4 வயது குழந்தையின் காலை தீவைத்து எரித்த கொடூரம்.. தாய் மற்றும் அவரின் காதலன் அதிரடியாக கைது!!

பாலக்காட்டில்..

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒசத்தியூரைச் சேர்ந்தவர ரெஞ்சிதா, இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் கணவரை விட்டு பிரிந்து , கூலிக்கடவு மார்க்கெட் ரோட்டில் தனது காதலர் உன்னிகிருஷ்ணனுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இவரது 4 வயது குழந்தையும் இவ்ர்களோடு ஒன்றாக இருந்துள்ளது.

இந்த நிலையில் இவரின் குழந்தை அங்கன்வாடிமையத்துக்கு செல்லாமல் விளையாடுவதில் ஆர்வம் காட்டியதால் ஆத்திரம் அடைந்த தாய் ரஞ்சிதா குழந்தையை அடித்துள்ளார். அதன் பின்னும் ஆத்திரம் அடங்காத அவர், குழந்தையின் காலை அடுப்பில் வைத்துள்ளார். மேலும் அவரை மின்சார வயரைப் பயன்படுத்தியும் அடித்துளார்.

இதில் குழந்தையின் கால் கடுமையாக சேதமடைந்த நிலையில், பழங்குடியினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் தாக்குதலின் தீவிரத்தால் அவரது கால் பகுதியின் சதை உதிர்ந்து விட்டது என்று கூறியுள்ளனர்.

இந்த தகவலை அறிந்த அந்த பெண்ணின் கணவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் தாய் ரெஞ்சிதாவையும் அவரின் காதலர் உன்னிகிருஷ்ணனையும் கைது செய்தனர்.

பின்னர் குழந்தையிடம் போலிஸார் பேசியபோது உன்னிகிருஷ்ணன் தன்னை அடிக்கடி தாக்கியதாக அது கூறியுள்ளது. இந்த சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிந்து சென்ற மனைவி திரும்பி வர மறுத்ததால் கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

தமிழகம்..

வாலாஜாப்பேட்டை அடுத்த தேவதானம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துவின் மகள் நதியா(30). காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா ஆவதம்பாக்கம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சபாபதி என்பவருடன் திருமணமாகி 11 வருடங்கள் ஆகின்றன.

இவர்களுக்கு 5 ம் வகுப்பு பயிலும் ஹேமலதா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த மனைவி நதியா வாலாஜாப்பேட்டை அடுத்த தேவதானம் பகுதியிலுள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு சபாபதி, தனது மனைவியை மீண்டும் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் இதற்கு அவர் மறுப்பு கூறியதால் ஆத்திரமடைந்த சபாபதி அவரது மனைவியின் கண் முன்னே திடீரென அவர் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை கொண்டு தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நதியாவின் குடும்பத்தினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார், 108 ஆம்புலன்ஸ் உதவியோடு சபாபதியை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வாலாஜாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் வீட்டுக்கு வருமாறு அழைத்து வர மறுத்ததால் கணவன், மனைவி கண் முன்னே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கைத்தொலைபேசியை படுக்கைக்கு அருகில் வைத்துக் கொள்வதால் என்ன நடக்கும் தெரியுமா?

கைத்தொலைபேசி..

தூங்கும் போது படுக்கைக்கு அருகே செல்போனை வைத்து கொண்டால் பல தீமைகள் ஏற்படும். செல்போன் உங்கள் உடலை விட்டு தள்ளியிருக்கும் சிறிய தூரம் கூட பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.

எந்நேரமும் ஸ்மார்ட்போன் கையுமாக இருக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இரவில் தூங்குவதற்கு முன்னர் செல்போனை பார்த்துவிட்டு படுக்கைக்கு அருகிலேயே அதை வைத்துவிட்டு தான் பெரும்பாலானோர் தூங்குவார்கள்.

செல்போனை படுக்கைக்கு அருகில் வைத்துக்கொண்டே தூங்குவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் செல்போன் உங்கள் உடலை விட்டு தள்ளியிருக்கும் சிறிய தூரம் கூட பெரிய மாற்றத்தை உண்டாக்கும். முடிந்தளவு ப்ளூடூத் ஹெஸ்ட்டை பயன்படுத்தவும்.

ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது போனை விட்டு தள்ளியே இருங்கள். செல்போனை எப்பொழுதும் கைப்பை அல்லது தோள்பைகளில் வைக்க பழகுங்கள். பேண்ட் பாக்கெட்டுகளிலோ, உள்ளாடைகளிலோ வைப்பதை தவிர்க்கவும்.

இரவு தூங்கும்போது படுக்கைக்கு அருகிலோ அல்லது தலையணைக்கு அடியிலோ செல்போனை வைத்து தூங்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அந்த சமயங்களில் ஏற்படும் கதிரியக்கம் உங்கள் மூலையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் மூளையில் கட்டி ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ஆண்கள் தங்கள் பேண்ட் பாக்கெட்களிலும், பெண்கள் மார்புக்கு அருகிலும் செல்போனை வைக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒரு பழக்கமாகும். செல்போனால் ஏற்படும் கதிரியக்கங்கள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இடங்களில் செல்போனை வைப்பது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவும், பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

இரவில் உறங்கும் முன் முழு இருளில் செல்போன் பார்ப்பதால் அதில் இருந்து வரக்கூடிய வெளிச்சம் நம் கண்களில் இருக்கக்கூடிய நுண்ணிய நரம்புகளை தளர்வடைய செய்து பாதிப்பை உண்டாக்கும்.

94 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக மேக்கப் இல்லாமல் இறுதிச் சுற்றுக்கு தகுதி : 20 வயதுப் பெண் படைத்த சாதனை!!

லண்டனில்..

2019ஆம் ஆண்டு அழகுப் போட்டியில் Bare Face சுற்றில் மெலிசா வெற்றி பெற்றவர் ஆவார். அக்டோபர் 17ஆம் திகதி நடக்கும் இறுதிச் சுற்றில் 40 போட்டியாளர்களுடன் மெலிசா போட்டியிட உள்ளார்.

லண்டனைச் சேர்ந்த இளம்பெண் ஒப்பனை செய்து கொள்ளாமல் அழகிப் போட்டியில் கலந்துகொண்ட முதல் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார். பிரித்தானியாவில் மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியில், லண்டனைச் சேர்ந்த மெலிசா ரவூப்(20) என்ற பெண் கலந்துகொண்டார்.

அவர் ஒப்பனை ஏதும் செய்யாமல் போட்டியில் கலந்துகொண்டு ராம்ப் வாக் செய்ததன் மூலம் வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார். 94 ஆண்டுகால அழகிப் போட்டி வரலாற்றில் ஒப்பனை இல்லாமல் கலந்துகொண்ட முதல் போட்டியாளர் மெலிசா தான்.

மெலிசா ரவூப் கூறும்போது, ‘அழுத்தத்தின் காரணமாக வெவ்வேறு வயதுடைய பல பெண்கள் ஒப்பனை செய்துகொள்வதாக நான் உணர்கிறேன். இது எனக்கு நிறைய அர்த்தத்தை கொடுத்துள்ளது.

மற்ற பெண்களும், இளம்பெண்களும் தங்கள் இயற்கை அழகைக் காட்ட ஊக்குவிக்க விரும்புகிறேன். ஒருவர் தங்கள் சொந்த தோலில் மகிழ்ச்சியாக இருந்தால், நம் முகத்தை ஒப்பனையால் மறைக்கக் கூடாது. நமது குறைபாடுகள் நம்மை யார் என்று காட்டும், மேலும் அது நம் ஒவ்வொருவரையும் தனித்துவமாக்கும்’ என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போட்டி அமைப்பாளர் ஆங்கி பீஸ்லே கூறுகையில், ‘மிஸ் இங்கிலாந்து போட்டியில் கலந்துகொண்டதற்கு அவருக்கு வாழ்த்துக்கள். எல்லோரும் ஒப்பனை செய்திருக்கும்போது, இது மிகவும் துணிச்சலான விடயம். ஆனால் அவர் இளம் பெண்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை கூறியிருக்கிறார்.

