கோதுமை மாவின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் : கோதுமை மாவிற்கு சந்தையில் தட்டுப்பாடு!!

கோதுமை மா…

சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் என்.கே. இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களும் சந்தைக்கு கோதுமை மாவை வெளியிடுவதை நிறுத்தியுள்ளதாக ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

தினசரி தேவைப்படும் கோதுமை மாவில் 25% மட்டுமே சந்தையில் வெளியிடப்படுவதாக என்.கே. ஜயவர்தன கூறுகிறார். “இன்று இலங்கையில் மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் மாவுத் தேவையை 2 நிறுவனங்கள் வழங்கின.

அந்த இரண்டு நிறுவனங்களும் கோதுமை தானியங்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டாலர்களைப் பெறுவதில்லை. எனவே அந்த இரண்டு நிறுவனங்களும் 25% விநியோகம் செய்கின்றன.

இலங்கையில் மொத்த மாவு தேவை 75% இந்தியாவில் இருந்து 75% மாவு தட்டுப்பாடு துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.தனியார் வியாபாரிகள் அதை இறக்குமதி செய்து தீர்த்து வைத்தனர்.

நேற்று இந்தியா ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.அதே நேரத்தில் தொழிலதிபர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாவு கொண்டு வந்த மாவு கிலோ 200 முதல் 210 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இன்று 350 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் அநியாயம். இது தொடர்ந்தால் கடைசியில் ஒரு ரொட்டியை பார்க்க முடியாது.

வரிசையில் நின்றாலும் ஒரு ரொட்டித் துண்டை வாங்க வேண்டியதில்லை. 250 முதல் 300 ரூபாய்க்கு ஒரு ரொட்டியை வாங்க வேண்டியிருக்கும்.”என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

ஏமாற்றிய பேஸ்புக் காதலன் : விரக்தியில் இளம்பெண் எடுத்த முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னையில்..

சென்னையில் பேஸ்புக் காதலன் திருமண ஆசை காட்டி ஏமாற்றியதால், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஜமீன் பல்லாவரத்தை அடுத்த பச்சையம்மன் நகரைச் சேர்ந்த கல்லூரி மனைவி கீர்த்திகா.இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பேஸ்புக் மூலமாக சுதீஷ் என்ற இளைஞருடன் அறிமுகமாகியுள்ளார்.

நட்பாக பழகி வந்த இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் திருமணம் செய்துகொள்வதாக கூறி சுதீஷ் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கீர்த்திகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கீர்த்திகா தற்கொலை செய்து கொண்டதற்கான கடிதம் மற்றும் அவரது அண்ணனுக்கு அனுப்பிய ஆடியோ பதிவு ஆகியவற்றை கைப்பற்றிய பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த மாதம் முதல் யாழ்ப்பாணம் பலாலிக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் எயார் இந்தியா!!

பலாலி சர்வதேச விமான நிலையம்..

எயார் இந்தியா விமான சேவை அடுத்த மாதம் முதல் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளது.

எயார் இந்தியா விமான சேவை நிறுவனம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இரண்டு சேவைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க எண்ணியுள்ளது என இலங்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார்.

எயார் இந்தியா விமான சேவையின் குறித்த விமானத்தில் 75 முதல் 90 ஆசனங்கள் வரை இருக்கும். இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு அழைத்து வருவது இதன் நோக்கம் எனவும் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க இலங்கை அதிகாரிகள் உத்தேசித்திருந்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வந்த எயார்லைன்ஸ் எயார் விமானம் பலாலி விமான நிலையத்தில் முதலில் தரையிறங்கியது.இதனை அடுத்து சர்வதேச வர்த்தக விமான சேவைகளுக்கான விமான நிலையமாக பலாலி விமான நிலையம் திறக்கப்பட்டது.

சற்று முன்னர் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!!

உயர்தர பரீட்சை பெறுபேறுகள்..

இவ் ஆண்டு (2022 பெப்ரவரி) நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் சற்று முன்னர் பரீட்சை திணைக்களத்தால் வெளியிட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த பரீட்சை முடிவுகளுக்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/examresults என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்துக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் காதலனுக்காக தன்னுயிரை தியாகம் செய்த காதலி!!

தென்னிலங்கையில்..

