இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில் பிகினி புகைப்படத்தை பதிவிட்ட பேராசிரியைக்கு எதிராக 99 கோடி நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியை தனது இன்ஸ்டாகிராமில் பிகினி அணிந்த புகைப்படங்களை பதிவிட்டதாக புகார் கூறப்பட்டது.
மாணவர் ஒருவரின் தந்தை அளித்த அந்த புகாரில், தனது மகன் பேராசிரியையின் சில புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தார் என்றும், அந்த படங்களை குறித்த பேராசிரியை ஆபாசமாக உடையணிந்து இருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். அதனைத் தொடர்ந்து குறித்த பேராசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கையாக பல்கலைக்கழகம் அவரை பணிநீக்கம் செய்தது.
மேலும் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு அவர் களங்கம் விளைவித்ததால் 99 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேராசிரியை கூறுகையில், எனது தனிப்பட்ட கணக்கை யாரோ ஹேக் செய்து அல்லது ஸ்டோரீஸ்-யில் நான் பதிவிட்டத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பரப்பியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய குறைந்தபட்ச மாதச் சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச தினக்கூலியை உயர்த்த அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளார்.
அதன்படி, தற்போதைய தேசிய குறைந்தபட்ச மாத ஊதியம் 12,500 ரூபாவிலிருந்து 17,500 ரூபாவாக 5000 ரூபாவினாலும் தேசிய குறைந்தபட்ச தினக்கூலியாக 500 ரூபாவில் இருந்து 700 ரூபாவாக 200 ரூபாவினாலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் கீழ் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 59% ஆக அதிகரித்துள்ளதால், குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கையில் கொவிட் தொற்றினால் புதிதாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில்,
4 ஆண்களும் 5 பெண்களும் அடங்குகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கைக்குள் கொவிட் தொற்றினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 16ஆயிரத்து 603 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை அண்மை காலங்களில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் உயிரிழபோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கம்பளை நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியருக்கும் மாணவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் இருவரும் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
நேற்றுமுன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தரம் 13 இல் கல்வி கற்று வரும் குறித்த மாணவன் சம்பவ தினம் காலை தனது தலைமுடியை வளர்த்துக்கொண்டு வந்தார் என்று தெரியவருகின்றது.
இதன்போது குறித்த ஆசிரியர் அது குறித்து மாணவனிடன் வினவியபோது இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஆசிரியர், மாணவனின் கன்னத்தில் அறைந்தார் எனவும், இதன்போது குறித்த மாணவன் ஆசிரியரை அருகேயிருந்த பள்ளத்தில் தள்ளிவிட்டார் எனவும் தெரியவருகின்றது.
இதையடுத்து சக ஆசிரியர்கள் இணைந்து இருவரையும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் அறைந்ததால் மாணவனின் செவிப்பறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பரிசோதனை செய்வதற்காக அவர் பேராதனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மேற்படி சம்பவம் தொடர்பாகக் கம்பளைப் பொலிஸாருக்குப் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரான்ஸில் இளம் குடும்பத்தர் இரத்தப் புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் இலங்கையில் யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விண் மீன் அமைப்பு ஊடாக பல உதவிகளை செய்து வந்தவர்.
திருமணம் செய்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் குறித்த குடும்பத்தர் உயிரிழந்துள்ளார். தனபாலசிங்கம் தர்சிகன் வயது 31 என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு உயிரிழந்தவர்.
