நாளை முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைகின்றது!!

லிட்ரோ எரிவாயு..

எதிர்வரும் திங்கட்கிழமை (08-08-2022) நள்ளிரவு முதல் திரவ பெற்றோலிய எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவுக்கு மேல் குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஒரு கோப்பை சாதாரண தேநீர் மற்றும் ஒரு பொதி அரிசியின் விலைகளையும் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவில் 22 வயது யுவதியை காணவில்லை!!

சிவகரன் ஜெயலக்சனா..

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

22 வயதுடைய குறித்த யுவதி வீட்டில் இருந்து காணாமல் போன போது சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றிருக்கிறார். சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27.07.2022 முதல் காணாமல் போன நிலையில்,

பொலிஸ் முறைப்பாடு செய்தும் இதுவரை யுவதி கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே யுவதியை கண்டவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் நானாட்டான் வீதியில் பயங்கர கார் விபத்து!!

விபத்து..

நானாட்டான் முருங்கன் வீதியில் சுற்று வட்டத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள மின் கம்பம் ஒன்றில் மோட்டார் கார் ஒன்று மோதுண்டு அந்த மின்கம்பம் இரண்டாக சரிந்துள்ளது.

இதன்போது இந்த காரில் பயணம் செய்தவர்களுக்கு எவ்வித உயிர் ஆபத்தும் ஏற்படவில்லை. மேலும், காரின் முன் பகுதியும் பாரிய சேதம் ஏற்பட்டது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் கொங்கொங் நாட்டில் பரிதாபமாக உயிரிழப்பு!!

திலிபன் பவானி..

யாழ்ப்பாணம் நெல்லியடி வதிரிப் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் ஹாங்காங் நாட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் ஹாங்காங் எனும் இடத்தில வசித்து வந்த யாழ்.நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் புற்று நோய் காரணமாக நேற்று உயிரிழந்தார் என யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த திருமதி திலிபன் பவானி வயது 41 என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹாங்காங் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் புற்று நோய் காரணமாக சிசிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளம் வயதில் உயிரிழந்தமை உறவினர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏமாற்றப்பட்ட இலங்கைப் பெண் : சாதிக்க டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு கைக் குழந்தையுடன் வந்த ஆச்சரியம்!!

இலங்கைப் பெண்..

பிரபல ரிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் இலங்கைப் பெண் கலந்து கொண்டுள்ளார். இந்தியர் ஒருவரை திருமணம் முடித்து குழந்தையுடன் கைவிட்டு சென்ற நிலையில் தனியாக வாழ்க்கையில் போராடி கொண்டிருக்கின்றார்.

திருமணத்திற்கு முன்பு விட்ட நடனம் தற்போது கை கொடுக்கும் என்று நம்பி சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அது மட்டும் இல்லை, நடுவர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அனைவரும் குறித்த பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒரு மணிநேர மின்வெட்டு!!

மின்வெட்டு..

எதிர்வரும் 10ஆம் திகதி வரை இலங்கையில் ஒரு மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, U, V, W ஆகிய பிரிவுகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மின் கட்டண அலகுகளின் அதிகரிப்பு விபரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம் காரணமாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்கப்படுமா என திறைசேரியிடம் வினவிய போதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர் மின் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க முடிந்தால் தினசரி மின்வெட்டை நிறுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேளதாளத்துடன் நடனமாடி மனைவியை அடக்கம் செய்த கணவன் : நெகிழ வைக்கும் காரணம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் மனைவியின் ஆசைப்படி இறுதி ஊர்வலத்தை மேளதாளத்துடன் கணவர் பிரம்மாண்டமாக நடத்திய சம்பவத்தின் மனதை நெகிழவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஒளிப்படக் கலைஞரான ஸ்ரீநாத் சோலங்கி (30). இவரும் மோனிகா என்ற பெண்ணும் கடந்த 2017ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு கருவுற்ற மோனிகா, வளைகாப்பு முடித்து தன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

9 மாத கர்ப்பிணியான அவருக்குத் திடீரென உடல்நலம் சரியில்லாமல் போகவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின்னர் குழந்தை வயிற்றில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட பின்னர் தாயும், சேயும் உயிரிழந்தன.

