இளைஞனின் உயிரைப் பறித்த மோட்டார் சைக்கிள் பந்தயம்!!

விபத்து..

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் பிலியந்தலை, கோரக்காபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இதன்போது படுகாயமடைந்த மற்றுமொரு இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பொகுந்தர பிரதேசத்தில் உள்ள வீதியொன்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடச் சென்ற போதே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது.

பந்தயத்திற்கு சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்று தற்போது காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றைய மோட்டார் சைக்கிளை பொகுந்தர பிரதேசத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் கடையொன்றில் வைத்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், விபத்து இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், உயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன், விபத்து இடம்பெற்ற போது பல காட்சிகள் கைத்தொலைபேசியில் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வெளிநாட்டில் உள்ள மனைவியை காணொளியில் அச்சுறுத்திய கணவர்!!

காணொளியில்..

தனது 5 வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்யப் போவதாக மனைவியை அச்சுறுத்தி காணொளி ஒன்றை கணவன் வெளியிட்டுள்ளார்.

இவர் தனது மனைவிக்கு அனுப்பி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டிய பதில் நீதிவான் ஜெனி அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை நேற்று (15.08) நீதிமன்றத்தில் முன்னிலை படுத்திய பொலிஸார் சந்தேக நபர் தனது பிள்ளையைக் கொல்ல முயற்சிப்பதாகத் தெரிகிறது என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த தனது மனைவியை அழைப்பிக்கும் நோக்கில் அவர் இவ்வாறு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த காணொளியை சந்தேக நபர் தனது மனைவிக்கும், மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிய நிறுவனத்துக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தந்தையின் இந்தச் செயலால் அவரது மகன் பயந்த நிலையில் காணப்படுவதனை குறித்த காணொளி காட்டியுள்ளது. இது தொடர்பில் தகவலறிந்த குளியாப்பிட்டிய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மகனை பொலிஸ் காவலில் எடுத்துள்ளனர்.

5 வயதான அவரது மகன் தந்தையுடன் செல்ல மறுத்துள்ளதுடன் தாய் வரும் வரை தனது உறவினருடன் செல்ல விரும்புவதாகவும் குழந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மின் வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கப்படுகிறது!!

மின் வெட்டு..

இலங்கையில் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தீர்மானம் இலங்கை மின்சார சபையால் எடுக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கோளாறை கண்டறியும் பணியில் தொழில்நுட்பவியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது தொகுதியில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்ற போதும் மூன்றாவது தொகுதி தொடர்ந்து இயங்கி வருகிறது. மின் விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு முனையம் மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாகவே மின்வெட்டு நேரம் நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கமைய இன்று முதல் 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றும், நாளைய தினமும் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்கு முன்னர் கடந்த சில நாட்களாக நாட்டில் ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஒரே வீட்டில் மூன்று தமிழ் பெண்களை திருமணம் செய்த பிரான்ஸ் நாட்டு மணமக்கள்!!

பிரான்ஸ் நாட்டு மணமக்கள்..

தமிழ்நாட்டை சேர்ந்த பெற்றோர் பிரான்ஸில் பிறந்து வளர்ந்த தனது மூன்று மகள்களையும் அந்நாட்டை சேர்ந்தவர்களுக்கு தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மாசிலாமணி – ஆனந்தி தம்பதியினர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகின்றனர்.

பிரான்சில் மாசிலாமணி தனியார் உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு காயத்ரி, கீர்த்திகா, நாராயிணி என மூன்று மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் மூவரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத மாசிலாமணி – ஆனந்தி தம்பதியினர் அவர்களுக்கு தமிழ் கலாசார முறைப்படி திருமணம் முடித்து வைக்க விரும்பினர்.

அதன்படி மகள்கள் மூவருக்கும் தமிழகத்தின் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள்.

