கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய பக்கத்து வீட்டு இளைஞன்!!

குமரி..

குமரி அருகே கல்லூரி மாணவி ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோட்டை அருகே இளங்கன்விளையை சேர்ந்தவர் சத்யராஜ் மகள் திவ்யா (20).

இவர், நேற்று மாலை அறைக்குள் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பக்கத்துவீட்டைச் சேர்ந்த வாலிபர் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.

பக்கத்து வீட்டு வாலிபர் திவ்யாவை தொடர்ந்து துன்புறுத்துவதாக திவ்யாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும்… மீறினால் சிறை… அதிரடி உத்தரவை போட்ட நாடு!!

எரித்திரியாவில்..

எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை திருமணம் செய்வது கட்டாயம் என அந்நாடு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடு எரித்திரியா. இங்கு அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருகிறது. மேலும் அண்டை நாடுகளுடனும் போரிட்டு வருகிறது.

தொடர்ந்து அடிக்கடி போர்களை சந்தித்து வருவதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனவே பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு போதிய ஆண்கள் கிடைக்கவில்லை.

இதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே காலத்தை தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் எரித்திரியா நாட்டில் புதிய விசித்திர சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2க்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டாலும், அது குற்றமாக கருதப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

காதலை கைவிட்ட கல்லூரி மாணவிக்கு தொடர் தொல்லை… மரணம் வரை துரத்திய கொடூரன்!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோட்டில் பிரேக்கப் செய்த மாணவியை டார்ச்சர் செய்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் எலக்ட்ரீசியன். இவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியர். இவரதுமகள் திவ்யா வயது 20.

இவர் மார்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரியில் பிஏ முடித்து விட்டு உயர்கல்வி படிப்பிற்காக காத்திருந்தார். இந்த நிலையில் சூழிகோணம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் திவ்யாவை காதலித்து வந்தார். திவ்வியாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திவ்யா ரஞ்சித்துடனான காதலை பிரேக்கப் செய்துள்ளார்.

ஆனாலும் ரஞ்சித் செல்போன் மூலம் அழைத்து தொடர்ந்து திவ்யாவை பின்தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். மேலும், திவ்யா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரஞ்சித் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும், திவ்யா வேறு ஒருவரை காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் திவ்யாவை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்த நிலையில் இது சம்பந்தமாக குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இரண்டு தரப்பும் சமரசமாக சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் கடந்த வாரம் திவ்யாவை ரஞ்சித் பின்தொடரவே ஆத்திரமடைந்த திவ்யாவின் சகோதரன் ரோஷன் மேத்தியூ அவரது நண்பர்களுடன் சென்று ரஞ்சித்தை தட்டி கேட்டுள்ளனர்.

அப்போது, கேட்டு தாக்கியுள்ளனர். மேத்தியூ மற்றும் அவரது நண்பர்களை ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ள நிலையில் மனமுடைந்து காணபட்ட திவ்யா வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த மார்தாண்டம் போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக திவ்யாவின் பெற்றோர்கள் மகள் மரணத்திற்கு காரணமான ரஞ்சித் உட்பட நண்பர்களை கைது செய்ய கேட்டு புகார் அளித்துள்ளனர்.

மாயமான 5 வயது சிறுமி : கலக்கத்தில் பெற்றோர்!!

வெல்லவாய…

வெல்லவாய- பள்ளிவாசலுக்கு பின்புறமாக பெற்றோருடன் வசித்து வந்த சிறுமியாருவர் நேற்று (10) திடீரென காணாமல் போயுள்ளார். செத்மி அன்சிகா என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் வீட்டுக்கு கூலி வேலை செய்வதற்காக நபர் ஒருவர் வந்து செல்வதாகவும் நேற்று (10) பகல் இரண்டு மணியளவில் வீட்டுக்கு வந்துள்ள குறித்த நபர், சிறுமிக்கு யோகட் வாங்கிக்கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

எனினும், மாலை 6 மணியாகியும் சிறுமி வீட்டுக்கு வரவில்லை என தெரிவித்து, சிறுமியின் தாய் வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் சிறுமியை தீவிரமாக தேடும் நடவடிக்கையில் வெல்லவாய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : களத்தில் மூன்று குழுக்கள்!!

