16 வயது மாணவனின் உயிரை பறித்த கணினி : மலையகத்தில் நடந்த சோகம்!!

மலையகத்தில்..

கணினி விளையாட்டுக்கு அடிமையாகி அதனால் மனோரீதியாக பாதிப்புற்ற 16 வயது பள்ளி மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், கம்பளை, எரகொல்ல லென்டன்ஹில் பிரதேசத்தைச் சேர்ந்த நவீன் மாலிங்க விஜேரட்ண என்ற மாணவனே தனது வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதாவது,மகன் இரவு முழுவதும் தனது அறைக்குள் இருந்து தூங்காமல் கணினி விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக உயிரிழந்த மாணவனின் பெற்றோர் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த மாணவனின் இளைய சகோதரர் தனது சாட்சியத்தில் அண்ணன் தினமும் கணினி விளையாட்டில் ஈடுபடும்போது அந்தப்பக்கம் போ இந்தப்பக்கம் போவென அறைக்குள் தனியாக இருந்து சத்தமாக பேசி சண்டையிட்டுக் கொள்வதாகவும் குடும்பத் தாருடன் பேசுவதனை விரும்புவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மாணவனால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டது. அதில் அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்.

நான் நீண்டதூரம் போகிறேன். நான் எந்த ஒரு பெண் பிள்ளையினாலும் இந்த முடிவை எடுக்கவில்லை. தம்பி தங்கயை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என எழுதி வைத்துள்ளார்.

கம்பளை வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி சுசந்த ஹேரத்தினால் மேற்கொள்ளப் பட்ட மரண பரிசோதனையின்போது கழுத்து இறுகி ஏற்பட்ட மூச்சுத் திணறலால் ஏற்பட்ட மரணமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண விசாரனைகளின் போது வெளிபட்ட விடயங்களை ஆராய்ந்து பார்த்ததில் கணினி தொடர் விளையாட்டினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகியே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இருக்கும் சொந்த தாயை சந்திக்க துடிக்கும் லண்டன் பெண்!!

யாசிகா பெர்னாண்டோ..

இலங்கையில் பிறந்து மூன்று மாதங்களில் பிரித்தானிய தம்பதிக்கு தத்துக்கொடுக்கப்பட்ட நிலையில், நீண்ட பல ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் தமது சொந்த தாயாரை சந்தித்துள்ளார் லண்டன் பெண்.

லண்டனைச் சேர்ந்த யாசிகா பெர்னாண்டோ என்பவரே தமது சொந்த தாயாரை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சந்தித்துள்ளார். ஆனால், தாம் இன்னமும் உயிருடன் இருப்பதை, தமது எஞ்சிய உறவினர்களிடம் இருந்து தமது சொந்த தாயார் ஏன் இன்னமும் ரகசியம் காத்தார் என்ற தகவலையும் யாசிகா தெரிந்து கொண்டுள்ளார்.

தமது 18 வயதில் தான் யாசிகா பெர்னாண்டோ தாம் தத்துக்கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டுள்ளார். கொழும்பில் உள்ள கன்னியர்கள் மடத்தில் இருந்தே டொனால்டு மற்றும் யசந்தா தம்பதி யாசிகாவை தத்தெடுத்துள்ளனர்.

1980களில் இவர்கள் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். டொனால்டு – யசந்தா தம்பதியிடம் மிக நெருக்கமாக இருந்தாலும், யாசிகாவுக்கு பிள்ளைகள் பிறந்த நிலையில், தமது சொந்த தாயாருடன் இணைய வேண்டும் என்ற ஏக்கம் அவருக்கு அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, தனியார் அமைப்பு ஒன்றின் உதவியுடன் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாசிகா தாம் பிறந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால் தமது சொந்த தாயாரை கண்டுபிடிக்க முடியாமல் போகவே அவர் பிரித்தானியா திரும்பியுள்ளார்.

இதனிடையே, குறித்த தனியார் அமைப்பானது அடுத்த 5 நாட்களில் யாசிகாவின் குடும்பத்தினரை அடையாளம் கண்டுள்ளது. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் போயுள்ளது. இந்த நிலையிலேயே யாசிகா தமது நிலை குறித்து மனம் திறந்துள்ளார்.