தென்னிலங்கையில் காதலின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டமை அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நில்வள கங்கையின் கிளை ஆறான கிரமாரா ஓயாவில் குதித்து 19 வயதான யுவதி தன் உயிரை மாய்த்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் மாத்தறை, பிடபெத்தர பகுதியில் நில்வள கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் காதலியே இவ்வாறு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

நேற்று காலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தறை, பிடபெத்தர, நில்வள கங்கையில் நீராடச் சென்று,

காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும், உயிரை மாய்த்த யுவதியின் காதலனை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

தாயை கொலை செய்ய கூகிளில் ஐடியா தேடிய மகள்.. குற்றவாளியின் வாக்குமூலம் கேட்டு அதிர்ந்த போலிஸ்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள் உள்ளனர். இதில் மூத்த மகள் இந்துலேகாவுக்கு திருமணம் ஆகி அவரது கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இதனால் இந்துலேகா தனது பெற்றோருடனே வசித்து வருகிறார்.

இந்நிலையில் ருக்குமணிக்கு திடீரென மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்தபோது உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்ததுள்ளது.

இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மகள் இந்துலேகா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அவர் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

பின்னர் போலிஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்துலேகாவுக்கு ரூ.8 லட்சம் வரை கடன் இருந்துள்ளது. இதனால் வீட்டை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கும் படி தாயாரிடம் இந்துலேகா வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால் அவரது தாய் நான் இறந்து பிறகுதான் சொத்து பிரிக்கப்படும் என கூறியுள்ளார். இதனால் இந்துலேகா தாயைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக யாருக்கும் சந்தேகம் வராதபடி எப்படி கொலை செய்வது என்பது குறித்து google-ல் ஐடியா தேடியுள்ளார்.

பின்னர் டீ-யில் விஷம் கலந்து தாயக்கு கொடுத்துள்ளார். மேலும் அவரது உணவிலும் மாத்திரைகள் கலந்து கொடுத்துள்ளார். இதைச் சாப்பிட்ட அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில்தான் மருத்துவரின் பரிசோதனையில்தான் அவரது உடலில் விஷம் கலந்தது தெரியவரவே இந்துலேகா போலிஸாரிடம் சிக்கியுள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாட்ஸப்பில் மனைவி அனுப்பிய புகைப்படம் : திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கணவன்!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல்லில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மனைவி மீது முதல் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வட மதுரை அருகே உள்ள எட்டிக்குளத்துபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த்.

இவருக்கு வீரழகு என்ற பெண்ணுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்குக் குழந்தைகள் இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து வீரழகு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் கணவன் ஆனந்தின் செல்போன் வாட்ஸ் ஆப்பிற்கு மனைவி வீரழகு ஒரு புகைப்படம் அனுப்பியுள்ளார்.

இந்த படத்தில் வீரழகு வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்.

தன்னை இனிமேல் தேடி வர வேண்டாம் என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து ஆனந்தன் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் மனைவியை மீட்டுத்தரும்படி ஆனந்த் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மனைவி மீது முதல் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“இரண்டாவது திருமணம் செய்துவிட்டேன்”… வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவி கணவனுக்கு கொடுத்த அதிர்ச்சி!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல்லில் வீட்டை விட்டு வெளியேறிய மனைவி வேறொரு ஆணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கணவனுக்கு தகவல் அளித்த சம்பவம் உறவினர்களை பேரதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

வடமதுரை அருகே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக மனைவி அனுப்பிய புகைப்படத்தால் அதிர்ச்சி அடைந்த முதல் கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே எட்டி குளத்து பட்டியை சேர்ந்தவர் ஆனந்த்.

இவருக்கும் மோளப்பாடியூரை சேர்ந்த வீரழகு என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வீரழகு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற வீரழகு அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், ஆனந்தின் செல்போன் வாட்ஸ்ஆப்பில் தனது மனைவி வேறு ஆணுடன் திருமணம் செய்து கொண்டதாக புகைபடம் வந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பணி முடித்து வீட்டுக்கு வந்து பார்த்ததில் மணைவியை காணவில்லை.

இதை தொடர்ந்து தன் மனைவியை மீட்டு தரக்கோரி வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அழித்தார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள். சண்டை போட்டுகொண்டு வெளியேறிய மனைவி வேறொரு ஆணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கணவனுக்கு தகவல் அளித்த சம்பவம் உறவினர்களை பேரதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

37 வயது காதலனுக்காக பல ஆண்டுகள் காத்திருந்து அவரை மணந்த 70 வயதுப் பெண் : பின்னர் நடந்த சுவாரஸ்யம்!!

