கல்லூரி மாணவிக்கு நடந்த சோகம் : கண்ணீருடன் சக மாணவர்கள்!!

அங்கமாலியில்..

அங்கமாலியில் ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உயிரிழந்தார். அங்கமாலி தீயணைப்பு நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி இன்று உயிரிழந்தார்.

இந்த விபத்தில் இறந்தவர் புளியணத்தைச் சேர்ந்த தெலப்பள்ளி சஜன் என்பவரின் மகள் அனு சஜன் (21) என அடையாளம் காணப்பட்டார். அனு தனது நண்பர்களுடன் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி தூக்கி வீசப்பட்டார்.

இவர் அங்கமாலி மார்னிங் ஸ்டார் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் இறுதியாண்டு படித்து வந்தார். கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள், உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி மண்ணின் மைந்தனின் நெஞ்சை வருடும் பாடல் – ஏன் பிறந்தோம் இறந்தோமின்றி எதையாவது செய்யுங்கள்

 

மருமகளின் தலையுடன் சரணடைந்த மாமியார்… முறையற்ற காதலால் நேர்ந்த பரிதாபம்!!

ஆந்திராவில்..

ஆந்திராவில் விதவை மருமகளைக் கொன்றுவிட்டு, துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையம் வந்து சரண் அடைந்த மாமியாரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம் கொத்தகோட்டா ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பம்மா (70). இவரது மகனுக்கு திருமணமாகி வசுந்தரா (35) என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ள நிலையில் மகன் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் மருமகள் வசுந்தரா பிள்ளைகளுடன் மாமியார் சுப்பம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த சூழலில், வசுந்தராவுக்கு மாலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனிமையில் சந்தித்து கணவன், மனைவியாக இருந்து வந்துள்ளனர். மேலும், கணவன் மறைவிற்கு பிறகு அவரது சொத்துக்களை வசுந்தரா பெயரில் மாற்றப்பட்டுள்ளது.

அந்த சொத்துக்களை வசுந்தரா தனது கள்ளக்காதலன் பெயரில் மாற்ற முயற்சிப்பதாக மாமியாருக்கு தெரிய வரவே இருவருக்கும் அண்மை காலமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வசுந்தராவை தீர்த்துக்கட்ட மாமியார் சுப்பம்மா மச்சினன் மாது என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டினர். அதன்படி, கடந்த வியாழக்கிழமை அன்று வீட்டில் இருந்த வசுந்தராவை இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

மேலும், வசுந்தராவின் தலையை துண்டித்து ஒரு கவரில் போட்டுகொண்டு ராயச்சோட்டி காவல் நிலையத்தில் சுப்பம்மா சரணடைந்தார். முதலில் மருமகளின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்துக்கு வெளியே காத்திருந்த சுப்பாம்மாவை அங்கிருந்தவர்கள் கவனிக்கவில்லை.

பின்னர் அவரே காவல் நிலையத்துக்குள் வந்து போலீசாரிடம் தலையை காண்பித்துள்ளார். இதை கண்டு ஆடிப்போன காவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பின்னர் சுப்பம்மாவை கைது செய்துள்ளனர்.

கொலை சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வரும் போலீசார் க்ரைம் சீன் இடத்துக்கு சென்று வசுந்தராவின் மீதி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி மண்ணின் மைந்தனின் நெஞ்சை வருடும் பாடல் – ஏன் பிறந்தோம் இறந்தோமின்றி எதையாவது செய்யுங்கள்

 

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

சம்பூர்..

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் இறால் பாலத்தின் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தோப்பூர் – சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த தவகுமார் ரதுசன் (18 ) ஏன்பவரே உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞன் தனது நண்பர்களோடு இறால் பாலத்தில் குளித்துக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருகிறது. சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூருல்லா ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று பார்வையிட்டார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நேற்று முன்தினம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்திடீர் மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டார் .

கனடாவில் பலரின் பாராட்டைப்பெற்ற ஈழத்து இரட்டைச் சகோதரிகள்!!

கனடாவில்..

கனடாவில் இலங்கைத் தமிழ் வம்சாவளி சகோதரிகள் குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதிவருகின்ற நிலையில் குறித்த சகோதரிகளுக்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.