இதையடுத்து மனைவியின் இறுதி ஊர்வலத்தை மேளதாளத்துடன் பிரம்மாண்டமாக ஸ்ரீநாத் நடத்தியுள்ளார். இது குறித்து ஸ்ரீநாத் கூறுகையில், ஒருமுறை நானும் மோனிகாவும் கேலியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, நான் போன பிறகு நீ அழுவாய் என்று கேலியாகச் சொன்னேன்.

அப்போது அவள், ‘நான் உனக்கு முன்னாலேயே போகிறேன். ஆனால், நான் போகும்போது நீ அழக்கூடாது. திருமணத்தில் டிரம்ஸ், பேண்ட் வாசிப்பதைப் போல, நான் போகும்போதும் வாசித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றாள்.

மோனிகா மரணத்தின்போது எனக்கு அது நினைவுக்கு வந்தது. அதனால், என் மனைவி மோனிகா மற்றும் பிறந்து இறந்த பெண் குழந்தையின் இறுதிச் சடங்கை பேண்ட் வாத்தியங்களோடு நடத்துவது என்று முடிவெடுத்தேன்.

திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தோம். நாங்கள் எதிர்பார்த்தைப் போலவே, கடவுள் எங்களுக்குப் பெண் குழந்தையைக் கொடுத்தார். ஆனால், அவளால் இந்தப் பூமியில் 3-4 நிமிடங்களே சுவாசிக்க முடிந்தது.

நான் இல்லாமல் போனால் தான் உனக்குப் புரியும் என்று சொல்வாள். என்னால் அதைத் தாங்கவே முடியாது. இந்த மாதிரி பேசுவதை நிறுத்தச் சொல்வேன். அப்போதுகூட ஒருமுறை, டியர் என்று கூப்பிட்டு, நான் இறந்தால் இசை வாத்தியங்களோடு, நீ ஆடிக் கொண்டே என் உடலைச் சுடுகாடு வரை எடுத்துப் போக வேண்டும் என்று கூறினாள் என உருக்கமாக முடித்தார் ஸ்ரீகாந்த்.

42 அடியில் நகம்… கின்னஸ் சாதனை படைத்த பெண்ணின் உருக்கமான சபதம்!!

அமெரிக்காவின்..

இந்த உலகை சுற்றி ஏராளமான சாதனைகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. பலரும் கின்னஸ் சாதனைக்காக பல் விஷயங்களை செய்து வருகின்றனர்.

அதன்படி, அமெரிக்காவின் Minnesota என்னும் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், இரண்டு கைகளில் மிக நீளமான விரல் நகங்களை வளர்த்து சாதனை ஒன்றை முறியடித்து, புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்த டயானா ஆம்ஸ்ட்ராங் என்ற பெண்ணின் கைகளில் உள்ள பத்து விரல் நகங்களின் நீளம் 42 அடியும், 10.4 இன்ச்கள் கொண்டுள்ளது.

இதில் டயானாவின் நீளமான நகம் என்பது அவரது வலது கட்டைவிரல் (4 அடி 6.7 இன்ச்) ஆகும். மேலும், டயானாவின் விரல் நகங்களின் ஒட்டுமொத்த நீளம் என்பது, ஒரு நிலையான மஞ்சள் நிறத்தில் உள்ள பள்ளி பேருந்தை விட நீளமானதாகும்.

கடந்த 25 ஆண்டுகளாக டயானா தன்னுடைய நகத்தினை வளர்த்து வருகிறார். பலரும் உலக சாதனையை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இப்படி ஏதாவது செய்வார்கள்.

ஆனால், டயானாவின் சாதனைக்கு பின்னால், உருக்கமான சபதம் தான் உள்ளது. அதன்படி, ஒரு நாள் இரவு தூக்கத்திலேயே ஆஸ்த்மா நோயால் அவர் உயிரிழந்து போனார்.

அதற்கு முந்தைய தினம் இரவு கூட எனது நகத்தை சுத்தம் செய்து அவர் பாலிஷ் செய்து கொடுத்தார். இதனால் மகளின் இறப்புக்கு பின் என் நகத்தை வெட்டவே கூடாது என்று நான் சபதம் எடுத்தேன்.

