30 நிமிடம் கடற்கரை வெயிலில் உறங்கிய பெண்.. எழுந்து கண்ணாடியில் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!!

கடற்கரையில்..

கடற்கரையில் சுமார் 30 நிமிடம் வெயிலில் உறங்கிய பெண்ணின் நெற்றியில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பான செய்தி, பலரையும் பரபரப்பு அடைய வைத்துள்ளது.

லண்டனை சேர்ந்த அழகு கலைஞரான சிரின் முராத் என்ற 25 வயது பெண் ஒருவர், தனது விடுமுறையை கழிப்பதற்காக பல்கேரியா நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியிலுள்ள கடற்கரை ஒன்றில், சுமார் 21 டிகிரி செல்சியஸ் வெயிலில், ஒரு 30 நிமிடங்கள் உறங்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, எழுந்து பார்த்த சிரினுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அவரது முகம் முழுவதும் சிவந்து புண் போல தோன்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆரம்பத்தில் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சிரின், அன்றைய விடுமுறை நாளை நல்லபடி கொண்டாடியதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், மறுநாள் காலையில் எழுந்து சிரின் பார்த்த போது, அடுத்த ஒரு அதிர்ச்சியும் காத்திருந்தது.

அவரது முகத்தில் ஏதோ இறுக்கி பிடித்தது போல உணர்ந்த நிலையில், தனது நெற்றிப் பகுதியில் கை வைத்து பார்த்த போது, பிளாஸ்டிக் இருப்பது போல தோன்றியுள்ளது. இதனால், பயந்து போன அவர், உடனடியாக தனது குடும்பத்தரிடம் இது பற்றி கூறி உள்ளார்.

இதன் பின்னர், பிளாஸ்டிக் போல இருந்த தோலும் உரிய தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவர்கள் யாரையும் சிரின் அணுகவில்லை என கூறப்படும் நிலையில், ஆரம்பத்தில் இந்த தோல் பிரச்சனை தனக்கு வலியை கொடுத்ததாகவும், பின்னர் நாட்கள் செல்ல செல்ல தோல் உரிய தொடங்கியது, தனக்கு நல்ல உணர்வை கொடுத்ததாகவும் அவர் கூறி உள்ளார்.

மேலும், 7 வாரங்களாக அவரது முகத்தின் தோல் இப்படியே இருந்துள்ளது. தற்போது கன்னங்கள் மற்றும் கண்கள் அருகே மட்டும் சில தோல் பிரச்சனைகள் இருக்கிறது. அதுவும், விரைவில் குணமாகி விடும் என சிரின் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சிரின் மேலும் பேசுகையில், “உங்கள் தோல் நன்றாக இருக்கிறது. சருமத்திற்கு ஒன்றும் ஆகாது என நீங்கள் நினைத்தால், அது தவறு. உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள். நான் வழக்கமாக சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவேன்.

ஆனால், அன்று சன் ஸ்க்ரீன் பயன்படுத்த மறந்து விட்டேன்” என தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த தான் தற்போது இந்த தகவலை பகிர்ந்ததாக சிரின் தெரிவித்துள்ளார். 21 டிகிரி செல்சியஸ் வெயிலில் படுத்துக் கிடந்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நட்பு என்றால் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் – நட்பு என்றால் இதான்யா

காக்க வைத்த மருத்துவரை தாக்கிய முதலமைச்சர் மகள்.. வைரலாகும் வீடியோ!!

மிசோரம் மாநிலத்தில்..

முன்பதிவு இல்லாமல் சந்திக்க மாட்டேன் என மருத்துவர் கூறியதால் ஆத்திரமடைந்த மிசோரம் முதல்வரின் மகள் மருத்துவரை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிசோரம் மாநிலத்தில் ஜோரம்தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்றைய முன்தினம் முதலமைச்சர் ஜோரம் தங்காவின் மகள் மிலாரி சாங்டே என்பவர், அய்சால் என்ற பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கே தோல் மருத்துவ நிபுணரிடம் பரிசோதனை மேற்கொள்ள சென்றுருந்தார். அங்கே சென்ற அவர், முன்பதிவு இல்லாமல் உள்ளே சென்றதால் ‘யாராக இருந்தாலும் முன்பதிவு இல்லாமல் பார்க்கமாட்டேன்’ என்று மருத்துவர் அவரை சந்திக்க மறுத்துள்ளார்.

