கடம்பூர் அருகே தாயை காப்பாற்ற முயன்றபோது 5 வயது சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அர்ச்சனா.
இவர் வாய் பேச முடியாதவர். இந்த தம்பதிக்கு கார்த்திக் ராஜா (5), சுபாஷ் (3) என்ற 2 மகன்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு அர்ச்சனா வீட்டின் சமையல் அறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டு சுவரில் இருந்த ஓட்டை வழியாக பாம்பு ஒன்று நுழைந்துள்ளது.
இதை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கார்த்திக் ராஜா பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம்போட்டுள்ளார். ஆனால் தாய்க்கு காது கேட்காததால் மகன் சத்தத்மபோடுவது கேட்காமல் அவர் சமைத்துக் கொண்டே இருந்துள்ளார்.
இதனால் சிறுவன் பாம்பு தனது தாயை கடித்து விடக்கூடாது என்பதற்காக அதனை விரட்ட முயற்சி செய்து உள்ளார். அப்போது பாம்பு அச்சிறுவனை கடித்துள்ளது. இதில் சிறுவன் கார்த்திக் ராஜா மயக்கமடைந்தார்.
பின்னர் மயக்கமடைந்த மகனை கண்டு அதிர்ச்சியடைந்ததாய் சிறுவனை மீட்டு கடம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயைக் காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்த சிறுவன் பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த பயிற்சி மருத்துவர் காயத்ரி கடந்த வியாழன் அன்று கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் அதன் பிறகு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்கொலை செய்துகொண்ட மாணவி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், நேற்று திருவாரூர் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் நிஷா தலைமையில் சிபிசிஐடியினர் காயத்ரி தற்கொலை செய்து கொண்ட விடுதியில் அவருடைய அறைக்கு அருகில் இருந்தவர்கள், வார்டன் வாட்ச்மேன் உள்ளிட்டவர்களை விசாரித்தனர்.
மேலும், காயத்ரி தாய் தந்தையர் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் அன்பரசன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடயவியல் நிபுணர்கள் பிணவறைக்கு வந்து பிரேதத்தை ஆய்வு செய்தார்கள்.
அவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நம்மிடம் பேசிய காயத்ரியின் பெற்றோர், காயத்ரியின் இறப்புக்கு காரணம் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கும் வார்டன் கவனக்குறைவும் காரணம் என தெரிவித்தார்கள்.
மேலும், மருத்துவ கல்லூரி முதல்வரிடம் காயத்ரி ஒரு மாதம் விடுமுறை கேட்டதாகவும் குறைந்தபட்சம் 15 நாள் விடுமுறை கேட்டதாகவும் ஆனால் மருத்துவ கல்லூரி முதல்வர் கொடுக்க மறுத்ததாகவும் விடுமுறை அளித்து இருந்தால் என் மகளை நான் காப்பாற்றி இருப்பேன் என்று தெரிவித்தார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை ஆவடி அருகே ஓடும் இரயிலில் இருந்து தவறி விழுந்த ஐஐடி மாணவி ஒருவர் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், சாம்பலூர் என்ற பகுதியை சேர்ந்தவர் மேகாஸ்ரீ (வயது 29).
இவர் Phd முடித்து விட்டு, 3 மாத ஆராய்ச்சி பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னைக்கு வந்தார். சென்னையில் உள்ள ஐஐடி-யில் சேர்ந்த இவர், அதற்கு அருகிலேயே ஒரு வீடு எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவர் தனது தோழியை பார்ப்பதற்காக ஆவடிக்கு மின்சார இரயிலில் சென்றிருந்தார். பார்த்து விட்டு மீண்டும் அதே மின்சார இரயிலில் வீடு திரும்பி கொண்டிருந்த மேகாஸ்ரீ, ஆவடிக்கும் ஹிந்து கல்லூரிக்கும் இடையே உள்ள இரயில் பாதையில் திடீரென தவறி விழுந்திருக்கிறார்.
