இலங்கையில் எதிர்வரும் நாட்களில் உணவுப்பொதி,தேநீர் கோப்பைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலை குறைக்கப்பட உள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக நாட்டில் கடும் எரிவாயு தட்டுப்பாடு நிலவியமையினால் உணவுப்பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்திருந்தது.
இந்நிலையில், உணவுப் பொதியினதும், தேநீர் கோப்பையினதும் விலைகளை எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் குறைக்க உள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கனடாவில் ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த இலங்கையர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Burnabyயில் வாழ்ந்து வந்தவர் பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) (57). இலங்கையிலிருந்து 25 ஆண்டுகளுக்கு முன் கனடா வந்த பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) , சொந்தமாக கணினி தொடர்பிலான தொழில் ஒன்றை செய்துவந்தார்.
கடந்த வார இறுதியில் பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) குடும்பத்தினர் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பொழுபோக்குப் பூங்கா ஒன்றிற்குச் சென்றிருக்கிறார்கள்.
அப்போது பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) அவரது இளைய மகனான Zaid (9)ம் தங்கள் நண்பர்களுடன் ரப்பர் படகு ஒன்றில் பயணித்திருக்கிறார்கள். அப்போது திடீரென பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) பயணித்த படகு கவிழ்ந்து, அவருடைய மகன் Zaid தண்ணீருக்குள் விழுந்திருக்கிறான்.
உடனே மகனைக் காப்பாற்ற தண்ணீருக்குள் குதித்திருக்கிறார் பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) . அங்கே நடந்த குழப்பதைக் கண்ட சிலர் உடனடியாக Zaidஐக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
ஆனால், பரிதாபம், பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) என்ன ஆனார் என ஒருவரும் கவனிக்கவில்லை. பிறகு பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) மனைவியான Farzanaதான், தன் கணவரைக் காணவில்லை என்று பதற, உடனே சிலர் தண்ணீருக்குள் குதித்து அவரைத் தேடத் துவங்கியிருக்கிறார்கள்.
நல்ல வேளையாக அங்கு பணியில் இல்லாத தீயணைப்புத் துறையினர் இருவர் இருக்க, அவர்கள் தண்ணீரில் குதித்து பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) தண்ணீரிலிருந்து மீட்டு அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்துள்ளார்கள்.
உடனடியாக பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். சுயநினைவில்லாமல் இருந்த பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) செயற்கை சுவாசமளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவரது மூளை முதலான உள்ளுறுப்புகள் செயலிழந்துவிட்டிருக்கின்றன. அதைத் தொடர்ந்து புதன்கிழமை பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) உயிரிழந்தூள்ளார். பக்கீர் ஜுனைடி (Bakir Junaideen) குடும்பத்தில் அவர் ஒருவர்தான் வேலைபார்த்து வந்துள்ளார்.
ஆகவே, அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த குடும்பம் அடிப்படைத் தேவைகளுக்காகத் திண்டாடக்கூடாது என்பதற்காக பொதுமக்களிடம் நன்கொடை பெறப்பட்டு வருகிறது
எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய ரீதியிலான எரிபொருள் அட்டை (QR) முறைமை வவுனியாவில் வெற்றியடைந்துள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட நீண்ட வரிசைகளும் குறைவடைந்துள்ளன.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக எரிசக்தி அமைச்சினால் தேசிய ரீதியிலான எரிபொருள் அட்டை (கியூஆர்) கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக வவுனியா மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படுவதானால் குறிப்பிட்ட வாகனம் வாரத்தில் ஒரு தடவை மாத்திரமே எரிபொருளை பெற்றுச் செல்லக் கூடியதாகவுள்ளது.
இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் கடந்த மாதம் வரை நாட்கணக்கில் காணப்பட்ட நீண்ட வரிசை தற்போது குறைவடைந்துள்ளதுடன், ஒரு சில மணித்தியாலயத்தில் இலகுவாக எரிபொருள் பெறக் கூடிய நிலமையும் உருவாகியுள்ளது.
