நடிகர் சூர்யா, நடிப்பது மட்டுமல்லாமல் ‘அகரம்’ என்ற அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் பல ஏழை எளிய மாணவர்களின் கல்வி செலவை ஏற்று உதவி செய்துள்ளார்.
இந்நிலையில் சூர்யா ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்ட செயலாளர் மனோஜின் மனைவி தீபிகா தனது மேற்படிப்பிற்காக ‘அகரம்’ அறக்கட்டளையின் மூலம் அயர்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது சூர்யா தொலைபேசி வாயிலாக தீபிகாவிற்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினார். அதில், “தொழிலும் முக்கியம். அதே நேரம் குடும்ப சந்தோஷமும் முக்கியம். உங்கள் மனம் சொல்வதை எப்போதும் கேளுங்கள்” என குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார் சூர்யா.
இலங்கை மக்கள் வெளிப்படுத்த முடியாத ஒரு சில விடயங்களை விஜயகாந்த் அவர்கள் வெளிப்படுத்தியது மகிழ்ச்சி – இலங்கைப் பெண் சகுந்தலா. கேப்டன் சாரை பார்க்கணும் என்று நிறைய நாள் ஆசை என இலங்கைப் பெண் சகுந்தலா.
இலங்கை பெண்ணொருவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்திக்க வந்து, அவரால் பேச முடியாதது குறித்து வேதனை தெரிவித்தார். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்றைய தினம் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார்.
நடிகர்கள், ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் திரளாக வந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்னை வந்துள்ளார்.
கட்சி அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்த சகுந்தலா வாழ்த்து கூறி மகிழ்ந்தார். ஆனால் விஜயகாந்தால் பேச முடியாதது குறித்து அவர் வேதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் இலங்கையில் இருந்து வந்திருக்கிறேன்.
கேப்டன் சாரை பார்க்கணும் என்று நிறைய நாள் ஆசை. அவரை ஏன் பார்க்கணும் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் நிறைய இலங்கை மக்களுக்கு உதவி செய்துள்ளார். இலங்கை மக்கள் வெளிப்படுத்த முடியாத ஒரு சில விடயங்களை விஜயகாந்த் அவர்கள் வெளிப்படுத்தியது மகிழ்ச்சி.
அதாவது நாங்கள் சொல்ல வேண்டிய விடயத்தை அவராக சொல்லிவிட்டார். அவரால் பேச முடியாது. பேச முடிந்திருந்தால் இன்னும் ரொம்ப சந்தோசம். ஆனாலும் நேரில் பார்த்துவிட்டு போட்டோ எடுத்துவிட்டு வந்துவிட்டோம்.
அவரை பார்த்ததே எங்களுக்கு பெரிய சந்தோசம். நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டது. அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி இளைஞர் ஒருவரை தமிழ் பெண்ணை தேடிப்பிடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த அழகிய காதல் கதை சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாவூர் பகுதியைச் சேர்ந்தவர் லாசர். இவரது மனைவியின் பெயர் மரிய செல்வி. இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்களும், அனு விண்ணிமேரி என்ற மகளும் உள்ளனர். லாசரின் மகள் அனு விண்ணிமேரி, தன்னுடைய மேற்படிப்புக்காக ஜெர்மனி நாட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கே பவேரியா மாகாணத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்றிலும் அவர் படித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தனது மேற்படிப்பை முடித்த அணு விண்ணிமேரி, ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழ்நிலையில், அதே நிறுவனத்தில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பேட்ரிக் சிக்ப்ரிட் கோடல் என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். அப்போது பேட்ரிக்குடன் அனுவும் நட்பாக பழகி வந்துள்ளார். இதன் பின்னர், நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே காதலும் மலர்ந்துள்ளது.
தொடர்ந்து, ஜெர்மனி நாட்டிலுள்ள தனது காதலன் குறித்து, கன்னியாகுமரியில் உள்ள தனது குடும்பத்தினரிடம் அனு விண்ணிமேரி தெரிவித்துள்ளார். மகளின் காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அனு – பேட்ரிக் திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளனர். அதன்படி, ஜெர்மனி மணமகன் பேட்ரிக், தனது பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் குமரி மாவட்டத்திற்கும் வந்துள்ளார். பின்னர், இருவரின் குடும்பங்கள் முன்னிலையில், விண்ணிமேரி – பேட்ரிக் திருமணமும் நடைபெற்றது.
