சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பழனி (31), பாரதி தம்பதி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த பழனி கடந்த இரு மாதங்களாக வேலைக்கு செல்லாததால் மனைவி பாரதி, டீக்கடையில் கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வந்தார்.
இதனால் மனைவி பாரதி மீது சந்தேகம் அடைந்த பழனி வேலைக்கு செல்லக்கூடாது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று மனைவி வேலை செய்யும் கடைக்கு சென்று தகராறில் ஈடுபட்ட பழனி து பாரதியின் தலையை சுவற்றில் இடித்து கீழே தள்ளி உள்ளார்.
பின்னர் ரத்தவெள்ளத்தின் கிடந்த பாரதியை கட்டியணைத்து அருகில் படுத்துக் கொண்டார். அருகிலிருந்த நபர்கள் பாரதியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் திட்டத்திற்கு அமைவாக வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலைமையில் இன்று (13.08) இடம்பெற்றது.
இதன்போது விவசாயிகளின் வயல் நிலங்கள் மற்றும் மேட்டு நிலப் பயிற் செய்கைக்குரிய நிலங்கள் வன இலாகாவால் எல்லையிடப்பட்டுள்ளமை, தோட்டச் செய்கைக்கு நீர் இறைக்கும் இயந்திரத்திற்கான மண்எண்ணெய் கிடைக்காமை,
விவசாயிகளின் அறுவடை மற்றும் கால போக நெற் செய்கைக்கான டீசல் பங்கீடு, சிறுபோக நெல்லுக்கு உத்தரவாத விலை கிடைக்காமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
விவசாயிகளின் மேட்டு நிலப் பயற்செய்கை மற்றும் காலபோக நெற் செய்கை என்பவற்றுக்கான எரிபொருளை சரியான முறையில் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும்,
எரிபொருள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க விவசாயிகள் எரிபொருளை கையிருப்பில் வைத்திருக்கும் போது விவசாய தேவை என்பதை முறையாக உறுப்படுத்தி கடிதம் ஒன்றை வைத்திருத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், சிறுபோக நெற்கை இடம்பெற்று வருகின்ற நிலையில் விவசாயிகளிடம் இருந்து அரிசி ஆலை உரிமையாளர்களால் அரசாங்க உத்தரவாத விலையை விட குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுவதானால்,
அதிக விலைக்கு உரம், களைநாசினி என்பவற்றை பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் நட்டம் அடைவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டதுடன், இதற்கு உடனடியாக தீர்வை முன்வைக்குமாறும் கோரப்பட்டது.
இதன்போது குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட அரச அதிபருடன் கலந்துரையடி தீர்வைப் பெற்றுத் தருவதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தெரிவித்திருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் இணைப்பாளர் டினேஸ், மாவட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் ப.சிறி, கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள், வவுனியா மாவட்ட மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொபண்டனர்.
மன்னார் மடுமாதா ஆலயத்தின் ஆவணி திருவிழா நடைபெறவுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தின் பல பாகங்களில் இருந்தும் இன, மத பேதமின்றி மடு திருத்தலம் நோக்கிய பக்தர்களின் நடைபயணம் ஆரம்பமாகியுள்ளது.
பக்தர்களினால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இன்று பாண்டியன்குளம், நட்டன்கண்டல் பகுதியை வந்தடைந்துள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி மடு அன்னையின் ஆவணி திருவிழா நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் உள்ள மாவட்டங்களில் இருந்து மக்கள் பாதயாத்திரையாக செல்கின்றார்கள்.
மடு திருவிழா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்!
முல்லைத்தீவு – இரணைப்பாலை, வற்றாப்பளை பகுதிகளில் இருந்து அதிகளவிலான மக்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்ய நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார்கள்.
கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்டிருந்த கோவிட் தொற்று காரணமாக ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் இந்த வருடம் அதிகளவான மக்கள் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்ய நடைபயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மன்னார் எல்லை கிராம பாதையான பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், பாலம்பிட்டி சென்று அங்கிருந்து மடுவிற்கு செல்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையர்களின் அடையாள அட்டை புதிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கமைய, பயோமெட்ரிக் தரவுகளை இணைத்து டிஜிட்டல் அடையாள அட்டை கட்டமைப்பை தயாரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென,
ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது, தேசிய அடையாள அட்டையைப் பெற பொதுவான தரவுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பயோமெட்ரிக் தரவுகளை இனிமேல் அடையாள அட்டைகளில் சேர்க்கப்பட வேண்டும்.
உதாரணமாக, நமது கைரேகைகள், இரத்தம் தொடர்பான விபரங்கள், கண் தரவுகள் ஆகியவற்றையே பயோமெட்ரிக் தரவு என்கிறோம். எதிர்காலத்தில், இந்த பயோமெட்ரிக் தரவை சேர்த்து தேசிய அடையாள அட்டையை வழங்கத் தொடங்குவோம்.
தற்போது, இது இந்திய உதவியின் கீழ் உள்ளது, இப்போது அனைத்து விடயங்களும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய நாங்கள் அனைவரும் மீள் பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு பரிகாரம் வழங்கப்படும் என வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (13.08) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இந்த அரசாங்கம் சர்வகட்சி அரசாங்கம். ஒரு சிலரைத் தவிர சர்வகட்சி அரசாங்கமாகத் தான் உள்ளது. ஆனால் அந்த ஒரு சிலரும் எமது ஆளுக்கட்சிக்கு வாக்களித்தவர்கள் தான்.
ஜனாதிபதி அவர்கள் அனைத்து கட்சிகளையும தம்முடன் பேசி சர்வகட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் சிலர் தலையையும், வாலையும் காட்டும் நிலை காணப்படுகின்றது. இன்னும் ஒரு சில நாட்களில் எல்லாம் சரியாகிவிடும்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 2000 ஆம் நாளை கடந்துள்ளது. இதில் பலர் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.
இந்தப் போராட்டம் முதன் முதலில் வவுனியா மாவட்டத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. வெறும் 12 பேருடன் வவுனியா தபால் நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
அந்த 12 பேரில் நானும் ஒருவன். எனது நண்பர்கள், உறவுகளுடன் இணைந்து கட்சி பேதமின்றி எவ்வித அரசியலுமின்றி இந்த போராட்டத்தை முன்னெடுத்தோம்.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல சில அரசியல்வாதிகளின் பின்புலத்தால் போராட்டத்தில் உள்ள சிலர் வேறு பாதையை நோக்கி செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாகவும், காணாமல் ஆக்டகப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்பாகவும் எமது அமைச்சர் ஊடாக ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.
நானும் ஒரு தமிழ் மகனாக அவர்களுக்கான பரிகாரம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு பரிகாரம் வழங்கப்படும்.
விரைவில் அதனை எழுத்து வடிவில் கொடுக்கவுள்ளோம். கலந்துரையாடி அந்த தீர்வு எட்டப்பட்ட பின் அதனை வெளிப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.
வவுனியாவில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று (12.08.2022) மதியம் கைது செய்துள்ளனர்.
வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையிலுள்ள எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றும் எரிபொருள் நிரப்பும் ஊழியர் அங்கு கொல்கலன்களில் எரிபொருளை சேமித்து அருகேயுள்ள வியாபார நிலையத்தில் வைத்து,
பெற்றோல் லீற்றர் 1000 ரூபாவிற்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 16 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இலங்கையில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பான அறிவிப்பொன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது.
அதன்படி நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வாரத்தின் ஐந்து நாட்களிலும் வழமையான நேரத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்துடன் நாட்டில் கோவிட் தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், பாடசாலைகள் தொடர்ந்து நடத்தப்படுமா என்பது குறித்து கல்வி அமைச்சர் முன்னதாக தெளிவுப்படுத்தியிருந்தார். அதன்படி கோவிட் தொற்று பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மாணவரொருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளானால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திவிட்டு, கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில், அடக்கம் செய்வதற்கு காசு இல்லாத காரணத்தால், பிறந்து இறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசியதாக, தந்தை பரபரப்பு வாக்கு மூலம்.