பாகிஸ்தானில்..

பாகிஸ்தானில் 70 வயதான பெண் 37 வயதான நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன்மூலம் காதலுக்கு வயது தடையாக இருக்காது என்பதை இந்த தம்பதி நிரூபித்துள்ளனர். இப்திகர் என்ற ஆணுக்கு 37 வயதாகிறது. கிஷ்வர் பிபி என்ற பெண்ணிற்கு 70 வயதாகிறது.

இருவருக்கும் 33 வயது வித்தியாசம் உள்ள நிலையில் பல காலங்களாக காதலித்தனர். வயது வித்தியாசம் காரணமாக தங்கள் திருமணத்திற்கு குடும்பத்தாரை வற்புறுத்த முடியவில்லை. இந்த சூழலில் தங்களது சிறுவயது ஆசையை நிறைவேற்றி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இப்திகருக்கு ஏற்கனவே திருமணமாகி 6 குழந்தைகள் உள்ள நிலையிலும் கிஷ்வரை மறக்க முடியாமல் இருந்தார், தொடர்ந்து இருவரும் சந்தித்து வந்தனர். அதே நேரத்தில் கிஷ்வர் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இப்திகருக்காகவே காத்திருக்கிறார்.

தற்போது இருவருக்கும் திருமணம் நடந்துள்ள நிலையில் கணவருடன் கராச்சிக்கு தேனிலவு செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் வந்தாலும், பலரும் விமர்சனமும் செய்துள்ளனர்.

உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த இலங்கைத் தமிழர் : உடலை இடம்மாற்றி வைத்து குழப்பியதால் பரபரப்பு!!

நாகியம்பட்டியில்..

சேலம் தம்மம்பட்டி போக்குவரத்து பணிமனை எதிரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புளியமரம் இருந்தது. சாலையை அகலப்படுத்துவதாக கூறி அந்த மரத்தை வெட்டி அகற்றும் பணி நடந்தது.

நாகியம்பட்டி இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த தொழிலாளி உத்தமசீலன் (40) என்பவர் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உத்தமசீலன் மீது மரம் விழுந்தது. இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் மரத்தை அகற்றி, அவரது உடலை மீட்டு, அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் போக்குவரத்து பணிமனை செல்லும் பாதையில் வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த பொலிசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மரத்தை வெட்டி அகற்ற உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அனுமதி பெறாமல் மரத்தை வெட்டியதால், அதை மறைப்பதற்காக இறந்த உத்தமசீலனின் உடலை இடமாற்றி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதை அறிந்த இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த ஏராளமானவர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் பொலிசாரிடம், மரம் விழுந்ததால் இறந்தவரின் உடலை ஏன் இடமாற்றி வைத்தனர்?.

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து ஆத்தூர் உதவி ஆட்சியர் சரண்யா உத்தரவின் பேரில் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவியால் துன்புறுத்தல் பொறுக்க முடியாமல் மரத்தில் குடியேறிய கணவன்!!

மரத்தில்..

குடும்பச் சண்டையின் போது மனைவி அடிப்பதைத் தாங்க முடியாமல் கணவர் மரத்தில் ஏறி அமர்ந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. மனைவியுடனான சண்டைக்கு பின்னர் ராம் பிரவேஷ் என்பவர் அங்குள்ள மரத்தில் ஏறி தப்பி பிழைத்துள்ளார்.

80 அடி உயரமுள்ள மரத்தில் இப்போது அவர் ஏறி அமர்ந்துள்ளார். இதனை அடுத்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர். ராமின் மீதுள்ள அன்பினால் அல்ல.

மறுபுறம், அவர், 80 அடி உயரத்தில் இருந்தால், அவர் அருகில் உள்ள அனைத்தையும் பார்க்க முடியும் என்றும், இது அண்டை வீட்டாரின் தனியுரிமையில் தலையிடுவதாகவும் அப்பகுதியினர் சுட்டிக்காட்டினர்.

ஏற்கனவே, அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள், ராம் தங்களை எட்டிப்பபார்ப்பதாக புகார்களை எழுப்பத் தொடங்கினர். ஆனால், ராம் மரத்தில் இருந்து கீழே இறங்காததால், அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர்.

