கள்ளக்காதலனுடன் ஓடிய பெண் வீடியோ கால் செய்து கணவன் மற்றும் குழந்தைகளை கிண்டல் செய்து வந்த நிலையில் குழந்தைகளுடன் கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள துயரச் சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் குண்டூரில் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது.
கள்ளக்காதலனுடன் ஓடிய பெண் வீடியோ கால் செய்து கணவன் மற்றும் குழந்தைகளை கிண்டல் செய்து வந்த நிலையில் குழந்தைகளுடன் கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள துயரச் சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் குண்டூரில் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது.
பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது. அதில் கணவன் மனைவிக்கு துரோகம் செய்தால் கூட மனைவி குழந்தைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து அவர்களை வளர்த்து கரை சேர்த்து தாய்மையை நிரூபித்து வருகின்றனர்.
ஆனால் இங்கு ஒரு பெண் கள்ளக்காதலுக்காக கணவன் மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடு சென்றது மட்டுமல்லாமல் அடிக்கடி வீடியோ கால் செய்து அவர்களை கிண்டல் செய்து வந்துள்ள கொடூரம் நடந்துள்ளது.
முழு விவரம் பின்வருமாறு கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள பிஎச் காலனியை சேர்ந்தவர் சமியுல்லா (45) இவரது மனைவி சமீரா பானு, இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர், இந்நிலையில் திருமணத்திற்கு முன்பிருந்தே சமீராவுக்கு இளைஞர் ஒருவருடன் காதல் இருந்து வந்தது.
திருமணத்திற்கு பின்னரும் அது தொடர்ந்தது. இந்நிலையில் சமீரா கள்ளக்காதலனுடன் குழந்தை மற்றும் கணவனை விட்டு துபாய் சென்றார். மனைவி குழந்தைகளை விட்டு கள்ளக் காதலனுடன் ஓடியதால் கணவர் சமியுல்லா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
ஆனாலுப் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனை அவர் தனியாக வீடு எடுத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் மனைவி சமீரா பானு அடிக்கடி தனது குழந்தைகளுக்கு வீடியோ கால் செய்து அவர்களை இழிவாக பேசுவது, திட்டுவது, கேலி கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இது கணவர் சமீயுல்லாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. வியாழக்கிழமை காலை தனது குழந்தைகளுக்கு பூச்சி மருந்தை குடிக்க கொடுத்த அவர் தானும் குடித்தார். சிறிது நேரத்தில் சமியுல்லா துடிதுடித்து உயிரிழந்தார்.
அங்கு குழந்தைகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர், இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஒரு தாய் கள்ளக்காதலனுடன் ஓடியது மட்டுமல்லாமல் குழந்தைகளை வீடியோ காலில் கிண்டல் செய்து வந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
விட்டு போனவர்களின் நினைவுகளை மறக்கடிக்க இதை செய்யுங்கள் – எம் மனதாவது சற்று அமைதியடையும்
துரை கோபிநாத் யாழ்ப்பாணத்தின், காங்கேசன்துறை, தையிட்டி எனும் ஊரில் பிறந்து தனது ஆரம்ப கல்வியை யா/ நடேஸ்வரா கல்லூரி – காங்கேசன்துறை மற்றும் யா/ சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திலும் மேலும் யா/ தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் நிறைவு செய்தவர்.
தற்போது இவர் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நெல்லியடி பிராந்தியத்தின் பிராந்திய முகாமையாளராக கடமை புரிந்து கொண்டிருக்கின்றார். திரு.கோபிநாத் அவர்கள் என்றுமே விளையாட்டின் மீது அதீத ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்.
பாடசாலைக் காலங்களின் பின்னரான காலங்களில் கூட பேட்மின்டன், நீச்சல், கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களை தனது உடற்பயிற்சிக்காகவும் போட்டிகளுக்காகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தார்.
தனது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக மரதன் ஓடுவதை கைவிட வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டதன் பின்னர் பேட்மின்டன் விளையாடுவதிலும் காலில் ஏற்பட்ட உபாதை பெரும் சிரமங்களை அவருக்கு உண்டுபண்ணிய போதிலும்,
நீச்சலில் எனது ஆர்வத்தை முழுமையாக செலுத்தி வந்தார். இருந்தபோதிலும் வேலைப்பளு காரணமாக இதற்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரமும் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் முழுமையாக உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரங்கள் குறைவடைந்த நிலையில் உடற் பருமன் அதிகரித்து தனது மொத்த நிறை 96 கிலோகிராம் ஆக இருந்ததை உணர்ந்தவர்.
உடற்பயிற்சிக்காக ஏதாவது ஒரு விளையாட்டை தினமும் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் சைக்கிளிங்கை தனது பயிற்சிக்கான விளையாட்டாக தேர்வு செய்தார்.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சாதாரண பாவனையிலுள்ள ஒரு துவிச்சக்கர வண்டியை தனது பயிற்சிக்காக சில மாற்றங்களோடு தேர்வு செய்து தினமும் மிதிவண்டியில் தனது பயிற்சியை தொடர்ந்தார்.
அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் உலகையே திருப்பிப்போட்ட கொரோணாத் தாக்கத்தின் காரணமாக முழு நாடும் முடக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே முடங்கி இருந்த நிலையில் தனது உடற்பருமன் மேலும் அதிகரித்து இருப்பதை உணர்ந்து இதன் பின்னரான காலங்களில் தினமும் சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார்.
சைக்கிளோட்டத்தின் போது தன்னில் ஏற்படத் தொடங்கிய மாற்றங்களை அவதானித்தவர். அதன் மீது தீராத காதல் கொண்டார். திரு. கோபிநாத் அவர்கள் தனது தேடல் காரணமாகவும் நண்பர்கள் மூலமாக கிடைத்த அறிவுரைகளின் மூலம்,
சைக்கிளிங் பயிற்சியின் அடுத்த தளத்திற்கு தன்னை நகர்த்தினார். மிதிவண்டி பயிற்சிக்காக மட்டுமல்லாது தேசிய ரீதியான போட்டிகளிலும் பங்கு பற்றுவதற்காக தன்னை தயார்படுத்த ஆரம்பித்தார்.
அதற்காக சாதாரண மிதிவண்டியில் இருந்து வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாவனையிலுள்ளதுவும் போட்டிகளில் பொதுவாகப் பயன்படுத்தக்கூடியதுமான றோட் பைக் (Road Bike) என்று அழைக்கப்படக்கூடிய மிகவும் பாரம் குறைந்த காபன் எனும் உலோகத்தினாலான சைக்கிளை தனது பயிற்சிக்கும் போட்டிகளுக்குமாக தெரிவு செய்தார்.
வட-கிழக்கை மையமாக கொண்டு இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட ரைடர்ஸ் ஹாப் சைக்கிளிங் கழகத்தின் வடக்குக்கான செயற்பாட்டாளர்களான இருவரில் ஒருவராக இயங்கி வருகின்றார்.