சென்னை, திருவல்லிக்கேணி, சி.என்.கே சாலையில், குப்பை தொட்டியில், நேற்று முந்தினம் இரவு, தெரு நாய்கள், ஒரு சணல் பையை உருட்டிக்கொண்டு இருந்தது. அதில், குழந்தை உடல் இருப்பதை கண்டு, பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் தந்தனர்.
அவர்கள் விரைந்து வந்து, சணல் பையுடன், குழந்தை உடலை மீட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்தனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து, தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஒருவர் சணல் பையுடன் நடந்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார், திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்ததில், அங்கு ஒரு பெண்ணுக்கு, குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்தது தெரியவந்தது. பிரசவ வார்டில் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த அந்த பெண் கவிதா (29) அவரின் கணவர் தனுஷ் (33) என தெரியவந்தது.
இறந்து பிறந்த குழந்தையை, செவிலியர்கள் அடக்கம் செய்வதற்கு கூறினர். ஆனால், தனுஷ், குழந்தையை குப்பை தொட்டியில் வீசியதாக போலீசில் தெரிவித்தார். தனுஷை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், அவரின் சோகத்தை கூறினார். அதில், தன் முதல் மனைவிக்கு குழந்தை பிறந்தது.
ஆனால், அது இறந்து விட்டது. சிறிது நாட்களில், என் மனைவியும் இறந்தாள், நானும் திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்றேன். ஜாமீனில் வந்த நான், கவிதாவை காதலித்து, இரண்டாம் திருமணம் செய்தேன்.
ஆனால் அவருக்கும் பிறந்த குழந்தை இறந்தது. என்ன செய்வதனெ தெரியவில்லை. அடக்கம் செய்தால், இடுகாட்டில், 3 ஆயிரம் செலவாகும் என்னிடம் காசு இல்லை. கையில் வெறும் 150 ரூபாய் தான் இருந்தது.
10 ரூபாய்க்கு சணல் பை ஒன்றை வாங்கினேன். அதில், குழந்தை உடலை போட்டு, டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்தேன். பின்னர், குழந்தையை குப்பை தொட்டியில் வீசியதாக தெரிவித்தார். இந்த சம்பவம் திருவல்லிக்கேணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மண்ணின் மைந்தனின் நெஞ்சை வருடும் பாடல் – ஏன் பிறந்தோம் இறந்தோமின்றி எதையாவது செய்யுங்கள்
சென்னை, குன்றத்தூரில், நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, கடப்பாரையால் அடித்து மனைவியை படுகொலை செய்த கணவர் சரணடைந்தார். சென்னை, குன்றத்தூர் காலடிபேட்டை அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45) . இவர் தனியார் கிளப்பில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி அலமேலு (42), பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வந்த அலமேலு வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இவர்களுக்கு மோனிஷா, வசுந்த்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் சம்பவத்தன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டனர். வீட்டில் ரமேஷ் அவரது மனைவி அலமேலு மட்டும் இருந்தனர்.
இந்நிலையில், அவரது வீட்டில் அலமேலு அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர் .கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டு இருந்ததால் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர்.
ஆனால் சிறிது நேரத்தில் ரமேஷ் வீட்டில் இருந்து வெளியே வந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அக்கம், பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அலமேலு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்றத்தூர் போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த அலமேலு உடலை மீட்டு,
பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவாக இருந்த ரமேஷ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மனைவியின் நடந்தையில் சந்தேகமடைந்து உண்டான சண்டையில் அலமேலுவை ரமேஷ் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ரமேஷ் மீது கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிளிநொச்சி மண்ணின் மைந்தனின் நெஞ்சை வருடும் பாடல் – ஏன் பிறந்தோம் இறந்தோமின்றி எதையாவது செய்யுங்கள்
கணவர் துன்புறுத்துவதாக கூறி, அமெரிக்காவில் வசித்துவந்த இந்திய பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் அவரது உடலை இந்தியா கொண்டுவர அரசிடம் உதவி கோரியுள்ளது அவரது குடும்பம்.
உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் வசித்துவருபவர் ஜஸ்பால் சிங். இவருடைய மகள் மன்தீப் கவுர். இவருக்கும் அமெரிக்காவில் வசித்துவரும் ராஜ்னோத்பீர் சிங்குக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. அதன்பிறகு தனது கணவருடன் அமெரிக்கா சென்றிருக்கிறார் மன்தீப் கவுர்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஆனால், ஆண் குழந்தை வேண்டும் என தன்னை தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தி வந்ததாக வீடியோ ஒன்றில் கூறியிருந்தார் மன்தீப்.
மேலும், தனது கனவர் தன்னை தினந்தோறும் தாக்கி வருவதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்த அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உயிரிழந்த தங்களது மகளின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர உதவி செய்யும்படி கண்ணீருடன் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது மந்தீப் கவுரின் குடும்பம். இதுபற்றி பேசிய மந்தீப் கவுரின் சகோதரர் சந்தீப்,”அமெரிக்காவில் உயிரிழந்த எனது சகோதரிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
அவர்கள் அங்கு எப்படி இருக்கிறார்கள்? எனது சகோதரியின் உடல் எப்படி வைக்கப்பட்டுள்ளது? இதனை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் செத்துப் பிழைக்கிறோம். உடனடியாக உடலை இந்தியா கொண்டுவர அரசு அதிகாரிகள் உதவ வேண்டும். நாங்கள் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறோம்.
ஒருவேளை சகோதரியின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டால் நாங்கள் உடனடியாக அமெரிக்கா செல்ல உதவி செய்யும்படி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்றார்.
ராஜ்யசபா எம்பியும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகவ் சத்தா இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் அரசு தரப்பில் இதுகுறித்து பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர் மன்தீப் கவுரின் குடும்பத்தினர்.
கிளிநொச்சி மண்ணின் மைந்தனின் நெஞ்சை வருடும் பாடல் – ஏன் பிறந்தோம் இறந்தோமின்றி எதையாவது செய்யுங்கள்
இந்தியாவின் ராஜஸ்தானில் 70 வயதேயான பாட்டி ஒருவர் IVF மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ராஜஸ்தானின் Jhunjhunu கிராமத்தை சேர்ந்தவர்கள் Gopichand- Chandrawati தம்பதியினர். Gopichand ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர், திருமணமாகி 54 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பேறு கிடைக்கவில்லை.
Gopichand தன்னுடைய குடும்பத்தில் ஒரே ஆண்மகன் என்பதால் அடுத்த தலைமுறை வாரிசுக்காக காத்திருந்துள்ளனர். இதற்காக பல்வேறு நகரங்களுக்கு சென்று மருத்துவமனைகளில் பார்த்த போதும் பலனில்லாமல் போனது.
கடந்தாண்டு குறித்த கருத்தரிப்பு மையத்தை தொடர்பு கொண்டு தன்னுடைய பிரச்சனைகள் குறித்து விளக்கியுள்ளார். வயதாகிக்கொண்டே போவதால் குழந்தை பெற்றெடுக்க முடியுமா என்ற தயக்கமும் இருந்துள்ளது.
கடைசியில் மூன்றாவது IVF சோதனையின் போது கருத்தரித்து அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மண்ணின் மைந்தனின் நெஞ்சை வருடும் பாடல் – ஏன் பிறந்தோம் இறந்தோமின்றி எதையாவது செய்யுங்கள்
பிரபல நடிகை கிம் கர்தாஷியன் போலவே இருக்க வேண்டும் என லட்ச கணக்கில் செலவு செய்த இளம்பெண்ணுக்கு புதிய சிக்கல் முளைத்திருக்கிறது. இதனிடையே அவரது புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த மாடலும், நடிகையுமான கிம் கர்தாஷியனுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனாலேயே சமூக வலை தளங்களில் கிம் வெளியிடும் புகைப்படங்கள் கோடிக்கணக்கான லைக்குகளை பெறும். இதனிடையே அவருடைய தீவிர ரசிகைகைள் சிலர் அவரைப்போலவே மாறவேண்டும் என தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தென் கொரியாவை சேர்ந்த செர்ரி லீ என்னும் இளம்பெண் கிம் கர்தாஷியன் போலவே மாற லட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்.அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது குடும்பத்தினை சேர்ந்தவர்களுக்கே தன்னை அடையாளம் தெரியவில்லை எனத் தெரிவித்திருக்கிறார் லீ.
