செல்பி மோகம்… நீர்வீழ்ச்சியில் விழுந்த இளம்பெண்களை காப்பாற்றும் முயற்சியில் முழுக்குடும்பமும் உயிரிழந்த பரிதாபம்!!

இந்தியாவில்..

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 பேர் கொண்ட குடும்பம் ஒன்று, கடந்த ஞாயிறன்று, Ramdaha என்னும் நீர்வீழ்ச்சிக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார்கள். அப்போது, ஷ்ரதா (14) மற்றும் ஷ்வேதா சிங் (22) ஆகிய இருவரும் செல்பி எடுப்பதற்காக தண்ணீருக்குள் இறங்க, ஷ்ரதா கால் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்திருக்கிறாள்.

உடனே, அவர்களுடைய சகோதரரான ஹிமான்ஷு சிங் (18), உறவினரான ரிஷப் சிங் (24), அவரது மனைவியான சுலேகா சிங் (22) ஆகியோ தண்ணீரில் விழுந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்திருக்கிறார்கள்.

அவர்களைப் பின் தொடர்ந்து சகோதரர்களான அபய் சிங் (22) மற்றும் ரத்னேஷ் சிங் (26) ஆகியோரும் தண்ணீரில் குதிக்க, ஆழம் அதிகமாக இருந்ததால், சிறிது நேரத்துக்குள் அனைவருமே தண்ணீரில் மூழ்கியிருக்கிறார்கள். அருகிலிருந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளை அழைக்க, மீட்புக்குழுவினர் தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள்.

ஆனால், அவர்களால் அன்று மூன்று பேரின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. சுலேகா மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். பின்னர், திங்கட்கிழமை மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுற்றுலா சென்ற இடத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், செல்பி மோகத்தால் தொடர்ந்து பலர் உயிரிழந்துவரும் விடயம் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஆம்புலன்ஸ் தரமறுத்த மருத்துவமனை… இறந்த 2 வயது தம்பியின் சடலத்தை கையில் தூக்கிச் சென்ற 10 வயது சிறுவன்!!

உத்தர பிரதேசத்தில்..

உத்தர பிரதேசத்தில் இறந்த 2 வயது தம்பியின் சடலத்தைக் கையில் எடுத்துச் செல்லும் 10 வயது சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது 2 வயது குழந்தை கார் மோதி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது. இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, பிரவீன் குமாரின் 2 வயது குழந்தை வளர்ப்புத் தாய் சீதாவுடன் டெல்லி – சஹ்ரான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தூக்கிக் கொண்டிருந்துள்ளான். அப்போது குழந்தை தொடர்ந்து அழுதுள்ளது. இதனால் சீதா குழந்தையைத் தள்ளி விட்டுள்ளார்.

அந்தநேரம் பார்த்து அந்த வழியாக வந்த கார் ஒன்று குழந்தை மீது ஏறியுள்ளது. இந்த விபத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சீதாவைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின் உடல் பாக்பத் மாவட்ட அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் மகனின் உடலை வாங்குவதற்காக பிரவீன் குமாரும், 10 வயதாகும் மூத்த மகன் சாகர் குமாரும் வந்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அப்போது பிரவீன் குமார்,”எங்களது கிராமத்திற்கு 50 கிலோ மீட்டர் செல்ல வேண்டியுள்ளது. ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளனர்.

இதனால் வேறு வழியில்லாமல் தந்தையும், 10 வயது மகனும் 2 வயது குழந்தையின் உடலை ஒருவர் மாற்றி ஒருவர் கைகளிலேயே தூக்கிச் சென்றுள்ளனர். இதைச் சாலையில் சென்றவர்கள் பார்த்து தங்களின் செல்போன்களில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக இதேபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த மாநிலத்தில் சுகாதாரத்துறை எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதை இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து உணர்த்தி, எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்வெட்டு நேரம் குறைப்பு : வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு!!