குறித்த இளம் குடும்பத்தர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பலர் இவரது குணநலன்கள் பற்றி பெருமையாக பதிவிட்டு வருவதுடன் தமது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப்பரீட்சைக்கு மருத்துவப்பிரிவில் தோற்றிய குறித்த மாணவி பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னர் தவறான முடிவு எடுத்து நேற்று முன்தினம்(08.08.2022) திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
மூன்றாவது முறையாக பரீட்சை எழுதியுள்ளார். தான் எழுதியவற்றை மீள் சோதனை செய்து குறைந்த புள்ளிகள் வரும் என்ற அச்சத்தில் மாணவி இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் மாணவி தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உதயசங்கர் நிவேதிகா வயது 22 என்ற மாணவியை உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் உடல் கூற்று சோதனை இடம்பெற்று உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனைக் கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
2016 ஆம் ஆண்டு வவுனியா – மணிபுரம் பகுதியில் 14 வயது சி.று.மி மீது பா.லி.ய.ல் து.ஸ்.பி.ர.யோ.க.ம் மே.ற்கொண்ட நபருக்கு க.டூ.ழி.ய சி.றைத் த.ண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு இக் கு.ற்றச் சம்.பவம் இடம்பெற்றதாக தெரிவித்து எ.தி.ரி கை.து செ.ய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றில் எ.திரிக்கு எ.திராக கு.ற்றப் பத்திரிக்கை தா.க்கல் செ.ய்யப்பட்டிருந்து. இந்நிலையில்,வழக்கு வி.சாரணையின் போது எதிரி தன்னை மி.ர.ட்.டி ப.லா.த்.கா.ர.ம் செ.ய்ததாக சி.றுமி சா.ட்சியம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து கு.ற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட எ.திரிக்கு ஆ.ட்.க.ட.த்.த.ல் கு.ற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் சி.றைத் த.ண்டனையும், து.ஸ்.பி.ர.யோ.க கு.ற்றத்திற்கு 10 ஆண்டுகள் க.டூழிய சி.றைத்தண்டனையும்,
5 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடும், செலுத்த தவறும் பட்சத்தில் இரு மாத க.டூழிய சி.றைத்தண்டனையும் விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
பலரும் தங்களது கல்லூரி படிப்பிற்கு பிறகு, தங்களுக்கு விருப்பமுள்ள துறையில் வேலைக்கு செல்ல முயல்வார்கள். அதே வேளையில் மற்ற சிலர், அரசு தேர்வில் சேர வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு, அரசு தேர்வுகளுக்காக தயாராகவும் செய்வார்கள்.
இதில், சிலர் ஒன்றிரண்டு முயற்சிகளில் தேர்ச்சி அடைந்து வேலை கிடைத்தாலும், மற்ற பலருக்கு அதிக முயற்சிகள் எடுத்துக் கொள்ளும். இந்நிலையில், கேரள மாநிலத்தை சேர்ந்த தாய் – மகன் ஆகிய இருவரும் அரசு தேர்வுக்கு தயாரான நிலையில், பின்னர் நடந்த சம்பவம் சபாஷ் போட வைத்துள்ளது.
கேரள மாநிலம், மலப்புரத்தை அடுத்த அரிகோடு என்னும் பகுதியை சேர்ந்தவர் பிந்து. இவரது மகன் பெயர் விவேக். இவர்கள் இருவரும் சமீபத்தில், அரசு பணியாளர் தேர்வை எழுதி ஒன்றாக எழுதி உள்ளனர்.
எழுதியதுடன் மட்டுமில்லாமல், இருவரும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தற்போது அரசு பணியிலும் அவர்கள் சேர உள்ளனர். தாய் பிந்துவுக்கு கடைநிலை ஊழியர் பிரிவிலும், மகன் விவேக்கிற்கு கீழ்நிலை ஊழியர் பிரிவிலும் வேலை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே விரைவில் அரசு பணியில் சேரப் போகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக, அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வரும் பிந்து, மகன் விவேக் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, அவரது புத்தகங்களை மகனுடன் சேர்ந்து வாசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்படி மகனின் புத்தகங்களை படித்ததே பிந்துவை அரசு தேர்வுக்கு தயாராக தூண்டி உள்ளது.
இதன் பின்னர் பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து பிந்து படிக்க ஆரம்பித்துள்ள நிலையில், மகனின் கல்லூரி படிப்பிற்கு பின்னர் அவரையும் சேர்த்துள்ளார். முதலில் மூன்று, நான்கு முறை அரசு பணியாளர் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல் இருந்து வந்த பிந்து, தற்போது தேர்ச்சி பெற்றுள்ளார்.
அங்கன்வாடி பணி நேரம் போக, தனக்கு மீதம் இருக்கும் நேரத்தில் பிந்து படித்து வந்த அதே வேளையில், மகன் விவேக் தனியாக படிக்கவே பெரிதும் விரும்பி உள்ளார். இருவரும் தனியாக படித்து வந்தாலும், தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் முக்கியமான தலைப்புகள் தொடர்பாக அவர்கள் மாறி மாறி விவாதிக்கவும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரே வீட்டில் இருந்து தாயும், மகனும் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று, ஒரே நேரத்தில் அரசு பணியில் சேர உள்ள சம்பவம் பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது. இந்த தாய் – மகன் காம்போவை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்ட சிறுமி ஒருவர் காதலை நிரூபிக்க காதலனின் இரத்தத்தை தனது உடலில் செலுத்திக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் அசாம் மாநிலத்தில், வசிக்கும் 15 வயது சிறுமிக்கும், எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.