போக்குவரத்து பொலிஸார்..

வவுனியாவில் போக்குவரத்து நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கும் முகமாக நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பொலிஸார் இன்று (11.08.2022) மாலை திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ரொசான் சந்திரசேகர தலைமையில் மூன்று போக்குவரத்து பொலிஸ் குழுக்கள் உருவாக்கப்பட்டு வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதி, ஹொரவப்பொத்தானை வீதி, கண்டி வீதி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.

இதன் போது வீதி நடைமுறையினை பின்பற்றாதவர்கள், தலைக்கவசம் சீராக அணியாமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக 3 சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கறுப்புச் சந்தையில் பெற்றோலை விற்பனை செய்த இளைஞன் அதிரடியாக கைது!!

இளைஞர் கைது..

வவுனியாவில் கறுப்பு சந்தையில் பெற்றோலை விற்பனை செய்த நிலையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 21 லீற்றர் பெற்றோலினை நபர் ஒருவருக்கு 1000 ரூபாய் படி விற்பனை செய்த நிலையில் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 21 லீற்றர் பெற்றோலும் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

“விவாகரத்துக்குப் பின் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்”.. வீடியோ வெளியிட்ட பெண் : முன்னாள் கணவர் செய்த கொடூரம்!!

அமெரிக்காவில்..

விவாகரத்து பெற்றபிறகு தான் மகிழ்ச்சியாக இருப்பதாக வீடியோ வெளியிட்ட தனது முன்னாள் மனைவியை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக்கொண்டுள்ளார் இளைஞர் ஒருவர். இது அமெரிக்காவையே உலுக்கியுள்ளது.

அமெரிக்காவில் வசித்துவந்தவர் சானியா கான். இவர் அமெரிக்காவில் வசித்துவந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ரஹீல் அகமது என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்திருக்கிறார்.

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் சானியா வசித்துவந்தார். இவரும் நண்பர்களாக பழகிவந்த நிலையில், பின்னர் டேட்டிங்-ல் இருந்திருக்கின்றனர். இப்படி 5 வருட டேட்டிங்கிற்கு பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு சானியா – ரஹீல் ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு சிகாகோவிற்கு குடியேறியுள்ளார் ரஹீல்.

இருப்பினும் சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து சானியா சிகாகோவிலேயே வசிக்க, ரஹீல் ஜார்ஜியாவில் குடியேறியிருக்கிறார்.

டிக்டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் எப்போதும் துடிப்புடன் இயங்கிவரும் சானியா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், திருமண வாழ்க்கையால் தனக்கு ஏற்பட்ட மனக்கசப்புகள் குறித்து பேசிய சானியா, விவாகரத்துக்கு பின்னர் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த வீடியோவை ரஹீல் பார்த்ததாக தெரிகிறது. இதனையடுத்து ஜார்ஜியாவில் இருந்து 1100 கிலோமீட்டர் காரில் பயணித்து சிகாகோவிற்கு வந்திருக்கிறார் ரஹீல். சானியாவின் வீட்டுக்கு சென்ற ரஹீல் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

அதன்பின்னர் சானியாவை கொலை செய்துவிட்டு, தனது உயிரையும் ரஹீல் மாய்த்துக்கொண்டிருக்கிறார். பலத்த சத்தம் கேட்டு அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு இதுகுறித்து புகார் அளித்திருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர் அங்கிருந்த சானியா, ரஹீலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண மேடையில் திடீரென மாப்பிள்ளை வெளுத்து வாங்கிய மணப்பெண் : வைரலாகும் வீடியோ!!

திருமணங்களில்..