இது குறித்து தமிழகத்தில் உள்ள தனது உறவினர்களுக்கு அழைப்பு விடுத்த அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 14) மாசிலாமணி – ஆனந்தி தம்பதியினர் தங்களின் மூன்று மகள்களுக்கும் ஒரே நேரத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ், ராம்குமார், மஜ்ஜூ என்ற மூவருடன் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வைத்து திருமணம் செய்து வைத்தனர்.

தமிழ்நாட்டின் முறைப்படி திருமணம் செய்து கொண்ட காயத்ரி – ஜார்ஜ், கீர்த்திகா- ராம்குமார், நாராயிணி – மஜ்ஜூ மணமக்களை உறவினர்கள் வாழ்த்தினர். அத்துடன் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

வெளிநாட்டில் பிறந்து அங்குள்ள கலாசாரத்தில் வளர்ந்து இருந்தாலும் தமிழ் கலாசாரத்தை மதிக்கும் விதமாக தங்கள் 3 பிள்ளைகளுமே வாழையடி வாழையாக வாழ வேண்டும் என விரும்பி தமிழர் கலாசாரத்தில் திருமணம் செய்து வைத்ததாக தாய் ஆனந்தி மகிழ்வுடன் தெரிவித்தார்.

அதேசமயம் தமிழர் பாரம்பரியத்தை மதிப்பதால் தமிழகத்தில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்த மணமகள் காயத்ரி இந்த திருமணத்தால் இரு நாட்டு கலாசாரமும் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்தார். தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு மணமகன் மஜ்ஜூ பேசுகையில்,

தங்கள் நாட்டில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வதை விட தமிழ் கலாசார முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டது தனக்கு ஒரு புதிய உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் தாங்கள் சூடியுள்ள மண மாலையின் பூக்களுக்கு உயிர் இருப்பதாக உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் , “உறவினர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டது ஒரு மதிப்புமிக்க நிகழ்வாக உள்ளது. இந்த திருமணத்தால் கலாசாரங்கள் ஒன்றிணைகிறது. அன்பு மட்டும் தான் அனைத்துக்கும் ஆதாரம்” எனவும் மிக நெரிக்ழ்ச்சியுடன் தெரிவித்தாராம்.

உலகளாவிய ரீதியில் ஒரே நாளில் பிரபலமான இலங்கைச் சிறுமி!!

இலங்கைச் சிறுமி..

இலங்கையை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது திறமையால் ஒரே தினத்தில் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளார். கதிர்காமத்தில் இடம்பெற்ற பெரஹரா நிகழ்வை அழகுப்படுத்திய 11 வயதுடைய சிறுமி தொடர்பில் இலங்கை மக்களால் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த சசாதி என்ற சிறுமி கதிர்காமத்தில் இடம்பெற்ற பெரஹேர நிகழ்வில் மயில் வேடமிட்டு நடனமாடினார். அவரின் நடன காணொளி வைரலாக பரவி வருகிறது.

பிறவியிலேயே வாய் பேச முடியாத காது கேட்காத இந்த சிறுமியின் நடனம் உள்நாட்டு மக்களை மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் மிகவும் கவர்ந்துள்ளது.

இம்முறை புலமைபரிசீல் பரீட்சைக்கு முகம் கொடுக்கவுள்ள சசாதியின் இயலாமை குறித்து பலரும் அனுதாபம் வெளியிட்டு வருகின்றமைக்கு அவரது பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

எங்கள் மகளை யாரும் பாவமாக பார்க்க வேண்டாம். அவரது இயலாமையை அவமானப்படுத்த வேண்டாம். பேஸ்புக் யூடியுப் போன்ற சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் தங்கள் மகள் குறித்து காண்பதாகவும் அவ்வாறு செய்ய வேண்டாம் என பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தங்கள் மகளுக்கு யாரும் பண உதவிகள் செய்ய வேண்டாம். அவருக்கு வேண்டிய அனைத்தும் நாங்கள் செய்துள்ளோம். அவர் தங்கள் சகோதரியாக பாருங்கள்.

