திருமணம் செய்ய மறுத்த காதலன்… ஆத்திரத்தில் காதலி செய்த செயல்!!

மும்பையில்..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள பொவாய் என்ற பகுதியில் ஸொரா ஷா (வயது 32) என்ற இளம்பெண்ணும், ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் ரம்ஜான் ஷேக் என்ற நபரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் கடந்த ஓராண்டு காலமாக இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஸொரா ஷா, ஷேக்கிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி வந்துள்ளார். ஆனால் கொஞ்சம் நாட்கள் கழியட்டும் என்று கூறியுள்ளார். இப்படி பல மாதங்கள் செல்ல ஸொரா ஷா கேட்கும்போதெல்லாம் கால தாமதம் செய்து வந்துள்ளார் ஷேக்.

இதனால் பொறுமை இழந்த ஸொரா ஷா, தனது காதலன் மீது மோசடி புகார் கொடுக்கவுள்ளதாக மிரட்டி வந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் சண்டை ஏற்பட இதில் ஆத்திரமடைந்த ஸொரா ஷா, தனது காதலன் கழுத்தை தனது துப்பட்டாவால் இறுக்க நெரித்துள்ளார்.

இதில் மூச்சு திணறி ஷேக், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் அதிர்ச்சியடைந்த ஸொரா ஷா கதறி அழுதுள்ளார். பின்னர் அந்த பகுதியிலுள்ள காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர், ஷேக்கின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காவல்நிலையத்தில் சரணடைந்த காதலி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். தன்னை திருமணம் செய்துகொள்ள காதலன் தாமதாக்கியதால் ஆத்திரமடைந்த காதலி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூச்சலிட்டும் யாரும் வரவில்லை : நள்ளிரவில் கணவன் மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்!!

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், பாடூர் பள்ளி, அசோக் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணாராவ் (54). இவரது மனைவி சுனிதா (50). தம்பதிக்கு சாய் சந்த், கோபி சந்த் என 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களுக்கு திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். கிருஷ்ணா ராவ் மின்சார வாரிய அலுவலகம் அருகே ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் வழக்கம் போல் வியாபாரம் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கணவன், மனைவி இருவரும் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அறையில் இருந்த பீரோவை உடைத்தனர். கொள்ளையர்கள் பீரோவை உடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதி கத்தி கூச்சலிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கணவன், மனைவி இருவரையும் பிடித்து வாயில் துணியை அடைத்து சரமாரியாக தாக்கினார். பின்னர் கத்தியால் 2 பேரின் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்தனர்.

இதையடுத்து,கொள்ளையர்கள் பீரோவில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று காலை ரமணம்மா என்பவர் கிருஷ்ணா ராவ் வீட்டில் பால் ஊற்றுவதற்காக வந்தார்.

அப்போது கணவன், மனைவி இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாடூர் பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 2 பேரின் பிணைத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 3 பேர் முகத்தை துணியால் கட்டிக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

40 வருடங்களாக மழைநீர் மட்டுமே… நோய், நொடி இல்லாமல் வாழும் தம்பதி!!

வந்தவாசி..

வந்தவாசி அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதையான்(76). இவரது மனைவி ராணியம்மாள்(72). இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.

அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அதே கிராமத்தில் உள்ள தங்களது விவசாய நிலத்தில் கோதையான்-ராணியம்மாள் தம்பதியினர் வீடு கட்டி குடும்பத்துடன் அங்கு வசிக்க சென்றனர்.

அப்போதிலிருந்தே இவர்கள் குடிக்கவும், சமையல் செய்யவும் மழைநீரையே பயன்படுத்தி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, “நாங்கள் இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து கிணற்று நீரையோ, ஆழ்துளைக் குழாய் நீரையோ பயன்படுத்தியது இல்லை.

மழைநீரை மட்டுமே சேமித்து உபயோகிக்க தொடங்கினோம். மழை பெய்யும் போதெல்லாம் பேரல்கள், அண்டாக்கள், சிறுசிறு பாத்திரங்கள் என அனைத்திலும் மழைநீரை சேமித்து வைப்போம். மழை பெய்யத் தொடங்கியதும் வீட்டுக் கூரை மேல் உள்ள அழுக்கு அனைத்தும் சில நிமிடங்களில் போய்விடும்.