மேலும் வெளியே முன்பதிவு பெற்று பல மணி நேரமாக காத்திருக்கும் நோயாளிகளுக்கு வரிசையாக சிகிச்சை அளித்தும் வந்துள்ளார் அந்த மருத்துவர். இதனால் ஆத்திரமடைந்த மிலாரி, உள்ளே வேகமாக சென்று அந்த மருத்துவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

முதலமைச்சர் மகள் மருத்துவரை தாக்கியதால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான காட்சிகளை அங்கிருந்தவர்கள் தங்களது மொபைல் போன்களில் படம் பிடித்தனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதுடன் பல்வேறு தரப்பினர் கண்டங்களும் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தாக்கிய பெண்ணின் தந்தையும், முதலமைச்சருமான ஜோரம்தங்கா தனது மகளின் செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தோல் மருத்துவரிடம் எனது மகள் தவறாக நடந்ததற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். நாங்கள் குடும்பத்துடன் மருத்துவர் வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்டோம்.

அவர்கள் மிகவும் புரிந்துகொள்ளும் தன்மையுடைவர்களாக இருக்கின்றனர். எனது மகளின் இந்த செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்த மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நட்பு என்றால் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் – நட்பு என்றால் இதான்யா

 

காவல் காத்த செல்லப்பிராணிக்கு கல்லறை கட்டும் காவலர் குடும்பம்… இப்படி ஓர் நன்றிக்கடனா!!

மயிலாடுதுறையில்..

காவலர்கள் வீட்டில் காவலாளி போல் இருந்த ஒரு நாய் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து அதை புதைத்த இடத்திலேயே கல்லறை கட்ட நினைக்கும் குடும்பத்தினரின் செயல் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மகாதானபுரத்தை சேர்ந்தவர்கள் ஹரி பாஸ்கர் – கார்குழலி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், இவர்கள் இருவருமே காவல்துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் வீட்டில் 4 நாய்கள் வளர்த்து வருகின்றனர். அந்த நாய்களில் ‘சச்சின்’ என்ற நாய் மிகவும் பிரியமானதாகும். இந்த நாயானது அந்த குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, அந்த கிராம மக்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக திகழ்ந்து வந்தது.

தினமும் காலை சீக்கிரமாக எழும் இந்த பிராணியானது, வீட்டுக்காரர்களை எழுப்பிய பின் முன் கதவு கேட்டை திறந்து அங்கிருக்கும் சாலையை கடந்து ஒரு ஏரிக்கு செல்லும்.

அங்கே ஒரு சூப்பரான குளியல் போட்டு மீண்டும் அந்த நாய் சாலையை கடந்து வீடு திரும்பு. அவ்வாறு திரும்பும்போது, அங்கிருக்கும் டீ கடைக்காரர், சச்சினுக்கு தினமும் உண்பதற்காக BUN வைப்பார். அதையும் அது சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு செல்லும்.

அப்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த நாய் குளித்துவிட்டு வீடு திரும்பும்போது, சாலையை கடக்க முயன்றது. அப்படி கடந்த போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, அதன் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து நாயின் உடலை மீட்ட உரிமையாளர்கள் கண்ணீருடன் அதனை வீட்டின் அருகிலேயே இறுதிச்சடங்கு செய்து புதைத்தனர். மேலும் நாயின் மறைவிற்காக அந்த குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், ஆசையாய் வளர்த்த நாய் பரிதாபமாக உயிரிழந்ததை தாங்கமுடியாத அந்த குழந்தைகள் நாய்க்கு ஒரு கல்லறை கேட் வேண்டும் என்று பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர்.

எனவே மகன்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மறைந்த ‘சச்சின்’ என்ற நாய்க்கு புதைத்த இடத்திலேயே ஒரு கல்லறை கட்ட குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

காவலர்கள் வீட்டிலேயே காவலாளி போல் இருந்த நாயின் மறைவையடுத்து அதை புதைத்த இடத்திலேயே கல்லறை கட்டபோகும் இந்த குடும்பத்தினரின் செயல் அனைவர் மத்தியிலும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நட்பு என்றால் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் – நட்பு என்றால் இதான்யா

 

“105 குழந்தைகளை பெற்று வளக்கணும்”.. தம்பதியர் எடுத்த முடிவு.. 22 குழந்தைகள் பிறந்ததும் திடீர் திருப்பம்!!

ஜார்ஜியாவில்..

ஜார்ஜியாவின் படுமி என்னும் பகுதியில் வசித்து வருபவர் Kristina Ozturk. இளம்பெண்ணான இவர், Galip Ozturk என்ற தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார். கிறிஸ்டினா மற்றும் கலீப் தம்பதியருக்கு குழந்தைகள் என்றால் அலாதி பிரியம்.

