கொலம்பியாவை சேர்ந்த திருநங்கை – திருநம்பி தம்பதி இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. டான்னா சுல்தானா ஒரு மொடல் ஆவார், ஆணாக பிறந்த இவர் இப்போது ஒரு பெண்ணாக மாறியுள்ளார், ஒரு திருநங்கை ஆவார்.
அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார், ஒரு திருநம்பி ஆவார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர்.
அவரது கணவர், எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியிருந்தாலும் அவரது உடலில் கர்ப்பம் தரிப்பதற்கான பெண்ணுறுப்புகளை அவர் அறுவைசிகிச்சை செய்து மாற்றிக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இதனையடுத்து, அவர் கர்ப்பமானார். தனது கணவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சுல்தானா சமூக வலைதளங்களில் பதிவிட்டும் இருந்தார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் பலரையும் குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.
அதேபோல, மருத்துவர்களும் இது எப்படி சாத்தியமானது என்று குழம்பி உள்ளனர். எனினும், சுல்தானா மற்றும் எஸ்டெபன் இருவருக்கும், இயற்கையான பிறப்பு உறுப்புகள் இருப்பதால், இந்த தம்பதியினர் தங்கள் குழந்தையை இயற்கையாக கருத்தரிக்க முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த போதிலும் சில உறுப்புகளை இயற்கை கொடுத்த முறையில் அப்படியே விட்டு மற்றாமல் இருந்ததால் அது சாத்தியமாகியுள்ளது. இது முதன்முறையல்ல என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, Tristan Reese மற்றும் Biff Chaplow தம்பதி இதே போல இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.
மூளைச்சாவடைந்த தனது மூன்று வயது குழந்தையின் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்றோர் வழங்கியது அனைவரையும் நெகிழவைத்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன்.
இவர் ஹிமாச்சல பிரதேசம் சிம்லா விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற மூன்று வயது குழந்தை இருந்தது.
இந்த குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைப் பார்த்து வந்துள்ளனர். பின்னர் சிறுமி ஆராதனாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இப்படி அடிக்கடி சிறுமிக்கு உடல் நலக்குறைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிறுமி சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து ஆராதனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்துள்ளார்.
இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உடனடியாக பெற்றோர்கள் சிறுமியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக மருத்துவர்களிடம் கூறினர்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என தெரிவித்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று (08.08) காலை 9.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டடிருந்தவர்கள் நாங்கள் நாட்டை துண்டாடவோ தனியரசோ கேட்கவில்லை இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே தான் கேட்கின்றோம்,
எங்கள் பூர்வீக காணி அனைத்தையும் விடுவி, கௌரவமான உரிமைகளுக்கான மக்கள் குரல், பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கு, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் 70க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
25 மாவட்டங்களையும் சேர்ந்த 44 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் சற்குணராசா புசாந்தன் யாழ் மாவட்டத்தை தனி ஒருவராக பிரதிநிதித்துவம் செய்தார்.
மூன்று பிரிவுகளில் (330 கிலோ Squat, 175 கிலோ Bench press, 261 கிலோ) நடைபெற்ற மூன்று போட்டியிலும் வென்று மூன்று தங்க பதக்கங்களை வெற்றி கொண்டார்.
இந்த போட்டியில் Deadlift மற்றும் Squat பிரிவில் புதிய சாதனையை நிலைநாட்டிய புசாந்தன், குறித்த போட்டியில் மட்டும் மொத்தமாக 766 கிலோ எடையை தூக்கியும் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எடை கொண்ட வீட்டு உபயோகத்திற்கான எரிவாயுவின் விலை 246 ரூபாவினால் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயுவின் விலை 99 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது. மேலும், 2.3 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது.
வடமாகாண இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பிரதேச செயலங்களில் கண்டன போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் இன்றைய தினம் (08.08) காலை 9.00 மணியளவில் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் கடந்த முப்பதாம் திகதி (30.07.2022) இரவு பொலிஸாரின் இந்த பழிவாங்கும் செயற்பாட்டை கண்டித்தே இப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலுவலக நடவடிக்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாதீர், அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைத்தவருக்கு எதிராக பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்,
இக்கட்டான சூழலிலும் இடையறாது பணியாற்றியவரை கேவலப்படுத்துவதா? போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பாதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்த்தில் ஈடுபட்டிருந்தனர்.