தமிழ்நாட்டை சேர்ந்த பெண் மீது காதல் உருவானது பற்றி பேசிய பேட்ரிக், “அனுவுடன் பழகியதன் காரணமாக, எனக்கு இந்திய கலாச்சாரத்தின் மீதும், இந்திய குடும்ப வாழ்க்கை முறை மீதும் அதிக நாட்டம் உருவானது. இதன் காரணமாக ஈர்க்கப்பட்ட நான், விண்ணிமேரியை காதலிக்க தொடங்கினேன்.
என் காதலையும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் அவரிடம் வெளிப்படுத்தினேன். அவரும் எனது காதலை ஏற்றுக் கொண்டதால், பெற்றோர்கள் முன்னிலையில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
இங்கே விருந்தில் வித விதமான உணவுகள் வைக்கப்பட்டது. பரோட்டா, பிரியாணி என அனைத்தும் அருமையாக இருந்தது” என ஜெர்மனி மாப்பிள்ளை பேட்ரிக் தெரிவித்துள்ளார். அனு விண்ணிமேரி – பேட்ரிக் திருமணம் தொடர்பான புகைப்படம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
56 ஆண்டுகள் கழித்து பெண் ஒருவர் குடும்பத்தினரை மீண்டும் சந்தித்துள்ள சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. ஆந்திரபிரதேச மாநிலம், நரசிப்பட்டினம் பகுதியில் உள்ள சின்னபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கெளரி பார்வதி. 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
அதன் பின் 56 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரது உறவினர்கள் சந்திக்க வந்துள்ளனர். அவரை காண 1300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் உள்ள மேலகரந்தை கிராமத்துக்கு வந்திருக்கின்றனர்.
நம்மாள்வர் கெளரி தம்பதியினர் தூத்துக்குடி விளாத்திகுளம், மேலகரந்தையில் வசித்து வருகின்றனர். 80 வயதாகும் நம்மாள்வார் 60களில் கூலி வேலைக்காக ஆந்திராவின் நரசிப்பட்டினம் பகுதிக்கு சென்றிருக்கிறார்.
அப்போது தான் கெளரியை சந்தித்து காதலித்துள்ளார். கௌரி வீட்டை விட்டு ஓடி வரும் போது அவரின் குடும்பத்தினர் விஜயவாடா பேருந்து நிலையத்தில் அவர்களை கண்டுபிடித்து விட்டனர்.
பின் அவர்கள், இனி கௌரியை தொந்தரவு செய்யவோ, மீண்டும் நரசிப்பட்டினம் வரவோ கூடாது என்று நம்மாள்வரை மிரட்டி விட்டுச் சென்றிருக்கின்றனர். இதன் பின் கெளரியை அழைத்து சென்றுள்ளார் நம்மாள்வர், 1966ம் ஆண்டு நம்மாள்வர் – கௌரி திருமணம் நடந்துள்ளது.
அப்போது 16 வயதில் திருமணம் செய்துள்ளார். 7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்திவரும் நம்மாள்வருக்கு சண்முகராஜ், அய்யம்மாள், முத்துலட்சுமி என்ற பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், வயதான காலத்தில் கௌரி தனது குடும்பத்தினர்களை பார்க்க வேண்டும் என தனது மகன்களிடம் அழுது கேட்டுள்ளார். இதனால், 49 வயதாகும் அவரின் மூத்தமகனான சண்முகராஜ் தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு சின்னபாளையம் கிராமத்துக்கு சென்றுள்ளார்.
அங்கே தனது தாய்வழி உறவினர்கள் குறித்து விசாரித்து அவர்களை கண்டிபிடித்துள்ளார். ஆனாலும், இன்று வரை அக்கம் பக்கத்தினர்கள் தாயை பற்றி நியாபகம் வைத்திருந்துள்ளனர்.
கூகுள் மே உதவியுடன் அங்க ஈஸியாக சென்றோம் என தெரிவித்துள்ளார். அங்கு சென்று 4 மணிநேரத்தில் உறவினர்களை கண்டு, பின் தன்னை கௌரியின் மகன் என்று கூறியது அவர்கள் மகிழ்வாக வரவேற்றதாக சண்முகம் கூறியுள்ளார்.