இதன் மூலம் வட கிழக்கில் விழிப்புணர்வு செயற்பாடுகள் மூலமாக மிதிவண்டியின் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் அதன் பயன்கள் போன்றவற்றை தமிழ் பேசும் சமூகத்தின் இடையே ஊக்ககப்படுத்தியும் வருகின்றார்கள்.
இதுவரை சுமார் 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் எட்டியுள்ள திரு. கோபிநாத் அவர்கள் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெற்ற றேஸ் த பேர்ல் (Race the pearl) எனும் சைக்கிள் அஞ்சலோட்டப் போட்டியில் தனது கழகம் சார்பாக கலந்து பருத்தித்துறை முதல் வவுனியா வரையான தூரத்தை ஐவரில் முதலாமவராக (சுமார் 154Km தூரத்தை) அஞ்சல் குழுவிற்காக ஓடினார்.
இப்போட்டி இலங்கையில் மிகவும் நீளமான 614Km தூரத்தை உடைய போட்டியாகும், இது பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை வரையானது, இதனை 24 மணித்தியாலத்திற்குள் கடந்துவிட வேண்டும் இதில் இவர்களது கழகம் பங்கேற்ற முதற்தடவையே ஐந்தாமிடத்தை தக்கவைத்துக் கொண்டது.
இங்கையின் முதலாவது மருத்துவ கல்லூரியான மானிப்பாய் கிரீன் மெமோரியல் வைத்தியசாலையின் புனருத்தாரண வேலைகளுக்காக நிதி திரட்டும் சைக்கிள் ஓட்டம் இவ்வருடத்தில் கடந்த 2022 பெப்ரவரி மாதம் நடைபெற்ற றைட் போர் சிலோன் (Ride for Ceylon) கலந்து கொண்டார்.
இந்த சைக்கிளோட்டம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான தூரத்தை திருகோணமலை, வவுனியாக ஊடாக 04 நாட்கள் கொண்ட பயணமாக மைந்திருந்தது இதில் சைக்கிளோட்டியாக கலந்து தனது பங்களிப்பைச் செய்திருந்தார்.
கடந்த மாதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “பெட்ரோல் எமது வாழ்க்கையைத் தீர்மானிக்க முடியாது” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற சைக்கிள் ஓட்ட விளிப்புணர்வுப் போட்டியில் ஏற்பாட்டாளர்கள் சார்பில் கலந்து கொண்டிருந்தார்.
அதுபோலவே தனது சைக்கிளின் மேலுள்ள தீராத் தாகத்தின் காரணமாக ஏனையோருக்கும் இதனை சென்றடையச் செய்யும் நோக்கில் நேற்று கொழுப்பில் இருந்து புத்தளம் ஊடாக யாழ்ப்பாணம் வரையான 401 கிலோமீட்டர் தூரத்தை,
22 மணித்தியால மொத்த நேரத்தில் இயங்கு நேரமாக 14 மணி 45 நிமிடங்களில் பயணித்து யாழ்ப்பாணத்தை நள்ளிரவு மூன்று மணிக்கு அடைந்திருந்தாதார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது உடல் எடையை குறைப்பதற்கான ஆரோக்கியத்தை நோக்கி ஆரம்பித்த சைக்கிளிங் பயணம் இன்று அவரை தேசிய ரீதியிலான சைக்கிள் ஓட்டிகளிடையேயான அவரது அடையாளமாகும்.
இந்த பயணத்தை ஆரம்பிக்கும் போது அவரது உடல் எடை 96 Kg இலிருந்தது. ஆனால் தற்போது 74 Kg ஆக குறைந்துள்ளதமை இவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றியும் அங்கீகாரமுமாகும். சைக்கிள் ஓட்ட பயிற்சியானது சகல வயதினருக்கும் உகந்த ஒரு பயிற்சியாகும்.
இப்பயிற்சியானது தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இதய நோய்கள், குருதியில் கொழுப்பின் அளவு அதிகமாக காணப்படுதல், உயர் குருதி அழுத்தம், மூட்டு வருத்தங்கள் மற்றும் சிலவகை புற்றுநோய்களில் இருந்தும் எம்மை பாதுகாக்கின்றது என்பதே சைக்கிள் ஓட்டத்தின் மூலம் இவர் எமக்குச் சொல்லும் செய்தியாகும்.
நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டில் சில இடங்களில் அன்றாட உணவினை தயார்ப்படுத்துவதற்கு கூட முடியாத நிலையில் வாழ்க்கையினை கொண்டு செல்லும் குடும்பங்களும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன.
அந்த வகையில் பிபில ரடலியத்த கிராமத்தில் நோய்வாய்ப்பட்ட தாய் ஒருவர் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று பிள்ளைகளுடன் குடிசையில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.
அந்த குடும்ப நிலை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. கணவனை இழந்து ரதலியத்த இகியங்கொட கிராமத்தில் குடிசையில் வசித்து வரும் டி.எம்.பத்மாவதி (வயது 36) தனது தாய் மற்றும் பாடசாலை செல்லும் தனது மூன்று பிள்ளைகளுடன் பல வருடங்களாக அவல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
கிராமத்தில் உள்ள ஏரிக்கரையின் அருகே விளைந்த பயிர்களை அறுவடை செய்து, ஊரிலுள்ள வீடுகளுக்கு விற்று, ஒரு நாளைக்கு 200-300 ரூபாய் சம்பாதித்து, தன் மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார்.
மூன்று குழந்தைகளுக்கும் ஒரு வேளை உணவு கூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளதால், மூன்று வேளையும் பலாப்பழத்தை மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டுவதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட போதிய உடைகள் இல்லை என்றும், இரவில் குப்பி விளக்கை ஏற்றி படிக்க மண்ணெண்ணெய் இல்லை என்றும் அவர் தனது நிலையை கவலையுடன் தெரிவித்தார்.
முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு, அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த முஸ்லிம் இளைஞன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி ரயில் நிலையத்தில் இவ்வாறு அலைந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் பிடித்து, காலி பொலிஸாரிடம் அந்த இளைஞன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
காலி மக்ளுவவை வசிப்பிடமாகக் கொண்ட 27 வயதான முஸ்லிம் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை ரயில் நிலையத்துக்கு வந்திருந்த அவ்விளைஞன், கொழும்புக்குச் செல்வதற்காக ரயில் பற்றுச்சீட்டை பெற்றுள்ளார்.
அவரது குரல் தொடர்பில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை பின்தொடர்ந்து கண்காணித்துள்ளனர். எனினும், முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையுடன் அலைந்து திரிபவர் ஆண்ணொருவர் என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் இனங்கண்டு கொண்டனர்.
அதன்பின்னர் அவரை பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர். தன்னுடைய காதலி இன்னுமொருவருடன் தொடர்பில் இருக்கிறார் என கேள்விப்பட்டேன். அவ்விருவரும் காலி ரயில் நிலையத்துக்கு வருகின்றனர் என்றும் தகவல் கிடைத்தது.