இதன் காரணமாக, இருவரும் இணைந்து, 105 குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக, 105 குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்து அவர்கள் அனைவரையும் வளர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக, முதல் கணவர் மூலம் கிறிஸ்டினாவுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, வாடகைத் தாய் மூலம், கிறிஸ்டினா – கலீஃப் ஜோடி, மொத்தம் 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது.

இதற்காக, வாடகை தாய்க்கென மட்டுமே, சுமார் 1,68,000 யூரோ தொகையை அவர்கள் செலவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 22 குழந்தைகள் தற்போது மொத்தமாக அவர்களுக்கு உள்ள நிலையில், 105 குழந்தைகளை பெற வேண்டும் என்றும் தொடர்ந்து விருப்பப்பட்டும் வந்துள்ளனர்.

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.பிரபல தொழிலதிபரான கலீப், பண மோசடி மற்றும் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தது தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதகவும் கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.

105 பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தங்களின் இலக்காக கொண்ட நிலையில், தற்போது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதால், கனவு மட்டுமில்லாமல் தங்கள் வாழ்க்கை கூட ஸ்தம்பித்து போனதாக கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசும் கிறிஸ்டினா, தனது கணவரான கலீப் வருகைக்காக காத்திருப்பதாகவும், அந்த நாள் விரைவில் வரும் என்றும் நம்பிக்கையுடன் இருக்கிறார். அதே போல, இப்படி ஒரு நேரத்தில் தனக்கு ஆதரவாக இருப்பவர்களும் நன்றிகளை அவர் தெரிவித்துள்ளார்.

வீட்டில் இத்தனை குழந்தைகள் இருந்தும், அவரது கணவர் கலீப் இல்லாமல் இருப்பதும், அவரது குரலை கேட்காமல் இருப்பதும் தாங்கிக் கொள்ள முடியாமலும் கிறிஸ்டினா அவதிபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், வீட்டிலுள்ள அனைத்து குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காகவும் வேலையாட்கள் நிறைய பேரை கிறிஸ்டினா பணிக்கு அமர்த்தி உள்ளார். அதே போல, 22 குழந்தைகளின் செலவு என்பது வாரத்திற்கு சுமார் 4,000 யூரோக்கள் மேல் வரை ஆகும் என்றும் கிறிஸ்டினா குறிப்பிட்டுள்ளார்.

கணவர் தற்போது கைதாகி உள்ள காரணத்தினால், 105 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்கை சிறிது காலத்திற்கு மாற்றியும் வைத்துள்ளார் கிறிஸ்டினா.

நட்பு என்றால் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் – நட்பு என்றால் இதான்யா

 

‘பெண் குழந்தை பிறந்ததற்காக நான் என்ன செய்வேன்’… வீடியோ வெளியிட்ட பெண் எடுத்த விபரீத முடிவு!!

கள்ளக்குறிச்சியில்..

கள்ளக்குறிச்சியில் பெண் குழந்தை பிறந்ததால் கணவன் வீட்டால் துரத்தி அடிக்கப்பட்ட இளம்பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த பெண் அப்சா (25). இவர் கடந்தாண்டு அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் (27) என்ற இளைஞரை காதலித்து தனது பெற்றோர்களின் சம்பந்தத்தோடு திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாகவும், தனது கணவர் தஸ்தகீரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி அப்சா தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அப்சாவிற்கு பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை தனக்கு தூக்கம் வருவதாக கூறிவிட்டு வீட்டின் மேல் அறையில் ஓய்வெடுக்க செல்வதாக தாயிடம் கூறி சென்ற அப்சா மாலை தாயிடம் வந்து தனக்கு தூக்கம் வரவில்லை என்றும்; நான் எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இதில் பதறிப் போன அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியோடு அவரை திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அப்சா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார்; அப்சாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்த அப்சா எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, தனது கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட 7 பேர் தன்னை வரதட்சணை கொடுமை செய்வதாகவும், பெண் பிள்ளை பெற்ற காரணத்தினால் என்னை வீட்டில் சேர்க்காமல், பெண் பிள்ளையை கொல்லவும் சொல்கிறார்கள்..