இதன் மூலம் எரிபொருள் மாஃபியாக்களின் நடவடிக்கை ஓரளவு முடிவிற்கு வந்துள்ளதுடன் தமது தேவைக்காக எரிபொருளை பெற்றுக்கொள்ளும் சாதாரண மக்கள் இலகுவாக எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகனங்களை தொடர்ந்தும் நீண்ட வரிசையில் நிறுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ரொசான் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்தை சீராக விநியோகிக்கும் முகமாக எரிபொருள் அமைச்சினால் தேசிய ரீதியில் எரிபொருள் அட்டை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நீண்ட வரிசையின்றி எரிபொருளை பெறக் கூடிய நிலமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வருவதற்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்தி வரிசைப்படுத்தி நாட்கணக்கில் விடுவதன் மூலம் விபத்துக்குள் ஏற்பட்டு வருவதுடன்,
போக்குவரத்து அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும், வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வருகின்ற போது வாகனங்களை வரிசைப்படுத்தி ஓர், இரு மணித்தியாலங்களுக்குள் எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்துவதுடன், நாட் கணக்கில் வாகனங்களை நீண்ட வரிசையில் நிறுத்தி வைப்பதை தவிர்க்குமாறும் கோருகின்றேன்.
அத்துடன், பொதுப்போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைளுக்கு இடையூறாக ஒரு நாள் முன்னதாகவே நிறுத்தப்படும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழகத்தை உலுக்கிய கோவை மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக 8 மாதங்களுக்கு பிறகு இரண்டு முதியவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரைச் சேர்ந்த தம்பதிக்கு 17 வயதில் மகள் இருந்தார். இச்சிறுமி முதலில் தடாகம் சாலையில் உள்ள, தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். பிளஸ் 1 வகுப்புவரை அங்கு படித்த அவர், கடந்த கல்வியாண்டில் அங்கிருந்து விலகி, வீட்டருகே உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பொலிசார் விசாரித்தனர். அதில்,மாணவி முன்பு படித்த தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியரான ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி (31) என்பவர் அளித்த பாலியல் தொல்லையின் காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும், பள்ளியின் முதல்வர் மீராஜாக்சனிடம் இதுகுறித்து மாணவிதரப்பில் முன்னரே புகார் அளித்தும் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மகளிர் பொலிசார், போக்ஸோ பிரிவில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் (53) ஆகியோரை கைது செய்தனர்.
மாணவி தற்கொலை செய்த அறையில் இருந்து மாணவி எழுதியிருந்த கடிதத்தையும் பொலிசார் கைப்பற்றினர். அக்கடிதத்தில், ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ எனக்கூறி கைதான ஆசிரியரின் பெயர் மற்றும் 2 மாணவிகளுடைய உறவினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு விட்டார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மற்ற 2 மாணவிகளின் உறவினர்கள் யார்?, எதற்காக அவர்களது பெயரை மாணவி குறிப்பிட்டிருந்தார் என பொலிசார் விசாரித்தனர்.
மறுபுறம், மற்றொரு பொலிஸ் பிரிவினர், இக்கடிதத்தில் உள்ள கையெழுத்து உயிரிழந்த மாணவியுடையதா என்பதை கண்டறிய, அவரது பாடப் புத்தகங்களை கைப்பற்றி, ஒப்பீட்டுக்காக சென்னையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 2 சக மாணவிகளின் உறவினர்கள், கோவையைச் சேர்ந்த முகமது சுல்தான் (70), மனோராஜ் (58) எனத் தெரிந்தது அவர்களைப் பிடித்து பொலிசார் விசாரித்தனர். அதில், இருவரும் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, மகளிர் பொலிசார் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த முகமது சுல்தான், மனோராஜ் ஆகியோர் மீதுபோக்ஸோ, சிறாரை தற்கொலைக்கு தூண்டுதல், மானபங்கம் ஆகிய பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிந்து நேற்று இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சோதனை முடிவுகள் அண்மையில்தான் கிடைத்தன. அதன் மூலம் கடிதம் இறந்த மாணவி எழுதியதுதான் என்பது உறுதியானதையடுத்தே இந்த நடவடிக்கையை எடுத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்திய மாநிலம் பஞ்சாபில் 6 ரூபாய்க்கு லொட்டரி சீட்டு வாங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் ரூ.1 கோடி பரிசு வென்றார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், ஃபெரோஸ்பூர் க்யூஆர்டிக்கு (விரைவு பதில் குழு) நியமிக்கப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரியான குல்தீப் சிங் ஒரு கோடி ரூபாய் வென்ற அதிர்ஷ்டசாலியானார்.
ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ கங்காநகரைச் சேர்ந்த குல்தீப் சிங், தான் வென்ற பரிசுத் தொகையைப் பயன்படுத்துவதற்கான தனது திட்டங்களைப் பற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அவர், எட்டு வயது நிரம்பிய தனது குழந்தையின் பள்ளிப் படிப்புக்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துவதாக அறிவித்தார்.
மேலும், வசதியற்ற குழந்தைகளுக்கு உதவுவதாகவும், குருத்வாராக்களுக்குப் பணத்தை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார். குல்தீப் சிங் தனது தாயின் ஆலோசனையின் பேரில் ஆறு மாதங்களுக்கு முன்பு லொட்டரி சீட்டை வாங்கியதாக தெரிவித்தார்.
சிங் கூறுகையில், “ஆறு மாதங்களுக்கு முன்பு என் அம்மா பல்ஜிந்தர் கவுர் என்னிடம் லொட்டரி சீட்டு வாங்கச் சொன்னார், அன்றிலிருந்து நான் என் அதிர்ஷ்டத்தை முயற்சித்து வருகிறேன். நான் லூதியானாவுக்கு வரும்போதெல்லாம் நாகாலாந்து மாநில லாட்டரி சீட்டுகளை வாங்குவேன்.
ஒரு நாள் பெரிய தொகையை வெல்வோம் என்று நான் எப்போதும் நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அது ₹1 கோடி என்று நினைக்கவில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பு, நான் ₹6,000 வென்றேன், மிகவும் உற்சாகமாக இருந்தேன்” என்று கூறினார். செவ்வாய்கிழமை இரவு பணியில் இருந்தபோது, லொட்டரி முடிவுகளை அறிந்ததாக குல்தீப் கூறினார்.
குல்தீப் சிங், லூதியானா ரயில் நிலையம் அருகே ஒரு விற்பனையாளரிடமிருந்து 25 லொட்டரி சீட்டுகளுக்கு ரூ.150 செலவழித்ததாகக் கூறினார். ஒரு நாகாலாந்து மாநில லொட்டரி டிக்கெட்டின் விலை ஆறு ரூபாய் மட்டுமே என்பதை வலியுறுத்த வேண்டும். மதியம் 1 மணி, மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு, லொட்டரி ஒரு நாளில் மூன்று முடிவுகளை எடுக்கும். முதல் பரிசு ஒரு கோடி, இரண்டாவது ஒன்பதாயிரம், மூன்றாவது விருது வெறும் 450 ரூபாயாகும்.
குல்தீப் மேலும் கூறுகையில், தான் ஒரு அடக்கமான வாழ்க்கையை நடத்துவதாகவும், இவ்வளவு பெரிய தொகையைப் பெறுவது அதை மாற்றாது என்றும் கூறினார். அவர் தொடர்ந்து லொட்டரிகளை வாங்குவதாகவும், அதில் கிடைக்கும் வெற்றியை தொண்டு நிறுவனங்களுக்காக, குறிப்பாக பின்தங்கிய இளைஞர்களின் கல்விக்காக பயன்படுத்துவதாகவும் அறிவித்தார்.
கவிஞர் சினேகன் தனது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சினேகன், கூறியதாவது ” சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய நண்பர்கள் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் சமூக வலைதள கணக்குகள் மூலம் பொது மக்களிடம் பணம் கேட்டு வருவதாக தெரிவித்தனர்.
அந்த சமூக வலைதளத்தை ஆராய்ந்த போது அதில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமியின் பெயர் இடம் பெற்றிருந்தது.
இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி தனது அறக்கட்டளையின் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன்” என தெரிவித்தார்
ஒருவர் தங்களின் கனவுகளை அடைய வேண்டும் என்றால், அதனை மிக சாதாரணமாக அடைந்து விட முடியாது. அதற்காக ஏராளமான தியாகங்கள், கடின உழைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் சேர்ந்து நாம் நமது லட்சியத்தை நோக்கி நடை போட்டால் தான், அதனை நம்மால் அடைய முடியும்.
அப்படி அடையும் வழியில் வரும் தடங்கல்களை பிரச்சனைகளாக கருதாமல், அதனை ஏறி மிதித்து கொண்டு சென்றால் மட்டுமே நமக்கான இலக்கை நம்மால் வெல்லலாம். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பிற்காக, ஒருபுறம் கல்லூரிக்கு சென்றும், மறுபுறம் அதற்கான கட்டணம் மற்றும் தன்னுடைய செலவிற்காக, அவர் கையில் எடுத்த விஷயம் ஒன்று, தற்போது பலரையும் இணையத்தில் நெகிழ வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம், மொகாலி பகுதியைச் சேர்ந்தவர் பூனம். கல்லூரியில் படித்து வரும் இவர், தன்னுடைய கல்வி கட்டணங்கள் மற்றும் செலவினை பார்த்துக் கொள்ள, தானே களத்தில் இறங்கி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன் படி, மொகாலி பகுதியில் சொந்தமாக சாட் கடை ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார். அங்கே பானிபூரி உள்ளிட்ட பல விதமான ஸ்நாக்ஸ்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பேசும் பூனம், தன்னுடைய கல்விக்காக தானே இந்த கடையை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக பல் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்த பூனம், அங்கு வேலை பார்த்து வந்ததால், படிப்பதற்காக நேரம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்து வேலையை விட்டுவிட்டு தற்போது சொந்தமாக ஸ்டால் ஒன்றையும் பூனம் போட்டு, ஒரு பக்கம் கிடைக்கும் நேரத்தில் படித்தும் வருகிறார்.
இது தொடர்பான வீடியோவை Harry Uppal என்ற Food Vlogger ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து, இந்த வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
படிப்பிற்காக தனது பெற்றோர்களை போட்டு தொந்தரவு செய்யாமல், தானே ஒரு ஒரு பக்கம் வேலை பார்த்து அந்த பணத்தின் மூலம் தனது கல்வி தொடர்பான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வரும் இந்த பூனம் என்ற இளம் பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் ஒரே குடுபத்தைச் சேர்ந்த மூன்று பேரை அடுத்தடுத்து பாம்பு கடித்துள்ள சம்பவம் பெரும் ஆதரிசியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்தனர், மற்றோரு உறவினர் அபாயகரமான நிலையில் உள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாம்புக்கடியால் இறந்த தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஒருவர் தூக்கத்தில் பாம்பு கடித்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பவானிபூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பாம்புக்கடியால் உயிரிழந்த அரவிந்த் மிஸ்ராவின் (38) இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அவரது தம்பி கோவிந்த் மிஸ்ரா (22), புதன்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருக்கும்போது, அவரும் பாம்பு கடித்து உயிரிழந்தார்.
