ஏழு நகர சபைகளை, மாநகர சபைகளாகவும், மூன்று பிரதேச சபைகளை , நகர சபைகளாகவும் தரம் உயர்த்த பொது நிர்வாக, மாகாண மற்றும் உள்ளூர் ஆட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி வவுனியா, திருகோணமலை, மன்னார், புத்தளம், களுத்துறை, மாத்தறை மற்றும் கேகாலை ஆகிய நகர சபைகள், மாநகர சபைகளாக தரமுயர்த்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனறாகல ஆகிய பிரதேச சபைகள் நகர சபைகளாக தரம் உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் மற்றும் பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ள நிலையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 2022 கணிதப்பிரிவில் கல்வி பயிலும் விசேட தேவைக்குற்பட்ட மாணவி சப்திகா பாடசாலை அதிபரை சந்தித்து அவரது ஆசீர்வாதத்துடன் தமது உயர்தர பரீட்சைக்கு தயாராகிறார்.
இரண்டு கைகளும் பிறப்பிலேயே இயங்காத நிலையில் தனது கால்களை பயன்படுத்தி சாதாரண மனிதர்கள் கைகளிலினால் செய்யும் பணிகளை தனது கால்களினால் மாணவி சாதாரணமாக செய்கிறார்.
இந்நிலையில் இம்மாணவியின் கனவு நனவாக இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறிவருகின்றனர். உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
கனடாவில் ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த இலங்கையர் உயிரிழந்த நிலையில் அவர் குறித்து மனைவி உருக்கமாக பேசியுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Burnabyயில் வாழ்ந்து வந்தவர் Bakir Junaideen (57). இலங்கையிலிருந்து இவர் கனடாவிற்கு குடியேறியிருக்கிறார்.
சமீபத்தில் பொழுதுபோக்கு பூங்காவில் Junaideenம் அவரது இளைய மகனான Zaid (9)ம் தங்கள் நண்பர்களுடன் ரப்பர் படகு ஒன்றில் பயணித்திருக்கிறார்கள்.
அப்போது படகு கவிழ்ந்த நிலையில் தண்ணீரில் விழுந்த மகனை காப்பாற்றும் முயற்சியில் Junaideen உயிரிழந்தார். அந்த இடத்தில் இருந்தவர்கள் Zaid-ஐ காப்பாற்றியுள்ளனர்.
தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட Junaideen மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மரணம் குடும்பத்தார் மற்றும் நண்பர்களை உலுக்கியுள்ளது.
Junaideen-க்கும் Farzana Abubakker என்ற பெண்ணிற்கும் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் திருமணம் நடந்தது. இதன்பின்னரே அவர்கள் கனடாவிற்கு வந்தனர். Farzana கூறுகையில், அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார், எனக்கானவராக இருந்தார்.
எனது கணவரைத் திருப்பிக் கொடுங்கள் ஏனென்றால் என் பிள்ளைகளுக்கு அவர் தேவை என சம்பவத்திற்கு பிறகு கடவுளிடம் வேண்டி கொண்டேன். Junaideen உயிருக்கு போராடும் போது நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைக்கு வந்து அவரைப் பார்த்தார்கள்.
அவர் நேர்மையானவராகவும், மென்மையாக பேசுபவராகவும் திகழ்ந்தார். அவர் இறந்த விதத்தில் மட்டும் ஒரு ஹீரோ மட்டுமல்ல, அவர் வாழ்ந்த விதத்திலும் ஹீரோ தான் என உருக்கத்துடன் கூறியுள்ளார்.
கொலம்பியாவை சேர்ந்த திருநங்கை – திருநம்பி தம்பதி இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. டான்னா சுல்தானா ஒரு மொடல் ஆவார், ஆணாக பிறந்த இவர் இப்போது ஒரு பெண்ணாக மாறியுள்ளார், ஒரு திருநங்கை ஆவார்.
அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார், ஒரு திருநம்பி ஆவார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர்.
அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியிருந்தாலும் அவரது உடலில் கர்ப்பம் தரிப்பதற்கான பெண்ணுறுப்புகளை அவர் அறுவைசிகிச்சை செய்து மாற்றிக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இதனையடுத்து, அவர் கர்ப்பமானார். தனது கணவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சுல்தானா சமூக வலைதளங்களில் பதிவிட்டும் இருந்தார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் பலரையும் குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.
