திருமணம் சம்மந்தமான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வலம் வருகின்றன. அதிலும், திருமணத்தில் ஏற்படும் அசாம்பாவிதம் சார்ந்த விஷயங்கள் தான் அதிகம். அந்த வகையில், தன் மனைவிக்காக கணவர் ஒருவர் செய்திருக்கும் விஷயம் தான் பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.
அதாவது, திருமண நாளுக்காக மனைவிக்கு அவர் கொடுத்த சர்ப்ரைசில் மனைவி ஆனந்தக் கண்ணீரில் நனைந்திருக்கிறார். கணவர் கென் 3 வருடங்களாக மனைவிக்குத் தெரியாமல் ஒரு வீட்டை கட்டியிருக்கிறார். மேலும், தனது திருமண நாளன்று அந்த வீட்டுக்குத் தன் மனைவியை சர்ப்ரைசாக அழைத்துச் சென்றிருக்கிறார்.
அந்த வீட்டை தன் மனைவிக்கான திருமணப் பரிசாக வழங்கியிருக்கிறார். பின், அந்த வீட்டுக்குத் தன் மனைவி, குழந்தைகளை அழைத்துச் சென்று ஆச்சரியப்படுத்திய வீடியோவைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இவரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ஓனர்க்கான திருமண நாள் கிப்ட். கிட்டத்தட்ட 3 வருட கால சென்னை வீடு சஸ்பென்ஸை உடைத்த போது . காதலை கொண்டாடுவோம். ❤️❤️❤️❤️. 21.07.2022 . எல்லா கசப்பையும் காதலால் வெல்வோம். கொண்டாடுவோம். #12thAnniversary . pic.twitter.com/I008bHicEI
நிறைமாத கர்ப்பிணியான பெண் காவலருக்கு, காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்தி வைத்த காவல் அதிகாரிகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை அடுத்துள்ள சிறுஞ்சுனை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. அன்னவாசல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் இவரும், புல்வயலை பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கததால், இரு வீட்டாருமே இவர்களுடன் உறவில் இல்லை. இதனால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஜெயந்திக்கு வளைகாப்பு நடத்துவதில் சிக்கல் இருந்தது. இதனை அறிந்த சக காவலர்கள், ஜெயந்திக்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, இன்று (ஜூன் 22), ஜெயந்திக்கு வளையல், சீர் என்று வளைகாப்பு விழாவில் வைக்கப்படும் முக்கிய பொருட்களை வைத்து டி.எஸ்.பி அருள்மொழி அரசு தலைமையில் வளைகாப்பு விழாவை நடத்தினர்.
இதில், ஜெயந்தி – பிரசாந்த் தம்பதியினரை அமரவைத்து, அவர்களுக்கு சந்தனம் பூசியதோடு ஜெயந்தி கைக்கு வளையல் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி ஜெயந்தி, பிரசாந்தை மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி.வி தொலைக்காட்சி தொடர் நடிகர் தீபேஷ் பன் திடீரென மரணமடைந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான Bhabiji Ghar Par Hai மூலம் பிரபலமானவர் நடிகர் தீபேஷ்பன். இவர் சில இந்தி திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நடிகர் திபேஷ் பன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நடிகர் தீபேஷ்பன் மறைவை கேட்டு சக நடிகர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்து அவருக்கு அஞ்சலி செலித்தி வருகின்றனர். நடிகர் தீபேஷ் பன்னுக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இதையடுத்து நடிகர் தீபேஷ் பன் குடும்ப புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்கள் பதிவிட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த தீபேஷ் பன் நண்பரும், சக நடிகருமான சார்ருல் மாலிக், “என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நேற்று அவரை சந்தித்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக ரீல் வீடியோக்கைள உருவாக்கினோம். தீபேஷ் பன்னை எட்டு வருடங்களான எனக்குத் தெரியும். ஒருவர் ஒரு நல்ல நடிகர் மட்டும் அல்ல. நல்ல மனிதர். அவரை இழந்துவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.