இது என் வாழ்க்கையின் கொடுமையான நாள். தொடர்ந்து என் நகம் வளர்ந்துகொண்டே போகும் போது எனது குழந்தைகள் நகம் வெட்ட வேண்டும் என கூறினார்கள். ஆனால், முதலில் ஏன் நான் நகங்களை வளர்க்கிறேன் என்ற காரணத்தை அவர்களிடம் சொல்லவே இல்லை.

அதன்பின், ஒரு நாள், நான் எனது குழந்தைகளிடம் ஏன் நகம் வளர்க்கிறேன் என்பதை விளக்கினேன்என டயானா உருக்கத்துடன் பேசி இருக்கிறார். சாதனைக்காக இல்லாமல், மகள் இறந்ததன் சபதத்தால் நகம் வளர்த்தி சாதனை தொடர்பான செய்தி, பலரையும் உருக வைத்துள்ளது.

‘என் கணவருக்கு 3 துணைவிகள் வேணும்’ அவங்களோட சண்டை போட மாட்டேன்” .‌. இணையத்தில் சுயம்வரம் நடத்தும் மனைவி!!

தாய்லாந்தில்..

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவருக்காக மூன்று துணைகளை தேடி வரும் சம்பவம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தாய்லாந்து நாட்டின் பாங்காக் பகுதியை சேர்ந்தவர் Pattheema. இவர் தான், தனது கணவருக்கு மூன்று துணைவிகள் வேண்டும் என தற்போது இணையத்தில் தேடி வருகிறார்.

இது குறித்து அந்த பெண் பகிர்ந்த தகவலின் படி, “ஒரு சில நிபந்தனைகள் மட்டும் தான். பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும். படித்திருக்க வேண்டும். மூன்று பெண்களுக்கும் மாதம் சுமார், £342 சம்பளம் (இந்திய மதிப்பில் 33 ஆயிரம் ரூபாய்) வழங்கலாம்.

இரண்டு பேர் எனது கணவனின் அலுவலக பணிகளில் உள்ள வேலைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். மற்றொருவர் என்னையும் எனது கணவர் மற்றும் குழந்தைகளையும் நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும்” என Pattheema குறிப்பிட்டுள்ளார்.

 

அது மட்டுமில்லாமல், அந்த மூன்று பெண்களிடமும் தான் நிச்சயம் சண்டை போட மாட்டேன் என உத்தரவாதம் தருவதாகவும், எனது கணவரே அவர் யாருடன் தூங்க வேண்டும் அல்லது தங்க வேண்டும் என்பதை தேர்வு செய்வார் என்றும் Pattheema கூறி உள்ளார்.

தன் சொந்த மனைவியே தனது கணவருக்காக மூன்று துணைவிகளை ஆன்லைனில் தேடி வரும் சம்பவம் அதிகம் பேசுபொருளாக மாறி இருந்தது. ஆனால் ஏன் அப்படி தனது கணவருக்காக மூன்று பெண்களை Pattheema தேடிக் கொண்டிருக்கிறார் என்பதையும் அவர் விளக்கி உள்ளார்.

Pattheema மற்றும் அவரது கணவர் இணைந்து, பிசினஸ் ஒன்றை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில், நீண்ட நாட்களாக தொடர்ந்து மன அழுத்தத்தின் மூலம் Pattheema அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், தனது கணவருடன் அவரால் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை என்றும், அவருடன் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தன்னால் தனது கணவரை சிறந்த முறையில் பார்த்துக் கொள்ள முடியாது என Pattheema-வுக்கு தோன்றிய பிறகு தான், அதற்காக மூன்று பெண்களை தேர்ந்தெடுத்து கணவரின் துணைவியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் முடிவு செய்துள்ளார்.

அப்படி தேர்வு ஆகும் பெண்கள், தனது கணவருடன் மிகச் சிறந்த முறையில் நேரத்தை கழிக்க வேண்டும் என்றும் அவருக்கு மிகவும் உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதும் தான், Pattheema-வின் விருப்பமாக உள்ளது.

