கடன் அட்டை பாவனையார்களுக்கான விசேட அறிவிப்பு!!

கடன் அட்டை..

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன. கடன் அட்டை மூலமான பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கப்படும் வருடாந்திர வட்டி விகிதம் 36 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தக வங்கிகள் அறிவித்துள்ளன.

ஏப்ரல் 8 அன்று, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கடன் அட்டைகளுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச வட்டி வீத வரம்புகளை நீக்க முடிவு செய்தது. அந்த முடிவிற்குப் பிறகு, அதுவரை 18 வீதமாக இருந்த கடன் அட்டை வட்டி 24வீதமாகவும் ஆகவும் பின்னர் 30 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று கடன் அட்டைகளுக்கான வட்டி 36 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அதிக வட்டி விகித சூழலில், வாடிக்கையாளர்கள் கடன் அட்டைகளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுவால் ஏற்பட்ட விரோதம் : பழிக்குப் பழி வாங்கிய இளைஞர்!!

எண்ணூரில்..

எண்ணூர் அருகே சமாதானம் பேசலாம் என அழைத்து வந்து மது வாங்கிக்கொடுத்து, ரவுடி தலையில் கல்லைப்போட்டு கொன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர், 6வது தெருவை சேர்ந்தவர் சின்ன தம்பி. இவரது மகன் சரவணன் (44). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சரித்திர ரவுடியான இவர் லாரி ஓட்டி வந்தார். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர், பிராட்வேயில், இனிப்பகத்தில் வேலை பார்க்கிறார்.

அதே பகுதி, முதல் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரகு (28) என்பவருக்கும், சரவணனுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. ஒரு முறை, எண்ணூர், பர்மா நகரில் வைத்து, புவனேஸ்வரியிடம், ரகு, உன் கணவனை கொல்லாமல் விட மாட்டேன் என கூறியுள்ளார்.

இதனால், சரவணனுக்கும், ரகுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலை ரகு, சரவணனை தேடி, அவரின் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. அங்கு, நாம் சமாதானமாக போகலாம் என அன்பாக ரகு பேசினார்.

அதை உண்மை என நம்பிய, சரவணன், ரகுவுடன்,பைக்கில் சென்றார், அவர்களுடன், ரகு கூட்டாளிகள் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த லட்சுமணன் மகன் அரவிந்த் (29), மணிவண்னன் மகன் சதீஷ்குமார் (20), ராம்குமார் மகன் கோபி (23), வெங்கடேசன் மகன் பாலக்கிருஷ்ணன் (23) மற்றும் அஜய் (எ) நிர்மல் ஆகியோர் இருந்தனர்.

எண்ணூர், கத்திவாக்கம் மேம்பாலத்தின் கீழ், மைதானம் நுழைவு வாயில் அருகே, சரவணன், ரகு மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து மது அருந்தினர். போதையானதும், சரவணனை, பீர் பாட்டிலால் மண்டையில் ஓங்கி அடித்தனர்.

பின்னர், தலையில் கல்லைப்போட்டு கொன்றனர். எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரகு உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். விசாரணையில், ரகுவை மிரட்டி, அடிக்கடி, சரவணன் மது வாங்கி குடிப்பாராம். இந்த ஆத்திரத்தில், சரவணனை சமாதானம் பேசி அழைத்து சென்று, மது வாங்கி கொடுத்து, தீர்த்துக்கட்டியது தெரிந்தது.

250 கோடி ஜீவனாம்சம்.. விவாகரத்துக்கு காரணமே இதுதான்.. நாக சைதன்யா பற்றிய உண்மையை கூறிய நடிகை சமந்தா!!

சமந்தா..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தா தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் நடிகையாகவும் அதிகம் ஈர்க்கப்பட்ட நடிகை என்ற பட்டியலில் முதலிடத்தினை பிடித்துள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் கரண் ஜோகரின் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்‌ஷய் குமாருடன் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் பல விசயங்களை பகிர்ந்து கொண்ட சமந்தாவிடம் கரண், நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு சமந்தா, இந்த விசயம் மிகவும் கடினமாக இருந்ததாகவும், தற்போது நன்றாக உள்ளது, இயல்பான நிலைக்கு வந்துவிட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். எப்பவும் இல்லாத வலிமையுடையவளாக தற்போது மாறியிருக்கிறேன் என்று தெரிவித்தார்.