பெண் பிள்ளையை பெற்றெடுத்ததற்கு நான் என்ன செய்வேன் என்றும், காலம் மாறிவிட்டது என்றும்; பெண் பிள்ளையைப் பெற்ற காரணத்தினால் தன்னை அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாகவும் கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேலும், என் திருமண சீர் மற்றும் எனது போன், சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்று என் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நஷ்ட ஈடு பெற்று என் குழந்தையின் வருங்காலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் அந்த கடிதத்தில் அப்சா எழுதியுள்ளார்.

மேலும் இதனையே தான் வீடியோவாக பதிவு செய்துள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அப்சாவின் தாயார் போலீசாரிடம் வரதட்சணை கொடுமை செய்து தனது மகளை தற்கொலை தூண்டிய அவரது கணவர் உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், திருமணம் நடந்து ஒரு வருடத்திற்குள் நடைபெற்ற சம்பவம் என்பதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

நட்பு என்றால் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் – நட்பு என்றால் இதான்யா

 

அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற முதல் மனிதர்.. உலகமே வியந்து பார்க்கும் இந்திய பெண் விமானி!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், இந்திய பெண் விமானி ஒருவர் இடம்பெற்றுள்ள சம்பவம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பெண் விமானியான ஜோயா அகர்வால், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஏர் இந்தியாவில் விமானியாக பணியாற்றி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏர் இந்தியாவின் போயிங் 777 விமானத்தை ஓட்டிய முதல் இளம் பெண் கமாண்டராகவும் ஜோயா அகர்வால் ஆகி இருந்தார். அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது ஜோயா அகர்வாலுக்கு அமெரிக்காவில் உள்ள விமான அருங்காட்சியகத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில், கடந்த 1980 ஆம் ஆண்டு அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டது. விமான துறையின் வரலாறு தொடர்பாக, சுமார் ஒன்றரை லட்சம் தொல்பொருள்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.

ஆனால், அதே வேளையில் இந்த அருங்காட்சியகத்தில் ஒரு மனிதர் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். அப்படி அமெரிக்க அருங்காட்சியகம் கௌரவிக்கும் வகையில், ஜோயா அகர்வால் என்ன செய்தார் என்பது குறித்து பார்க்கலாம்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ முதல் இந்தியாவின் பெங்களூர் வரை உள்ள வழித்தடம் உலகின் மிக நீளமான விமான வழித்தடம் ஆகும். அது மட்டுமில்லாமல், பனி படர்ந்த வட துருவத்தையும் உள்ளடக்கிய இந்த வழித்தடத்தில் மொத்தம் பயண தூரம் என்பது சுமார் 16,000 கிலோ மீட்டர் ஆகும்.

அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய பெண் விமானி ஜோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள் குழு, இந்த 16 ஆயிரம் கிலோமீட்டர் வழித்தடத்தை 17 மணி நேரத்தில் கடந்து சாதனை புரிந்தது.

இப்படி ஒரு சாதனை படைத்ததை கௌரவிக்கும் விதமாக தான், அமெரிக்க விமான நிலையத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் தற்போது ஜோயா அகர்வால் பெயருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பெருமைப்பட வைத்த இந்த சம்பவத்தால், ஜோயா அகர்வாலுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அருங்காட்சியத்தில் தன்னுடைய பெயர் இடம் பெற்றிருப்பது தொடர்பாக பேசும் ஜோயா அகர்வால், “அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கும் முதல் இந்திய பெண் நான் தான் என்று நம்பவே முடியவில்லை.

முன்னதாக, நான் எட்டு வயதாக இருந்த சமயத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து நட்சத்திரங்களை பார்த்து விமானியாக வேண்டும் என கனவு கண்டேன். தற்போது அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியத்தில் நான் இடம்பெற்றிருப்பது பெரும் மரியாதை.

இது எனக்கும் என்னுடைய நாட்டிற்குமான ஒரு சிறந்த உதாரணம்” என ஜோயா அகர்வால் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களும் தங்கள் கனவுகளை ஒரு போதும் கைவிடாமல் தொடர்ந்து அதனை அடைய முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் ஜோயா அகர்வால் தெரிவித்துள்ளார்.

நட்பு என்றால் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் – நட்பு என்றால் இதான்யா

 

உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சமபவம்!!

சென்னையில்..

சென்னை அயனாவரம் நாட்டு முத்தையால் கன் தெருவை சேர்ந்தவர் கலா. இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகனும், விஜய் என்ற மகனும் உள்ளனர்.