இது பற்றி பேசும் அவரது கணவர், முதலில் எனது மனைவியின் முடிவைக் கேட்டு சற்று அதிர்ச்சி அடைந்தேன் என்றும், ஆனால் எனது மனைவி இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளதால் அதனை நான் நிராகரிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 3 துணைவிகளை கணவருக்காக தேடி வரும் Pattheema, இதுவரை இரண்டு பேரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

‘திருமணத்திற்கு வந்தவங்க எல்லாம் சாப்பாட்டுக்கு காசு கொடுத்துடனும்”.. அதிர வைத்த மணப்பெண்!!

திருமணத்தில்..

தனது திருமணத்தில் விருந்தினர்களிடம் சாப்பாட்டுக்கு பணம் வசூல் செய்ய இருப்பதாக ஒரு பெண் தெரிவித்திருக்கிறார். அவருடைய பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காலம் காலமாக திருமணம் என்றாலே வித்தியாசமான பதார்த்தங்களுடன் கூடிய விருந்துகள் நடைபெறுவது நம் நாட்டில் இருந்து வந்திருக்கிறது. இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் திருமணத்தன்று ஆடிப்பாடி, விதவிதமான உணவுகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிமாறுவது வழக்கமாகிவிட்டது.

ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கிய தருணமாக கருதப்படும் திருமணத்தில் என்னென்ன வகையான உணவுகள் பரிமாறப்பட வேண்டும் என்ற பட்டியல் கல்யாணத்திற்கு பல மாதங்கள் முன்பே திட்டமிடப்பட்டுவிடும்.

ஆனால் இதற்கு ஆகும் செலவுகள் மிக அதிகமானவை. இதனாலேயே எளிமையான முறையில் திருமணத்தை நடத்த தற்போது பெரும்பாலானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், புதுமணப்பெண் ஒருவர் வித்தியாசமான யோசனையை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட அது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அந்த இளம்பெண், திருமணத்துக்கான செலவுகளை கட்டுப்படுத்த இருப்பதாகவும் அதனால் திருமணத்தில் கலந்துகொள்ளும் உறவினர்களிடம் உணவுக்கான தொகையை வாங்கலாமா என யோசிப்பதாகவும் கூறியுள்ளார்.

அவருடைய பதிவில்,”விருந்தினர்கள் தங்கள் உணவுக்கு பணம் செலுத்துமாறு யாராவது இதற்கு முன்னர் கேட்டிருக்கிறார்களா? தற்போது எல்லாம் மிகவும் விலை உயர்ந்துவிட்டது. அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் எங்களது திருமணத்தை ஒத்திவைக்கவோ, விருந்தினர் பகுதியை ரத்து செய்யவோ வேண்டும்.

அல்லது பரிசுகளுக்குப் பதிலாக உணவுக்கு பணம் செலுத்துமாறு உறவினர்களிடம் சொல்ல இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ள அவர்,”இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன்.

யாராவது எனக்கு ஆலோசனை கூறுங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதனிடையே நெட்டிசன்கள் பல ஆலோசனைகளை அந்த பெண்ணுக்கு வழங்கி வருகின்றனர். ஒருவர் அந்த பதிவில்,”தனிப்பட்ட முறையில் என்னிடம் யாராவது பரிசுகளுக்கு பதிலாக விருந்து உணவுக்கு பணம் கொடுக்க சொன்னால் மகிழ்ச்சியுடன் கொடுப்பேன்.

ஏனென்றால், மக்கள் சொந்த பந்தங்களுடன் நேரத்தை செலவிடவே திருமணங்களுக்கு வருகின்றனர். அப்போது பணம் பெரிய விஷயமாக கருதப்பட மாட்டாது” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர்,”பரிசுகள் எதிர்பார்க்காத நிலையில், நீங்கள் விருந்துக்கு பணம் வசூலிப்பதில் தவறு இல்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இப்படி பல ஆலோசனைகளை நெட்டிசன்கள் அந்த பெண்ணுக்கு வழங்கி வருகின்றனர்.

தாய் இறந்தது தெரியாமல் தாயின் மீது படுத்திருந்த பச்சிளம் குழந்தை : இரயில் நிலையத்தில் சோகம்!!

இரயில் நிலையத்தில்..

