வவுனியா – செக்கட்டிபுலவு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா – செக்கட்டிபுலவு பகுதியில் வசித்து வந்த இராசேந்திரன் கிருபன் என்ற 15 வயது மாணவனே 16ஆம் திகதி அதிகாலை முதல் காணாமல் போயுள்ளார்.
குறித்த மாணவன் 16ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் நித்திரையால் எழுந்து தண்ணீர் அருந்தியதாகவும், அதுவரை வீட்டில் இருந்தனை அவதானித்ததாகவும்,
16 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் எழுந்து பார்த்தபோது மகன் காணாமல் போயுள்ளதாகவும் தாயார் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார் என காணாமல் போன மாணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவன் வகுப்பிற்கு செல்லாத அவரை தயார் 15ஆம் திகதி கண்டித்திருந்த நிலையில் அதனாலேயே மாணவன் காணாமல் போயிருப்பார் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் இவ் விடயம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் குறித்த மாணவனை யாராவது அடையாளம் கண்டால் 0766922218, 0779987491 குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் குறித்த மாணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் விபச்சார விடுதி ஒன்று பொலிசாரால் இன்று (19.08.2022) மதியம் முற்றுகையிடப்பட்டதுடன் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டமையுடன் விடுதியில் இருந்து ரி56 ரக 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்,
மற்றும் மது ஒழிப்பு பிரிவு பொலிசார் மோப்ப நாயின் உதவியுடன் வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.
இதன்போது குறித்த விடுதியில் தங்கியிருந்த இரு பெண்கள் , விடுதி முகாமையாளர் (ஒய்வுபெற்ற இராணுவ வீரர்) மேலும் ஒரு ஆண் உட்பட நான்கு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் குறித்த விடுதியில் பொலிசார் சோதனை செய்தால் அங்கிருந்து பெண்கள் தப்பியோடும் வகையில் சுவர் ஒன்றில் சுட்சுமான முறையில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தமை பொலிசாரால் கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் குறித்த விடுதியில் பொலிசார் சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இயங்கு நிலையில் உள்ள ரி56 ரகத்தினை சேர்ந்த 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த விடுதி ஒய்வுபெற்ற இராணுவ வீரருடையது என்பதுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எங்கள் மாவீரர் மருமகனே ஏஏ பாடலுடன் மன்னார் மண்ணில் இரவு நேரத்தில் பாரிய மோட்டார் சைக்கில் ஊர்வலம்
பொல்கஹாவல, உடபொல கிராம சேவகர் பிரிவின் கிராம சேவகரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 8 வயதான சிறுவன், ஆற்றின் கரையோரத்தில் யானை ஒன்று நீராட்டப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது,
ஆற்றின் கரைக்கு சென்ற கிராம சேவகர் சிறுவனை தூக்கி ஆற்றில் வீசியுள்ளார். சிறுவன் ஆற்றில் வீசப்பட்டதால், சிறுவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய கிராம சேவகர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல பிரதேசத்தில் இளம் இராணுவ கமாண்டோ ஒருவர் தற்கொலை செய்துள்ளார். தனது காதலை கேலியாக எண்ணிய காதலியின் நடத்தையால் மனம் உடைந்த 21 வயது இராணுவ கமாண்டோ ஒருவரே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக ஜாஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், ஜாஎல, ஏகல, மடம தோட்டத்தை சேர்ந்த பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
எனினும் இளைஞனின் காதலை கேலியாக எடுத்துக் கொண்டதாக தகவல் கிடைத்தமையினால் மனமுடைந்த நிலையில் விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தற்கொலை செய்துக் கொள்வதற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் கயிற்றை தூக்கிட்டுக்கொள்ளும் இடத்தில் கட்டி தற்கொலை செய்துக் கொள்வதற்கு தயார் என காதலிக்கு வட்ஸ்அப் ஊடாக காணொளி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
இளைஞனின் கையடக்க தொலைபேசியை சோதனையிட்ட போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யுத்த காலத்தில் பாதுகாப்பிற்காக மூடப்பட்டிருந்த அனுராதபுர கால தோணிகல் கல்வெட்டு பகுதி மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலா இடமாக மாற்றிமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வவுனியாத் தெற்குப் பிரதேச செயலகத்தின் வவுனியா மற்றும் அனுராதபுர மாவட்ட எல்லைக்குட்பட்ட மகாமைலங்குளம் தொல்பொருள் இடமாக வவுனியா நகரத்திலிருந்து ஹொரவப்பொத்தானை செல்லும் வீதியில் உள்ளது.