கனடா வாழ் இரட்டைச் சகோதரிகள் குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதும் அசாதாரணமான வேலையை செய்து வருகின்றனர்.

அவர்கள் இப்போது புதிதாக தடுப்பூசிகள், உடல்நலம் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதுகின்றனர். கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் பிராம்ப்டன் பகுதியில் வசிக்கும் இலங்கை வம்சாவளி தமிழர்களான சுரபி மற்றும் ஸ்வாதி அன்பழகன்.

19 வயதாகும் இவர்கள், இந்த இலையுதிர்காலத்தில் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ அறிவியல் படிப்பதற்காக இரண்டாம் ஆண்டில் நுழைகின்றனர். அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் புத்தகங்களை எழுதுகிறார்கள்.

எழுத்து மற்றும் மருத்துவ அறிவியல் இரண்டின் மீதான தங்கள் காதலை குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலமாக வெளிப்படுத்திவருகின்றனர்.

பிராம்ப்டனில் கோவிட் தொற்று கடுமையாக தாக்கியபோது கடந்த கோடை மாதங்களில் ஒரு தடுப்பூசி கிளினிக்கில் தன்னார்வலர்களான இருவரும் பணியாற்றியுள்ளனர்.

அப்போது தான் அவர்களின் முதல் புத்தகத்திற்கான யோசனை வந்தது. கிளினிக்கில் குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்களைப் பார்த்தபோது, ​​தடுப்பூசி போடுவது பற்றி குழந்தைகள் புத்தகத்தை உருவாக்க நினைத்தார்கள். இது குறித்து பேசிய சுரபி,

“பள்ளிக்குச் செல்ல முடியாததால் குழந்தைகளின் வாழ்க்கை எவ்வாறு கடுமையாக மாறியது என்பதைப் பார்ப்பது அல்லது நிலைமையைப் புரிந்துகொள்வதுதான் சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்க எங்களுக்கு உத்வேகம் அளித்தது” என்று கூறினார். அவர்கள் எழுதும் குழந்தைகள் புத்தகங்க தொடருக்கு Twin Tales.என பெயரிட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் முதல் புத்தகமாக Ahana Got A Vaccine என்ற புத்தகத்தை எழுதினர். தொடர்ந்து, Mom, Dad! Please Get The Vaccine!, I am Beautiful மற்றும் The Race For Change ஆகிய மூன்று புத்தகங்களை எழுதியுள்ளனர்.

ஐந்தாவதாக இப்போது, தடுப்பூசிகள், உடல்நலம் மற்றும் பன்முகத்தன்மை பற்றி புத்தகம் எழுதிவருகின்றனர். இந்த புத்தகங்களை அவர்கள் பல தளங்களில் விற்பது மட்டுமல்லாமல், இலங்கையில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு இலவசமாகவும் சுரபி மற்றும் ஸ்வாதி அனுப்பி வைக்கின்றனராம்.

கனடாவில் இலங்கை தமிழ் மாணவி ஒருவரின் முன்மாதிரியான செயற்பாடு!!

ஆஷ்னா..

இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு தம்பதியின் மகளான ஆஷ்னா (Aashna Nadarajah), புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு உதவும் வகையில், குறிப்பாக பெண்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் நல்ல முயற்சி ஒன்றைத் துவங்கியுள்ளார்.

ஆஷ்னாவின் பாட்டியார் 1980களில் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்திருக்கிறார். அவர் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தும், ஏற்கனவே ஒரு ஆசிரியையாக இருந்தும்கூட, கனடாவில் நிலையான ஒரு வேலை கிடைக்க மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.

மனத்திருப்தி இல்லாமல் ஏதேதோ வேலைகள் பார்க்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது அவருக்கு. தனது பாட்டியின் கதையை பல முறை கேட்டிருந்த ஆஷ்னாவுக்கு, தானும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

தற்போது Second Helpings என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் துவக்கியுள்ளார் ஆஷ்னா. அந்த அமைப்பு, புலம்பெயர்ந்த மற்றும் அகதிப் பெண்களுக்கு,

அவர்கள் தங்களுக்குத் தெரிந்த உணவுப்பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் வருவாய் ஈட்ட உதவுகிறது. இத்தனைக்கும் ஆஷ்னா இன்னமும் கல்வி பயிலும் ஒரு மாணவிதான். அவர் Huron High School என்ற பள்ளியில் பயின்று வருகிறார்.