மின்வெட்டு..

நாட்டில் நாளைய தினம் முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை 1 மணித்தியாலங்கள் மாத்திரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு இரவில் 1 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு பிற்பகல் வேளை ஒரு மணி நேரமும் இரவில் 1 மணி நேரமும் மின்வெட்டப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நிர்வாணப்படுத்தி பணம் பறித்த கும்பல்… இன்ஸ்டாகிராம் பெண் மீது கொண்ட நட்பால் தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்!!

இன்ஸ்டாவில்..

இன்ஸ்டாமூலம் அறிமுகமான பெண்ணுடன் தனியே இருக்க சென்ற தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி பணம், நகை பறித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் சமூக வலைதளத்தில் அதிகம் ஆர்வமுடையவராக இருந்துள்ளார்.

அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருமணமான இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். சிறிது காலத்திலேயே தொழிலதிபருடன் மிகவும் நெருக்கமான அந்த பெண் தனது கணவர் துபாயில் இருப்பதாகவும், தான் இங்கு வாய்ப்பட்ட தாயுடன் தனியாக இருப்பதாகவும் கூறி பழகி வந்துள்ளார்.

பின்னர் ஒருநாள் நீங்கள் என்னுடைய வீட்டுக்கு வந்தால் தனிமையில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதனால் சபலமுற்ற அந்த தொழிலதிபர், பாலக்காடு அருகே யாக்கரை என்ற இடத்திலுள்ள அந்த பெண் அனுப்பிய முகவரிக்கு சென்றுள்ளார்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்த அந்த வீட்டுக்குள் அவர் சென்றதும் அந்த பெண் தனியாக வீட்டில் இருந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் பேசிவிட்டு பெண்ணுடன் படுக்கையறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென வீட்டில் நுழைந்த 5 மர்ம நபர்கள் தொழிலதிபரை அடித்து அவரை மிரட்டி நிர்வாணப்படுத்தியுள்ளனர்.

பின்னர் நிர்வாணமாக அவரை புகைப்படம், வீடியோ எடுத்த அவர்கள், அவர் அணிந்திருந்த 4 சவரன் செயின், செல்போன், ஏடிஎம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், கார், ரூ10 ஆயிரம் பணம் போன்றவற்றை பறித்துள்ளனர்.

பின்னர் கூடுதல் பணம் கேட்டு அந்த கும்பல் தொழிலதிபரை மிரட்டியுள்ளது. இதனால் வேறு வழியின்றி கொடுங்கையூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றால் பணம் தருவதாக அவர் கூறியுள்ளார். இதன் பின்னர் அவரை வாகனத்தில் ஏற்றிய அந்த கும்பல், அவர் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளது.

ஆனால், செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்தியபோது அதில் இருந்து தொழிலதிபர் தப்பித்து காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் பேரில் வழக்கு பதிவு செய்த போலிஸார் தொழிலதிபரை ஏமாற்றி பணம் பறித்த யூடியூப் நடத்திவரும் கணவன் மனைவி உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

61 வயதில் 28 வயது பெண்ணை திருமணம் செய்த முதியவர் : வைரலாகும் காணொளி!!

புதுச்சேரியில்..

இந்தியாவின் புதுச்சேரியில் 61 வயதான நபர் ஒருவர் 28 வயது பெண்ணை திருமணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. புதுச்சேரியை சேர்ந்த முதியவர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.

61 வயதான இவர் தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி இறந்ததால் தனிமையில் வாடுவதாகவும், குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் புலம்பியுள்ளார்.