இதில் அவரது தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இவரது சடலத்தை கண்ட இரயில்வே ஊழியர்கள், இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த அதிகாரிகள் மாணவியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாணவி தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக தருமபுரி மாவட்டம் மொரப்பூரில், இரயிலில் இருந்து தவறி விழுந்த காவலர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் விஷப்பாம்பு கடித்ததை பூரான் கடித்ததாக நினைத்த இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் திவ்யபாரதி (28). மென்பொறியாளரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் திவ்யபாரதி நேற்று காலை வீட்டு் வாசல் முன்பு இருந்த குழாயை திறந்து தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அந்த பகுதியில் குடிநீர் குழாய்கள் சுருண்டு கிடந்தது.
அதன்மேல் மிதித்த போது ஏதோ பூச்சி அவரை கடித்ததாக கூறப்படுகிறது. தண்ணீர் பிடித்து வந்த திவ்யபாரதி தன்னை பூரான் கடித்ததாக சொன்னார். இதையடுத்து கடித்த இடத்தில் மருந்து போட்டு கொண்டார்.
பின்னர் கடிப்பட்ட இடத்தில் இரத்தம் வடிந்ததோடு வலியும் அதிகமாக ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது கோதுமை நாகப்பாம்பு கடித்தது தெரியவந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யபாரதி உயிரிழந்தார்.
ஏனெனில் தாமதமாக வந்ததால் அவர் உடல் முழுவதிலும் விஷம் பரவியதால் இறந்திருக்கிறார். இதனிடையில் வீட்டின் அருகே மறைந்திருந்த பாம்பை யுவராஜ் என்ற பாம்பை பிடிப்பதில் வல்லவரான இளைஞர் பிடிக்க முயன்றார்.
அப்போது சீறி பாய்ந்த பாம்பு படமெடுத்து ஆடியது. சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு அந்த பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார். இது போன்று எந்தவொரு பூச்சி கடியையும் மெத்தனமாக எடுத்து கொள்ளாமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் காதலனை காண சென்ற மகளின் தலையை பெற்றோரே துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாடி கேட் அருகே இளம் பெண்ணொருவரின் தலை இல்லாத உடல் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் சர் பிரம்மபுரி பகுதியில் உள்ள வாய்க்காலில் இளம்பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்ட பெண் ஷாஹினா என்பது தெரிய வந்தது. உடனடியாக ஷாஹினாவின் பெற்றோரை பொலிசார் விசாரித்தனர்.
வசீம் என்பவரை காதலித்து வந்த ஷாஹினா, அவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் ஷாஹினாவின் தந்தை ஷாஹித் குரேஷியும், தாய் ஷேஹ்னாஸ் குரேஷியும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் தனது காதலனை சந்திக்க செல்ல குடும்பத்தினருக்கு தேநீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு கிளம்புவதை ஷாஹினா வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் பெற்றோருக்கு தேநீரில் தூக்க மாத்திரையை ஷாஹினா கலந்து கொடுத்துள்ளார்.
ஆனால் மகள் மீது சந்தேகம் இருந்ததால் தாய் அதனை குடிக்கவில்லை. அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியேறும்போது ஷாஹினாவை பிடித்துக் கொண்ட அவரது தாய் சண்டையிட்டுள்ளார். அப்போது பெரும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஷாஹினாவின் பெற்றோர், சொந்த மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் ஷாஹினாவின் தலை, உடலை வெவ்வேறு இடங்களில் போட்டுள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தனது மகளை இவ்வாறு கொலை செய்ததில் தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என தந்தை ஷாஹித் கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் மனைவியுடன் வந்த வாலிபரை அடித்து கொன்றுவிட்டு நகைகளை பறித்து சென்ற மர்ம கும்ப கும்பல் சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி மற்றும் முத்துமாரி தம்பதியர். கணவன் மனைவி இருவரும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிவதால் ஒரே இரு சக்கர வாகனத்தில் பணிபுரியும் இடத்திற்கு தினமும் சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று இரவு இருவரும் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீரசிகாமணியில் இருந்து வென்றிலிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று வைரவசாமி – முத்துமாரி தம்பதியினரை வழி மறித்ததாக கூறப்படுகிறது.