தமது தாயாருக்கு 31 வயதிருக்கும் போது தாம் பிறந்ததாகவும், அவருக்கு என்ன ஆனது? ஏன் தம்மை கைவிட்டார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என விரும்பியதாகவும் யாசிகா குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, காணொளி வாயிலாக யாசிகாவை சந்திக்க அவரது தாயார் ஒப்புக்கொள்ள, அந்த சந்திப்பும் நடந்தது. ஆனால் அதன் பின்னரும் ஓராண்டு காலம் நேரிடையாக சந்திக்க முடியாமல் போனது என்கிறார் யாசிகா.

இந்த நிலையில், யாசிகாவின் சொந்த தாயாருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், ஒரு சகோதரியை தாயார் தத்துக்கொடுத்த விடயம் அவருக்கு தெரியாது எனவும், ஒரு ரகசியமாகவே தமது தாயார் இந்த விவகாரத்தை பாதுகாத்து வந்தார் எனவும் யாசிகா தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சூழல் அனைத்தும் சாதகமாக அமைந்தால் இலங்கைக்கு செல்ல இருப்பதாகவும், தமது தாயாரை சந்திக்க வேண்டும் எனவும், தமது பிள்ளைகளை அவருக்கு அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் சாசிகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய தொழிலதிபரை மிரட்டி 200 கோடி பறித்த இலங்கை நடிகை!!

ஜாக்குலின் பெர்நாண்டஸ்..

இந்திய தொழிலதிபரை மிரட்டி 200 கோடி பறித்தமை தொடர்பில் இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்நாண்டஸ் குற்றவாளியாக பெயரிடப்பட்டார்.

மருந்து நிறுவனர் மற்றும் தொழிலதிபர் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் (இந்தியன் நாணய பெறுமதிபடி) பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தொழிலதிபரின் மனைவியிடம் பறித்த பணத்தின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும், பொலிவுட் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து செலவிட்டதும் தெரியவந்தது.

குறிப்பாக பொலிவுட் நடிகை இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் பெர்னான்டஸுடன் சுகேஷ் சந்திரசேகர் நெருக்கமாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

ஜாக்குலினுக்கு 10 கோடி ரூபா பெறுமதியுள்ள பரிசு பொருட்களை சுகேஷ் சந்திரசேகர் வழங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜாக்குலின் பெர்நாண்டசின் பெயர் அமலாக்க அதிகரிகளால் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இலங்கையர்கள் 10 பேர் அதிரடியாக கைது!!

அஜர்பைஜானில்..

அஜர்பைஜானில் இலங்கையர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 12ம் திகதி இரவு 10:00 மணியளவில் அஜர்பைஜானின் புசுலியில் உள்ள போயுக் பெஹ்மென்லி கிராமத்திற்கு அருகிலுள்ள எல்லையில் நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஈரான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது. கோரடிஸ் எல்லை முகாமில் உள்ள அஜர்பைஜான் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இவர்கள் சுற்றுலாப் பயணிகளாக சட்டப்பூர்வமாக அஜர்பைஜானுக்கு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பின்னர், அலி ஸார் என்ற ஈரான் பிரஜையுடன் எல்லை தாண்டி ஈரானுக்குள் நுழைய திட்டமிட்டனர்.

அதன் பின்னர் ஈரானைக் கடந்து துருக்கிக்குள் பிரவேசித்து அதன் ஊடாக ஐரோப்பிய நாடு ஒன்றிற்குள் பிரவேசிப்பதே இந்தக் குழுவின் இலக்கு என இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், அஜர்பைஜான் வழியாக இந்த தரை வழிகள் வழியாக ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்வது பிரபலமடைந்ததால், அஜர்பைஜானின் எல்லைப் பாதுகாப்புப் படைகள் தங்கள் எல்லைகளை சட்டவிரோதமாக கடக்கும் புலம்பெயர்ந்தோரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் விசாரணை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.

நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி

INSTAGRAM-ல் முகம் தெரியாத ஆண் நண்பருடன் பழக்கம் : 15 லட்சத்தை இழந்த இளம் பெண்!!

மும்பையில்..

மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் Instagram-ல் பழகிய மர்ம நபர் ஒருவர் ரூ.15 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு instagram பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில் instagram மூலம் அவருக்கு இளைஞர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து இருவரும் instagram மூலம் பேசி வந்துள்ளனர். மேலும் அந்த நபர் தான் ராணுவத்தில் பணியாற்றுவதாகவும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு என்று உறவினர்கள் யாரும் கிடையாது. இதனால் கொஞ்சம் சேமித்து வைத்துள்ள நகை மற்றும் பணத்தை உனக்கு அனுப்பிவைப்பதாக அந்த பெண்ணுடன் கூறியுள்ளார்.

இதை அந்த பெண் நம்பியுள்ளார். இதையடுத்து தற்போதுதான் வெளிநாட்டிலிருந்து பணம் மற்றும் நகையை அனுப்புவதால் சுங்க வரி கட்ட வேண்டியுள்ளது. ரூ.15 லட்சம் கொடுத்து அனுப்பினால் உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.

அந்த பெண்ணும் அவர் கேட்ட பணத்தை வங்கியில் கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறிய படிப் பணம் மற்றும் நகையை அனுப்பவில்லை. இதையடுத்து மீண்டும் ரூ. 10 லட்சம் பணம் வேண்டும் என அந்த நபர் கேட்டுள்ளார்.

இதனால் அவர் மீது இளம் பெண்ணுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து தான் கொடுத்த ரூ.15 லட்சம் பணத்தைக் கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர் இந்த பெண்ணுடன் சமூகவலைதள உரையாடலைத் துண்டித்துள்ளார்.

இளம் பெண் பல முறை தொடர்பு கொள்ள முயன்றபோதும் அவரால் முடியவில்லை. பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி

19 வயது வித்தியாசம்.. காதலித்து திருமணம் செய்த ஜோடி.. பெண்ணின் அம்மாவை பார்த்ததும் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இங்கிலாந்தில்..

இங்கிலாந்தின் Staffordshire என்னும் பகுதியை சேர்ந்தவர் Rich Tomkinson. 48 வயதாகும் இவர், தன்னை விட 19 வயது குறைவான Evie என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு, Pub ஒன்றில் பணிபுரிந்து வரும் போது சந்தித்துள்ளதாக கூறபடுகிறது.

ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த இவர்கள், நாட்கள் செல்ல செல்ல காதலிக்கவும் தொடங்கி உள்ளனர். இருவருக்கும் இடையே உள்ள வயது இடைவெளி என்பதை ரிச் மற்றும் ஈவி ஆகிய இருவரும் பெரிதாக பொருட்படுத்தவே இல்லை.

தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக வாழ்ந்து வந்த ரிச் – ஈவி ஜோடி, கடந்த ஜூலை மாதம் திருமணமும் செய்துள்ளது. வயது வித்தியாசம் என்பதை தாண்டி, திருமணத்திற்கு பின்னரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவர்கள் இருவருக்கும் கடும் இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

தனது மனைவி ஈவியை Pub ஒன்றில் முதல் முதலாக பார்த்ததாக தான் ரிச் கருதிக் கொண்டு இருந்துள்ளார். ஆனால், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர் என்ற விஷயம், கடும் ஆச்சரியத்தை அவர்களுக்கு கொடுத்துள்ளது.

தங்களின் திருமணத்திற்கு பின்னர், ஈவியின் தாயான சாரா ஓவென் என்பவரை முதல் முறையாக ரிச் சந்தித்துள்ளார். அப்போது தான், 1990 களில் சாரா வேலை செய்த தெருவில் தானும் வேலை செய்து வந்ததை ரிச் உணர்ந்துள்ளார்.

ஏற்கனவே, பழக்கமான மனைவி ஈவியின் தாய் பற்றி அறிந்து கொண்டதும், சிறு வயதில் தனது மனைவி குழந்தையாக இருக்கும் போது அவருடன் விளையாடியதையும் உணர்ந்து அதிர்ந்தே போயுள்ளார் ரிச்.