அவரது கஸ்ரத்தை தீர்க்க எண்ணிய உறவினர்கள் , அப்பகுதியை சேர்ந்த கணவரை இழந்த 28 வயதான இளம் பெண்ணிடம் பேசி முதியவரை திருமணம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அண்மையில் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பாக அந்த கோவிலின் அறங்காவல் குழுவினர் தரப்பில் கூறுகையில்,

இருவரின் பெயர், எந்த ஊர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. அவர்கள் மேஜரா என்பதை மட்டும்தான் நாங்கள் பார்த்தோம். மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள எம்எல்ஏ ஒருவரின் சிபாரிசு கடிதமும் பெற்று வந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்டு நாங்கள் திருமணம் செய்து வைத்தோம். மணப்பெண்ணுக்கு 28 வயதாகின்றது மணமகனுக்கு 61 வயதாகின்றது என கூறியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு 2.5 கோடி ரூபாய் முதியவர் தரப்பிலிருந்து வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம் அந்த பெண் முதியவரை திருமணம் செய்து கொண்டு பிரான்ஸ் நாட்டில் செட்டில் ஆகலாம் என்பதற்காக அவரை திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.

ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த இளம் தாய்!!

புத்தளம் வைத்தியசாலையில்..

புத்தளம் வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் முறையாக கர்ப்பிணி தாய் ஒருவர் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். புத்தளம் பாலாவி கரம்பை முனிஸ்தியாபுரம் பிரதேசத்தை சேர்ந்த,

24 வயதான இளம் தாய் இந்த குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சுமித் அன்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார். ஒரு ஆண் குழந்தையையும் மூன்று பெண் குழந்தைகளையும் தாய் பெற்றெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிறந்துள்ள இந்த குழந்தைகள் தற்போது புத்தளம் வைத்தியசாலையின் சிறார் நோய்கள் தொடர்பான சிறப்பு மருத்துவர் சூரின் ஜெயவர்தனவின் கண்காணிப்பின் கீழ் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

இலங்கையில் சடுதியாக குறைவடைந்த தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 614,729 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,690 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 173,500 ஆகும்.

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 19,890 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 159,100 ஆகும்.

21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 18,980 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 151,850 ரூபாய் ஆகும்.

பல்கலைக்கழக மாணவனின் விபரீத முடிவு : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

பல்கலைக்கழக மாணவன்..

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனைப் பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட குறித்த மாணவனின் சடலம் 5 நாட்களின் பின்னர் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர் கடந்த 26ஆம் திகதி மாலை 3 மணியளவில் பாலத்தில் இருந்து குதித்துள்ளார். சம்பவம் நடந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு சடலம் கண்டெடுக்கப்பட்டமையால் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலத்திற்கு அருகில் பையை வைத்துவிட்டு பாலத்தில் இருந்து கீழே குதித்த மாணவனைப் பார்த்த நபர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும், கடற்படையினரும் ஐந்து நாட்களாக ஈடுபட்டனர். நுவன் லக்ஷித தேவசுரேந்திர என்ற 24 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

இவர் எஹலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த மாணவன் கொழும்பு றோயல் கல்லூரியில் உயர்தரத்தில் அதி கூடிய Z புள்ளிகளை பெற்று சித்தியடைந்ததன் பின்னர் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ளதாக பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொறியியல் பீட மூன்றாம் வருடப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு வீடடிற்கு சென்ற மாணவன் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு திரும்பும் போது மகாவலி ஆற்றில் குதித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூன்று நண்பர்களுக்கு மூன்று உணவு பார்சல்களுடன் மகன் வீட்டை விட்டு வெளியேறியதாக மாணவனின் தாய் தெரிவித்துள்ளார். மாணவனின் மடிக்கணினி, பல்கலைக்கழக அடையாள அட்டை மற்றும் வீட்டில் இருந்து கொண்டு வந்ததாக கூறப்படும் மூன்று உணவுப் பார்சல்கள் பாலத்திற்கு அருகில் இருந்த பையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாணவன் மன அழுத்தத்திற்காக மாத்திரைகள் பெற்றுக் கொண்டார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் 8 மாணவிகள் 3A சித்திகளைப் பெற்று சாதனை!!

இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில்..

வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் பல மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

உயிரியல் பிரிவில் சகானா சத்தியசீலன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 2வது இடத்தினையும் சஜீவா ஜெயகாந்தன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 4வது இடத்தினையும் மதுமை நந்தகுமார் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 7வது இடத்தினையும்,

லவிசாளினி பீற்றர் நகுல்ராஜ் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 9வது இடத்தினையும், கவிதா நகுலேஸ்வரன் 2ஏ சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 11வது இடத்தினையும் பிரனவி சிவகுமார் 2ஏபி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 13வது இடத்தினையும் கம்சனா ரஞ்சன் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 14வது இடத்தினையும்,

சாம்பவி குகனேஸ்வரன் 2ஏபி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 15வது இடத்தினையும் அர்ச்சனா விக்கினேஸ்வரன் 2ஏ சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 17வது இடத்தினையும் சப்திகா தயாந்தராஜா ஏ2பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 18வது இடத்தினையும் சகானா ராசன் எல்மன்ட் 2ஏ பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 20வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.

கணிதப் பிரிவில் மதுசாயினி தயாளநேசன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 2வது இடத்தினையும் சயனிகா சஜீவ் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 3வது இடத்தினையும் வர்ணயா உதயராஜ் ஏ2பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 13வது இடத்தினையும் தர்சிகா குகநேசன் 2ஏ சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 16வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.

வர்த்தகப்பிரிவில் தர்கினி நவநீதன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 2வது இடத்தினையும் ஜெஸ் ரீனா ஒலிவியா ஜெயரத்னம் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 6வது இடத்தினையும் தர்மிளா கலைச்செல்வன் 2ஏபி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 20வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.

பயோ டெக் பிரிவில் சியாமளா ஜெயராஜ் பி2சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 8வது இடத்தினையும் கயானா சத்தியசீலன் 3சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 9வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.

அத்துடன் பல மாணவர்களும் திறமை சித்தியினை பெற்று பல்கலைக்கழகத்திற்குதெரிவாகியுள்ளனர். இம் மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

காதல் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி : காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன போலீஸ்!!

மயிலாடுதுறையில்..

மயிலாடுதுறை அருகே முழையூர் மண்தாங்கி திடல் பகுதியை சேர்ந்த ராமசாமி மகள் ரம்யா (வயது 28). இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் ஒரு கம்பெனியில் வேலை செய்தபோது, அங்கு ஒரு பேக்கரியில் மாஸ்டராக பணிபுரிந்த நெல்லையை சேர்ந்த ஜோசப் மகன் குமார் (36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குமார் தொடர்ந்து குடிபோதையில் தகராறு செய்வதும், கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்வதுமாக இருந்துள்ளார்.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது சொந்த ஊரில் தாயாருடன் வசித்து வந்த ரம்யா மயிலாடுதுறையில் உள்ள பேக்கரி ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு குமார் குடிபோதையில் ரம்யா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரம்யா அரிவாளால் தலையில் வெட்டியதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார்.

இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் ரம்யாவை கைது செய்தனர்.

திருமணமான இரண்டு நாளில் கணவர் கண்முன்னே உயிரிழந்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருச்செங்கோட்டில்..

திருமணமான இரண்டே நாளில் புதுமணப்பெண் விபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது கணவர் கதறி அழுதுள்ள சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. திருச்செங்கோடு மாவட்டம் புளியம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அதே பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட ராமகிருஷ்ணா மற்றும் ஜீவிதா ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பைக்-கார் மோதிய விபத்தில் பைக்கில் பயணம் செய்த சுப்பிரமணி, சுரேஷ் காரில் பயணம் செய்த ஜீவிதா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

ஜீவிதாவுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் மணமான இரண்டே நாட்களில் கணவன் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வரதட்சணையை கேட்டு கொடுமை செய்த கணவன்… இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

சேலத்தில்..

