வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்த கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் இரு மாணவர்கள் 3A சித்தி!!

வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் இரு மாணவர்கள் 3A சித்தியினை பெற்றுள்ளதுடன் மேலும் பல மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கும் தெரிவாகியுள்ளனர்.

வர்த்தகப்பிரிவில் மாணவன் கிருஷ்ணகுமார் தயாகராச சர்மா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 4வது இடத்தினையும் மாணவி நிக்சலா லக்ஸ்மனன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 19வது இடத்தினையும்,

மாணவி சதுர்சனா தங்கராசா ஏபிசி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 29வது இடத்தினையும் மாணவன் துவாரகன் பிரவீன் 2பி சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 38வது இடத்தினையும் மாணவி தேன்சிகா ரமேஷ் ஏபிசி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 46 வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.

கலைப்பிரிவில் மாணவி பகிஷா நந்தன் 2ஏ பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 23வது இடத்தினையும் மாணவி கிருஷாலினி ஜெயகுமார் ஏ 2பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 62வது இடத்தினையும் மாணவி கவிசானா கந்தவநேசன் 2ஏ சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 71வது இடத்தினையும்,

மாணவி சரண்யா புன்னியராஜ் ஏ பி சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 86வது இடத்தினையும் மாணவி சுகானா பாலசுப்ரமணியம் ஏ பி சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 94வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.

பௌதிகவியல் பிரிவில் மாணவன் ரங்கநாதன் நிரூபன் ஏ 2சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 25வது இடத்தினையும் மாணவன் ரத்திணமூர்த்தி சஞ்சயன் பி 2சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 27வது இடத்தினையும் மாணவன் முகுந்தரதன் கேசிகன் 3சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 53வது இடத்தினையும்,

மாணவி அனுசியா சிவசங்கர் 2சி எஸ் சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 54வது இடத்தினையும் மாணவி லயனிஹா யோகேந்திரன் 3எஸ் சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 73வது இடத்தினையும் பெற்றுள்ளமையுடன்,

உயிரியல் பிரிவில் மாணவி ஜஷிகா வாமதேவன் 2பி சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 37வது இடத்தினையும் மாணவி பாத்திமா ஷாலா சிராஜ் 2பி சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 44வது இடத்தினையும் மாணவி தர்சிகா ரங்கநாதன் 3 சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 63து இடத்தினையும் பெற்றுள்ளனர்.

அத்துடன் பல மாணவர்களும் திறமை சித்தியினை பெற்று பல்கலைக்கழகத்திற் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா வேப்பங்குளத்தில் இரு வாகனங்களுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து : இரு இளைஞர்கள் படுகாயம்!!

விபத்து..

வவுனியா வேப்பங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று (31.08.2022) மாலை 6.30 மணிளவில் இரண்டு வாகனங்களுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் வேப்பங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில்,

வீதியின் மறுபக்கம் திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டதுடன் எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடனும் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மூன்று வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிலில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் விபத்துக்குள்ளான வாகனங்களை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

உயிரிழந்து கிடந்த பெண்.. 34 வருடமா கண்டுபிடிக்க முடியாமல் திணறிய போலீஸ் : மர்ம நபர் எழுதிய கடிதம் மூலமாக தெரியவந்த உண்மை!!

போலீசார்..

கடந்த 34 ஆண்டுகளுக்கு முன் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து போன நிலையில், இதற்கான காரணம் என்பது பற்றி தற்போது தகவல் கிடைத்துள்ளது.