28 வயதான லீ தென்கொரியாவில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் இவர் பிறந்தபோது இவருக்கு ஹான்பியோ எனப் பெயர் சூட்டியுள்ளனர். சிறுவயது முதலே இவருக்கு கிம் என்றால் கொள்ளைப் பிரியமாம். அதனாலேயே அவரைப்போலவே மாற முயற்சித்திருக்கிறார் லீ. இதன் காரணமாக 20 வயதிற்குள்ளாகவே 15 முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார். இதற்காக 48 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறார் இவர்.
இதுபற்றி பேசிய அவர்,”கிம் எப்போதுமே எனக்கு ஒரு உத்வேகமாக இருந்தார். அவர் என் பார்வையில் உலகின் மிக அழகான பெண். உண்மையில் நான் முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்ட நபராகத் தெரிகிறேன். நான் மேற்கத்திய தோற்றத்தில் இருக்கிறேன். இதனால் எனது கொரிய குடும்பத்தில் சிலருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை” என்றார்.
மேலும், இதுபற்றி பேசிய அவர்,”சிகிச்சையை எப்போது நிறுத்த வேண்டும் என்று எனக்குத் தெரியும். மேலும் அறுவை சிகிச்சைகள் எதையும் நான் இப்போது திட்டமிடவில்லை. நான் விரும்பிய தோற்றத்தை அடைந்துவிட்டேன். எனது ஒரே வருத்தம் நான் ஏன் இதை முன்பே செய்யவில்லை என்பதுதான்” என்றார்.
முன்னதாக, அமெரிக்க மாடல் ஜெனிபர் பேம்ப் லோன் என்பவர் கிம் கர்தாஷியன் போல மாற கடந்த 12 ஆண்டுகளில் 40 அறுவை சிகிச்சைகள் செய்திருந்தார். இதற்காக 4.9 கோடி ரூபாய் செலவும் செய்திருக்கிறார்.
இருப்பினும் தான் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிவித்திருந்த அவர் மீண்டும் தன்னுடைய நிஜ முகத்துக்கே திரும்புவதற்காக சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்திருந்தது கடந்த வாரம் வைரலாக பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மண்ணின் மைந்தனின் நெஞ்சை வருடும் பாடல் – ஏன் பிறந்தோம் இறந்தோமின்றி எதையாவது செய்யுங்கள்
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. இந்த மகத்தான வேளையில், கேரளாவின் கோட்டயம் அருகே கடந்த மாதம் பிறந்த பச்சிளம் பெண் குழந்தைக்கு இந்தியா என பெற்றோர் பெயரிட்டு தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கோட்டயம் பாலா புளியன்னூர் வலிய மடத்தில் ரஞ்சித் ராஜன் மற்றும் அவரது மனைவி சனா தம்பதியினர் தங்களின் பெண் குழந்தைக்கு இந்தியா என ஜூலை 12ஆம் தேதி பெயர் சூட்டினர்.
இந்தியா என்ற பெயரில் அனைத்து இந்தியர்களும் பெருமைப்படும் போது, தன் மகளுக்கு இரட்டிப்பு பெருமை ஏற்படும் என்கிறார் தந்தை ரஞ்சித். ராணுவ வீரராக ஆசைப்பட்ட ரஞ்சித்தால் முடியவில்லை.
