டிக்-டாக் நேரலையில் பயங்கரம் : முன்னாள் மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்த கொடூரன்!!

சீனாவில்..

சீனாவில் டிக்-டாக்கில் நேரலையில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த முன்னாள் மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கொடூர கணவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கணவன் மனைவிக்கு இடையே சண்டை நடப்பது இயல்பானது. ஒருவேளை இந்த சண்டைகள் அதிகரித்து ஒன்றாகவே வாழ முடியாத நிலைக்கு சென்றாலும் பரஸ்பரம் மன ஒப்புதலுடன் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழும் நிகழ்வுகளையும் சமூகத்தில் நாம் பார்க்கிறோம்.

ஆனால், சில நேரங்களில் மனைவி மீது எழும் சந்தேகங்கள் காரணமாக அடித்து துன்புறுத்துவது, கொடுமைக்கு உள்ளாக்குவது போன்ற மோசமான செயல்களில் கணவன்மார்கள் ஈடுபடுவதும் சமூகத்தின் அவலமாக இன்னமும் நீடித்து கொண்டுதான் உள்ளது.

சில தருணங்களில், விவாகரத்து பெற்ற பின்னரும் தனது முன்னாள் மனைவியை பின் தொடர்ந்து தொந்தரவு செய்வதும், அவர்களை மன ரீதியாக, உடல் ரீதியாக தாக்கும் மோசமான நிகழ்வுகளும் சமூகத்தில் இருப்பது வேதனையிலும் வேதனைதான். இதுபோன்ற ஒரு சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு தான் சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது முன்னாள் மனைவி மீது பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்த கொடூர நபருக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்து நிறைவேற்றியுள்ளது.

சீனாவின் டிக்-டாக் போன்ற சமூக வலைத்தளம் டுயின். குறுகிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் சமூக வலைத்தளமான இதில், சீச்சுவான் மாகாணத்தை சேர்ந்த லமு என்ற பெண் மிகவும் ஆக்டிவாக இருந்துள்ளார். விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்த லமு, தனது கணவர் தங் லு என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளார்.

ஆனாலும் தொடர்ந்து தன்னை மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு லமுவை தங் லு தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால், திருமண உறவின் போது தன்னை கொடூரமாக தாக்கி துன்புறுத்தி வந்ததால், லமு திட்டவட்டமாக மீண்டும் திருமணம் செய்ய முடியாது எனக்கூறிவிட்டார்.

இதனால், கோபம் அடைந்த தங், அவரை அவ்வப்போது தொந்தரவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருந்திருக்கிறார். அந்த வகையில், சம்பவத்தன்று லமு, டுயின் சமூக வலைத்தளத்தில் நேரலையாக வீடியோ பதிவை போட்டு இருக்கிறார். அப்போது, லமுவுக்கு பின்னால் வந்த முன்னாள் கணவர் லு தங், லமு மீது பெட்ரோலை ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார்.

இதில் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த லமு அலறி துடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் நேரலையாக வெளியான இந்தக் காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது. கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த லமு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட தங் லுவிற்கு நீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இதையடுத்து தங் லு மேல் முறையீடு செய்தார். ஆனால், அவரது முறையீட்டை நிராகரித்து நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் மரண தண்டனையை உறுதி செய்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று சீனாவின் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தங் லுவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பாக குடும்பத்தினரை சந்திக்க தங் லு விரும்பினார். அவரது இறுதி ஆசையை ஏற்று அதிகாரிகள் அதற்கு அனுமதி கொடுத்தனர். இதையடுத்து, அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நடிகையுடன் காரில் சென்று கொண்டிருந்த நடிகர் : வழிமறித்து இருவரையும் சரமாரியாக தாக்கிய மனைவி!!

ஓடியா..

சக நடிகையுடன் பிரபல நடிகர் ஒருவர் காரில் சென்று கொண்டிருக்கும்போது, அவர்களை வழிமறித்த மனைவி, இருவரையும் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஓடியா, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரக்ருதி மிஸ்ரா. இவர் சக நடிகரான பாபுஷான் மொஹந்தி என்பவருடன் சேர்ந்து ‘ப்ரேமம்’ என்ற ஒடிசா படத்தில் நடித்திருந்தார். இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், நேற்று விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வருவதற்காக இருவரும் புபனேஷ்வர் விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பாபூஷானின் மனைவியான திருப்தி மொஹந்தி, வேகமாக வந்து அவர்கள் சென்று கொண்டிருந்த காரை மடக்கி சண்டையிட தொடங்கியுள்ளார். மேலும் காரிலிருந்த நடிகை மிஸ்ராவின் தலைமுடியை பிடித்து வெளியே இழுத்து சரமாரியாக அடித்தார். இதனால், அங்கிருந்து தப்பியோடி ஆட்டோ ஒன்றை பிடித்து சென்றுவிட்டார் மிஸ்ரா.