ராமின் புதிய குடியிருப்பை வீடியோவில் பதிவு செய்துவிட்டு திரும்பியதைத் தவிர போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

ராமுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 6 மாதங்களாக சண்டை நடந்து வந்தது. மரத்தின் உச்சியில் இருப்பிடம் அமைத்து, அங்கு உணவு மற்றும் தண்ணீரை கயிறு கட்டி கொண்டு செல்வது வேடிக்கையாக அமைந்துள்ளது.

காவல் நிலையத்திற்கு வந்த டிக் டாக் காதலியை அடித்த காவலர் : ஆடையைக் கழற்ற முயன்றதால் பரபரப்பு!!

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் தன்னைத் தேடி வந்த டிக்டாக் காதலியை அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் சோமசுந்தரம், இவர் டிக் டாக் போன்ற ஆப் களில் அடிக்கடி காணொளி பதிவேற்றி வந்துள்ளார்.

அதில் பிரபல டிக் டாக் பிரியாவுடன் இவருக்கு நட்பு ஏற்பட்ட நிலையில், அவருடன் சேர்ந்து பல காணொளிகளை வெளியிட்டதுடன், அவருடன் நெருங்கியும் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் சோமசுந்தரத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி கிடைத்துள்ள நிலையில், பிரியாவை விட்டு ஒதுங்க ஆரம்பித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பிரியாவின் தம்பியை பொய் வழக்கில் கைது செய்துள்ளார்.

இதற்கு நியாயம் கேட்க வந்த பிரியாவை சரமாரியாக தாக்கிய நிலையில் அவரது மொபைல் போனையும் பறித்து வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் மொபைல் போனை தரவில்லை என்றால் காவல்நிலையத்தின் முன்னே ஆடையில்லாமல் நிற்பேன் என்று கூறி ஆடையைக் கழற்ற முயன்றுள்ளார்.

உடனே பதறிப்போன சோமசுந்தரம் போனை குறித்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.அதுமட்டுமின்றி பிரியாவை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனரையும் தாக்கியதோடு, ஆட்டோவில் இருந்த ஒரு வயதான முதியவரையும் தாக்க முயன்றுள்ளார்.

குறித்த வயதான முதியவர் சோமசுந்தரத்தைப் பார்த்து நான் எத்தனை தடவை உங்களுக்கு பெண்களை அனுப்பிவைத்திருக்கேன் என்று கூறியுள்ளார்.

மின்வெட்டு தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்!!

மின்வெட்டு..

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் திடீரென செயலிழந்த முதலாம் மின் பிறப்பாக்கி நேற்று இரவு முதல் இயங்கத் தொடங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. அதற்கமைய, தேசிய மின் கட்டமைப்புக்கு 300 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, அடுத்த வாரம் முதல் மின்வெட்டு நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் மின்வெட்டு நேரம் குறையும் சாத்தியம் உள்ளதாகவும் இலங்கை மின்சார சபை வட்டாரங்களின் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.

கடந்த 15ஆம் திகதி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் பிறப்பாக்கி திடீரென செயலிழந்தது. இதை அடுத்து, அதற்கு முன்னர் வரை 1 மணிநேரமாகக் காணப்பட்ட நாளாந்த மின்வெட்டு 3 மணிநேரமாக அதிகரிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பட்டினிச் சாவில் இருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள இந்தியா வந்தோம் : மேலும் 8 அகதிகள் இந்தியாவில் தஞ்சம்!!

இந்தியாவில் தஞ்சம்..

சட்டவிரோதமாக படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 8 பேர் மரைன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் மணல் திட்டில் உணவின்றி தவித்து வருவதாக கடற்றொழிலாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இன்று (27.08.2022) காலை மரைன் பொலிஸார் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர்களை மீட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று (26.08) இரவு ஒரு பைபர் படகில் புறப்பட்டு இன்று (27.08) அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி ஒன்றாம் மணல் திட்டில் இறங்கியதாக தெரியவந்துள்ளது.

அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்களிடம் மண்டபம் மரைன் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதுடன், விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெயந்தி மற்றும் அவரது மூன்று குழந்தைகள், தலைமன்னாரை நேர்ந்த சசிகுமார் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் மன்னாரை சேர்ந்த 65 வயது மூதாட்டி இந்துமதி என மொத்தமாக 8 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர் என தெரியவருகின்றது.

”இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை அதிகரித்துள்ளது.

விலைவாசி ஒரு பக்கம் உயர்வு, மறுபக்கம் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது, அரசாங்க மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளது.

எனவே பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள இலங்கை பணம் 4 லட்சம் ரூபாய் கொடுத்து பைபர் படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து தமிழக முகாம்களில் தங்கியுள்ள தங்களது உறவினர்களுடன் சேர்ந்து வாழலாம்” என தனுஷ்கோடி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

“தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், அதிகாலை முதல் உணவின்றி கடும் சூறைக்காற்றுக்கு மத்தியில் உயிரை பாதுகாத்து கொண்டு தாங்கள் அணிந்திருந்த ஆடைகளை காட்டி அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த கடற்றொழிலாளர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரிய நிலையில் மரைன் பொலிஸார் பத்திரமாக உரிய நேரத்தில் மீட்டனர்.

கால தாமதமாகி இருந்தால் நிச்சயம் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்“ என பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அகதியாக வந்த இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 157 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லுக்கு நடந்தது என்ன?

மாணிக்கக் கல்..

‘ஆசியாவின் ராணி’ என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை மாணிக்கக் கல் இலங்கையின் ஹொரணை, தல்கஹவில பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கல்லின் எடை 310 கிலோ கிராம். உலகில் மிகப் பெரிய மாணிக்கக் கல்லானது இது Blue Sapphire ரகத்தை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பான மதிப்பீடுகளின் பின்னர் மாணிக்கக் கல் ஏலத்திற்கு விடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மாணிக்கக்கல் 6 மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை என இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மாணிக்கத்தின் பெறுமதி 2,000 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 310 கிலோ கிராம் எடையுள்ள இந்த மாணிக்கக்கல் வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லும் போது பெற வேண்டிய 25% வைப்புத் தொகையின்றி எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இரத்தினத்தை ஆய்வுக்கு எடுத்துச் செல்ல தேவையான ஆயிரம் ரூபா மட்டுமே அதிகாரியிடம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கில் உயிரோடு எழுந்து வந்த சிறுமி.. உறவினர்களுக்கு இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!

மெக்சிகோவில்..

மெக்சிகோவில் உள்ள சான் லூயிஸ் போடோசி மாகாணத்தில் உள்ள சலினாஸ் டி ஹில்டால்கோ என்ற மருத்துவமனையில் தான், இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. 3 வயது சிறுமி காமிலா ரோக்சானா மார்டினேஸ்.

இந்த சிறுமி கடந்த சில நாள்களுக்கு முன்னர் வயிற்று கோளாறு காரணமாக அவதிப்பட்டுள்ளார். வயிற்று வலி மற்றும் காய்ச்சலுடன் தொடர் வாந்தி அவருக்கு ஏற்பட்டுள்ளது.

தனது சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு டிஹைட்ரேஷன் ஏற்பட்டதாகக் கூறி மருத்துவர்கள் மாத்திரைகள் தந்துள்ளனர். பிறகு வீட்டிற்கு கூட்டி செல்லப்பட்டார் அந்த சிறுமி.

பிறகு மீண்டும் சிறுமியின் உடல்நிலை மோசமாக, அதே மருத்துவமனைக்கு பெற்றோர்கள் குழந்தையை தூக்கி கொண்டு சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்களோ, சிறுமி இறந்துவிட்டால் என்று கூறியுள்ளனர்.

பிறகு சிறுமி காமிலாவின் இறுதி சடங்கு அடுத்த நாள், அவரது குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது தான் அந்த அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றது.

சடங்கு நடத்திய போது, குழந்தையின் கண்களில் அசைகள் தென்பட்டது. இதனை அவரது பாட்டி கண்டுபிடித்தார். பிறகு உடனே சவப்பெட்டியை திறந்து பரிசோதித்து பார்த்ததில் காமிலாவுக்கு நாடித்துடிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிறகு குழந்தையை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டது என்று கூறினார். குழந்தை ஒன்று இரண்டாவது முறையாக இறந்த சம்பவம் விநோதத்தை மட்டுமல்லாமல், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக ஒருபக்கம் வழக்கு விசாரணையும், மற்றொரு பக்கம் பிரேத பரிசோதனையும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.