இரயில் நிலையத்தில் தாய் இறந்தது கூட தெரியாமல், 3 வயது குழந்தை பசியால் அழுதுகொண்டிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியிலுள்ள இரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் படுத்துகிடந்துள்ளார்.

அப்போது அவரது 3 வயது குழந்தை அழுதபடியே அங்கும் இங்கு திரிந்துள்ளார். இதனை நீண்ட நேரமாக கண்காணித்த சில அதிகாரிகள் அந்த பெண்ணை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால் அந்த பெண் எழுந்திருக்கவில்லை.

பிறகு தண்ணீர் தெளித்தும் எழுப்பி பார்த்தபோது எழுந்திருக்காததால், மருத்துவர்கள் வந்து சோதனை செய்தனர். அப்போது அவர் உயிரிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை மீட்ட அதிகாரிகள், பிணவறையில் சுமார் 72 மணி நேரம் வைத்திருந்தனர்.

அந்த பெண்ணை தேடி யாரேனும் வருவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை தேடி யாரும் வரவில்லை என்பதால் அவரது உடலை அதிகாரிகள் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, இறுதிச்சடங்கு நடத்தி முடித்தனர். இதனிடையே அழுது கொண்டிருந்த அந்த குழந்தையை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “அந்த பெண்ணை பரிசோதனை செய்ததில், அவர் இருந்திருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த சிறுவனை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தோம். அந்த பெண்ணை தேடி யாரேனும் வருவார் என்று அவரது உடலை அடக்கம் செய்யாமல் வைத்திருந்தோம்.

ஆனால் யாரும் வரவில்லை என்பதால் நாங்களே இறுதிச்சடங்கை செய்து முடித்து விட்டோம். தற்போது இந்த பெண் மற்றும் காப்பகத்தில் இருக்கும் சிறுவன் குறித்து விசாரணை செய்து வருகிறோம். மேலும், அவர்களது புகைப்படங்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது.

அதோடு அந்த பெண்ணும், அவரது குழந்தையும் பாகல்பூர் இரயில் நிலையத்திற்கு எந்த இரயிலில் வந்து இறங்கினர் என்பதை அறிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்” என்றனர். தாய் இறந்தது கூட தெரியாமல், 3 வயது குழந்தை பசியால் அழுதுகொண்டிருந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை காணவில்லை என்று போலீசில் புகாரளித்த மனைவி : விசாரணைல வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

உத்திர பிரதேசத்தில்..

உத்திர பிரதேச மாநிலத்தில் காணாமல்போனதாக சொல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரப் பிரதேசத்தின் மோடி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனுஜ் குமார். 27 வயதான இவருக்கு திருமணமாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதிமுதல் தனது கணவரை காணவில்லை என அனுஜ் குமாரின் மனைவி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இதனிடையே காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்திருக்கின்றனர். இதனிடையே கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று நிவாரி என்ற பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் அனுஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய காவல்துறையினர், இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, அனுஜ்-ன் தாய் மற்றும் சகோதரர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக காவல்துறையினரிடத்தில் தெரிவித்திருக்கிறார் அனுஜின் மனைவி.

இதனையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. அனுஜின் தாயாருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரா என்பவருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இது அனுஜுக்கு தெரியவரவே அவர் இதுபற்றி தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அனுஜ்-ன் தாயார், அவரது இளைய மகன் அபிஷேக் மற்றும் தேவேந்திரா ஆகியோர் அனுஜை கொலை செய்து, உடலை நிவாரி பகுதியில் வீசியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முதல் தகவல் அறிக்கையில் அனுஜ்-ன் தாயார் மற்றும் அபிஷேக், தேவேந்திரா ஆகியோரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனுஜ்-ன் தாயார் அவரது இளைய மகன் ஆகியோரை காவல்துறை கைது செய்திருக்கிறது. இதுகுறித்து பேசிய அந்த பகுதி எஸ்.பி இராஜ் ராஜா,”அனுஜ் கொலை வழக்கில் அவரது தாயார் மற்றும் இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள தேவேந்திராவை பிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

6 வயதில் காணாமல்போன சிறுமி 9 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு : கண் கலங்க வைக்கும் சம்பவம்!!

மும்பையில்..