விஜய் பத்தாம் வகுப்புவரை படித்துவிட்டு தனது வீட்டின் அருகே உள்ள தனியார் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் வாட்டர் வாஷ் செய்யும் வேலை செய்துவந்தார். இந்தச் சூழலில் நேற்று காலை 9 மணிக்கு கலா வியாசர்பாடியில் உள்ள சர்ச்சுக்கு சென்றுவிட்டு மதியம் ஒரு மணிக்கு வந்தார்.

அப்போது வீட்டின்கதவு உள் பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது. எவ்வளவு நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த கலா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார் கலா.

அப்போது, வீட்டில் இருந்த ஹாலில் உள்ள மின்விசிறியில் சேலையால் விஜய் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்திருந்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தபோது மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு விஜய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அயனாவரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற அயனாவரம் போலீசார் விஜய்யின் உடலை மீட்டு அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விஜயின் உறவினர்கள் வீட்டை சோதனை செய்தபோது அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று இருந்தது அதில் விஜய் வேலை செய்த இடத்தில் அவர் ஒரு பொருளை எடுத்துவிட்டதாகவும் அதனை அந்த ஷோரூமில் வேலை செய்யும் மேனேஜர் சுனில் என்பவர் கண்டுபிடித்து அனைவரும் முன்னிலையில் முட்டி போட வைத்து அடித்ததாக எழுதியுள்ளார்.

அதனால் எனது சாவிற்கு மேனேஜர் சுனில்தான் காரணம். அம்மா உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன் என உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

வேலைக்கு சென்று வீடு திரும்பிய தாய் : காதலனுடன் பெண் எடுத்த விபரீத முடிவு!!

நாகர்கோவில்லில்..

இந்திய மாநிலமான தமிழகத்தில் இளம் காதல் ஜோடிகள் மின்விசிறியில் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் கணவரை இழந்து தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருபவர் முத்துலெட்சுமி.

இவர் சம்பவத்தன்று துணிக்கடைக்கு வேலை சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது, வீடு திறந்துள்ள நிலையில், உள்ளே மின்விசிறியில் தனது மகள் உமா கவரி(21)யும், அவருடன் மற்றொரு இளைஞரும் தூக்கிட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கியுள்ளனர்.

இதனை அவதானித்த தாய் கதறியழுத நிலையில், அக்கம்பக்கத்தினர் உடனே பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், பொலிசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து விசாரித்த போது, தந்தை இறப்பதற்கு முன்வரை குடும்பத்தோடு குமரி மாவட்டம் மருங்கூர் அருகே வசித்து வந்த நிலையில், அங்கு மோகன்(24) என்ற இளைஞருடன் உமாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது.

பின்பு தந்தை இறந்த பின்பு வேறு இடத்திற்கு மாறிய நிலையில், மோகன் காதலியை மறக்காமல் மீண்டும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். உமா படிப்பை முடித்துவிட்டு, சூப்பர் மார்கெட்டில் வேலை செய்த நிலையில், குறித்த இளைஞர் தனியார் நர்சிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

அதிக விலைக்கு முட்டை விற்றால் ஐம்பது இலட்சம் ரூபா அபராதம்!!

முட்டை..

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் முட்டைகளை விற்பனை செய்யாத அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக இன்று (22ஆம் திகதி) முதல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.

அதிக விலைக்கு விற்கப்படும் முட்டைகளுக்கு குறைந்தபட்ச அபராதம் ஒரு லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக ஐந்து லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு குறைந்தபட்ச அபராதம் ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் பழுப்பு அல்லது சிவப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையாக 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை கடந்த 19ஆம் திகதி நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டது.

எவ்வாறாயினும், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய தயாராக இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு 49 ரூபா 50 சதம் செலவாகும் எனவும், அதற்கமைய நுகர்வோர் அதிகார சபையினால் வழங்கப்படும் விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

அத்துடன் முட்டை உற்பத்தியாளர்கள் நேற்று (20ம் திகதி) பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடி முட்டை ஒன்றின் விலையை ஐந்து ரூபாவினால் குறைக்கும் தீர்மானத்திற்கு வந்துள்ளதுடன், அதன்படி இன்று (22ம் திகதி) முதல் முட்டையொன்றை 55 ரூபாவிற்கு விற்பனை செய்ய உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஒரு முட்டையை உற்பத்தி செய்த 14 நாட்களுக்குள் உட்கொள்ள வேண்டும், அந்த எண்ணிக்கைக்கு பிறகு அது சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. அதன்படி, நுகர்வோர் முட்டையை வாங்காமல், கடும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், முட்டை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

மேலும் முட்டை விலை அதிகரித்துள்ளதன் காரணமாக நாளொன்றுக்கு 20 லட்சம் வரை முட்டை விற்பனை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 65 இலட்சம் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், விலை அதிகரித்துள்ளதுடன் காரணமாக 45 இலட்சமாக குறைந்துள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

நீச்சல் குளத்தில் விழுந்து பலியான சிறுமியின் உடல் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம்!!