இதன் பின்னர் கூரையிலிருந்து வழியும் சுத்தமான நீரை பிடித்து சேமித்து வைத்துக் கொள்வோம். பின்னர் அந்த நீரை வடிகட்டி காய்ச்சி பயன்படுத்துவோம். மழைநீரை எவ்வளவு நாள் சேமித்து வைத்தாலும் அதில் புழு, பூச்சிகள் அண்டாது.

மழைநீரை மட்டுமே உபயோகிப்பதால் உடல்நல பாதிப்பு எதுவும் இல்லாமல், மருத்துவர்களை அணுகாமல் வாழ்ந்து வருகிறோம். எங்களை பார்த்து அருகிலுள்ள வீட்டினர் மழைநீரை சேமித்து உபயோகப்படுத்த தொடங்கியுள்ளனர். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது”

பேருந்து படிக்கட்டில் பயணித்த மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

மதுரையில்..

பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த தனசேகரன்- உமாமகேஸ்வரி தம்பதிக்கு பிரபாகரன், ரோகித் என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பிரபாகரன் ஆரப்பாளையம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியான பிரிட்டோ பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இன்று காலை பள்ளிக்கு புறப்பட்ட அவர் கூட்டமாக இருந்த அரசுப்பேருந்தில் ஏறியுள்ளனர். மேலும் சக மாணவர்களுடன் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்துள்ளார்.

அப்போது குரு தியேட்டர் அருகே பேருந்து வந்தபோது பிரபாகரன் தவறி கீழே விழுந்ததில், பேருந்தின் டயர், மாணவர் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த மாணவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேறொருவருடன் சென்ற காதல் மனைவி : தோளில் குழந்தையுடன் ரிக்க்ஷா ஓட்டும் நபர் : கண் கலங்கும் காட்சி!!

ஜபல்பூரில்..

காதலித்த மனைவி வேறொருவருடன் சென்றுவிட்டதால் தனது கைக்குழந்தையுடன் தந்தை ஒருவர் ரிக்ஷா ஓட்டும் காட்சி இணையத்தில் வெளியாகி கலங்க வைத்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஜபல்பூரில் ரிக்‌ஷா ஓட்டும் ராஜேஷ் என்ற இளைஞருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டில் கவனிக்க யாரும் இல்லாததால் தனது மூத்த குழந்தையை மட்டும் வீட்டில் விட்டு விட்டு, இளைய குழந்தையை அவர் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

ஒரு பக்க தோளில் வறுமையையும் மறு பக்க தோளில் குழந்தையையும் சுமந்து கொண்டு ஒரு கையால் ராஜேஷ் ரிக்‌ஷா ஓட்டுவதைப் பார்க்கும் போதே நெஞ்சம் பதைபதைக்கிறது.

காதல் திருமணம் செய்து கொண்ட மனைவி வேறொருவருடன் சென்றுவிட்டதால், தாய் ஸ்தானத்தில் இருந்து கவனித்து வருகின்றார். ஒரு கையில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மறு கையால் ரிக்‌ஷா ஓட்டிச் செல்லும் காட்சி கண்கலங்க வைத்துள்ளது.

எமனாக வந்த நிலச்சரிவு… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு நடந்த சோகம்!!

கேரளாவில்..

இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மண்ணுக்குள் புரிந்து உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் தொடுபுழா அடுத்துள்ள குடையாத்தூர் எனும் பகுதியில் இன்று அதிகாலை இரண்டரை மணி அளவில் மிகப்பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவில் சோமன் என்பவரது வீடு முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. இதில் வீட்டில் உறங்கி இருந்த சோமன் குடும்பத்தைச் சேர்ந்த சோமன் அவரது மனைவி ஷிஜி, அவரது மகள் சீமா, சீமாவின் குழந்தை தேவானந், மற்றும் சோமனின் தாயார் தங்கம்மா என ஐந்து பேரும் மண்ணில் புதைந்தனர்.