இந்த பறந்து விரிந்த உலகத்தில் திருமணம் சார்ந்த வீடியோக்கள் அதிகம் இணையத்தில் இடம்பெறுவது உண்டு. அதிலும், வட இந்திய திருமணங்களில் ஏற்படும் பிரச்சினைகளும், சுவாரசியங்களும் தான் அதிகமாக பரவி வருகிறது.

அந்த வகையில், நேபாளத்தில் மணமகன் மற்றும் மணமகள் சண்டையிடும் காட்சி வைரலாகி வருகிறது. பாரம்பரிய முறைப்படி திருமண உடையில் மணமகனும் மணப்பெண்ணும் அழகாக காட்சி அளிக்கையில், திடீரென இருவரும் சண்டையிட்டு கொள்கின்றனர்.

இதற்கு காரணம் நேபாள முறைப்படி திருமண சடங்காகவும், சம்பிரதாயமாகவும் பார்க்கப்படுகிறது என கூறுகின்றனர்.

80 ஆவது பிறந்தநாளை சிறப்பித்து 80 வகையான இயற்கை உணவுகளை சமைத்து அசத்தல்.. குடும்பத்தினரால் நெகிழ்ச்சியில் மூதாட்டி!!

இராமநாதபுரத்தில்..

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்தவர் விமலாதேவி ( 80). இவரது கணவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே தனது 8 மகள்கள், மற்றும் 2 மகன்களையும் தனி ஆளாக வளர்த்து ஆளாக்கியுள்ளார்.

அவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் இவர், சுமார் 5 தலைமுறைகளை கண்டெடுத்துள்ளார் இந்த நிலையில், விமலாதேவியின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு 80 வகையான இயற்கை முறையிலான உணவுகளை அவருக்கு இவரது குடும்பத்தினர் செய்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் அவருக்கு பணமாலை, பரிவட்டம் அணிவித்து அவரது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

இந்த நவீன உலகில், 80 வயது மூதாட்டிக்கு அவரது குடும்பத்தினர் பிறந்தநாள் கொண்டாடியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கண்ணுக்குள் தேசிய கொடி : தேசப்பற்றால் வியக்க வைத்த மனிதர்!!

தமிழகத்தில்..

இந்தியாவின் தமிழகத்தில் கண்ணின் உள்ளே தேசிய கொடியை வரைந்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் சமூக ஆர்வலரான ராஜா. இந்தியாவின் 75-வது சுதந்திர தினத் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதற்காக வரும் 13ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றவும், சமூகவலைத்தளங்களில் தங்களது DPயை தேசியக்கொடியாக வைக்கவும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ராஜா கண்ணில் தேசிய கொடியை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது, முட்டை ஓட்டின் உள்பகுதியில் இருக்கும் வெள்ளை கருவின் மேல் உள்ள மிக மெல்லிய ஆடை போன்ற படலத்தை எடுத்து அதில் தேசியக் கொடியை வரைந்து அதனை கண் விழிப்பகுதியில் வைத்துள்ளார். மேலும் தேசப்பற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்ததாகவும், மக்கள் யாரும் இதை பின்பற்ற வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சிக் காரணம்!!

மயிலாடுதுறையில்..

வருவாய் கோட்டாட்சியர் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை
மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி பகுதியை சேர்ந்தவர் புஷ்பா தேவி (28). இவருக்கும் பூம்புகார் சாயானவனம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (31) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

பெண்ணின் வீட்டார் திருமணத்திற்கு 12 பவுன் நகை போடுவதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த நேரத்தில் நகை போட முடியாததால் ஒன்பது பவுன் நகை, பைக் மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் புஷ்பா தேவிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் திருமணம் முடிந்த பிறகு கணவன் வீட்டில் புஷ்பா தேவியிடம் நீதி நகையை கேட்டு அவரது மாமியார் அகிலா, நாத்தனார் கவிதா மற்றும் மாமனார் கலியபெருமாள் ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது புஷ்பா தேவி கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு அவரது தந்தை உத்திராபதி மற்றும் உறவினர்கள் சென்று பார்த்த போது புஷ்பா தேவி கழுத்தில் காயங்கள் இருந்துள்ளது. தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இந்த மரணம் அரங்கேறி உள்ளது எனவும் பெண்ணின் வீட்டார் பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து புஷ்பா தேவியின் உடலை பூம்புகார் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் நடந்து முடிந்து எட்டு மாத காலமே ஆகதால் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா இந்த சம்பவம் குறித்து தனி விசாரணை மேற்கொண்டு உள்ளார்.