ரமணி..

வீட்டுவேலைக்கு சென்ற இடத்தில் நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்தார் எனக் கூறப்படும் மலையக சிறுமியின் உடலம், மஸ்கெலியா, மொக்கா தோட்டத்திலுள்ள பொது மயானத்தில் இன்று (22.08.2022) அடக்கம் செய்யப்பட்டது.

மஸ்கெலியா, மொக்கா கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள 16 வயதான ரமணி என்ற சிறுமி ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

பிரபல அரசியல்வாதி ஒருவரின் உறவினர் ஒருவரின், கம்பஹாவில் உள்ள வீட்டிலேயே குறித்த சிறுமி பணி புரிந்துள்ளார். சுமார் 6 மாதங்கள் வரை அங்கு வேலைசெய்து வந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

நீச்சல் தடாகத்தில் விழுந்து மூச்சு திணறல் ஏற்பட்டதாலேயே மரணித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்றன. சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி தங்க விலையில் சிறிது சரிவு காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.5 வீதத்தில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1745.81 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 181,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேநேரம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

என்ற போதும் செய்கூலி சேதாரத்துடன் சேர்த்து கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்க நகையொன்றின் விலையானது சுமார் 2 இலட்சம் ரூபாவாக காணப்படுகின்றதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூம் போட்டு காதலியின் கழுத்தை அறுத்த இளைஞன்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிட்டும் உண்மைகள்!!

திருவாரூரில்..

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கொட்டையூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மதியரசன் (32). இவரும், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த 28 வயதான ஒரு பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு வாலிபருடன் திருமண நிச்சயம் செய்தனர்.

இதேபோல மதியரசனுக் கும் அவரது பெற்றோர் வேறு ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்தனர். இந்த நிலையில் நேற்று மதியரசனும், காதலித்த பெண்ணும் காரில் வேளாங்கண்ணிக்கு சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கிய இருவரும் இரவு ஊருக்கு காரில் திரும்பினர்.

அப்போது திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே மேலவாழச்சேரி என்ற இடத்தில் உள்ள மூங்கில்காடு பகுதியில் அவர்கள் வந்த போது காரை நிறுத்திய மதியரசன் தனது காதலியிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என கூறியுள்ளார்.

ஆனால், மதியரசனின் காத லியோ திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மதியரசனுக்கும், அவரது காதலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மதியரசன் காருக்குள் வைத்து தனது காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்தார்.

இதில் அந்த பெண்ணுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.பின்னர் காரை மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தனது காதலியை சிகிச்சைக்கு மதியரசன் சேர்த்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூத்தாநல்லூர் காவல்துறையினர் மருத்துவமனையில் இருந்த மதியரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருமணத்துக்கு மறுத்த காதலியை வாலிபர் ஒருவர் கத்தியால் அறுத்த சம்பவம் கூத்தாநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் வீடோன்றின் பதுங்கு குழியிலிருந்து துப்பாக்கி தோட்டாக்களுடன் நால்வர் கைது – பின்னணி?

250 கோடியில் பிரமாண்ட திருமணம் : 500 பேரை வெளிநாட்டிற்கு விமானத்தில் அழைத்து சென்ற இந்திய கோடீஸ்வரர்!!

தெலங்கானாவில்..

இந்தியாவை சேர்ந்த பெரிய கோடீஸ்வரர் ஒருவரின் மகள் திருமணம் இந்தோனேசியாவில் நடைபெற்ற நிலையில் ரூ 250 கோடி செலவில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தெலங்கானாவைச் சேர்ந்த டிஆர்எஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீனிவாச ரெட்டி தான் தனது மகளுக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துள்ளார்.

இவரின் மகள் ஸ்வப்னா ரெட்டியின் திருமணம் கடந்த 12ம் திகதி இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் நடந்தது. இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள 500 பேரை சிறப்பு விமானத்தில் ஸ்ரீனிவாச ரெட்டி அழைத்துச் சென்று வியப்பில் ஆழ்த்தினார்.