இலங்கையில் 12 மணி நேர மின்வெட்டு ஏற்படும் அபாயம்!!

மின்வெட்டு..

இலங்கையில் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிலக்கரி இருப்புகளை கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அண்மைக்காலமாக பெய்து வரும் மழை காரணமாக இந்த நாட்களில் மின்சார உற்பத்தி பெரும்பாலும் நீர் மின்சாரம் மற்றும் நிலக்கரி மூலம் மேற்கொள்ளப் படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.

எனினும், இது டிசம்பரில் செய்யப்பட வேண்டும். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை மட்டுமே நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

நெருக்கடி நிலையில் 5 பிள்ளைகளுடன் வாழும் நபரின் நேர்மையான செயல்!!

ரமீஸ்..

மாத்தறை நகரத்தில் 5 பிள்ளைகளின் தந்தை ஒருவரின் நேர்மையான செயலை பலரும் பாராட்டியுள்னர். மாத்தறையில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ரமீஸ் என்பவர் வங்கியில் பணம் வைப்பு செய்வதற்காக சென்ற போது வாகனம் நிறுத்துமிடத்தில் சிறிய பை ஒன்று விழுந்து கிடப்பதனை அவதானித்துள்ளார்.

அதனை திறந்து பார்த்த போது அதில் தங்க நகைகள் சிலவற்றை அவதானித்துள்ளார். உடனடியாக வங்கியின் பாதுப்பு அதிகாரியை அழைத்து யாராவது இதனை தேடி வந்தால் கொடுத்துவிடுமாறு ரமீஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, அடுத்த நாள் இளைஞன் ஒருவர் தங்கத்துடனான பையை தொலைத்துவிட்டதாக கூறி இளைஞன் ஒருவர் வங்கிக்கு வருகை தந்துள்ளார். அதன் பின்னர் அடையாளத்தை உறுதி செய்த வங்கி முகாமையாளர், தங்க நகையை உரிமையாளரிடம் அதனை ஒப்படைத்துள்ளார்.

அத்துடன் ரமீஸ் மீண்டும் வங்கிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவரை வங்கி முகாமையாளர், தங்கத்தின் உரிமையாளர் உட்பட அனைவரும் பாராட்டியுள்ளனர்.

தொலைத்த இடம் கூட தெரியாமல் தேடிக் கொண்டிருந்த நிலையிலேயே அவர் அதனை பெற்றுள்ளார். 5 பிள்ளைகளுடன் அன்றாட வாழ்க்கையை நடத்தி செல்வதே கடினமாக கருதும் அந்த நபரின் நேர்மைக்கு தங்கத்தை தொலைத்தவர் நன்றி தெரிவித்துள்ளார்.

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வு-2022

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வு நேற்று 11.08.2022 (வியாழக்கிழமை) பள்ளியின் முதல்வர் திரு.நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது.

முன்பள்ளியின்  ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வில் திருமதி.கார்த்திகா (முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர்- வவுனியா மாவட்டம்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வுகளை  சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மேற்படி நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்புடன் வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு சந்தையில் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் கழிவுப்பொருள்களைக் கொண்டு  உருவாக்கப்பட்ட கற்றல் கற்பித்தல் சாதனங்கள் மற்றும்  உபகரணங்கள்  ஆகியனவும் கண்காட்சி வளாகத்தை அலங்கரித்தமை குறிப்பிடத்தக்கது.

வங்கி வாசலில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு லாட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!!

ஸ்பெயினில்..

தினமும் 5 மணிநேரம் வங்கிக்கு வெளியே பிச்சை எடுக்கும் பெண்மணிக்கு லாட்டரி ஜாக்பாட் கிடைத்தது. ஸ்பெயினின் அலிகாண்டே தெருக்களில் பிச்சை எடுக்கும் ஒரு பெண்மணிக்கு இந்த வாரம் $1.3 மில்லியன் லாட்டரி ஜாக்பாட் கிடைத்தது.

லா புளோரிடாவின் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு வங்கியின் முன் மற்றும் அருகிலுள்ள பல்பொருள் அங்காடியில் பிச்சை எடுப்பதாக கூறப்படும் அப்பெண், கடந்த வியாழக்கிழமை ஒரு புகையிலை கடையில் லொட்டரி டிக்கெட்டை வாங்கினார்.