பட்டப்பகலில் வெட்டவெளியில் நடந்த இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்தனர். அதிலும் ஒருவர், தனது மொபைல் போனில் போதிய இடம் இல்லை என்பதால் மற்ற வீடியோக்களை டெலீட் செய்து, இதனை வீடியோ எடுத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மிஸ்ராவின் குடும்பத்தார் காவல்நிலையத்தில் திருப்தி மொஹந்தி மீது புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து பாபுஷானின் மனைவி திருப்தி மொஹந்தி கூறும்போது, தனது கணவருக்கும், நடிகை மிஸ்ராவுக்கு இடையே தகாத உறவு இருப்பதாக தெரிவித்தார்.

அதோடு இந்த சம்பவம் குறித்து நடிகர் மொஹந்தி கூறுகையில், “நானும் நடிகை மிஸ்ராவும் விமான நிலையத்திற்கு சென்ற போது வழியில் என் மனைவியும், அவர் தந்தையும் காரை மடக்கி எங்களை அடித்தனர். நடிகை மிஸ்ரா எனக்கு சிறு வயதிலிருந்தே நல்ல தோழி.

ஆனால் என் மனைவிக்கு திரைப்படத்துறையில் நம்பிக்கை இல்லை” என்று தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தை அடுத்து, இனி மிஸ்ராவுடன் நடிக்க மாட்டேன் என்று கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

திரும்பி வருமாறு முறையிட்ட காதலன் : இளம் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!!

சிட்னியில்..

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மாயமான காதலியை, எங்கிருந்தாலும் திரும்பி வருமாறு முறையிட்ட காதலன் கொலை வழக்கில் கைதாகியுள்ளார். சிட்னியில் இந்தியவம்சாவளி ஷெரீன் குமாரின் சடலம் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, 37 வயதான வின்சென்ட் கார்லினோ என்பவர் கைது செய்யப்பட்டார்.

புதன்கிழமை மாலை மாயமான நிலையில் நேற்று ஷெரீன் மற்றும் கார்லினோ தம்பதி வசித்து வந்த குடியிருப்பில் இருந்து சிறிது தூரத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஷெரீன் குமார் கொலை வழக்கு தொடர்பில் கார்லினோ நேற்று கைது செய்யப்பட்டார். மட்டுமின்றி, தமது காதலி மாயமானதில் மனத்துயரத்தில் உள்ளதாகவும், தகவல் தெரியவரும் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் எனவும் கார்லினோ கோரியிருந்தார்.

குடியிருப்பில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியே சென்ற ஷெரீன் குமார் மீண்டும் குடியிருப்புக்கு திரும்பவில்லை என்றே கார்லினோ தெரிவித்திருந்தார். 43 வயதான ஷெரீன் குமாரின் பிள்ளைகள் அவரது முன்னாள் கணவரின் கவனிப்பில் உள்ளனர்.

பிரபல மொடலாகவும் நாய் தொடர்பான தொழில் செய்து வருபவருமான ஷெரீன் குமார் கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது. விரிவான விசாரணைக்கு பின்னரே, இந்த வழக்கின் பின்னணி தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கனடாவில் தமிழருக்கு அடித்த பெரிய அதிர்ஷ்டம் : மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய மனைவி!!

கனடாவில்..

கனடாவில் தமிழர் ஒருவருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. அஜக்ஸ் நகரை சேர்ந்தவர் ஜீவகுமார் சிவபாதம் (54). இவருக்கு தான் லொட்டோ மேக்ஸ் டிராவில் (கனேடிய $500,000) (ரூ.13,90,25,573.10) பரிசு விழுந்துள்ளது.

இந்த தகவலை Ontario Lottery and Gaming Commission வெளியிட்டுள்ளது. மூன்று குழந்தைகளுக்கு தந்தையான சிவபாதம் கூறுகையில், இது தான் எனது முதல் பெரிய வெற்றி

நான் என் லொட்டரி டிக்கெட்டை OLG செயலியில் சரிபார்த்த போது பரிசு விழுந்தது தெரிந்தது. ஆனாலும் நான் அமைதியாகவே இருந்தேன், ஏனென்றால் அது தான் என் இயல்பு.