அதேபோல, மருத்துவர்களும் இது எப்படி சாத்தியமானது என்று குழம்பி உள்ளனர். எனினும், சுல்தானா மற்றும் எஸ்டெபன் இருவருக்கும், இயற்கையான பிறப்பு உறுப்புகள் இருப்பதால், இந்த தம்பதியினர் தங்கள் குழந்தையை இயற்கையாக கருத்தரிக்க முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த போதிலும் சில உறுப்புகளை இயற்கை கொடுத்த முறையில் அப்படியே விட்டு மற்றாமல் இருந்ததால் அது சாத்தியமாகியுள்ளது. இது முதன்முறையல்ல என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, Tristan Reese மற்றும் Biff Chaplow தம்பதி இதே போல இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு எரிபொருள் நிலையம் ஒன்றில் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது இரும்பு கம்பி ஒன்று உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற போது திடீரென பாரிய இரும்பு ஒன்று ஜன்னலை உடைத்து உள்ளே விழுந்துள்ளது.
இரும்பு கம்பி வாகனத்தினுள் இருந்த மோட்டார் வாகனத்தின் செஸியையும் உடைத்துள்ளது. அந்த இரும்பு கம்பி 19 அடி நீளமானதென தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் வாகனத்திற்குள் இருந்த சாரதியின் காலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வவுனியாவில் மீண்டும் கோவிட் தொற்று காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மூச்சு திணறல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கோவிட் தொற்று காரணமாக குறித்த குடும்பஸ்தர் இன்று (09.08) மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்தவர் செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய நபர் என சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை மிக அதிகளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை காலமும் இல்லாத அளவு பச்சை மிளகாயின் விலை உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 1200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த காலத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 800 ரூபாவிற்கு விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை 40 தொடக்கம் 50 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மலைநாட்டு மரக்கறிகளின் விலை 60 – 70 வீதத்தால் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொதி மற்றும் தேநீர் என்பவற்றின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் உணவுப்பொதியொன்றின் விலை 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது. எரிவாயுவின் விலை குறைப்பை அடுத்தே இந்த விலை குறைப்பை தாம் மேற்கொள்வதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் கூறியுள்ளது.
கடந்த சில மாதங்களாக எரிபொருள் விலை அதிகரிப்பு, எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளை உணவகங்கள் வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கந்திலி அருகே கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த செல்ரப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இளம் பெண்ணின் சடலத்தை மீட்ட கந்திலி காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தற்கொலையா கொலையா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் செருப்பை வைத்து விசாரணை மேற்கொண்டதில் செல்ரப்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசனின் மகள் சந்தோஷ் பிரியா தான் அது என்பது தெரியவந்தது. இந்த நிலையில் சந்தோஷ் பிரியா கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போபதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அதோடு தங்கள் பெண் காதலருடன் சென்றுவிட்டதாக நினைத்ததாகவும் பெற்றோர் தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சந்தோஷ் பிரியா காணாமல் போன ஒரு மாதம் கழித்து கடந்த 23-ம் அவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் தொடர்ந்து இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்தனர். அப்போது சந்தோஷ் பிரியாவின் செல்போன் ஐஎம்மி நம்பர் பயன்பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த போனை பயன்படுத்திய நபரை பிடித்து விசாரணை செய்ததில் செல்லரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் தன்னிடம் போனை விற்றதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் கந்திலி போலீசார் செல்லரப்பட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதான மகேந்திரனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது
அப்போது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சந்தோஷ் பிரியாவின் தாத்தா தன்னை அடித்ததாகவும், அதன் காரணமாக தற்போது அவரைப் பழி வாங்க அவரது பேத்தியை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி கொலை செய்யப்பட்ட அன்று, சந்தோஷ் பிரியாவை தனது இருசக்கர வாகனத்தில் அமர சொல்லி வற்புறுத்தியதாகவும், அதன் காரணமாக தன்னை சந்தோஷ் பிரியா கன்னத்தில் அறைந்ததாகவும் மகேந்திரன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அவரின் கழுத்தை நெரித்து கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தார்.