திருமணம் நடைபெற்று முடிந்த 8 மாதத்தில், 7 மாத கர்ப்பிணி பெண் வரதட்சணை கொடுமையால் அநியாயமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு.. பள்ளி மாணவியின் விபரீத முடிவு.. மனதை உருக்கும் கடிதம்!!

விழுப்புரம் அருகே..

விழுப்புரம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவிததால் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்துக்குடித்த 12-ம் வகுப்பு மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள மல்லிகைபட்டு கிராமத்தை சார்ந்த 12-ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவி ஒட்டன் காடுவெட்டியை சார்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் மாணவியை கண்டித்ததோடு அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்துவைக்க முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த மாணவி இன்று பள்ளி வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மீட்ட ஆசிரியர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அறிந்து பள்ளி வளாகத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலக்கி குடித்துவிட்டு மாணவி பள்ளிக்கு வந்ததாக மாணவி கூறியது தெரியவந்துள்ளது. ஆனால், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து மாணவி மரணம் தொடர்பாக காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மாணவி உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

அதில், “தான் காதலித்த அந்தோனி செல்வராஜ் மாமாவை விட்டு பிரிவதாகவும், மிஸ் யூ மாமா என்று கண்ணீருடன் எழுதி வைத்துள்ளார்.” அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

12-ம் வகுப்பு மாணவி காதலித்தது அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, இதுபோன்ற விவகாரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை பெற்றோர் சரியான முறையில் அனுக வேண்டும் என உளவியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

காதலை கைவிட்ட காதலியை ஓயாமல் தொல்லை செய்த காதலன் : கடைசியில் காதலி எடுத்த விபரீத முடிவு!!

கன்னியாகுமரியில்..

வாலிபர் டார்ச்சர் காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம், மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ். இவர் எலக்ட்ரீசியனாக இருக்கிறார். இவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கிறார்.

இவரது மகள் திவ்யா. இவர் மார்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ முடித்து விட்டு உயர்கல்வி படிப்பிற்காக காத்திருந்து வருகிறார். இந்நிலையில் சூழிகோணம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் திவ்யாவை காதலித்து வந்துள்ளார்.

ரஞ்சித் மட்டுமல்லாமல், திவ்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காதலை தொடராமல் திவ்யா ரஞ்சித்தை பிரேக்கப் செய்துள்ளார்.

எதனையும் கண்டுகொள்ளாத ரஞ்சித், அடிக்கடி மீண்டும் செல்போன் மூலம் அழைத்தும் வந்துள்ளார். மேலும் திவ்யாவை பின்தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி திவ்யா ரஞ்சித்துடன் ஜோடியாக இருப்பது போல புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், முகநூல் உட்பட சோசியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஞ்சித்தின் டார்ச்சர் தொடரவே இது சம்பந்தமாக குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இரண்டு தரப்பும் சமரசமாக சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் கடந்த வாரம் திவ்யாவை ரஞ்சித் பின்தொடவே ஆத்திரமடைந்த திவ்வியாவின் சகோதரன் ரோஷன் மேத்தியூ அவரது நண்பர்களுடன் ரஞ்சித்திடம் சென்று தட்டி கேட்கவே மேத்தியூ மற்றும் அவரது நண்பர்களை ரஞ்சித் மற்றும் அவரது மண்கடத்தல் நண்பர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர்.