நேரத்தை கடத்துவதற்காக அடிக்கடி அந்த புகையிலைக் கடைக்கு வந்து, வழிப்போக்கர்களிடம் லொட்டரி சீட்டுகளில் முதலீடு செய்வேன், தன் நிலைமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சில சமயங்களில் சில்லறைகளைக் கேட்டு வாங்கிக்கொள்வார்.

ஆனால், இந்த முறை Spanish BonoLoto lottery-க்காக அவர் வாங்கிய சீட்டில் லாட்டரியின் முதல் பரிசை வெல்லத் தேவையான ஆறு பொருத்த எண்களும் இருந்தன. அந்த சீட்டின்மூலம் மொத்தம் 1,271,491 யூரோக்களை அவர் வென்றார். இது இலங்கை பண மதிப்பில் சுமார் ரூ.46.8 கோடிகளாகும்.

லாட்டரியின் ஜாக்பாட் வென்றதை உணர்ந்த பிறகு , அந்தப் பெண் தனக்கு டிக்கெட்டை விற்ற புகையிலை கடைக்குச் சென்று, “நீங்கள் என் வாழ்க்கையைத் தீர்த்துவிட்டீர்கள்” என்று கூறினார்.

அந்தப் பெண்ணின் அடையாளம் தெரியவில்லை, இருப்பினும் அவருக்கு டிக்கெட்டை விற்ற புகையிலை கடையின் உரிமையாளர் அவர் ரோமானிய இனத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் மற்றும் அவருக்கு நிதி சிக்கல்கள் இருப்பது தெரிந்தது.

பெற்ற மகளை தாயே அடித்துக் கொன்ற கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருவண்ணாமலையில்..

சுகன்யா யாருடன் பேசுகிறார் என்பது குறித்து கணவரிடம் மகள் கூறுவதை வழக்கமாக கொண்டதால் அடிக்கடி மகளை அடித்து அவர் துன்புறுத்தி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தில் ஆறு வயது மகளை கரும்பால் அடித்து கொலை செய்த கொடூர தாயை வெரையூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர், குழந்தையின் உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அரடாப்பட்டு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் ஓட்டுநர் பூபாலன் என்பவருக்கும் சுகன்யா என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் இருந்தனர். இதில் 6 வயது மகளான ரித்திகா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று கணவர் பூபாலன் வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் சுகன்யா மகள் ரித்திகாவை திடீரென கரும்பால் அடித்து தாக்கியுள்ளார் சுகன்யா. ரித்திகாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்த ரித்திகாவை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அப்போது வழியிலேயே சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

சுகன்யா கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பும் ரித்திகாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது, சுகன்யா யாருடன் பேசுகிறார் என்பது குறித்து கணவரிடம் மகள் கூறுவதை வழக்கமாக கொண்டதால் அடிக்கடி மகளை அடித்து அவர் துன்புறுத்தி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று கணவர் வேலைக்கு சென்றதும் மகளிடம் வாக்குவாதம் செய்த சுகன்யா அவரை கரும்பால் பலமாக அடித்துள்ளார்.

இதில் துடிதுடித்த சிறுமி வலிதாங்காமல் அலறியுள்ளார். குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து வெறையூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் சுகன்யாவை கைது செய்தனர். பெற்ற தாயே மகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரையில் நடைப்பயிற்சி போனவர் பார்த்த பயங்கர காட்சி.. விசாரணையில் குழம்பிப்போன அதிகாரிகள்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் சூரிய உதயத்தை புகைப்படம் எடுக்க சென்ற நபர், துரதிருஷ்டவசமான முறையில் உயிரிழந்திருக்கிறார்கள். இது காவல்துறை அதிகாரிகளையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போர்ட் செயின்ட் லூசிக்கு அருகில் அமைந்துள்ளது ஹட்சின்சன் தீவு. இங்குள்ள கடற்கரையில் பொதுமக்கள் வாக்கிங் செல்வது வழக்கம். அப்படி இந்த கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ஒருவர் தூரத்தில் வித்தியாசமாக ஏதோ ஒன்று இருப்பதை கவனித்திருக்கிறார்.