Tamika Reyes என்ற பெண்மணிக்கு தற்போது 43 வயதாகிறது. அவருக்கு 9 வயது இருந்த சமயத்தில், அவரது தாயாரான Anna Kane உடல், கடந்த 1988 ஆம் ஆண்டு, மரக்கட்டைகளுக்கு நடுவே கழுத்தில் கயிறு கட்டப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால், அன்னாவின் குடும்பம் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், இதற்கான காரணம் யார் என்பது குறித்து போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அன்னாவை வேறு இடத்தில் கொலை செய்து விட்டு, மரக்கட்டைகள் உள்ள பகுதியில் வீசியதும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, அன்னா கேன் இறந்த செய்தி பற்றி, அங்குள்ள செய்தித் தாள் ஒன்று செய்தியை வெளியிட்டிருந்தது. தொடர்ந்து, கேன் இறந்து 15 மாதங்கள் கழித்து, அந்த செய்தித் தாள் நிறுவனத்திற்கு பெயர் குறிப்பிடாத ஒரு நபரிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அதில், அன்னாவின் கொலையாளிக்கு மட்டுமே தெரியும் தகவல் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, பல ஆண்டுகள் உருண்டு ஓடியதால், கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்காமல் இருந்து வந்தனர். இதனால், அன்னாவின் தாயார், மகள் Reyes, அவரது இரண்டு சகோதரர்கள் உள்ளிட்டோர் தவிப்பில் இருந்து வந்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில், சுமார் 34 ஆண்டுகள் கழித்து, அன்னாவை கொலை செய்தது யார் என்பது பற்றியும், கூடவே இன்னொரு அதிர்ச்சி தகவலும் சேர்ந்து வந்துள்ளது.

DNA முறையை பயயன்படுத்தி கொலையாளி பற்றிய விவரத்தினை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, செய்தித் தாளுக்கு கடிதம் அனுப்பிய நபர், கடிதத்தின் உறையை நக்கியதால் அதிலிருந்த உமிழ் நீருடன் அன்னாவின் ஆடைகளில் இருந்த அடையாளம் தெரியாத நபரின் DNA பொருந்தியதால், குற்றவாளி யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தாயின் கொலையாளி யார் என்பது Reyes-ற்கு தெரிய வந்தாலும், ஏமாற்றம் தான் அவருக்கு காத்திருந்தது. இதற்கு காரணம், அன்னாவை கொலை செய்யப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட Scott Grim என்ற நபர், தனது 58 வயதில், இயற்கையாகவே கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அதே போல, இந்த வழக்கு தீர்வதற்கு முன்பாகவே, அன்னாவின் தாயார் உயிரிழந்த விஷயம், Reyes-ஐ இன்னும் வேதனைக்குள் ஆழ்த்தி இருந்தது.

ஆனால், அதே வேளையில் எந்த வழக்குகளிலும் தொடர்பு இல்லாத Scott Grim என்பவர். அன்னாவின் மரணத்தில் தொடர்புள்ள நிலையில், ஏன் அவர்களை கொலை செய்தார் என்பது தொடர்ந்து ஒரு மர்மமாகவே உள்ளது. மேலும், அன்னா மற்றும் ஸ்காட் ஆகிய இருவருக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், எந்த காரணத்துக்காக அன்னாவை ஸ்காட் கொலை செய்திருப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், DNA தொழில்நுட்பம் மூலம் வேறு ஏதேனும் கொலைகளில் ஸ்காட்டிற்கு தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்பளச் சண்டையில் கலவரகளமான திருமண நிகழ்ச்சி.. விரோதிகளாக மோதிக்கொண்ட இருவீட்டார்!!

திருமண விழாவில்..

கேரள மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள ஹரிப்பாடு முட்டம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருக்குன்றபுலா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் இரண்டு தரப்பையும் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

திருமணம் முடிந்தபின்னர் திருமண விருந்து நடைபெற்றுள்ளது. அப்போது மணமகனின் உறவினர்கள் பந்தியில் சாப்பிட அமர்ந்துள்ளனர். அவர்கள் கூடுதலாக ஒரு அப்பளம் கேட்டுள்ளனர். ஆனால் அப்பளம் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மணப்பெண் வீட்டை சேர்ந்தவர்களிடம் அப்பளம் வைக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த விவகாரம் வாக்குவாதமாக மாறியுள்ளார். மணமகன் தரப்பினரும் மணமகள் தரப்பினரும் அங்கு கூடி இது தொடர்பாக மாறி மாறி வாங்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இரு தரப்பும் மாறி மாறி தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் மேஜை, நாற்காலிகளை அடித்து உடைக்க்கப்பட்டுள்ளது. மேலும் இதனை தட்டிக்கேட்ட திருமண மண்டப உரிமையாளரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து இரு தரப்பினரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர். மேலும் இந்த வன்முறையில் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒன்றரை வயதில் பிரிந்துபோன மகன்.. 25 வருடத்துக்குப் பின்னர் நடந்த அதிசயம்!!