தொடர்ந்து, 56 ஆண்டுகள் கழித்து கௌரியின் குடும்பத்தினர் அவரை சந்தித்தனர். கௌரியின் சகோதரர்கள் மஜ்ஜி சோமுலு, மஜ்ஜி தாசு மற்றும் சகோதரிகள் மாமிடி வெங்கைம்மா, கெங்கம்மா ஆகியோர் இயற்கை எய்தியிருந்தனர்.
மேலும், மங்கா, ராம்பாபு ஆகிய உடன்பிறந்தவர்கள் உயிருடன் இருந்தனர். அவர்களும் கௌரியைக் காண மேலகரந்தை வந்திருக்கின்றனர். இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறி வருகின்றனர்.
22 வயதான இளம்பெண் ஒருவர், 54 வயது ஆண் ஒருவரை காதலித்த நிலையில், தங்கள் காதல் காரணமாக சந்தித்த பிரச்சனைகளை பற்றி தற்போது பகிர்ந்துள்ளார். இங்கிலாந்தின் Maidstone என்னும் பகுதியைச் சேர்ந்தவர் Vanessa.
22 வயதாகும் இவர், டேபிள் டென்னிஸ் போட்டியின் போது, அந்த விளையாட்டின் பயிற்சியாளரான Geza Szabo (வயது 54) என்வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன், முதன் முதலில் சந்தித்ததாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில், Vanessa மற்றும் Geza ஆகியோர் நண்பர்களாக தான் பழகி வந்துள்ளனர். இதன் பின்னர், நாட்கள் செல்ல செல்ல அவர்களுக்கு இடையே உள்ள வயது வித்தியாசம் என்பதைத் தாண்டி, ஆரம்பத்தில் அவர்கள் டேட்டிங் செய்தும் வந்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு இடையே காதலும் மலர்ந்துள்ளது.
Vanessa மற்றும் Geza ஆகியோருக்கு இடையேயான காதல் என்பது சற்று தீவிரம் அடைந்த நிலையில், அவர்கள் இணைந்து வாழவும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி பேசும் Vanessa, “ஆரம்பத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எந்த விருப்பமும் எங்களுக்குள் உருவாகவில்லை.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல அடிக்கடி பேசிக் கொண்டே வந்த பின்னர் தான், ஒருவரை பற்றி ஒருவர் நன்கு தெரிந்து கொண்டோம். 32 வயது வித்தியாசமுள்ள ஒரு நபரிடம் நான் இதுவரை ஈர்க்கப்பட்டதே கிடையாது. மேலும், அவரும் என் வயது பெண்ணுடன் இதற்கு முன் டேட்டிங் செய்ததில்லை.
அவர் நல்ல நகைச்சுவை உணர்வைக் கொண்ட ஒரு மனிதர். அதனால், என்னை எப்போதுமே சிரிக்க வைப்பார். எங்கள் காதல் பற்றி, எனது பெற்றோரிடம் சொன்ன போது அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
எங்களை பிரிக்க வேண்டும் என்று தான் அவர்கள் முயன்றனர். என் வயது நபர்களுடன் தான் நான் பழக வேண்டும் என்றும் அவர்கள் என்னை அறிவுறுத்தினர். நாட்கள் சென்றால் நான் சிறந்த உறவை தேடி சென்று விடுவேன் என்றும் கூறினர்.
ஆனால் ஒரு கட்டத்தில், எங்கள் காதலின் தீவிரம் அறிந்து அவர்கள் எங்களை ஏற்றுக் கொண்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு, எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன் பின்னர், அடுத்த இரண்டு நாட்களில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
என்னையும், Geza-வையும் ஒன்றாக பார்க்கும் பலரின் முகத்தில் நிறைய மாற்றங்கள் வரும். பலரும் எங்களை அப்பா – மகள் என்றே நினைக்கின்றனர். ஒருவரை நீங்கள் மதிப்பிடுவதற்கு முன்பாக, அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்” என Vanessa கூறி உள்ளார்.
2009ம் ஆண்டிலிருந்து எமது பிள்ளைகளை தேடுகின்றோம் நீதி கிடைக்குமா? கண்ணீர் மல்கும் பெற்றோர்
விருத்தாச்சலத்தில் வளையகாப்பு நடத்தகூறி, கர்ப்பிணி மனைவி கூறியதால், ஆத்திரத்தில் மனைவியை அடித்துக் கொன்ற காதல் கணவன். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் இரண்டாவது மகன் 20 வயது கொண்ட அற்புதராஜ்.
இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில் விருத்தாச்சலம் காய்கறி சந்தையில் வேலை செய்து வருகிறார். இதேபோல் விருத்தாச்சலம் அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை- லதா தம்பதியினரின் ஒரே மகள் 18 வயது கொண்ட சக்தி. ஏழுமலை இறந்த பின்பு, தனது ஒரே மகளுடன், தாய் லதா, விருத்தாச்சலம் பெரியார் நகரில் வீடு கட்டி வாழ்ந்து வந்தனர்.
பனிரெண்டாம் வகுப்பு படித்திருக்கும் சக்தி, கடந்த கொரோனா கால கட்டத்தின் போது, விருத்தாச்சலம் பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் வேலைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அதே பேக்கரியில் அற்புதராஜியும் வேலை செய்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடன், கடந்த ஏழு மாதத்துக்கு முன்பு, இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி, ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணம் முடிந்த பின்பு, சக்தியின் வீடான விருத்தாச்சலம் பெரியார் நகரில் உள்ள தனது தாய் லதா வீட்டில், தனது காதல் கணவனுடன் ஒன்றாக வசித்து வந்தனர். சக்தி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், வழக்கம்போல் வேலைக்குச் சென்று வீட்டு, நேற்று மதியம் சாப்பாட்டிற்காக அற்புதராஜ் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் மீண்டும் வேலைக்குச் சென்றுள்ளார். தனது மருமகன் அற்புதராஜ் சென்ற பின்பு, வீட்டிற்குள் நுழைந்த சக்தியின் தாயார் லதா, தனது மகள் உடல் அசைவு இல்லாத நிலையில் படுத்திருப்பதைக் கண்டு எழுப்பி உள்ளார். ஆனால் தனது மகள் சக்தி, மூச்சுப் பேச்சு இல்லாமல் கிடப்பதைக் கண்டு கதறி அழுது உள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது சக்தி உயிரிழந்ததை கண்டு, காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த விருத்தாச்சலம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சக்தியின் கணவரான அற்புதராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனக்கு எதுவும் தெரியாதது போல், நாடகம் ஆடிவந்த அற்புதராஜ், ஒரு கட்டத்தில் காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில், தனது மனைவியை அடித்து கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.
7 மாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி, அடிக்கடி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கூறி வந்ததாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம், சண்டைகள் ஏற்பட்டதாகவும், அவ்வாறு நடைபெற்ற சண்டையில் ஆத்திரமடைந்த அற்புதராஜ் தனது கர்ப்பிணி மனைவி அடித்துக் கொன்றது தெரிய வந்தது.
இது குறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன சக்தி தனது வீட்டில் உள்ள கதவுகள், சுவர்களில் தனது அம்மா மீதும், தனது காதல் கணவர் மீதும் கொண்டுள்ள பாசத்தை எழுதி வைத்துள்ளார். ஐ லவ் யு அம்மா, true lovers என கணவர் மற்றும் அம்மா பேரை வீடு முழுவதும் எழுதி வைத்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், அவரது வீட்டின் கதவில், ”அம்மா உன்ன நான் புரிஞ்சுக்காம போயிட்டேன். உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா. உன்ன என்னால மறக்க முடியாது அம்மா. நீ எனக்காக நல்லா இருக்கணும் அம்மா”. என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறி குடும்பம் நடத்தி வந்த காதல் மனைவியை கணவன் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
2009ம் ஆண்டிலிருந்து எமது பிள்ளைகளை தேடுகின்றோம் நீதி கிடைக்குமா? கண்ணீர் மல்கும் பெற்றோர்
திருவண்ணாமலையில் மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ஜம்போடை கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய வயது 48. இவர் மனைவி ராணி வயது (43). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
வெளிநாட்டில் வீட்டு வேலை செய்துவந்த ராணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மாமியார் மரணமடைந்த நிலையில் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். அதன்பின் சொந்த ஊரிலேயே வசித்தும் வந்திருக்கிறார்.
இந்நிலையில் பழனி – ராணி தம்பதியின் மகள் புதூரை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். இதில் ராணிக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் அதே கிராமத்தில் ராணியின் மகளுக்கும் அவரது காதலருக்கும் திருமணம் நடந்திருக்கிறது.