உடனடியாக அதன் அருகே சென்ற அவர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். காரணம், மணலில் சிக்கியபடி இரண்டு கால்கள் மட்டும் வெளியே தெரிந்திருக்கின்றன. இதனால் திகைத்துப்போன அவர் உடனடியாக மணலை கைகளை கொண்டு அகற்றியுள்ளார்.

ஆனால், அவரால் உள்ளே சிக்கிய நபரை வெளியே எடுக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்திருக்கிறார் அவர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மீட்புப்படை அதிகாரிகள் மணலை அகற்றி உள்ளே சிக்கியிருந்தவரை மீட்டுள்ளனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதன் பலனாக உயிரிழந்தவர் புளோரிடாவை சேர்ந்த 35 வயதான சீன் நாகல் என்பது தெரியவந்திருக்கிறது. இதனிடையே உயிரிழந்தவரின் உடல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய அந்த பகுதியின் ஷெரிப் வில்லியம் ஸ்னைடர்,” உயிரிழந்த நாகல் வழக்கமாக கடற்கரைக்கு சூரிய உதயத்தை படம் பிடிக்க செல்வது வழக்கம். ஆனால், துரதிஷ்டவசமாக மணல் குன்று சரிந்து அவர்மீது விழுந்திருக்கிறது. இதனால் அவர் உயிரிழந்திருக்கிறார்.

பிரேத பரிசோதனையில் அவருடைய நுரையீரலில் மணற்துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மரணத்திற்கான காரணம் சுவாசம் தடைப்பட்டது என பிரேத பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது” என்றார். மேலும் இதுபற்றி பேசும்போது அவர்,”இது வழக்கத்துக்கு மாறான விபத்து. இப்படியான ஒரு சம்பவத்தை நாங்கள் எதிர்கொண்டதில்லை.

உயிரிழந்தவர் அதிகாலை 5 அல்லது 6 மணியளவில் மணலில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அடுத்த 3 மணி நேரத்துக்கு அப்பகுதிக்கு யாருமே செல்லவில்லை. பின்னர் வாக்கிங் போனவர் அவரது கால்களை கண்டு எங்களுக்கு தகவல் கொடுத்தார்” என்றார்.

இந்நிலையில், நாகலின் மரணத்தில் குற்றவியல் சம்பவங்களுக்கான தடயம் ஏதுமில்லை எனவும் இது விபத்து தான் என்றும் சட்ட ஒழுங்கு துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காதல் கடிதம்.. திறந்து பார்த்த போது அதிர்ந்துபோன இளம்பெண்!!

சமூக வலைதளங்களில்..

இளம்பெண் ஒருவர் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காதல் கடிதத்தை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

கெய்லி பாவல் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இயங்கிவருபவர். இவர் சமீபத்தில் அருகில் உள்ள நிதி திரட்டும் அமைப்பு நடத்திவரும் கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது ஒவ்வொரு பகுதியிலும் அடுக்கப்பட்டிருந்த பொருட்களை பாவல் பார்வையிட்டிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த வண்ணமயமான பொருள் ஒன்று அவருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. உடனடியாக அவர் அதனை கையில் எடுத்தபோது அதனை அவராலேயே நம்பமுடியவில்லை. காரணம் 10 வருடங்களுக்கு முன்னர் அவர் தனது காதலனுக்கு எழுதிய காதல் கடிதம் அது.

இதனால் ஆச்சர்யப்பட்டுப்போன பாவல் அதனை வாங்கிக்கொண்டு உடனடியாக வீட்டுக்கு திரும்பியுள்ளார். கடிதத்தின் மீது தீட்டப்பட்ட வர்ணங்களை அவர் சுரண்டியபோது உள்ளே அவர் எழுதியிருந்த காதல் வரிகள் வெளியே தெரிந்திருக்கின்றன. இதனை அவர் சமூக வலை தளங்களிலும் பதிவிட்டிருக்கிறார்.

அந்த கடிதத்தில் பாவல்,”நாம் உருவாக்கிய நினைவுகள், நாம் பகிர்ந்து கொண்ட காலைப் பொழுதுகள் மற்றும் நான் பெற்ற அன்பு விலைமதிப்பற்றது. நீ என்னுள் எதை கண்டறிந்தாய் என்பது தெரியவில்லை. என்னிடம் ஏன் இவ்வளவு அன்பாக இருக்கிறாய் என்பதும் விளங்கவில்லை.

