மாம்பழத்துக்காக 5 வயது சிறுமியை கொலை செய்த சித்தப்பா : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

உத்திர பிரதேசதில்..

உத்திர பிரதேச மாநிலத்தில் ஷாமிலி என்ற பகுதியை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் உமர் தீன். இவர் கூலி தொழில் செய்யும் தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அண்ணனுக்கு கைரு நிஷா என்ற 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. உமர் இருக்கும் தைரியத்தில், சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு அண்ணனும், அண்ணியும் வேலைக்கு செல்வர்.

அந்த வகையில் சம்பவத்தன்று வழக்கம்போல் சிறுமி நிஷாவை, அவரது சித்தப்பா உமரிடம் விட்டு, அவர்கள் இருவரும் வேளைக்கு சென்றுவிட்டனர். அப்போது வீட்டில் இருந்த மாம்பழத்தை உமர் எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தார். சித்தப்பாவை பார்த்த சிறுமி, தனக்கும் மாம்பழம் வேண்டுமென்று கேட்டுள்ளார். அதற்கு உமர் மறுப்பு தெரிவித்ததால், மாம்பழம் வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார் சிறுமி.

சிறுமி அடம்பிடித்ததால், ஆத்திரமடைந்த சித்தப்பா, சிறுமியை அருகில் இருந்த ஒரு கம்பை கொண்டு சரமாரியாக அடித்துள்ளார். இதில் தலையில் ஏற்பட்ட காயத்தால், சிறுமி மயங்கியுள்ளார். இருப்பினும் ஆத்திரமடங்காத சித்தப்பா கத்தியை எடுத்து சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளார்.

வீடு முழுக்க இரத்தமாக கிடக்க, சிறுமியை ஒரு சாக்குப்பையில் கட்டி வேறு ஒரு இடத்தில் தூக்கி வீசியுள்ளார். மேலும் சம்பவம் எதுவும் நடக்காதவாறு நடந்துகொண்டுள்ளார்.

அன்று மாலை வீடு திரும்பிய பெற்றோர்கள் சிறுமியை குறித்து உமரிடம் கேட்டபோது தனக்கு தெரியாது என்று உமர் மறுத்துள்ளார். இதையடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் என்று அனைவரும் சிறுமியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே காவல்துறையில் புகாரளித்தனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல் அதிகாரிகள், சித்தப்பாவிடமும் விசாரித்தனர். அப்போது அவரது பதில் சந்தேகத்திற்கு உரிய வகையில் இருந்ததால், அவரிடம் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தினர். பின்னர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் உமர். இதைத்தொடர்ந்து அவர் சிறுமியை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

மேலும் சிறுமியின் சடலத்தை தூக்கி வீசிய இடத்தையும் காட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய அதிகாரிகள், உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இந்த கொலை மாம்பழத்திற்காக தான் நடந்ததா அல்லது வேறேதும் காரணம் உள்ளதா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17 வயது பள்ளி மாணவி சரளா எடுத்த விபரீத முடிவு : தோழிகள் கூறியுள்ள அதிர்ச்சித் தகவல்!!

தமிழகத்தின்..

தமிழகத்தின் திருவள்ளூர் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்தது தொடர்பில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2 வாரத்துக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி நேற்று முன்தினம் மாணவி ஸ்ரீமதியின் உடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த சோகம் மக்கள் மனதில் இருந்து நீங்குவதற்குள் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பிளஸ்-2 மாணவி விடுதியில் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் “சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி” உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம் என்பவரது மகள் சரளா (17) பிளஸ்-2 படித்து வந்தார். அவர் பள்ளியின் பின்புறம் உள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

இன்று காலை வழக்கம்போல் மாணவி சரளா சீருடை அணிந்து பள்ளிக்கு புறப்பட்டார். பின்னர் அவர் தோழிகளுடன் உணவு சாப்பிடுவதற்காக விடுதியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது மாணவி திடீரென விடுதி அறைக்கு செல்வதாக மற்ற தோழிகளுடன் கூறி விட்டு திரும்பிச் சென்றார்.

