இலங்கையில் முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி அறிமுகம்!!

முச்சக்கர வண்டி..

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக பல மின்னியல் பொருட்கள் உருவாக்கப்படுகிற நிலையில் இலங்கையில் புதிதாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி டேவிட் பீர்ஸ் கம்பனியால் மின்சார முச்சக்கர வண்டிகள் (மாற்றியமைக்கப்பட்ட) சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. USAIDஇன் அனுசரனையுடன் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று காலை அமெரிக்க தூதுவரின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இந்நிலையில் விரைவில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கரவண்டிகள் சந்தையில் கிடைக்கப்பெறும் என கூறப்படுகின்றது.

இந்த நிகழ்வில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இது குறித்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில், எரிசக்தி துறையில் மிகவும் தேவையான மாற்றங்கள் இடம்பெறுவதையும் எதிர்காலத்திற்கான திட்டங்களையும் பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் குறிப்பிடுகையில், இலங்கை இது போன்ற முச்சக்கர வண்டிகளுக்கான மின்சார மயமாக்கல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன், இலங்கையின் எரிபொருள் சவால்களை எதிர்கொள்ள தனியார் மற்றும் அரசாங்க கூட்டிணைவு மூலம் இது போன்ற புதுப்பிக்கத்தக்க தீர்வுகள் உருவாக்குகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னையில்..

பள்ளி மாணவி விபத்தில் சிக்கியதை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தப்பியோடி அருகிலுள்ள காவல்நிலையத்தில் சரணடைந்தார்

சென்னையில் பள்ளி மாணவி ஒருவர் சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டு திரும்பிய வழியில் பேருந்து மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் சென்னை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி லட்சுமிபிரியா. குரோம்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வந்த இவர், சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக மிதிவண்டியில் சென்றுள்ளார்.

பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடிய லட்சுமிபிரியா, பின்னர் தோழிகளுடன் வீடு திரும்பினார். அப்போது அஸ்தினாபுரம் பகுதியில் மாணவி சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அரசு பேருந்து மாணவியின் மிதிவண்டி மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லட்சுமிபிரியா, பேருந்தின் சக்கரத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுதந்திர தினத்தில் பள்ளி மாணவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவியின் தற்கொலைக்கு காரணம் பேராசிரியர்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

வேலூரில்..

நர்சிங் வேலூர் மாவட்டம் குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரது மகள் கார்த்திகாதேவி (22). இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.

இதனிடையே நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து இரவு தனது சொந்த ஊரான குடியாத்தம் வந்துள்ளார். பின்னர் அதிகாலை கார்த்திகாதேவி வீட்டில் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை கண்ட அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்யுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், ஆந்திராவில் படித்து வந்த கார்திகாதேவிக்கு கல்லூரி எச்ஓடி மற்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தது தெரிய வந்தது. இதனால், மாணவி சில நாட்களுக்கு முன்பு பெற்றோருக்கு போன் செய்துவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில்தான், மாணவி கடும் மன உளைச்சலில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. தமிழகத்தில் இருந்து படிப்பிற்காக வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவிகள் இதுபோன்ற தொந்தரவுகளை சந்தித்து வருவதாக குற்றசாட்டுகள் இருந்து வருகின்றன.

ஆகையால், தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்தி வெளி மாநிலங்களில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மேலும், மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்த ஆந்திர கல்லூரி எச்ஓடி, பேராசிரியர்கள் மீது சித்தூருக்கு சென்று புகார் கொடுக்க மாணவியின் பெற்றோர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

என் மகன் இறந்து விடுவான்… அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு நெருக்கடி : பிரித்தானிய தாயின் கவலை!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு நெருக்கடியால் தனது மகன் ஐசக் இறந்து விடுவான் என அவரது தாய் மேக்சின் ரோத்செஸ்டர் கவலைக் கொண்டுள்ளார்.

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு நெருக்கடி மற்றும் உயரந்து வரும் ஆற்றல் எரிசக்தியின் விலைகள் போன்றவற்றால் மில்லியன் கணக்கான மக்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேக்சின் ரோத்செஸ்டர் (Maxine Rothchester) ஸ்கை நியூஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அதிகரித்து வரும் ஆற்றல் எரிசக்தியின் விலையேற்றத்தால் தனது மகன் ஐசக் உயிரிழந்து விடுவான் என கவலை தெரிவித்துள்ளார்.