சினிமா என்றாலே நடிகைகளுக்கு ஏற்படும் கஷ்டங்களை தாண்டி திருமணமாகி கண்வர் குடும்பத்தினர் செய்யும் கண்டிஷன்களாலே சினிமாவை விட்டே வெளியேறி விடுகிறார்கள். அதையெல்லாம் பண்ணமுடியாது என்று கூறும் நடிகைகள் விவாகரத்து செய்து திருமணத்தை செய்து கொள்கின்றனர்.
அந்த நிலைக்கு தள்ளப்பட்டவர் தான் விஜே மகேஷ்வரி. விஜே பணியாற்றி பின் சின்னத்திரை சீரியலில் நடித்து வந்த விஜே மகேஷ்வரி. சாணகியன் என்பவரை சிறு வயதிலேயே திருமணம் செய்து 2010ல் கேசவ் என்கிற மகன் இருக்கும் நிலையில் விவாகரத்து செய்து பிரிந்தார்.
விவாகரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரையில் எங்கும் கூறாமல் இருந்த மகேஷ்வரி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார். தன் மகன் மற்றும் அம்மாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறேன். திருமணத்திற்கு பின் தன் கணவர் தன்னை மிகவும் அடிமையாக நடித்தியதாகவும், நண்பர்களுடன் பழகக்கூடாது, ஆண்களுடன் நடிக்கக்கூடாது என்று பல கண்டிஷன் களை போட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஒரு கட்டத்தில் சீரியலில் நடிப்பதையே நிறுத்த கூறி அதை மீறி நடிச்சா மானம் போய்விடும் என்று கணவர் வீட்டார் பிரச்சனை செய்தார்கள் என்றும் கூறியுள்ளார்.
கண்வர் இப்படி டார்ச்சர் செய்ததால் பணத்திற்காக சிரமம்பட்டேன் என்றும் தன் அம்மாவுக்கு கூட உதவி செய்யக்கூடாது என்று கூறினார்கள். அம்மாவும் நான் எங்கயாவது போய் வேலை பார்க்கிறேன் நீ வாழ்க்கையை பாரு என்று கூறினார்கள்.
இந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளியேறுவது என்று நினைத்து தான் விவாகரத்து முடிவை எடுத்ததாகவும் தற்போது நிம்மதியாக மகனுடன் சந்தோஷமாக இருப்பதாகவும் ஆதங்கத்துடன் கூறியுள்ளார் விஜே மகேஷ்வரி. சமீபத்தில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவியில் ஒருவராக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
குழந்தை நட்சத்திரமாக இருந்து 7ஓ கிளாக் என்ற கன்னட படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி மலையாளம், கன்னடம், தெலுங்கு என நடித்து வந்தவர் நடிகை நித்யா மேனன். நடிகர் சித்தார்த் நடிப்பில் நூற்றெண்பது படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.
அதன்பின் வெப்பம், மாலினி22 பழையகோட்டை போன்ற படங்களில் நடித்தார். தமிழில் ஒருசில படங்களில் நடித்த நித்யா மேனன், மெர்சல், காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, இருமுகன், சைக்கோ போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் ஆகஸ்ட் 18ல் வெளியாகவுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் காலில் அடிப்பட்டு வீல் சாரில் வந்து கலந்து கொண்டு ஷாக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி சமுகவலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது உண்மையில்லை என்று நித்யா மேனன் விளக்கம் அளித்திருந்தார். இந்த செய்தி வெளியாக சந்தோஷ் வர்க்கி என்ற நபர் தான் காரணமாம்.