ரஞ்சித் தனது படிப்பை 9ஆம் வகுப்போடு நிறுத்த வேண்டியதாயிற்று. நாட்டிற்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று ரஞ்சித் கவலைப்பட்டார். அப்படித்தான் தனக்குப் பெண் குழந்தை பிறந்தால் இந்தியா என்று பெயர் வைப்பேன் என்று ரஞ்சித் மனதை தேற்றிக்கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்ததும், சற்றும் யோசிக்காமல், மகளுக்கு இந்தியா என்று பெயரிட்டார். குழந்தைக்கு இந்தியா என்று பெயர் வைத்தது முதலில் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது அந்த பெயர் அனைவருக்கும் பிடித்துள்ளதாக ரஞ்சித் கூறுகிறார்.
ரஞ்சித்தும் அவரது மனைவி சனாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரஞ்சித் பாலாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக உள்ளார். இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்புகளை மீறி 2021 அக்டோபர் 31 அன்று சனாவை ரஞ்சித் திருமணம் செய்து கொண்டார்.
கிளிநொச்சி மண்ணின் மைந்தனின் நெஞ்சை வருடும் பாடல் – ஏன் பிறந்தோம் இறந்தோமின்றி எதையாவது செய்யுங்கள்
தூங்கும்போது ஏசி வெடித்து தாயும் மகளும் பலியான நிலையில், தந்தையும் மகனும் பலத்த காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை லோயர் பரேலில் உள்ள வீட்டில் ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்த இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். லோயர் பரேலில் உள்ள மரியன் மேன்ஷன் இல்லத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. ஏசி வெடித்ததால் லேசான தீயும் ஏற்பட்டது. உயிரிழந்தவர் லட்சுமி ரத்தோரின் மகள் மது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
லட்சுமியின் கணவர் தேஜாபாய், மகன் தினேஷ் ஆகியோர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் கஸ்தூர்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த கோடை காலத்தின் போது சமீபத்தில்தான் வீட்டிற்கு புதிய ஏசியை வாங்கியுள்ளனர்.
இதுகுறித்து தேஜாபாயின் மருமகன் சுரேஷ் கூறியதாவது, புதிய ஏசி வாங்கி வந்ததாகவும், வயரிங் பிரச்சனை இருப்பதாகவும் தினேஷ் கூறியதாக தெரிவித்தார். தீயின் புகையை சுவாசித்த லட்சுமிபென் மயக்கமடைந்தார்.
சிகிச்சைக்கிடையே அவர் மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்தாள். மது 80 சதவீதம் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். தினேஷுக்கு 25 முதல் 30 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி மண்ணின் மைந்தனின் நெஞ்சை வருடும் பாடல் – ஏன் பிறந்தோம் இறந்தோமின்றி எதையாவது செய்யுங்கள்
அருந்ததி திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த இளைஞர் அதில் வரும் அனுஷ்காவை போலவே தான் மறுபிறவி எடுப்போம் என நம்பி தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் துமகூருவில் இந்த துயரம் அரங்கேறியுள்ளது.
அருந்ததி திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த இளைஞர் அதில் வரும் அனுஷ்காவை போலவே தான் மறுபிறவி எடுப்போம் என நம்பி தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் துமகூருவில் இந்த துயரம் அரங்கேறியுள்ளது.
சினிமா என்பது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு அம்சம், இரண்டு மணி முதல் மூன்று மணி நேரம் படம் பார்ப்பவர்கள் தங்களது கவலைகளை மறந்து படத்தை ரசிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு திரைப்படத்தின் நோக்கம், சிலர் திரைப்படங்களைப் பார்த்து விட்டு அதில் வரும் நடிகர்களைப் போலவே தங்களை பாவிதித்துக் கொள்கின்றனர்.
ஆனால் சினிமா வேறு வாழ்க்கை வேறு என்பதை அறியாத ரசிகர்கள் சினிமா ஹீரோ ஹீரோயின்களை இமிடேட் செய்து தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அவலத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
இதுபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலுகாவில் உள்ள கிட்டய்யனபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது கல்லூரி மாணவர் ரேணுகா பிரசாத்.