மஞ்சுளா கோயம்பேட்டில் உள்ள தனியார் கால் செண்டரில் வேலைக்கு சேர்ந்துள்ளார். சந்தோஷ் வீட்டுக்கு அருகே நூல் நெசவு கம்பெனியொன்றில் பணி புரிந்து வந்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கடந்த 4 மாதங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்த மஞ்சுளா – சந்தோஷ் குமார் என்ற நபர்களில் மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தோஷ் குமார் என்பவர் காவல் கட்டுப்பட்டறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடம் சென்று பிரேத விசாரணை நடத்திய போது முகம் மற்றும் கழுத்து பகுதியில் நக காயங்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உடற்கூராய்வுக்காக மஞ்சுளாவின் உடலை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மஞ்சுளாவுடன் கடந்த நான்கு மாதங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் ஒன்றாக தங்கி வந்த சந்தோஷ் குமாரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சந்தோஷ் குமார் மஞ்சுளாவை கொலை செய்து துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது.
இதனையடுத்து சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக மாற்றி சந்தோஷ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட மஞ்சுளா(23) என்பவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்தவர் என்பதும், கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ் குமார்(21) அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
வெளிநாட்டிலிருந்து வந்த கணவனை, மனைவி அவரது இரகசிய காதலனுடன் குக்கரை கொண்டு அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மதுரவாடா பகுதியை சேர்ந்தவர் முதுகு முரளி. இவருக்கும் மற்றொரு பகுதியை சேர்ந்த மிருதுளா என்ற பெண்ணக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு தற்போது 7 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முரளிக்கு வெளிநாட்டில் பேராசிரியர் வேலையை கிடைத்தது. எனவே அவர் தனது மனைவி மகனை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் மிருதுளாவுக்கு அந்த பகுதியில் இருக்கும் சங்கர் என்ற 18 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களது பழக்கம் இரகசிய உறவாக மாறியுள்ளது. யாருமில்லாத சமயத்தில் தனிமையில் சந்தித்து இருவரும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இப்படி போய்க்கொண்டிருந்த சமயத்தில் கட்ந்த சில நாட்களுக்கு முன்பு முரளி வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
ஆனால் நீண்ட மாதங்களுக்கு பிறகு கணவன் வருவதை அறிந்த மனைவி அதிர்ச்சியில் இருந்தார். மேலும் வீட்டிற்கு வந்த முரளியிடம் அவர் சரிவர பேசவில்லை. முரளியே நெருங்கி போய் பேசினாலும் கூட, மிருதுளா முரளியிடம் நெருக்கம் காட்டவில்லை. இதனால் முரளிக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய முரளி, தனது தாயை பார்க்க சென்றுள்ளார். அந்த சமயத்தில் மிருதுளா அவரது காதலனை அழைத்து தனது கணவர் இங்கு இருக்கும் வரை சந்திக்க இயலாது என்று கூறியுள்ளார். இதனால் எரிச்சலடைந்த காதலன் சங்கர், முரளியை கொலை செய்துவிடலாம் என்ற யோசனையை மிருதுளாவிடம் கூறியுள்ளார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று இரவு முரளி தூங்கி கொண்டிருந்த சமயத்தில் அவரது தலையில் குக்கரை கொண்டு அடித்து கொலை செய்துள்ளார் மிருதுளா. பின்னர் காதலனை அழைத்து இருவரும் முரளியின் சடலத்தை யாரும் பார்க்காத இடத்தில் தூக்கி போட்டுள்ளனர். இதையடுத்து இரண்டு நாட்கள் கழித்து முரளியை தூக்கி போட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, முரளியின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அந்த உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
இதனிடையே முரளியின் தாய், தனது மகனை வீட்டிற்கு வந்து தேடியுள்ளார். அங்கு அவர் காணமல் போனதாக மனைவி கூற, தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மிருதுளாவை துருவி துறவி விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து காவல் அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வெளிநாட்டிலிருந்து வந்த கணவனை, இரகசிய காதலனுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டுக்கு முன்னால் உள்ள முற்றத்தில் துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த ஏழு வயது சிறுமியின் மீது கார் ஒன்று மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான சிறுமி உயிரிழந்துள்ளதாக மொரகஹாஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொரகஹஹேன, மில்லவ பொல்வத்தையைச் சேர்ந்த தினிதி சத்சராணி ஜான்ஸ் என்ற சிறுமியே விபத்தில் உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்து சற்று தூரத்தில் சிறிய மலையுடன் கூடிய பக்கவாட்டு வீதியில் வந்து கொண்டிருந்த காரை சாரதி கட்டுப்படுத்த முடியாமல் சிறுமியின் வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு உள் நுழைந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கார் முற்றத்தில் மோதியவுடன், அதிவேகமாக வீட்டின் பின்புறம் சென்று கார் நின்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் அதிவேகமாக பயணித்த போது வீட்டின் சுவரில் மோதி பள்ளம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படுகாயமடைந்த சிறுமி ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் 1060 பேருக்கு சீரான முறையில் லிற்றோ சமையல் எரிவாயு இன்று (23.07) வழங்கப்பட்டது. வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள மைதானத்தில் வைத்து குறித்த சமையல் எரிவாயு வழங்கப்பட்டது.