மேலும் நாக சைதன்யாவுக்கு உங்களுக்கு கசப்பான உணர்வுகள் இருந்ததா என்று கேட்டுள்ளார் கரண். அதற்கும் சமந்தா விளக்கமளித்துள்ளார். அந்த கஷ்டமான உணர்வுகள் என்னவென்றால், இருவரையும் (நாக சைதன்யா – சமந்தா) ஒன்றாக ஒரே அறையில் விட்டால், கூர்மையான பொருட்களை மறைத்து வைத்திருப்பது போன்றது. அந்த உணர்வு இப்போதும் இருக்கிறது. அதனால் ஒத்துழைக்காமல் போகலாம்.


மேலும், நீங்கள் சந்தித்த நம்பமுடியாத ரூமர் செய்தி என்றால் எது என்று கேட்டுள்ளார். விவாகரத்துக்கு 250 கோடி ஜீவனாம்சம் கொடுப்பதாக கூறி ஒரு செய்தியை பார்த்து வருத்தப்பட்டதாகவும், எப்போது இன்கம் டேக்ஸ் அதிகாரிகள் வருவார்கள் அவர்களிடம் என்னிடம் எதுவுமே இல்லை என காட்டுவதற்காக காத்திருந்தேன் என்றும் காமெடியாக கூறியிருந்தார்.

மகன் இருக்கையில் ரகுவரனை விவாகரத்து செய்ய காரணம் என்ன? உண்மையை கூறிய நடிகை ரோஹினி!!

தமிழ் சினிமாவில்..

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த வில்லனாக கருத்தப்பட்டவர் நடிகர் ரகுவரன். 1996 ஆம் ஆண்டு நடிகை ரோஹினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரகுவரன். அதன்பின் ஒரு மகன் பிறந்த நிலையில் 6 வருட திருமண வாழ்க்கைக்கு விவாகரத்து மூலம் முற்றுபுள்ளி வைத்தனர்.

விவாகரத்தான் 4 வருடம் கழித்து உடல்நலக்குறைவால் ரகுவரன் மரணமடைந்தார். தற்போது தன் மகன் சாய் ரிஷிவரனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் நடிகை ரோஹினி. சமீபத்தில் ரகுவரனை 6 வருட திருமண வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் அவரை ஏன் விவாகரத்து செய்தேன் என்ற விளக்கத்தையும் சமீபத்தில் அளித்த மேடைப்பேச்சில் கூறியுள்ளார்.

எல்லா பெண்களுக்கு திருமணத்திற்கு பின் நடப்பது தான் எனக்கும் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின் பெண்களுக்கு சுந்தந்திரம் என்பது மறுக்கப்பட்டு வருகிறது. அப்படி போராடும் பெண்களின் கேரக்டரை தப்பாக பேசும் உலகம் தான் இது. அதை சமாளித்து இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.

அந்தவகையில் இதில் இருந்து வெளியே வந்த நான் இதை கூற இத்தனை வருடங்கள் தேவைப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும், பொருளாதார சுதந்திரம் இருந்த எனக்கு இவ்வளவு குடும்ப வன்முறை இருந்தது என்றால் பொருளாதார ரீதியாக சுதந்திரம் இல்லாத பெண்களுக்கு என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார்.