ஐசக் எட்டு மாத குழந்தையாக இருந்ததிலிருந்து மேக்சின் அவனை கவனித்து வருகிறார், ஐசக்கிற்கு தற்போது ஒன்பது வயதாகிறது ஆனால் ஐசக்கின் உடல்நிலை என்பது புதிதாகப் பிறந்த குழந்தையின் மன வயது மற்றும் உடல் எடை 11 கிலோ மட்டுமே கொண்டது.

பிறந்தது முதல் ஐசக் ஆலன்-ஹெர்ன்டன்-டட்லி நோய்க்குறியால் அவதிப்படுகிறான், இது மிகவும் அரிதான ஒரு நிலை, அதாவது அவரை உயிருடன் வைத்திருக்க அவருக்கு 24/7 கவனிப்பும் சிறப்பு உபகரணங்களும் தேவை.

இந்த உபகரணங்கள் தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட பல பெற்றோர்களைப் போலவே நானும் தற்போது அதிகரித்து வரும் ஆற்றல் விலை உயர்வால் பயப்படுகிறேன் என மேக்சின் ஸ்கை நியூஸிடம் தெரிவித்தார்.

எங்களுக்குத் தேவையான உபகரணங்கள் ஒரு தேர்வு அல்ல, அது ஐசக்கின் வாழ்க்கை, ஐசக்கிற்கு 24/7 என்ற கணக்கில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் மின்சாரத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில் எங்களது வாராந்திர மின்கட்டணம் ஏற்கனவே அதிகரித்து வருகிறது, தற்போது வாரத்திற்கு சுமார் 30 பவுண்டுகள் அதிகமாக செலவிழிக்கிறோம், அவை மீண்டும் உயர்ந்தால் அவற்றை எப்படி சமாளிக்கப் போகிறோம் என தெரியவில்லை.

ஏனெனில் வரும் பணம் அப்படியே உள்ளது, ஆனால் செலவு மற்றும் கட்டணங்களுக்காக வெளியேறும் பணம் அதிகரித்து கொண்டே செல்லுகிறது என்று மேக்சின் தெரிவித்தார்.

இதனால் அதிகரித்து வரும் பில்களை செலுத்த சிரமப்படுபவர்களுக்கு என்ன கூடுதல் உதவி வழங்கப்படும் என்பது பற்றிய தெளிவான மற்றும் துல்லியமான விவரங்களை அரசாங்கம் கோடிட்டுக் காட்ட வேண்டும் என்று மேக்சின் தெரிவித்தார்.

மேலும் அடுத்த பெரிய விலையேற்றத்திற்கு முன்னதாக விரிவான திட்டத்தை அரசு வைத்திருப்பது மிகவும் நல்ல விஷயமாக இருக்கும் என்றும், அவை எங்களை போன்ற குடும்பங்களை கவலை கொள்வதில் இருந்து நிறுத்தும் என மேக்சின் தெரிவித்தார்.

ராட்சத அலையில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னையில்..

சென்னை, திருவொற்றியூர் பகுதியில், ராட்சத அலையில் சிக்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த கபீர் (24), அப்பான் (17), சபீர் (19). அமீர் (18) உள்ளிட்ட எட்டு பேர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள், விடுமுறையை கழிக்க, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருவொற்றியூர் கே.வி.கே குப்பம் கடற்கரைக்கு வந்தனர்.

அங்கு, எட்டு பேரும், கடலில் இறங்கி குளித்தனர். அப்போது, ராட்சத அலையில், கபீர் , அப்பான் , சபீர், அமீர் ஆகியோர் சிக்கினர். இதை பார்த்த மற்றவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

ஆனால், அவர்கள் நான்கு பேரும் கடலில் மூழ்கினர். உடனே திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு அவர்களும், கடலோர காவல் படையினர் ஆகியோர் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விடுமுறை நாளில் கடலில் குளிக்க வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி மாயமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துணைக்கு யாருமே இல்லை என்ற விரக்தியில் 27 வயதான பெண் எடுத்த விபரீத முடிவு : மகள்கள் அனாதையான சோகம்!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல்லில் துணைக்கு யாரும் இல்லாத ஏக்கத்தில் இரண்டு மகள்களுக்கு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி ஊராட்சி ஓட்டநாகம்பட்டி புதூரை சேர்ந்தவர் ரஞ்சிதா (27).