சிறுமி என்று சொல்வதனை விட அவரை ஒரு குழந்தையாகவே நாங்கள் பார்க்கிறோம். அனைவரும் அவரை தங்கள் தங்கையாக பார்க்குமாறு பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யாழில் பலரை வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவொன்று பலரையும் வியக்க வைத்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் பூநாரி மடத்தடியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பூப்புனித நீராட்டு விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்காக, வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் பகுதியில் இருந்து நிகழ்வு மண்டபம் வரை காங்கேசன்துறை வீதி வழியாக யானை, குதிரை வண்டில், கதகளி, மேளதாள வாத்தியங்கள், சகிதம் பெண் மற்றும் அவரது உறவினர்கள் பவனியாக மண்டபம் வரை அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்விற்கு தென்பகுதியில் இருந்து யானை மற்றும் கதகளி கலைஞர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதனை காண்பதற்காக பெருமளவு மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

பேருந்து விபத்தில் 4 பேர் படுகாயம்!!

விபத்து…

நுவரெலியா பகுதியிலிருந்து லபுக்கலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு லபுக்கலை பகுதிக்கு சென்ற குறித்த பேருந்து நேற்று மாலை பிரதான வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தில் 30ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாகவும், விபத்தின் போது, 4 பேர் மாத்திரம் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பேருந்து சாரதிக்கு வேக கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 4 பேரும், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இவ்விபத்து தொடர்பில் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கியில் பணம் வைப்பு செய்ய சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

CDM இயந்திரத்தில்…

யக்கலமுல்ல பிரதேசத்தில் CDM இயந்திரத்தில் பணம் வைப்பு செய்ய சென்றவருக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக பணம் கிடைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. எம்.எம்.தஹநாயக்க என்ற நபர் தனது மகனுடன் பணம் வைப்பு செய்ய சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே பணம் வைப்பு செய்ய சென்ற நபர் அதனை உரிய முறையில் வைப்பு செய்யாமையினால் பணம் இயந்திரத்திலேயே சிக்கியிருந்தது. இந்த நிலையில் அடுத்தாக பணம் வைப்பு செய்ய சென்ற எம்.எம்.தஹநாயக்க இயந்திரத்தை அழுத்தும் போதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது.

அவர் அந்த பணத்தை வெளியே எடுத்துவிட்டு தனது பணத்தை வைப்பிட்டுள்ளார். பின்னர் அந்த வங்கி அமைந்துள்ள பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிஸார் உரிமையாளரிடம் இந்த பணத்தை ஒப்படைத்துள்ளனர். மற்றவர்களின் பணம் எங்களுக்கு எதற்கு நம்பிக்கையுடன் செயற்பட்டால் நாமும் வெற்றி பெறலாம் என தஹநாயக்க குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பணத்திற்கு சொந்தமான உரிமையாளர் மிகவும் மகிழ்ச்சியடைந்ததுடன், அந்த நபரின் நேர்மைக்கு பாராட்டியுள்ளார்.

படமெடுத்து நின்ற நாகப்பாம்பு.. நொடிப்பொழுதில் மகனைக் காப்பாற்றிய தாய்; திடுக்கிடவைக்கும் வீடியோ..!

கர்நாடகாவில்..

கர்நாடகாவில் நாகப்பாம்பிடம் இருந்து மகனைக் காப்பாற்றிய பெண்ணின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவிவருகிறது. வேகமான சிந்தனையுடன் செயல்பட்டு நொடிப்பொழுதில் மகனை பாம்பிடமிருந்து இழுத்த பெண்ணை நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர்.

கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள ஒரு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள இந்த விடியோவை சமூக ஊடகப் பயனர்கள் பல்வேறு தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அந்தப் பெண் தன் மகன் பாம்பின் மீது காலடி வைப்பதற்குள், சிறிது நேரத்தில் அவனை இழுத்துச் சென்றார். எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது. வீடியோ தொடங்கும் போது, ​​அந்தப் பெண்ணும் அவரது மகனும் பாம்பு ஒன்று குறுக்கே செல்வதை அறியாமல் தங்கள் வீட்டில் இருந்து வெளியே வருவதைக் காணலாம்.