ரகுவரன் படத்தில் வில்லனாக நடிப்பதில் மெனக்கெட்டு நடிப்பார். அதை தான் வீட்டிலும் செய்வார். அதாவது, வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரகுவரன் அதேபோன்று வீட்டிலும் நடிந்து கொள்வதால் பல பிரச்சனைகள் எங்களுக்குள் தோன்றியுள்ளது. ரகுவரன் மட்டுமில்லாது அவர் குடும்பத்தினராலும் நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

வவுனியாவில் காலி முகத்திடல் போராட்டக்காரரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

காலி முகத்திடல் போராட்டக்காரார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை பதவி விலகுமாறு கோரியும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக அரகல போராட்ட ஆதரவாளர்களால் இன்று (22.07) மாலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அரகல போராட்டகாரர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிக்கின்றோம், முடிவல்ல இதுவே தொடக்கம், போராட்ட பூமியில் மக்கள் உணர்வுகளை தீண்டாதே,

வேண்டாம் வேண்டாம் ரணில் விக்கிரமசிங்க, மக்கள் குரலை நசுக்காதே, மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளி’ என கோசங்களையும் எழுப்பியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஒரு இலட்சத்தை அண்மித்த துவிசக்கர வண்டிகளின் விலை!!

துவிசக்கர வண்டிகளின் விலை..

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக நாட்டில் பலர் துவிச்சக்கர வண்டிகளுக்கு பழகி வருவதாகவும் இதன்காரணமாக உதிரிப் பாகங்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துவிச்சக்கர வண்டி மீண்டும் பிரபலமடைந்து வருவதால் அதிக தேவை ஏற்பட்டுள்ளதாக ஹொரணை வர்த்தகர்கள் பலர் தெரிவித்துள்ளனர். விற்பனை செய்ய முடியாமல் பல மாதங்களாக ஷோரூம்களில் இருந்த சைக்கிள்கள் இன்று அதிக கிராக்கியுடன் விற்கப்படுகின்றன.

அந்தத் தேவையால், 10,000-15,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட சைக்கிள், இன்று 80,000-95,000 ரூபாய்க்கு விற்கிறோம். அதில், டயர் டியூப் மற்றும் இதர உபகரணங்களின் விலையும், அதை விட அதிகரித்துள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக ஹொரணை, இங்கிரிய, பண்டாரகம, பாணந்துறை, களுத்துறை, மத்துகம போன்ற முக்கிய நகரங்களில் மக்களின் போக்குவரத்துக்கு சைக்கிள் ஒரு வழியாக மாறியுள்ளது.

எரிபொருள் பெற வாகன இலக்கங்களை மாற்றினால் கடும் தண்டனை விதிக்கப்படும் : பொலிஸார் எச்சரிக்கை!!

பொலிஸார் எச்சரிக்கை..

வாகனங்களின் இலக்க தகடுகளை மாற்றி வாகனங்களை பயன்படுத்திய நிலையில் சிக்கினால், 20 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றத்திற்காக வாகனத்தின் உரிமையாளரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

1984 ஆம் ஆண்டு இலக்கம் 40 மோட்டார் வாகன சட்டம் மற்றும 2009 ஆம் இலக்கம் 88 மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தில் இதற்கான தண்டனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வாகன இலக்க தகடுகளை மோசடியாக மாற்றுவது, பயன்படுத்துவது, இலக்க தகடுகளை அழித்தல் என்பன தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள்.

அத்துடன் இதே குற்றத்திற்காக இரண்டாவது முறை சிக்கினால், 30 ஆயிரம் ரூபாவுக்கு குறையாத 50 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்படாத அபராதமும் மூன்று மாதத்திற்கு குறையாத சிறைத்தண்டனையை வழங்கவும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றது.

வாகன இலக்கங்களின் இறுதி இலக்கத்திற்கு அமைய நேற்று முதல் எரிபொருள் விநியோகிக்கப்படுவது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் வாகன இலக்கங்களை மாற்றிக்கொண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு சென்றமை தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன.

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் மரணங்கள் : சுகாதார அமைச்சு தகவல்!!

அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்..

இலங்கையில் கோவிட் மரணங்கள் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பினால் புதன் கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இலங்கையில் பதிவான சராசரி கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, ஜூலை மாதத்தில் 12 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், மொத்த மரண எண்ணிக்கை16535 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் 10 ஆம் திகதி பொது இடங்களில் முகக்கவசம் அணிவது என்ற கட்டாய விதியை இலங்கை திரும்பப் பெற்றது.

