தண்ணீர் பிடிக்க சென்றபோது இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

ஈரோட்டில்..

பஞ்சலிங்கபுரத்தைச் சேர்ந்த ரகுநாதன் மனைவி திவ்யபாரதிக்கு வீட்டில் தண்ணீர் பிடிக்க குழாயை திறக்க சென்ற போது ஏதோ ஊசி குத்தியது போல் வலி ஏற்பட்டுள்ளது.

ஏதேனும் பூச்சி கடித்திருக்கலாம் என நினைத்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் அறிகுறிகளை பார்த்த மருத்துவர் பாம்பு கடித்து இருக்கலாம் என கூறியதால் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்கிடையே வீட்டில் திவ்யபாரதியை கடித்த பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது. பாம்பு பிடி வீரர் யுவராஜ் பாம்பை லாவகமாக பிடித்தார்.இதற்கிடையே திவ்யபாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. பயத்தில் தற்கொலை செய்த காதலன் : நடந்தது என்ன ?

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள தோடபிட்டரகல்லு என்ற பகுதியை சேர்ந்தவர் அனுபல்லவி (வயது 26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமானது.

ஆனால் அனுபல்லவி நவீன்குமாருடன் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறப்படுகிறது. அதோடு இவர் ஹேமந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலுக்கு தனது கணவர் இடையூறாக இருப்பதாக எண்ணிய அனுபல்லவி, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதற்கு அனுபல்லவியின் தாயும் உதவி புரிந்துள்ளார். அதன்படி அவர்கள் நவீன் குமாரை கொலை செய்வதற்காக ரூ.90 ஆயிரம் முன்பணமாக கொடுத்து கூலிப்படையை ஏவியுள்ளனர். கொலை செய்த பிறகு மேலும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரும் வழங்குவதாகவும் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கடந்த மாதம் (ஜூலை) 23-ம் தேதி நவீன் கூலிப்படைகளால் கடத்தப்பட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் கூலிப்படைகளோ கடத்திய நவீன்குமாரிடம் கறாராக இல்லாமல், நட்பு பாராட்டி குடித்து கும்மாளம் போட்டுள்ளனர்.

மேலும் மீதி பணம் வேண்டும் என்பதால், நவீன் மேல் கெச்சப் ஊற்றி, அதனை புகைப்படம் எடுத்து நவினை கொலை செய்து விட்டதாக அனுபல்லவிக்கு அனுப்பியுள்ளனர்.

அனுபல்லவியும் தனது கணவர் இறந்துவிட்டார் என்று மகிழ்ச்சியுடன் காதலன் ஹேமந்திடம் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்த அவர் எங்கே தனது மேல் பழி வந்துவிடுமோ என்று எண்ணி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனிடையே தனது சகோதரன் காணவில்லை என்று கடந்த ஆக்.2-ம் தேதி நவீனின் தங்கை காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, அவர்களும் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

பிறகு கடந்த ஆக்.6-ம் தேதி நவீன் தானாகவே வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தண்னை சில மர்ம நபர்கள் கடத்தியதாகவும், அவர்கள் என்னை மனம்மாறி விடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து யார் அவரை கடத்தியது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நவீனின் மனைவி மற்றும் மாமியார் சிக்கினார். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவர்களை சிறையிலடைத்தனர்.

இருப்பினும் மனம் கேட்காத நவீன், தனது மாமியாரை மட்டும் சிறையில் வைத்துக்கொள்ளுங்கள், எனது மனைவியை தான் அதிகம் நேசிப்பதால் அவரை மட்டும் விட்டு விடுங்கள் என்று காவல்நிலையத்தில் கெஞ்சியுள்ளார்.

இருப்பினும் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கணவரை கொல்ல தாயுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவிய மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் வீடோன்றின் பதுங்கு குழியிலிருந்து துப்பாக்கி தோட்டாக்களுடன் நால்வர் கைது – பின்னணி?

 

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற பிரித்தானிய இளம்பெண்.. குழந்தைகள் வெவ்வேறு நிறத்தில் இருந்ததால் அதிர்ச்சி!!

பிரித்தானியாவில்..