பரிசு விழுந்தது குறித்து என் மனைவிக்கு முதலில் சொன்னேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பரிசு பணத்தை வைத்து புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

4 மாதமாக ஒன்றாக வாழ்க்கை : சாப்பாடு செய்யாததால் காதலியை கொலை செய்த கொடூரம்!!

தஞ்சாவூரில்..

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா( வயது 23). இவர் தஞ்சாவூர் பகுதியில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த போது அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார்( வயது 21) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன் மஞ்சுளாவும், சந்தோஷ் குமாரும் சென்னை வந்துள்ளனர்.

சென்னை வந்து சிந்தாதிரிப்பேட்டையில் அக்கா -தம்பி என்று கூறி வீடு எடுத்து தங்கியுள்ளனர். மஞ்சுளா கோயம்பேட்டில் உள்ள தனியார் கால் செண்டரில் வேலைக்கு சேர, சந்தோஷ் வீட்டுக்கு அருகே நூல் நெசவு கம்பெனியொன்றில் பணி புரிந்து வந்துள்ளார்.

சிறிது நாள் இவர்கள் உறவு நன்றாக சென்ற நிலையில், சந்தோஷ் குமார் கஞ்சா அடித்தும், மது அருந்தியும் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும் சந்தோஷ் குமாரின் செயலால் வருத்தத்தில் இருந்த மஞ்சுளா தனது முன்னாள் காதலரிடம் பேச ஆரம்பித்துள்ளார்.

இதை அறிந்த சந்தோஷ் குமார் மஞ்சுளாவை கண்டித்தும் அவரை தாக்கியும் வந்துள்ளார். மேலும், வேலை பார்த்த பணத்தை வீட்டில் கொடுக்காமலும் இருந்துள்ளார். இதனால் மஞ்சுளா இரண்டு நாட்களான சமைக்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ்குமார், மஞ்சுளாவிடமும் சாப்பாடு செய்யாதது தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளார். இது முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சந்தோஷ் குமார் மஞ்சுளாவின் கழுத்தை கைகளால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் கழுத்தில் துப்பட்டாவை மாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதை போல செட்டப் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, தன்னுடன் தங்கி இருந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியபோது மஞ்சுளாவின் முகம் மற்றும் கழுத்து பகுதியில் நக காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலிஸார் சந்தோஷ்குமாரிடம் விசாரணை நடத்தியபோது மஞ்சுளாவை கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. பின்னர்சந்தோஷ் குமாரை கைது செய்த போலிஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல நடிகருடன் பார்ட்டி : போதையில் நடிகை மீரா ஜாஸ்மின் எடுத்த புகைப்படம்!!

மீரா ஜாஸ்மின்..

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீரா ஜாஸ்மின். ரன் படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த மீரா மிதுன் இடையில் மலையாள நடிகரை காதலித்து பின் திருமண வரை சென்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

இதனை அடுத்து அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சினிமாவில் இருந்து விலகிய மீரா ஜாஸ்மின் குண்டாகி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார். தற்போது சினிமாவில் மீண்டும் எண்ட்ரி கொடுக்க உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார்.

இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் 40 வயதில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பிரபல நடிகர் நரேனுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அவருடன் நெருக்கமாக இருப்பதையும் மதுபோதையில் எடுத்த புகைப்படத்தையும் ரசிகர்கள் பார்த்து ஷாக்காகி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இனிமே முட்டாளா இருக்க மாட்டேன் : புது அஸ்திரத்திரை எடுக்கும் நடிகை வாணி போஜன்!!

வாணி போஜன்..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிக்க பல நட்சத்திரங்கள் அறிமுகமாகி வெற்றி பெருகிறார்கள். ஆனால் ஒருசிலருக்கு அது செட்டாகாமல் போய் விடும். அந்த அளவிற்கு தள்ளப்பட்டுள்ளார் நடிகை வாணி போஜன். செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் சின்னத்திரை சீரியல் நடிகையாக மாறினார்.

அதில் கொடுத்த வரவேற்பு மூலம் ஒருசில படங்களில் இரண்டாம் மற்றும் சைட் ரோலில் நடித்து வந்தார். அதன்பின் லாக்கப், மலேசியா டு அம்னீசியா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். போதிய வரவேற்பு கிடைத்தும் மிகப்பெரிய வாய்ப்புக்காக காத்திருந்தார் வாணி போஜன்.