நீண்ட நேரம் ஆகியும் மாணவி சரளா திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தோழிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்ததும்பொலிசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதலில் சரளா பூச்சி கடித்து உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையில் உயிரிழந்த சரளா குறித்து அவர் தோழிகள் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களாகவே சரளா மிகவும் சோகமாக காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் மாணவி சரளா எதோ பிரச்சனையில் இருந்திருக்கிறார் என தெரியவருகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கும் நிலையில் பல புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எரிபொருள் விலை விரைவில் குறைக்கப்படலாம் : புதிய தீர்மானம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு!!

எரிபொருள் விலை..

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறையலாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். உல சந்தையில் தற்போதைய விலை நிலவரத்தின் படி எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறையும் வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், அடுத்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் மூலம் எரிபொருள் விலை குறையக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதி இரவு எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் எரிபொருள் விலை குறைப்பு தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வினவிய போது, ​​எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகஸ்தர்கள் 3% தரகு பணம் பெற அனுமதிக்கும் நீதிமன்ற உத்தரவு, ஜூலை 15, 2022 வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன்பிறகு, எரிபொருள் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி, விநியோகஸ்தர்களுக்கு தரகு பணம் இல்லாமல் எரிபொருள் விலையை கணக்கிடும்போது, ​​எரிபொருள் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகளை அது காட்டியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை சூத்திரத்தின் மூலம் விலை குறைப்பு குறிப்பாக டீசல் மற்றும் பெட்ரோலுக்கானது என்று அவர் கூறினார்.

-தமிழ்வின்-

எதிர்ப்பை மீறி காதல் திருமணம் : 28 நாட்களில் நடந்த பயங்கரம்.. பெண்ணின் தந்தை வெறிச்செயல்!!

தூத்துக்குடியில்..

தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் தந்தையின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரேஷ்மா(20). கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவர், கூலித் தொழிலாளியான மாணிக்கராஜா(26) என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தந்தையின் எதிர்ப்பை மீறி மாணிக்கராஜா-ரேஷ்மா ஜோடி ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊருக்கு திரும்பிய காதல் ஜோடியிடம் முத்துக்குட்டி சண்டையிடவே, ஊர்மக்கள் ஒன்று கூடி சமாதானம் செய்தனர்.

அதன் பின்னர் மாணிக்கராஜாவும், ரேஷ்மாவும் அதே ஊரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். எனினும் ஆத்திரம் அடங்காத ரேஷ்மாவின் தந்தை வீட்டிற்குள் புகுந்து, மகள் மற்றும் மருமகன் இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தப்பியோடிய முத்துக்குட்டியை தேடி வருகின்றனர். திருமணமான 28 நாட்களில் புதுமண காதல் ஜோடி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நளினி- ராமராஜன் பிரிய இதுதான் உண்மையான காரணம் : சொந்த காசில் சூனியம்?

சினிமாவில்..

நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த ராமராஜன்- நளினி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தாலும், இன்று வரை முன்னாள் கணவரை நேசித்து வருவதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார் நளினி.

1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராணுவ வீரன் படத்தில் அறிமுகமானவர் நளினி, தொடர்ந்து மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில் தங்களுடைய காதல் கதை குறித்து நளினி பேசுகையில், நான் நடிக்க வந்த போது உதவி இயக்குனராக ராமராஜன் பணியாற்றினார், அவர் ஒருதலையாக என்னை காதலித்து வந்துள்ளார்.

படப்பிடிப்புக்கு இடையில் எனக்கு காதல் கடிதங்கள் கொடுப்பார், ஒருநாள் ஆடை அணிந்து வந்த போது ”இது நன்றாக இருக்கிறது, நாளைக்கும் போட்டுட்டு வாங்க” என்று கூறினார். ஏதேச்சையாக நான் அதையே போட்டுக்கொண்டுவர, அவரது காதல் மேலும் அதிகரித்துவிட்டது.

நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தில் ஹீரோவாக அவர் நடித்த போது, என்னிடம் காதலை சொல்வதற்காக ஒய்எம்சிஏ-விற்கு வருகிறார். அப்போது அவர் என்னிடம் பேசுவதை பார்த்துவிட்டு, என்னுடன் வந்தவர் என் வீ்ட்டிற்கு போன் செய்து சொல்லிவிட்டார்.