நித்யா மேனன் மீது ஆசைப்பட்டதாகவும் 6 வருடங்களாக என்னை திருமணம் செய்து கொள்ளும் படி டார்ச்சர் செய்ததாகவும் கூறியுள்ளார். 30க்கும் மேற்பட்ட நம்பர்களை பிளாக் செய்துவிட்டேன், அதன்பின்பும் அந்த நபரின் டார்ச்சர் அடங்கவில்லை என்று புகாரளித்திருக்கிறாராம் நடிகை நித்யா மேனன்.
கர்நாடகா மாநிலம் மைசூரில் 3 பெண்களின் உடல்களை கால்வாயில் துண்டு துண்டாக வீசிய சீரியல் கொலைக்காரன் சிக்கியது எப்படி என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவருடன் அவரது காதலியும் பிடிபட்டார்.
கடந்த ஜூன் மாதம் மைசூர் அருகே உள்ள கால்வாய் ஒன்றில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதே போல் அங்கிருந்து சிறிது தூரத்தில் இன்னொரு கால்வாயில் இன்னொரு பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தலையில்லா உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நாளன்று ஒரு செல்போனின் சிக்னல் மட்டும் மைசூரிலிருந்து மாண்டியாவுக்கு சென்றதையும் அதே செல்போன் சிக்னல் மீண்டும் மைசூர் வந்ததையும் போலீஸார் கண்டறிந்தனர்.
போலீஸ் லத்திசார்ஜ் செல்போன் சிக்னல் இதையடுத்து அந்த செல்போன் சிக்னலை வைத்து பெங்களூரைச் சேர்ந்த சித்தலிங்கப்பா என்பது போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த சித்தலிங்கப்பா பல பெண்களுடன் நெருக்கமாக பழகி அவர்களுடன் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்ததும் தெரியவந்தது.
இவ்வாறு அவ்வப்போது புது புது பெண்களாக ஜாலியாக சுற்றி திரிந்து வந்ததும் தெரியவந்தது. சித்தலிங்கப்பா மேலும் சித்தலிங்கப்பாவுக்கு பாலியல் தொழிலாளிகளிடமும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. உல்லாசமாக இருக்க அப்பாவி பெண்கள் ஏதும் கிடைக்காத பட்சத்தில் பாலியல் தொழிலாளிகளிடம் சென்று தனது இச்சையை தீர்த்துக் கொள்வதும் அவரது வாடிக்கையாம்.
அந்த வகையில் பாலியல் தொழிலாளியான சந்திரகலா என்பவருடன் சித்தலிங்கப்பா நெருக்கமாக இருந்துள்ளார். அவ்வாறு அந்த பெண்ணை பார்க்க அவ்வப்போது சென்றதால் காதல் மலர்ந்தது. இதையடுத்து பாலியல் தொழிலாளியாக ஏன் இருக்கிறாய் என கேட்டதற்கு என்னை பல பெண்கள் ஏமாற்றி இந்த தொழிலில் தள்ளிவிட்டதாக சந்திரகலா தெரிவித்திருந்தார்.
இதனால் இருவரும் சேர்ந்து பெண்களை கொல்ல திட்டமிட்டிருந்தனர். சித்ரதுர்கா அந்த வகையில் சித்ரதுர்கா மாவட்டம் சாம்ராஜ்நகரை சேர்ந்த சித்தம்மா மற்றும் ஹோசதுர்காவை சேர்ந்த பார்வதி ஆகியோரை சந்திரகலா மைசூரில் தான் தங்கியிருந்த மெடாகள்ளி என்ற பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அவர்களுக்கு மைசூரு நகரத்தை சுற்றி காண்பித்துள்ளார். அடுத்த நாள் இரவு சந்திரகலாவும் சித்தலிங்கப்பாவும் அந்த இரு பெண்களுக்கும் மயக்க மருந்து கொடுத்தனர். உல்லாசம் இதையடுத்து அவர்களுடன் சித்தலிங்கப்பா உல்லாசம் அனுபவித்துள்ளார்.
பின்னர் இருவரும் சேர்ந்து அந்த இரு பெண்களின் கழுத்தையும் வெட்டியுள்ளனர். அந்த தலையில்லாத உடல்களை இரு கவர்களில் போட்டு அதை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர். அப்போது ஒரு உடலை பாண்டவபுரம் கால்வாய் அருகேயும் இன்னொன்றை அரகேரி கால்வாய் அருகேயும் வீசிவிட்டு வீடுதிரும்பினர்.