மேலும் காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் முத்துமாரி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 30கிராம் நகைகளை பறித்ததாக கூறப்படுகிறது. அப்போது வைரவசாமிக்கும் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பலுக்கும் கைகலப்பு ஏற்பட வைரவசாமி சரமாரியாக தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர் காரில் வந்த மர்ம கும்பல் முத்துமாரியின் நகைகளுடன் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சேர்ந்தமரம் காவல்துறையினர் வைரவசாமியின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதை தொடர்ந்து தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மனைவி முத்துமாரி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில், கணவனை கூலிப்படையை ஏவி முத்துமாரி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. மேலும், இந்த வழக்கில் இசக்கி என்பவரை பிடித்து கணவனை கொன்றதற்கு பின்னால் உள்ள காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளிச் சிறுவன் ஒருவன் திடீரென மரணமடைந்தான். அவனுடைய உடல் உறுப்புக்களை தானம் பெற்ற நபரும் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து அதிர்ச்சியளிக்கும் ஒரு உண்மை தெரியவந்தது.
மேற்கு லண்டனில் வாழ்ந்துவந்த ஹித்தேந்திரா கோதானியா, புஷ்பா தம்பதியரின் மகனான ரோஹன் கோதானியா (Rohan Godhania, 16) என்ற அந்த சிறுவனுடன் படித்த மாணவர்கள் அனைவரும் இன்று தங்கள் பள்ளிப்படிப்பை முடித்ததைக் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, ரோஹனுடைய பெற்றோர் மட்டும் அவனது இரண்டாவது ஆண்டு நினைவுநாளை அனுசரித்துக்கொண்டிருக்கிறார்கள், விடை கிடைக்காத பல கேள்விகளுடன்..
2020ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 15ஆம் திகதி, தன் பெற்றோர் மற்றும் சகோதரி அலிஷா ஆகியோருடன் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்த ரோஹன், திடீரென வாந்தியெடுக்க, மகன் சாப்பிட்ட ஏதோ ஒரு பொருள் அவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றுதான் அவனுடைய பெற்றோர் நினைத்தார்கள்.
ஆனால், சரியாக 48 மணிநேரத்திற்குப் பின் ரோஹன் இந்த உலகத்தை விட்டு, தனது அன்புக் குடும்பத்தை விட்டு கடந்துபோய்விட்டான். ஆம், வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து மறுநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோஹனுடைய உடல்நிலை வேகமாக மோசமடைய, அவனுடைய மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
ஆகத்து மாதம் 18ஆம் திகதி மாலை 5.03 மணிக்கு ரோஹனுடைய உயிர் பிரிந்துவிட்டது. இதற்கிடையில், ரோஹனுடைய உடல் உறுப்புக்களை தானம் கேட்டிருக்கிறார்கள்.
மகனை இழந்த சோகத்தில் தவித்துக்கொண்டிருந்த பெற்றோர், அவன் எதனால் உயிரிழந்தான் என்பது கூட தெளிவாக தெரியவராத நிலையில், வேறு வழியில்லாமல் உறுப்பு தானம் செய்ய சம்மதிக்கவைக்கப்பட்டார்கள்.
ஆம், ரோஹன் உயிரிழந்து 13 மாதங்களுக்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ரோஹனின் பெற்றோர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அங்கு சென்ற ரோஹனின் பெற்றோருக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தி காத்திருந்தது. அது என்னவென்றால், ரோஹனின் உடல் உறுப்பு ஒன்றை தானம் பெற்ற நபரும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவரை சோதனை செய்தபோது, அவருக்கு, ornithine transcarbamylase (OTC deficiency) என்னும் அபூர்வ மரபியல் குறைபாடு இருந்தது தெரியவந்தது. அதைவிடக் கொடுமை என்னவென்றால், அந்த நோய் ரோஹனிடமிருந்து அந்த நபருக்கு உறுப்பு தானம் மூலம் பரவியிருந்தது என்பதுதான்.
அதாவது, ரோஹன் OTC deficiencyஎன்னும் பிரச்சினையால்தான் உயிரிழந்திருக்கிறான். அதை அவன் உயிரிழந்தபோது மருத்துவர்கள் கண்டுபிடிக்கவில்லை.