அங்கு அமைந்துள்ள தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து கிடக்கின்றன. இதனை அண்மித்து 2 புராதன குளங்களும் உள்ளன. இங்கே வரலாற்றுக்கு முந்தைய பாறைக் கற்கருவிகளும் உள்ளன.
இங்கே உள்ள தோணிகல் கல்வெட்டில் அனுராதபுர இராசதானியின் மன்னன் மகாசேனின் மகனாகிய ஸ்ரீ மேகவண்ணனது ஆட்சி நடவடிக்கைகள், மத சடங்குகள், வட்டி முறைகள் மற்றும் பணம் மதிப்பிழப்பு முறைகள் பற்றிய பல முக்கிய தகவல்கள் உள்ளன.
சில அறிஞர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ‘யஹிசா பவத கோவில்’ தற்போதைய மதுக்கண்ட கோவில் என்று குறிப்பிடுகின்றனர்.
அதனை சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகளின் ஆதரவுடன் சுற்றுலா இடமாக மாற்றுவதற்கும் தொல்பொருள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொழும்பு தலைமை அலுவலகத்தின் தொல்பொருள் ஆய்வு அதிகாரி தனுர தயானந்தா, பிரதி (சேகரிப்பு) அதிகாரிகள் ஐ. பி. எஸ். நிஷாந்தா, வவுனியா தொல்பொருள் அலுவலகத்தின் சமரவீர, சுசந்த ஜயதிலக்க, உள்ளூர் ஆய்வாளரான பியம் பெரேரா ஆகியோர் வருகை தந்து ஆய்வுகளை மேற்கொண்டதுடன் மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தனர்.
நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி
3ம் உலகப்போர் விரைவில் நடக்க போவதாக, கியூப ஜோதிட பெண் ஒருவர் கணித்து கூறியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பல்கேரியாவைச் சேர்ந்த கண்பார்வையற்ற முதியவரான பாபா வங்கா, தனது 12 வயதில் பார்வையை இழந்துவிட்ட நிலையில், அதன் பின்பு உலகில் நடக்கும் நிகழ்வுகளைக் குறித்து மிகச் சரியாக கணித்து கூறிவந்தார்.
இவர் 1996ம் ஆண்டு தனது 85ம் வயதில் மரித்துப் போன நிலையில், இவர் முன்கூட்டியே கணித்து கூறிய சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல், அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர்தான் பதவியேற்பார்,
2016-ல் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும், குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார், உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும், என பல விஷயங்களை கணித்து கூறியவராவார்.
இதனால் பாபா வங்காவின் கணிப்பு மிகுந்த கவனத்துடன் கவனிக்கப்படுகின்ற நிலையில், தற்போது பெ்ண் ஜோதிடர் ஒருவர் பகீர் கிளப்பியுள்ளார். கியூபாவைச் சேர்ந்த மோனி விடன்ட்டே என்ற ஜோதிட பெண்மணி கணித்து சொன்னதும் பலமுறை நடந்துள்ளது.
அந்தவகையில், இப்போது, மூன்றாம் உலகப்போர் பற்றி தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளார்… மூன்றாம் உலகப்போர் கண்டிப்பாக நடக்க போகிறதாம்.. 9 வருடங்களுக்கு இந்த போர் நீடிக்கும் என்றும், அதற்கு முக்கிய காரணமாக சீனாதான் இருக்கும் என்றும் உறுதியாக கூறியுள்ளார்.