அதன்பின்னரே, இவ்வாறு முகத்தை மறைத்துக்கொண்டு, பெண்களின் உடையில் இங்கு வந்தேன் என தெரிவித்துள்ளார். அந்த அபாயா உடையானது, அவ்விளைஞனின் தாயுடையது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அவ்விளைஞனை ரயில் பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து அகதிகளாக குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்து தற்போது ஜெர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஈழத்து திருநங்கை தனுஜா. எழுத்தாளர், பல் சுகாதார மருத்துவர் என இவருக்குப் பல முகம் உண்டு. அவர் வழங்கிய செவ்வியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
சின்ன வயதிலிருந்தே சின்ன, சின்ன விஷயங்களை ரசிக்கத் தொடங்கினேன். அதுதான் வாழ்க்கையில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துச்சு.
இன்றைய நிம்மதியைக்கூட அதுதான் கொடுத்துச்சு. பெரும்பாலும் திருநங்கைகள் குடும்பச் சூழலில் இருந்து வெளியே வருகிறதனால அவங்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் ரொம்ப கஷ்டமா இருக்கும்.
ஆனா, எனக்கு அந்தச் சூழல் இல்லை. ஏன்னா புலம்பெயர்ந்த தமிழர்கள் என்பதால் எங்க குடும்பத்தில் எப்போதும் ஒருத்தர் மிஸ் ஆகிட்டேதான் இருப்பாங்க. நான் வளரும்போது அப்பா இல்லாம அம்மாவின் வளர்ப்பில் மட்டுமே வளர்ந்தேன்.
எப்பவும் குடும்பம் என்கிற அமைப்பில் இல்லாததனால் என் முடிவை நான் எடுக்க அது ரொம்ப வசதியாக இருந்தது. பலரும் திருநங்கையாக சர்வ சாதாரணமா மாறிட்டதாக நினைக்கிறாங்க.
உண்மையில் அப்படியில்லை. அதுல உளவியல் சார்ந்த மிகப் பெரிய சிக்கல் இருக்கு. அந்தச் சமயத்தில் படிப்பையும், உளவியல் சிக்கல்களையும் பேலன்ஸ் பண்ண வேண்டிய சிக்கல் எனக்கும் இருந்தது.
சமுதாயம், குடும்பம்னு நாம யார்மீது அதிகமா அன்பு வைக்கிறோமோ அவங்களே நம்மளைப் புரிஞ்சிக்கல என்பதில் தொடங்கி எல்லாமே சிக்கலாக இருந்தது. அதனால, என் படிப்பையும் தொடர முடியாமப்போச்சு.
வாழ்க்கையில் அந்த சிக்கலில்தான் முதன்முறையாக தற்கொலைக்கு முயன்று மீண்டு வந்தேன். பிறகு வாழ்க்கையில் எந்த வித நோக்கமும் இல்லாமப் பயணப்பட ஆரம்பிச்சேன்.
காதல் எல்லாருக்கும் வர்ற ஒன்றுதான். அதுல எந்தத் தவறும் இல்லை. காதல்தான் நாம வாழுறதுக்கான அர்த்தத்தைக் கொடுக்கும். அப்படி எனக்கும் சிகிச்சைக்குப் பிறகு ஒரு காதலன் வந்தான்.
அவனுடன் என் வாழ்க்கை ஆரம்பிச்சது. இவன்தான் மருமகன்னு என் வீட்டில் எல்லாரும் அவனைக் கொண்டாடினாங்க. ஒருநாள் நீ போலியான ஆள்னு சொன்னான்.
ஒவ்வொரு நாளும் எந்த உறுப்போடு இருந்தாரோ அந்த உறுப்பே போலின்னு சொன்னான். நீ போலியானவள், நீ என்னைப் பார்த்து திமிரா பேசுறீயான்னு சொல்லி என்னைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போனான்.
என் அம்மா இன்னைக்கு வரைக்கும் என் கையால மீன் குழம்பும், புட்டும் சாப்பிட்டுட்டுப் போயிட்டு என் பிள்ளையை மருத்துவமனையில் படுக்க வச்சிட்டானேன்னு சொல்லுவாங்க.
அந்தச் சமயம் பல சிக்கல்கள் இருந்தது. அதனுடைய வெளிப்பாடாக இரண்டாவது முறையா தற்கொலை முயற்சி செய்து அதிலிருந்தும் மீண்டு வந்தேன்.
என்னைக் காதலிச்ச பலரும் என்னைப் தவறான நோக்கத்துடன் தான் பயன்படுத்தினாங்க. நம்மை யாரும் ஏத்துக்காதப்ப ஒரு ஆண் ஏத்துக்கிறான் எனும்போதே அவனுக்கு நாம அடிமைதான்.
அவனுடைய உடல் தேவையைப் பூர்த்தி செய்கிற அடிமையாகத்தான் நாம வாழுறோம். காதலன்கிட்டகூட நோ சொல்ல முடியாது. ஆனா, வாடிக்கையாளர்களிடம் நோ சொல்ல முடியும். அதனால தவறான தொழில் செய்து சம்பாதித்தேன்.
ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வாழ்க்கையிலிருந்தும் வெளி வந்தேன். படிக்க ஆசைப்பட்டு என் 27 வயதில் படிக்க ஆரம்பிச்சேன். அப்ப தான் என் சுயசரிதையை எழுதினேன். இந்தச் சமுதாயம் கொடுத்த கஷ்டத்தை எழுத்தின் மூலமா கேள்வி கேட்டப்ப மனதுக்கு நிறைவாக இருந்தது.
ஈழத்திருநங்கையின் பயணமும் போராட்டமும் என்கிற என் சுயசரிதைப் புத்தகத்தை எனது 29ஆவது வயதில் வெளியிட்டேன். இப்போது நான் ஆசைப்பட்ட மாதிரியே பல் சுகாதார மருத்துவராகிட்டேன். என் அடுத்த இலக்கு இப்ப தனியா ஒரு கிளினிக் வைக்கணும் என்பதுதான் என கூறினார் திருநங்கை தனுஜா.
சொந்த வீட்டிலேயே 550 சவரன் தங்க நகைகளை திருடி அதை மாடல் அழகிக்கு ஃபைனான்ஸியர் சேகர் கொடுத்த வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், கடந்த 8-ம் தேதி பூந்தமல்லி காவல் நிலையத்தில் தன்னுடைய அண்ணன் சேகர் (47) மீதும், அவரின் தோழி சுவாதிமீதும் புகாரளித்தார்.