ஆக, ரோஹனின் பெற்றோர் மனதில் பல கேள்விகள், தங்கள் மகனுடைய மரணத்துக்கான காரணம் ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை, மரணத்துக்கான காரணம் தெரியாமலே ஏன் அவனுடைய உடல் உறுப்புக்களை தானம் செய்ய மருத்துவமனை வற்புறுத்தியது? என்னும் கேள்விகளுக்கு அவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை.
மற்றொரு முக்கிய விடயம், தங்கள் மகன் இந்த பிரச்சினையால் உயிரிழந்தான் என்று தெரிந்திருந்தால், அவனது உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருக்காதே, அவனால் மற்றொரு நபருக்கும் பிரச்சினை ஏற்பட்டுவிட்டதே என்ற கவலையும் அவர்களுக்கு.
கோவிட் காலகட்டத்தில் ரோஹன் உயிரிழந்ததால் அவனுடைய இறுதிச்சடங்கு கோவிட் கட்டுப்பாடுகளுடன்தான் நடைபெற்ற்ள்ளது. இப்போது அவனது இரண்டாவது ஆண்டு நினைவுநாளை நினைவுகூற ஏராளமானோர் கூட முடிவுசெய்துள்ளார்கள்.
ஆனால், ரோஹனுடைய நண்பர்கள் பலர் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்ததைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், தாங்களோ, பள்ளிப்படிப்பை முடித்து பல்கலைக்கழகத்தில் சேர ஆசைப்பட்ட தங்கள் மகனுடைய நினைவுநாளை அனுசரிக்கும் நிலையிலிருக்கிறோமே என்று எண்ணி கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள் ரோஹனின் பெற்றோர்.
திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுட்குட்பட்ட 64ஆம் கட்டை பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து சம்பவம் நேற்று (19.08.2022) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் 3பேர் உயிரிழந்துள்ளதுடன் 3பேர் அதி திவிர சிகிச்சை பிரிவில் முதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 15பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உழவு இயந்திரத்தின் இணைப்பு பகுதி துண்டிக்கப்பட்டமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
31 வயது காதலன் ஒருவர் கங்கனம்-கு பகுதியில் உள்ள தனது காதலியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்த போது சண்டை ஏற்பட்டு உள்ளது.
இதில் கோபம் அடைந்த காதலன் காதலியின் விலை உயர்ந்த லூயிஸ் உய்ட்டன் (louis vuitton) ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த காதலி ரூ 1.5 லட்சம் மதிப்புள்ள தனது பேக்கில் சிறுநீர் கழித்ததற்காக நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
டிஎன்ஏ பரிசோதனையில் காதலன் பெண்ணின் ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்தது நிரூபணமாகியதையடுத்து காதலனுக்கு அபராதமாக 1,150 அமெரிக்க டாலர் (ரூ.91,634) விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .
இணையத்தில் திருமணம் சார்ந்த பல வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாவது உண்டு. அதிலும், திருமணத்தில் நடக்கும் சம்பிரதாயம், வேடிக்கையான விஷயங்கள் மிகவும் நெட்டிசன்களிடையே வைரலாவது உண்டு.
அந்த வகையில், இங்கு ஒரு திருமணத்தில் மணமகனும், மணப்பெண்ணும் நாற்காலியில் அமர்ந்திருக்க, திடீரென ப்ளான் செய்தப்படி பாட்டு இசையை கேட்டதும் மணமகன் எழுந்து ஆட தொடங்குகிறார்.
அவர் செய்வதை கண்டு மணமகள் வெட்கப்பட, சுற்றியிருந்த அனைவரும் வீடியோ எடுத்து வரவேற்கின்றனர். விடாமல் மணப்பெண்ணுக்கு நடனம் மூலம் காதலை வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அவ்வப்போது, இணையத்தில் ஏதாவது மிகவும் மனமுருக வைக்கும் நிகழ்வு அல்லது சம்பவம் தொடர்பான விஷயங்கள், அதிகம் வைரலாகி பார்ப்போர் பலரையும் மனமுடைய வைக்கும்.
அப்படி ஒரு Linkedin பதிவு தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. பாபர் ஷேக் என்ற நபர் ஒருவர், தன்னுடைய Linkedin சமூக வலைத்தளத்தில் புற்றுநோயுடன் போராடும் தனது மனைவி பற்றி உருக்கமாக சில கருத்துக்களை எழுதி பகிர்ந்துள்ளார்.