கேரளாவில்..

கேரளாவை சேர்ந்த தாய் ஒருவர் 25 வருடங்கள் கழித்து தனது மகனுடன் இணைந்திருக்கிறார். இதனால் அவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருக்காச்சல் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவர் 30 ஆண்டுகளுக்கு முன்பாக வேலைக்காக குஜராத் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார்.

அப்போது அங்கு ராம் பாய் என்பவருடன் கீதாவிற்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. விரைவில் இருவரும் காதலை வெளிப்படுத்த திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு கோவிந்த் என்ற மகன் இருந்த நிலையில், கேரளா திரும்பியிருக்கிறார்கள் இருவரும். அப்போது கீதாவை பிரிந்த ராம் மகன் கோவிந்தையும் தூக்கிக்கொண்டு சொந்த ஊர் திரும்பியிருக்கிறார்.

அப்போது கோவிந்திற்கு வயது ஒன்றரை ஆகும். கர்ப்பமாக இருந்த நிலையில், கணவனும் மகனும் பிரிந்து செல்ல மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார் கீதா. ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் இருவர் பற்றியும் தகவல்கள் கிடைக்காததால் கீதா மன விரக்தியுடன் இருந்திருக்கிறார்.

இதனிடையே சொந்த ஊர் திரும்பிய ராம் அங்கே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். உறவினர் வீட்டில் கோவிந்த் வளர்ந்து வந்திருக்கிறார். சமீபத்தில் கோவிந்தின் அத்தை ஒருவர் கேரளாவில் இருக்கும் தாயை சென்று பார்க்கும்படி கூறவே, உண்மையை அறிந்துகொண்ட கோவிந்த் கேரளா திரும்பியிருக்கிறார்.

கருக்காச்சல் காவல்நிலையத்திற்கு சென்ற கோவிந்த் தனது நிலையை விளக்கியுள்ளார். இதை கேட்ட அதிகாரிகள் பஞ்சாயத்து போர்டு உறுப்பினர் ஒருவர் மூலமாக கீதாவிற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

25 வருடங்கள் கழித்து தனது மகன் தன்னை தேடி வந்ததை கேட்டு பூரிப்படைந்த கீதா நேரடியாக காவல்நிலையத்திற்கு வந்து கோவிந்தை கட்டியணைத்து கண்ணீர் சிந்தியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,”இத்தனை ஆண்டுகாலமாக எனது மகனை மீண்டும் பார்த்துவிடமாட்டோமா என ஏங்கிக்கொண்டிருந்தேன். ஓணம் திருநாளுக்கு எனக்கு கிடைத்த பரிசு இது. மரணமடைவதற்கு முன்னர் ஒருமுறையாவது மகனை பார்த்துவிடவேண்டும் என நினைத்தேன்.

இதற்காக நான் வேண்டாத தெய்வம் இல்லை” என கசிந்த கண்களுடன் கூறினார். தற்போது ஆட்டோ ஓட்டிவரும் கீதா, தன்னுடைய பலநாள் காத்திருப்பு பூர்த்தியாகிவிட்டதாக தெரிவித்தது அங்கிருந்த அதிகாரிகளை கண்கலங்க செய்திருக்கிறது.

தங்களை தேடவேண்டாம் என ராம் எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதத்துடன் இத்தனை ஆண்டுகளாக நம்பிக்கையுடன் காத்திருந்திருக்கிறார் கீதா. ஹிந்தி மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகள் மட்டுமே கோவிந்துக்கு தெரிந்திருக்கிறது.