அதில், தன்னுடைய மனைவியின் 300 சவரன் தங்க நகைகளையும் அம்மாவின் 200 சவரன் தங்க நகைகளையும், 100 கிராம் எடையுள்ள ஏழு தங்கக் கட்டிகளையும், லட்சக்கணக்கான பணத்தையும் சேகர் திருடி, சுவாதியிடம் கொடுத்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவுசெய்து சேகரையும் சுவாதியையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். ஆனால் தங்க நகைகளை பறிமுதல் செய்ய முடியவில்லை. இதையடுத்து இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து பூந்தமல்லி போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து பூந்தமல்லி போலீஸார் கூறுகையில், “550 சவரன் தங்க நகைகள் திருட்டு வழக்கில் கைதான மாடல் அழகி சுவாதியையும் ஃபைனான்ஸியர் சேகரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தோம். அப்போது சேகர், எவ்வளவு பணம், தங்க நகைகளை சுவாதியிடம் கொடுத்த விவரங்களைக் கூறினார்.
அதனடிப்படையில் சுவாதியிடம் விசாரித்தபோது அவர், `என்னுடன் பழகியதற்காக நகைகள், பணத்தை சேகர் கொடுத்தார். ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை சேகரின் குடும்பத்தினர் என்னை மிரட்டி வாங்கிக் கொண்டனர்.
மீதமுள்ள தங்க நகைகளையும் பணத்தையும் என்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து மாலத்தீவு, கோவா என சுற்றியதில் செலவு செய்து விட்டேன். என்னிடம் எந்த நகையும் பணமும் இல்லை’ என்று கூலாக தெரிவித்தார். சுவாதியின் ஆண் நண்பர் குறித்து விசாரித்தபோது அவன் பிளேபாய் எனத் தெரியவந்தது.
சுவாதி கைதுசெய்யப்பட்டவுடன் அவன் தலைமறைவாகி விட்டான். அவன் தங்கியிருந்த அரும்பாக்கம் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளோம். மேலும் சுவாதி அளித்த தகவலின்படி பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள (Ducati Bike) டூகாட்டி என்ற விலை உயர்ந்த பைக் ஒன்றையும் புல்லட் பைக் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளோம்.
அதோடு 100 கிராம் தங்க நகைகளையும் சிரமப்பட்டு பறிமுதல் செய்திருக்கிறோம். சேகரிடம் வாங்கிய தங்க நகைகள், பணத்தை சுவாதி, தன்னுடைய ஆண் நண்பரிடம் கொடுத்து வைத்துள்ளார். அதனால் அவனைத் தேடி வருகிறோம். அவன் சிக்கினால் மட்டுமே தங்க நகைகள், பணம் குறித்த தகவல்கள் கிடைக்கும்.
சுவாதியின் குடும்ப பின்னணியையும் விசாரித்தபோது அவரின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அம்மா, குடும்ப தலைவியாக உள்ளார். சுவாதிக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உள்ளனர். அவர்கள் படித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுவாதிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. சுவாதியின் கணவர், தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். சேகரிடமிருந்து வாங்கிய பணம், சுவாதியின் குடும்பத்தினரிடம் உள்ளதா என்று விசாரித்தபோது எந்தவித தகவலும் கிடைவில்லை.
சுவாதியின் ஆண் நண்பருக்கு இன்னும் சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் அவர்கள் மூலம் சுவாதியின் ஆண் நண்பரைப் பிடிக்க திட்டமிட்டுள்ளோம்.
சுவாதி கொடுத்த பணத்தில்தான் விலை உயர்ந்த பைக்கை வாங்கி அதில் இருவரும் வலம் வந்த தகவலும் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் சுவாதி பணம் பறிக்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது” என்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனிதா ரீகர் (வயது 32). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 10ஆம் தேதி காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றபோது அவரை ஒருகும்பல் வழிமறித்துள்ளது.
பின்னர் அவரை சூழ்ந்த அந்த கும்பல் அவரை தாக்கி அவர் மீது பெட்ரோலை ஊற்றி அவரை உயிரோடு எரித்துள்ளனர். மக்கள் அதிகம் கூடும் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், சுற்றிலும் இருந்தவர்கள் அவரை காப்பாற்றாமல் தங்கள் போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்த சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு 70 % தீக்காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். சுமார் ஒரு வாரம் சிகிச்சை பெற்றுவந்த அவர் அது பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தினர். அதில், கொடுத்த கடனை ஆசிரியர் திரும்பக்கேட்டதால் ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஒருவர் எரித்துக்கொன்றது தெரியவந்தது. இதன் பின்னர் அதில் மூன்று பேரை போலிஸார் கைது செய்த நிலையில், மீதம் இருப்பவர்களை தேடி வருகின்றனர்.
தான் வளர்த்த நபரையே திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், 2020 ஆம் ஆண்டு வைரலாகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் குறித்த செய்தி ஒன்று வெளி வந்துள்ளது.
ரஷ்யாவை சேர்ந்தவர் மரினா பலம்சேவா. தற்போது இவருக்கு 37 வயதாகும் நிலையில், 2007 ஆம் ஆண்டு, அதாவது மரினாவுக்கு 22 வயது இருக்கும் போது, அலெக்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அலெக்சிக்கு ஏற்கனவே திருமணமாகி ஐந்து மகன்களும் இருந்தனர். அதில் இரண்டாவது மகன் தான் விளாடிமிர் ஷவ்ரின். இதனைத் தொடர்ந்து, சுமார் 10 ஆண்டுகள் அலெக்சியுடன் இணைந்து வாழ்ந்த மரினா, அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழ்நிலையில், தான் வளர்த்த நபரான விளாடிமிர் ஷவ்ரின் மீது மரினாவுக்கு காதல் உருவாகி உள்ளது. இதனை அவரிடம் மரினா வெளிப்படுத்த, அதற்கு ஷவ்ரினும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர், கடந்த 2020 ஆம் ஆண்டு, மரினா மற்ற ஷவ்ரின் திருமணம் செய்து கொண்டனர்.
முன்னதாக, அலெக்சியை மரினா திருமணம் செய்த போது, ஷவ்ரினுக்கு 7 வயது இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, தான் வளர்த்த நபரையே திருமணம் செய்து ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார் மரினா.
அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது மெரினா – ஷவ்ரின் ஜோடி குறித்து தற்போது மீண்டும் ஒரு தகவல் வெளி வந்துள்ளது. ஏற்கனவே முதல் முறை கர்ப்பம் அடைந்த போது, பெரிய அளவில் இணையத்தில் மரினா – ஷவ்ரின் தொடர்பான செய்தி வைரலாகி இருந்தது.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மரினா தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு, மரினா – ஷவ்ரின் பெயர் அதிகம் வைரலாகி வந்த நிலையில், தற்போது மீண்டும் அவர்கள் தொடர்பான விஷயம், இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.
90களில் பிரபல நடிகையாக வலம் வந்த மோகினி, அமெரிக்காவில் மத போதகராக மாறியுள்ளார். பரத் – மோகினி தம்பதிக்கு அனிருத், அத்வைத் என்ற இரு மகன்கள் உள்ளனர்
1991ஆம் ஆண்டு வெளியான ஈரமான ரோஜாவே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மோகினி. தஞ்சாவூரில் பிறந்த இவர் மகாலட்சுமி என்ற தனது இயற்பெயரை சினிமாவுக்காக மோகினி என மாற்றிக்கொண்டார்.
