட்சம் கொடுத்த நிலையில், இன்னும் 10 லட்சம் ரூபாய் திருமணத்தின் போது தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் மணமகனான அன்வேஷ், கழிவறையில் வழுக்கி விழுந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், மீண்டும் தனது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அன்வேஷ் கூறி உள்ளார். தொடர்ந்து வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனைத்து பரிசோதனையும் எடுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக மருத்துவர்கள் இவரது உடம்பில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை… இவர் கீழே விழவும் இல்லை என்று கூறியுள்ளார். பின்பு மாப்பிள்ளை நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது.

ஆம் திருமணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதால் இவ்வாறு நாடகமாடியதாக கூறியுள்ளார். பெண் வீட்டார் கோபத்தில் இளைஞரை அடிக்க சென்ற நிலையில், இறுதியாக திருமணத்தை நிறுத்தவும் இரு வீட்டார் முடிவு செய்துள்ளனர்.