இருப்பினும் தனது தாயை கண்டுபிடிக்கும் பணியில் அவர் வெற்றியடைந்திருக்கிறார். இந்நிலையில், இனி தனது தாயுடன் வசிக்க இருப்பதாக கோவிந்த் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

மாப்பிள்ளைக்கு 100 பெண்ணுக்கு 96… நடைபெற்ற திருமணம்.. வியந்துபோன ஊர் மக்கள்!!

கிருஷ்ணகிரியில்..

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை டி.ஜி. தோட்டை கிராமத்தில் வசிக்கும் முனியப்பா 100 வயதை கடந்தார். அவருடைய மனைவி குண்டம்மா என்கின்ற மாரம்மாவுக்கு 96 வயதாகிறது. ஆரோகியத்துடன் வாழ்ந்து வரும் இவர்களது நூற்றாண்டு விழாவை குடும்பத்தினர் கொண்டாடினர்.

தேன்கனிக்கோட்டை கதிலட்சுமி – நரசிம்மசுவாமி கோயிலில் இந்த தம்பதியினருக்கு புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கெட்டிமேளம் கொட்டி மாலைகள் அணிவித்து வைரவிழா திருமணம் நடைபெற்றது.

100 வயதை கடந்த தம்பதியினரிடம் மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன் என 4 தலைமுறையினர் மற்றும் ஊர்மக்கள் ஆசிபெற்றனர்.

சிரிப்பூட்டும் வாயுவை சுவாசித்த சிறுமி மரணம் : தடை செய்ய போராடும் குடும்பம்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் பார்ட்டியில் சிரிப்பூட்டும் வாயுவை சுவாசித்த 16 வயது சிறுமி உயிரிழந்தார். இதை தடை செய்ய வேண்டும் என அவரது சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு பார்ட்டியில் தனது 16 வயது சகோதரி சிரிப்பூட்டும் வாயுவை (laughing gas) சுவாசித்தால் இறந்ததையடுத்து, மனம் உடைந்த பெண் ஒருவர் சிரிப்பூட்டும் வாயுவை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மெர்சிசைடில் உள்ள ஹேல்வுட் நகரத்தைச் சேர்ந்த Kayleigh Burns எனும் சிறுமி, நைட்ரஸ் ஆக்சைடை உட்கொண்ட சில நிமிடங்களில் சரிந்து விழுந்தார். அவர் வார்விக்ஷயரில் உள்ள லீமிங்டன் ஸ்பாவில் ஒரு வீட்டில் பார்ட்டியில் இருந்தார்.

அவரது சகோதரி Clare Baker (31), முதலில் ஹேல்வுட், Merseyside பகுதியைச் சேர்ந்த கெய்லீயின் நண்பர் ஒருவரிடமிருந்து, அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஒரு செய்தியைப் பெற்றதாக கூறினார். பின்னர் என்ன நடக்கிறது என்பதை அறிய மருத்துவமனைகளைச் சுற்றி அலைந்தாள்.

ஆனால், கெய்லீ இறந்துவிட்டதாக மெர்சிசைட் காவல்துறை அதிகாரிகள் பின்னர் அவரது வீட்டிற்கு வந்தனர். கெய்லீயின் 17-வது பிறந்தநாளுக்கு சில வாரங்கள் இருந்தது என்று அவர் கூறினார்.

நார்த் லிவர்பூலைச் சேர்ந்த கிளேர் “என் சகோதரிக்கு வயது 16, கிட்டத்தட்ட 17 ஆகவிருந்தது, அவள் எப்போதும் மிகவும் அற்புதமான சிறுமி. எங்களுக்குள் இருந்த பந்தத்தை என்னால் விவரிக்கவே முடியாது. கெய்லி வளர்ந்து நல்ல குழந்தைப் பருவத்தைக் கொண்டிருந்தாள், அவள் ஒரு அன்பான குடும்பத்தில் இருந்தாள். அவள் வளர வளர, தவறான நபர்களுடன் பழகினாள்.

அவள் மேக்-அப் மற்றும் ஃபேஷனில் ஆர்வமாக இருந்தாள், மேலும் உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்பினாள். அவள் ஒரு விமானப் பணிப்பெண்ணாக இருக்க விரும்பினாள் அல்லது கப்பல் பயணத்தில் வேலை செய்ய விரும்பினாள், அவளுடைய வாழ்க்கை அவளிடமிருந்து பறிக்கப்பட்டது” என்றார்.