பாபர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த ஜனவரி மாதம், ஆறாம் தேதி எனது மனைவி ஜஹாராவின் மார்பில் ஒரு கட்டி போல இருப்பதை அறிந்து கொண்டோம். இதனை தொடர்ந்து அவரை மருத்துவமனை அழைத்து சென்ற பிறகு, இரண்டு வாரங்களாக மீண்டும் மீண்டும் செக்கப், ஸ்கேன் என பரபரப்பாகவே இருந்தது.
அதன் பின்னர் சந்தேகப்பட்டது போலவே மனைவி ஜஹாராவுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியானது. அதுமட்டுமில்லாமல், அவர் புற்றுநோய் பாதிப்பில் இரண்டாவது நிலையிலும் இருந்தார்.
இதன் பின்னர் ஏராளமான கவலைகளும் குழப்பங்களும் எங்களை சூழ்ந்து கொண்டது. ஆனாலும் புற்றுநோய் உடன் போராட வேண்டும் என்ற மனநிலையை நாங்கள் தயார்படுத்திக்கொண்டோம்.
என்னுடைய பதிவு என்பது வெறும் புற்றுநோய் பற்றியது மட்டும் கிடையாது. மனைவி ஜஹாரா முழு நேரமாக பிசினஸ் செய்து வந்தவர். சமீபத்தில் தான் நான், புதிதாக ஒரு வேலையில் சேர்ந்தேன்.
அப்படி ஒரு சூழலில் தான் இந்த மாதிரியான விஷயம் நடைபெற்றது. இதனால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நாங்கள் நிறைய சிரமப்பட்டோம். அதற்கேற்ற வகையில் எங்கள் அன்றாட நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டோம். மறுபக்கம் சிகிச்சை, ஸ்கேன், உணவு, தூக்கம் என பம்பரமாக சுழன்றும் வந்தோம்.
புற்றுநோய் ஜஹாராவை உடல்ரீதியாக பாதித்ததே தவிர, மனரீதியாக எதுவும் செய்யவில்லை. இதனால், மனதைரியத்துடன் அன்றாட வாழ்க்கையை எப்போதும் போல நகர்த்தினார். பிசினஸையும் விட்டு விடாமல், பழைய உத்வேகத்துடனும் பணிகளைக் கவனித்து வந்தார். இதனால் தொழிலும் நல்ல முன்னேற்றம் கண்டது.
இங்கே நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என விரும்பும் விஷயம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்வு ரீதியாக ஒரு ஆதரவு தேவை என்பதை தான். அப்படி ஒரு ஆதரவு குடும்பத்தில் இருந்து கிடைக்கும் போது புற்றுநோயுடனான போராட்டம் எளிதாகிறது.
ஜஹாராவுக்கு எங்கள் குடும்பம், நண்பர்கள், அவருடைய அலுவலக நண்பர்கள் மற்றும் எங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் கூட ஆதரவும் அன்பும் கொடுத்தனர். அனைத்து வழியிலும் இருந்து கிடைத்த ஆதரவு மற்றும் அன்பின் மூலம், ஜஹாரா எப்போதும் போல பயணித்துக் கொண்டிருக்கிறாள்” என அவரது கணவர் பாபர் ஷேக் மிகவும் உருக்கமாக தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவி குறித்து கணவர் போட்ட Linkedin பதிவு, தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. புற்றுநோய் பாதிக்கப்பட்டு வாழ்க்கையே முடங்கிப் போனது போல இருக்கும் பலரது மத்தியில், அவர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக ஜஹாரா விளங்குகிறார்.
விட்டு போனவர்களின் நினைவுகளை மறக்கடிக்க இதை செய்யுங்கள் – எம் மனதாவது சற்று அமைதியடையும்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மனைவி, மகள், மகனை கிணற்றுக்குள் தள்ளிக் கொலை செய்துவிட்டு விவசாயி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அலங்காநல்லூர் அருகில் உள்ள பெரிய இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் முருகன்(38). விவசாயி.