இதில் இருவீட்டார் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்ட நிலையில், ராணி தனது மகளது திருமண விழாவில் பங்கேற்க செல்லவில்லை. இதனிடையே தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியில் வசித்துவந்த ராணியின் சகோதரி வீட்டில் விசேஷம் நடைபெற்றிருக்கிறது.
இதில் கலந்துகொள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வீட்டுக்கு திரும்பியிருக்கிறார் ராணி. இதனை கண்ட பழனி மகளின் திருமணத்துக்கு வராமல் சகோதரி வீட்டு விழாவிற்கு செல்வது குறித்து ராணியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறவே, பழனி தனது மனைவியை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் மயங்கிவிழுந்த ராணி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
அப்போது வீட்டுக்கு வந்த தம்பதியின் மகன் தனது தாய் மரணமடைந்ததை அறிந்து கதறி அழுதிருக்கிறார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் காவல்துறைக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர்.
இதனையடுத்து பழனி அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகிவிட்டார். இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர் ராணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் பக்கத்து கிராமத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கியிருந்த பழனியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2009ம் ஆண்டிலிருந்து எமது பிள்ளைகளை தேடுகின்றோம் நீதி கிடைக்குமா? கண்ணீர் மல்கும் பெற்றோர்
Online-ல் ரூ.16,000 மதிப்புடைய மொபைல் போனை Order செய்த பெண்ணுக்கு 3 காலாவதியான பவுடர் டப்பா டெலிவரி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி பகுதியை அடுத்துள்ள முண்டியேருமா கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சனா கிருஷ்ணா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவருக்காக மொபைல் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று அஞ்சனாவை தொடர்பு டெலிவரி பாய் ஒருவர், நீங்கள் ஆர்டர் செய்தது இன்று டெலிவரி வரும் என்று தெரிவித்தார். பின்னர், டெலிவரி பாயும், அதனை ஆர்டர் பார்ஸலை அஞ்சனாவிடம் கொடுத்துவிட்டு அதற்காக ரூ.17,028 பணத்தையும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து உடனே சென்றுவிட்டார்.
இதையடுத்து பார்ஸலை வீட்டிற்குள் எடுத்து சென்ற அஞ்சனா, அதை திறந்து பார்த்துள்ளார். அப்போது மொபைல் போனுக்கு பதிலாக பவுடர் டப்பாக்கள் இருந்துள்ளது தெரியவந்தது. அதுவும் காலாவதியான டப்பாக்கள் இருந்துள்ளது.
இதனை கண்டதும் ஆத்திரப்பட்ட அஞ்சனா, உடனே தனது மொபைல் போனை எடுத்து ஆன்லைன் ஆப் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். மேலும் இது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்திலும், காவல்துறையிலும் புகார் அளித்தார். பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல் அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பார்சலில் வந்த மொபைல் போனுக்கு பதிலாக காலாவதியான பவுடர் டப்பா வைத்து டெலிவரி செய்தது அந்த டெலிவரி பாய் என்று தெரியவந்தது. பின்னர் டெலிவரி பாயை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது தவறை ஒப்புக்கொண்ட அவர், இது போன்று ஏற்கனவே பல சம்பவங்கள் செய்ததையும் ஒப்புக்கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.18000 மதிப்புள்ள மொபைல் போனை ஆர்டர் செய்தவருக்கு ரூ.10,000 மதிப்புள்ள மொபைல் போனை மாற்றி வைத்து டெலிவரி செய்ததாக டெலிவரி பாய் தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2009ம் ஆண்டிலிருந்து எமது பிள்ளைகளை தேடுகின்றோம் நீதி கிடைக்குமா? கண்ணீர் மல்கும் பெற்றோர்
திட்டக்குடி அருகே சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்த கொழுந்தனார் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் கூலித்தொழிலாளி.
இவரது மனைவி பிரேமலதா (வயது 25). இந்நிலையில், வெங்கடேசனுக்கும் அவரது தம்பி காசிநாதனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெங்கடேசன் வெளியூர் சென்ற நிலையில் பிரேமலதா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனை அறிந்த காசிநாதன் குடித்துவிட்டு பிரேமலதா வீட்டிற்கு சென்றார். அங்கு சொத்து குறித்து அண்ணியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது இருவருக்குள்ளும் வாய் தகராறு முற்றியது. அண்ணன் இல்லாத நேரத்தில் குடித்துவிட்டு இங்கு ஏன் வந்தாய் என காசிநாதனை பிரேமலதா திட்டியுள்ளார்.
அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேமலதாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பிரேமலதா பலத்த காயம் ஏற்பட்டு கூச்சலிட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே இறந்துவிட்டதாக கூறினார். பின்னர் பிரேமலதா உடலை ராமநத்தம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காசிநாதனை ராமநத்தம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2009ம் ஆண்டிலிருந்து எமது பிள்ளைகளை தேடுகின்றோம் நீதி கிடைக்குமா? கண்ணீர் மல்கும் பெற்றோர்
தியேட்டரில் தெரிந்தவர்களை பார்த்து சிரித்ததால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான சம்பவம் 23 செப்டம்பர் 2018 அன்று நடந்தது.
தூத்துக்குடியை சேர்ந்த தம்பதி மாரியப்பனும், கன்னியம்மாளும், திருவனந்தபுரம், ஸ்ரீவராகம் முக்கோலைக்கல் எஸ்.கே. நிவாசில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று மாரியப்பனும், கன்னியம்மாளும் நகரில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர்.
வீட்டுக்கு வந்த மாரியப்பன், தியேட்டரில் தெரிந்தவர்களை பார்த்து சிரித்ததாக கன்னியம்மாள் மீது சந்தேகம் அடைந்து சண்டை போட்டுள்ளார். சண்டையின் போது கன்னியம்மாள் தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டு சுயநினைவை இழந்தார்.
கொலைக்கு பின், திருநெல்வேலி சென்ற மாரியப்பனை, மூன்றாவது நாளில், போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இருவரின் மகன்களான மணிகண்டன், கணேசன் ஆகியோர் முக்கிய சாட்சிகளாக இருந்தனர். நீதிமன்றத்தில் மாரியப்பனுக்கு எதிராக இருவரும் சாட்சியம் அளித்தனர்.
பீட்சா டெலிவரி செய்யும் மணிகண்டன், சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில் வீடு திரும்பியபோது, ரத்த வெள்ளத்தில் தாயின் சடலம் கிடந்ததை கண்டு அலறியுள்ளார். மாரியப்பன் தன்னை சந்தேகத்தின் அடிப்படையில் அடிக்கடி துன்புறுத்தியதாக கன்னியம்மாள் தனது மூத்த மகன் கணேசனிடம் ஏற்கனவே கூறியுள்ளார்.
தடயவியல் பரிசோதனையில் கன்னியம்மாளின் உடல் அருகே ரத்தத்தில் காணப்பட்ட கால்தடங்கள் மாரியப்பனுடையது என கண்டறியப்பட்டது. இது வழக்கில் முக்கிய ஆதாரமாக அமைந்தது.
நேரில் கண்ட சாட்சிகள் இல்லாத நிலையில், வழக்குத் தரப்பு சூழ்நிலை ஆதாரங்கள் மற்றும் அறிவியல் ஆதாரங்களை நம்பியிருந்தது. அரசுத் தரப்பு 27 சாட்சிகளை விசாரித்தது. அரசுத் தரப்பு 41 ஆவணங்களையும் 25 ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்த வழக்கின் விசாரணை 24 நாட்களில் நிறைவடைந்தது. கன்னியம்மாளை சந்தேகத்தின் காரணமாக கணவர் மாரியப்பன் கொன்றது நிரூபணமான நிலையில், மாரியப்பனுக்கு (45) ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
2009ம் ஆண்டிலிருந்து எமது பிள்ளைகளை தேடுகின்றோம் நீதி கிடைக்குமா? கண்ணீர் மல்கும் பெற்றோர்
யாழ்.உரும்பிராயில் தனிமையில் வாழ்ந்த ஓய்வுநிலை ஆசிரியை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியையின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் வீட்டினுள் சென்று பார்த்தபோதே குறித்த ஆசிரியை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
அதோடு அவரது கழுத்து வெட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் , திருட்டு நோக்கத்திற்காக ஆசிரியை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சவுதியில் இருந்து வந்த விமானத்தில் அறிமுகமான பெண்ணொருவர் தனது இரண்டு வயதான மகனை பார்த்துக்கொள்ளுமாறு கூறி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று களுத்துறையில் நடந்துள்ளது.