இருவருக்குமான பிணைப்பு நாளுக்கு நாள் வலிமையாக, ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை என்று கூறும் நிலைக்கு வந்துள்ளனர். சில நாட்கள் அந்த சிறுமி காதலனுடன் ஓட்டம் பிடித்திருக்கிறார். அப்போது அவர்களின் பெற்றோர் தான் வீட்டிற்கு சிறுமியை மீண்டும் அழைத்து வந்துள்ளனர்.
ஆனால், இந்த முறை அந்த 15 வயதான சிறுமி இதுவரை யாரும் கற்பனை கூட செய்யமுடியாத அளவிற்கு ஒரு செயலை செய்துள்ளார். அதாவது அந்த பெண் யாரும் பிரித்துவிட முடியாத படி தனது காதலனின் HIV பாதிப்பு இருக்கும் ரத்தத்தை தனக்குள் செலுத்திக்கொண்டுள்ளார்.
இதனை அறிந்த ஊர் மக்கள் அதிர்ச்சியில் மூழ்க, போலீசார் காதலரான இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும் சிறுமி தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
குண்டூர் ரயில்பேட்டை பகுதியைச் சேர்ந்த அஞ்சம்மா, கணவரை இழந்த நிலையில் கூலி வேலை செய்து தனது இரண்டு மகன்களையும் படிக்க வைத்தார். அவரது இளைய மகன் ஆகாஷ்(18) அரசுப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அவர் ஒழுங்காக படிப்பதில்லை என அவரது ஆசிரியர் அடிக்கடி திட்டி வந்ததாகத் தெரிகிறது. கடந்த வாரம் ஆகாஷ் தனது நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆசிரியர் படிக்காதவனுக்கு சாப்பாடு எதற்கு? எனக்கூறி கையிலிருந்த சாப்பாட்டை பிடுங்கியதாக கூறப்படுகிறது.
ஆசிரியர் அவமதித்தது தொடர்பாக ஆகாஷ் தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். அவரைத் தேற்றிய தாயார் மீண்டும் ஆகாஷை பள்ளிக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களாக பள்ளிக்குச்செல்லாத ஆகாஷ் நேற்று யாரும் வீட்டில் இல்லாத சமயத்தில் தூக்கிட்டுத்தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய மாநில உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் தன்னுடன் வாழ்ந்து வந்த காதலரை கொலை செய்து, பெரிய பெட்டியில் உடலை மறைத்து கொண்டு செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் திலா மோர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பெண்ணொருவர், பெரிய பெட்டி ஒன்றை டிராலியில் வைத்து இழுக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.
இதனை கவனித்த ரோந்து பொலிசார், குறித்த பெண்ணை நிறுத்தி பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். அத்துடன் அவர் தப்பியோட முயன்றபோது அவரை மடக்கிப்பிடித்த பொலிசார், பெட்டியை திறக்குமாறு கூறியுள்ளனர்.
அதன் பின்னர் பெட்டியை திறந்து பார்த்தபோது, இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து குறித்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, அவர் துளசி நிகேதனில் வசிக்கும் தீபக் யாதவ் என்பவரின் மனைவி ப்ரீத்தி சர்மா என்று தெரிய வந்தது.
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை பிரிந்த அவர், பிரோஸ் என்பவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த ஆகத்து 6ஆம் திகதி பிரோசுக்கும், ப்ரீத்தி சர்மாவுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ப்ரீத்தி கேட்டுள்ளார். ஆனால் திருமணத்தில் ஆர்வம் காட்டாத பிரோஸ், கணவனை விட்டு வந்த நீ எப்படி எனக்கு உண்மையாக இருப்பாய் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்து பிரோஸின் கழுத்தை அறுத்து ப்ரீத்தி கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து உடலை மறைக்க பெரிய பெட்டியில் அடைத்து கொண்டு செல்லும் வழியில் பொலிஸிடம் சிக்கியுள்ளார். பிரோசின் உடலை கைப்பற்றிய பொலிசார், ப்ரீத்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் 10 வயது மகளை கொன்றுவிட்டு பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் வசித்து வருபவர் நாராயண். இவரது மனைவி சைமா (39). இந்த தம்பதிக்கு 10 வயதில் ஆராதனா என்ற மகள் இருந்தாள். நாராயண் மற்றும் சைமா பல் மருத்துவர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில், நாராயண் வழக்கம் போல தான் நடத்திய வரும் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். ஆனால் தனது மனைவி வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வராததால், அவரது செல்போனுக்கு பல முறை நாராயண் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. அப்படி இருந்தும் சைமா தனது செல்போனை எடுத்து பேசவில்லை.