இவர் திருமணமாகி கணவரை பிரிந்து தந்தை வீட்டில் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். சிறுவயதிலேயே தாயை இழந்த ரஞ்சிதா கணவருடனும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனது தந்தையின் வீட்டில் வசித்து வரும் நிலையில் தந்தையும் தம்பியும் கேரளாவில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், துணைக்கு யாரும் இல்லாத விரக்தியில் இருந்த ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான காவல்துறையினர் ரஞ்சிதாவின் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்கு யாரும் இல்லை என்ற விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட ரஞ்சிதா,

தான் இறந்து விட்ட பிறகு தனது இரண்டு மகள்களுக்கும் யாருமே இல்லையே என்பதை நினைக்க மறந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்களையும், ஊர் மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோடிகளை கொட்டி 19 வயதுப் பெண்ணை மணந்த 65 வயது நபர் : 2 மாதத்தில் விவாகரத்து : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

இந்தோனேசியாவில்..

கோடிக்கணக்கில் வரதட்சணை கொடுத்து இளம்பெண்ணை மணந்த முதியவர் இந்தோனேசியாவில் 65 வயதான கோடீஸ்வரருக்கும், 19 வயது இளம்பெண்ணிற்கும் 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் விவாகரத்து செய்துள்ளனர்.

ஹஜி சொண்டனி (65) என்பவருக்கும், பியா பர்லண்டி (19) என்ற பெண்ணிற்கும் கடந்த மே மாதம் 18ஆம் திகதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது அநாட்டு வழக்கப்படி மணப்பெண் பியாவுக்கு, மணமகன் ஹஜி ரூ. 1,22,74,671.72 வரை வரதட்சணை கொடுத்ததோடு, புதிய வீடு மற்றும் கார் வாங்கி கொடுத்தார்.

இதோடு திருமண செலவுகளையும் ஹஜி முழுமையாக ஏற்று கொண்டார். இந்த நிலையில் திருமணமான இரண்டு மாதத்தில் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 3ஆம் திகதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

விவாகரத்துக்கான சரியான காரணம் வெளியிடப்படவில்லை, ஆனால் திருமணமான இரண்டு வாரங்களிலேயே புதுப்பெண் பியாவுக்கு தனது கணவர் மீது விருப்பமில்லை என்று ஊகங்கள் பரவின.

பொதுவெளியிலும் இது தெரிய ஆரம்பித்தது. ஏனெனில் ஹாஜியும் பியாவும் அவர்களது வீட்டின் முன் அமர்ந்திருந்த புகைப்படம் வெளியானது. அதில் அவர்கள் தள்ளி தள்ளியே உட்கார்ந்திருந்தனர், இருவர் முகத்திலும் ஒரு இறுக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

காதல் திருமணம் செய்து செய்து கொண்ட தம்பதி ஒன்றாக எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் தம்பதி. உயிரிழந்த இளம்பெண் கர்ப்பமாக இருந்தார் என கூறப்படுகிறது. தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தின் மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா (22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தி்ல் வேலை பார்த்து வந்தவர் சவுந்தரராஜன் (25). சில மாதங்களுக்கு முன்பு சவுந்தரராஜனும், பவித்ராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பவித்ரா 5 மாத கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

நேற்று காலை வீட்டில் பவித்ராவும், சவுந்தரராஜனும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் தம்பதியின் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவா­க­ரத்துக் கேட்ட மனைவியை நீதிமன்றில் வைத்து கழுத்தை வெட்­டிக் கொன்ற கணவன்!!

பெங்­க­ளூரில்..

இந்­தி­யாவின் பெங்­க­ளூரு நகரில் நீதி­மன்­றத்தில் வைத்து தனது மனை­வியின் கழுத்தை கத்­தியால் வெட்­டிய சம்­பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவா­க­ரத்துக் கோரிக்­கையின் பின்னர் மீண்டும் இணைந்து வாழ சம்­ம­தித்­தி­ருந்த நிலையில் இத்­தாக்தல் நடந்­துள்­ளமை குறிப்பிடத்தக்கது.

சிவ­கு­மாரும் அவரின் மனைவி சித்­ராவும் 7 வரு­டங்­க­ளுக்கு முன்னர் திரு­மணம் செய்து விவா­க­ரத்து செய்­வ­தற்கு இவர்கள் மனுத்­தாக்கல் செய்­தி­ருந்­தனர். இவர்­களை உள­வள ஆலோ­சனை சேவை நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­று­மாறு நீதி­மன்றம் அறி­வு­றுத்­தி­யது.