உடனடியாக அங்கு வந்த எங்கள் வீட்டார், ராமராஜனை அடித்து துவைத்துவிட்டனர், அப்போது தான் பரிதாபப்பட்டு, அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். அதன்பின்னர் மலையாள படங்களில் நடிப்பதற்காக சென்றுவிட்டேன், ஒரு வருடம் சென்னைக்கே வரவில்லை.

பாலைவன ரோஜாக்கள் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தாய் விருது எனக்கும், சிறந்த புதுமுக நடிகருக்கான விருது ராமராஜனுக்கும் கொடுத்தார்கள். அப்போது தான் மீண்டும் அவரை பார்த்தேன், எப்படியாவது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தேன்.

அப்போது 6-வது குறுக்குத்தெரு என்ற ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, அந்த படத்தில் நடித்த பாண்டியன் மதுரை என்பதால் அவரை வைத்து பேசி அப்படியே கல்யாணம் பண்ணதுதான். கடந்த 1987-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் முன்னிலையில் எங்களுக்கு திருமணம் நடந்தது.

திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருந்தாலும், நாங்கள் பிரிந்துவிடுவோம் என எங்களுக்கு தெரிந்துவிட்டது, இதனால் சமரசமாக 2000ம் ஆண்டு பிரிந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.மேலும், ராமராஜன், நன்றாக ஜோதிடம் பார்ப்பார். கல்யாணம் ஆன 4 வருடங்களுக்கு பிறகு பெண்ணும், பையனும் பிறந்தா நாம சேர்ந்திருக்க மாட்டோம்.

அவங்களை ஹாஸ்டலில் சேர்த்துவிடுவோம். நாம தனியா இருப்போம். இல்லையென்றால், காலப்போக்கில் எனது புகழ் போயிடும் என்று அவர் கணித்தார். நானோ, ”அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க என்று நான் தான் சமரசம் செய்தேன். இல்லம்மா… நம்ம ஜாதகம் அப்படிதான் இருக்கு, என்றார்.

ஒரு கட்டத்தில், நான் வேண்டுமா, குழந்தைகள் வேண்டுமா எனக்கேட்டார். எனக்கு குழந்தைகள்தான் வேண்டும் என்று கூறி பிரிந்து விட்டோம். ஆனால், எங்கள் பிரிவை அவர் முன்பே கணித்து வைத்திருந்தார். அவர் கூறியதுதான் நடந்தது என தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் இருக்கின்றனர், இருவருமே நன்றாக படித்துவிட்டு நல்ல வேலையில் இருக்கின்றனர், நளினியும் சின்னத்திரையில் முக்கியமான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் மனைவியை பிரிந்த நேரமோ என்னமோ ராமராஜன் சினிமாவில் ஜொலிக்கவில்லை என பேசப்படுகிறது, கதாநாயகனாக தான் நடிப்பேன் என்ற கொள்கை கொண்ட ராமராஜன் விவாகரத்துக்கு பின்னர் 3 படங்கள் மட்டுமே நடிக்க படம் தோல்வியையே சந்தித்தது.

ஆனாலும் இன்றுவரை தன் கணவரை புகழ்ந்தே பேசிக்கொண்டிருக்கிறார் நளினி, இன்று வரை தன் கணவன் மீதான் காதல் குறையவில்லை என நெகிழ்கிறார்!!!

பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் : அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் பயணரின் உடலில் கொடிய கட்டி இருப்பதைக் கண்டறிந்து அவரது உயிரைக் காப்பாற்ற ஸ்மார்ட்வாட்ச் உதவியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான Apple-ன் ஸ்மார்ட்வாட்ச் ஒரு அற்புதமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய கண்காணிப்பு கேஜெட்டாக உள்ளது. இந்த ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.