இதன் காரணமாக சந்தேகம் அடைந்த நாராயண், வீட்டுக்கு வந்த போது படுக்கை அறையில் தனது மனைவியும், மகளும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தனது மகளை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த சைமா, பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நாராயண், சைமா இடையே குடும்ப பிரச்சினை காரணமாக சிறிய சண்டைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்து தனது மகளை கொன்று, சைமா தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
அதே நேரத்தில் சைமா சாவில் சில சந்தேகங்கள் இருப்பதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் நாராயணிடம் நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் இளம்பெண்ணொருவர் விவாகரத்துக்கு பின் வெளியிட்ட டிக்டாக் வீடியோவால் கோபமடைந்த முன்னாள் கணவர், அவரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இளம்பெண் சானியா கான்(29). புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த இவருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த ரஹீல் அகமது(36) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
ஐந்து ஆண்டுகள் டேட்டிங் செய்த இந்த ஜோடி, காதல் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு குடிபெயர்ந்தது. அதன் பின்னர் சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து சானியா கான் சிகாகோவிலும், ரஹீல் ஜார்ஜியாவில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சானியா வீடியோ ஒன்றை டிக்டாக்கில் பதிவிட்டார்.
அத்துடன் தனது திருமண வாழ்க்கையில் கசப்பான நினைவுகள் இருந்ததாகவும், விவகாரத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது ரஹீலுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர் காரை எடுத்துக் கொண்டு, சுமார் 1,100 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து சிகாகோவிற்கு விரைந்துள்ளனர்.
அங்கு முன்னாள் மனைவி சானியாவை சந்தித்த ரஹீல், தான் கொண்டுவந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் அவரும் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இருவரின் உடல்களையும் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் அருகே காணாமல் போனதாக நாடகமாடி மனைவியை கொலை செய்த கணவன் திடுக் தகவல். சென்னை, திருவொற்றியூர், பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் மணிமாறன்.
இவரது மனைவி மைதிலி (36). இவர், மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த புதன்கிழமை அன்று, மைதிலி உறவினர் வீட்டுக்கு சென்றவர், திடீரென மாயமாகி விட்டார். அவரை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, மணிமாறன், திருவொற்றியூர் காவல் நிலையத்தில், மைதிலி காணவில்லை என புகார் அளித்தார். போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, மணலி புதிய மேம்பாலம் அருகில், மைதிலி இறந்து கிடந்தார். அவரை கொன்று, உடலை அங்கு வீசியது தெரியவந்தது. போலீசார், மைதிலி உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
கணவர் மணிமாறனிடம் விசாரணை நடத்தியதில், மைதிலிக்கு, ஜெய்சங்கர் என்பவருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது. ஜெய்சங்கரை பிடித்து விசாரித்ததில், கடந்த புதன் கிழமை அன்று, தன்னுடன் பைக்கில் மைதிலி வந்தார்.
எல்லையம்மன் கோயில் அருகே, மணிமாறன் எங்களை பார்த்து விட்டார். எங்களிடம் சண்டைப்போட்டார். என் பைக்கின் சாவியை பிடுங்கி வைத்துக்கொண்டு, மைதிலியை கோபமாக அழைத்து சென்றார் என போலீசில் அவர் கூறினார். பின்னர், மணிமாறனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, மணிமாறன், மைதிலி, ஜெய்சங்கரின் தொடர்பை விட மறுத்தார், சம்பவத்தன்று, மைதிலியை, மணலி, புதிய மேம்பாலம் அருகில் அழைத்து சென்று, எவ்வளவோ புத்திமதி கூறினேன், ஆனால், கள்ளத்தொடர்பை விட மறுத்தார். ஆத்திரத்தில், அவரின் சேலையால், மைதிலி கழுத்தை இறுக்கி கொன்றேன். அங்கேயே உடலை போட்டு விட்டு, காணமால் போனதாக நாடகமாடினேன் என கூறினார்.
தொடர்ந்து அவரை க்ரைம் சீன் இடத்துக்கு அழைத்து சென்ற போலீசார் கொலை செய்த சம்பவத்தை விவரிக்க செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளியை அவரது மனைவி, மகளின் காதலனுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் 4-வது வட்டம் புண்ணாக்கு தெருவில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் நாராயணன் மகன் சண்முகம் (வயது 50). இவர் என்.எல்.சி. 1-வது சுரங்கத்தில் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி நிர்மலா என்ற ஷகிலா (48). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் நடந்து, அவர் விஜயவாடாவில் வசித்து வருகிறார். 2-வது மகளும், மகனும் சேலத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர்.
2-வது மகள் நாமக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். மனைவியிடம் தகராறு இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சண்முகத்திடம் அவரது மனைவி ஏன் என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவில்லை என்று கேட்டுள்ளார்.