பிரித்தானிய இளம்பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால், அவற்றில் ஒன்று வெள்ளையினக் குழந்தையாகவும் மற்றொன்று கருப்பினக் குழந்தையாகவும் உள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய இளம்பெண் ஒருவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், அவை வெவ்வேறு நிறத்தில் இருப்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவிலுள்ள Nottinghamஐச் சேர்ந்த Chantelle Broughton(29), பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால், அவரிடம் குழந்தைகளை செவிலியர்கள் கொடுத்தபோது தன் குழந்தைகளைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார் அவர்.

காரணம், அவருடைய குழந்தைகளில் ஒன்று வெள்ளை நிறத்தில் பச்சை நிறக் கண்களுடனும், மற்றொரு குழந்தை மாநிறத்தில் பழுப்பு நிறக் கண்களுடனும் இருந்துள்ளது.

தன் குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு Ayon என்றும், பெண் குழந்தைக்கு Azirah என்றும் பெயரிட்டுள்ளார் Chantelle. இதற்கிடையில், குழந்தைகளைப் பார்ப்பவர்கள், Chantelleஇடம், இவை இரண்டும் உங்கள் குழந்தைகள்தானா என்று கேட்கிறார்களாம்.

விடயம் என்னவென்றால், Chantelleஇன் தாய்வழி தாத்தா ஒரு நைஜீரியர். அத்துடன் Chantelleஇன் கணவரான Ashton (29)உடைய பெற்றோரில் ஒருவர் ஜமைக்கா நாட்டவர் மற்றவர் ஸ்காட்லாந்து நாட்டவர்.

வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு இப்படி வெவ்வேறு நிறங்களில் குழந்தை பிறப்பது ஒரு மில்லியனில் ஒருவருக்குத்தான் நடக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

வவுனியாவில் வீடோன்றின் பதுங்கு குழியிலிருந்து துப்பாக்கி தோட்டாக்களுடன் நால்வர் கைது – பின்னணி?

 

ஒன்பது ஆண்டுகள் முன் கடத்தப்பட்ட பூஜா மீண்டும் குடும்பத்துடன் இணைந்தது எப்படி?

பூஜா..

9 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி, தற்போது மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார். நம்பிக்கை இழந்து குடும்பம் தேடுதலை நிறுத்திய பிறகும் மீண்டு வந்து குடும்பத்துடன் சேர்ந்துள்ளார் இந்த சிறுமி. 9 ஆண்டுகளாக நடந்தது என்ன? எப்படி தப்பினார் இந்த சிறுமி?

அன்று தன் அப்பாவை பார்க்கப்போகும் மகிழ்ச்சியில் இருந்தார் பூஜா கௌட். ஆனால், வீட்டில் அப்பா இருக்க மாட்டார் என்பது அவருக்குத் தெரியாது. இவர் காணாமல் போயிருந்த கால இடைவெளியில் காலமாகியிருந்தார் தந்தை.

2013ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி, பள்ளிக்குச் சென்ற ஏழு வயது சிறுமி பூஜா, காணாமல் போனார். தாய் தந்தையுடன் மும்பையில் வசித்து வந்த ஒன்றாம் வகுப்பு சிறுமி ‘ஐஸ்கிரீம்’ வாங்கித் தந்து கடத்தப்பட்டுள்ளார் என்று பின்நாட்களில் தெரியவந்தது.

ஏழு வயதில் 2013ஆம் ஆண்டு காணாமல் போனவர், 9 ஆண்டுகளுக்குப் பிறகு, 16 வயதில் வீடு திரும்பியுள்ளார். இவரது தாயார், பூனம் கௌட், தனது மகளின் நினைவாக இரவு பகலாக அழுதுகொண்டே இருந்தார். ஆனால், திடீரென்று தன்மகள் திரும்பிவந்ததும் அந்த தாயின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இதுகுறித்து பேசியபோது, “என் மகள் கிடைப்பாள் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால், அவளது அப்பா இறந்த பிறகு நம்பிக்கை கொஞ்சம் குறைந்துவிட்டது. காரணம், அவளை தேட இனி யாரும் இல்லை.