மேலும் இதுகுறித்து பெண்ணின் பெற்றோர்கள் கூறுகையில், நான்கு வருடங்களுக்கு முன்பு சந்தோஷ் பிரியாவின் உள்ளாடைகளை மகேந்திரன் திருடி சென்றததாகவும், அதனால் தான் அவரது தாத்தா மகேந்திரனை அடித்ததாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கந்திலி போலீசார் மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். 4 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் காணாமல் போனதாக தேடி வந்த நிலையில், தூய்மை பெண் பணியாளர், அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.
சென்னை, திருவொற்றியூர், பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மைதிலி (36). இவர், மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த புதன்கிழமை அன்று, மைதிலி உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு. ஜெய்சங்கர் என்பவருடன், எல்லையம்மன் கோயில் அருகே வந்து இறங்கினார். அதை பார்த்த மணிமாறன், மைதிலியிடம் சண்டை போட்டார். எங்கே இருவரும் ஊர்சுற்றி விட்டு வருகிறீர்கள் என கேட்டார். மேலும், ஜெய்சங்கரின் வண்டி சாவி பிடுங்கிகக்கொண்டார்.
பின்னர். மைதிலியை அங்கிருந்து அழைத்து சென்றார். இதையடுத்து ன் மனைவியை காணவில்லை என திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், மைதிலியை தேடிவந்தனர். ஜெய்சங்கரிடம் விசாரணை நடத்தியதில், மணிமாறன் தான் மைதிலியை அழைத்து சென்றது தெரியவந்தது.
இந்தநிலையில், மணலி புதிய மேம்பாலத்தின் மைதிலி பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று, அழுகிய நிலையில் கிடந்த மைதிலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் மணிமாறனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மனைவி வேறு ஒருவருடன் பழகியதால் ஆத்திரமடைந்த மணிமாறன் மனைவியை கொலை செய்துவிட்டு எரித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜெய்சங்கருக்கும் மைதிலுக்கும் என்ன தொடர்பு என்பதை குறித்தும் விசாரிக்கின்றனர்.
சினிமாவில் ஒருசில படங்களிலோ சின்னத்திரை சீரியல்களிலோ நடித்து போதிய வருமானம் இல்லாமலும் வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போய்விடும் சூழல் ஏற்படும். அப்படி பிரபல தொலைக்காட்சியில் 2005ல் ஒளிப்பரப்பாகிய இது ஒரு காதல் கதை என்ற சீரியலில் நடித்து, டிஸ்யூம் என்ற படத்தின் மூலம் படங்களில் நடிகராக அறிமுகமாகியவர் பிரஜின்.
இதனை தொடர்ந்து ஒருசில சீரியல்களிலும் படங்களிலும் நடித்து வந்த பிரஜின்சில ஆண்டுகளுக்கு முன் சின்னதம்பி சீரியல் மூலம் பிரபலமானார். நடிகை பாவ்னியுடன் நடித்து மக்கள் மத்தியில் 3 ஆண்டுகள் ஆதரவை பெற்று வந்தார்.
அதன்பின் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து தோல்வியை சந்தித்தார். படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரஜின் சீரியல் நடிகை சந்திரா எமியை 2008ல் திருமணம் செய்து இரட்டை குழந்தை பெற்றார்.
10 ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன் என்றும் தான் வைத்திருந்த பைக்கை விற்று வீட்டு செலவினை பார்த்து கொண்டதாகவும் கூறியுள்ளார் பிரஜின்.
யார் வயித்துலையும் அடிக்காமல் சீரியலில் நடித்து சின்ஸ்சியராக வேலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது டி3 என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரஜின்.
யூடியூபரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சர்ச்சையில் சிக்கி உள்ள துணை நடிகை திவ்யபாரதி கொசு மருந்து குடித்து தற்கொலை முயன்றதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து அவர் மாயமான நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த பகவலவன் ராஜா என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் கவிதைகள் தொடர்பான வீடியோக்களை அவர் வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
இதில் நடிப்பதற்காக நடிகை ஒருவரை தேடி வந்துள்ளார். அப்போது ஏஜண்ட் ஒருவரின் மூலம் திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பைச் சேர்ந்த திவ்ய பாரதி என்பவர் அறிமுகமாகி உள்ளார். இவர் உள்ளூர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும், சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.