இப்போது அமெரிக்காவில் மற்றொரு நபருக்கு ஒரு அரிய வகை கட்டியை கண்டுபிடித்து, அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது. அமெரிக்காவில் கிம் துர்கி (Kim Durkee) எனும் பெண்ணுக்கு மே மாதத்தில் இரண்டு தனித்தனி இரவுகளில் தனது ஆப்பிள் வாட்சிலிருந்து அவரது இதயம் atrial fibrillation எனும் சிறிய பிரச்சினையை அனுபவிப்பதாக எச்சரிக்கைகளைப் பெற்றார்.

முதலில், தனது ஸ்மார்ட்வாட்ச் தன்னை தவறாகப் கண்காணிப்பதாக நினைத்துள்ளார், ஆனால் பின்னர் அவர் இரண்டாவது முறையாக அதே எச்சரிக்கையைப் பெற்றார். மூன்றாம் இரவு, இதயத்துடிப்பு எண்கள் சற்று அதிகமாகவே சென்றதாக காட்டியுள்ளது.

இதனால், சற்று யோசித்த அப்பெண், மருத்துவரை சந்திக்க முடிவு செய்தார். மருத்துவமனையில் தனக்கு கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று கூறினால், இந்த ஸ்மார்ட்வாட்சை தலையைச் சுற்றி தூக்கி இருந்துவிடலாம் என நினைத்துள்ளார்.

பின்னர் அவர் மருத்துவமனைக்கு சென்றபோது தான் உண்மை தெரிந்தது. மருத்துவ பரிசோதனையில் அவரது இதயத்தில் ஒரு கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அவரது மருத்துவ அறிக்கையில், “ஒரு எளிய மற்றும் பயமுறுத்தும் காரணத்திற்காக அவரது இதயம் ஒழுங்கற்ற முறையில் துடிக்கிறது என்பதை மைனில் உள்ள மருத்துவர்கள் விரைவில் உறுதிப்படுத்தினர்.

அவளுக்கு மைக்ஸோமா (myxoma) இருந்தது, ஒரு அரிதான, வேகமாக வளரும் கட்டி அது இதயத்தின் இரத்த ஓட்டத்தை நிறுத்தி மூச்சுத் திணறச் செய்து, இறுதியில் பக்கவாதத்தை ஏற்படுத்தியிருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டது.

ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கையின் மூலமாக அவரது உடலில் இருக்கும் பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டதும், மருத்துவர்கள் அவரை மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர்கள் ஆபத்தான கட்டியை அகற்ற ஐந்து மணிநேர இதய அறுவை சிகிச்சை செய்தனர்.

அவரது இதயத்தில் இருந்த நான்கு சென்டிமீட்டர் கட்டி கண்டுபிடிக்கப்படாவிட்டால், கிம் துர்கி சீக்கிரம் இறந்திருப்பார் என்று கூறப்படுகிறது.

உணவில் தினமும் ரசம் சேர்த்து கொள்வதால் நடக்கும் அற்புதங்கள்!!

ரசம்..

நாம் உண்ணும் உணவில் ரசம் சேர்த்து கொள்வது சுவையை மட்டும் தராது கூடவே உடலுக்கு ஏராளமான சத்துக்களையும் தருகிறது என்பது தெரியுமா? புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்தமல்லி ரசம் என்று ரசத்தில் பலவிதம் உண்டு.

உணவில் ரசம் கலந்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன பிரச்சினைகள் உடனே பறந்து போய்விடும். ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. ரசமானது மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.

வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.

ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக்கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது.

12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதியில் கட்டுப்பாடு : அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

எரிபொருள் இறக்குமதியில் கட்டுப்பாடு..

அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாக, அடுத்த 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பதிவிலே இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாமைக் காரணமாகவே, எரிபொருள் அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமோ அல்லது இந்திய எரிபொருள் நிறுவனமோ ஒருபோதும், ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திற்கும் நாள்தோறும் எரிபொருளை விநியோகித்ததில்லை. அத்துடன் வரையறையில்லாத கையிருப்பு இருந்த காலத்தில் கூட அது நடைமுறை சாத்தியமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாளைய தினம்(26.07) முதல் லங்கா ஐஓசி மற்றும் சிபெட்கோ ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு முறைமை நடைமுறைக்கு வரும் எனவும் அவர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமாவை மிஞ்சிய சம்பவம் ; சென்னையில் இலங்கை இளைஞன் அதிரடியாக கைது!!