பல தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். பரத் என்பவரை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறிய மோகினி, 2006ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்.
இந்த நிலையில் கணவருடன் விவாகரத்து பெற்றுவிட்ட மோகினி, அமெரிக்காவில் கிறிஸ்த்துவ மதபோதகராக மாறியுள்ளார். இதனை அவரே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.
தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்தின் மேம்பாட்டிற்காகவும் பலரும் வெளிநாடுகளில் சென்று பல ஆண்டுகள் உழைத்து தங்களின் குடும்பம் முன்னேற பாடுபட்டு உழைத்து வருகின்றனர்.
அப்படி வெளிநாட்டிற்கு சென்று கடினமாக உழைத்து வருபவர்கள், தங்களின் சொந்த ஊரில் மிக சில நாட்களை தான் செலவிட முடியும். இப்படி பல தியாகங்கள் செய்து, கஷ்டப்பட்டு வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஷாநவாஸ் என்ற நபருக்கு துபாயில் அடித்துள்ள அதிர்ஷ்டம், தற்போது அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி உள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷாநவாஸ்.
இவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வேலை பார்த்து வருகிறார். ஷாநவாஸுக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ள நிலையில், இரண்டு குழந்தைகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இவர் துபாயில் உள்ள கார் வாடகை விடும் நிறுவனம் ஒன்றிலும் பணிபுரிந்து வருகிறார். அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, துபாயில் உள்ள லாட்டரி நிறுவனம் ஒன்றில் இருந்து, தொடர்ந்து லாட்டரி வாங்கி வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் ஷாநவாஸ்.
அப்படி ஒரு சூழ்நிலையில், ஷாநவாஸ் தேர்வு செய்துள்ள எண்களுக்கு, அந்த லாட்டரி நிறுவனத்தில், 10 மில்லியன் திர்ஹாம்கள் பரிசாக அடித்துள்ளது. ஷாநவாஸுடன் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவரும், ஒரே எண்களை பொருத்தியதால், அவர்கள் இருவருக்கும் இந்த 10 மில்லியன் திர்ஹாம்களை தலா 5 மில்லியன் திர்ஹாம்களாக பிரித்து கொடுத்துள்ளனர். இது இந்திய மதிப்பில், சுமார் 10 கோடி ரூபாய் ஆகும்.
இது தொடர்பாக பேசும் ஷாநவாஸ், “ஆரம்பத்தில் நான் இதனை நம்பவில்லை. எனக்கு மெயில் வந்த பிறகு தான், நான் உறுதியானது என முடிவு செய்தேன். வெற்றி பெற்ற உற்சாகம் இன்னும் மாறவில்லை. இதனை அறிந்த பிறகு, இரண்டு நாட்கள் என்னால் தூங்கவே முடியவில்லை.
இதில் வென்ற பணத்தைக் கொண்டு எனது கடனை முதலில் நான் அடைப்பேன். தொடர்ந்து, இந்தியாவை விட ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக முதலீடு செய்ய விரும்புகிறேன்” என ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
பெரிய அளவில் பணம் ஜெயித்தாலும், தொடர்ந்து துபாயில் வேலை செய்யவும் ஷாநவாஸ் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 14 ஆண்டுகளாக, மெல்ல மெல்ல பணம் சேர்த்து வந்த இந்தியரான ஷாநவாஸ் வாழ்க்கை, ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் மூலம் அப்படியே தலை கீழாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் இளம்பெண் ஒருவரை, அலுவலக நண்பர் விளையாட்டாக இறுக அணைத்ததில் அவரின் விலா எலும்புகள் உடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹூனான் மாகாணத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த மே மாதம் சக அலுவலக நண்பர்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை இறுக அணைத்திருக்கிறார்.
அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டிருந்த நிலையில், பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளாமல் மாலை பணிமுடிந்து வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய பெண்ணிற்கு இரவு முழுவதும் வலி அதிகமாக இருந்ததால், சுடுநீர் ஒத்தடம் கொடுத்துள்ளார். ஆனாலும் வலி குறையாமல் மறுநாள் வரை இருந்ததால் அலுவலகத்திற்கு விடுமுறை கூறிவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
பின்பு வலி அதிகமாக இருந்ததால் மருத்துவமனைக்கு சென்ற அவர், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி ஸ்கேன் எடுத்துள்ளார். அதில் குறித்த பெண்ணின் 3 விலா எலும்புகள் உடைந்திருந்ததையடுத்து, சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சை முடிந்து வேலைக்கு திரும்பிய அந்த இளம்பெண், இறுக அணைத்து தன் விலா எலும்புகளை உடைத்த நபரிடம் தன்னுடைய மருத்துவ செலவுகளுக்கான ரசீதை காட்டி பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நபர், “நான் கட்டிப் பிடித்ததால்தான் உனக்கு இப்படி ஆனது என்பதற்கான ஆதாரம் என்ன இருக்கிறது?” எனக்கூறி சிகிச்சை செலவை ஏற்க மறுத்திருக்கிறார்.
வேறு வழியில்லாமல் குறித்த பெண் நீதிமன்றத்தை நாடிய நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இடைப்பட்ட காலத்தில் அந்தப் பெண் வேறு எங்கும் எலும்பை உடைத்துக்கொள்ளவில்லை.
எனவே, இளம்பெண்ணை இறுக அணைத்து அவர் எலும்புகள் உடைவதற்கு காரணமாக இருந்த இளைஞர் 10,000 யுவான் அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.
இன்று அநேக வீடுகளில் எண்ணெய்களில் பொரித்த உணவுகள், பலகாரங்கள் என விதவிதமாக சாப்பிடும் நிலையில், இந்தியாவில் ஒரு கிராமத்தில் இவ்வாறான உணவுகளை வீட்டில் செய்யாமல், ஒரு தோசை கூட சுட்டு சாப்பிடாமல் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு கர்ப்பிணி பெண் சாபம் என்று கூறப்படுகின்றது.
திருவண்ணாமலை அருகேயுள்ள பண்டிதப்பட்டு, செ.அகரம், சின்னகோளாப்பாடி, பெரியகோளாப்பாடி, தீர்த்தமலை கிராமங்களில் வசிக்கும் 80 சதவிதம் மக்கள் எண்ணெய்யில் பொறித்த உணவுகள், பலகாரங்கள், தோசை முதற்கொண்டு வீட்டில் செய்யாமல் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து ஊர் பெரியவர்கள் கூறுகையில், இருபது தலைமுறைக்கு முன்பு எங்க முன்னோரின் குடும்பத்தில் 6 பசங்க. அதில் ஐந்து ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை. பெண் பெயர் சந்தியம்மா. அண்ணன், தம்பிங்களுக்கு கல்யாணமாகி கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்துக்கிட்டு இருந்திருக்காங்க.