ஆனால், அதற்கு நான் தகுதியுடையவளாக இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. உன்னை எனக்கானவன் என அழைப்பது பெருமகிழ்ச்சியை உருவாக்குகிறது. இதற்குப் பிறகு இன்னும் ஆயிரம் ஆண்டு விழாக்கள் இருக்கும் என்று நம்புகிறேன். இது எனது பழைய வாழ்க்கையின் முடிவு மற்றும் எனது புதிய வாழ்க்கையின் தொடக்கமாகும் என்று நம்புகிறேன்.

வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு நான் உன்னை நேசிக்கிறேன். அது ஒருபோதும் மாறாது என்று நம்புகிறேன். நீ என் இரட்சிப்பின் கலங்கரை விளக்கம். நீ என் இரவு வானில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் என் சிறந்த நண்பன். நான் உன்னை நேசிக்கிறேன். கெய்லி” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த உணச்சிகரமான கடிதம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

42 வருடத்திற்கு முன் காணாமல் போன பெண்.. இத்தனை நாளா தேடிக்கொண்டு இருந்த குடும்பத்தித்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கனடாவில்..

கனடா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நிலையில், தற்போது அவர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் திடீரென மாயமாகியுள்ளார். அப்போது 22 வயதாக இருந்த நான்சி, தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில், திடீரென வீட்டில் இருந்து சூட்கேஸுடன் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நான்சியின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசாரும் காணாமல் போன நான்சியை தேடி வந்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில், கடைசியாக நான்சி சென்ற டாக்ஸி டிரைவர் குறித்து போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து அந்த டாக்ஸியின் ஓட்டுநரை கண்டுபிடித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நான்சி எங்கே சென்றார் என்பது தனக்கு தெரியாது என்றும், அவரை நான் பஸ் ஸ்டாண்ட்டில் இறக்கி விட்ட போது, இரண்டு பேருடன் அவர் பேசிக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அந்த இரண்டு பேரும் யார் என்பதை அடையாளம் காண முடியாமலே போயுள்ளது. அப்படி ஒரு சூழ்நிலையில், நான்சி காணாமல் போய் 40 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த ஆண்டு ஒன்றாரியோ மாகாண காவல்துறையினர், நான்சியின் தற்போதைய வயதை ஏற்றபடி, ஓவியம் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

அதே போல, நான்சியின் சகோதரி ஒருவர், தற்போது வரை அவரது குடும்பத்தினர் அவரைத் தேடி வருவதை நிறுத்தவில்லை என்றும், நான்சியை அதிகம் மிஸ் செய்வதாகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், சகோதரி நான்சி பற்றி ஏதாவது தகவல் கிடைக்கும் என்றும் அவரின் குடும்பத்தினர் காத்திருந்துள்ளனர்.

இந்த நிலையில், சுமார் 42 ஆண்டுகளுக்குப் பிறகு நான்சி குறித்த செய்தி ஒன்று அவரது குடும்பத்தினரை தேடி வந்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நான்சி வேறொரு நாட்டில் வாழ்ந்து வந்ததாகவும், மூன்றாவது நபர் ஒருவர் தெரிவித்துள்ளதாக போலீசார் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த தகவலையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். சுமார் 42 ஆண்டுகளுக்கு பிறகு நான்சி வேறு நாட்டில் இருந்தது பற்றிய தகவல் தெரிய வந்தாலும் நான்சி சமீபத்தில் உயிரிழந்துவிட்டதாகவும் அந்த மூன்றாவது நபர் தெரிவித்துள்ளார்.

நான்சி வெளிநாட்டில் இருப்பதாக தகவல் தெரிய வந்தது பற்றி அறிந்த குடும்பத்தினர், மகிழ்ச்சி அடைவதற்கு முன்பே, அவர் சமீபத்தில் இறந்த செய்தி, அவரது குடும்பத்தினரை கடும் ஏமாற்றத்திலும், வேதனையிலும் ஆழ்த்தி உள்ளது.

‘மிஸ் யூ மாமா’… காதல் எதிர்ப்பால் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

விழுப்புரம்..