சென்னை விமான நிலையத்தில்…

சென்னை விமான நிலையத்தில் வயிறில் இரத்தினக் கற்களை கடத்திச்சென்ற இலங்கை இளைஞன் ஒருவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கொழும்பில் இருந்து, 19ம் திகதி ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் சென்னை சென்ற இளஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை ரகசியமாக கண்காணித்தபோது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்து இறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனர். அதில், இலங்கையை சேர்ந்த நைமுதீன் (வயது 28) என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவர் சிறிய பாக்கெட்டுகளாக ரத்தின கற்களை விழுங்கியிருந்தமை தெரியவந்தது.

அதன் பின்னர் அவருக்கு இனிமா கொடுத்து அவற்றை வெளியே எடுத்த போது 56 சிறிய பாக்கெட்டுகளில் பளபளக்கும் ரத்தின கற்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதன்போது சுமார் ரூ.94 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 8 ஆயிரத்து 309 கேரட் கொண்ட 1,746 இரத்தின கற்களை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து இரத்தினக்கற்களை கடத்தி வந்த இலங்கை இளைஞனைகைது செய்த அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

17 வயது மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை : ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி விடுதியில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம். விவசாயி. இவரது மனைவி முருகம்மாள்.

இவர்களது ஒரே மகள் சரளா (17). இவர் திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்டனர்.

அப்போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவி தற்கொலை குறித்து விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையில் மாணவி தற்கொலை குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக தெரிவிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து பொதட்டூர்பேட்டை- திருத்தணி சாலையில் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தமிழகத்தை உலுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் இன்றைய பரிதாப நிலை : நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்!!

நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்..

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதீத பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலைகள் விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்த அதிகரிப்பினை பணவசதி படைத்தவர்கள் சமாளித்துக் கொண்ட போதும், மத்திய மற்றும் நாளாந்த சம்பளம் பெறும் தரப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் மூன்று வேளை உணவு உட்கொண்டு வந்த மக்கள் தற்போது ஒரு நேரம் மட்டும் அளவாக உணவு உட்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று பலரையும் மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

சமகாலத்தில் மிகவும் ஏழ்மையான வயோதிப தம்பதியின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் சம்பவம் பதிவிடப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தை சேர்ந்த வயோதிப தம்பதி சற்று தூரத்திலுள்ள பிக்கு ஒருவரை சந்திக்க சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள் உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளனர்.

கிழிந்த ஆடைகளை அணிந்திருந்த தம்பதி அங்கிருந்த உணவகம் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த உணவுகளின் விலைகளை ஒவ்வொன்றாக விசாரித்துள்ளனர்.

எனினும் அவர்களுக்கு அந்த விலைக்கு உணவினை பெற்றுக்கொள்ள முடிவில்லை. மிகவும் குறைந்த விலையில் இருந்த சிறிய பனிஸ் ஒன்றையும் தேனீர் ஒன்றை வாங்கியுள்ளனர்.அதனை இருவரும் பிரிந்து பசியாறியுள்ளனர்.

குறித்த வயோதிப தம்பதியின் செயற்பாடுகளை கண்காணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் அவர்களிடம் சென்று உணவு வாங்கித் தர உதவுவதாக தெரிவித்துள்ளார். எனினும் அதனை அவர்கள் மறுத்துள்ளனர்.

அதற்கு பதிலளித்தவர்கள் “வேண்டாம் நாங்கள் வீடு திரும்ப நேரம் போதாமல் போய்விடும். காலையில் எங்களுக்கு இடியாப்பம் கிடைத்தது. பகல் பசிக்கவில்லை. இரவு வீட்டிற்கு சென்று ஏதாவது செய்துக் கொள்கிறோம்.. நன்றி” என அவர்கள் கூறியுள்ளனர்.

தங்களிடமிருந்து சில 20 நாணயத்தாள்களை கடை உரிமையாளரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

எனினும் அவர்களை பார்த்து மிகவும் வேதனையடைந்த அந்த பெண் தனக்கு 5 நிமிடங்கள் பொறுத்திருங்கள் என்று கூறிவிட்டு பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றை கொள்வனவு செய்து கொடுத்ததுடன் அவர்களின் கையில் 3000 ரூபாய் பணத்தையும் அந்த பெண் வழங்கியுள்ளார்.