இதன்­படி, பெங்­க­ளூரு ஹோலே­ந­ர­சி­புர குடும்ப நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற ஒரு மணித்­தி­யால ஆலோ­சனை நிகழ்வில் இத்­தம்­ப­தியர் பங்­கு­பற்­றினர். இதன்­போது இவர்கள் தமக்­கி­டை­யி­லான முரண்­பா­டு­களை களைந்­து­விட்டு இணைந்து வாழ்­வற்கு அவர்கள் சம்­ம­தித்­துள்ளனர்.

எனினும் இந்­நி­கழ்வின் பின் வெளியே வந்த சித்ரா, கழி­வறை நோக்கி நடந்­த­போது பின்­தொ­டர்ந்து சென்ற சிவ­குமார் அப்­பெண்ணை கழுத்தை கத்­தியால் வெட்­டி­யுள்ளார் என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அங்­கி­ருந்து சிவ­குமார் தப்­பி­யோட முயன்­ற­போ­திலும் அரு­கி­லி­ருந்­த­வர்கள் அவரை பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தனர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சம்பவத்தில் அதி­க­ளவு இரத்தம் வெளி­யே­றி­யி­ருந்­ததால் சிகிச்­சை­ பலனின்றி சித்ரா உயி­ரி­ழந்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

திருமணத்திற்கான பூஜையில் சமந்தா மற்றும் சித்தார்த் : புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை!!

சமந்தா..

தென்னிந்திய திரையுலகின் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறித்து சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த சமந்தா.

புஷ்பா, வெப் சீரிஸ் என தற்போது பாலிவுட் வரை தனது மார்க்கெட்டை பெரிதாகி இருக்கிறார். இந்நிலையில் சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் அவர்களும் 4 வருட திருமண வாழ்க்கை பின் விவாகரத்து செய்து கொண்டார்கள். மேலும் சமந்தா நாக சைதன்யாவிற்கு முன் நடிகர் சித்தார்தை தான் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

பொது இடங்களில் இவர்கள் குறித்த புகைப்படங்கள் அப்போது செம வைரலானது. அதன்படி அப்போது பெரிய கிசுகிசுக்கப்பட்ட விஷயம் அவர்கள் இருவரின் திருமணம்.

ஆம், இருவரும் கலந்து கொண்ட பூஜை ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி அது திருமணத்திற்கான பூஜை என்றும் அப்போது பேசப்பட்டு உள்ளது.

ஆனால் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது எதோ திரைப்படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்டது போல் தான் தெரிகிறது.

சர்க்கரை நோயாளிகள் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது ஆபத்தா?

பிரியாணி..

பொதுவாக மற்ற பிரியாணி வகைகளை காட்டிலும் பெரும்பாலான மக்களுக்கு பிடித்தமான பிரியாணி சிக்கன்தான். ஆனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல என்று கூறப்படுகின்றது.

இது ஒரு சில பிரச்சினைகளை ஏற்படுத்தும். அந்தவகையில் நீரிழிவு நோயாளிகள் சிக்கன் பிரியாணி எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

சிக்கன் பிரியாணி சாப்பிடலாமா?


சிக்கனானது ஊசி செலுத்தி, வேதி பொருட்களை உட்கொண்டதாக இருத்தல் கூடாது. முற்றிலுமாக இயற்கை ரீதியாக உற்பத்தி செய்யப்பட்ட கோழிகளையே (நாட்டு கோழிகள்) பிரியாணியில் சமைத்து சாப்பிட வேண்டும். அத்துடன் வேக வைத்த சிக்கனே சிறந்தது.

குறைந்த அளவே சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிட வேண்டும். சிக்கனில் அதிக அளவில் செலினியம் உள்ளதால் இது உடலுக்கு நன்மைதான். இருப்பினும் உட்கொள்ளும் அளவு மிக முக்கியம். அத்துடன் அதிகமான அளவில் எண்ணெய்யை உபயோகிக்காமல் பிரியாணி செய்து சாப்பிட்டால் நலம் பெறலாம். எந்த பிரியாணி சிறந்தது?


ஆட்டு இறைச்சியே நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாகும். இவற்றில் பலவித சத்துக்கள் உள்ளன. இரும்புசத்து, ஜின்க், பாஸ்பரஸ், வைட்டமின் பி12, ரோபோபிளவின் போன்றவை நிறைந்துள்ளது.