துணை நடிகை திவ்யபாரதி சினிமாவில் துணை நடிகையாகவும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் மற்றும் தொகுப்பாளராக நடித்து வந்துள்ளார். இவரை வைத்து கவிதை தொகுப்பினை வீடியோவாக எடுத்து பகலவன் ராஜா வெளியிட்டுள்ளார். இதனையடுத்து திவ்யபாரதி பகலவன் ராஜா அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மேலும் தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜா வீட்டிற்கு சென்று தங்கி குடும்ப ரீதியாக நட்பாக பழகியுள்ளனர். திவ்ய பாரதி பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல தவணைகளில் 30 லட்சம் ரூபாய் பணம், பத்து சவரன் தங்க நகைகள் ஆகியவற்றை பெற்றுக் கொண்டுள்ளார் மேலும் தனியாக வீடு எடுத்து அதற்கு பர்னிச்சர் உள்ளிட்ட வகையில் 7 லட்சம் ரூபாயை பகலவன் ராஜா செலவு செய்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய இரு குழந்தைகள் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொய் குற்றச்சாட்டு இதனிடையே பகலவன் ராஜா கூறுவது பொய்யான குற்றச்சாட்டு எனவும் தன்னிடம் தான் அவர் 10 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக நடிகை திவ்யபாரதி கூறியிருந்தார்.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்த நிலையில் அவர் பேசிய ஆடியோ மற்றும் ஸ்க்ரீன் ஷாட்கள் வெளியானது. இதன் மூலம் திவ்யபாரதி மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகலவன் ராஜா வலியுறுத்தி வந்த நிலையில் திடீரென அவர் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு திவ்யபாரதி தாடிக்கொம்பு பகுதியில் உள்ள அவரது வீட்டில் கொசுக்களை விரட்ட பயன்படும் மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.இதனை அடுத்து உடனடியாக திவ்யபாரதியின் உறவினர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இரவு திடீரென திவ்யபாரதி மாயமானார். இது குறித்து திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தீவிர விசாரணை இந்த நிலையில் திண்டுக்கல் மருத்துவமனையில் இருந்து இரவோடு இரவாக எஸ்கேப் திவ்யபாரதி தாடிக்கொம்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போலீசாரின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு நடிகை திவ்யபாரதி கைது செய்யப்படுவாரா என்பது குறித்து தெரியவரும் எனவும் போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவருக்கு திருமணமாகி தனது மனைவி, தம்பி, தாய் என்று கூட்டுகுடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் தனது தம்பியுடன் சேர்ந்து பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஒரு ஸ்வீட் கடை நடத்திவருகிறார். மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக சேகரை அவரது மனைவி பிரிந்து அவரது அம்மா வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு திரும்பி வந்த சேகரின் மனைவி, வீட்டிலிருந்த பீரோவை சோதனை செய்தார். அப்போது அதிலிருந்த அவரது 300 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து கணவரின் தம்பி ராஜேஷ் மற்றும் மாமியாரிடம் கேட்டபோது அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. பின்னர் அவர்கள் பீரோவை சோதனை செய்த போது, தாயின் 200 சவரன் நகையும், 5 தங்க கட்டிகளும் காணாமல் போனதும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அவர்கள் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குடும்பத்தாரிடம் நடத்திய விசாரணையில், சேகரின் பதில் காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர், தான் தான் வீட்டிலிருந்த நகைகளை எடுத்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் அந்த 500 சவரன் நகைகள், 5 தங்க கட்டிகளை விற்று தனது பெண் தோழிக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து விசாரித்தபோது, தனக்கும் வேளச்சேரி கேசரிபுரத்தை சேர்ந்த ஸ்வாதி (வயது 22) இளம்பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாகவும், நாங்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்திப்பதாகவும், மேலும் அவருக்காக தான் இந்த நகைகளை வைத்து கார் வாங்கி கொடுத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து இளம்பெண்ணுக்காக சொந்த வீட்டிலேயே நகையை திருடிய சேகரையும், அந்த பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இளம்பெண்ணிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நகைகள் குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இதே போன்று சென்னை புதுப்பேட்டையில் மனைவியின் நகையை திருடி கணவன் தனக்கு ‘புல்லட்’ பைக்’ வங்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, விருகம்பாக்கம், வெங்கடேஷ்நகர் மெயின்ரோடு ஸ்ரீ கோகுலம் அப்பார்ட்மென்ட்டில் கவிஞரும், மக்கள் நீதி மய்யத்தின் இளைஞரணிச் செயலாளருமான சினேகன், `சினேகம் ஃபவுண்டேஷன்’ நடத்திவருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில், “நான் மேற்கண்ட முகவரியில் வசித்துவருகிறேன். சினேகம் ஃபவுண்டேஷன் பெயரில் பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளையை, கடந்த 23.12.2022-ம் தேதி முதல் நடத்திவருகிறேன். அறக்கட்டளையை வருமான வரித்துறை அங்கீகரித்து அதற்கு 12-AA சான்றிதழும் வரிவிலக்கும் வழங்கியிருக்கிறது. மேலும், `சினேகம் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் பான் கார்டும் இருக்கிறது.