இவர் ஊமச்சிகுளம் அருகே தவசி புதூரில் உள்ள திமுக பிரமுகர் ஒருவரின் கொய்யாத் தோப்பு ஒன்றை குத்தகைக்கு எடுத்துள்ளார். கொய்யா தோப்பில் உள்ள வீட்டில் மனைவி சுரேகா(36), மகள் யோகிதா(16), மகன் மோகன்(11) ஆகியோருடன் வசித்து வந்தார்.
யோகிதா மதுரையில் உள்ள மகளிர் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தார். மோகன் பாலமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கொய்யா தோட்டத்தில் உள்ள கிணற்றில் கழுத்தை அறுத்த நிலையில் முருகன் நேற்று காலை மயங்கிக் கிடந்தது போலீஸாருக்குத் தெரிய வந்தது.
Police units respond on scene.
அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் உள்ளிட்ட போலீஸார், அலங்காநல்லூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றனர். கிணற்றின் படியில் மயங்கிக் கிடந்த முருகனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே கிணற்றில் பிணமாகக் கிடந்த சுரேகா, மகள், மகன் ஆகியோரது உடல்களும் மீட்கப்பட்டன. முதற்கட்ட விசாரணை தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸார் கூறியதாவது:
முருகன் பல பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார். அதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், கொய்யாத் தோப்பை குத்தகைக்கு எடுத்து கடனை அடைக்க முயன்றார். அதுவும் முடியவில்லை. கடன் பிரச்சினை அதிகரித்ததால் வேறு வழியின்றி குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
இதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு மனைவி, மகள், மகனை கிணற்றுக்குள் தள்ளி விட்டுள்ளார். பின்னர் கத்தியால் தனக்கு தானே கழுத்தை அறுத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்துள்ளார். நீச்சல் தெரிந்ததால் ஒருவழியாக கிணற்று படிக்கட்டில் ஏறிய நிலையில் அவர் மயங்கிக் கிடந்தார்.
இச்சம்பவத்துக்கு முன்னதாக ஊமச்சிகுளத்தில் உள்ள நண்பர் ஒருவருடன் மொபைல் போனில் முருகன் பேசி உள்ளார். அப்போது, கடன் தொல்லையால் குடும்பத்தினருடன் இறைவனிடம் செல்கிறோம்.
இறுதிச் சடங்குக்கு சிறிது பணம் வைத்திருக்கிறேன். அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார் என்றனர். இது குறித்து அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விட்டு போனவர்களின் நினைவுகளை மறக்கடிக்க இதை செய்யுங்கள் – எம் மனதாவது சற்று அமைதியடையும்
மகாராஷ்டிர மாநிலத்தில், கண் இமைக்கும் நேரத்தில் நான்கு மாடி கட்டிடம் ஒன்றிற்கு நேர்ந்த நிலை தெடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி, பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் போரிவாலி மேற்கு பகுதியில், இன்று மதியம் சுமார் 12:30 மணியளவில், யாரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
அங்குள்ள சாய்பாபா கோவில் அருகே சாய்பாபா நகர் என்னும் பகுதியில், கீதாஞ்சலி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடமானது, மும்பை மாநகராட்சி அதிகாரிகளால் பாழடைந்த கட்டிடம் என நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், யாரும் வசிக்கக் கூடாது என்றும் கூறி, முன்னதாக குடியேறி இருந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழ்நிலையில், மதியம் சுமார் 12:30 மணியளவில், அந்த கட்டிடம் அருகே சில வாகன ஓட்டிகள் சென்று கொண்டும், சிலர் அப்பகுதியில் சாலை ஓரம் நின்று கொண்டும் இருந்தனர்.
அப்படி ஒரு சூழ்நிலையில், திடீரென அந்த கீதாஞ்சலி கட்டிடம், அசைந்தது போல இருந்ததாக கூறப்படுகிறது. அப்படி ஒரு வேளையில், அடுத்த சில வினாடிகளிலேயே அந்த கட்டிடம் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதனைக் கண்டதும் அப்பகுதியில் கூடி இருந்த மக்கள் அனைவரும், அதிர்ச்சியில் கத்தி கூச்சல் போடவும் செய்தனர்.