நிலச்சரிவில் சிக்கிய இவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி பொதுமக்களும் மற்றும் தீயணைப்புத் துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்பகுதியில் மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

எனினும் இதை பொருட்படுத்தாமல் தீயணைப்புத் துறை ,காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்களும் மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் . இந்த நிலையில் சோமன் அவரது மனைவி சிஜி, தங்கம்மாள் சீமா மற்றும் அவரது குழந்தை தேவானந்த், ஆகியோர் சடலமாக மீட்கக்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட உடல்கள் தொடுபுழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உடற்கூறு பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட உள்ளன.

தற்போதும் அப்பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இடுக்கி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் வசிப்பவர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் வீபா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இறுதிச் சடங்கில் திடீரென கேட்ட இறந்து போன பெண்ணின் குரல்.. அதிர்ந்து போன குடும்பத்தினர்!!

இணையத்தில்..

ஒருவர் இறந்த பின்னர், திரும்பி உயிருடன் வர மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், 87 வயதில் இறந்த மூதாட்டி ஒருவர், தனது இறுதிச் சடங்கின் போது பேசியது தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Holocaust பிரச்சாரகராக இருந்த மரினா ஸ்மித் என்ற பெண் ஒருவர், தன்னுடைய 87 வயதில் சமீபத்தில் உயிரிழந்தார். அப்படி ஒரு சூழ்நிலையில், மரினாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது, அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அந்த சமயத்தில், அங்கிருந்த அனைவருக்கும் கடும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி ஒன்றும் காத்திருந்தது. இறந்து போன மரினா ஸ்மித், அங்கிருந்த அனைவரின் முன்னிலையிலும் திரையில் தோன்றி ஆச்சரியப்படுத்தினார். மேலும், அவர் பேசியதுடன் மட்டுமில்லாமல், அங்கிருந்தவர்கள் கேள்விக்கும் பதிலளித்திருந்தார். இது எப்படி சாத்தியமானது என்பது பலரின் கேள்வியாகவும் இருக்கலாம்.

இதனை AI நுண்ணறிவுடன் ‘Hologram’ என்னும் செயல்முறை படி சாதித்து காட்டியுள்ளனர். மரினா ஸ்மித்தின் மகனான ஸ்டீபன் ஸ்மித் என்பவர் இதனை செய்து காட்டியுள்ளார். AI நிறுவனம் ஒன்றை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி உள்ளார். மரினா இறப்பதற்கு முன்பாகவே அவர் பேசிய விஷயங்களை சேகரித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் பின்னர், டிஜிட்டல் க்ளோன் மூலம், 20 கேமராக்கள் மற்றும் 3டி டெக்னாலஜி உள்ளிட்ட பல தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, இப்படி மரினா ஸ்மித் இறந்த பிறகு பேசியது போன்ற ஒரு வீடியோவை அவர்கள் உருவாக்கி உள்ளனர். ஏற்கனவே பேசிய விஷயங்களை வைத்து, கேள்விகளை உருவாக்கி அதற்கேற்ப வீடியோ ஒன்றையும் அவர்கள் தயார் செய்தனர்.

இதன் காரணமாக, அங்கிருந்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இறந்த பின்னர், மரினா ஸ்மித் பதிலளிக்கும் வகையில் இருந்தது, பலரையும் மெய் சிலிர்க்க வைத்திருந்தது.இது தொடர்பான வீடியோக்களும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தொழிலதிபர் கடத்தல்… திட்டம் போட்டு வசமாக சிக்கிய பெண் மருத்துவர்!!

சென்னையில்..

சென்னை, தி நகர், ராமசாமி தெருவை சேர்ந்த தொழிலதிபர் சரவணன்(46). இவர், கடந்த 20ம் தேதி அன்று, மதியம் வீட்டில் இருந்தார். அப்போது ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து, கத்தி முனையில், சரவணனை கடத்தியது. விலையுர்ந்த கார்களையும் எடுத்து சென்றனர். இதையடுத்து, மாம்பலம் போலீசுக்கு தகவல் கிடைத்து, சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, உடனடியாக , கடத்தப்பட்ட சரவணனை மீட்டனர்.