லீமிங்டன் ஸ்பாவுக்குச் செல்வதற்கு முன், கெய்லி தனது தோழியுடன் வாழ கோவென்ட்ரிக்கு சென்றதாக கிளேர் கூறினார். ஜூன் மாதம், இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர் தனது குடும்பத்தைப் பார்க்க வந்திருந்தார்.

வீட்டில் பார்ட்டியில் இருந்தவர்கள், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட கெய்லீ நைட்ரஸ் ஆக்சைடை சுவாசிக்கும் வீடியோக்களை அனுப்பினர். அதே இரவின் பிற்பகுதியில் அவள் சரிந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு “மிகவும் சூடாக” உணர்த்துவதாக கூறியுள்ளார். அதன்பிறகு மருத்துவனையில் அவர் இறந்தார்.

இந்நிலையில், நைட்ரஸ் ஆக்சைட்டின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர், மேலும் இந்த மருந்தை தடை செய்ய வேண்டும் அல்லது அதற்கு வயது வரம்பை சேர்க்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.

55 வயது முதியவரை உயிராக காதலித்து திருமணம் செய்த 18 வயதுப் பெண் : அதிர்ச்சியில் குடும்பம்!!

பாகிஸ்தானில்..

55 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட 18 வயது இளம்பெண் பாகிஸ்தானில் 18 வயது இளம்பெண் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இசை தான் இவர்களின் காதலுக்கு அஸ்திவாரம் போட்டுள்ளது.

அதன்படி முஸ்கான் (18) என்ற இளம்பெண் இணையத்தில் பாடல்களை பாடி வீடியோ வெளியிடுவார். அதை இசையின் மீது அதிக ஈடுபாடு கொண்ட பரூக் அகமது (55) அடிக்கடி பார்த்து வந்த நிலையில் முஸ்கான் குரல் அவரை ஈர்த்தது.

இதையடுத்து முஸ்கானை அவர் வீட்டிற்கே சென்று சந்தித்தார், பின்னர் அடிக்கடி இருவரும் சந்தித்த நிலையில் பரூக்கின் இசை மீதான காதல் அவர் மீது முஸ்கானுக்கு காதலை ஏற்படுத்தியது. முதலில் முஸ்கான் தான் தன்னை விட 37 வயது அதிகமான பரூக்கை காதலிக்க தொடங்கினார்.

பின்னர் அவர் காதலை பரூக்கும் ஏற்று கொண்டார். இருவரின் காதல் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் காதலர்கள் இருவரும் வாழ்வில் ஒன்று சேர்வதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதாகவும் அவ்வளவு ஏன்! தங்கள் உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டோம் என கூறினர்.

இதையடுத்து முஸ்கான் – பரூக் திருமணம் செய்து கொண்டுள்ளனர், இது அவர்களின் குடும்பத்தார், உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 55 வயதான பரூக்குக்கு இது முதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ்லாந்தில் இசையில் கலக்கும் இலங்கைப்பெண்!!

சுவிட்சர்லாந்தில்..

இலங்கை ரசிகர்களால் Suzi Croner என்று அழைக்கப்படும் இசைக்கலைஞர் தான் வாழும் சுவிட்சர்லாந்தில் பரபரப்பாக நிகழ்ச்சிகளை நடத்தத் துவங்கியுள்ளார். இந்த ஆண்டின் இறுதி வாக்கில் இலங்கையில் கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருந்த Suzi, இப்போது இலங்கையில் காணப்படும் சூழல் காரணமாக அதை ஒத்திவைத்திருக்கிறார்.

கொரோனா காலகட்டம் கலைஞர்களுக்கு கடினமான ஒன்றாக இருந்த நிலையில், உள்ளூர் கலைஞர்கள் தற்போது வெளிநாடுகளில் மீண்டும் பிஸியாகத் துவங்கியுள்ளார்கள்.