20 ஆண்டுகளுக்கு முன், குழந்தையாக பார்த்த பெண்ணே தனக்கு மனைவியாக வந்ததால் தலை சுற்றி போன ரிச் இது பற்றி பேசுகையில், “குழந்தையாக ஈவி இருந்த போது அவரை சந்தித்தேன் என்பது சற்று வினோதமாக இருந்தது.

ஆனால், அப்போது எதுவும் எனக்கு தெரியவில்லை. இதனை தெரிந்து கொண்டதும் நாங்கள் சிரித்து கொண்டோம். வயது என்பது எங்களுக்கு ஒரு எண் மட்டுமே. பலரும் நான் இவியின் தந்தை என்றே தவறாக கருதி வருகிறார்கள். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஈவியை மணந்தது தான் என் வாழ்வின் சிறந்த நாள். அவருடன் ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளேன்” என ரிச் தெரிவித்துள்ளார்.

அதே போல, ரிச்சின் மனைவியான ஈவி இது பற்றி பேசுகையில், “நான் குழந்தையாக இருந்த போது, ரிச் என்னை சந்தித்தார் என்றது சற்று வித்தியாசமாக இருந்தது. ஆனால், அவர் மிகவும் வேடிக்கை ஆனவர். சிறந்த மனது உடையவர்.

நாங்கள் ஒன்றாக இருக்கும் போது, எங்களுக்கு இடையே வயது வித்தியாசம் உள்ளது என்பதை ரிச்சின் தாடியை தவிர வேறு எதை வைத்தும் சொல்ல முடியாது” என நெகிழ்ந்து போய் குறிப்பிட்டுள்ளார்.

நல்ல மனசு இருந்தா போதும் : மனதை நேகிழ வைக்கும் இளைஞனின் காணோளி

தன்னைத் தானே வாடகைக்கு விட்ட இளைஞன் : ஓர் சுவாரஸ்ய சம்பவம்!!

ஜப்பானில்..

ஜப்பானில் எந்தவித முதலீடும் இல்லாமல் ஒரு நாளைக்கு 7000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்திற்கு இளைஞர் ஒருவர் தன்னையே வாடகைக்கு விட்டுள்ளார்.

டோக்கியைவை சேர்ந்த ஸோஜி மோரி மோட்டோ என்ற இளைஞர் தனியார் நிறுவனங்களில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக புதிய தொழில் தொடங்க யோசித்து தன்னைத்தானே வாடகைக்கு விட்டார்.

கடைக்கு செல்வதற்கு, விளையாடுவதற்கு, எளிதான வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்றால் தன்னை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என ட்விட்டரில் பதிவிட்டர்.

அவர் கடினமான வேலைகளை செய்ய மாட்டேன் என்றும் பாலியல் ரீதியாகவோ தன்னை அழைத்தால் அவர்களை நிராகரித்து விடுவதாகவும் வாடிக்கையாளர்களின் மனக்குறைகளை கேட்டு பொழுதை கழிப்பதற்காக மட்டுமே செல்வதாகவும் தெரிவித்தார். இதை அடுத்து அந்த இளைஞரை பலர் வாடகைக்கு முன்பதிவு செய்தனர்.

ஆணவத்தின் உச்சியில் இளையராஜா : நடிகையை தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்திய சோகம்!!

இளையராஜா..

இளையராஜா செய்யும் பல விஷயங்கள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. அவர் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதும், அதற்கு பிறகு அவருக்கு எம்பி பதவி தரப்பட்டதும் சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது.

அத்தனை விமர்சனங்களை தாண்டி இளையராஜா எம்பி பதவியை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் தற்போது ஒரு போட்டோ இளையராஜாவை சர்ச்சையில் சிக்க வைத்து இருக்கிறது.

சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது ஒரு படம் இயக்கி வருகிறார். அதற்கு இளையராஜா தான் இசை அமைக்கிறார்.