இவர் தெலுங்கில் வெளியான அருந்ததி என்ற ஹாரர் திரைப்படத்தை பார்த்தார், அத்திரைப்படம் அவரை வெகுவாக கவர்ந்தது, இதனால் பலமுறை அவர் அத்திரைப்படத்தை பார்த்து வந்தார்.
அந்தத் திரைப்படத்தில் காட்டுவதை போல கதாநாயகி அனுஷ்கா தீ குளித்து மீண்டும் மறுபிறவி எடுத்து வருவதைப் போல தானும் எடுக்க முடியுமென கண்மூடித்தனமாக அந்த இளைஞர் நம்பினார். இதனையடுத்து புதன்கிழமை மாலை படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர், பெட்ரோலை வாங்கி உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அதில் உடல் முழுக்க தீ பரவியது, வலிதாங்க முடியாமல் அங்கும் இங்கும் ஓடினார், பின்னர் அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர். 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேணுகா பிரசாத் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் புரவர அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்தார் ரேணுகா பிரசாத். மேற்படிப்புக்காக தும்கூர் வந்த அவர், அங்கு கல்லூரியில் சேர்ந்தார் பியூசி முதலாமாண்டு படித்து விட்டு படிப்பைப் பாதியில் நிறுத்திக் கொண்டார், ஒரு கட்டத்தில் சினிமாவுக்கு அடிமையானார்.
தினந்தோறும் சினிமா தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்து வந்தார், சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட் திரைப்படமான அருந்ததி திரைப்படத்தை 15 முதல் 20 முறை பார்த்துள்ளார், அதில் வரும் அனுஷ்காவை போல தாம் மறுபிறவி எடுக்க முடியும் என நம்பிய ரேணுகா பிரசாத் தீக்குளித்துள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.
கிளிநொச்சி மண்ணின் மைந்தனின் நெஞ்சை வருடும் பாடல் – ஏன் பிறந்தோம் இறந்தோமின்றி எதையாவது செய்யுங்கள்
கரூர் அருகே நீட் தேர்வு எழுதிய நிலையில், தோல்வி பயத்தில் மன உளைச்சலில் இருந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டியை அடுத்து உள்ளது கொள்ளுதின்னி பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் சேகர். இவருக்கு மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள். ஒரு மகன் உள்ளனர்.
இவரது மூத்த மகள் ப்ரீத்தி ஸ்ரீ. வயது 18. தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு எழுதியதில் குறைவான மதிப்பெண் (326 கட் ஆப்) பெற்றதால் எம்.பி.பி எஸ் கிடைக்கவில்லை.
ஆனால், கால்நடை மருத்துவருக்கான கட்ஆப் கிடைத்துள்ளது. ஆனால், எம்.பி.பி.எஸ் தான் படிப்பேன் என கூறி வந்த அந்த மாணவி இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார். வேங்கம்பாடி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி ஒரு ஆண்டாக நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் நடந்த நீட் தேர்வினை எழுதி வந்த மாணவி பாட்டி வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் அதே பகுதியில் துக்க நிகழ்ச்சிக்கு பலரும் சென்று விட்ட நிலையில் தனியாக இருந்த மாணவி பாட்டியின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்த பாட்டி மாணவியை பலமுறை கூப்பிட்டும் வராததால் வீட்டினுள் சென்று பார்த்த போது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்து ஓடி வந்தவர்கள், மாணவியின் பெற்றோருக்கும், லாலாபேட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். மாணவியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாணவி நீட் தேர்வு எழுதியுள்ள நிலையில், குறைவான மதிப்பெண் வந்து விடுமோ என்ற அச்சத்தில் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இது தொடர்பாக உறவினர்களிடம் கூறி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
கிளிநொச்சி மண்ணின் மைந்தனின் நெஞ்சை வருடும் பாடல் – ஏன் பிறந்தோம் இறந்தோமின்றி எதையாவது செய்யுங்கள்