அப்படி அமைந்த படம் தான் மகான். நடிகர் விக்ரமின் கள்ளக்காதலியாக நடித்ததால் அந்த கதாபாத்திரம் கதைக்கு தேவையில்லை என்று வாணி போஜன் நடித்த காட்சிகளை மகான் படத்தில் இருந்து தூக்கிவிட்டார் இயக்குனர்.

இப்படம் மிகப்பெரிய மார்க்கெட்டை தூக்கும் என்று எதிர்பார்த்த வாணி போஜனுக்கு ஏமாற்றத்தை கொடுத்ததோடு மன அழுத்தத்தை கொடுத்தது. தற்போது கிட்டத்தட்ட பத்து படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார் வானி போஜான்.

ஆனால் அப்படம் எப்படி கைக்கொடுக்கும் என்ற சந்தேகம் இருந்ததால் இனிமேல் கவர்ச்சி ரூட்டுக்கு மாற திட்டம் போட்டுள்ளாராம். அதற்காக இணையத்தில் க்ளாமர் போட்டோஷூட் புகைப்படங்களையும் வாரி வழங்கி வழங்க முடிவெடுத்துள்ளாராம்.

தற்போது வெப் தொடர் ஒன்றில் படுமோசமான இதுவரை பார்த்திராத காட்சிகளில் நடிக்க போவதாக சக நடிகைகள் கூறி வருகிறார்களாம்.

வட பிராந்தியத்தில் விவசாயத் துறையை நவீனமாக்கும் செயற்றிட்டம் முன்னெடுப்பு!!

வட பிராந்தியத்தில்..

விவசாயத் துறையை நவீனமாக்கும் செயற்றிட்டம் அவத்தை 01 ஆனது (Component 01) பெறுமதிச் சங்கிலி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் இலங்கையினுள் ஓர் ஏற்றுமதி நோக்க இறக்குமதிப் பதிலீட்டு வர்த்தக விவசாயத் தொழிற்றுறையை உருவாக்கும் நோக்கில்,

விவசாயிகளுக்கு விவசாய ஏற்றுமதி கைத்தொழில் முயர்ச்சியாளர்களுக்கு குறைந்த உற்பத்திச் செலவில் உயர் தொழினுட்ப முறைகளைப் பயன்படுத்திக் கூடிய தரத்துடன் உயர் உயர் பயனினை பெறுவதை நோக்காகக் கொண்ட ஒருநிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறுபயிர்ச்செய்கை, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் நடத்தப்படுகிறது.

விவசாயத் துறையை நவீனப்படுத்தும் செயற்றிட்டம் (பெறுமதிச் சங்கிலி நிகழ்ச்சித் திட்டம்) உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினூடாக (IDA) மேற்படி செயற்றிட்டத்துக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு விவசாயத் துறையின் பங்களிப்பைக் கூட்டும் நோக்கில் விவசாய வணிக உற்பத்திகளின் பெறுமதிச் சங்கிலி அபிவிருத்தி தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய, விவசாயத் துறையை நவீனப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோரின் விவசாய வணிகத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் கீழ் விவசாய வணிகத்தைத் தொடங்கவும் விரிவாக்கவும் வட பிராந்திய அலுவலகத்தின் எல்லைக்குட்பட்ட வட மாகாணத்தில் நான்கு தொழில் முனைவோருக்கான மானியம் அண்மையில் ரூபா 34 மில்லியன் கொழும்பிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் திட்டப்பணிப்பாளர் திரு ரோஹன கமகேயின் தலைமையில் வழங்கப்பட்டது.

அதாவது யாழ்ப்பாணத்தில் Jaffna Horticulture Pvt Ltd 8.9 மில்லியன் மிளகு, கறுவாய் மிளகாய் தூள் உற்பத்திகாகவும், Ms Glob Multi Traders (Pvt) Ltd 8.3 மில்லியன் கடலட்டை வளர்ப்பிக்காகவும், VK coco pvt ltd 7.4 மில்லியன் தும்பு சார்ந்த உட்பத்திகளுக்காகவும், கிளிநொச்சியில் Rajakanapathi food manufactures Pvt Ltd 8.7 மில்லியன் பால் சார்ந்த பெறுமதிசேர் உட்பத்திக்காகவும் வழங்கப்பட்டது.