அடுத்த வீடு இதையடுத்து பெங்களூரில் அடுகோடி எனும் இடத்தில் சித்தலிங்கப்பாவும் சந்திரகலாவும் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குமுதா என்ற பெண்ணையும் மேற்கண்ட பாணியில் கொலை செய்துள்ளனர். அந்த பெண் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு தும்கூர் தாபத்பேட்டையில் மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.
5 பெண்களை கொல்ல திட்டம் அப்போதுதான் அவர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் 5 பெண்களை கொலை செய்வதற்காக பெயர் பட்டியலையும் சித்தலிங்கப்பாவும் சந்திரகலாவும் தயாரித்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. காவல் துறை அவர்கள் இருவரையும் சரியான நேரத்தில் கைது செய்திருக்காவிட்டால் மேலும் 5 பெண்களின் உயிர் பறிபோயிருக்கும்.
கோவையில் கஞ்சா செடி வளர்த்த வட இந்தியரை போலிஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம், கணேசபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது வட இந்திய இளைஞர் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை விற்பதை போலிஸார் கண்டனர். உடனே அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்தபோது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரபீன்ந்தர பரிடா என தெரியவந்தது.
மேலும் ரபீன்ந்தர பரிடா 7 ஆண்டுகளாக அதே பகுதியில் தங்கி ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இதில் அவருக்கு போதிய ஊதியம் கிடைக்கவில்லை. இதனால் அவர் தான் தங்கியுள்ள வீட்டின் அருகே கஞ்சா செடியை வளர்த்து வந்தது விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து போலிஸார் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது கஞ்சா செடி இருந்தை உறுதி செய்தனர். பின்னர் போலிஸார் அந்த கஞ்சா செடியை அழித்தனர். பிறகு வட இந்தியர் ரபீந்த்ர பரிடாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவருடன் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Google Map செயலியைப் பயன்படுத்தி கார் ஓட்டிச் சென்றவர் ஆற்று ஓடையில் சிக்கிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. நாம் ஒரு இடத்திற்குச் செல்லும்போது வழி தெரியவில்லை என்றால் சாலையில் இருப்பவர்களிடம் கேட்டுக் கேட்டு செல்வோம். ஆனால் இப்போது நாம் Google Map உதவியை நாடுகிறோம்.
இப்படி Google Map-ஐ பயன்படுத்திப் பயணிக்கும்போது சில நேரங்களில் தவறான வழியைக் காட்டி, செல்ல வேண்டிய இடத்திற்குப் பதில் வேறு இடத்திற்குச் சென்ற சம்பவம் நம்மில் சிலருக்கு நடத்திருக்கும். அப்படி Google Map பயன்படுத்தி கார் ஓட்டிச் சென்ற ஒருவருக்கு மோசமான ஒரு சம்பவம் சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் திருவல்லா கும்பநாடு பகுதியைச் சேர்ந்தவர் சோனியா. இவரது தாயார் சோஷாம்மா, உறவினர் அனீஷ் மற்றும் 3 மாத கைக்குழந்தை ஆகிய அனைவரும் எர்ணாகுளத்தில் இருந்து திருவல்லா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
இவர்களுக்கு சரியான வழி தெரியாததால் Google Mapஐ பயன்படுத்திச் சென்றனர். அண்மையில் பெய்த மழையால் அவர் சென்ற பாதை முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அவர்களுக்கு சாலை முழுமையாகத் தெரிவில்லை.
மேலும் google map-யை நம்பி அவர்கள் அதேபாதையில் காரில்சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் காரில் இருந்த அனைவரும் அலறியுள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு சாலையோரம் இருந்த ஆற்று ஓடையில் கார் இறங்கியது தெரிந்தது.
பின்னர் இவர்கள் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் உடனே காரில் இருந்தவர்களைப் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஓடையில் இருந்து காரை வெளியே எடுத்தனர்.