பாம்பு வீட்டிற்கு வெளியே படிக்கட்டுக்கு மிக அருகில் சென்றதால், அவர்கள் பாம்பை கவனிக்கவில்லை. நாகமும் மனிதர்கள் நடமாட்டத்தை உணரவில்லை. சிறுவன் படியைக் கடக்கும்போது பாம்பு பட்டென எழுந்து தற்காப்புக்காக படமெடுத்து நின்றது. இதனைப் பார்த்து அதிர்ச்சியில் அப்பெண் அங்கிருந்தது பக்கவாட்டில் தாவி மகனிடம் செல்கிறார்.

ஆனால் நடப்பது புரியாமல், சிறுவன் பயந்து, பாம்பின் மீதே குதித்து வீட்டிற்குள் ஓட முயற்சிக்கிறான். அப்போதுதான் அந்தப் பெண், சட்டென செயல்பட்டு மகனை இழுத்து தூக்கிக்கொள்கிறார். அவர் இழுக்காமல் இருந்தால், தற்காப்புக்காக நாகம் சிறுவனை தாக்கியிருக்கலாம்.

ஆனால், அப்பெண் மகனை அங்கிருந்து தோளில் தூக்கிக் கொண்டு பாதுகாப்பாக நகர்ந்துவிட, பாம்பும் விலகிச் சென்றது. இந்த வீடியோ வைரலாகிவர, அந்த பெண்ணின் துணிச்சலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.

அதிசயக் கலைஞனாக திகழ்ந்த பிரபல இலங்கைத் தமிழர் : வாழ்க்கையில் மனைவியாக வந்த 3 பெண்கள்!!

மட்டக்களப்பில்..

இலங்கையின் மட்டக்களப்பில் 1939ஆம் ஆண்டு பிறந்தவர் பாலுமகேந்திரா. தமிழ் திரையுலகில் இவர் பிரபலமான இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் கொடிகட்டி பறந்து பல சாதனைகளை செய்தார்.

நல்ல படத்தை, ரசிகர்களைக் கவருகிற படத்தை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அப்படி எத்தனையோ படங்களை எத்தனையோ பேர் கொடுத்திருக்கிறார்கள். இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலரின் படங்கள்.

இன்றைக்கும் காவியங்களாக பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களைக் கொடுத்தவர்களில் முக்கியமானவர்தான் பாலுமகேந்திரா. கடந்த 2014ஆம் ஆண்டு இவர் தனது 74வது வயதில் உயிரிழந்தார்.

பாலுமகேந்திராவின் தனிப்பட்ட வாழ்க்கை பல மேடு பள்ளங்கள் நிறைந்தது. இவருக்கு அகிலா, நடிகை ஷோபா மற்றும் நடிகை மெளனிகா என மூன்று மனைவிகள் இருந்தனர்.

தன் வாழ்க்கையில் இந்தப் பெண்களின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலு மகேந்திரா. அகிலா குறித்து பாலுமகேந்திரா முன்னர் கூறுகையில், எனக்கு மனைவியாக வந்தபோது, அவளுக்குப் 18 வயது.

சரியாகப் புடவை கட்டக்கூடத் தெரியாத வெகுளிப்பெண். அகிலாவைப் போன்ற பத்தினிப் பெண்கள் புராணகாலத்தில் தான் இருந்திருக்கிறார்கள். இந்த யுகத்தில் பிறந்திருக்க வேண்டிய பெண்ணல்ல அகிலா. என்னைப் போன்ற ஒரு பித்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அல்ல.

கனவுகளைத் துரத்தியபடி சதா ஓடிக்கொண்டு இருக்கும் நாடோடி நான். எனக்கு மனைவியாக வந்தது தான் அகிலாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மெளனிகாவுடனான என் உறவை நான் ஆரம்பிப்பதற்கு முன், என் அகிலாவைப் பற்றி நான் யோசித்திருக்க வேண்டும்.