ஒரு போட்டியாளர் முற்றிலும் ஒப்பனை இல்லாமல் அரையிறுதியில் போட்டியிடுவதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. மற்ற போட்டியாளர்களுக்கு எதிராக தான் அதிகாரம் பெற்றதாக உணர்ந்ததாக அவர் கூறினார்’ என தெரிவித்துள்ளார்.

புகையிரதத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்.. ஓடி வந்த ரயில்வே காவலர்.. பதறிய பயணிகள்!!

மும்பையில்..

மும்பையில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்த முயன்ற பெண்ணை ரயில் ஓட்டுநர் மற்றும் காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளனர். மும்பையின் பரபரப்பான ரயில் நிலையங்களும் ஒன்று பைகுல்லாவில் ரயில் நிலையம்.

இந்த ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அங்கு பயணிகள் புறநகர் ரயிலுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது அந்த ரயில் நிலையத்தை நோக்கி ஒரு ரயில் வந்துகொண்டிருந்துள்ளது.

அப்போது திடீர் என ஒரு பெண் தண்டவாளத்தில் இறங்கி வந்துகொண்டிருந்த ரயிலை நோக்கி வேகமாக சென்றுள்ளார். அவர் தற்கொலை செய்துகொள்ள செல்கிறார் என்பதை அறிந்த பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்துமாறு சைகை செய்ததோடு, கூச்சல் போட்டுள்ளனர்.

ஒரு பெண் ரயிலை நோக்கி வருவதையும், பயணிகள் சைகை காட்டுவதையும் பார்த்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலின் வேகத்தை குறைந்து அதை நிறுத்தியுள்ளார். அதே தருணத்தில் அங்கு விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலரும் தாண்டவாளத்தில் இருந்து அந்த பெண்ணை வெளியே தள்ளி அவரை காப்பாற்றினார்.

இந்த சம்பவத்தால் அந்த ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் யார் என்பது குறித்த தகவலை ரயில்வே காவல்துறை வெளியிடவில்லை.

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் வீட்டில் சடலமாக மீட்பு : சிக்கிய உருக்கமான கடிதம்!!

இந்தியாவில்..

ஹரியானாவின் ஹம்பாலாவை சேர்ந்தவர் சுக்விந்தர். காப்பீடு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சில தினங்களுக்கு முன்னர் சுக்விந்தர் தனது தந்தை சங்கட் ராம் (65), தாய் மஹிந்தர் கவுர் (62), மனைவி பீம்லா மற்றும் மகள்கள் ஜஸ்னூர் (7), அஸ்ரிட் (5) ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் அவர்கள் வீட்டிற்கு சென்ற போது சுக்விந்திர் தூக்கில் தொங்கிய நிலையிலும், மற்ற ஐவரும் படுக்கையிலும் சடலமாக கிடந்தனர். சுக்விந்தர் இறப்பதற்கு முன்னர் எழுதியிருந்த கடிதத்தில் பல்கிஷன் தாகூர் மற்றும் கவி நருலா ஆகிய இருவரும் என்னிடம் ரூ 10 லட்சம் கேட்டு தொந்தரவு செய்தனர், பணத்தை கொடுக்கவில்லை என்றால் குடும்பத்தை துன்புறுத்துவேன் என மிரட்டினார்கள் என எழுதியிருந்தார்.

இதையடுத்து பொலிசார் தற்போது தாகூரை கைது செய்துள்ள நிலையில் கவியை தேடி வருகின்றனர். இருவரும் சுக்விந்தரின் உயர் அதிகாரிகள் ஆவார்கள், கூப்பன் வாங்குவது தொடர்பில் அவர்களுக்கும் சுக்விந்தருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பொலிசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான முதல்நாள் அறையிலிருந்து அலறி ஓடிய மாப்பிள்ளை : உள்ளே சென்றதும் அதிர்ந்துபோன குடும்பத்தினர்!!

நாகப்பட்டினத்தில்..