இளையராஜாவை லட்சுமி ராமகிருஷ்ணன் பார்க்க சென்ற போது அவரை தரையில் உட்கார வைத்து இருக்கிறார்கள்.

வந்தவர்களுக்கு சேர் கொடுக்கும் அளவுக்கு கூட இளையராஜாவிடம் பணம் இல்லையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏரியில் மீன்பிடித்த நண்பர்களுக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

ராணிப்பேட்டையில்..

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த மோட்டூர் அஞ்சலக தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகன் பிரதீஷ் (12).

அதேபோல் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவரது மகன் அன்பரசு (15). நண்பர்களான பிரதீஷ் மற்றும் அன்பரசு இருவரும் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் மீன் பிடிப்பதற்காகச் சென்றனர்.

அப்போது இருவரும் ஏரியில் கரையோரம் அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கால் இடறி இருவரும் ஏரியில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளனர். இதை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் கிராம மக்கள் உடனே ஏரியில் குதித்து இருவரையும் மீட்டு அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு சிறுவர்களும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

9 வருடங்களாக குழந்தை இல்லை : மனைவிக்கு கணவன் செய்த கொடூர செயல்!!

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் அருகே வாழ மறுத்த மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்த கணவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி, ஜீவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகள் அருண்மொழி (27) என்பவருக்கும் ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் வேல்முருகன் (30) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

திருமணமாகி ஆகி 9 ஆண்டுகள் கழித்தும் இருவருக்கும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. குழந்தை இல்லாத நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனால் விபரீத முடிவெடுத்த அருண்மொழி குழந்தை பெற நினைத்து வேறு ஒரு ஆணுடன் நெருங்கி பழகி உள்ளார். இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனால் அருண்மொழி 3 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார்.

இந்த விவகாரம் கணவன் வேல்முருகன் அறிந்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த அருண்மொழி வீட்டில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியில் சென்றுள்ளார்.

இதனால் மனைவி காணவில்லை என்று குப்பம் காவல்நிலையத்தில் கணவன் வேல்முருகன் புகார் அளித்து இருந்துள்ளார். மாயமான இருவரையும் கண்டு பிடித்த குப்பம் போலீசார் கள்ளகாதலனிடம் இருந்து பிரித்து அவரது தாய் தாயுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாய் வீடு வந்த அருண்மொழியுடன் அவரது கணவர் வேல்முருகன் சாமதானம் செய்ய உடன் வந்து மாமியார் வீட்டிலேயே இரண்டு நாள் தங்கி உள்ளார்.

இனிமேலாவது எவ்வித பிரச்சினையும் செய்யாமல் வாழ்கிறேன் வா என்று அழைத்துள்ளார். எனக்கு யாரும் வேண்டாம் நான் தனிமையில் வசித்து கொள்கிறேன் என்று கூறி வீட்டில் இருந்து உள்ளார்.

இதனால் செய்வது அறியாமல் மனைவி மீது தீராத ஆத்திரத்தில் இருந்த வேல்முருகன் தான் மறைத்து வைந்து இருந்த பட்டன் கத்தியால் கழுத்து, வாய், கை போன்ற இடங்களில் குத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார். இதனை அறிந்த அருண்மொழியின் தாயார் சின்னபாப்பா அலறி அடித்து கொண்டு அக்கம் பக்கதினரை அழைத்துள்ளார்.

இதனை அறிந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தப்பி ஓடிய வேல்முருகனை குப்பம் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசையாய் வளர்த்த ஆட்டுக்காக உயிரைவிட்ட மாணவன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சமபவம்!!

நங்கவள்ளியில்..

சேலம் அருகே கடனை திருப்பி கொடுக்காததால் ஆசையாய் வளர்த்த ஆட்டை ஓட்டி செல்வதாக கூறியதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள விருதாசம்பட்டி பழங் கோட்டை பக்கமுள்ள வெள்ளக்கரட்டை சேர்ந்தவர் நிர்மலா. இவரது மகன் நிர்மல்ராஜ் (18). இவர் காளிப்பட்டி பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலா அதேபகுதியை சேர்ந்த சுதாகர் (28) என்பவரிடம் 40 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இதில் 20 ஆயிரத்தை கொடுத்தார். மீதமுள்ள 20 ஆயிரத்தை கொடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சுதாகர், அவரது தாய் சரசு ஆகியோர் நிர்மலா வீட்டிற்கு சென்று மீதமுள்ள பணம் 20 ஆயிரத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.