2 வாரத்திற்கு ஒரு முறை குறைந்த அளவு மட்டன் பிரியாணியை சாப்பிடுவது உடலுக்கு நல்லதே சிக்கன் பிரியாணியை தினந்தோறும் சாப்பிட கூடாது. வாரத்திற்கு ஒரு முறை குறைவான அளவில் சாப்பிடலாம்.

எப்போதும் குறைந்த கொலெஸ்ட்ரோல் உள்ள எண்ணையையே பயன்படுத்துங்கள். பிரியாணியை பிரௌன் பாஸ்மாதி அரிசியை கொண்டே தயார் செய்யுங்கள். இதுதான் மற்றவற்றை காட்டிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்ததாகும். சாப்பிட்ட பிறகு ஒரு மூலிகை டீ குடிப்பது நல்லது.

இளைஞனின் உயிரைப் பறித்த மோட்டார் சைக்கிள் பந்தயம்!!

விபத்து..

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் பிலியந்தலை, கோரக்காபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இதன்போது படுகாயமடைந்த மற்றுமொரு இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பொகுந்தர பிரதேசத்தில் உள்ள வீதியொன்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடச் சென்ற போதே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது.

பந்தயத்திற்கு சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்று தற்போது காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றைய மோட்டார் சைக்கிளை பொகுந்தர பிரதேசத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் கடையொன்றில் வைத்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், விபத்து இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், உயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன், விபத்து இடம்பெற்ற போது பல காட்சிகள் கைத்தொலைபேசியில் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வெளிநாட்டில் உள்ள மனைவியை காணொளியில் அச்சுறுத்திய கணவர்!!

காணொளியில்..

தனது 5 வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்யப் போவதாக மனைவியை அச்சுறுத்தி காணொளி ஒன்றை கணவன் வெளியிட்டுள்ளார்.

இவர் தனது மனைவிக்கு அனுப்பி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டிய பதில் நீதிவான் ஜெனி அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை நேற்று (15.08) நீதிமன்றத்தில் முன்னிலை படுத்திய பொலிஸார் சந்தேக நபர் தனது பிள்ளையைக் கொல்ல முயற்சிப்பதாகத் தெரிகிறது என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த தனது மனைவியை அழைப்பிக்கும் நோக்கில் அவர் இவ்வாறு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த காணொளியை சந்தேக நபர் தனது மனைவிக்கும், மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிய நிறுவனத்துக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தந்தையின் இந்தச் செயலால் அவரது மகன் பயந்த நிலையில் காணப்படுவதனை குறித்த காணொளி காட்டியுள்ளது. இது தொடர்பில் தகவலறிந்த குளியாப்பிட்டிய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மகனை பொலிஸ் காவலில் எடுத்துள்ளனர்.

5 வயதான அவரது மகன் தந்தையுடன் செல்ல மறுத்துள்ளதுடன் தாய் வரும் வரை தனது உறவினருடன் செல்ல விரும்புவதாகவும் குழந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மின் வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கப்படுகிறது!!

மின் வெட்டு..

இலங்கையில் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தீர்மானம் இலங்கை மின்சார சபையால் எடுக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கோளாறை கண்டறியும் பணியில் தொழில்நுட்பவியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது தொகுதியில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்ற போதும் மூன்றாவது தொகுதி தொடர்ந்து இயங்கி வருகிறது. மின் விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு முனையம் மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாகவே மின்வெட்டு நேரம் நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கமைய இன்று முதல் 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றும், நாளைய தினமும் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்கு முன்னர் கடந்த சில நாட்களாக நாட்டில் ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஒரே வீட்டில் மூன்று தமிழ் பெண்களை திருமணம் செய்த பிரான்ஸ் நாட்டு மணமக்கள்!!

பிரான்ஸ் நாட்டு மணமக்கள்..

தமிழ்நாட்டை சேர்ந்த பெற்றோர் பிரான்ஸில் பிறந்து வளர்ந்த தனது மூன்று மகள்களையும் அந்நாட்டை சேர்ந்தவர்களுக்கு தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மாசிலாமணி – ஆனந்தி தம்பதியினர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகின்றனர்.

பிரான்சில் மாசிலாமணி தனியார் உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு காயத்ரி, கீர்த்திகா, நாராயிணி என மூன்று மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் மூவரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத மாசிலாமணி – ஆனந்தி தம்பதியினர் அவர்களுக்கு தமிழ் கலாசார முறைப்படி திருமணம் முடித்து வைக்க விரும்பினர்.