சில 20 ரூபாய் நாணயத்தாள்களை மட்டும் தம்வசம் வைத்திருந்த வயோதிப தம்பதியிடம் வார்த்தைகள் வரவில்லை. அந்த நேரத்தில் அவர்கள் வடித்த கண்ணீர் அவர்களின் வலியின் கொடுமை வெளிப்படுத்தியதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தம்பதி கண்ணீருடனே தமது இல்லத்தை நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளனர்.

இதுபோன்று இலங்கையின் பல பகுதிகளில் எவ்வளவு குடும்பங்கள் உணவு இன்றி தவித்து வருவார்கள். முடிந்தவரை அயலவர்களுக்கு உள்ளதை கொடுத்து பசியை போக்குவோம் என குறித்த பெண் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை : அமைச்சரின் புதிய அறிவிப்பு!!

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை..

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை புதுப்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாளைய தினம்(26.07) முதல் லங்கா ஐஓசி மற்றும் சிபெட்கோ ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு முறைமை நடைமுறைக்கு வரும் என அவர் அறிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் இந்த செயன்முறை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிபெட்கோ மற்றும் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்களையும் உடனடியாக இந்த முறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் அமைச்சர் கூறினார்.

ஒகஸ்ட் 1ஆம் தேதிக்குள் QR வசதிகள் கொண்ட எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகம் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும். தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டில் பதிவுசெய்து இந்த முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம் எனவும் அமைச்சர் கூறினார். பயனர்கள் தங்கள் வணிகப் பதிவோடு பல வாகனங்களைப் பதிவு செய்வதற்கான விருப்பங்கள் வார இறுதிக்குள் வழங்கப்படும்.

பொலிஸ் திணைக்களம் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்படும், ஒவ்வொரு முச்சக்கர வாகனமும் ஒரு குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்திற்கு என ஒதுக்கப்படும்.

டிப்போக்கள் அல்லது எரிபொருள் நிலையங்களுக்கு ஒதுக்கப்படும் பேருந்துகளை பதிவு செய்ய போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, கைத்தொழில் மற்றும் சேவை வழங்கும் துறைகள் போன்ற பிற சேவைகள், எரிபொருள் நிலையங்களில் தங்களின் தேவைகள் மற்றும் வாகனங்களின் ஒதுக்கீடு ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்படும்.

ஒகஸ்ட் 1 முதல் QR குறியீட்டு முறைமை மாத்திரமே நடைமுறையில் இருக்கும். வாகன இலக்கத்தகட்டின் இலக்கங்கள் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படாது எனவும் அமைச்சர் கூறினார்.

பாலத்தில் இருந்து கவிழ்ந்த பேருந்து…பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!!

கென்யாவில்..

கென்யாவில் ஞாயிற்றுக்கிழமை மதியம் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 30 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் நைரோபியில் இருந்து பிரதான நெடுஞ்சாலை உள்ள மெரு நகரின் ஆற்றுப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்று கொண்டு இருந்த பேருந்து தீடிரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து விழுந்து கவிழ்ந்தது.

இதில் 30 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரி தெரிவித்த தகவலில், பாலத்தில் பேருந்து வேகமாக வந்து இருப்பதால், பிரேக் பழுதடைந்து விபத்து ஏற்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இத்துடன் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து வெளிவந்துள்ள புகைப்படங்களின் அடிப்படையில், பேருந்து ஆற்றுப் பாலத்தில் இருந்து கவிழ்ந்து நொறுங்கியது இருப்பதும், அதில் சிக்கி இருப்பவரை மீட்புக் குழுவினர்கள் காப்பாற்ற முயற்சிப்பதும் இடம்பெற்றுள்ளது.