பணத்தை கொடுக்கவில்லை என்றால் ஆட்டை பிடித்து செல்வேன் என சுதாகர் கூறியுள்ளார். அந்த ஆட்டை நிர்மல்ராஜ் ஆசையாக வளர்த்து வந்துள்ளார். அந்நேரத்தில் நிர்மல்ராஜை பற்றியும், தாயை பற்றியும் அவதூறாக பேசியுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த நிர்மல் ராஜ் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதை கண்டு பதறி துடித்த தாய் மகனின் உடலை பார்த்து தாய் கதறி அழுதார்.

இதுகுறித்து நங்கவள்ளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த பேரதிஷ்டம் : பல கோடிகளை அள்ளிய குடும்பம்!!

அபுதாபியில்..

அபுதாபியில் வசிக்கும் செல்வராணி என்ற பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்.பரிசு பணத்தை வைத்து ஏழைகளுக்கு உதவ விரும்புவதாக கூறியுள்ள செல்வராணி கணவர் அருள்சேகர்

வெளிநாட்டில் தமிழ்ப்பெண்ணிற்கு மில்லியனர் டிராவில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ள சம்பவத்தின் சுவாரசிய பின்னணி வெளியாகியுள்ளது. அபுதாபியில் வசிப்பவர் செல்வராணி. இவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.

அபுதாபியில் உள்ள லூலு மாலில் குறைந்தபட்சம் Dh200க்கு பொருட்கள் வாங்குபவர்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்படும். இப்படி செல்வராணி சேகரித்து வைத்திருந்த 80 கூப்பன்களில் அவருக்கு ஒரு கூப்பனுக்கு Dh1 million (ரூ.9,82,52,277.32) பரிசு விழுந்தது.

இருப்பினும் இந்த தகவலை செல்வராணியிடம் உடனடியாக மால் நிர்வாகத்தால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் விடுமுறைக்காக அவர் தமிழ்நாட்டிற்கு சென்றிருந்தார். அவரை தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அதிர்ஷ்டவசமாக வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து செல்வராணி அபுதாபியில் உள்ள தனது கணவர் அருள்சேகருக்கு தகவல் தெரிவித்தார். அருள்சேகர் கூறுகையில், கூப்பன்கள் என் மனைவி செல்போன் எண்களில் தான் பதிவு செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அவரை செல்போன் அழைப்பில் அவர்களால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு தகவலை சொன்னார்கள். முதலில் யாரோ தங்களை பரிசு விழுந்ததாக சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்றே சந்தேகப்பட்டோம்.

பின்னர் தான் உண்மை தெரிந்தது. நாங்கள் 14 ஆண்டுகளாக அபுதாபியில் வசிக்கிறோம். பரிசு பணத்தை வைத்து எங்கள் பிள்ளைகள் கல்விக்காக செலவிடுவதோடு, ஏழைகளுக்கு உதவவும் விரும்புகிறோம் என கூறியுள்ளார்.

வவுனியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று : பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மீள ஆரம்பம்!!

கொரோனா..

வவுனியாவில் கோவிட் தொற்று ஏற்பட்டு வருவதனால் பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் கோவிட் தொற்றும் நாட்டில் அதிகரித்து வருகின்றது. இம் மாதம் வவுனியாவில் கோவிட் மரணம் ஒன்று பதிவாகியிருந்ததுடன், பலர் கோவிட் தொற்றுக்குளாகியுள்ளனர்.

இதன்காரணமாக கோவிட் தொற்று தீவிர நிலையை அடையாது தடுக்கும் நடவடிக்கையாக பைசர் கோவிட் தடுப்பூசிகள் மீள ஏற்றப்படவுள்ளன. இதுவரை தடுப்பூசிகள முறையாக போடாதவர்கள் (1,2,3,4) தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அந்தவகையில், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தில் காலை 9 மணி தொடக்கம் மதியம் 12 மணிவரை தடுப்பூசிகளைப் பெற முடியும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளதுடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.