இதில் காயமடைந்த அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ள நிலையில் மனமுடைந்து காணபட்ட திவ்யா நேற்று வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த மார்தாண்டம் போலீசார் உடலை கைபற்றி உடல் கூறு ஆய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக திவ்வியாவின் பெற்றோர்கள் மகள் மரணத்திற்கு காரணமான ரஞ்சித் உட்பட நண்பர்களை கைது செய்ய கேட்டு புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

550 சவரன் நகையும் குடிச்சி தீர்த்துட்டேன்… தொழிலதிபரை ஏமாற்றிய மாடல் அழகி அதிரடி!!

சென்னையில்..

சென்னையில் தொழிலதிபர்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணத்தை சுருட்டிய மாடல் அழகி, அதை கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் தொழிலதிபர்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணத்தை சுருட்டிய மாடல் அழகி, அதை கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி. பூந்தமல்லி பஸ்நிலையம் அருகே நிதி நிறுவனம் மற்றும் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார்.

இவரது மகன்கள் சேகர் (41), ராஜேஷ் (37). இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ராஜேஷுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், சேகருக்கு பாலியல் தொழில் நடத்தும் புரோக்கர் ஒருவர் மூலம், வேளச்சேரியை சேர்ந்த சுவாதி (20) அறிமுகமானார்.

இதனையடுத்து, அடிக்கடி ஸ்வாதியுடன் நெருக்கமாக இருந்த சேகர் பணத்தை அள்ளி வீசி வந்துள்ளார். அந்த வகையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 550 சவரன் நகைகள், 30 லட்சம் ரூபாய் பணம், 4 சொகுசு கார்கள், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டுகாட்டி இருசக்கர வாகனம் போன்றவற்றை வாங்கி ஆசை நாயகிக்கு கொடுத்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து மாடல் அழகியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், மாடல் அழகி, ‘எனக்கு ஸ்டார் ஓட்டல்களில் மது அருந்தும் பழக்கம் உள்ளது. சேகர் கொடுத்த நகைகளை எல்லாம் விற்று ஸ்டார் ஓட்டலில் மது அருந்தினேன்.

சேகர் கொடுத்த 3 கார்களை ஆண் நண்பர்களுக்கு கொடுத்துவிட்டேன். அந்த டுகாட்டி பைக்கையும் இளம்காதலுனுக்கு கிஃப்ட்டாக கொடுத்துவிட்டேன்.

அப்போது தான் சேகர் வந்து சிக்கினார். என்னுடன் ஜாலியாக பொழுதை கழித்த மகிழ்ச்சியில் சேகர் எனக்கு கொடுத்த கட்டணம் மற்றும் பரிசை திருப்பிக் கேட்க யாருக்கும் உரிமையில்லை. சேகர் கொடுத்த பணம் நகை எல்லாம் செலவாகிப்போச்சு என்றார்.

உள்ளூரில் சுற்றியது மட்டுமின்றி கோவா, ஊட்டி போன்ற இடங்களுக்கும் சேகருடன் சுற்றுலா சென்று ஜாலியாக இருந்துள்ளார் சுவாதி. அதுமட்டுமின்றி தாய்லாந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் சேகர் செய்துவிட்ட நிலையில் இருவரும் போலீசில் சிக்கியது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் உள்ள கணவரிடம் வீடியோ அழைப்பில் பேசியபடி இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : தவிக்கும் குழந்தைகள்!!

ஞான பாக்கியபாய்..

வெளிநாட்டில் உள்ள கணவருடன் வீடியோ அழைப்பில் பேசும்போது ஏற்பட்ட சண்டையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஞான பாக்கியபாய் (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவரிடம் ஞானபாக்கியபாய் அடிக்கடி செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் பேசுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஞான பாக்கியபாய் கணவரிடம் பேசியுள்ளார்.