இலங்கை ரசிகர்களால் Suzi Croner என்று அழைக்கப்படும் Suzi Fluckiger, இப்போது, தான் வாழும் சுவிட்சர்லாந்தில் மீண்டும் பரபரப்பாக நிகழ்ச்சிகளை நடத்தத் துவங்கியுள்ளார்.

Suzi க்கு நிகழ்ச்சிகள் நடத்த பல வாய்ப்புகள் வந்தாலும், தான் சுவிட்சர்லாந்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதை விரும்புவதாக தெரிவிக்கிறார். சொல்லப்போனால், Suziயின் பெயர் சுவிஸ் செய்தித்தாள் ஒன்றிலும் வந்துவிட்டது. இந்த ஆண்டின் இறுதி வாக்கில் இலங்கையில் கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருந்தார் Suzi.

ஆனால், இப்போது இலங்கையில் காணப்படும் சூழல் காரணமாக அதைக் கொஞ்சம் ஒத்திவைத்திருக்கிறார். Suziயின் கணவரான Thomas William Fluckiger, நுரையீரல் புற்றுநோயால் சமீபத்தில் இயற்கை எய்தியது குறிப்பிடத்தக்கது.

படங்களை வெளியிடுவதாக மிரட்டி சொத்துகளை மோசடி செய்தார் : அமலா பால் புகாரால் கைதான ஆண் நண்பர்!!

அமலா பால்..

சினிமாதுறையில் பிரபல நடிகையாக வலம்வருபவர் அமலா பால். இவர் திரைப்படத்துறையில், பவ்நிந்தர் சிங் தத் (எ) பூவி என்பவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக, அவர் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்து திரைப்பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.

பின்னர், 2018-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகேயுள்ள பெரிய முதலியார் சாவடியில் இருவரும் வீடு ஒன்றை எடுத்துத் தங்கி, தொழில் செய்துவந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நடிகை அமலா பாலும், அவர் ஆண் நண்பரும் பிரிந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், ‘இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவேன்’ என பவ்நிந்தர் சிங் தத் மற்றும் அவர் உறவினர்கள் நடிகை அமலா பாலை ஏமாற்றி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும் இதே காரணத்தைவைத்து… தன்னிடமிருந்து பணம் மற்றும் சொத்துகளை மோசடி செய்து, மனரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், தொழில்ரீதியாகவும் துன்புறுத்தல் கொடுத்துவருவதாகவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை அமலா பால் தரப்பில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்தப் புகாரின் அடிப்படையில், நேற்றைய (29.08.2022) தினம் 12 பேர்மீது 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்த விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், இன்று காலை நடிகை அமலா பாலின் ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங்கின் தத்தையைக் கைதுசெய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் 11 பேரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “இருவரும் இணைந்து திரைப்பட நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கின்றனர். அதில், நடிகைக்கு உரிமை இல்லை… தானே ‘டைரக்டர்’ என்பதுபோல அந்த நபர் ஆவணங்களைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

மேலும், `புகைப்படங்களை வெளியிடுவேன்’ என மிரட்டி ஏமாற்றியதாகவும், அதன் மூலம் பணம், கார் மற்றும் பொருள்களை ஏமாற்றியதாகவும் நடிகையின் வழக்கறிஞர் மூலம் 12 பேர்மீது புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 384, 420 உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இன்று காலை, நடிகையின் ஆண் நண்பர் கைதுசெய்யப்பட்டார். ஏமாற்றிய பணம் மற்றும் பொருள்களின் மதிப்பு எவ்வளவு என்பது விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்” என்கிறார்கள்.

ஓடினாலும் விடமாட்டேன்… டிமிக்கி கொடுத்த மணமகனை விரட்டிப் பிடித்த பெண் ; வைரல் வீடியோ!

பீகாரில்..

திருமணம் சார்ந்த பல விநோதமான சடங்குகள் மற்றும் சண்டைகள் வைரலாவதை கண்டிருப்போம். அந்த வகையில், தான் கல்யாணம் செய்துக் கொள்ளப் போகும் நபரை பெண் ஒருவர் என்னை கட்டிக்கோ கட்டிக்கோ எனக் கூச்சலிட்டபடி விரட்டிய சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது.