நான் என்னுடைய சினேகம் ஃபவுண்டேஷன் மூலம் தமிழ்நாடு முழுவதும் பல சேவைத் திட்டங்களை சிறப்பாகச் சட்டத்துக்கு உட்பட்டு எந்தவிதப் புகாருமின்றி தற்போதுவரை செய்துவருகிறேன்.
சமீபகாலமாக என்னுடைய அறக்கட்டளையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தும் சின்னத்திரை நட்சத்திரமும், வழக்கறிஞருமான ஜெயலட்சுமி என்பவர், தவறான விலாசம் கொடுத்து இணையதளத்தில் தான்தான் சினேகம் அறக்கட்டளையின் நிறுவனர் என்றும், அந்தப் பெயரில் பொதுமக்களுக்கு நற்பணி செய்வதாகவும் அதற்கு இணையதளம் மூலம் எனக்குச் சொந்தமான சினேகம் ஃபவுண்டேஷன் பெயரைப் பயன்படுத்தி நிதி வசூலித்தாக எனக்குப் பல புகார்கள் வந்தன.
பொதுமக்களிடம் நிதி வசூலித்து பொதுச் சேவை செய்தால் அதற்கான உரிய கணக்குகளை நாம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் நான் பொதுமக்களிடம் பொதுவெளித் தளங்கள் மூலம் இதுவரை எந்த நிதியும் திரட்டவில்லை.
மேற்கூறிய ஜெயலட்சுமி, சினேகம் ஃபவுண்டேஷன் பெயரைப் பயன்படுத்தி நிதி வசூலித்ததாக வருமான வரித்துறையினர் என்னுடைய கவனத்துக்குக் கொண்டுவந்தனர். நானும் பொதுத் தளங்களில் ஜெயலட்சுமி செய்துவரும் மோசடிகளைப் பார்வையிட்டபோது, அவர் என்னுடைய அறக்கட்டளையின் பெயரில் இணையதளத்தில் தவறான விலாசம் மற்றும் விவரங்களைக் கொடுத்து பொதுமக்களை ஏமாற்றிவருகிறார் என்பது தெரியவந்தது.
நான் இது தொடர்பாக என்னுடைய அறக்கட்டளையின் பெயரை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினால், அது தவறான விலாசம் என்று தபால்துறை திருப்பி அனுப்பிவிட்டது. நான் நேரடியாக என்னுடைய மேலாளரை அனுப்பி விசாரித்தபோது அந்த சினேகம் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விலாசம் போலியானதென்பது தெரியவந்தது.
போலியான விலாசத்தில் என்னுடைய அறக்கட்டளையை இயக்குவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து தொலைபேசி மூலம் பொதுமக்களைத் தனியாகச் சந்தித்து, அவர்களைத் தன் வலையில் வீழ்த்திப் பணம் பறிக்கும் ஜெயலட்சுமிமீது மோசடி வழக்கு பதிவுசெய்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும். மேலும், சினேகம் ஃபவுண்டேஷன் பெயரை தவறாகப் பயன்படுத்தியதற்காக ஜெயலட்சுமிமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியும்… அந்த போலியான இணையதளத்தை முடக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கவிஞர் சினேகன்மீது நடவடிக்கை எடுக்கும்படி இன்று நடிகை ஜெயலட்சுமி, கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார். பின்னர் அவரிடம் பேசினோம். “என்மீது கவிஞர் சினேகன் அவதூறாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கிறார். நான் கடந்த 2018-ம் ஆண்டு முதல் சினேகம் அறக்கட்டளையைத் தொடங்கி மக்களுக்கு உணவு உட்பட பல்வேறு சேவைகளைச் செய்துவருகிறேன்.