6 வயதில் காணாமல்போன சிறுமி 9 வருடம் 7 மாதங்களுக்கு பிறகு 16 வயது சிறுமியாக அவர் தாயிடம் சேர்ந்துள்ளது அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் கடந்த 2013ம் ஆண்டு பள்ளிக்கு சென்ற 6 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் போலிஸில் புகார் அளித்தனர். அதன்படி போலிஸாரும் வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

சிறுமியின் புகைப்படங்களை பல்வேறு இடங்களில் ஒட்டியும், செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்ததும் கிடைக்காததால் போலிஸாரும் தேடுதலை நிறுத்தியுள்ளனர். இந்த சூழலில் சிறுமி காணாமல் போய் சில ஆண்டுகளில் காணாமல் போன சிறுமியின் தந்தையும் இறந்துள்ளார்.

இந்த நிலையில், சிறுமி காணாமல் போய் 9 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சிறுமி வீட்டின் 500 மீட்டர் தொலைவில் கண்டறியப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் போலிஸார் நடத்திய விசாரணையில், சிறுமி வசித்த பகுதியில் இருந்த குழந்தை இல்லாத தம்பதியினர் குழந்தையை திருடியது தெரியவந்தது. பின்னர் சிறுமியை போலிஸார் மற்றும் பெற்றோர் தேடுவதை அறிந்த அவர்கள் சிறுமியை தாங்கள் சொந்த ஊரான கர்நாடகத்தில் உள்ள ஒரு காப்பகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

பின்னர் 2016ம் ஆண்டு அந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனால் இரு குழந்தைகளை பார்த்துக்கொள்ள முடியாததால் சில ஆண்டுகளுக்கு பின்னர் அந்த சிறுமியை மீண்டும் மும்பைக்கு அழைத்து அங்கு குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு அந்த சிறுமியை அனுப்பியுள்ளனர்.

இப்போது சிறுமி சற்று வளர்ந்து விட்டதால் அங்கு யாருக்கும் அவரை அடையாளம் தெரியாமல் இருந்துள்ளது. இதன்பின்னர் சிறுமியின் மாமா ஒருவர் எதேச்சையாக சிறுமியை பார்க்கும்போது தனக்கு தெரிந்தவர் போல உணர்ந்ததால் சிறுமியின் தாய்,தந்தை புகைப்படங்களை சிறுமியிடம் காட்டியுள்ளார்.

அப்போது அதை சிறுமியால் நினைவுகூர முடிந்ததால் அவர் அந்த சிறுமி காணாமல் போன சிறுமிதான் என்பதை அவர் கண்டுபிடித்துள்ளார். பின்னர் இந்த தகவல் சிறுமியின் தாய்க்கு தகவல் தரப்பட்டுள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகளை நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்தித்துள்ளார்.

உடனே போலிஸுக்கு தகவல் தரப்பட சிறுமியை கடத்தியவர்கள் கைது செய்யபட்டுள்ளனர். 6 வயதில் காணாமல்போன சிறுமி 9 வருடங்களுக்கு பிறகு 16 வயது சிறுமியாக அவர் தாயிடம் சேர்ந்துள்ளது அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

சேலம்..