அதுமட்டுமின்றி, அதே வீட்டில் இருந்த குடும்பத்தின் உறவினர்களில் ஒருவரான சந்திரசேகர் பாண்டே (22) என்பவரையும் பாம்பு கடித்தது. கோவிந்த் மிஸ்ரா உயிருந்த நிலையில், சந்திரசேகர் பாண்டே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோவிந்த் மிஷாரா மற்றும் சந்திரசேகர் பாண்டே இருவரும் அரவிந்த் மிஸ்ராவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள பஞ்சாபி மாநிலம் லூதியானாவில் இருந்து பவானிபூர் கிராமத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கிராமத்திற்கு மூத்த மருத்துவ மற்றும் நிர்வாக அதிகாரிகள் வியாழக்கிழமை பார்வையிட்டனர். உள்ளூர் எம்எல்ஏ கைலாஷ் நாத் சுக்லா துக்கமடைந்த குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் அதிகாரிகளை சுக்லா கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் பச்சிளம் குழந்தை மண்ணுக்குள் உயிரோடு புதைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தில் உள்ள கம்போய் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள விளைநிலத்தில் மண்ணுக்குள் இருந்து பிச்சுக்குழந்தையின் கைகள் வெளியில் தெரிந்ததோடு அழுகை சத்தமும் கேட்டிருக்கிறது. இதைக்கண்ட அப்பகுதி விவசாயி, அப்பகுதியினரின் உதவிக்கு அழைத்த நிலையில் அந்த காட்சியை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் சுதாரித்து கொண்டு குழந்தையை பாதுகாப்பாக மீட்டிருக்கிறார்கள். தொடர்ந்து குழந்தையை ஹிமாத்நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்த விசாரணையில் அக்குழந்தை பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை என்பது அவர்களுக்கு தெரியவந்திருக்கிறது.
குழந்தையை முதலில் பார்த்த விவசாயி கூறுகையில், எப்போதும்போல வேலைக்காக விவசாய நிலத்துக்கு சென்றிருந்தேன். அப்போதுதான் அங்கு ஒரு குழந்தையின் கைகளை பார்த்தேன்.
உடனடியாக என் நிலத்துக்கு பக்கத்திலுள்ள மின்சார வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து, அவர்களை உதவிக்கு அழைத்தேன். உடனடியாக அனைவரும் அங்கு வரவே, எங்கள் பணி எளிதானது என கூறினார். இதையடுத்து குழந்தையை புதைத்த தாய் மற்றும் குடும்பத்தாரை பொலிசார் தேடி வருகின்றனர்.
பெங்களூருவில் மருத்துவர் ஒருவர் தனது நான்கு வயது மகளை நான்காவது மாடியிலிருந்து வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது. குழந்தையை தூக்கி எறிந்துவிட்டு, தானும் மாடியிலிருந்து குதிக்க முயற்சித்த நிலையில் சில நொடிகள் அக்கம்பக்கத்திலிருந்து வந்த ஒரு சிலர் அவரை இழுத்து தரையில் தள்ளி அமுக்கியத்தில் அவர் காப்பாற்றப்பட்டார்.
இந்த மொத்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தை வெளியாகி வைரலாகிவருகிறது. குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வடக்கு பெங்களூரு எஸ்ஆர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
நான்கு வயது சிறுமிக்கு செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பெண் மன உளைச்சலில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது கணவர் பொலிஸில் வழக்கு பதிவு செய்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட பல் மருத்துவரின் பெயர் சுஷ்மா பரத்வாஜ், அவரது கணவரின் பெயர் கிரண் (மென்பொருள் பொறியாளர்) என்றும், இருவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுஷ்மாவின் மனநலம் குறித்தும் அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து வருகிறோம் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஸ்ரீனிவாஸ் கவுடா தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார் ஓட்டும்போது கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர், தனது காரை சுவர் ஒன்றில் அந்தரத்தில் தொங்கவிட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவன் சாலையில் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.
அப்போது அந்த காரை ஓட்டிய ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனால் அந்த கார் பறந்து அந்த சாலையில் இருந்த தடுப்பு சுவர் ஒன்றின் மேல் தொங்கியபடி நின்றுள்ளது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் பரபரத்து போய், உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கிரேனை கொண்டு சுவரில் அந்தரத்தில் தொங்கிய காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே அந்த கார் சுமார் 25 அடி உயரத்தில் தொங்கியதால், கீழே சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர்.
பிறகு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த காரை ஒட்டியது ஒரு பெண் என்றும், அந்த காரில் உள்ள பிரேக் Failure ஆனதால் அவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
தனது கணவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை பார்த்த பெண்ணுக்கு, கடும் ஆச்சர்யம் ஒன்று காத்திருந்த சம்பவம், தற்போது இணையத்தில் அதிகம் ரவுண்டு அடித்து வருகிறது.