லிற்றோ நிறுவனத்தினர் மற்றும் விளையாட்டு மைதான கழகத்தினர் இணைந்து அப்பகுதி கிராம சேவையாளரின் ஆலோசனைக்கு அமைய அங்கு வருகை தந்திருந்த மக்கள் 1060 பேருக்கு சீரான முறையில் எந்தவித குழப்பங்களுமின்றி இலக்க சிட்டைகளை வழங்கி சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டது.
இதேவேளை வவுனியாவில் கடந்த சில வாரங்களில் மாத்திரம் 4000க்கு மேற்பட்ட லிற்றோ சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. நீதிபதி எம்.இளஞ்செழியன் மற்றும் அவரது பாதுகாவலர்களை இலக்கு வைத்து நல்லூரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அவரது, மெய்ப்பாதுகாவலர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் 2017ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி இடம்பெற்றிருந்தது. இதில் பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமசந்திர என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், தனது மெய்பாதுகாவலர் உயிரிழந்து ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள போதும் குறித்த குடும்பத்திற்கு குறிப்பாக சரத் ஹேமசந்திரவின் பிள்ளைகளுக்கு ஆதரவாகவே நீதிபதி இளஞ்செழியன் இருந்து வருகிறார்.
தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் வேறு பெண்ணை திருமணம் செய்த காதலனை கண்டித்த காதலி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம், கானஹொசஹள்ளி கன்னபோரய்யனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஜராஜு (25). இவர், இதே கிராமத்தை சேர்ந்த நிர்மலா( 23), என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இருவரும் நீண்ட நாள் காதலித்த வந்த நிலையில் சீக்கிரம் திருமணம் செய்யுமாறு போஜராஜுவை நிர்மலா கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ஆனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் போஜராஜு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த நிர்மலா போஜராஜுவை சந்தித்து அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இவர்களின் இந்த செயல் போஜராஜு மனைவிக்கு தெரிந்து அவர் போஜராஜுவோடு வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிர்மலா நேற்று தன் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற போஜராஜு நிர்மலாவிடம் சண்டை போட்டுள்ளார். இது முற்றிய நிலையில், தான் கொண்டுவந்திருந்த கத்தியால் நிர்மலா கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பின்னர் நிர்மலாவின் தலையை துண்டித்து கானஹொசஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளார். இளம்பெண்ணின் தலையோடு ஒருவர் வந்ததை கண்ட போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகனுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், விஜயநகர மாவட்டத்திற்குட்பட்ட பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹோண்ணூறு ஸ்வாமி. வாலிபரான இவருக்கு அதேகிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தேதியில் இவருவாருக்கும் கோயிலில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் புதுமண தம்பதியினர் மேடையில் உற்சாகமாக உறவினர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வாழ்த்துகளை பெற்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மகன் ஸ்வாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து அருகே இருந்த உறவினர்களுடன் கூறியுள்ளார். சாதாரண வலியாக இருக்கும் என நினைத்த அவர்கள் அவருக்குச் சோடா குடிக்கக் கொடுத்துள்ளனர்.