இதில் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, சண்முகம் வீட்டுக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஷகிலா வீட்டுக்கு வெளியே நின்ற ஆம்னி வேனில் படுத்து தூங்கினார்.
நேற்று காலை வேலைக்கு செல்ல வேண்டிய சண்முகம் வீட்டின் கதவை திறக்காமல் இருந்தார். இதை பார்த்த அவரது மனைவி, கதவை தட்டினார். ஆனால் சண்முகம் திறக்கவில்லை. உடனே, ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.
அங்கு வீட்டின் உள்ளே சண்முகம் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஷகிலா, உடனடியாக டவுன்ஷிப் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு கழுத்து, கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் சண்முகம் இறந்து கிடந்தார். இதன் மூலம் அவரை மர்மநபர்கள் கொலை செய்து இருப்பது தெரியவந்தது. மேலும், சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி அந்த நாய், சிறிது தூரம் சென்று நின்றது.
கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். பின்னர், சண்முகம் உடலை போலீசார் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கா அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சண்முகத்தின் அண்ணன் பிச்சையாபிள்ளை கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே சண்முகம் கொலை செய்யப்பட்ட வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தாலும், வீட்டின் பின்பக்க கதவை திறந்து எளிதில் உள்ளே வந்துவிட முடியும். எனவே இதுபற்றி அறிந்த மர்ம நபர்கள்தான், உள்ளே புகுந்து சண்முகத்தை வெட்டிக்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
அதன்படி, முதலில், சண்முகத்தின் மனைவி ஷகிலா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, சண்முகத்திற்கும் சுகந்தி என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
சண்முகம் தான் வாங்கும் சம்பளத்தை, அந்த பெண்ணிடம் கொடுத்து வந்துள்ளார். இதனால் தனது குடும்பத்தை அவர் சரியாக கவனிக்கவில்லை. இதற்கிடையே, சண்முகத்தின் 2-வது மகளும், நெய்வேலி 9-வது வட்டத்தை சேர்ந்த தங்கப்பன் மகன் தமிழ்வளவன் (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதல் விவகாரம் தாய் ஷகிலாவுக்கு தெரியும். ஆனால் சண்முகத்துக்கு தெரியாது. மகளின் காதல் விவகாரம் அவருக்கு தெரிந்தால், எதிர்ப்பு தெரிவித்து இடையூறாக இருப்பார் என்று ஷகிலா எண்ணினார். எனவே அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, இது குறித்து மகளின் காதலனான தமிழ்வளவனிடம் தெரிவித்தார்.
அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு ஷகிலா தமிழ்வளவனுக்கு போன் செய்து வீட்டுக்கு வர வைத்துள்ளார். பின்னர் நள்ளிரவில் ஷகிலாவும், தமிழ்வளவனும் சேர்ந்து சண்முகத்தை வெட்டி கொலை செய்து விட்டு, பின்பக்க வாசல் வழியாக வெளியே வந்துவிட்டனர். பின்னர் காலையில் ஷகிலா தனக்கு எதுவும் தெரியாதது போன்று நாடகமாடி போலீசை ஏமாற்ற முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, ஷகிலா, தமிழ்வளவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இறுதிவரையில் மகளின் காதல் விவகாரம் குறித்து சண்முகம் தெரிந்து கொள்ளாமலே படுகொலை செய்யப்பட்டுள்ளார். சண்முகம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் பொருளாளராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே விஜயமாநகர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இன்று காலை இவரது 3 வயது மகள் சாலையில் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த பைக், அந்த சிறுமியின் மீது மோதி, தரதரவென இழுத்து சென்றது. இதில் படுகாயமடைந்த அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஆவேசமடைந்த சிறுமியின் பெற்றோர்கள், உறவினர்கள் அந்த சிறுவனை பிடித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பைக்கில் வந்த சிறுவனுக்கு வெறும் 13 வயது என்றும், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் இவர் அதே பகுதியை சேர்ந்த சிவகுரு என்பவற்றின் மகன் என்றும், அந்த சிறுவனுக்கு வாகன ஓட்டும் உரிமை இல்லை என்றும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த சம்பவத்தை ஐ.பி.சி.302 (கொலை அல்லாத மரணம்) என்ற வழக்கில் பதிவு செய்த அதிகாரிகள், சிறுவனையும், சிறுவனுக்கு பைக் ஓட்டுவதற்கு அனுமதி அளித்து, அவரிடம் வாகனத்தை கொடுத்த குற்றத்திற்காக சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவன் பைக் ஓட்டி, குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.