மலேசியாவில் 32 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த பெண் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் ஆனால், இப்போது நடந்திருப்பது கடவுளின் கருணை. ஒருவேளை என் மனைவி தனியா இருகிறாள், எனவே, என் மகளை அனுப்பி வை என்று அவர் மேலே போய் சண்டை போட்டிருப்பார் என்கிறார் தாயார் பூன.

பூஜா, அவரை கடத்தியவர்களால் வேலைக்கு அமர்த்தப்பட்ட இடத்தில், 35 வயதான பிரமிளா தேவேந்திராவும் வேலை செய்து வந்தார். ஒரு நாள், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தான் இளமையில் கடத்தப்பட்டதாக பிரமிளாவிடம் சொன்னார் பூஜா.

பூஜாவுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தார் பிரமிளா தேவேந்திரா. இவர்கள் என் அம்மா-அப்பா இல்லை என்று முன்பே பூஜா சொல்வாள். இவர்கள்தான் என் பெற்றோர் என்று யூட்யூபில் ஒரு வீடியோவைக் காட்டினாள்.

எனக்கு தெரிந்த பெண் ஒருவரை அந்த இடத்துக்கு அனுப்பி, அவளது பெற்றோரின் செல்போன் நம்பர் வாங்க முயற்சி செய்டேன். ஒருவழியாக, ரஃபிக் என்பவருடைய எண்ணுக்கு லைன் கிடைத்தது. ரஃபீக் பல வருடங்களாக, பூஜா குடும்பத்தின் பக்கத்து வீட்டுக்காரராக இருந்தவர்.

தனக்கு என்ன நடந்தது என்பதை நம்மிடம் விவரித்தார் பூஜா. “அன்று, எனக்கு ஒருவர் ஐஸ்கிரீம் கொடுத்தார். பின்னர் பேருந்தில் ஏற்றிவிட்டார். நான் அழுதுகொண்டே இருந்தேன். மூன்று நாட்களில், என்னை கோவாவுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ராய்ச்சூர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் நான் சேர்க்கப்பட்டேன்.

ஆரம்பத்தில் நன்றாகவே இருந்தது. பின்னர், அவர்களுக்கு (சேர்க்கப்பட்ட இல்லம்) மகள் பிறந்ததும், நடத்தை மாறிவிட்டது. என்னை உருட்டுக் கட்டையால், காலால், சப்பாத்தி கட்டையால் அடிப்பார்கள். தலைமுடியை இழுத்து உருட்டுக் கட்டையால் அடிக்கும்போது முதுகில் இருந்து ரத்தம் வழியும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, பூஜாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், தற்போது ஹாரி மற்றும் சோனி டிசூஸா என்பவர்கள் மீது மும்பை நகர் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். தற்போது இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் பூஜாவை தாக்கிய சோனி டிசூஸாவை கைதுசெய்யுமாறு பூஜாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதால், கடத்தியவர்கள் பூஜாவை எடுத்துச்சென்றுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். பின்னர் அவர்களுக்கு குழந்தை பிறந்ததும் அவர்களின் நடத்தை மாறியதாக நினைக்கிறேன் என்கிறார் மூத்த காவல் ஆய்வாளர் மிலிந்த் குர்டே.

பூஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடந்துபோன 9 ஆண்டுகள் திரும்பி வராது. ஆனால் பிரமிளாவால் பூஜா மற்றும் அவரது தாயின் வாழ்க்கையை முற்றிலும் மாறியுள்ளது. இப்போது பூஜா தனது புதிய வாழ்க்கையை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளார்.

வவுனியாவில் வீடோன்றின் பதுங்கு குழியிலிருந்து துப்பாக்கி தோட்டாக்களுடன் நால்வர் கைது – பின்னணி?

 

34 வயது லாறி ஓட்டுனரை மணந்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த 19 வயது மாணவி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் லொறி ஓட்டுனரை காதலித்த கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். கன்னியாக்குமரி மாவட்டத்தின் பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகள் வைஷ்ணவி (19). இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கருங்கல் பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வைஷ்ணவியை தேடி வந்தனர். இந்தநிலையில் மாயமான அவர் லொறி ஓட்டுனர் வினு (34) என்பவருடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

அவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது இருவரும் காதலித்து வந்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினர்.