முன்னதாக, யாரும் அங்கே வசிக்கவில்லை என்றாலும், யாராவது இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த சம்பவம் அறிந்து, உடனடியாக தீயணைப்புத் துறையினர், அவசர கால சேவை வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று, இணையத்தில் வெளியாகி பலரையும் பீதியில் உறைய வைத்துள்ளது. அதே போல, கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததும் அங்கிருந்த பொது மக்கள், கூச்சலிட்ட படியே அலறி ஓடியதும் பலரை பதற்றம் அடைய வைத்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது ஷாஜகான்பூர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள மெகமத்பூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சையப் அலி. இவர் அதே ஊரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதனிடையே இவருக்கு வெளியூரில் வேலை கிடைத்துள்ளது. இதனிடையே அதற்கு முன்னர் அவரது காதலியை சந்திக்க விரும்பியுள்ளார். அவர் காதலை இருக்கும் பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் இருப்பதால் காதலியை சந்திக்க விபரீதமாக சிந்தித்துள்ளார்.
அதன்படி இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கா ஒன்றை அணிந்த அவர், தனது காதலியின் வீடு இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சென்று அங்கும் இங்கும் சென்றுள்ளதால் அங்கிருந்தவர்களுக்கு இவரின் செயலின்மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், அவரை சிலர் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் குரல் ஆண் குரல் போல இருப்பதால் சந்தேகம் வலுத்து முகத்தை காட்டக்கூறியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி அவர் தனது முகத்தை காட்டியுள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் இது குறித்து கேட்டபோது தனது காதல் விவகாரத்தை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், புர்கா அணிந்து சென்ற சையப் அலியை போலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் மாலான VR மால் செயல்பட்டு வருகிறது. இதில் மூன்றாவது தளத்தில் உணவு கூடங்கள் அமைந்துள்ளது. அதில் ‘நம்ம வீடு வசந்த பவன்’ பெண் வாடிக்கையாளர் ஒருவர் தனது குடும்பத்துடன் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர்கள் ‘சோலா பூரி’ ஆர்டர் செய்துள்ளனர்.
அந்த பூரியும் வந்தவுடன் ஆசையாக உணவை எடுத்து சாப்பிட தொடங்கியபோது அதில் புழு இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பெண் உணவு கூடத்தின் உள்ளே சென்று பார்த்தபோது, பூரிக்கு பயன்படுத்திய மாவில் புழுக்கள் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் உடனடியாக உணவு பாதுகாப்பு துறையை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த சென்னை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது சமையல் கூடத்தில் இருந்த மாவு மூட்டைகள் புழு இருந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்த உணவகத்தை தற்காலிகமாக தடை விதித்ததோடு கடைக்கு அபராதமும் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் உணவக உரிமை வைத்திருக்கும் உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, மறு உத்தரவு வரும் வரை உணவகத்தை நடத்தக்கூடாது என்று எச்சரிகையும் விடுத்தனர்.
மேலும் இந்த ஒருக்கடை மேல் தொடர்ந்த புகாரின் அடிப்படையில் மற்ற கடைகளிலும் சோதனை செய்தபோது, இதுபோன்று 4 கடைகளில் உணவு பராமரிப்பு சரியில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அனைத்து கடைகளுக்கும் அபராதம் விதித்தோடு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக அசைவ உணவான பிரியாணி, ஷவர்மா உள்ளிட்ட உணவில் புழுக்கள் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது சைவ உணவிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விட்டு போனவர்களின் நினைவுகளை மறக்கடிக்க இதை செய்யுங்கள் – எம் மனதாவது சற்று அமைதியடையும்
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிக்கு லட்சுமி பரியா என்ற மகள் இருந்தார். இவர் நெல்லையில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி சாந்தியும், மகள் லட்சுமி பிரியாவும் கயத்தாறில் உள்ள குளிர்பான கடையில் பழச்சாறு ஒன்றை பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த இருவரும் குடித்துள்ளனர். பின்னர் சில மணி நேரத்திலேயே இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரையும் அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மகள் லட்சுமி பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தாய் சாந்திக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பழச்சாறு கடையிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பழச்சாறு குடித்ததில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விட்டு போனவர்களின் நினைவுகளை மறக்கடிக்க இதை செய்யுங்கள் – எம் மனதாவது சற்று அமைதியடையும்