மாலை 6:30 மணிக்கு இந்த விபத்தி ஏற்பட்டதால் போதிய வெளிச்சமின்மை காரணமாக மீட்புப் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கென்யாவில் குறுகிய சாலைகள் மற்றும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களால் இத்தகைய விபத்து ஏற்பட்டு வருவதாக பொலிஸார் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பெற்றோல் திருட்டால் இடம்பெற்ற கொடூரம் : பரிதாபமாக பறிபோன உயிர்!!

கொழும்பு..

கொழும்பு -08 பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காசல் வீதி பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இக்கொலை சம்பவம் இன்று (25.07) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பொரளை காசல் வீதியில் வசிக்கும் 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் ஒன்றிலிருந்து பெற்றோல் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான வாக்குவாதத்தில் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரை மற்றைய நபர் கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் 29 வயதுடைய பிரதேசத்தை சேர்ந்தவர் என கூறப்படும் நிலையில் சந்தேக நபர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

என் சாவுக்கு மாமியார்தான் காரணம் : ஆடியோ அனுப்பிவிட்டு 4 மாத கர்ப்பிணி விபரீத முடிவு!!

சென்னை…

சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் 25 வயதான இந்துமதி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தி.நகரை சேர்ந்த 37 வயதான குமரன் என்பவரை பெற்றோர்கள் ஏற்பாட்டின் பேரில் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் ஆன நாள் முதலே இந்திமதியை அவரது மாமியார் சாந்தி, “ராசியில்லாதவள். நீ அதிகம் படிக்கவில்லை. குறைவாக சாப்பிடு” என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மாமியாரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக இந்துமதி வேளச்சேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். திருமணம் ஆகி 5 மாதம் ஆன நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த இந்துமதியை சமாதானம் செய்து அழைத்து செல்லக்கூட கணவர் குமரன் வராமல் இருந்துள்ளார்.

இதனால் கணவரும் தாய் பேச்சை கேட்டுக் கொண்டு தம்மை கண்டு கொள்வதில்லையே என்ற விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்துமதி.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது அக்காவிற்கு வாட்சாப் மூலம் அனுப்பிய ஆடியோ ஒன்றில் “என் சாவுக்கு குமரன் அம்மா தான் காரணம் நானும் பாப்பாவும் செல்கிறோம்” என்று அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதை அவரது அக்கா பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து பார்ப்பதற்குள் இந்துமதி இறந்துவிட்டார். தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீசார் உடலை மீட்டு இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து திருமணம் ஆகி 5 மாதமே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

தொல்லை செய்த முதியவரை புரட்டி எடுத்த பெண் : குவியும் பாராட்டுகள்!!

தருமபுரியில்..

தருமபுரி புறநகர் பேருந்துநிலையத்திற்கு தினமும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்குக்கு 100 க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கிறது.

அதே போல் பல்வேறு பணிகளுக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.இதனால் தருமபுரி பேருந்துநிலையம் எப்போது பொது மக்கள் நிரம்பி பரபரப்பாக காணப்படும்.

பேருந்து நிலையத்தின் நடுவே புறக்காவல் நிலையம் உள்ளது. இங்குள்ள காவல்துறையினர் திருட்டு மற்றும் குற்றசம்பவங்களை தடுக்கும் பணியில் உள்ளனர்.

ஆனாலும் காவல்துறையினர் கண்காணிப்பு குறைவால் அடிக்கடி பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பது, வாகன திருட்டு, பெண்களிடம் கேலி கிண்டல் செய்வது, பாலியல் ரீதியாக சீண்டுவது, என அவ்வப்போது குற்றங்கள் நடப்பது வழக்கம்.

இந்நிலையில் இன்று புறநகர் பேருந்து நிலையம் திருப்பத்தூர் பேருந்துகள் நிற்கும் இடத்தில் வெளியூர் செல்வதற்கான ஒரு பெண் தனது குழந்தைகளுடன் நின்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு முதியவர் குடிபோதையில் அங்கு நின்றிருந்த பெண்ணின் தவறான முறையில் தொட்டுள்ளால், இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் பொதுமக்கள் மத்தியில் இது போன்று பெண்களிடம் நடந்துகொள்ளுவயா என திட்டி முதியவரை சரமாரியாக அடித்து கீழே தள்ளி உதைத்துள்ளார்.