அத்துடன், கடத்தலில் ஈடுபட்ட மயிலாடுத்துறை, மாதா கோயில் தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ் (42), கரூர், அரவக்குறிச்சியை சேர்ந்த அரவிந்தகுரு(23), திருப்பூர், முத்தனம்பாளையத்தை சேர்ந்த அப்ரோஸ் (23), மதுரை, மீனாம்பாள் புரத்தை சேர்ந்த அஜய் (24), கே.புதூரை சேர்ந்த விஜயபாண்டி (25) மற்றும் கோயம்புத்தூர், காந்திபுரத்தைச் சேர்ந்த சிறைக்காவலர் நாகேந்திரன் (31) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கார்கள், இரு சக்கர வாகனம், 7 மொபைல்போன்கள், ஆப்பிள் லேப் டாப், பொம்மை துப்பாக்கி, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், கிழக்கு கடற்கரையை சேர்ந்த மற்றொருவர் தலைமறைவாகி விட்டார்.

மேலும், கைதான ஆரோக்கியராஜிக்கு, சவுடு மணல் அள்ளுவதற்கான ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி, சரவணன், நான்கரை கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றி வந்ததால் அவரை கடத்தியது தெரியவந்தது.

இந்த நிலையில், நேற்று, அமிர்தா என்ற மருத்துவரை கைது செய்தனர். விசாரனையில், சரவணன், ஆரோக்கியராஜ் இருவரும் அடிக்கடி பப்புக்கு சென்று வந்தபோது அமிர்தா பழக்கமாகியுள்ளார்.

சரவணனிடம் தந்த பணத்தை எப்படி வாங்குவது என ஆரோக்கியராஜ் கேட்டபோது, அமிர்தாதான் பிளான் போட்டு கொடுத்துள்ளார். மேலும், கடத்தலுக்கு மூளையாக அமிர்தா செயல்பட்டதும் தெரிந்தது. அவரை கைது செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

பள்ளி மாணவியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொன்றுவிட்டு சிரித்துக் கொண்டே சென்ற சைக்கோ இளைஞன்!!

இந்தியாவில்..

ஒருதலை காதலால் மாணவியை எரித்து கொன்ற இளைஞர் எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி கூலாக சிரித்து கொண்டே நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் தும்சா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து வரும் பிளஸ்-2 மாணவியை ஜார்க்கண்ட் வாலிபர் ஷாருக் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

இந்த காதலை ஏற்க மாணவி மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஷாருக் சம்பவத்தன்று மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் மாணவி அலறினார்.

உடல் கருகிய நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்த மாணவியின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

சம்பந்தப்பட்ட வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தும்ஷா நகரில் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இச்சம்பவம் தொடர்பாக ஷாருக்கை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூங்கி எழுந்ததும் கோடீஸ்வரர் ஆன சுமைதூக்கும் கூலித் தொழிலாளி : எவ்வளவு பணம் தெரியுமா?

கேரளாவில்..

கேரளாவின் மல்லாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அங்குள்ள மார்க்கெட்டில் சுமைதூக்கும் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ரூ 40 கொடுத்து லொட்டரி டிக்கெட்டை அவர் வாங்கியிருக்கிறார்.

அதற்கு ரூ. 3,57,86,502.26 (இலங்கை மதிப்பில்) பரிசு விழுந்துள்ளது. அந்த சமயத்தில் வீட்டில் ராஜேஷ் தூங்கி கொண்டிருந்தார். தூங்கி எழுந்து ரேஷன் கடைக்கு செல்ல தயாராக இருந்த போது லொட்டரிக்கு பரிசு விழுந்ததா என செல்போன் மூலம் பார்த்தார்.