அதைக் குடித்துக் கொண்டிருக்கும்போதே ஸ்வாமி மேடையிலேயே மயங்கிய விழுந்துள்ளார். பிறகு அவரை உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்காவின் புடவையை தங்கை உடுத்தியதன் காரணமாக அக்கா திட்டியதால் மனமுடைந்த தங்கை இரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலை அடுத்துள்ள திருக்கச்சூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலி தொழிலாளியான இவருக்கு பவித்ரா, நிரோஷா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் நிரோஷா (20) பி.எஸ்சி நர்சிங் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவர் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு தினமும் மின்சார இரயிலில் செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலை சிங்கப்பெருமாள் கோவில் இரயில் நிலையத்திற்கு சென்ற மாணவி, அங்கு வந்த செங்கல்பட்டிலிருந்து – சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார இரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இதனை கண்ட இரயில் பயணிகள், உடனடியாக இரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் குறித்த தகவல்களையும் சேகரித்தனர். அதன்படி அந்த பெண்ணின் தந்தைக்குக் தகவல் கொடுத்தனர்.
பின்னர் நடைபெற்ற விசாரணையில், மாணவி நேற்று கல்லூரியில் நடந்த இறுதி ஆண்டு விழாவிற்கு தனது அக்காவின் புடவையை அணிந்து சென்றுள்ளார். இதனால் அக்கா பவித்ரா, அவரை சரமாரியாக திட்டி சண்டையிட்டுள்ளார். இதனால் தங்கை நிரோஷா மிகவும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதையடுத்து மறுநாள், நிரோஷாவை அவரது தந்தை சமாதானப்படுத்தி வழக்கம்போல், சிங்கப்பெருமாள் இரயில் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். மேலும் ஆறுதலாக வார்த்தைகளை கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். தந்தை சென்றதையடுத்து, நிரோஷா குழப்பத்தில் இரயில்வே தண்டவாளம் அருகே நின்றுள்ளார்.
அப்போது வந்த மின்சார விரைவு இரயிலின் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே நிரோஷா உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதற்கு இது தான் காரணமா அல்லது வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
33,600 லீற்றர் பெற்றோலுடன் பேராதனை நோக்கிச் சென்ற பவுஸர் பின்னோக்கி நகர்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23.07) பிற்பகல் மீரிகம தங்கொவிட்ட வீதியில் ஹலுகம மலையில் பெற்றோல் ஏற்றிச் சென்ற,
பவுஸர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். முத்துராஜவெலயிலிருந்து பேராதனைக்கு கொண்டு செல்லப்பட்ட 33,600 லீற்றர் பெற்றோல் இந்த பவுஸரில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹலுகம மலை பகுதியில் பவுஸர் திடீரென பின்னோக்கிச் சென்றதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 153,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. aதேவேளை ஜூலை 21ஆம் திகதி 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 158,800 ரூபாவாக பதிவாகியிருந்தது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில், , கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.
புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், தங்கம், மிகப்பெரிய சொத்தாக மதிக்கப்படுகிறது.
தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க இலாபம் கிடைத்து வருகிறது. இதன் காரணமாக தங்கம் மீதான மக்கலின் ஆர்வர் அதிகரித்து வருகின்றது.
கேரளாவில், ஆணும் – பெண்ணும் ஒன்றாக அமர எந்த தடையும் இல்லை என திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது.
அங்கு பினராயி விஜயன் முதல்வராக இருக்கும் நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் மேயராக இருக்கிறார்.
இந்த நிலையில், திருவனந்தபுரம் பொறியியல் கல்லுாரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணியர் அமர நீளமான இரும்பு பெஞ்ச் அமைக்கப்பட்டிருந்தது.
இங்கு மாணவர்கள், மாணவிகள் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசி வருவர். இந்த பென்ச் திடீர் என உடைக்கப்பட்டு இடைவெளி விட்டு மூன்று தனித்தனி இருக்கைகளாக வெட்டப்பட்டிருந்தன.
இதைத் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இது தொடர்பாக விசாரிக்கும்போது மாணவர்களும், மாணவிகளும் ஒன்றாக அமர்ந்திருப்பது பிடிக்காத சிலர் இப்படி செய்தது தெரியவந்தது.
உடனடியாக அந்த உடைக்கப்பட்ட பெஞ்சில் மாணவர்களும், மாணவிகளும் ஒன்றாக அமர்ந்து அதை படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டனர். அதோடு, பழமையான சிந்தனை கொண்டவர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புகைப்படம் வைரலான நிலையில், இதுகுறித்து திருவனந்தபுரம் பெண் மேயர் ஆர்யா ராஜேந்திரன், அந்த பஸ் நிறுத்தத்தை நேற்று நேரில் வந்து பார்வையிட்டார்.