அதேநேரம் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஒரு சில பொது போக்குவரத்து மட்டுமே இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் இப்போது பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதனையடுத்து ஜூலை நடுப்பகுதியில் இருந்து ஒரு நாளைக்கான சராசரி தொற்றுக்கள் 15-20 ஆக அதிகரித்துள்ளதாக பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.

தற்போது 703 நோயாளிகள் சுகாதார நிறுவனங்களில் மற்றும் வீட்டு அடிப்படையிலான பராமரிப்பில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் இலங்கையில் இதுவரை இனங்காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 664704 ஆக அதிகரித்துள்ளது.

வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பநிலை : விரைந்து செயற்பட்ட பொலிசார்!!

குழப்பநிலை..

வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரசாங்கத்தின் வாகன இலக்க நடைமுறையை அமுல்படுத்த முயன்ற போது ஏற்பட்ட குழப்ப நிலையை பொலிசார் கட்டுப்படுத்தியிருந்தனர்.

வவுனியா பண்டார வன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரசாங்க அறிவுறுத்தலுக்கு அமைய வாகனத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் இன்றைய தினம் (22.07) எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக 3 தினங்களாக வரிசையில் நின்றோர் தமக்கு தான் எரிபொருள் வழங்க வேண்டும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும் அரசாங்க அறிவுறுத்தலையே தம்மால் நடைமுறைப்படுத்த முடியும் என இரு பகுதியினரும் தெரிவித்தமையால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிசார் ஒலிபெருக்கி மூலம் 6,7.8,9 ஆகிய இலக்கங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என அறிவித்தல் வழங்கியதுடன்,

அங்கு நின்ற ஏனைய இலக்க மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள் என்பவற்றை அங்கிருந்து அகற்றி குழப்ப நிலையை கட்டுப்படுத்தியிருந்தனர். இதன்பின் சீராக எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

18 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு : வெளியானது முழு விபரம்!!

புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றிருந்தார். இந்த நிலையில் 18 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பதவியேற்றுள்ளனர்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் – தினேஷ் குணவர்தன

கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த

கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா

சுகாதாரத்துறை அமைச்சர் – கெஹெலிய ரம்புக்வெல

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன

விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் – மகிந்த அமரவீர

நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் – ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச

சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் – ஹரீன் பெர்னாண்டோ

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் – ரமேஷ் பத்திரன

நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க

வெளிவிவகாரத்துறை அமைச்சர் – அலி சப்ரி

பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் – விதுர விக்ரமநாயக

வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் – கஞ்சன விஜேசேகர

சுற்றாடற்றுறை அமைச்சர் – நஸீர் அஹகமட்

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – ரொஷான் ரணசிங்க

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் – மனுஷ நாணயக்கார

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – டிரான் அலஸ்

வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் – நளின் பெர்னாண்டோ

தனியாளாக வங்கியில் கொள்ளையடித்த பாட்டி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் மூதாட்டி போல வேடமிட்டு, ஆண் ஒருவர் வங்கியில் கொள்ளையடித்த சம்பவம் அந்நாடு முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள McDonough நகரத்தில் செயல்பட்டு வரும் வங்கிக்கு நேற்று வயதான மூதாட்டி ஒருவர் சென்றிருக்கிறார். வெள்ளை நிற விக், ஆரஞ்சு கையுறைகள் மற்றும் கருப்பு முகமூடி ஆகியவற்றை அணிந்திருக்கிறார் அவர்.

வழக்கம்போல பரபரப்பாக இருந்த வங்கிக்குள் சென்ற அவர், தன்னை யாராவது கவனிக்கிறார்களா? என நோட்டம் விட்டிருக்கிறார். அதன் பிறகு வங்கி ஊழியர் ஒருவரிடம் சென்று பேச்சு கொடுத்துள்ளார்.