கடைக்குட்டியான சந்தியம்மா மீது அண்ணன் தம்பிகள் அதிக பாசம் வச்சி இருந்தாங்க. சந்தியம்மாவை கல்யாணம் செய்து புகுந்த வீடு அனுப்பிட்டாங்க. தலைபிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு அழைத்து வந்த சந்தியம்மாவுக்கு வாய்க்கு ருசியா யாரும் எதுவும் செய்து தரல.
அம்மா இல்லாத பிள்ளையால் அண்ணிங்கக்கிட்ட உரிமையா கேட்க முடியல. அந்த ஏக்கத்திலேயே இருந்திருக்கு. அடிக்கடி பொறந்த பொண்ணுக்கும் வாழ வந்த மருமகளுகளுக்கும் சண்டை வந்திருக்கு.
ஒருநாள் அண்ணனுங்க எல்லாம் விவசாய வேலைக்கு போனதுக்கப்பறம் வீட்டுக்கு வந்த மருமகளுங்க கூட்டுசேர்ந்து கேழ்வரகு (ராகி) இடிச்சி வடை சுட்டு சாப்பிட்டிருக்காங்க.
புள்ளதாச்சியா இருந்த நாத்தனார்க்கு கொஞ்சம் கூடதரல, இதனால் மனசு உடைஞ்சிப்போன சந்தியம்மா கோபத்தில் அழுதுக்கிட்டே வீட்டுக்கு பக்கத்தல இருந்த கிணத்துல விழுந்து உயிர விட்டுடுச்சி.
மாலை வீட்டுக்கு வந்த அண்ணனுங்க தங்கச்சிய காணலயேன்னு தேடினப்ப கிணத்துல பிணமா மிதக்கறத பார்த்து கண்ணீர் விட்டு அழுதாங்க. சடங்குகள் செய்து அடக்கம் செய்த அண்ணன் தம்பிகளுக்கு, தங்கச்சி ஏன் செத்துச்சின்னு தெரிஞ்சிக்க முடியாமல் இருந்த நிலையில் குல தெய்வம் மூலமாக தெரியவந்த உண்மை.
குலதெய்வம் அய்யனார்க்கு கிடாவெட்டி வேண்டிக்கிட்டதும், அண்ணனுங்க 5 பேர் கனவுலயும் அய்யனார் வந்து உங்க பொண்டாட்டிகளால மனசு உடைஞ்சிப்போன சந்தியம்மா தற்கொலை செய்துக்கிச்சி.
உங்க தங்கச்சி சாகும்போது, இனிமே நான் பிறந்த வம்சத்தல யாரும் எண்ணெய் பலகாரங்கள் செய்யகூடாது, மீறி பாலகாரங்கள் செய்தால் அந்த குடும்பத்தில் உள்ளவங்களுக்கு எண்ணெய் கொப்பளம் போட்டு இறந்து போய்டுவாங்கன்னு சாபம் விட்டிருக்குன்னு சொன்னார் அய்யனார்.
அதன்பின் இறந்துபோன சந்தியம்மாவ எங்க முன்னோர்ங்க தெய்வமாக்கி கோயில் கட்டி வணங்க தொடங்கினாங்க. நாங்களும் அப்படியே செய்யறோம். எங்கள் வம்சம் பெருகி இப்போது 5 கிராமங்கள்ள, வெளிநாடுகள்ள இருக்காங்க.
நாடுவிட்டு நாடு போனாலும், எவ்வளவு வசதி வாய்ப்பிருந்தாலும் நாங்க வாழும் வீட்டில் எண்ணெய் பலகாரங்கள் செய்யமாட்டோம். எங்க வம்சத்தல பொறக்கும் பெண்கள் கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் வீட்ல எதுவும் செய்யமாட்டாங்க. கல்யாணம் செய்துக்கிட்டு கணவன் வீட்டுக்கு போனபிறகு அவுங்கள அந்த சாபம் கட்டுப்படுத்தாது. அவுங்க புகுந்த வீட்ல எண்ணெய் பொருட்கள் செய்யலாம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு, சிலகுடும்பத்தார் சாபத்த மீறி எண்ணெய் பொருட்கள செய்தாங்க. அப்படி செய்து சாப்பிட்ட மூனாவது நாள் அந்த வீடுகளில் இருந்த எல்லார்க்கும் கொப்பளம், கொப்பளம்மா உடம்புல வந்துடுச்சி, ஆஸ்பிட்டல் போனாங்க சரியாகல.
கடைசியா அய்யனார்க்கிட்டயும், சந்தியாம்மன் கிட்டயும் கிடா வெட்டறன்னு வேண்டனதுக்கப்பறம் அவுங்க உடம்புலிருந்த கொப்பளம் தழும்பேயில்லாம மறைந்தது. அதுக்கப்பறம் யாரும் அந்த விஷப்பரிச்சையில இறங்கறதேயில்ல என்ற உண்மையைக் கூறியுள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடி மாதத்தில் குலசாமி அய்யனார்க்கும், சந்தியம்மனுக்கும் திருவிழா எடுக்கிறார்கள் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள். திருவிழாவின் போது சந்தியம்மன் கோவில் வளாகத்தில் தங்கள் வம்சத்தில் பிறந்த வயதான பெண்மணி விரதமிருந்து எண்ணெய் சட்டியில கொதிக்கும் நெய்யில் வடை, பனியாரம் சுட்டு சந்தியம்மாளுக்கு படைப்பர்.
ஆயிரக்கணக்கான மக்கள் அதில் கலந்துக்கொள்வார்கள். அன்று ஒருநாள் மட்டும் அந்த வம்வசத்தில் பிறந்த பெண்கள், வீட்டுக்கு வெளியே சாலையோரம் அடுப்பு வைத்து எண்ணெய் வானலில் வடை சுட்டு தான் பிறந்த குடும்பத்துக்கு தருவார்கள், அப்போதும் வீட்டுக்கு வந்த மருமகள்கள் செய்யமாட்டார்கள்.
தீபாவளி, பொங்கல், அம்மாவாசை மட்டும்மல்ல அதன்பின் எப்போதும் வீடுகளில் எண்ணெய் பலகாரங்கள் செய்யமாட்டார்கள். குழந்தைகள் வடை வேண்டும், அப்பளம் வேண்டும் எனக்கேட்கும்போது கடைகளில் வாங்கி தந்து அவர்களை சமாதானம் செய்கிறார்கள் என்ற உண்மைச் சம்பவத்தை விளக்கியுள்ளனர்.
பாணாவரம் அருகே கணவன் நடத்தையில் சந்தேகமடைந்து பொங்கி எழுந்த மனைவி கொதிக்க கொதிக்க வெந்நீரை கணவனின் அ.ந்தரங்க உ.றுப்பு மீது ஊற்றினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமம் திடீர் நகர் பகுதியை சோ்ந்தவர் தங்கராஜ்-32. இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு பிரியா-27 என்ற மனைவி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.