இதேபோன்று கடந்த மே மாதம் கர்நாடகாவிலிருந்து சுற்றுலா வந்த குடும்பம் google map-யை பயன்படுத்தி சாரில் பயணம் செய்தபோது குருப்ந்தரா பகுதியில் ஓடைக்குள் கார் இறங்கிய சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி google map-யை பயன்படுத்தி செல்வர்கள் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது
ஈரோடு அருகே 60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த கணவனின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் மனைவி உயிரிழந்த சம்பவம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துச்சாமி – ஐயம்மாள் தம்பதி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அவர் வீட்டில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் முத்துச்சாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வபோது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வீட்டில் தீவிர மோசமான நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று முத்துச்சாமி வயது மூப்புக்காரனமாக பரிதாப உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி, தனது கணவர் உயிரிழந்த சோகத்தில் மூழ்கினார். தொடர்ந்து அழுதுகொண்டிருந்த ஐயம்மாள் திடீரென கணவர் உடல் மேல் சாய்ந்து மயங்கி விழுந்தார்.
மயங்கிய ஐயம்மாளை அருகில் இருந்த மகன் எழுப்ப முயன்றபோது, அவரும் உயிரிழந்துள்ளார். பின்னர் கணவன் மனைவி இருவருக்கும் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட ஊர்வலமாகச் சென்ற பின்னர் ஒரே தகன மேடையில் எரியுட்டப்பட்டனர்.
60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த கணவனின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் மனைவி உயிரிழந்த சம்பவம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர் அருகே 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த துபாய் இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர் அருகே 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த துபாய் இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குன்றத்தூர் அருகே மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர் மாங்காடு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் மாங்காடு இன்ஸ்பெக்டர் ராஜி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில் காணாமல் போன 16 வயது சிறுமியை தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் பிடித்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் சிறுமியை அழைத்து சென்ற ஸ்ரீதரன் திருமணம் செய்து கொண்டதால் இந்த வழக்கை போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீஸ் விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீதர் துபாயில் ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டதால் துபாயில் இருந்து தமிழகத்திற்கு வந்த அவர், சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீதரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். துபாயில் வேலை செய்தவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலால் சென்னைக்கு வந்து சிறுமியை திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உறவினர்களுடன் சேர்ந்து கணவனை மனைவி அடித்துக் கொலை செய்து விட்டு அந்த பழியை மகன் மீது சுமத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சத்திரப்பட்டி முல்லை நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஓமந்தூரார். இவர் கேரளாவில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பாண்டீஸ்வரி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ஓமந்தூரானுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதை பார்த்த அவரது 15 வயது மகன் வேதனையடைந்து இது குறித்து தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஓமந்தூரான் குடித்து விட்டு மனைவி மற்றும் மகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் மனைவி பெயரில் இருக்கும் வீட்டை தன் பெயருக்கு மாற்றித் தருமாறு கேட்டு மிரட்டி இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி ஓமந்தூரான் மீண்டம் மது குடித்து விட்டு தகராறு செய்ததால், அவரது மகன் ஆத்திரமடைந்துள்ளார். வீட்டில் இருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து ஓமந்தூரானின் தலையில் தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிரிக்கெட் பேட்டுடன் போலீஸ் நிலையம் சென்ற சிறுவன் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் ஓமந்தூரானின் மரணத்தில் வேறு சிலருக்கும் சம்பந்தம் இருப்பதாக சந்தேகப்பட்ட அவரது தந்தை ராமசாமி போலீசில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து மறு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ஓமந்தூரான் மனைவி பாண்டீஸ்வரி, அவரது உறவினர் கிருஷ்ணவேணி, லட்சுமி, ராமையா ஆகிய நான்கு 4 பேர் கூடுதலாக சிக்கி இருக்கிறார்கள். கூட்டு சதி செய்து ஓமந்தூரானை கொலை செய்த இவர்கள், 15 வயதே ஆன ஓமந்தூரானின் மகனிடம் பழியை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுள்ளனர்.