நாகப்பட்டினம் மாவட்டம் தொழுதூரை சேர்ந்தவர் ராஜ்குமார்(37). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த நளினி என்ற பெண்ணுக்கும் கடந்த 27ஆம் திகதியில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, திருமணத்திற்கு பின் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முதலிரவில் இருக்கும் போது திடீரென மணப்பெண் அலறியுள்ளார். தொடர்ந்து அலறவே குடும்பத்தினர்கள் ரூமிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.

அப்போது, கதவை திறந்த மாப்பிள்ளை உடனே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஓடும்போதே அது பெண்ண அல்ல… திருநங்கை என சத்தமிட்டு கொண்டே சென்றுள்ளார். உடனே குடும்பத்தினர்கள் ரூமில் சென்று பார்க்கையில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் மணப்பெண் மயங்கி கிடந்துள்ளார்.

பின் உடனடியாக பதறிப்போய் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க, மனநலம் பாதித்தவர் போல நடந்து கொண்ட மாப்பிள்ளை ராஜ்குமாரை உடனே கைது செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தரப்பட்டது.

இதன்பின், போலீசாரிடம் சிக்கிய மாப்பிள்ளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவியாக இருந்தாலும் அவர் அனுமதியின்றி மிருகத்தனமாக, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ராஜ்குமார் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து இருதரப்பில் பல குற்றச்சாட்டுகள் எழ, மாப்பிள்ளையிடம் விசாரிக்கையில் அவர் இயற்கைக்கு மாறான உறவுக்கு மணப்பெண்ணை அழைத்துள்ளார்.

அவர் சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மாப்பிள்ளை மணப்பெண்ணை சரமாரியாக தாக்கி பல இடங்களில் மணப்பெண்னை கடித்து இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜ்குமாரும் ஜாமீனில் வெளிவந்து இருக்கிறார்.

அண்ணன் இறந்து 14 நாட்கள் : காட்டு யானை தாக்கி தங்கை மரணம்!!

கண்டி..

குடும்பத்தின் மூத்த மகன் திடீர் விபத்தொன்றில் உயிரிழந்து 14 நாட்கள் செல்லும் முன்னர் குடும்பத்தின் ஒரே பெண் பிள்ளை காட்டு யானை தாக்கி மரணமடைந்த சம்பவம் ஒன்று கண்டி மாவட்டம் ஹசலக யாய பஹா என்ற பிரதேசத்தில் நேற்று நடந்துள்ளது.

17 வயதான அனுத்தரா இந்துனில் என்ற யுவதியே காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த தனது ஒரே சகோதரனின் 14 வது நினைவு நாள் தானத்தை விகாரைக்கு கொண்டு செல்லும் வழியில் யுவதியின் வீட்டுக்கு எதிரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

யானை தாக்கிய பின்னர் யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக ஹசலக வைத்தியசாலையின் மருத்துவர்கள் கூறியுள்ளனர். யுவதியின் மரணம் தொடர்பில் அவரது உறவினரான பெண்ணொருவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

“அண்ணன் இறந்து 14 நாட்கள். 27 ஆம் திகதி இரவில் இருந்து காட்டு யானைகள் கிராமத்திற்குள் வந்திருந்தன. விடிய விடிய யானை வெடிகளை கொளுத்திய போதிலும் யானைகள் திரும்பிச் செல்லவில்லை.

நாங்கள் உறங்கவுமில்லை. வீட்டுக்கு எதிரிலேயே யானை தங்கையை தாக்கியது என்று அத்தை சத்தமிட்டார். எங்களால் வெளியிலும் வர முடியவில்லை. யானை விரட்டுவதே இதற்கு காரணம்.

யானை, யானை என்று மக்களுக்கு சத்தமிட மட்டுமே முடியும்” எனக் கூறியுள்ளார். தாயாருக்கு எதிரிலேயே யுவதியை யானை தாக்கியதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

யுவதியின் மரணம் காரணமாக தாய் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றார். இந்த அகால மரணத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் பொறுப்புக் கூற வேண்டும் என கிராமவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

புகையிரத நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த தாயிடம் இருந்து குழந்தையை திருடிய நபர் : வைரல் வீடியோ!!

உத்தர பிரதேசத்தில்..

ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த தாயிடம் இருந்து குழந்தையை ஒருவர் திருடிச்சென்றுள்ளார். அவர் மிகவும் சாதாரணமாக குழந்தையை தூக்கிக்கொண்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

உத்தர பிரதேசத்தில், மதுரா ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஏழு மாத குழந்தை, ஒருவரால் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த குற்றம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தின் காட்சிகளில், அந்த நபர் தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை கடந்து செல்வது போல் தெரிகிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் திரும்பி வந்து சர்வ சாதாரணமாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு செல்கிறார்.

பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயிலை நோக்கி அவர் ஓடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், குழந்தையை தேடும் பணியில் பொலிஸார் பல தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, மதுரா காவல்நிலையத்தில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, குழந்தையை மீட்க குழு அமைத்து அர்த்தமுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுரா பொலிஸார் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர், மேலும் அவரைப் பற்றிய தகவல்களைப் பகிருமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ரயில்வே பொலிஸ் குழுக்கள் மதுரா மட்டுமின்றி, உத்தரபிரதேசத்தின் அலிகார் மற்றும் ஹத்ராஸ் ஆகிய பகுதிகளிலும் குழந்தையை தேடி வருகின்றனர். ஆள் நடமாட்டம் இருக்கும் போதே குழந்தை கடத்தப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலால் பரீட்சை எழுதி 3A சித்தி : ஒட்டுமொத்த இலங்கையர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த மாணவி!!

ரஷ்மி..

எஹேலியகொட பிரதேசத்தில் கைகள் மற்றும் ஒரு காலின்றி பிறந்து தன் இடது காலை மட்டும் எழுதுவதற்காக பயன்படுத்திய மாணவி ஒருவர் உயர்தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார்.

எஹேலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்ற ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி உயர்தர வர்த்தக பிரிவில் 3 A சித்திகளை பெற்றுள்ளார்.

2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி பிறந்த ரஷ்மி, தெல்ஒழுவ பாடசாலையில் ஆரம்ப கல்வியை தொடர்ந்தார். 2012ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமை பரீசில் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் எஹேலியகொட தேசிய பாடசாலையில் மேலதிக கற்கை நடவடிக்கைகளை தொடர்ந்தார்.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தர பரீட்சையில் 8A சித்திகளையும் ஒரு B சித்தியும் பெற்றுள்ளார். தற்போது உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் 3A சித்திகளை பெற்றுள்ளார்.

அத்துடன் 2017ஆம் ஆண்டு வியட்நாமில் இடம்பெற்ற Global IT challenge 2017 Super challenger சர்வதேச போட்டியில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். வாழ்க்கையில் வெற்றி பெற குறைகள் தடையில்லை என ரஷ்மி நிரூபித்து காட்டியுள்ளார் என பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.

வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் வரலாற்று சாதனை படைத்த மாணவன் நந்தகுமார் விதுர்ஷன்!!

நந்தகுமார் விதுர்ஷன்..

வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலய மாணவன் நந்தகுமார் விதுர்ஷன் வரலாற்று சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

கரப்பைமடு எனும் கிராமத்தில் வசித்து வரும் நந்தகுமார் விதுர்ஷன் கிராமத்திலிருந்து நகரிலுள்ள செட்டிக்குளம் பாடசாலைக்கு சென்று கலைப்பிரிவில் மூன்று பாடங்களிலும் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 21வது இடத்தினை பெற்றுள்ளதுடன் அவரது கிராமத்திற்கும் பெறுமையினை தேடித்தந்துள்ளார்.

செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக உயர்தரப்பரீட்சையில் மூன்று பாடங்களிலும் 3A சித்திகளை பெற்ற முதல் மாணவர் இவரே ஆவார். இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த சகோதரிகள் : வணிகத்துறையில் முதலிடம்!!

புதுக்குளம் மகா வித்தியாலயத்தில்..

வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற சகோதரிகள் சிறந்த பெறுபேற்றினை பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளனர்.