கொரோனா பேரிடர் காலகட்டத்தில் மக்களுக்கு எங்களின் சினேகம் அறக்கட்டளை மூலம் முடிந்த உதவிகளைச் செய்திருக்கிறோம். ஆனால், கவிஞர் சினேகன் தன்னுடைய சினேகம் அறக்கட்டளையின் பெயரை நான் தவறாகப் பயன்படுத்தி, பொதுமக்களைத் தனியாகச் சந்தித்துப் பணம் பறித்ததாகப் புகார் அளித்திருக்கிறார். அது முற்றிலும் தவறனாது.
என்னுடைய பெயரை களங்கப்படுத்தும் வகையிலும், நான் பெண் என்றுகூட பாராமல் என்னை அவமானப்படுத்தும் வகையிலும் கவிஞர் சினேகன் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறார். மேலும், நான் பா.ஜ.க-வில் மாநில மகளிரணி துணைத் தலைவியாக இருந்துவருகிறேன். அதேபோல கவிஞர் சினேகனும் ஒரு கட்சியில் இருந்துவருகிறார். அரசியல் ஆதாயத்துக்காகக்கூட அவர் என்மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கலாம் என நான் கருதுகிறேன்.
ஏனெனில் தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ந்துவருவது மற்ற கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பா.ஜ.க நிர்வாகிகள்மீது இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். என்னுடைய அறக்கட்டளை, அண்ணாநகரில்தான் செயல்பட்டுவருகிறது. ஆனால் கவிஞர் சினேகன், இணையதளத்தில் கிடைத்த முகவரி, போலி என்று குறிப்பிட்டிருக்கிறார். என்மீது அவதூறாகக் குற்றம்சாட்டிய கவிஞர் சினேகன், பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால், அவர்மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்” என்றார்.
தமிழகத்தில் பள்ளி மாணவியிடம் தவறாக நடந்ததால் ஊரைவிட்டு அடித்து துரத்தப்பட்ட இளைஞர், ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் அதே மாணவியை வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் செல்லரப்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் பிரியா(22). இவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி மாணவியாக இருந்தபோது, பக்கத்து வீட்டில் வசித்த மகேந்திரன் என்ற இளைஞர் சந்தோஷ் பிரியா குளிப்பதை மறைந்திருந்து பார்த்துள்ளார்.
இதனை அறிந்த அருகிலிருந்த மக்கள் மகேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கி ஊரை விட்டே விரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் விவசாய கிணறு ஒன்றில் கிடப்பதாக தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து அந்த சடலம் மீட்கப்பட்டபோது அது சந்தோஷ் பிரியா என்று தெரிய வந்தது. அதன் பின்னர் பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சிகர உண்மை தெரிய வந்தது.
கடந்த சூன் 22ஆம் திகதி டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காக பயிற்சி மையத்திற்கு சென்ற சந்தோஷ் பிரியா காணாமல் போயிருக்கிறார். அவர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்த விடயம் ஏற்கனவே பெற்றோருக்கு தெரிந்திருந்ததால், குறித்த இளைஞருடன் அவர் சென்றிருக்கலாம் என நினைத்துள்ளனர். இதன் காரணமாக சந்தோஷ் பிரியாவின் பெற்றோர் தங்கள் மகளை தேடாமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் சந்தோஷ் பிரியாவின் உடல் மீட்கப்பட்டது. அவரது செல்போனை வேறொருவர் பயன்படுத்தி வந்ததை கண்டுபிடித்த பொலிசார், அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அது ஊரை விட்டு அடித்து விரட்டப்பட்ட மகேந்திரன் என்பது தெரிய வந்தது.
வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்த மகேந்திரன், உயிரிழந்த சந்தோஷ் பிரியாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் வேறொரு இளைஞரை அவர் காதலிப்பதை அறிந்த மகேந்திரன், பயிற்சி வகுப்பில் இருந்து திரும்பிய சந்தோஷ் பிரியாவை இடைமறித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பிரியா அவனை ஓங்கி அறைந்துள்ளார்.
அதன் பின்னர் கோபத்தின் உச்சிக்கு சென்ற மகேந்திரன், பிரியாவை கொடூரமாக தாக்கி வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் மயக்கமடைந்த பிரியாவின் கை, கால்களை துப்பட்டாவால் கட்டி அருகில் இருந்த கிணற்றில் வீசி சென்றுள்ளார்.
இதனையடுத்து மகேந்திரனை கைது செய்த பொலிசார், அவர் மீது பலாத்காரம் மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.