இதனையடுத்து பொலிசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியை சேர்த்து வைத்து அனுப்பினர்கள்.

வவுனியாவில் வீடோன்றின் பதுங்கு குழியிலிருந்து துப்பாக்கி தோட்டாக்களுடன் நால்வர் கைது – பின்னணி?

 

வவுனியா ஊடகவியலாளர் எம்.ஜி.ஆர்.காந்தன் நடிப்பில் வெளியாகும் ‘பாலைநிலம்’ திரைப்படத்தின் இசை வெளியீடு!!

இசை வெளியீடு..

பாலைநிலம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு திரைப்படத்தின் நடிகரும் தயாரிப்பு முகாமையாளருமான மகேந்திரசிங்கம் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யூட் சுகியின் தயாரிப்பு , இயக்கம், கதை, திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவில் ஈழத்தின் மண்வசனையுடன் தயாரிக்கப்பட்ட ‘பாலை நிலம்’ திரைப்படத்தின் பாடல்களை படத்தின் இசை அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை பிரசாந் வெளியிட யாழ்ப்பாணத்தில் முதல் முதல் வெளியிடப்பட்ட ‘மர்மக்குழல்’ தொடர் நாடகத்தின் கதை, திரைக்கதை, இயக்குனர், அபயன் கணேஸ் பெற்றுக்கொண்டார்.

‘பாலைநிலம்’ திரைப்படத்தின் பாடல்களை ரதி , தனஞ்சயன் ரொனால் ஆகியோர் எழுதியிருந்தனர். பாடல்களை மடோனா, ஜெயந்தன், சுவர்னா, நிதுஷா, நிம்ஷா மற்றும் மதுபாலன் ஆகியோர் பாடியிருந்தனர்.

படத்தின் வர்ணக்கலவை தங்கவேல் சிவனேசன் , சண்டைப்பயிற்சி எம்.எஸ்.நந்தகுமார் ஆகியோர் பணியாற்றியிருந்தனர். நான்கு பாடல்கள் சண்டைப்பயிற்சி என ‘பாலைநிலம்’ திரைப்படம் வெகு விரைவில் வெளியிடப்படும் அனைவரும் எமது கலைப்படைப்பிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான யூட் சுகி தெரிவித்தார்.

இசை வெளியீட்டு நிகழ்வில் படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர்.காந்தன் , நடிகை சாயா, திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கறுப்பு தங்கத்துடன் ஒருவர் அதிரடியாக கைது!!

திருக்கோவில்..

புதையல் அகழ்வில் தோண்டி எடுக்கப்பட்ட கருப்பு தங்கம் என கூறி விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரக்களப்பு குளத்திற்கருகில் தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவ தினமான நேற்று மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் 24 வயதுடைய கோமாரி பகுதியை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ரூபா 20 இலட்சம் பெறுமதியான 350 துண்டுகள் அடங்கிய 113 கிராம் 180 மில்லி கிராம் எடையுடைய ஒரு தொகுதி கறுப்பு பொன்நிற கற்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாணவிகளை முத்தமிட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி!!

ஆசிரியருக்கு நேர்ந்த கதி..

சிறுவர் து.ஷ்.பி.ர.யோ.க.ம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை திக்வெல்ல பொலிஸார் கை.து செய்துள்ளனர். சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இசை ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சி.றுவர் பா.துகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் வி.சாரணைகளை மேற்கொண்ட திக்வெல்ல பொலிஸார் சந்தேக நபரான ஆசிரியரை நேற்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.

மேலும் ச.ந்தேகத்துக்குரிய ஆசிரியர் தம்மை மு.த்தமிட்டதாக இரண்டு மாணவிகளும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். கை.து செய்யப்பட்டவர் திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இசை ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்தனர்.

37000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய விமானிகள்!!

தூங்கிய விமானிகள்..

சூடான் நாட்டின் கார்டோம் நகரில் இருந்து எத்தியோப்பியா தலைநகர் அட்டிஸ் அபாபாவுக்கு எதியோபியன் ஏர்லைன்ஸ்சின் போயிங் 737-800-ET343 பறந்து சென்றுள்ளது. இந்த விமானத்தை இரண்டு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானிகள் இயக்கியுள்ளனர்.