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (29). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் சேத்தமங்கலத்தை சேர்ந்த அரவிந்த் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

லாரி உரிமையாளரான அரவிந்துக்கு மது அருந்தும் பழக்கம் அதிகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணம் ஆன இரண்டு மாதத்திலேயே குடும்பத்தகராறு ஏற்பட்டு மனோன்மணி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மேலும் அவர் பெற்றோர்களிடம் அவரது கணவர் குடித்துவிட்டு வந்து டார்ச்சர் செய்வதால் இனி கணவனுடன் வாழ மாட்டேன் என்று கூறி பெற்றோர்களுடனே இருந்துள்ளார்.

தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த மனோன்மணி நேற்று மாலை அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் உடம்பில் அவரே தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது ஒரு புறம் இருக்க மனோன்மணி மருத்துவமனையில் இருக்கும்போது கணவர் செய்த சித்திரவதை குறித்து பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில், தனது கணவர் தினமும் மது அருந்திவிட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், இரவு முழுவதும் தூங்கவிடாமல் டார்ச்சர் செய்து வந்ததாகவும், தனக்கே தெரியாமல் தனக்கு ஊசிகள் போட்டு மயக்கம் அடைய வைத்து ஆடைகளை கிழித்து சித்திரவதை செய்ததாகவும் அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் கூறி உள்ளார்.

இது தொடர்பாக மனோன்மணியின் தம்பி ராஜேந்திரன் கூறுகையில், திருமணமான இரண்டு மாதத்தில் பலமுறை அவரது சகோதரியை அரவிந்த் அடித்து துன்புறுத்தி நகை கேட்டு விரட்டியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மனோன்மணி வீட்டுக்கு வந்த பிறகு அவர்கள் கொடுத்த 35 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்க பணத்தை கேட்டபோது தர மறுத்து விட்டதாகவும் கூறினார்.

மேலும் அரவிந்தன் சைக்கோ போன்றே நடந்து கொண்டதாகவும், தொடர்ந்து சித்திரவதை செய்ததால் தனது சகோதரி தாய் வீட்டிற்கு வந்ததாகவும் கணவர் மனம் மாறி சகோதரியை அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்து இருந்ததால் இது தொடர்பாக புகார் அளிக்வில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால் தற்போது மனோன்மணி இறந்ததை அடுத்து போலீசார் முறையான பிரிவில் வழக்கு பதிவு செய்யாததால் அவர் சடலத்தை வாங்க மறுத்து விட்டோம் எனக் கூறியுள்ளார்.

தோழியை ஏமாற்றி 36 லட்சம் மோசடி செய்த இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

சென்னையில்..

சென்னை அம்பத்தூர் சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவர், அரசு போக்குவரத்து துறையில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அருணா (வயது 36).

இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுந்தரி என்ற தோழி மூலம் அதே பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற எமிமா (30) என்பவர் அருணாவுக்கு அறிமுகம் ஆனார். அப்போது பிரியா, தான் குடிசை மாற்று வாரியத்தில் வேலை செய்வதாகவும், அங்கு அரசு ஒதுக்கும் வீட்டை வாங்கி தருவதாகவும் அருணாவிடம் ஆசை வார்த்தை கூறினார்.

அதை நம்பிய அருணா, முதல் கட்டமாக பிரியாவிடம் ரூ.30 ஆயிரம் கொடுத்துள்ளார். பின்னர் வீடு கிடைத்து விட்டதாகவும், அடுத்த கட்டமாக ரூ.6 லட்சம் தரவேண்டும் எனவும் பிரியா கேட்டார்.

அருணாவும், அவரிடம் ரூ.6 லட்சம் கொடுத்தார். அத்துடன் அதே பகுதியில் உள்ள மேலும் 18 பேரிடமும் இதுபோல் வீடு வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.30 லட்சம் வரை பிரியா வாங்கி உள்ளார்.