பரபரப்புடன் வேலை செய்துகொண்டிருந்த வங்கி ஊழியரை நெருங்கிய இந்த மர்ம நபர் அவரிடம் கடிதம் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் தன்னுடைய பைகளில் பணத்தை நிரப்புமாறும் இல்லையென்றால் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை உபயோகிக்க வேண்டியிருக்கும் என எழுதப்பட்டிருந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து அச்சத்தில் ஆழ்ந்த அந்த பணியாளர், மர்ம நபர் சொல்லியபடியே அவர் கொண்டுவந்திருந்த பிங்க் நிற பையில் பணத்தினை நிரப்பியிருக்கிறார். அதன்பிறகு அங்கிருந்து வெளியேறிய அந்நபர் தனது காரில் ஏறி அங்கிருந்து மறைந்துவிட்டார். இதனையடுத்து காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உடனடியாக அந்த வங்கிக்கு விரைந்துவந்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மூதாட்டி போல வேடமணிந்து உள்ளே வந்த நபர் பயன்படுத்திய கார் குறித்த காட்சிகளும் இருந்திருக்கின்றன. ஆனால், அந்த காரில் நபர் பிளேட் இல்லாதது பின்னர் தெரியவந்திருக்கிறது.

இதனையடுத்து கொள்ளையடித்தவர் இளைஞராகவும் 6 அடி உயரம் கொண்டவராகவும் இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறைக்கு தகவல் கொடுக்கும்படி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்காவில் மூதாட்டி போல வேடமணிந்து வங்கியில் கொள்ளையடித்த இளைஞரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். இது அந்நாடு முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

பீர் பாட்டிலுடன் பார்ட்டி : ஜெயம் ரவி மனைவியுடன் சண்டை போட்ட தனுஷ் – திரிஷா!!

நடிகர் நடிகைகள்..

பெரும்பாலும் நட்சத்திரங்கள் வார இறுதியில் இரவு பார்ட்டி, அவுட்டிங் டூர் என்று செல்வது வழக்கம். அப்படி நடிகர் நடிகைகள் குடித்துவிட்டு ஆட்டம் போடும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாவதும் உண்டு. அப்படி தனுஷ் பல நட்சத்திர ஓட்டல்களில் நடிகைகளுடன் இரவு பார்ட்டிக்கு சென்று உல்லாசமாக இருந்திருக்கிறார்.

அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தி, நடிகை திரிஷா உள்ளிட்டவர்களுடன் ஒரு ஓட்டலில் பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.

அப்போது ஜெயம் ரவி போதையில் இருப்பது போன்றும், தனுஷ் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் வாக்குவாதத்தில் இருப்பது போன்றும் உடன் திரிஷா அதை கவனிப்பது போன்று இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

இருவரும் ஒன்றாக நடிக்கவும் இல்லை அப்படி இருக்க ஏன் தனுஷ் அவரிடம் சண்டை போடுகிறார் என்று கேள்விகள் எழுந்தது. ஆனால் அவர்கள் சாதாரண சிரிப்புடன் கூடிய பேச்சு வார்த்தையில் தான் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்பட்டது.

ஜெயம் ரவி சமீபத்திய பேட்டியொன்றில் கூட குடித்துவிட்டு பேட்டிக்கொடுத்தாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.

வயதான அப்பா அம்மாவை தோளில் சுமந்தபடி பாதயாத்திரை போகும் மகன் : கண் கலங்க வைக்கும் காட்சி!!

கன்வார் யாத்திரை..

பெற்றோர்களை அவர்களது வயதான காலத்தில் பேணிப்பாதுகாப்பது என்பது ஒவ்வொரு மகன் மற்றும் மகள்களுடைய முக்கியமான கடமையாகும். நமக்கான உலகத்தை அமைத்துத்தர ஒவ்வொரு நாளும் போராடிய அவர்கள் என்றுமே போற்றுதலுக்கு உரியவர்கள்.