இந்த விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போதுதான் விமானிகள் இருவரும் 25 நிமிடங்கள் அலட்சியாக தூங்கிய அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமானம் தரையிறங்க வேண்டிய அடிஸ் அபாபா நகருக்கு அருகே வந்த போதும், நீண்ட நேரம் தரையிறங்காமல் வானில் பறந்துள்ளது. தொடர்ந்து, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தினருக்கு சந்தேகம் ஏற்படவே விமானிகளை அணுகி எச்சரித்துள்ளனர்.

ஆனால், விமானிகள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராமல் தொடர்ந்து 37,000 அடி உயரத்திலேயே பறந்துள்ளது. இவர்கள் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், அதற்கான சிக்னல் கிடைக்கவில்லை.

இதனால், 25 நிமிடங்கள் குழப்பம் நிலவிய நிலையில், விமானம் அட்டிஸ் அபாபா விமான நிலையத்தின் ரன்வே பாதையை தாண்டி சென்றுள்ளது. அப்போது தான் ஆட்டோ பைலட் மோட் துண்டிக்கப்பட்டு, எச்சரிக்கை அலாரம் ஒலித்துள்ளது.

இந்த களேபரத்திற்கு பின்னர் தான் தங்களின் 25 நிமிட தூக்கத்தில் இருந்து விமானிகள் இருவரும் கண் விழித்துள்ளார்கள். நல்லவேளையாக இந்த சம்பவத்தின் காரணமாக விபத்து ஏதும் ஏற்படமால், விமான ஊழியர்கள், பயணிகள் உயிருக்கு ஆபத்து இல்லாமல் தப்பியுள்ளனர்.

விமானிகள் தூங்கியதை விமான கண்காணிப்பு அமைப்பான ADS-Bஇன் தரவுகளும் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விமானிகள் தூங்கியதை நாம் சாதாரணமாக கடந்துவிடக் கூடாது, இது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என விமான ஆய்வாளர் அலெக்ஸ் மச்செரஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாறையில் இருந்து விழுந்த பெண் பரிதாபமாக மரணம்!!

விரஷ்மி கொடித்துவக்கு..

கேகாலை மாவட்டம் மானெல்லை உத்துவன்கந்த சரதியல் பாறையில் இருந்து கீழே விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (21.08.2022) மதியம் நடந்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்று உதவி கமத்தொழில் ஆலோசகராக சேவையாற்றி வந்த 27 வயதான விரஷ்மி கொடித்துவக்கு என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தை சேர்ந்த 58 மாணவர்களை கொண்டு குழு இன்று மதியம் விநோத சுற்றுலாப் பயணமாக உத்துவன்கந்த பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது மலையேறிக்கொண்டிருந்த போது கால் வழுக்கி யுவதி கீழே விழுந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த யுவதி மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 2009வது நாளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

கையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு நீதி கோரி நாம் வீதிக்கு வந்து 2009 நாள் ஆகிவிட்டது. சர்வதேச தலையீடே உடன் தேவை என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 2009 ஆம் நாளாக சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மார்களால் தமது போராட்ட தளத்திற்கு முன்னால் குறித்த போராட்டம் இன்று (21.08.2022) மதியம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘2009 ஆம் ஆண்டு இனப் போரில் 146 ஆயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். 90 ஆயிரம் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டனர். 50 ஆயிரம் குழந்தைகள் ஆதரவற்றோர் ஆனார்கள்.

25 ஆயிரம் தமிழர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கச் செய்யப்பட்டார்கள். இதற்கு எமக்கு தேவை நீதி. இலங்கை அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லை. ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் தலையிட்டு எமக்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டும். முருகா நீயாவது கருணை காட்டு என கையெடுத்து கூம்பிட்டு கண்ணீர் மல்க’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றின் கொடிகளை ஏந்தியிருந்ததுடன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும் ஏந்தியிருந்தனர்.

வவுனியாவில் பாரவூர்தி – மோட்டார் சைக்கிள் விபத்து : இளைஞர் மரணம்!!