அப்போது தான் இமாலய பரிசு விழுந்ததை உறுதி செய்து கொண்டார். இது குறித்து ராஜேஷ் கூறுகையில், ஏழ்மையில் வாடிய எனக்கு இந்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது எதிர்பாராத ஒரு மாபெரும் அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.

வவுனியாவில் திறந்து 4 நாட்களில் அகற்றப்பட்ட தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் பெயர்ப்பலகை!!

பண்டாரவன்னியன் சதுக்கம்..

தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 ஞாபகார்த்த விழாவினை முன்னிட்டு வவுனியா நகரசபையினரினால் கடந்த 25.08.2022ம் திகதி நகர மத்தியில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் என பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டு 4 நாட்களே கடந்த நிலையில் நேற்று (29.08.2022) காலை குறித்த பெயர்ப்பலகையினை வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்களினால் அகற்றப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்களிடம் வினாவிய போது,

குறித்த வீதி செப்பனிப்படும் பணிகள் எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன் அபிவிருத்தி பணிகளுக்கு இடையூரான நிலையில் குறித்த பெயர்பலகை காணப்பட்டமையினால் அதனை நாம் அகற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா நகரசபையினரிடம் வினவிய போது, வீதி அபிவிருத்தி பணிக்காக பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளதுடன் பணிகள் நிறைவின் பின்னர் முன்னைய பெயர்ப்பலகையினை விட சிறப்பான ஓர் பெயர்பலகையினை அப்பகுதியில் வைப்பதற்குரிய நடவடிக்கையினை தாம் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றது என தெரிந்தும் அவசர அவசரமாக பெயர்ப்பலகையினை திறந்து 4 நாட்களில் பெயர்ப்பலகையினை அகற்றியமை மக்கள் மத்தியில் அதிர்ப்தியினை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 8 மாணவர்கள் 3A சித்தி : இரு மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதலிடம்!!

தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில்..

வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் இரு மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளனர்.

விஞ்ஞான பிரிவில் 3A சித்திகளை பெற்று சி.கஞானன் மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் பி.டெக் பிரிவில் 2ஏ பி சித்திகளை பெற்று யு.கிங்சிலி மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் பெற்றுள்ளனர்.

மேலும் வெளியான முடிவுகளின் அடிப்படையில் பிரிவுகள் ரீதியாக முதல் 10 நிலைகளுக்குள் தெரிவாகிய மாணவர்களின் விபரத்தினை பாடசாலை அதிபர் வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில்,

விஞ்ஞானப்பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று ப.அருள்நேச சர்மா மாவட்ட ரீதியில் 3வது இடத்தினையும், 3 ஏ சித்திகளை பெற்று சி.விதுசன் மாவட்ட ரீதியில் 5வது இடத்தினையும் 2ஏ பி சித்திகளை பெற்று இ.மதுமிதன் மாவட்ட ரீதியில் 6வது இடத்தினையும் 2ஏ பி சித்திகளை பெற்று சி.திவ்வியா மாவட்ட ரீதியில் 8வது இடத்தினையும் 2ஏ பி சித்திகளை பெற்று இ.கிசாலினி மாவட்ட ரீதியில் 10வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.

கணிதப்பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று சே.யதீஸ் மாவட்ட ரீதியில் 4வது இடத்தினையும் 3ஏ சித்திகளை பெற்று து.தயானந்தன் மாவட்ட ரீதியில் 5வது இடத்தினையும் 3ஏ சித்திகளை பெற்று வி.ஜோக் பிரவீன் மாவட்ட ரீதியில் 6வது இடத்தினையும் 3ஏ சித்திகளை பெற்று ஜெ.சிவசுதன் மாவட்ட ரீதியில் 7வது இடத்தினையும்,

2ஏ பி சித்திகளை பெற்று மோ.யாகவன் மாவட்ட ரீதியில் 8வது இடத்தினையும் 2ஏ பி சித்திகளை பெற்று அ.சன்சில்ராஜ் மாவட்ட ரீதியில் 9வது இடத்தினையும் 2ஏ பி சித்திகளை பெற்று மு.கிசோத்மன் மாவட்ட ரீதியில் 10வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.