இந்த நிலையில் தங்கராஜ் கம்பெனியில் பணிபுரியும் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக பிரியாவுக்கு தகவல் வந்ததின் பேரில் கடந்த ஒரு மாத காலமாக இருவருக்கும் ச.ண்டைகள் முற்றியுள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் கடுமையான முறையில் ச.ண்டை ஏற்பட்டு அதில் இரவு தங்கராஜ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி பிரியா விடியற்காலையில் சூ.டாக கொ.திக்கும் வெந்நீரை எடுத்துக் கொண்டு வந்து, அவரது ஆ.ண் உ.றுப்பின் மீது ஊற்றி உள்ளார்.
இதில் வ.லி தா.ங்காமல் கதறிய அவரை அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் 30 சதவீதம் வரை தீ.க்.கா.யங்களுடன் தங்கராஜ் தற்போது சி.கிச்சை பெற்று வருகின்றார். தங்கராஜ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர் கணவின் மீது சந்தேகத்தின் பேரில் மனைவி கணவனின் ஆ.ணுறுப்பு மீ.து கொ.திக்கும் வெந்நீரை ஊற்றிய சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தையும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பங்குச்சந்தையில் முதலீடு செய்து தினமும் ரூ.5 முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்ற பேராசை காட்டி பலரை ஏமாற்றி ரூபாய் 5 கோடி பண மோசடியில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட இருவர் கைது.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் ரயில் நகர் 7-ஆவது தெருவில் வசித்து வரும் 32-வயதான சிவசங்கரி தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையரிடம் கடந்த ஜுலை மாதம் 23-ஆம் தேதி மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், சிவசங்கரி வசிக்கும் வீட்டின் எதிர் வீட்டில் காமாட்சி, கார்த்திகேயன் தம்பதிகள் அவரது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காமாட்சி அவர் கணவர் கார்த்திகேயன், தம்பி பத்ரகாளிமுத்து, மாமனார் ஜெகநாதன், மாமியார் மகேஸ்வரி, குடும்ப நண்பரான விக்னேஸ்வரன்,
அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர் சேர்ந்து காஞ்சிபுரம் IFS, Aruthra Gold, அப்போலோ, எல் & டி, ஹிந்துஸ்தான், HDFC, TATA STEEL, நிஃப்டி, IFS போன்ற பல்வேறு பங்கு சந்தைகளில் முதலீடு செய்து தினமும் 5 முதல் 10 லட்சம் லாபம் சம்பாதிப்பதாகவும், நானும் என் கணவரும் இவர்கள் மூலம் பங்குசந்தையில் பணம் முதலீடு செய்ததால் நிறைய லாபம் எங்களுக்கு கிடைக்கின்றது என்று சொல்லி என்னிடமும் என் கணவரிடம் பணம் கேட்டனர்.
ஆரம்பத்தில் நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டோம். தொடர்ந்து காமாட்சி மற்றும் அவர் கணவர் கார்த்திகேயன் மேற்கண்ட நபர்கள் அனைவரும் சேர்ந்து என் வீட்டிற்க்கு அடிக்கடி நேரில் வந்து பேசி நானும் எனது கணவரும் நம்பும் வகையில் அவர்கள் பங்கு சந்தை மூலம் தினமும் 5 முதல் 10 லட்சம் லாபம் சம்பாதிப்பது போல் அது தொடர்பான விளம்பரங்கள் செய்திகளை எனக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி ஆசையை தூண்டி எங்களை நம்ப வைத்தனர்.
நாங்கள் முதலீடு செய்யும் (CAPITAL MONEY) முன்பணம் 100% பாதுகாப்பானது எனவும் முன் பணத்தைத் திருப்பி கிடைக்க வேண்டுமென்றால் ஒரு மாதத்திற்கு முன்பு சொன்னால் போதும் திருப்பிக் கொடுத்து விடுவதாக உறுதி அளித்த அவர்கள் 10% லாபம் தருவதாகவும் கூறினார்கள்.
காமாட்சி குடும்பம் என் எதிர் வீட்டில் குடியிருந்ததால் முதலீடு பணத்தை காமாட்சி மற்றும் அவரது குடும்பத்தார் சொல்லும் வங்கி கணக்கிற்கு கொடுக்குமாறு கூறியதால் இவர்களின் பேச்சை நானும் என் கணவரும் முழுமையாக நம்பினோம்.
அதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி சிவசங்கரி கணவரின் மாத சம்பளம் சேமிப்பு, அவரது மாமனாரின் சேமிப்பு பணம், நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கிய பணம் என மொத்தம் ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரத்தை மூன்று தவணைகளாக சிவசங்கரி வங்கி கணக்கில் இருந்து காமாட்சி மற்றும் விக்னேஷ்வரன் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார்.
ரூபாய் 16,50,000 பங்கு சந்தையில் முதலீடு செய்ததை தொடர்ந்து ஒரு மாதம் மட்டும் ஊாக்க தொகை என கூறி 9.9.2021ஆம் தேதி ரூபாய் 50 ஆயிரம் மட்டும் பணம் கொடுத்ததாக கூறினர்.அதனை தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் பனம் ஏதுவும் கொடுக்கவில்லை காரணம் கேட்டால் (Income tax problem) வரிமான வரித்துறை பிரச்சனை என்ற காரணம் காட்டி காலம்தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
காமட்சி, விக்னேஷ்வரன் குடும்பத்தினர் மீது சிவசங்கரி குடும்பத்திற்கு சிறிது சந்தேகம் எழுந்ததால் இவர்கள் செலுத்திய முன் பணம் ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.
அதற்கு அவர்கள் பணம் திருப்பி கொடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய காமாட்சி குடும்பத்தினர் பணம் திருப்பித் தருவதாக கூறி ஐகோட் மகாராஜன் என்பவரின் பெயரில் ஆவணம் மற்றும் காசோலை கொடுத்துள்ளனர்.
சிவசங்கரி காமட்சி மற்றும் விக்னேஷ்வரன் வங்கி கணக்கில் பணம் செலுத்திய நிலையில் சம்மந்தமே இல்லாத நபரான ஐகோட் மகாராஜன் பெயரில் காசோலை கொடுத்ததால் சந்தேகம் ஏற்பட்டு பணத்தை உங்களிடம் தான் கொடுத்தேன் ஐகோட் (i kot) மகராஜன் யார் என்று எனக்கு தெரியாது அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று சொன்னதற்கு ஐகோர்ட் மகாராஜன் எங்களுடைய பிசினிஸ் பார்ட்னர் என்று அவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளனர்.
காசோலையை சிவசங்கரி வங்கி கணக்கில் செலுத்தியபோது insufficient Fund என்று வந்ததால் காமாட்சி மற்றும் விக்னேஷ்வரன் குடும்பத்தினர்களை தொடர்பு கொண்டபோது பிசினஸில் பிரச்சனை ஆகிவிட்டது என கூறிய அவர்கள் பணத்தை கொடுத்துவிட்டு காசோலையை திரும்பி வாங்கி கொள்வதாக கூறி போனை துண்டித்துவிட்டனர்.