இது தொடர்பாக களுத்துறை தெற்கு போதியவத்தை பிரதேசத்தை சேர்ந்த எஸ்.சாந்த அப்புஹாமி என்பவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சுமார் 11 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் தொழில் புரிந்து விட்டு, விமானத்தில் நாடு திரும்பிக்கொண்டிருந்த போது. 2 வயது ஆண் குழந்தையுடன் வந்த பெண்ணொருவர் விமானத்தில் அறிமுகமாகியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து களுத்துறை செல்ல வேண்டும் எனக் கூறியதால், தான் குழந்தை மற்றும் பெண்ணை வாடகை வாகனத்தில் களுத்துறைக்கு அழைத்து வந்ததாக முறைப்பாடு செய்துள்ள நபர் கூறியுள்ளார்.
களுத்துறை நகருக்கு வந்த போது, குளிர்பானம் ஒன்றை வாங்கி வருவதாக கூறி, குழந்தையை தன்னிடம் கொடுத்து விட்டு, வாகனத்தில் இருந்து இறங்கி சென்ற பெண் மீண்டும் திரும்பி வரவில்லை என முறைப்பாடு செய்த நபர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணிகத்தின் பொலிஸ் பரிசோகர் நுவந்தி தலைமையிலான அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பொன்னாலை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் – காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கணவருடன் சென்ற குறித்த கர்ப்பிணிப் பெண் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்துள்ளார்.
காரைநகர் பாலத்தடியில் அவர்கள் பயணிக்கும் போது கர்ப்பிணிப் பெண் திடீரென தவறி விழுந்து தரையில் தலை அடிபட்டு உயிரிழந்துள்ளார். காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஜெயந்தன் வேதப்பிரியா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் சென்னை 28 படத்தில் சிறு கதாபாத்திரட்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகி சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை விஜயலட்சுமி. அஞ்சாதே, சரோஜா, பிரியாணி, சென்னை 28-2, கசட தபற போன்ற படங்களிலும் நடித்தார்.
நாயகி சீரியலில் லீட் ரோலில் நடித்து பிரபலமான விஜயலட்சுமி, சில வருடங்களுக்கு முன் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜயலட்சுமி மூன்றாம் இடத்தினை பிடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
இதன்பின் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடினமாக போராடி டைட்டிலை தட்டிச்சென்றார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விஜயலட்சுமி தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை பற்றி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
கராத்தே கற்றுக்கொண்டிருந்த போது அந்த ஆசிரியர் உடல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார் விஜயலட்சுமி.
ஒருசில நடிகைகள் வாய்ப்பிற்காக இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் பேரம் பேசுவதால் அனைத்து நடிகைகளையிடமும் அதை எதிர்ப்பார்க்கிறார்கள் என்றும் விருப்பம் இல்லாத நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமான சூழ்நிலை அமைப்பது நன்றாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
அவ்வப்போது, இணையத்தில் மிகவும் வியக்கத்தக்க வகையிலான செய்திகள் அல்லது நிகழ்வுகள் வெளியாகி, பலரையும் ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் உறைய வைக்கும்.
அந்த வகையில், US நாட்டைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் தொடர்பான செய்தி, தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. MUS பகுதியை அடுத்த வர்ஜீனியாவை சேர்ந்தவர்கள் Briana மற்றும் Brittnay Deane.
இரட்டை சகோதரிகளான பிரியானா மற்றும் பிரிட்னே ஆகியோர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதிகம் வைரலாகி இருந்தார்கள். இதற்கு காரணம், சிறு வயதில் இருந்தே ஒன்றாகவே இருக்கும் இரட்டை சகோதரிகளான அவர்கள் இருவரும், இரட்டை சகோதரர்களை திருமணம் செய்ய வேண்டும் என எடுத்த முடிவு தான்.
அதன்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு, ஜோஷ் மற்றும் ஜெரேமி ஆகிய இரட்டையர்களை அவர்கள் திருமணம் செய்த பிறகு, இவர்களுக்கு பிறந்துள்ள குழந்தை தொடர்பான செய்தி தான், பலரை வியப்பிலும், அதே வேளையில் மற்ற சிலரை குழப்பத்திலும் ஆழ்த்தி உள்ளது.