பீகார் மஹுலி கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும், மெஹ்கர் கிராமத்தைச் சேர்ந்த அந்த நபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. 3 மாதமாக மணமகன் தொடர்ந்து திருமணத்தை தள்ளிப்போட்டு வந்திருக்கிறார்.

இதுமட்டுமின்றி பெண் வீட்டார் அந்த மணமகனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து ஒரு பைக்கையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் வாங்கி கொண்டும் டிமிக்கி கொடுத்து வந்திருக்கிறார் மணமகன்.

இந்த நேரத்தில், தனது பெற்றோருடன் மார்க்கெட்டிற்கு சென்ற அந்த மணமகள், சந்தையில் அந்த மணமகனை பார்த்ததும் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி கேட்டிருக்கிறார்.

ஆனால், அந்த நபரோ அங்கிருந்து ஓட்டம்பிடிக்கவே, அவரை விரட்டியடி அப்பெண்ணும் பின்னாலேயே ஓடியிருக்கிறார். ஒரு வழியாக உள்ளூர் மக்களின் உதவியுடன் ஒரு வழியாக அந்த நபரை பிடித்த அப்பெண் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி கேட்டிருக்கிறார்.

எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற நினைத்ததும் அவர் வேண்டுமென்றே கல்யாணத்தை ஒத்திப்போட்டது தெரியவந்துள்ளது. பின்னர், தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சம்மந்தப்பட்டவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

இதன்பின், இருதரப்பு குடும்பத்தினரும் சம்மதித்து கல்யாணத்தை செய்து வைத்திருக்கிறார்கள். இது சம்மந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் இரு மாணவிகள் வரலாற்று சாதனை!!

இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை..

வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக கலைப்பிரிவில் மாணவி ஜெ.ஜானுசா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 5ம் இடத்தினையும்,

வர்த்தகப் பிரிவில் மாணவி கே.துஷ்யந்தி A,2B சித்தியினை பெற்று மாவட்ட ரீதியில் 34வது இடத்தினையும் பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலையில் வர்த்தக பிரிவில் மாணவர்கள் 100% சித்தியடைந்துள்ளதுடன் பல மாணவர்கள் திறமைச்சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இலங்கையில் 300 ரூபாவாக அதிகரிக்கும் பாணின் விலை!!

பாணின் விலை..

எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், டொலர் நெருக்கடி காரணமாக கோதுமை மா இறக்குமதியை நிறுவனங்கள் கட்டுப்படுத்தியிருந்தன. இதன் காரணமாக 50 கிலோகிராம் எடை கொண்ட கோதுமை மா மூட்டை ஒன்றின் விலை தற்போது இருபதாயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக பல பேக்கரிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. எனவே எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என்பதுடன், பணிஸ் ஒன்றின் விலையை 30 ரூபா அளவிலும் அதிகரிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி லுவின்சிகா 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் முதலிடம்!!

புதுக்குளம் மகா வித்தியாலயம்..

வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 6 பாடங்களில் அனைத்து மாணவர்களும் 100 வீதம் சித்தி பெற்றுள்ளனர்.

இந்துநாகரிகம், தொடர்பாடலும் ஊடகக்கற்கையும், சித்திரக்கலை, கர்நாடக சங்கீதம், நாடகமும் அரங்கியலும், நாட்டியம் ஆகிய பாடங்களில் 100 விகீதம் சித்தியும்,

தமிழ் 98 விகீத சித்தியும் ஐரோப்பிய வரலாறு, புவியியல் 94 வீதம் சித்தியும் கணக்கீடு 90 விகித சித்தியும் , வணிகக்கல்வி 86 விகித சித்தியும் விவசாய விஞ்ஞானம் 83 விகித சித்தியும், பொருளியல் 81 விகித சித்தியும், உயிரியல் 71 விகித சித்தியும் கிறிஸ்தவ நாகரிகம் 67 விகித சித்தியும் இராசயனவியல் 55 விகித சித்தியும்,

இணைந்த கணிதம் 33 விகித சித்தியும் அரசியல் விஞ்ஞானம் மற்றும் இணைந்த கணிதம் 33 விகித சித்தியும், பௌதீகவியல் 25 விகித சித்தியையும் பெற்றுள்ளனர்.