நான் மறுபடியும் செல்போனில் தொடர்பு கொண்டபோது போன் எடுக்கவில்லை. இவர்கள் வீட்டிற்கும் வருவதும் இல்லை. வீடு நிரந்தரமாக பூட்டு போடப்பட்டிருந்தது. நிறைய மக்கள் இவர்களை தேடி வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது காமாட்சி மற்றும் மேற்கண்ட நபர்கள் பங்கு சந்தையில் டிரேடிங் செய்வதாகக் கூறி சிவசங்கரியை போல் பலரையும் ஏமாற்றி பல கோடி கணக்கில் பணமேசாடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டது சிவசங்கரிக்கு தெரியவந்துள்ளது.
பங்கு சந்தை டிரேடிங் என்று பொய் சொல்லி முதலீடாக பெற்ற பல கோடி பணத்தை எல்லாம் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் இயங்கிவரும் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் சர்வீஸ் மற்றும் வேறு சில நிறுவனங்களில் காமாட்சி மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விக்னேஸ்வரன் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோரின் பெயரில் பணம் டெபாசிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பல்வேறு இடங்களில் இவர்களுடைய பெயர்களில் சொத்துக்கள் ஆடம்பர கார்கள் மற்றம் தங்க நகைகள் வாங்கி வைத்துக்கொண்டு சிவசங்கரியை போன்று பலரை ஏமாற்றி வருவது தற்போது தெரியவந்துள்ளது.
பங்கு சந்தையில் டிரேடிங் செய்வதாக கூறி பொதுமக்கள் நம்பும் வகையில் பல பொய்யான விஷயங்களை சொல்லி நம்ப வைத்து பலரை ஏமாற்றி சுமார் 5 கோடி மோசடி செய்துள்ள காமாட்சி, கார்த்திகேயன், விக்னேஸ்வரன்.
இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு ஐகோட் மகாராஜன், பத்ரகாளிமுத்து, புவனேஸ்வரி, மகேஸ்வரி, ஜெகநாதன், ஆகியோர் மீது தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் 403, 406, 420, 465, 34 ipc ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் காமாட்சி மற்றும் விக்னேஷ்வரன் இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ளவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
காதலித்து திருமணம் செய்து கொண்டு ஜாதி என்று பெயரால் பிரித்து வைத்து கொடுமைப்படுத்தும் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிடம் புகார் மனு அளித்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சசிகலா. இன்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில், திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா அடுத்துள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் என்பவரது மகள் சசிகலா (19).நான் திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா கருணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகன் அபிமணி (21) என்பவரை கடந்த ஒன்றரை வருட காலமாக காதலித்து வந்தேன்.
இந்நிலையில் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதை தொடர்ந்து அபிமணி நான் ஊராளி கவுண்டர் சாதியை சேர்ந்தவர் நீ போயர் என்ற கல் உடைக்கும் சமூகத்தை சேர்ந்த நபர் என்பதால் பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என கூறிவிட்டார். மேலும், நம் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டால் பின்னர் நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்ப வைத்தார்.
மேலும் அபிமனியோட சகோதரர்கள் சிவசக்தி, சிவானந்தம் ஆகியோர் கடந்த மே மாதம் 13-ஆம் தேதி வேலைக்கு சென்று விட்டு வந்த என்னை இரவு எட்டு மணி அளவில் வழிமறித்து திருமணம் ஏற்பாடு செய்துள்ளோம் உடனே வந்து என்னுடைய தம்பியை திருமணம் செய்து கொள்ள வேண்டும்,
இல்லை என்றால் அவன் தற்கொலை செய்து கொள்வான் என்று கூறி என அழைத்துச் சென்று அடுத்த நாள் காலை சாணிபட்டி விநாயகர் கோவில் வைத்து அவர்கள் சகோதரர்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் முன்பாக என்னை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் அவரது உறவினர் ஒருவர் மூலமாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள ஒரு வீட்டில் என்னை வைத்து என்னுடன் பாலியல் உறவு கொண்டார்.பின்னர் சுமார் 20 நாட்களுக்கு கழித்து திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உள்ள காவல் நிலையத்திலிருந்து,
எங்களை அழைப்பதாக கூறி என்னிடம் இருந்த மொபைல்போன், மற்றும் நான் கையில் வைத்திருந்த ரூபாய் 10,000 மற்றும் ஆதார் கார்டை வாங்கிவிட்டு என்னை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு இருந்த காவல் உதவி ஆய்வாளர் நல்லதம்பி என்னை குடும்பத்தினருடன் வீட்டுக்குச் செல்லுமாறு வற்புறுத்தினார். ஆனால் நான் போக மாட்டேன் என்று கூறினேன். ஆனால் வலுக்கட்டாயமாக என்னை என்னுடைய குடும்பத்தார்களுடன் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மணப்பாறை துணை காவல் கண்காணிப்பு இடத்தில் புகார் கொடுத்து அந்த புகார் மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, என்னை சதித்திட்டம் தீட்டி என்னை திருமணம் செய்து என்னுடன் பாலியல் உறவு கொண்டு பின்னர் என்னை சாதிப் பெயரைச் சொல்லி விலக்கி வைத்த என் கணவன் அபிமணி மற்றும் அவருக்கு துணையாக இருந்த சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என சசிகலா அம்மனுதில் தெரிவித்துள்ளார்
நாட்டின் மின்சார விநியோகத்திற்காக உரிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படாவிட்டால் 2027 ஆம் ஆண்டு வரை பல்வேறுப்பட்ட சந்தர்ப்பங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
அரசாங்கம் மற்றும் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இலங்கை மின்சார பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார நுகர்வு 20% க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தினசரி மின் நுகர்வு விகிதம் குறைந்தபட்சம் 48 மெகாவோட் என்றும், நண்பகல் நேரத்திற்கு 2,800 மெகாவோட் மின்சாரம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களில், மின் நுகர்வு 38 முதல் 40 மெகாவோட் மணி வரை இருந்ததாகவும் கூறப்படுகின்றது. நண்பகல் நேரத்தில் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு 2,100 மெகாவோட்டாக குறைக்கப்பட்டது. இது 20% குறைப்பை பிரதிபலிக்கிறது என்று ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இது தொடர்பான தீர்மானம் இலங்கை மின்சார சபையால் எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழந்துள்ளதாகவும், அதன் கோளாறை கண்டறியும் பணியில் தொழில்நுட்பவியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டாவது தொகுதியில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்ற போதும் மூன்றாவது தொகுதி தொடர்ந்து இயங்கி வருகிறது. மின் விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு முனையம் மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாட்டில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மின்வெட்டு நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை மேற்கொள்ளப்படுகின்றது.
இந்நிலையிலேயே 2027 ஆம் ஆண்டு வரை பல்வேறுப்பட்ட சந்தர்ப்பங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.