அதன் அடிப்டையில் வணிகத்துறையில் மூன்று பாடங்களிலும் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் லுவின்சிகா மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் வணிகத்துறையில் 2ஏ 1பி சித்திகளை பெற்று லிவிங்சிகா மாவட்ட ரீதியில் 12வது இடத்தினை சகோதரிகள் பெற்றுள்ளனர்.

அத்துடன் கலைத்துறையில் 3 ஏ சித்திகளை பெற்று கிருசாந்தினி மாவட்ட ரீதியில் 20வது இடத்தினையும் பெற்றுள்ளதுடன் வணிகத்துறையில் நிதுசன் ஏ 2பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 26வது இடத்தினையும்  ரொசானி மேரி ஏ 2பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 27 வது இடத்தினையும்,

கலைத்துறையில் ஜெஸ்விகா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 29வது இடத்தினையும் , கஜாந்தினி ஏ2பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 55வது இடத்தினையும் , சிந்துஜன் ஏ2பி சித்திளை பெற்று மாவட்ட ரீதியில் 75வது இடத்தினையும்,

யசோதரன் ஏ 2பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 102வது இடத்தினையும் , சுவாத்திகா ஏ பி சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 111 வது இடத்தினை பெற்றுள்ளதுடன் ஏனைய மாணவர்கள் திறமை சித்திகளை பெற்றுள்ளனர்.

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம் மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற்வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்களின் விபரம் வெளியானது!!

உயர்தர பரீட்சை…

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய,மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் பதுளை, கெங்கொல்ல மகா வித்தியாலய மாணவன் இசார லக்மால் ஹீன்கெந்த கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், கம்பஹா ரத்னாவலி பாலிகா வித்தியாலய மாணவி இஷினி நேஹா அமரரத்ன ஆங்கில மொழியில் தேர்வெழுதி வர்த்தகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுடன்,உயிரியலில் பிரிவில் அமாஷா நிஷாமணி நாடளாவிய ரீதியில் பகுதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

கல்விப் பொதுச் சான்றிதழ் A தரம் 2121 பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 171497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் இந்த எண்ணிக்கை 62.9 வீதமாகும் என்றும் திணைக்களம் கூறுகிறது.

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 37 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 12 தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட 49 விண்ணப்பதாரர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழில் எவருடைய உதவிகளுமில்லாமல் கல்வியில் முதலிடம் பிடித்த மாணவி!!

செல்வி.கேசவன் உஷா..

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன, இம் முடிவுகளின் அடிப்படையில் யாழ் வேம்படி மகளீர் கல்லூரி மாணவியான உஷா கேசவன் கலைப்பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவருடைய தந்தையும், தாயும் போராட்டத்தில் இறுதிப்போர்க் களங்களில் போராடியதுடன் தந்தை வீரச்சாவடைந்த நிலையில் , அதே போர்க்களத்தில் போரிட்டுப் தாய் படுகாயமடைந்துள்ளார்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் எவருடைய உதவிகளுமில்லாமல் கல்வியில் முன்னுக்கு வந்த செல்வி.கேசவன் உஷாவிற்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.

மருத்துவ துறையில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த தமிழ் மாணவன்!!

தமிழ்வண்ணன் துவாரகேஸ்..

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்றையதினம் (28.08.2022) வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், மருத்துவபீடம்,

தமிழ் மொழி மூலத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகிறது. மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஸ் மாவட்ட மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வைத்தியர் தமிழ்வண்ணன் மற்றும் வைத்தியர் பகீரதி அவர்களின் மகனான துவாரகேஸ் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த சகோதரனுக்காக அன்னதானம் வழங்க சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

கண்டி..

கண்டி – ஹசலக்க, கங்கேயாய, பஹே எல பகுதியில் மாணவி ஒருவர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (28.08.2022) காலை இடம்பெற்றுள்ளது.

ஹசலக்க, கங்கேயாய, பஹே எல குதியைச் சேர்ந்த அனுத்தரா இந்துனில் என்ற 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 நாட்களுக்கு முன்பு இறந்த தனது சகோதரனுக்காக அன்னதானம் வழங்குவதற்காக தனது பெற்றோருடன் விகாரைக்கு சென்று கொண்டிருந்த போது இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.