விழுப்புரம் அருகே காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேறொருவருடன் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்ததால் பள்ளி மாணவி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள மல்லிகைபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மாணவிக்கு ஒட்டன் காடுவெட்டியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே மாணவியை கண்டித்து உறவுக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த அரசு பள்ளி மாணவி குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்துவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார்.

பள்ளிக்குள் நுழைந்த மாணவி திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். உடனடியாக பள்ளியின் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு விசாரனை செய்தபோது தான் ஒருவரை காதலிப்பதால் பெற்றோர்கள் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதாகவும் அது பிடிக்காமல் மருந்து குடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து பள்ளி மாணவியை மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து பள்ளி ஆசிரியர்கள் காணை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து சென்ற போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தி மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், தான் காதலித்த அந்தோனி செல்வராஜ் மாமாவை விட்டு பிரிவதாகவும், ”மிஸ் யூ மாமா” என்று கண்ணீருடன் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியை கொடூரமாக தாக்கி மலத்தை வாயில் திணித்த சித்தி!!

பரவூரில்..
சிறுமியை கொடூரமாக தாக்கி மலத்தை வாயில் திணித்த சித்தியை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொச்சி அடுத்த பரவூரில் 6ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கி, மலம், சிறுநீரை வாயில் ஊற்றி கொடுமைப்படுத்திய சித்தி ரம்யாவை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிட்டாட்டுக்கரையை சேர்ந்த ரம்யா என்பவரை இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். ஆறாம் வகுப்பு மாணவியை மனதளவிலும், உடலளவிலும் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது, ரம்யா குழந்தையை மலம் கழிக்கச் செய்தும், தண்ணீர் என்று சொல்லி சிறுநீர் குடிக்க வைத்தும், அறையில் அடைத்து வைத்து இரும்பு கம்பியால் அடித்தும் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தினருக்கு முதலில் தகவல் கிடைத்தது. பின்னர் சைல்டு லைனை தொடர்பு கொண்டு வழக்கு பதிவு செய்தனர். சிறுமியின் சித்தி ரம்யா தற்போது காக்கநாடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மகன் இறந்த பிறகு மருமகளின் மறுமணத்துக்காக புதிய மகனைத் தத்தெடுத்த பெண் : நெகிழ்ச்சிக் கதை!!

குஜராத்தில்..

மகன் இறந்த பிறகு மொத்த குடும்பமும் சோகத்தில் முழ்கியிருந்த நிலையில், இன்னொரு மகனை தத்தெடுத்து தன் மருமகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் மாமியர் ஒருவர்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசித்து வரும் கடுவா பட்டிடார் சமூகத்தை சேர்ந்த ஈஷ்வர்பாய் பிமானியின் மகன் சச்சின். 35 வயதாகும் இவர், தன் மனைவி, 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள், பால் கறக்கும் மின்கருவி மூலம் இவர், தன் வீட்டு தொழுவத்தில் பால் கறந்துகொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவரது மரணம் மொத்த குடும்பத்தையும் நிலைகுலைய வைத்தது.

சச்சினின் மனைவி மித்தல் இந்த சம்பவத்துக்குப் பின் பெரிதும் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக, சமூக கட்டமைப்புகளுக்குட்பட்டு தன் மருமகளின் வாழ்க்கை குறித்தும் அவர், சிந்திக்க வேண்டியிருந்தது.

தன் கணவரின் இழப்பு குறித்து பேசும்போது, “எங்களுக்கு 2010ல் திருமணம் நடந்தது. 12 ஆண்டுகள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ்ந்தோம். 2012ல் தான் எங்கள் முதல் குழந்தை த்யான் பிறந்தான். நானும் சச்சினும் தினமும் கால்நடைகளுக்கு தீவனம் வைப்போம்.

அதே மாதிரிதான் அன்றும் வேலைகளை முடித்துவிட்டு பால்கறந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஷாக் அடித்து கீழே விழுந்தார். உடனடியாக உயிர் போய்விட்டது. அந்த சமயத்தில் என்னால எதுவுமே செய்ய முடியவில்லை” என்று உடைந்து அழுகிறார் மித்தல்.