 

விடுதியில் 21 மாணவர்கள் மர்மமான முறையில் மரணம்!!

தென் ஆபிரிக்கா..

தென் ஆபிரிக்காவின் ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தில் கிழக்கு லண்டன் நகரில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் 21 மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டனர். இவர்கள் 13 முதல் 17 வயது வரையான பாடசாலை மாணவர்கள் ஆவர்.

முதலில் இவர்கள் சன நெரிசலில் சிக்கி இறந்து இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் சன நெரிசல் எதுவும் ஏற்படவில்லை என பின்னர் அறியபட்டதுடன் அவர்களின் உடலில் காயம் எதுவும் ஏற்பட வில்லை என கண்டறியப்பட்டது.

ஒன்று கூடி உரையாடி கொண்டிருந்த வேலையிலோ அல்லது நடனமாடி கொண்டிருந்த வேலையிலோ திடீரெனெ தரையில் விழுந்து இறந்தவர்ககளை போல அவர்கள் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென் ஆப்பிரிக்காவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மது அருந்த தடை விதித்திருந்த போதிலும் இந்த மதுபான விடுதியில் சிறுவர்களுக்கு மது விநியோகித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந் நிலையில் இறந்த மாணவர்களின் ரத்தத்தில் மெதனோல் எனும் ரசாயனப் பொருள் காணப்பட்டதாக ஈஸ்டர் கேப் மாகாண பிரதி சுகாதார பணிப்பாளரான வைத்தியர் லிதா மதிவானே கூறியுள்ளார். எனினும் மரணத்தை ஏற்படுத்த கூடியதாக மேற்படி மெதனோல் அளவு இருந்ததா என்பதை ஆறிய ஆய்வுகள் நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார்.

வவுனியா வேப்பங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மை : 7 பேர் கைது!!

7 பேர் கைது..

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (23.07) மாலை முதல் இன்று (24.07) அதிகாலை வரை எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.

வாகன இலக்கதகடுகளின் கடைசி இலக்கமான 0,1,2 ஆகிய இலங்க மோட்டர் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், சொகுசு கார்கள் என்பவற்றுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.

இந்நிலையில், எரிபொருள் பெறுவதற்கு செல்லுமிடத்தில் வாகனங்கள் கூடியமையால் வரிசையில் நின்றோருக்கும், ஏனையவர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு அமைதியின்மை நிலவியது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த நெளுக்குளம் பொலிசார் அமைதியின்மை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையில் மோசமான உணவுப் பற்றாக்குறை : உலக உணவுத் திட்டம்!!

உணவுப் பற்றாக்குறை..

இலங்கை அண்மைக்காலத்தில் மிக மோசமான ஒரு உணவு பற்றாக்குறை நிலைமையைஎதிர்நோக்குவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் அப்துர் ரஹீம் சித்தீக் இதனை இன்று(24) கொழும்பில் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு இலங்கை பங்குச்சந்தைகள் வீழ்ச்சி: முகவர்கள் வெளியிட்ட தகவல்
இது தொடர்பில் அவர் தெரிவிப்பதாவது, கடந்த மாதத்தில் இலங்கையின் உணவு பணவீக்கம் 80 வீதத்தை அடைந்து இருக்கிறது. இது சில மாதங்களில் அதிகரிக்கக்கூடும்.

தற்போது இந்த நிலைமையை சமாளிப்பதற்காக இலங்கையில் பல குடும்பங்கள் உணவு உட்கொள்ளலை சுருக்கியுள்ளன. மேலும் பெரும்பாலான குடும்பங்கள் இளையவர்களுக்கு மாத்திரம் உணவு வழங்களில் முன்னுரிமையை கொடுத்துள்ளன.

இந்த நிலையில் உலக உணவுத்திட்டம் 3.4 மில்லியன் மக்களுக்கு தமது உதவிகளை வழங்கவுள்ளது. அத்துடன் 1.4 மில்லியன் மக்களுக்கு நிபந்தனையற்ற வகையில் உதவிகளை செய்வதற்கு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் புதிய அறிவிப்பு!!

அரச ஊழியர்களை..

அரசாங்க ஊழியர்களை பணிக்கு அழைக்கும் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கல் நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஏலவே அரச நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை அழைக்கும் செயற்பாடு மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

கடந்த மாதம் முதல் அரச நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை அழைக்கும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் கோவிட் வைரஸ் பரம்பல்!!

கோவிட் வைரஸ்..