மைனர் என்பதால் அவருக்கு தண்டனை குறைவு என்றும், மீதி 4 பேரும் தப்பித்துக் கொள்ளலாம் என்றும் திட்டமிட்டுள்ளனர். மகனின் கல்வியையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளாத பாண்டீஸ்வரி இந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
தற்போது சிறுவன் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது தாய் உள்ளிட்ட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நபர் ஒருவர் வீடியோ ஒன்றை பார்த்ததன் மூலம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்தவர் பவாராம். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தொழிலாளியாக சொற்ப சம்பளத்தில் வேலை செய்து வந்தார்.
வருமானம் மிக குறைவாக வந்த வேலையை விட்டுவிடலாம் என அவர் நினைக்கும் போதெல்லாம் இந்த வேலையையும் விட்டால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்ய முடியும் என நினைத்து தொடர்ந்து அந்த வேலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் யூடியூப்பில் பவாராம் எதேச்சியாக பார்த்த வீடியோ அவரை கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது. ஆம்! தைவானின் ரெட் லேடி வகை பப்பாளி சாகுபடி பற்றிய வீடியோ தான் அது! அதிக விளைச்சல் தரும் பப்பாளி வகைகளில் இதுவும் ஒன்று.
அதுவும் குறைந்த செலவில் நல்ல லாபம் பார்க்கலாம். இதையடுத்து களத்தில் உற்சாகத்துடன் இறங்கினார் பவாராம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2.5 ஏக்கரில் பப்பாளி சாகுபடியை தொடங்கினார்.
தண்ணீர் பயன்பாட்டை குறைக்க சொட்டுநீர் முறையை பின்பற்றினார். இதோடு கரிம உரங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பிறகு, ஆறு மாதங்களுக்குள் பயிர் அறுவடை செய்யப்பட்டது.
விளைச்சல் நினைத்ததை விட அதிகமாக பணம் கொட்ட தொடங்கியது பவாராமுக்கு. இந்த வகை பப்பாளியின் சுவையை மக்கள் விரும்புவதால், ஒரு நாளைக்கு 5 குவிண்டால் வரை பப்பாளி விற்பனை செய்வதாக அவர் கூறுகிறார்.
வெறும் 25 ரூபாய் விலையுள்ள ஒரு செடி தன்னை எதிர்பாராமல் பணக்காரராக்கிவிட்டதாக சொல்கிறார் பவாராம். பவாராமின் வெற்றிக்கதையை அறிந்த பல விவசாயிகள் அவரிடம் ஆலோசனை பெற்றுள்ளனர்.
மலைப்பாம்பின் பிடியில் சிக்கிய வளர்ப்பு நாயை மூன்று சிறுவர்கள் துணிச்சலாக போராடி காப்பாற்றும் வீடியோ வைரலாகியுள்ளது.
குறிப்பிட்ட அந்த வீடியோவில் மலைப்பாம்பு நாயின் பின்னங்காலை சுற்றி வளைத்து பிடித்து இறுக்குகிறது. கையில் இரும்பு தடி எடுத்து வந்த சிறுவன், மலைப்பாம்பின் தலைப்பகுதியை புல்வெளியை நோக்கி அமுக்கி பிடித்து கொள்கிறார்.
மற்ற இரண்டு சிறுவர்களும், மலைப்பாம்பின் பிடியில் இருந்து நாயை விடுவிக்க உதவுகின்றனர். இந்தச் சம்பவத்தால் நாய் சற்றுக் குழப்பமடைந்ததாகத் தெரிகிறது. இருப்பினும் எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், அந்த சூழ்நிலையிலிருந்து நாய்க்கு உதவுவதில் மூன்று சிறுவர்களும் மிகுந்த தைரியத்தை வெளிப்படுத்தினர்.
மலைப்பாம்பின் தலை,வால் என சிறுவர்கள் தங்கள் கைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில், மரண பிடியில் இருந்த நாயை மீட்டனர்.
ஒருவழியாக எவ்வித காயமின்றி நாய் உயிர் தப்பியது. அதற்கு பிறகு அந்த மலைப்பாம்பிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது பகிரப்பட்டு வருகிறது.