இனி தன் மாமியாருடனும் குழந்தைகளுடன் தன் மீத வாழ்வைக் கழிக்க முடிவு செய்தார் மருமகள் மித்தல். ஆனால், மாமியாரான ஈஷ்வர்பாய் மனதில் மித்தலுக்காக வேறொரு எண்ணம் இருந்தது.

ஒரு மகனை தத்தெடுத்து என் மருமகளுக்கு திருமணம் செய்து வைத்து என் குடும்பத்தின் நிலையை பழையபடிக்கு கொண்டுவர ஏன் நான் சிந்திக்கக் கூடாது என்று எண்ணினார் ஈஷ்வர்பாய். ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த மித்தல், பின்னர் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு, 35 வயதான யோகேஷ் தத்தெடுக்கப்பட தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து பிபிசியுடன் பேசிய மித்தலின் உறவினர் விஷன்ஜி பகத், “மித்தல் வாழ்க்கைக்காக நாங்கள் இரண்டு மூன்று வழிகளை யோசித்தோம் குழந்தைகளை வீட்டிலேயே வைத்துக்கொள்ள முடியுமா? இல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன செய்வது என்றும் கூடயோசித்தோம். கடைசியாகத்தான் இந்த முடிவுக்கு வந்தோம்” என்று தெரிவிக்கிறார்.

வளர்ந்தவர்கள் உளவியல் ரீதியாக தன் சொந்த பெற்றோருடன் அதிக பாசத்துடன் இருப்பர். எனவேதான், குழந்தைகளை தத்தெடுப்பது வழக்கம். ஆனால், இந்த விவகாரம் சற்று வித்யாசமானது. இப்படியொரு சம்பவம் இதுவரை கடுவா பட்டிடார் சமூகத்தில் நடந்ததே இல்லை. ஆனால், சமூகம் மற்றும் இரண்டு குடும்பங்களின் ஆதரவுடன் அனைத்தும் சுமுகமாகவே நடைபெற்றன.

இந்த தத்தெடுப்பு நிகழ்ச்சிக்காக ஒட்டுமொத்த கிராமமும் திரண்டிருந்தது. காரணம், தன் குடும்பத்துடன் அனைத்து தொடர்புகளையும் அறுத்துக்கொண்டு ஒருவர் கிட்டத்தட்ட துறவறம் போவதற்கு இணையாக தயாராக வேண்டும். யோகேஷ் அதற்கு தயாரானர்.

மகளை திருமணத்துக்குப் பின் வழியனுப்பும் நிகழ்வு போல, தங்கள் ஊரின் மகனை வழியனுப்ப அவ்வளவு பேரும் திரண்டிருந்தனர். இறுதியில் யோகேஷின் பெற்றோர் சம்மதத்துடன் நெற்றியில் திலகமிட்டு தன் மகனாக யோகேஷை ஏற்றுக்கொண்டார் ஈஷ்வர்பாய்.

சொந்த ஊருக்கு திரும்பி வந்த பிறகு, கங்காபர் கிராமத்தில் இருந்த லக்ஷ்மிநாராயணன் கோயிலில் யோகேஷுக்கும் மித்தலுக்கும் திருமணம் நடைபெற்றது.

“கல்யாணத்துக்கு பிறகு, நான் மித்தலோடு அங்கேயே தங்க வேண்டும் என்றார்கள். அப்படியென்றால் நான் என் குடும்பத்தை பிரிய வேண்டும். 35 வயதுக்கு பிறகு இதெல்லாம் சாத்தியமே இல்ல்லை என்றுதான் தோன்றியது. ஆனால், மித்தலையும் அவரது குடும்பத்தையும் சந்தித்த பிறகுதான், அந்த குடும்பத்துக்கு ஒரு மகன் இப்போது எவ்வளவு அவசியம் என்று உணர்ந்து கொண்டேன் ” என்கிறார் மித்தலின் புதிய கணவர் யோகேஷ்.

குடும்பம் உடையக்கூடாது, வழக்கத்தை மீறி திருமணம் நடைபெறக் கூடாது ஆகிய காரணங்களுக்காக கடுவா சமூகத்தில் கைம்பெண் மறுமணத்துக்கு ஆதரவு உண்டு. ஆனால், இந்த விவகாரத்தில், மருமகளுக்கு மாமியாராக அல்லாமல் தாயாகவே மாறி முடிவெடுத்துள்ளார் ஈஷ்வர்பாய் பிமானி.