இலங்கையில் கோவிட் வைரஸ் பரம்பல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளாக சுகாதாரத்துறை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 72 கோவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் வெளிநாடு சென்று திரும்பியோர் எவரும் இல்லை என்பதுடன் பெரும்பாலானவர்கள் தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

பொது இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் நடமாடுவதன் ஊடாகவே கோவிட் வைரஸ் பரவல் மீண்டும் தலைதூக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு மருத்துவ நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் இதுவரை 6,64,844 கோவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 99 வீதமானவர்கள் குணப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் துவிச்சக்கரவண்டி பாவனையாளர்களுக்கு போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

வவுனியா மாவட்டத்தில் எரிபொருள் பிரச்சனை காரணமாக துவிச்சக்கரவண்டிகளின் பாவனைகள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி ரோஷன் சந்திரசேகர முக்கிய அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களில் மாத்திரம் துவிச்சக்கரவண்டிகளினால் 15க்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் சிலர் படுகாயமும் அடைந்துள்ளனர்.

இவற்றில் இரவு நேரங்களில் பெரும்பாலான விபத்துக்குள் இடம்பெற்றுள்ளதுடன் விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளமை வெளிச்சமின்றி பயணிக்கும் துவிச்சக்கரவண்டிகளே ஆகும்.

எனவே வவுனியா மாவட்டத்தில் துவிச்சக்கரவண்டிகளில் செல்வோர் டைனமோ பொருத்திய லைட்களை பொருத்தியிருக்கவேண்டும் என்பதுடன்,

துவிச்சக்கரவண்டிகளில் பயணிப்பவர்கள் சாலை விதிகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் அத்துடன் துவிச்சக்கரவண்டிகளில் கூட்டமாக செல்வதை தவிர்க்குமாறும் இவற்றை மீறி,

செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி ரோஷன் சந்திரசேகர மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் துவிச்சக்கரவண்டியில் சென்ற சிறுவனை மோதித்தள்ளிய கனரக வாகனம் : சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

விபத்து..

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் துவிச்சக்கரவண்டியின் சென்ற சிறுவனை ஆனந்தா நிறுவனத்தின் கனரக வாகனம் மோ.தியதில் கா.யமடைந்த சி.றுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நகரப்பகுதியிலிருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக கோவிற்குளம் பகுதியினை நோக்கி துவிச்சக்கரவண்டியில் சி.றுவன் சென்ற சமயத்தில், அதே பாதையில் வந்த ஆனந்தா நிறுவனத்தின் கனரக வாகனம் திரும்ப முற்பட்ட சமயத்தில் துவிச்சக்கரவண்டியில் சென்ற சி.றுவனை மோ.தித்தள்ளியுள்ளது.

இச் சம்பவத்தில் சிறுவனின் கா.ல் பா.தத்துடன் மு.றிவடைந்துள்ளதுடன், அருகேயிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வி.பத்து தொடர்பிலான மேலதிக வி.சாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

250 கோடி ஜீவனாம்சம் கேட்டது உண்மையா? மீண்டும் நாக சைதன்ய பற்றி சமந்தா சொன்ன பதில்!!

நடிகை சமந்தா..

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் அவர்கள் கடந்த வருடம் திடீரென விவாகரத்து அறிவித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தனர். அவர்கள் பிரிவுக்கு என்ன காரணம் என பல்வேறு வதந்திகள் அப்போது வலம் வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் காபி வித் கரண் ஷோவில் சமந்தா பங்கேற்றபோது அவரிடம் ‘மீண்டும் லவ் பண்ணுவீங்களா’ என கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லவே இல்லை என பதில் கூறி இருக்கிறார்.

மேலும் சமந்தா இதயத்திற்கு செல்ல என்ன வழி என கரண் ஜோகர் கேட்க ‘அது மூடப்பட்டு இருக்கிறது. U டர்ன் எடுத்து போய்டுங்க’ என தெரிவித்து இருக்கிறார்.

அது மட்டுமின்றி தான் 250 கோடி ருபாய் ஜீவனாம்சம் வாங்கியதாக வந்த வதந்தியை பார்த்து வருத்தப்பட்டதாகவும், எப்போது இன்கம் டேக்ஸ் அதிகாரிகள் வருவார்கள் அவர்களிடம் என்னிடம் எதுவுமே இல்லை என காட்டுவதற்காக காத்திருந்தேன் என காமெடியாக பதில் அளித்து இருக்கிறார்.