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே பாலப்பட்டியில் குறை பிரசவத்தில் பிறந்த இரண்டு பச்சிளம் பெண் குழந்தைகளோடு விவசாய கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே எருமப்பட்டி ஊராட்சி, பாலப்பட்டி சேர்ந்தவர் சபரீஷ் (30). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சரளா (28) என்கின்ற பெண்ணுடன் பத்தாண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 7 வயதில் சர்வேஷ் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் சரளாவிற்கு சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு குறை பிரசவத்தில் வளர்ச்சி குறைவாக இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தாய் சரளா குழந்தைகளின் நிலை குறித்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மருத்துவர்களிடம் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இருந்தபோதிலும் தனக்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்தது குறித்து மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார். தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்ற சாரளா தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த நிலையில் இன்று அதிகாலை சரளாவின் தாய் எழுந்து பார்த்தபோது தனது மகள் மற்றும் குழந்தைகள் காணாதது குறித்து தனது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனால் அதிர்ந்து போன சரளாவின் குடும்பத்தார் பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை, அதன் பிறகு அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் பார்த்தபோது சரளா தண்ணீரில் மிதந்தவாறு இருந்ததை கண்ட அவரது சகோதரர்கள் உடனடியாக கிணற்றில் இருந்து மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலமாக கொண்டு சென்று சேர்த்தனர்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 50 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் போடப்பட்ட இரட்டை பச்சிளம் குழந்தைகளை நவீன தொழில்நுட்ப (வாட்டர் புரூப் கேமரா உதவியுடன் எடப்பாடி தீயணைப்பு துறையினர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘அப்பா மன்னித்துவிடுங்கள்’ அமெரிக்காவில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் கடந்த எ வருடமாக கணவனால் கொடுமைப்படுத்தப்பட்ட இந்திய வம்சாவளி பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பதற்கு முன் அவர் பதிவிட்டு சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. நியூயார்க்கில், 30 வயதான மந்தீப் கவுர் எனும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர், தனது கணவனின் பல ஆண்டுகால துன்புறுத்தலை தாங்கிக்கொள்ளமுடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆறு மற்றும் நான்கு வயதில் இரண்டு மகள்களுக்கு தாயான மந்தீப் கவுர், இறப்பதற்கு முன் வெளியிட்ட வீடியோவில், “ஒரு நாள் தனது பிரச்சினை தீரும் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன், எட்டு வருடங்கள் ஆகிவிட்டன; இப்போது என்னால் தினமும் அடிவாங்க முடியாது” என்று அழுது கொண்டே திரும்பத் திரும்ப கூறுகிறார்.

பஞ்சாபியில் பேசிய அவர், தனது கணவர் மற்றும் மாமியார் தன்னை தற்கொலை செய்து கொள்ள “வற்புறுத்தியதாக” குற்றம் சாட்டினார். “அப்பா, நான் சாகப் போகிறேன், தயவுசெய்து என்னை மன்னியுங்கள்” என்று அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 4-ஆம் திகதி அவர் இறந்துவிட்டார் என்று உத்தரபிரதேசத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது தந்தை ஜஸ்பால் சிங், அமெரிக்காவில் இருக்கும் கணவர் மற்றும் இந்தியாவில் வசிக்கும் அவரது பெற்றோர் மீது உ.பி.யில் உள்ள ஏரியா காவல் நிலையத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளார்.

“எங்கள் உறவினர்கள் நியூயார்க்கில் உள்ள பொலிஸில் வழக்கு தொடர்ந்துள்ளனர்,” என்று அவர் கூறினார். “எங்கள் பேத்திகள் இப்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் இன்னும் தங்கள் தந்தையுடன் இருக்கிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

3 குழந்தைகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய் : கணவன் மீதான ஆத்திரத்தில் நடந்த கொடூரம்!!

திருவண்ணாமலையில்..

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சதாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன். கட்டிட மேஸ்திரியான இவருக்கும், அமுதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு நிலவரசு, குறளரசு என்ற இரண்டு ஆண் குழந்தைகளும், 7 மாத கைக் குழுந்தையும் இருந்துள்ளது. இந்நிலையில் அமுதா தன் குழந்தைகள் மூன்று பேரையும் ஆற்றில் தூக்கி வீசிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தாய் அமுதாவும் தற்கொலைக்கு முயன்றபோது, அவ்வழியாக சென்றவர்கள் அமுதாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

குழந்தைகளின் உடல்களை கண்டு உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது. இந்த தற்கொலை முயற்சி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், அமுதாவுக்கும் அவரது கணவர் பரசுராமனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்ததாக தெரியவந்தது.

அதன்படி கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேப்பூர்செக்கடி பகுதியில் உள்ள அமுதாவின் உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்ற பரசுராமன் அங்கேயே தங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடும் மனஉளைச்சலில் இருந்த அமுதா, பள்ளியில் இருந்த மூத்த மகன் நிலவரசுவை பாதியிலேயே வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர், வீட்டில் இருந்த மற்ற 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு தென்பெண்ணை ஆற்றுக்கு சென்று மூன்று குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும், குடும்ப பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்ற சம்பவம் உறிவினர்கள் மட்டுமின்றி கிராம மக்களை மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.