விபத்து..

வவுனியா ஏ9 வீதியில் ஆடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஏ9 வீதி, தேக்கவத்தைப் பகுதியில் இன்று (21.08) அதிகாலை 2 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து 97 ஆடுகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கிச் சென்ற பாராவூர்தியும், வவுனியா, தோணிக்கல் பகுதியில் இருந்து வவுனியா நகரை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் ஏ9 வீதி தேக்கவத்தைப் பகுதியில் கட்டுப்பாட்டையிழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் 22 வயதுடைய வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார என்பவராவார்.

விபத்தையடுத்து பாரவூர்தி சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதில் கொண்டு செல்லப்பட்ட 97 ஆடுகளும் மீட்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணையின் பின் சாரதியையும், ஆடுகளையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.

 

என் அம்மாவின் மரணத்திற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுங்கள் : காவல் நிலையத்தில் கண்ணீர்விட்ட மகன்!!

குடியாத்தத்தில்..

அரசுப் பள்ளியின் தையல் ஆசிரியை திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஏற்கெனவே, தந்தையை பறிகொடுத்த மகன், தாயையும் இழந்து தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் கார்டன் 2-வது கிழக்குச் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி. வயது 56. இவர் கணவர் தெய்வசிகாமணி அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்தார். 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவர் இறந்துவிட்ட நிலையில், மகன் விக்னேஷுடன் நாகேஸ்வரி வசித்து வந்தார்.

இந்த நிலையில், நெல்லூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தையல் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த நாகேஸ்வரி நேற்று மாலை தன் வீட்டு படுக்கையறையிலிருக்கும் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து, தாய் தற்கொலைக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகன் விக்னேஷ், குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

அந்த மனுவில், ‘‘என் அம்மா தையல் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த பள்ளியில், பணி செய்யவிடாமல் தலைமை ஆசிரியர் ஒருமையில் பேசி துன்புறுத்தியிருக்கிறார். இது குறித்து என்னிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். மன உளைச்சலில் இருந்த அம்மாவுக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.

கடந்த 12 நாள்கள் மருத்துவ விடுப்பிலிருந்தார். விடுப்பு முடிந்து நேற்று முன்தினம் காலை பள்ளிக்குச் சென்ற அம்மாவை, தலைமை ஆசிரியர் ஒரு மணி நேரம் நிற்க வைத்திருக்கிறார்.

அம்மா கொடுத்த மருத்துவச் சான்றிதழையும் ஏற்க மறுத்துவிட்டார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி நேற்று மதியம் 2:30 மணிக்கு தூக்குப் போட்டுக் கொண்டார். அந்த சமயம், ‘என்னை கோயிலுக்கு சென்று வா..’ என்று கூறி வெளியில் அனுப்பிவிட்டார். திரும்பி வந்த பார்த்தபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.

பின்புறமாக சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். என் அம்மாவின் சாவுக்குக் காரணமான தலைமை ஆசிரியர்மீது நடவடிக்கை எடுங்கள்’’ என்று கூறியிருந்தார். புகார் மனுவை ஏற்றுகொண்ட போலீஸார், வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த குழந்தை உயிருடன் வரும்… கனவில் கூறிய கடவுள்!!

மத்திய பிரதேசத்தில்..

ரேவா மாவட்டம் பீடி கிராமத்தை சேர்ந்த 4 வயது குழந்தை ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. தற்போது குழந்தையின் உறவினரான அனிதா கௌல், தனது கனவில் கடவுள் குல்தேவி வந்ததாகவும் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து பிடி மண்ணை எடுத்து, ஒரு சிகப்பு துணியில் கட்டி, பாதத்தில் வைத்து பூஜை செய்தால், குழந்தை மீண்டும் உயிர் பெறும் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய கிராமத்தினர் குல்தேவி கோயிலில் தேவியின் பாதத்தில் எலும்பு ஒன்றை வைத்து பூஜை செய்து வருகின்றனர். மண்ணை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று தானே கடவுள் கூறியது, எதற்கு எலும்பு? என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு பதிலளித்த அக்கிராமத்தினர், “குழந்தையை புதைத்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண் அதிசயமாக பூவாக மாறியது. பின்பு சிறிது நேரத்தில் பூ எலும்பாக மாறியது” என்றனர்.