இருப்பினும் சிலர் வயதான தங்களது தாய், தந்தையரை நிராதரவாக விட்டுவிட்டு செல்வது குறித்தும் நாம் தினந்தோறும் கேள்விப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறோம். இதனிடையே, தன்னுடைய தாய் மற்றும் தந்தையை தோளில் சுமந்தபடி பாதயாத்திரை செல்லும் மகன் ஒருவரின் வீடியோ வெளியாகி பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

வருடாந்திர கன்வார் யாத்திரை ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை 26 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நேரத்தில், ஹரித்வார், கௌமுக் மற்றும் உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி மற்றும் பீகாரில் உள்ள சுல்தங்கஞ்ச் ஆகிய இந்து புனிதத் தலங்களுக்குச் சென்று லட்சக்கணக்கான சிவ பக்தர்கள் கங்கை நதியில் நீராடுகிறார்கள். இது ஒவ்வொரு வருடமும் விமர்சையாக நடைபெற்றுவருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்கள். அதில், ஒரு பக்தர் தனது அப்பா, அம்மாவை தோளில் சுமந்தபடி வெறுங்காலுடன் யாத்திரையை மேற்கொள்கிறார். தாராசு போல இருக்கும் இருக்கையில் வலப்பக்கம் தனது தாயையும் இடப்பக்கத்தில் தந்தையையும் அமர வைத்து அவர் நடந்து சென்றது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

இந்நிலையில், இந்த வீடியோவை உத்திரகாண்ட் மாநிலத்தின் DGP ஆன அசோக் குமார் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில்,”இப்போதெல்லாம், வயதான பெற்றோர்கள் வெறுக்கப்படுகிறார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள் அல்லது தங்கள் குழந்தைகளுடன் வாழ அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இதே சமூகத்தில், பல்லக்கில் தன் வயதான பெற்றோருடன் கன்வர் யாத்திரை வந்த லட்சக்கணக்கான சிவ பக்தர்களில் ஒருவரான ஷ்ரவன் குமாரும் இருக்கிறார். அவருக்கு என் வணக்கங்கள்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை இதுவரையில் 11,000 பேர் பார்த்துள்ளனர். மேலும், தனது தாய் மற்றும் தந்தையை தோளில் சுமந்து செல்லும் அந்த நபரையும் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

மெட்ரோ ரயிலில் நஸ்ரியா பாட்டுக்கு குத்தாட்டம் : வீடியோவால் வசமாக போலிஸிடம் சிக்கிய இளம்பெண்!!

மெட்ரோ இரயிலில்..

மெட்ரோ இரயிலில் இளம்பெண் ஒருவர் திரைப்பட பாடலுக்கு ரீலிஸ் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள மெட்ரோ இரயிலில் இளம்பெண் ஒருவர் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் நானி, நஸ்ரியா நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படம் தான் ‘ஆண்டே சுந்தரநிகி” (Ante Sundaraniki). இந்த படத்தில் இடம்பெற்ற ‘தந்தானந்தா’ என்ற பாடலுக்கு இளம்பெண் ஒருவர் மெட்ரோ இரயிலினுள் நடனம் ஆடியுள்ளார்.

மேலும் இரயிலுக்கு வெளியில் நின்று நடிகர் கிச்சா நடிப்பில் வெளியான இந்தி படமான ‘விக்ரந்த் ரோனா’ திரைப்படத்தில் இடம்பெற்ற “ரா ரா ராக்கம்மா” பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, இந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இணையவாசி ஒருவர், இது போன்று மெட்ரோ இரயில்களில் தொடங்கியுள்ளது என்றும், அதிகாரிகள் ஆக்ஷனுக்கு தயாராகுங்கள் என்றும் பதிவிட்டார்.

இதையடுத்து இது குறித்து முறையாக விசாரணை நடத்தி, அந்த இளம்பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது. மேலும் காவல்துறையிலும் அந்த பெண் மீது புகாரளிக்கப்பட்டது.

இந்த இளம்பெண் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், சிலர் இவருக்கு ஆதரவாகவும், சிலர் இவருக்கு எதிராகவும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த இளம்பெண் மீது காவல்துறையினர் பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவிப்பு உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

குளியல் வாளிக்குள் தவறி விழுந்த பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!!