அதன்படி மகள்கள் மூவருக்கும் தமிழகத்தின் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள்.

இது குறித்து தமிழகத்தில் உள்ள தனது உறவினர்களுக்கு அழைப்பு விடுத்த அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 14) மாசிலாமணி – ஆனந்தி தம்பதியினர் தங்களின் மூன்று மகள்களுக்கும் ஒரே நேரத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ், ராம்குமார், மஜ்ஜூ என்ற மூவருடன் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வைத்து திருமணம் செய்து வைத்தனர்.

தமிழ்நாட்டின் முறைப்படி திருமணம் செய்து கொண்ட காயத்ரி – ஜார்ஜ், கீர்த்திகா- ராம்குமார், நாராயிணி – மஜ்ஜூ மணமக்களை உறவினர்கள் வாழ்த்தினர். அத்துடன் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

வெளிநாட்டில் பிறந்து அங்குள்ள கலாசாரத்தில் வளர்ந்து இருந்தாலும் தமிழ் கலாசாரத்தை மதிக்கும் விதமாக தங்கள் 3 பிள்ளைகளுமே வாழையடி வாழையாக வாழ வேண்டும் என விரும்பி தமிழர் கலாசாரத்தில் திருமணம் செய்து வைத்ததாக தாய் ஆனந்தி மகிழ்வுடன் தெரிவித்தார்.

அதேசமயம் தமிழர் பாரம்பரியத்தை மதிப்பதால் தமிழகத்தில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்த மணமகள் காயத்ரி இந்த திருமணத்தால் இரு நாட்டு கலாசாரமும் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்தார். தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு மணமகன் மஜ்ஜூ பேசுகையில்,

தங்கள் நாட்டில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வதை விட தமிழ் கலாசார முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டது தனக்கு ஒரு புதிய உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் தாங்கள் சூடியுள்ள மண மாலையின் பூக்களுக்கு உயிர் இருப்பதாக உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் , “உறவினர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டது ஒரு மதிப்புமிக்க நிகழ்வாக உள்ளது. இந்த திருமணத்தால் கலாசாரங்கள் ஒன்றிணைகிறது. அன்பு மட்டும் தான் அனைத்துக்கும் ஆதாரம்” எனவும் மிக நெரிக்ழ்ச்சியுடன் தெரிவித்தாராம்.

உலகளாவிய ரீதியில் ஒரே நாளில் பிரபலமான இலங்கைச் சிறுமி!!

இலங்கைச் சிறுமி..

இலங்கையை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது திறமையால் ஒரே தினத்தில் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளார். கதிர்காமத்தில் இடம்பெற்ற பெரஹரா நிகழ்வை அழகுப்படுத்திய 11 வயதுடைய சிறுமி தொடர்பில் இலங்கை மக்களால் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த சசாதி என்ற சிறுமி கதிர்காமத்தில் இடம்பெற்ற பெரஹேர நிகழ்வில் மயில் வேடமிட்டு நடனமாடினார். அவரின் நடன காணொளி வைரலாக பரவி வருகிறது.

பிறவியிலேயே வாய் பேச முடியாத காது கேட்காத இந்த சிறுமியின் நடனம் உள்நாட்டு மக்களை மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் மிகவும் கவர்ந்துள்ளது.

இம்முறை புலமைபரிசீல் பரீட்சைக்கு முகம் கொடுக்கவுள்ள சசாதியின் இயலாமை குறித்து பலரும் அனுதாபம் வெளியிட்டு வருகின்றமைக்கு அவரது பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

எங்கள் மகளை யாரும் பாவமாக பார்க்க வேண்டாம். அவரது இயலாமையை அவமானப்படுத்த வேண்டாம். பேஸ்புக் யூடியுப் போன்ற சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் தங்கள் மகள் குறித்து காண்பதாகவும் அவ்வாறு செய்ய வேண்டாம் என பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தங்கள் மகளுக்கு யாரும் பண உதவிகள் செய்ய வேண்டாம். அவருக்கு வேண்டிய அனைத்தும் நாங்கள் செய்துள்ளோம். அவர் தங்கள் சகோதரியாக பாருங்கள்.

சிறுமி என்று சொல்வதனை விட அவரை ஒரு குழந்தையாகவே நாங்கள் பார்க்கிறோம். அனைவரும் அவரை தங்கள் தங்கையாக பார்க்குமாறு பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.