தற்போது, ஒரு கிராமமே, அந்த எலும்பு எப்போது குழந்தையாக மாறும் என்ற ஆவலில் காத்திருக்கின்றனர். செய்தியாளர்களை சந்தித்த அனிதா, திடீரென சாமி வந்தது போல் கூச்சலிட்டு மீண்டும் குழந்தை உயிர் பெறும் என கூறினார். அதற்கு இன்னும் எத்தனை நாள்கள் ஆகும் என கேட்டதற்கு, கோபப்பட்டு கத்திய அவர், வேறு எந்த பதிலையும் அளிக்கவில்லை.

தனிமையில் வாடிய தாய் : 59 வயதில் இரண்டாவது திருமணம் செய்து வைத்த மகள்கள்!!

கேரளாவில்..

தனிமையில் தவித்த தாய்க்கு மகன் இரண்டாவது திருமணம் செய்து வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன்(59). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணவர் சில ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். மகள்களும் திருமணமான நிலையில் தாய் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தனிமையில் இருக்கும் தாய்க்கு மகள் பிரசிதா கண்டிப்பாக ஒரு துணை வேண்டும் என திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இந்த நிலையில், அதே பகுதியில் மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த திவாகரன்(63) என்பவரை தனது தாய்க்கு ஏற்ற துணை என பிரசிதா திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.

2 மகள்களுக்கு தந்தையான திவாகரன் வேளான் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர். அவரிடம் பேசிய பிரசிதா. தனது தாய்க்கு துணை வேண்டும். அது நீங்களாக இருந்தால் நல்லா இருக்கும். என உருக்கமாக பேசி இருக்கிறார்.

இதனை புரிந்துகொண்ட திவாகரனும் 2 வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். திவாகரனின் மகள்களிடமும் இது பற்றி பிரசிதா பேச அவர்களும் தந்தையின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர், தாயின் சம்மதத்துடன் திருச்சூர் திருவம்பாடி கோவிலில் இருவருக்கும் திருமணத்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து மகள் பிரசிதா தெரிவிக்கையில், அப்பா இருக்கும் போதே 2 மகள்களான எங்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. நாங்கள் கணவர் வீட்டில் உள்ளோம்.

இதனால், அம்மாவை அடிக்கடி வந்து சந்திக்க முடியவில்லை. எனவே அம்மாவின் தனிமையை போக்க வேண்டும் என அதற்காக திருமணம் ஏற்பாடு செய்து திருமணத்தை அனைவரின் சம்மதத்தோடு நடத்தினோம் என கூறியுள்ளார்.

கைத்தொலைபேசி சார்ஜர் வெடித்து கூலித் தொழிலாளி பரிதாபமாக பலி… எச்சரிக்கை செய்தி!!

ஈரோடில்..

செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கூழைமூப்பனூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 34).

BA பட்டதாரியான இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கஸ்தூரி என்ற பெண்ணுடன் திருமணமானது. தற்போது இவர்களுக்கு யஸ்வந்த், திவின் என்று இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், அர்ஜுன் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு தனது இரண்டாவது மகன் திவினை சிறிது தூரத்தில் உள்ள தாயார் வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இவரது மனைவி மற்றும் மகன் தூங்கிக்கொண்டிருந்ததால், அர்ஜுன் மற்றொரு தென்னை ஓலை வீட்டில் இவர் தூங்க சென்றிருந்தார்.

அந்த சமயத்தில் தனது மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு உறங்கியுள்ளார். அப்போது திடீரெனெ செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஓலை வீடு முழுவதுமாக தீப்பற்றிக்கொண்டது. ஏதோ சத்தம் கேட்டதும் திடீரென எழுந்து பார்த்த அர்ஜுன், வீடு தீப்பற்றிக்கொண்டதால் பதற்றமடைந்தார்.

மேலும் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சி அவருக்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அக்கமபக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வருவதற்குள் அர்ஜுன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், கருகி கிடந்த உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.