ஆனால் சொன்னபடி வீடு வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் பிரியா ஏமாற்றிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் பாதிக்கப்பட்டவர்கள் அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அலமேலு, 19 பேரிடம் இருந்து ரூ.36 லட்சம் மோசடி செய்த பிரியாவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தார்.

தரையில் கால் பட்டாலே மயக்கம் வந்துவிடும்.. 23 மணி நேரம் படுக்கையில் கழிக்கும் பெண் : வினோத காரணம்!!

புவி ஈர்ப்பு..

ஒரு நாளைக்கு சுமார் 23 மணி நேரம் வரை கட்டிலிலேயே இளம்பெண் கழித்து வரும் நிலையில், இதற்கான காரணம் பலரையும் மிரள வைத்துள்ளது. Maine அருகே அமைந்துள்ள Bangor என்னும் பகுதியைச் சேர்ந்தவர் Lyndsi Johnson. 28 வயதாகும் இந்த பெண்ணுக்கு மிக அரிய வகை பிரச்சனை ஒன்று உள்ளது.

Postural Tachycardia என்னும் தொற்று மூலம் Lyndsa பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் காரணமாக அவர் உட்காரும் போதோ அல்லது நிற்கும் போதோ கால் கீழே படும் சமயத்தில், அவரது இதய துடிப்பு அசாதாரண நிலைக்கு செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

அது மட்டுமில்லாமல், புவி ஈர்ப்பு (Gravity) மீதுள்ள அலர்ஜி காரணமாக தனக்கு இப்படி நிகழ்வதாகவும் Lyndsi குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து Lyndsi Johnson பேசுகையில், “எனக்கு புவி ஈர்ப்பு என்றால் ஒருவித அலர்ஜி இருக்கிறது. இது கேட்பதற்கு சற்று வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் அது தான் உண்மை.

என்னால் மூன்று நிமிடத்திற்கு மேல் எழுந்து நிற்க முடியாது. அப்படி நின்றால் மயக்கமோ அல்லது உடல்நிலை சரி இல்லாமலோ ஆகி விடும். நான் படுத்து கிடக்கும் போது மட்டும் தான் மிகவும் நன்றாக உணர்கிறேன். நாள் முழுவதும், அதாவது 23 மணி நேரம் வரை நான் படுக்கையில் தான் இருக்கிறேன்” என Lyndsi கூறி உள்ளார்.

அவரது உடல்நிலை காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு, கடற்படையில் இருந்து Lyndsi விலக வேண்டிய கட்டாயம் உருவானது. ஆறு மாதங்கள் கழித்து கடுமையான வயிற்று வலியும், வாந்தியும் இருந்துள்ளது. ஆனாலும், Lyndsi-க்கு என்ன தவறு நிகழ்ந்தது என்பதை மருத்துவர்கள் கணிக்கத் தவறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஒரு நாளைக்கு சுமார் 3 தடவை வரை அவர் மயக்கமடைவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கால் மேல் கால் போட்டு இருந்த நிலையில் தான், உணவு அருந்தவும் குளிக்கவும் அவரால் முடியும் என்றும் தெரிகிறது.

இது குணமடைய வாய்ப்பு இல்லை என்றும் அரிதான ஒன்றும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தரையில் கால் பட்டாலே, பெண்ணுக்கு மயக்கம் வந்து விடும் என்ற விஷயம், பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

பிரான்சில் இருந்து வந்து பெண்ணை கரம்பிடித்த 54 வயது நபர்.. வைரலாகும் திருமண வீடியோ!!

புதுச்சேரியில்..

அவ்வப்போது இணையத்தில் ஏதாவது வீடியோக்கள் வெளியாகி, பல விதமான கருத்துக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், தற்போது சற்று வயதான நபர் ஒருவர் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டது தொடர்பான வீடியோ, இணையத்தில் வைரலாகி பல விதமான கருத்துக்களும் இது தொடர்பாக பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில், அந்த வீடியோ தொடர்பான உண்மையான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. புதுச்சேரி பகுதியை சேர்ந்த பாக்ஸல் என்ற நபருக்கு தற்போது 54 வயதாகிறது.