அப்போது திடீரென அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் கோபமடைந்த ஞான பாக்கியபாய் உடனே செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

பின்னர் செந்தில், மனைவியிடம் பேச மீண்டும், மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் எடுத்து பேசாததால் பதற்றமடைந்த செந்தில் பக்கத்து வீட்டில் உள்ள உறவினர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை கூறியுள்ளார்.

உடனே அவர்கள் ஞான பாக்கியபாய் வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால், உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஞானபாக்கியபாய் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீடியோ அழைப்பில் கணவரிடம் பேசியபோது ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்தாயார் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லொட்டரியில் வென்ற 14 கோடி பணத்தை கழிவறையில் போட்டு ஃபிளஷ் செய்த பெண்.. சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்!!

ஜேர்மனியில்..

ஜேர்மனியில் லொட்டரியில் வென்ற கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் பணத்தை கிழித்து கழிவறையில் போட்டு ஃபிளஷ் செய்த வயதான பெண் சொன்ன காரணம் அதிர்ச்சியை அளிக்கிறது.

ஜேர்மனியின் Essen நகரத்தைச் சேர்ந்த Angela Maiers எனும் 63 வயதான பெண், லொட்டரியில் அடித்த ஜாக்பாட் மூலமாக 330,000 பவுண்டுகள் வென்றார். இது தற்போதைய இலங்கை பண மதிப்பில் ரூபாய் 14.33 கோடிகளாகும்.

தனது பணத்தை லொட்டரி நிறுவனத்திடமிருந்து வாங்கி வீட்டுக்கு கொண்டுவந்த அப்பெண், தனது அதிர்ஷ்டத்தை கொண்டாடுவதற்காக 5 போத்தல் champagne பீர்களை குடித்தார்.

அப்போது, தனக்கு வந்திருந்த ஒரு கடிதத்தை எடுத்து பார்த்து அதிர்ச்சியடைந்தார். அது அவரது இறந்துபோன கணவரை கவனித்துக்கொண்ட முதியோர் இல்லத்திலுருந்து வந்த பில் ஆகும்.

அப்பெண்ணுக்கு, ஜேர்மனியின் தேசிய லொட்டரியில் பரிசு வென்ற தகவலை அறிந்துகொண்ட முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள், அவரது கணவரின் மருத்துவ செலவுகளுக்கு பணம் கட்டுமாறு அந்த நோட்டிஸை அனுப்பி வைத்துள்ளனர்.

ஏற்கெனவே குடிபோதையில் இருக்க, இந்த பில் அவரது மகிழ்ச்சியை முற்றிலுமாக சிதறடித்த நிலையில், தனக்கு அதிர்ஷ்டமாக கிடைத்த இந்த பணம் வேறு யாருக்கும் கிடைத்துவிடக்கூடாது என்று முடிவெடுத்தார். வீட்டில் வைத்திருந்த 800 யூரோ 500 நோட்டுக்களை தனது கைகளாலேயே கிழித்து கழிவறை சிங்க்கில் வீசி ஃபிளஷ் செய்தார்.

இதன் விளைவாக, பில் செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்று எசென் நீதிமன்றத்தில் தெரிவித்தார். குடிபோதையில் தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் கழிவறையில் போட்டதாகவும் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், குடிபோதையில் அவர் தனது பணத்தை அழித்தது சட்டவிரோதமானது அல்ல என்று கூறியது.

அதே நேரம், முதியோர் இல்லத்திற்கு பணம் செலுத்தாமல் இருக்க அவர் பணத்தை ஒளித்துவைத்துக்கொண்டு, பொய்யான கதையை உருவாக்கியிருக்கலாம் என்றும் நீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் ஏஞ்சலா உண்மையைச் சொல்கிறாரா என்பதை ஒரு நிபுணர் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏஞ்சலா இந்த வழக்கைத் தீர்ப்பதற்கு இழப்பீடாக 4,000 யூரோக்கள் (£3,310) செலுத்த ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் 2014-ஆம் ஆண்டு ஜேர்மனியின் Essen நகரத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.