Ecuador நாட்டைச் சேர்ந்தவர் Ailiz Melina. 26 வயதாகும் இவர், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், Pedro Pablo என்ற தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.
முன்னதாக, Ailiz மாற்றம் Pedro ஆகிய இருவரும் கல்லூரி படித்துக் கொண்டிருந்த சமயத்தில், ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இருவரும், ஆறு வருடங்கள் காதலித்து வந்த நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமும் செய்து கொண்டனர்.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான், சமீபத்தில் தனது மாமியார் வீட்டில் இருந்த ஃபோட்டோ ஆல்பம் ஒன்றை Ailiz எடுத்து அதில் இருந்த புகைப்படங்களை பார்த்துள்ளார்.
அப்போது, அவருக்கு கடும் இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு, கணவரின் சிறு வயது புகைப்படம் ஒன்றில், அவரின் பின்னால், தான் நிற்பதைக் கண்டு Ailiz ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போயுள்ளார்.
ஒரு சாலையில் வைத்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், கேமராவை பார்த்த படி, Pedro நிற்க, அவரை எதேச்சையாக பார்ப்பது போல் மஞ்சள் நிற உடை அணிந்து கொண்டு Ailiz பின்னாடி குழந்தையாக நிற்கிறார். இதனைக் கண்டதும் தாங்கள் ஏற்கனவே சேர வேண்டும் என்பதற்காக அப்போதே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றும் Ailiz ஆச்சரியத்துடன் கூறுகிறார்.
போட்டோ எடுத்த சமயத்தில் நடந்தது தனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என்றும், நான் அவரை பார்த்ததாக கூட என் அறிவில் இல்லை என்றும் Ailiz கூறுகிறார். “இதனை நாங்கள் அறிந்ததும் அதை எங்களால் நம்பவே முடியவில்லை.
மேலும், சந்தோசம், பயம் என அனைத்து உணர்வுகளும் எங்களுக்கு ஒரு நேரத்தில் வந்தது. சரியாக, அந்த புகைப்பட கலைஞர் நான் Pedro பின்னால் நிற்கும் போது அவரை ஃபோட்டோ பிடித்துள்ளார்” என Ailiz தெரிவித்துள்ளார்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் இருவர், பல ஆண்டுகளுக்கு பின்னர் காதலித்து திருமணம் செய்து தற்போது சிறப்பாக வாழ்ந்து வரும் சம்பவம், பலரது மத்தியில் நம்ப முடியாத வகையில் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (19). சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று ஆனந்தராஜ் தீர்த்தவாரி கடற்கரை அருகே யாரும் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் ஆனந்தராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து ஆனந்தராஜ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரசாங்க அறிவுறுத்தலை மீறி கொள்கலனில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றதாக வவுனியா புளியங்குளம் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கட்டுப்படுத்தும் முகமாக அரசாங்கத்தினால் நாடு பூராகவும் எரிபொருள் அட்டை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எரிசக்தி அமைச்சால் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (05.08) பெற்றோல் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய எரிபொருள் அட்டை (கியூஆர்) நடைமுறை முறையாக பின்பற்றப்படாது எரிபொருள் விநியோகம் இடம்பெற்றதுடன்,
சில வாகனங்களுக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக எரிபொருள் வழங்கப்பட்டது. அத்துடன் கொள்கலனிலும் எரிபொருள் வழங்கப்பட்டது.
இது தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து கொள்கலன் ஒன்றில் எரிபொருள் எடுத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டதுடன்,
குறித்த நபருக்கு எரிபொருள் விநியோகம் செய்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரும் புளியங்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதேவேளை சில நாட்களாக எரிபொருள் பிரச்சனை ஒரு அளவிற்கு குறைந்து வருவதாக அவதானிக்க முடிகின்றது. யாழில் கடந்த இரு வாரங்களாக எரிபொருள் விநியோகம் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான ஒரு நிலையில் யாழ்ப்பாண வீதியில் நபர் ஒருவர் தனது முச்சக்கரவண்டியை றிக் ஷா வண்டி போல் பயன்படுத்தி வீதியை சுற்றி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் முகநூலில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகின்றது.