இவர் பிரான்ஸ் நாட்டில் குடி உரிமை பெற்று தனது நபர்களுடன் அங்கே வசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில், புதுச்சேரிக்கு வந்திருந்த பாக்ஸல், தனது குடும்பத்தில் கணவரை இழந்து வாழ்ந்து வந்த 41 வயது பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த பாஸ்கல், அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு மீண்டும் பிரான்ஸ் கிளம்ப முடிவு செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆனால், சில பல காரணங்களால் அவர்கள் இருவரும் பிரான்ஸ் செல்ல தாமதமானதால், தற்போது வரை அவர்கள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. புதுச்சேரியில் உள்ள கோவில் ஒன்றில் இவர்கள் திருமணம் நடந்த நிலையில், சமீபத்தில் அவர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு மத்தியில், பாஸ்கலின் திருமண வீடியோக்கள் பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி, 75 வயது நபர், சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை திருமணம் செய்ததாக இணையத்தில் தகவல் வெளியானது. ஆனால், உண்மை காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ள நிலையில், இந்த ஜோடிக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்த கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் இரு மாணவர்கள் 3A சித்தி!!

வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் இரு மாணவர்கள் 3A சித்தியினை பெற்றுள்ளதுடன் மேலும் பல மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கும் தெரிவாகியுள்ளனர்.

வர்த்தகப்பிரிவில் மாணவன் கிருஷ்ணகுமார் தயாகராச சர்மா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 4வது இடத்தினையும் மாணவி நிக்சலா லக்ஸ்மனன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 19வது இடத்தினையும்,

மாணவி சதுர்சனா தங்கராசா ஏபிசி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 29வது இடத்தினையும் மாணவன் துவாரகன் பிரவீன் 2பி சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 38வது இடத்தினையும் மாணவி தேன்சிகா ரமேஷ் ஏபிசி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 46 வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.

கலைப்பிரிவில் மாணவி பகிஷா நந்தன் 2ஏ பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 23வது இடத்தினையும் மாணவி கிருஷாலினி ஜெயகுமார் ஏ 2பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 62வது இடத்தினையும் மாணவி கவிசானா கந்தவநேசன் 2ஏ சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 71வது இடத்தினையும்,

மாணவி சரண்யா புன்னியராஜ் ஏ பி சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 86வது இடத்தினையும் மாணவி சுகானா பாலசுப்ரமணியம் ஏ பி சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 94வது இடத்தினையும் பெற்றுள்ளனர்.

பௌதிகவியல் பிரிவில் மாணவன் ரங்கநாதன் நிரூபன் ஏ 2சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 25வது இடத்தினையும் மாணவன் ரத்திணமூர்த்தி சஞ்சயன் பி 2சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 27வது இடத்தினையும் மாணவன் முகுந்தரதன் கேசிகன் 3சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 53வது இடத்தினையும்,

மாணவி அனுசியா சிவசங்கர் 2சி எஸ் சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 54வது இடத்தினையும் மாணவி லயனிஹா யோகேந்திரன் 3எஸ் சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 73வது இடத்தினையும் பெற்றுள்ளமையுடன்,

உயிரியல் பிரிவில் மாணவி ஜஷிகா வாமதேவன் 2பி சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 37வது இடத்தினையும் மாணவி பாத்திமா ஷாலா சிராஜ் 2பி சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 44வது இடத்தினையும் மாணவி தர்சிகா ரங்கநாதன் 3 சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 63து இடத்தினையும் பெற்றுள்ளனர்.

அத்துடன் பல மாணவர்களும் திறமை சித்தியினை பெற்று பல்கலைக்கழகத்திற் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.