யாழில் இப்படி ஒரு உணவகமா? 30 ரூபாவுடன் வந்தால் வயிற்றுப்பசி தீருமாம்!!

யாழில்..

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் இன்று அனைத்து உணவுகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று யாழ்ப்பாணத்தில் இயங்கும் உணவகம் ஒன்று மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் ஒரு உணவகமாக மாறியுள்ளது.

தெல்லிப்பழை சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வீதியில் உள்ள இந்த உணவகத்தில் தேநீர் 10 ரூபாவிற்கு (ஏலக்காய், இஞ்சி போட்டு, சீனி விருப்பத்திற்கேற்ப) விற்பனை செய்யப்படுகின்றது.

“இயற்கை முறையிலான மூலிகை உணவுகள் உள்ளன. 30 ரூபாவுடன் வந்தால் வயிற்றுப்பசி போக்கும் அளவுக்கு சாப்பிடலாம்” என கடை உரிமையாளர் கூறுகின்றார்.

இரண்டு ஆசிரியர்கள் இணைந்து இந்த உணவகத்தினை பி.ப 2.30 தொடக்கம் பி.ப 11.00 மணிவரை நடத்துகின்றனர். 93 வயது பாட்டி ஒருவர் உட்பட ஆறு பேர் உணவகத்தில் வேலை செய்கின்றனர்.

மக்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்ற நோக்குடன் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை முறையில் உணவகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் தனது காதல் கதையை மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் : கொதித்தெழுந்த பெற்றோர்கள்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்த ஆசிரியரை இடம் மாற்றியதை கண்டித்தும்,

பிறிதொரு ஆசிரியர் மாணவர்களுக்கு தேவையில்லை எனவும் தெரிவித்து, பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் பாடசாலையினை மூடி இன்று (16.08) காலை கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பாடசாலையில் தற்போது கல்வி கற்பித்து வரும் குறித்த ஆசிரியர் மாணவர்களுக்கு அடிப்பது மற்றும் தனது காதல் கதையினை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதுமான செயற்பாடு, மாணவர்களை கல்வியில் இருந்து காதல் திசையில் இழுக்கும் செயற்பாடு எனவும் பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்திற்கும் முறைப்பாடு செய்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள். பிள்ளைகளுக்கு காதல் கதை சொல்லும் ஆசிரியர் பாடசாலைக்கு தேவை இல்லை என தெரிவித்த பெற்றோர்கள்,

ஒழுங்காக கல்வி கற்பித்த ஆசிரியருக்கு இடம்மாற்றம் வழங்கியதை இரத்துசெய்து அவரை மீண்டும் பாடசாலைக்கு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தியும் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இதனையடுத்து புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அலுவலகத்தினை சேர்ந்த அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பெற்றோர்களுடன் உரையாடியுள்ளார்.

அத்துடன் அடுத்த வாரத்தில் குறித்த ஆசிரியரை மீளவும் பாடசாலைக்கு பணிக்கு அமர்த்துவதாக அந்த அதிகாரி உறுதியளித்துள்ளதை தொடர்ந்து பெற்றோர்களால் போராட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

பேருந்து -எரிபொருள் பவுசர் மோதி விபத்து : 29 பேர் பரிதாபமாக பலி!!

விபத்து..

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்றும் எரிபொருள் பவுசர் ஒன்றும் மோதிக்கொண்டதால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். முல்தான்- சுக்குர் நெடுஞ்சாலையில் இன்று (16.08) அதிகாலை 4.00 மணியளவில்,

இச்சம்பவம் இடம்பெற்றதாக முல்தான் ஆணையாளர் அமீர் கத்தாக் தெரிவித்துள்ளார். லூகூரிலிருந்து கராச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து,

எரிபொருள் பவுசரின் பின்புறத்தில் மோதி தீப்பற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் 29 பேர் ஸ்தலத்தில் உயிரிழந்தனர் எனவும் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.