சீனா அமெரிக்காவை வீழ்த்தி வல்லரசாக மாறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும், அதன் காரணமாகவே உலகப் போரை தூண்டிவிடும். இந்த உலகப்போரில், குண்டுகளும், ஏவுகணைகளும் வந்துவிழும், உலகின் ஒவ்வொரு மனிதரும் அழியப் போகிறார்கள்” என்றும் கூறி மோனி உலக நாடுகளை கலங்கடித்துள்ளார்.
ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வரும்நிலையில், இந்த நாடுகளுக்குள் போர் தொடர்ச்சியாக நடக்கும், இதனால் ஆபத்து என்றும் மோனி சொல்கிறார்.
நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி
பீகார் மாநிலத்தில் மந்தர் மலைப் பகுதியில் சிவராத்திரி நாளில் மட்டும் தண்ணீர் வற்றி, ஒரு அதிசய சங்கு ஒன்று பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை சிவராத்திரியாக ஆண்டு தோறும் கொண்டாடி வரும் நிலையில், இந்த நாளில் அதிசயம் ஒன்றும் ஆண்டு தோறும் அரங்கேறகின்றதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தின், கடற்கரையை ஒட்டி மந்தர் மலைப்பகுதியில் சங்கு குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சங்கு குளத்தில், ‘பாஞ்சசன்ய சங்கு’ என்று அழைக்கப்படும் சங்கு உள்ளது.
இந்த சங்கானது, வருடம் முழுவதும் சுமார் 70 அடி முதல் 80 அடி ஆழத்தில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருக்கும். சிவராத்திரிக்கு முந்தைய தினம் மட்டும் தண்ணீர் வற்றி, சங்கு பொதுமக்களின் கண்களுக்கு தென்படும்.
ஒரே நாளில் தண்ணீர் வற்றி சங்கு தென்படுவதும், மறுநாளே தண்ணீர் பெருக்கெடுத்து சங்கு மூழ்கிப்போவதும் ஆச்சரியமாக உள்ளதாக அங்கு வசிக்கும் பொது மக்கள் கூறி வருகின்றனர்.
புராண கதைகளின் படி, இந்த மந்தர் மலையானது, பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும், மந்தார மலையை மத்தாக பயன்படுத்தினர் என கூறப்படுகிறது.
பீகார், கடல் பகுதியில் உடைந்த மத்து போன்ற, மந்தார மலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மலைப்பகுதி பாகல்பூர் என்ற இடத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த மலைக்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தரும் நிலையில், இப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் மலைக்கு செல்ல பக்தர்கள் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்றும் கூறப்படுகின்றது.
நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு தெற்கு வீதி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்கிற சதீஷ் (வயது 42).
இவர் தெற்குகாடு பகுதியைச் சேர்ந்த வனிதா (வயது 30) என்பவரை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார், இந்த தம்பதிக்கு 8 வயதில் சர்வேஷ் என்கிற ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் வனிதா பள்ளிக்கு சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார், அப்போது வீட்டினுள் காதல் கணவர் கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்டு,
இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் அழுது கூச்சலிட்டுள்ளார், இதையறிந்த அக்கம்பக்கத்தினர் கெங்கவல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரித்துள்ளனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி ஸ்ரீஅபிநவ், கைரேகை நிபுணர்கள் மற்றும் லில்லி என்கிற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.
பின்னர் இரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவரது மனைவி வனிதா மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி
தனியார் பங்கு சந்தையில் முதலீடு செய்து தினமும் 5 முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்ற பேராசை காட்டி பலரை ஏமாற்றி ரூபாய் 5 கோடி பண மோசடியில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட இருவர் கைது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில் நகர் 7வது தெருவில் வசித்து வருபவர் சிவசங்கரி (வயது 32). இவர் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையரிடம் கடந்த ஜுலை மாதம் 23ம் தேதி மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
சிவசங்கரி வசிக்கும் வீட்டின் எதிர் வீட்டில் காமாட்சி, கார்த்திகேயன் தம்பதிகள் அவரது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் காமாட்சி அவர் கணவர் கார்த்திகேயன், தம்பி பத்ரகாளிமுத்து,
மாமனார் ஜெகநாதன், மாமியார் மகேஸ்வரி, குடும்ப நண்பரான விக்னேஸ்வரன், அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர் சேர்ந்து பங்கு சந்தைகளில் முதலீடு செய்து தினமும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லாபம் சம்பாதிப்பதாக கூறினர்.