தொழிநுட்ப பிரிவில் (பி.டெக்) ABS சித்தியினை பெற்று பா.யூட் டெனிஸ்ரன் மாவட்ட ரீதியில் 6வது இடத்தினையும் தொழிநுட்ப பிரிவில் (இ.டெக்) 2ஏ சி சித்தியினை பெற்று மொ.மபாஸ மலிக் மாவட்ட ரீதியில் 2வது இடத்தினையும் 2ஏ சி சித்தியினை பெற்று கி.குணநீதன் மாவட்ட ரீதியில் 3வது இடத்தினையும் 2ஏ எஸ் சித்தியினை பெற்று வி.குணசீலன் மாவட்ட ரீதியில் 10வது இடத்தினையும்,

வர்த்தக பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று ச.கிசாத் மாவட்ட ரீதியில் 9வது இடத்தினையும் பெற்றுள்ளதுடன் ஏனைய மாணவர்களும் திறமை சித்தியினை பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளனர்.

இத்துடன் இப் பாடசாலையில் 8 மாணவர்கள் 3A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இம் மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்கள் 3A சித்திகளுடன் சாதனை!!

நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில்..

வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் பௌதிக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்ற மாணவன் ராஜ்குமார் சுலோஜன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதல் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் 75வது இடத்தினையும் பெற்றுள்ளார்.

மேலும் உயிரியல் பிரிவில் நிகருண்யா திருமூர்த்தி ஏ2பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 22வது இடத்தினையும் அத்துடன் வர்த்தக பிரிவில் யசிந்தா யேசுதாசன் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 15வது இடத்தினையும் வத்ஷனா ராஜரட்ணம் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 18வது இடத்தினையும் பெற்றுள்ளதுடன் ஏனைய மாணவர்கள் திறமைச் சித்திகளை பெற்றுள்ளனர்.

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 9ஆம் தர மாணவன்!!

தெவும் சனஹஸ் ரணசிங்க..

2021 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சித்தியடைந்துள்ளார். கடவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தெவும் சனஹஸ் ரணசிங்க என்ற மாணவனே இவ்வாறு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

இவர் வர்த்தகப் பிரிவில் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததோடு, மூன்று பாடங்களிலும் B சித்திகளைப் பெற்றுள்ளார். 05 மாத குறுகிய காலத்தில் பரீட்சைக்குத் தயாராகி இந்த விசேட சித்தியைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தெவும் சனஹஸ் ரணசிங்க 08ஆம் ஆண்டில் கல்வி கற்கும் போது சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்துள்ளார். சாதாரணதர பரீட்சையில், அவர் 5 A , 2 B மற்றும் ஒரு C தேர்ச்சி பெற்றுள்ளார். தெவும் சனஹஸ் ரணசிங்க, சட்டத்தரணி மற்றும் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பதே அருடைய இலட்சியம் என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் திருடப்பட்ட தங்க நகைகள் : பொலிசாரால் 21 வயது இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது!!

இளைஞன் கைது..

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, பண்டாரிக்குளம், திருவள்ளுவர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 22 ஆம் திகதி பிறந்த தின நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்காக வங்கி பெட்டகத்தில் வைக்கப்பட்ட நகையினை குறித்த வீட்டார் எடுத்துச் சென்றுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை பகல்வேளை குறித்த நகையினை வீட்டில் வைத்து விட்டு வீட்டார் வவுனியா நகருக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் பின்கதவு திறக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டு அலுமாரிகளும் திறக்கப்பட்டிருந்தன.

வீட்டு அலுமாரிகளை பார்வையிட்ட போது அதில் இருந்த பூட்டுகாப்பு, மோதிரம், தோடு, பென்ரன் உள்ளிட்ட 5 அரைப் பவுண் நகைகளை காணவில்லை.