இந்த உறவு எவ்வளவு தூரம் அவளைப் புண்படுத்தும், வேதனைக்குள்ளாக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும், என் அகிலாவின் துக்கத்தை நினைத்துப் பார்க்க அப்போது தோன்றவில்லை என கூறினார்.

நடிகை ஷோபாவை பாலுமகேந்திரா திருமணம் செய்து கொண்டாலும் அவரை பற்றி சில இடங்களில் மட்டுமே பேசினார் ஷோபா தனது 17 வயதிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் குறித்த நினைவலைகளை முன்னர் பகிர்ந்த பாலுமகேந்திரா, தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்தத் தேவதையைப் பற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது?

அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா ஒரு அற்புதமான நடிகையாவார். ஷோபா என்ற அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்து போன அந்தச் சோகத்தை எப்படி சொல்வேன் என கூறியிருந்தார்.

நடிகை மெளனிகாவை பாலுமகேந்திரா கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இறுதிவரை அவருடன் வாழ்ந்தார். பாலுமகேந்திராவை விட மெளனிகாவுக்கு 30 வயது குறைவாகும்.

பாலு மகேந்திரா இறந்த நிலையில் , மௌனிகா வந்து பாலு மகேந்திராவின் உடலைப் பார்க்கக் கூடாது என்று அப்போது சிலர் சண்டை போட்டது பலரும் தெரிந்திருக்கும். கணவர் உடலை காண கதறி அழுத மெளனிகா இறுதி ஊர்வலம் கிளம்புவதற்கு முன்பு கண்ணீரில் கரைந்தபடி வந்து, இரண்டு நிமிடம் பாலு மகேந்திராவின் உடலைப் பார்த்து விட்டு நடைப்பிணமாக வெளியேறினார்.

மெளனிகா குறித்து பாலுமகேந்திரா கூறுகையில், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமதி பாலுமகேந்திரா என்று என்னைக் குறிப்பிட்டால், அகிலாம்மா (பாலுமகேந்திராவின் முதல் மனைவி ) எவ்வளவு வேதனைப்படுவார் என்பதை என்னால் பூரணமாக உணர முடிகிறது என மெளனிகா கூறினாள்.

ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் பிற்காலத்தில் என் குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் வருமோ என்ற ஒரே காரணத்துக்காக, தாயாகவேண்டும் என்ற ஆசையைக் கூடத் தவிர்த்தவள் அவள் என கூறியிருந்தார் பாலுமகேந்திரா.

இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.

ஒரே நேரத்தில் காதலித்த இரண்டு இளைஞர்கள் : அவமானத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு!!

கன்னியாகுமரியில்..

பெண் ஒருவர் தன்னை இரண்டு பேர் காதலித்து கொடுத்த டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு இலங்கன்விளையை சேர்ந்தவர் சத்யராஜ்(56).

எலக்ட்ரீசியனான இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் திவ்யா (20). பட்டப்படிப்பு முடித்துவிட்டு மேற்படிப்பு செல்லவிருந்தார். இந்நிலையில், மருதங்கோடு இலுப்பப்பவிளையை சேர்ந்த ரஞ்சித் (20) என்பவருடன் திவ்யா பழகி வந்ததாக கூறப்படுகிறது.

ரஞ்சித் 12ம் வகுப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்துள்ளார். திவ்யா, இணையம் என்ற இடத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஷெர்லின் புரூஸ்(19) என்பவரை காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.