அதற்கு அடுத்து கம்மம் மாவட்டத்தில் தனது மகளுக்கு வரவேற்பு விழாவை ஸ்ரீனிவாச ரெட்டி நடத்தினார். இதுதான் அனைவரையும் வாயைப் பிளக்க வைத்துள்ளது. டிஆர்எஸ் கட்சியின் முன்னாள் மக்களவை எம்.பி. ஸ்ரீனிவாச ரெட்டி. இவர் மிகப்பெரிய கோடீஸ்வரர் தொழிலதிபர்.

தனது மகளின் திருமணத்துக்கு அழைத்துச்செல்ல முடியாதவர்களை வரவேற்புக்கு அழைத்திருந்தார். திருமண வரவேற்புக்கு மட்டும் 3 லட்சம் பேர் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக கம்மம் மாவட்டத்தில் எஸ்ஆர் கார்டன் என்று புதிதாக உருவாக்கப்பட்டது. பாகுபலி திருமணம்போல் நடந்த வரவேற்பு விழாவுக்கு வருவோர் தங்குவதற்காக 30ஏக்கரில் பந்தல் போடப்பட்டது.

மேலும் விழா நடைபெறும் இடத்திற்குச் செல்ல புதிய பாலங்கள் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டது. வரவேற்புக்காக விருந்துக்காக மட்டும் 25 ஏக்கரில் உணவு பரிமாறும் டேபிள், சேர் போடப்பட்டிருந்தது ஏறக்குறைய 4 லட்சம் பேருக்கு அன்று சாப்பாடு பரிமாறப்பட்டது.

வவுனியாவில் வீடோன்றின் பதுங்கு குழியிலிருந்து துப்பாக்கி தோட்டாக்களுடன் நால்வர் கைது – பின்னணி?

 

ஆண் துணை தேவையில்லை : தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை : ஆடிப்போன ரசிகர்கள்!!

குஜராத்தில்..

நடிகை கனிஷ்கா சோனி என்பவர் ஆணுடன் வாழ விருப்பமில்லை என தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை கனிஷ்கா சோனி. இவர் நடிகர் விவேக் நடித்த பத்தாயிரம் கோடி படத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி, தெலுங்கு, இந்தி படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர்.

மேலும், மாடலாகவும் பணியாற்றிய இவர், தற்போது தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில், வெளியிட்ட வீடியோவில், “இந்திய கலாச்சாரத்தின் படி திருமணம் என்பது அன்பு மற்றும் நேர்மையுடன் தொடர்புடையது.

இதனால், என்னை நானே திருமணம் செய்துகொண்டேன். என் கனவுகள் அனைத்தும் நனவாகியுள்ளன.இந்த உலகில் என்னை மட்டுமே நான் நேசிக்கிறேன். எனக்கு ஆண் துணையே தேவையில்லை. தனியாக இருப்பதே மகிழ்ச்சி.

எனக்குள் வலிமையும் சக்தியும் கொண்ட சிவனும் சக்தியும் வசிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், கனிஷ்கா தனது நெற்றியில் குங்குமம் வைத்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.

வவுனியாவில் வீடோன்றின் பதுங்கு குழியிலிருந்து துப்பாக்கி தோட்டாக்களுடன் நால்வர் கைது – பின்னணி?

 

39 வயதில் காதல் தோல்வியால் புலம்பும் திரிஷா.. மார்க்கெட் இழந்து இப்படியொரு நிலையா?

திரிஷா..

1999ல் மிஸ் சென்னை பட்டத்தை வென்று ஜோடி படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை திரிஷா. இப்படத்தினை அடுத்து நடிகர் சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தில் கதாநாயாகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

அஜித், விஜய், விக்ரம், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழியின் முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடித்தார். சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாகியும் 39 வயதான பின்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.

இடையில் காதல் தோல்வி, திருமணம் வரை சென்ற காதல் நிச்சயம் முடிந்து நின்றுவிட்டது. இப்படி பல பிரச்சனைகளில் சிக்கிய திரிஷா இடையில் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார். அதன்பின் பல ஆண்டுகளுக்கு பிறகு 96 படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்தார்.

இணையத்தில் எப்போதாவது வரும் திரிஷா சில பதிவுகளும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருவார். இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராமில், வக்கிர குணம் கொண்டவர்கள் உங்களிடமிருந்து பேசிவதை நிறுத்தினால் அது மிகவும் நல்லதாக கருதப்படும்.