இப் பாடசாலையில் வணிகத்துறையில் மூன்று பாடங்களிலும் 3A சித்திகளை பெற்று லுவின்சிகா மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 8 மாணவிகள் 3A சித்திகளை பெற்று சாதனை!!

சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில்..

வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் பல மாணவிகள் 3A சித்திகளை பெற்றுள்ளதுடன் பலர் பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவாகியுள்ளனர்.

அதன் அடிப்டையில் வணிககப்பிரிவில் தெய்வகுமார் தனுஷ்கா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 3வது இடத்தினையும் சுவேந்திரராசா டர்மிகா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 5வது இடத்தினையும் பரமேஸ்வரன் வித்தககி 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 8வது இடத்தினையும்,

ஜெயபிரகாஸ் யதுசா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 13வது இடத்தினையும் பாஸ்கரன் லிருசிகா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 16வது இடத்தினையும் பெற்றுள்ளதுடன்,

கலைப்பிரிவில் போஜராஜன் றீவா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 2வது இடத்தினையும் , வரதராஜன் பவித்திரா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 10வது இடத்தினையும் சண்முகலிங்கம் சிவேதா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 13இடத்தினையும் பெற்றதுடன் ,

தொழிநுட்ப பிரிவில் உயிரியர் தொழிநுட்பம் பிரிவில் பாஸ்கரன் சுகன்யா 3பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 4வது இடத்தினையும் புஸ்பதேவன் றோகிதா பி,2சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 5வது இடத்தினையும்,

பொறியியல் தொழிநுட்ப பிரிவில் ஜோன்சன் செரின் 3 சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 8வது இடத்தினையும் சந்திரசேகர் யுவேந்தினிகா பி,சி,எஸ் சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 9வது இடத்தினையும்,

விஞ்ஞானப்பிரிவில் கலைச்செல்வன் டிலக்ஷா 2ஏ பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 12வது இடத்தினையும் பெற்றுள்ளதுடன் ஏனைய மாணவர்கள் திறமை சித்திகளை பெற்றுள்ளனர்.

இம் மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் ஸ்டெனி டஸ்னா கலைப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று சாதனை!!

ஸ்டெனி டஸ்னா..

வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலய மாணவி ஸ்டெனி டஸ்னா 3A சித்திகளை பெற்று கலைத்துறையில் மாவட்ட ரீதியில் 8வது இடத்தினை பெற்றுள்ளார்.

மேலும் கலைத்துறையில் நந்தகுமார் விதுர்சன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 21வது இடத்தினையும் விஜயகுமார் அனுஜன் 2ஏ சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 68வது இடத்தினையும் தவரசா நிதுர்சிகா 2ஏ பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 89வது இடத்தினையும்,

வணிகத்துறையில் சதீஸ்குமார் நிலொக்சன் 3பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 39வது இடத்தினையும் விஞ்ஞானத்துறையில் நிம்னாஸ் முகமட் இன்பாஸ் 2பி சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 38வது இடத்தினையும் உயிர்முறைகள் தொழிநுட்பம் பி.டெக் பாடத்தில் சரவணகுமார் டனோஸ்ரிகா பி 2சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 7வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

செட்டிக்குளம் இழுப்பைக்குளம் எனும் கிராமத்தில் வசித்து வரும் ஸ்டேனி என்பவரது மகளாகிய டஸ்னா அக் கிராமத்திலிருந்து நகரிலுள்ள செட்டிக்குளம் பாடசாலைக்கு சென்று கலைப்பிரிவில் மூன்று பாடங்களிலும் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 08 வது இடத்தினை பெற்றுள்ளதுடன் அவரது கிராமத்திற்கும் பெருமையினை தேடித்தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.