ஷெர்லின் புரூஸ் டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார். இதனை அறிந்து கொண்ட ரஞ்சித் திவ்யாவிற்கு தொந்தரவு கொடுக்கப்பட்டதுடன், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினையும் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யா தனது பெற்றோரிடமும் கூறி வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், திவ்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு மருதங்கோட்டில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை அறிந்த ஷெர்லின் புரூஸ் திவ்யாவிடம், ரஞ்சித்தை பார்க்க சென்றாயா என்று கேள்வி எழுப்பியதுடன் திட்டவும் செய்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த திவ்யா தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, காதலன் ஷெர்லின் புரூஸை கைது செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் திவ்யாவிற்கு டார்ச்சர் கொடுத்த ரஞ்சித்தையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.

இலங்கையில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லொஸ்லியா!!

லொஸ்லியா..

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானார்.

அறிமுகம படமாக நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் சமீபத்தில் வெளிவந்த கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.

இதுதவிர்த்து மேலும் மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை லாஸ்லியா தனது சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் என்பதை நாம் அறிவோம்.

அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் லாஸ்லியா, தற்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு சற்று ஷாக் கொடுத்துள்ளார்.

இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.

54 வயதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு திருமணம் : பெண் யார் தெரியுமா?

எஸ் ஜே சூர்யா..

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் ஹீரோவாக சில படங்களில் நடித்து தற்போது வில்லனாக பல்வேறு படங்களில் மிரட்டி வருபவர் எஸ் ஜே சூர்யா.

இவர், சினிமாவில் சில நடிகைகளுடன் காதல் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.

பல படங்களில் தற்போது பிஸியாக நடித்து வரும் இவருக்கு, எஸ்.ஜே சூர்யாவிற்கு இந்த வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்க அவரது உறவினர்கள் முடிவு செய்து தீவிரமாக பெண் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

54 வயதில் திருமணம் செய்யப்போகிறாரா என நெட்டிசன்கள் கேள்வியை எழுப்பினாலும், விரைவில் எஸ்ஜே சூர்யாவுக்கு திருமணம் நடக்கும். அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி தயாரிப்பாளரை நடுத்தெருவில் விட்ட பிரபுதேவா : நடித்த 5 படமும் தோல்வி!!

பிரபுதேவா..

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படுபவர் பிரபுதேவா. 90களில் ஆரம்பித்து அவரது சினிமா பயணத்தில் நடன இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து பல வெற்றிகளை கொடுத்து வந்தா.

இந்தி, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிப்படங்களுக்கு இவரின் நடன இயக்கத்திற்காக ஏங்கி கிடப்பார்கள். அப்படி இருந்த பிரபுதேவா சமீபத்தில் நடித்த பல படங்கள் படுமோசமான தோல்விகளை கண்டுள்ளது.

தேவி, தேவி 2, சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்கள் ஓரளவிற்கு வெற்றிக்கண்டது. மெர்குரி, சார்லி சாப்ளின் 2, பொன் மாணிக்கவேல், மைடியர் பூதம், பொய்க்கால் குதிரை என கடந்த 5 ஆண்டுகளில் 4 கோடி அளவில் சம்பளம் வாங்கி படுதோல்வியை கொடுத்துள்ளார்.

இதனால் தயாரிப்பாளர்கள் நடுத்தெருவில் வரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெண்கள், திருநங்கைகள் என ஒருவரையும் விட்டு வைக்காத கொடூர கணவன் : மனைவி எடுத்த அதிரடி முடிவு!!

சென்னையில்..

சென்னை அடுத்த செங்குன்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர், வைதீஸ்வரி(26) தம்பதி. இந்த நிலையில் ஸ்ரீதர் நடத்தையில் சந்தேகம் அடைந்த வைதீஸ்வரியை அவர் தாக்கியதுடன் செல்போனையும் உடைத்துள்ளார்.

சில நாட்கள் கழித்து ஶ்ரீதரின் செல்போனை வைதீஸ்வரி ரிப்பேர் செய்து recovery செய்த போது அதில் அவர் ஷேர் சாட் ஆப் மூலமாக பல பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோரிடம் பழகி வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் பெண்களிடம் நெருக்கமாக பழகி தகாத உறவில் இருந்ததற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளது. மேலும் வைதீஸ்வரி உடனான திருமணத்தை மறைத்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை ஸ்ரீதர் திருமணம் செய்ததும் தெரியவந்தது.