குப்பை தன்னை எப்படி வெளியே தூக்கி எறிவதை போன்று தான் அது இருக்கிறது என்ற பதிவினை போட்டுள்ளார். இதற்கு என்ன காரணம் என்று அனைவரும் குழப்பத்தில் இருந்து கருத்துக்களை கூறி வந்தனர். ஒரு வேலை மீண்டும் காதல் வலையில் சிக்கி ஏமாந்துவிட்டாரே என்று ரசிகர்கள் ஆறுதலாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

வவுனியாவில் வீடோன்றின் பதுங்கு குழியிலிருந்து துப்பாக்கி தோட்டாக்களுடன் நால்வர் கைது – பின்னணி?

 

திருமண அழைப்பிதழில் இருந்த ஆபாச இணையத்தள முகவரி : அதிர்ந்த நெட்டிசன்கள்.. பின்னணி என்ன?

திருமண பத்திரிக்கையில்..

குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் சூழ நடைபெறும் திருமணம் என்பாது மணமக்கள் இருவரின் வாழ்விலும் இரண்டாம் கட்டத்திற்கான தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.

அப்படிப்பட்ட திருமண நிகழ்வை நடத்துவதற்கு முன்பாக, நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்து பார்த்து மணமக்களின் குடும்பத்தினர் செய்வார்கள். இந்த திருமண நிகழ்வில் மிக முக்கியமான வேலையாக இருப்பது, பத்திரிக்கை அடிப்பது தான்.

மணமக்களின் பெயர்கள், பெற்றோர்கள் விவரங்கள், மண்டபம் தொடர்பான தகவல் என அனைத்துமே இந்த திருமண பத்திரிக்கை மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும்.

அப்படி ஒரு சூழ்நிலையில், திருமண பத்திரிக்கையில் இருந்த தவறு தொடர்பான செய்தி ஒன்று, இணையவாசிகள் பலரையும் அதிர வைத்துள்ளது. இது தொடர்பான விவரங்களை திருமணம் நடக்க போகும் மணப்பெண் ஒருவரே தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போதுள்ள காலத்தில், திருமண பத்திரிக்கையில், நிறைய வார்த்தைகள் இல்லாமல், மிகவும் குறைவான வார்த்தைகள் பயன்படுத்தி, அழகாக திருமண அழைப்பிதழ்களை அச்சடித்து வருகின்றனர்.

அப்படி இருந்தும், அதில் தவறு நிகழாமல் இருப்பது கிடையாது. அந்த வகையில் தான், மணப்பெண் ஒருவரும் தனது திருமண அழைப்பிதழில் உள்ள தவறு ஒன்றை சுட்டிக்காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோவின் படி, அவரது திருமண பத்திரிக்கையில், வரவேற்பு நிகழ்ச்சி தொடர்பான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கடைசி வரியில், எங்களுடைய திருமணத்தை குறித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், உள்ள இணையதள முகவரி தான், தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

திருமண விவரங்களை தெரிந்து கொள்ளும் இணையதள முகவரி இடத்தில், ஒரு ஆபாச இணையதளத்தின் முகவரி தவறுதலாக இடம்பெற்றுள்ளது. முன்னதாக திருமண நாளிதழ் தயாராகும் சமயத்தில் இந்த தவறை அந்த பெண் கவனிக்கவில்லை என்றும், வேடிக்கையாக அந்த இடத்தில் ஆபாச இணையதள முகவரியை அதில் குறிப்பிட்டு பின் எடுக்க மறந்ததால், அச்சடிக்கும் போது அப்படியே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக பேசும் அந்த மணப்பெண், “இன்று தான் என்னுடைய கல்யாண பத்திரிக்கை எனக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் ஆர்வமாக தான் இருந்தேன். ஆனால் அதிலிருந்த ஒரு தவறை கண்டுபிடித்ததும் அதிர்ந்து போனேன்.

இது பொதுவான ஒரு தவறாக இருந்தாலும் நீங்கள் இந்த தவறை செய்யாமல் கவனமாக இருங்கள்” என அந்த பெண் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், தனது தாயிடமும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரிடமும் தன்னுடைய மன்னிப்பை கேட்டுக் கொள்வதாகவும் அந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் குறித்த தகவல் இருக்க வேண்டிய இணையதள முகவரி இடத்தில், தவறுதலாக ஆபாச இணையதள முகவரி இருந்தது பற்றி, நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

வவுனியாவில் வீடோன்றின் பதுங்கு குழியிலிருந்து துப்பாக்கி தோட்டாக்களுடன் நால்வர் கைது – பின்னணி?