பொதுவாக, ஒரே தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளை தான், உடன் பிறந்தவர்கள் என கூறுவார்கள். ஆனால், அடுத்தடுத்து கர்ப்பம் தரித்த பிரியானா மற்றும் பிரிட்னே ஆகியோர், மூன்று மாத இடைவெளியில் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
இதில், பிரியானா – ஜெரேமி தம்பதியரின் குழந்தையான ஜாக்ஸ், கடந்த ஜனவரி மாதம் ஒரு வயது பிறந்தநாளை கொண்டாடி இருந்த நிலையில், பிரிட்னே – ஜோஷ் தம்பதியரின் குழந்தையான ஜெட், கடந்த ஏப்ரல் மாதம் ஒரு வயதை பூர்த்தி செய்திருந்தது.
வேறு வேறு தாயின் வயிற்றில் பிறந்ததால், உறவு முறையில் தான் சகோதரர்கள் என குழந்தைகளான ஜாக்ஸ் மற்றும் ஜெட் அறியப்பட்டாலும், அவர்கள் மரபியல் ரீதியாக உடன்பிறந்த சகோதரர்கள் தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த அரிய நிகழ்வின் பெயர், “Quaternary Twins” ஆகும்.
அதாவது, இரட்டை சகோதரிகள், இரட்டை சகோதரர்களை மணந்து, அவர்கள் இருவருக்கும் 9 மாத இடைவெளிக்குள் அடுத்தடுத்து குழந்தை பிறந்தால், அவர்கள் “Quaternary Twins” என அழைக்கப்படுவார்கள். இதற்கு காரணம், இரட்டையர்களாக பெற்றோர்களிடம் இருந்து வரும் DNA என்பது இரண்டு குழந்தைகளுக்கும் பொதுவாக இருக்கும் என்பது தான்.
இதனால், அவர்களின் குழந்தைகள் மூன்று மாத இடைவெளியில் பிறந்ததால், உடன்பிறந்த சகோதரர்களாக தான் அறியப்படுவார்கள். தற்போது வரை, உலகில் சுமார் 300 Quaternary குடும்பங்கள் தான் இருக்கின்றனர். இரட்டையர் தம்பதிகள் ஒரே வீட்டில் தங்களின் குழந்தையுடன் வாழ்ந்து வரும் நிலையில், இரண்டு குழந்தைகளை அவர்கள் அனைவரும் தங்களின் குழந்தைகள் போல தான் பார்த்துக் கொள்கிறார்கள்.
வாட்சப்பில் புது எண்ணிலிருந்து வந்த Link-ஐ கிளிக் செய்ததால், ஒரு பெண்ணின் வங்கியில் இருந்து 21 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவீன உலகில் அனைத்தும் நவீனமயக்கப்பட்டதால் எந்த அளவு நல்லது இருக்கிறதோ, அதே அளவு கேட்டதும் இருக்கிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், லிங்க் அனுப்பி அதன் மூலம் மொபைல் வங்கி கணக்கு என அனைத்தும் ஹேக் செய்கின்றனர் ஹேக்கர்கள். அதே போன்றொரு சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா என்ற பகுதியை அடுத்து மதனப்பள்ளி என்ற நகரத்தை சேர்ந்தவர் வரலக்ஷி (Varalakshi). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர் தனது குடும்பத்துடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று வரலக்ஷிக்கு வாட்சப்பில் ஒரு புது எண்ணிலிருந்து Link ஒன்று வந்துள்ளது. மேலும் அதனுடன் அதனை கிளிக் செய்யுமாறு செய்தியும் வந்துள்ளது. இதனால், அவரும் அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். அவர் அதனை க்ளிக் செய்த பிறகு, சில மணித்துளிகளிலே அவரது மோபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அதில் அவரது வங்கியிலிருந்த 21 லட்ச ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இதை கண்டதும் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல்துறையில் இது குறித்து புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரித்த அதிகாரிகள், அந்த link ஒரு scam என்பதை கண்டறிந்தனர். மேலும் அவரது வங்கிக் கணக்கும் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், ஹேக் செய்த நபரை தேடி வருகின்றனர். அதோடு இது போன்று ஏதேனும் லிங்க் வந்து கிளிக் செய்ய சொன்னால் அதனை தெரியாமல் செய்து விட வேண்டாம் என்றும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.