நானும் என் கணவரும் இவர்கள் மூலம் பங்குசந்தையில் பணம் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்று சொல்லி என்னிடமும் என் கணவரிடம் பணம் கேட்டனர்.
நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி
கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ள நிலையில், மனைவி நடுஇரவில் சமையலறைக்கு சென்று கொடுத்த தண்டனையால், கணவர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில், இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். கணவரின் தவறான போக்கு மனைவிக்கு தெரியவரவே கணவரைக் கண்டித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கணவரிடம் கண்ணீர் வடித்து கெஞ்சியுள்ளார். ஆனாலும் கணவர் மனம் மாறாத நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. மனக்குமுறலில் தவித்த மனைவியை கண்டுகொள்ளாமமல் கணவர் தூங்க சென்றுள்ளார்.
இரவு முழுவதும் தூங்காமல் அழுதுகொண்டிருந்த மனைவி, பின்பு கோபத்தில் எழுந்து சமையலறைக்கு சென்று வெந்நீரை கொதிக்க வைத்துள்ளார். பின்பு கணவரின் ஆடையை விலக்கி அவரின் மர்ம உறுப்பில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றியுள்ளார்.
வலியால் அலறித்துடித்த நபரின் குரலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து குறித்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மனைவியிடம் பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி
தமிழக மாவட்டம் சேலத்தில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை, தாயின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே லத்துவாடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி காசி – சுதா. இவர்களது குழந்தைகள் வேதவர்ஷினி, பவானிஸ்ரீ.
தனியார் பள்ளி ஒன்றில் மூத்தமகள் வேதவர்ஷினி எல்.கே.ஜி படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி வாகனம் வந்தபோது வேதவர்ஷினியை தாய் சுதா அதில் ஏற்றிவிட்டு, திரும்பியபோது மற்றோரு குழந்தை பவானிஸ்ரீ பின்னால் வந்துள்ளது.
இதனை சுதா கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சற்று நேரத்தில் குழந்தை பவானிஸ்ரீயின் மீது பள்ளி வாகனத்தின் பின் சக்கரம் எறியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உடல்நசுங்கி இறந்துள்ளது.
இதனை பார்த்த தாய் சுதா அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் குழந்தையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயின் கண் முன்னே குழந்தை உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி
வடக்கு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் துனிராம் மாத்ரி (40) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காவல் நிலையத்தை அடைந்த அவர் தனது நண்பரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாய்லா ஹேமாரம் (55) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அசாமை உலுக்கிய சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பாய்லா ஹேமாராம் ஞாயிற்றுக்கிழமை துனிராம் மாத்ரியிடம் ரூ.500 கடன் கேட்டுள்ளார். ஆனால் துனிராம் பணம் கொடுக்கவில்லை.
திங்கட்கிழமை கால்பந்து போட்டியில் பரிசாக வென்ற ஆட்டை அறுப்பதற்காக, தன்னுடன் இறைச்சிக் கூடத்திற்கு வரும்படி துனிராம் ஹேமராமை கேட்டுள்ளார். ஆனால் ரூ.500 கொடுக்காத துனிராமின் கோரிக்கையை ஹேமாரம் நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்த துனிராம், ஹேமராமை தாக்கி கொன்றார்.