கல்லூரி மாணவிகளை ஏமாற்றி பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டு வந்த கணவரிடம் இது குறித்து வைதீஸ்வரி கேட்டதும் அவரை தாக்கி தலைமறைவாகியுள்ளார். இது குறித்து தற்போது வைதீஸ்வரி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.

நீரில் அடித்து செல்லப்பட்ட பெண்.. நடுவழியில் ஞாபகம் வந்த மகனின் முகம்.. இரவு முழுவதும் நடந்த போராட்டம் : இறுதியில் நடந்த திருப்பம்!!

ஆற்றில்..

மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தின் பதாரியா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சோனம் டாங்கி. இவர் தனது சகோதரருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பைக் ஒன்றில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, மாலை சுமார் 6 மணியளவில், மேம்பாலம் ஒன்றை கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக பைக் சறுக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, பைக்கில் இருந்த சோனம், ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதனால், அவரது சகோதரர் பதறிப் போன நிலையில், உடனடியாக சகோதரியை காப்பாற்ற ஆற்றில் விழுந்துள்ளார். ஆனால், வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததன் காரணமாக, வெகு தூரத்திற்கு சோனம் அடித்து செல்லப்பட்டதால், அவரது சகோதரரால் காப்பாற்ற முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆற்றில் விழுந்து சுமார் 5 கி. மீ தூரத்திற்கு சொன்னான் அடித்து செல்லப்பட்ட நிலையில், ஆற்றின் நடுவில் இருந்த கட்டுமான பணி நடந்து வரும் பாலத்தின் கீழ், ஒரு இரும்பு கம்பியை பிடித்தபடி நின்றுள்ளதாக கூறப்படுகிறது.

இரவு முழுவதும் சோனம் நீரில் போராடிக் கொண்டிருந்த நிலையில், அதிகாலையில் மீட்புக் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், வலுவான நீரோட்டங்கள் இருந்ததன் காரணமாக, உடனடியாக அவர்களால் சோனமை மீட்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சில வீரர்கள் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு லைஃப் ஜாக்கெட்டை கொடுத்துள்ளனர். தொடர்ந்து, படகு அருகே அவரை இழுக்க முயன்ற போது, மீண்டும் அவரை நீர் இழுத்து சென்றுள்ளது.

இதன்,பின்னர், மீண்டும் பல கி.மீ தூரத்திற்கு இழுத்துக் கொண்டு செல்லப்பட்ட சோனம், மரக்கட்டை ஒன்றில் சிக்கிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு சோனம் குறித்து தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், மீட்புக் குழு மற்றும் மக்கள் ஒன்றிணைந்து ஒரு குழாய் உதவியுடன் அவரை பாதுகாப்பாக மீட்டனர்.

இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பேசும் சோனம், “பாலம் ஒன்றின் கம்பியை பிடித்துக் கொண்டிருந்த போது, எனது பலம் குறைய ஆரம்பித்தது.

இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை வேறு பெய்தது. ஆனால், எனது 8 வயது மகனின் முகத்தை நான் மனதில் நினைத்துக் கொண்டேன். இதனால்,அவனுக்காக நான் வாழ வேண்டும் என எனக்குள் நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன்” என சோனம் கூறிஉள்ளார்.

சுமார் 10 மணி நேரத்திற்கு மேல், இரவு முழுவதும் மழை, நீர் என கடுமையான சூழலில், மகனுக்காக வைராக்கியத்துடன் செயல்பட்டு பின்னர் மீட்கப்பட்ட தாயை அனைவரும் வேற லெவலில் பாராட்டி வருகின்றனர்.

இலங்கை முழுவதும் பேசப்பட்ட மிகவும் திறமையான நடனம், இவரின் உண்மையான நிலை இதுவே உறவுகளே.