இதனையடுத்து வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் அஹமட், பொலிஸ் சார்ஜன்டுகளான திசநாயக்கா , விக்கிரமசூரிய , ஜயரத்ன , திலீப், பொலிஸ் கொன்டபிள்களான தயாளன் , சந்தரூவான் , ஹெடிஆராச்சி உள்ளடங்கிய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன்,

அவரிடம் இருந்து 9 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு அடைவு வைக்கப்பட்ட நிலையில் 5 அரைப் பவுண் நகையும் மீட்கப்பட்டது. மேலதிக விசாரணைகளின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.

கல்லூரி பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி வரும் கணவர் : மனைவி எடுத்த அதிரடி முடிவு!!

சென்னையில்..

ஷேர் சாட் ஆப் மூலம் கல்லூரி பெண்களை குறி வைத்து பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி வரும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர் வைதீஸ்வரி/26. இவருக்கும் ஸ்ரீதர் என்பவருக்கும் இரு விட்டார் சம்மதத்துடன் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு வயது மகன் உள்ளார்.

இந்த நிலையில் கணவர் ஸ்ரீதர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த மனைவி வைதீஸ்வரி இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார்.

மோசடி கணவர் இதனால் ஆத்திரம் அடைந்த ஶ்ரீதர் வைதீஸ்வரியை தாக்கியதுடன் செல்போனை உடைத்துவிட்டு கணவர் வீட்டைவிட்டு சென்று உள்ளார். இதன்பின்னர் சில நாட்கள் கழித்து மனைவி கணவர் ஶ்ரீதரின் செல்போனை ரிப்பேர் செய்து recovery செய்த போது அதில் சில ஆடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

அதில் கணவர் ஸ்ரீதர் பிரபல இணையதளமான ஷேர் சாட் ஆப் மூலமாக பல கல்லூரி பெண்கள்,திருநங்கைகள் உள்ளிட்ட பலரிடம் பழகி வந்தது தெரியவந்துள்ளது. தகாத உறவு மேலும் பெண்களிடம் நெருக்கமாக பழகி தகாத உறவில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பெண்களிடம் கொஞ்சி கொஞ்சி பேசும் ஆடியோக்கள் சிக்கி உள்ளது. மேலும் வைதீஸ்வரி உடனான திருமணத்தை மறைத்து மேட்டுப்பாளையத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவி உடன் ஆப்பில் பேசி நம்பவைத்து நெருக்கமாக பழகியுள்ளார்.

அப்பெண் ஶ்ரீதரிடம் திருமணம் செய்ய வற்புறுத்தி வந்துள்ளார். இதனையடுத்து பெண்னை வீட்டிலிருந்து பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். ஷேர் சாட் ஆப் பின்னர் அப்பெண்ணுடன் சில வாரங்கள் இருந்துவிட்டு தொழில் நிமித்தமாக செல்வதாக கூறி அங்கிருந்து சென்னை வந்து தங்கி இருந்துள்ளார்.

மேலும் இந்த ஆப் வாயிலாக கல்லூரி மாணவிகளை குறிவைத்து தொடர்ந்து ஏமாற்றி பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இது அனைத்தும் தெரிந்து கணவரிடம் கேட்ட வைதீஸ்வரியை கர்ப்பிணி என்றும் பாராமல் கடுமையாக தாக்கி தலைமறைவாகியுள்ளார்.

எனவே முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பல பெண்களை ஏமாற்றி வரும் தனது கணவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 11ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார். போலீஸ் மீது புகார் ஆனால் புகார் மீது காவல்துறை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து வைதீஸ்வரி கூறுகையில்,கடந்த 2019 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்தின் பேரில் தங்களுக்கு திருமண நடைபெற்றதாகவும் திருமணம் நடைபெற்று சில காலம் சேர்ந்து வாழ்ந்ததாகும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்த 15 சவரன் நகைகளை அடகு வைத்து விற்பனை செய்து பல பெண்களிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே அவரை கைது செய்ய வேண்டும். இல்லையெனில் பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும். எனக்கும் எனது குழந்தைக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என கூறியுள்ளார்.. தற்போது அம்பத்தூர் அனைத்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பெண்களை ஏமாற்றி வரும் ஸ்ரீதரை தீவிரமாக தேடி வருகின்றனர்.