கேரளாவில்..

கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை அடுத்த கடையங்காடு என்ற இடத்தில் கிரீஸ் -அஞ்சலி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் சபரி என்ற ஆண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் அஞ்சலி, குழந்தையை தூங்க வைத்து விட்டு துணி துவைப்பதற்காக சென்று விட்டார். அப்போது துணியை காயவைத்துவிட்டு திரும்பி வந்து பார்க்கையில், குழந்தை சபரி குளியல் வாளியில் உள்ள தண்ணீரில் மூழ்கி கிடந்துள்ளது.

இதனை கண்டவுடன் அதிர்ச்சியடைந்த தாய் அஞ்சலி குழந்தையை உடனே தூக்கி முதலுதவி செய்ய முயன்றுள்ளார். பின்னர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தார். ஆனால் குழந்தை முன்னரே பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளியல் வாளி தண்ணீருக்குள் மூழ்கி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருடிய பைக்கை திருப்பி கேட்டதால் ஆத்திரம் : இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

விழுப்புரம் அருகே..

விழுப்புரம் அருகே திருடப்பட்ட தனது இருசக்கர வாகனத்தை திருப்பி கொடுக்காவிடில், போலீசாரிடம் புகார் கொடுத்துவிடுவதாக கூறியதால், அடித்துக்கொலை செய்து உடலை கிணற்றில் தூக்கிய விசிய சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர் அங்குள்ள அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவரின் இருசக்கர வாகனம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருடு போனது.

இதுக்குறித்து புகார் ஏதும் கொடுக்காமால் நண்பர்களுடன் சேர்ந்து தேடி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இவருடைய இருசக்கர வாகனத்தை அதே கிராமத்தைச் சார்ந்த சரத்வீரமணி, சத்தியராஜ், இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து இரவோடு இரவாக திருடியதாக சொல்லப்படுகிறது.

இதனால் இவர்களிடம் சென்று கல்லூரி மாணவன் அருண் தனது இருசக்கரவாகனத்தை திரும்பி கொடுக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டதாகவும் அதனை அருண் தனது செல்போனில் பதிவு செய்துக்கொண்டதாகவும் சொல்லபடுகிறது.

ஒரு கட்டத்தில் அருணுக்கும் அந்த கும்பலுக்கும் இடையே வாய் தகராறு ஏற்படவே, காவல்நிலையத்தில் வாகன திருட்டு குறித்து புகார் கொடுக்கப் போவதாக அருண் தெரிவித்ததாக சொல்லபடுகிறது. மேலும் தனது செல்போனில் உள்ள காட்சி பதிவை காவல்துறையிடம் ஒப்படைக்கப் போவதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த நான்கு பேரும் அருணை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இருசக்கர வாகனத்தை தருவதாக் கூறி ஏமாற்றி அழைத்து சென்று, பனப்பாக்கம் ஏரி பகுதியில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும், கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் அருண் உடலை அருகில் இருந்த கினற்றில் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் அருணை காணாமல் அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். அப்போது அந்த கும்பலில் ஒருவன், கஞ்சா போதையில் அருணை கொலை செய்ததை குளறுயுள்ளான்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், ஒன்று திரண்டு அந்த நான்கு பேரையும் பிடித்து, திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காவல்துறையினர் தீயணைப்புத்துறை உதவியுடன் அருண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக சரத்வீரமணி , சத்தியராஜ் மற்றும் இரண்டு சிறுவர்கள் ஆகிய நான்குபேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சிறுவர்கள் என்பதால், சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். மற்ற இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இதுக்குறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவனை தங்களிடம் காண்பித்துவிட்டு பிறகு தான் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாணவனின் குடுமபத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரும், கஞ்சா பழக்கம் உடையவர்கள் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளதால் அதுகுறித்தும் விசாரணை முடுக்கப்பட்டுள்ளது.