துண்டிக்கப்பட்ட தலையுடன் வீட்டிற்கு வந்த துனிராம், அவரது மூத்த சகோதரரால் வீட்டை விட்டு துரத்தப்பட்டார். ஹேமராமை கொல்ல பயன்படுத்திய கூரிய கத்தியையும் போலீசில் ஒப்படைத்தார். தொடர்ந்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி
நாட்டில் உள்ள பல இடங்களில், கிராம மக்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள், மிக மிக வினோதமான பழக்க வழக்கங்களை பின்பற்றி வருவதை நாம் நிறைய கேள்விபட்டிருப்போம்.
அந்த குறிப்பிட்ட சமுதாயம் அல்லது பகுதியை சேர்ந்த மக்களுக்கு, அந்த பழக்க வழக்கங்கள் புதிதாக தோன்றாது. ஆனால், அதனை வெளியே இருந்து கேள்விப்படும் நபர்களுக்கு நிச்சயம் அவை, வியப்பை தான் கொடுக்கும்.
அந்த வகையில், தற்போது கர்நாடகாவில் உள்ள பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த மக்கள், பின்பற்றி வரும் ஒரு திருமண சடங்கு தொடர்பான செய்தி, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Dadduve Maduve என அழைக்கப்படும் இந்த சடங்கானது, இரு பெண்களுக்கு இடையே நடைபெறும் திருமணம் குறித்ததாகும். இதனை கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள Halakki Okkaliga என்ற சமுதாய மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஒரே பாலின திருமணங்கள், இன்றைய காலகட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றாலும், குறிப்பிட்ட பழங்குடி மக்கள், இந்த சடங்கினை ஏராளமான ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே கொண்டாடி வருகின்றனர். அதாவது, இது எப்போது ஆரம்பித்தது என்பது கூட, தற்போதுள்ள மக்களுக்கு தெரியாத அளவுக்கு பழமையான சடங்கு என்றும் கூறப்படுகிறது.
தங்களின் சமுதாயத்தில் உள்ள இரண்டு பெண்கள், மாலை அணிந்து ஒருவர் மாப்பிள்ளையாகவும், மற்றொருவர் மணப்பெண்ணாகவும் கருதப்படுவார்கள். வழக்கமான அனைத்து திருமண சடங்குகளும் இதில் பின்பற்றப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. சமீபத்தில் கூட Dadduve Maduve என்ற திருமண சடங்கு அப்பகுதியில் நிகழ்ந்துள்ளது.
தேவைப்படும் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மழை பெய்து விட கூடாது என்பதற்காக, இந்திரனை வேண்டி, இந்த திருமண நிகழ்வை ஆண்டு தோறும் அந்த பழங்குடி மக்கள் நடத்தி வருகிறார்கள்.
ஊர்வலம் மற்றும் சடங்குகள் முடிவடைந்த பிறகு, புதிதாக திருமணமாணவர்களை அனைவரும் ஆசீர்வதிப்பார்கள். வழக்கமான திருமணம் போல, அவர்களுக்கு பரிசுகளையும் வழங்குவார்கள். அதன் பின்னர், ஆடல் பாடல் மற்றும் திருமணத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அற்புதமான விருந்தும் வழங்கப்படுகிறது.
அனைத்து வித கொண்டாட்டங்களும் முடிவடைந்த பிறகு, அனைவரும் தங்களின் வீட்டிற்கு திரும்பி செல்வார்கள். திருமணமான இரண்டு பெண்கள் கூட ஒன்றாக இணைந்து வாழாமல், தனித்தனியாக பிரிந்து விடுவார்கள். ஆம், இது சடங்கிற்காக நடத்தப்படும் போலி திருமணம் போன்றது மட்டும் தான்.
Halakki பழங்குடி மக்களின் வாழ்வில், மழை என்பது மரியாதைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் தான், இப்படி ஒரு சடங்கினை ஆண்டு தோறும் பின்பற்றி, திருமணம் போல ஒரு போலி சடங்கு ஒன்றை மிக கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி
கேரளவைச் சேர்ந்த 34 வயது இளைஞர் இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து லண்டன் வரை தனது சைக்கிளில் பயணிக்கிறார். தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்ற தனது லாபமிகு ஐ.டி. வேலையை விட்டுவிட்டார்.
ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்கு பயணம் செய்வது, அதுவும் 30,000 கிலோமீட்டர்கள் மற்றும் 35 நாடுகளை மிதிவண்டியில் பயணித்து கடப்பது என்பது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம்.
ஆனால், ஐடி துறையில் லாபகரமான வேலையைத் துறந்த இந்த கேரள இளைஞருக்கு, தனது பூகோளக் கனவுகளை நனவாக்க, கண்டங்களுக்கு இடையிலான பயணம் என்பது அவரது நீண்ட நாள் ஆசை.
ஃபைஸ் அஷ்ரப் அலி (Faiz Ashraf Ali) எனும் 34 வயது இளைஞர், தீவிரமான பயண ஆர்வலர், ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்” கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திங்களன்று கேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில் இருந்து லண்டனுக்கு தனது தனி சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.
மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி அங்கு நடந்த விழாவில் சைக்கிள் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். “இதயத்தில் இருந்து இதயம் வரை” என்ற முழக்கத்துடன் Eco Wheelers குழு ஏற்பாடு செய்து , குறைந்தது 450 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணம், உலக நாடுகளிடையே அன்பு மற்றும் அமைதியின் செய்தியை பரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அலி 35 நாடுகளில் 30,000 கிலோமீட்டர்களை கடந்து 450 நாட்களில் லண்டனை சென்றடைவார் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானும் சீனாவும் அவருக்கு விசா வழங்காததால், அவர் தனது பயணத்தின் போது இந்த நாடுகளைத் தவிர்த்து விடுவார்.
சைக்கிள் மூலம் மும்பையை அடைந்த பிறகு, அலி ஓமன் செல்லும் விமானத்தில் ஏறி, அங்கிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஈராக், ஈரான் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளில் பயணம் செய்வார்.
அவர் பல்கேரியா, ருமேனியா, உக்ரைன், ஆஸ்திரியா, இத்தாலி, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் வழியாக லண்டன் வரை மிதிவண்டியில் பயணிக்கவுள்ளார்.
ஃபைஸ் அஷ்ரப் அலி, ஐடி நிறுவனமான விப்ரோவில் தனது வேலையை விட்டுவிட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார். 2019-ல் அவரது சொந்த மாவட்டமான கோழிக்கோட்டில் இருந்து சிங்கப்பூருக்கு அவரது முதல் தனிப் பயணம் இருந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட பயண மற்றும் லக்கேஜ் பாகங்கள் நிறுவனம், தற்போதைய பயணத்திற்கு நிதியுதவி செய்கிறது. ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பும் அலியின் பயணத்திற்கு ஆதரவளித்து வருகிறது.
நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி
ஆரியானா பலும்போ எனும் இத்தாலிய யுவதி ஒருவர் 6.22 மீற்றர் நீளமும் 20.4 அடியையும் கொண்ட மிகப் பெரிய இயந்திரவியல் இறக்கையை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இத்தாலியின் மிலான் நகரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின்போது ஆரியானா பலும்போ இந்த இறக்கையை பயன்படுததியுள்ளார். கதாபாத்திரமொன்றின் ஆடை அணிகலனாக பயன்பத்தப்பட்ட மிகப் பெரிய இயந்திரவியல் இறக்கை இது என கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்கள் அங்கீகரித்தள்ளனர்.
‘த செவன் டெட்லி சின்ஸ்’ எனும் கொமிக் நாவலில் வரும் எலிஸபெத் பாத்திரத்தின் உந்துதலினால் இந்த இறக்கையை தான் தயாரித்ததாக ஆரியானா தெரிவித்துள்ளார். இது 8 கிலோகிராம் எடையுடையதாக இந்த இறக்கை அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.
நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுள்ள லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 5,800 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 கிலோ கிராம் எடை கொண்ட லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 2,320 ரூபாவாகும். இதேவேளை, 2 கிலோகிராம் லாஃப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 928 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.