பின்னர் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், முற்போக்கு சிந்தனை உடைய கேரளத்தில் ஆணும், பெண்ணும் ஒன்றாக அமர எந்த தடையும் இல்லை.
காலம் மாறிவிட்டது என்பதை புரிந்து கொள்ளாத பழங்கால சிந்தனையிலேயே ஊறித் திளைப்பவர்களை பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த அறிக்கை பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று வருகிறது.
புதிதாக திருமணமான தம்பதி தேனிலவுக்கு சென்றிருந்த நிலையில், அங்கு நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க மாகாணம், டென்னசியை அடுத்த Memphis என்னும் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டி ஜியோன் சென் என்ற பெண்ணுக்கு, பிராட்லி ராபர்ட் டாவ்சன் என்பவருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில், டாவ்சன் ஐடி ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில், சென் Pharmacist ஆக பணிபுரிந்து வந்துள்ளார்.
சென் மற்றும் டாவ்சன் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றிருந்த நிலையில், இருவரும் தங்களின் தேனிலவுக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிஜி நாட்டில் உள்ள ட்ருட்லி என்னும் தீவுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து இருவரும் தங்கி உள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில், இரண்டு தினங்கள் கழித்து, சென் மற்றும் டாவ்சன் ஆகியோர், காலை உணவை அருந்த வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.
அவர்களின் அறைக்கு வெளியே, தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற குறிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, மதிய வேளையிலும் சென் மற்றும் டாவ்சன் ஆகியோர் உணவருந்த வெளியே வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. மதியத்திற்கு பிறகும் அறையின் கதவு திறக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், அந்த ஹோட்டலின் பணியாளர், தன்னிடம் இருந்த மாற்று சாவியை பயன்படுத்தி, கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அங்கே டாவ்சனின் மனைவி சென் உடலில் காயங்கள் மற்றும் ரத்தங்களுடன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார். உடனடியாக, இதுகுறித்து போலீசாருக்கும் அந்த பணியாளர் தகவலை தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, கணவரான பிராட்லி, அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீவு ஒன்றிற்கு தப்பித்துச் சென்றதை கண்டறிந்தனர்.
உடனடியாக, டாவ்சனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், ஹோட்டலில் சென் மற்றும் பிராட்லி அறை எடுத்து தங்கிய போது, அவருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது தான், கோபத்தின் உச்சத்தில் இருந்த பிராட்லி, வாக்குவாதம் முற்றிய போது, ஹோட்டலின் கழிவறையில் வைத்து தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பின்னர், அங்கிருந்து கயாக் துடுப்பு படகு மூலம், அவர் தீவை விட்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தேனிலவுக்குச் சென்ற தம்பதிக்கு மத்தியில், சண்டை உருவாகி பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விமானி ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை விமானத்தில் அழைத்துச் சென்ற வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காக பல சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கான வானத்தில் அவர்கள் சிறகசைக்க, வாழ்வில் மிகப்பெரிய தியாகங்களை செய்யும் பெற்றோர்களை நாம் பார்த்திருப்போம். சமூகத்தில் தங்களது பிள்ளைகள் நல்ல நிலைக்கு வருவதையே தங்களது லட்சியமாகவும் பெற்றோர்கள் கருதுகிறார்கள்.
இப்படி தங்களுடைய குழந்தைகளை நல்ல நிலைக்கு அழைத்துச் செல்ல ஒவ்வொரு நாளும் போராடிய பெற்றோர்க்கு ஈடு இணையே கிடையாது. அந்த வகையில், தன்னை படிக்க வைத்து விமானியாக மாற்றிய தன்னுடைய தாய் மற்றும் தந்தைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் மகன் ஒருவர்.
தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வருகிறார் கமால் குமார். ஜெய்ப்பூரை சேர்ந்த இவருக்கு வெகுகாலமாகவே ஒரு ஆசை இருந்திருக்கிறது. தான் விமானத்தினை இயக்கும்போது தனது பெற்றோரும் அந்த விமானத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் அது.
இதற்காக பல ஆண்டுகள் அவர் காத்திருந்திருக்கிறார். அவருடைய இந்த நீண்டகால ஆசை சமீபத்தில் நிறைவேறியிருக்கிறது. இதனை இவர் வீடியோவாக வெளியிட, சமூக வலை தளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.